திங்கள், 16 ஏப்ரல், 2012

இனிவரும் உலகத்தில் கடவுளின் கதி!

 இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப் படாமல் இருக்க மாட்டார்கள். அதைச்சற்று இங்கு ஆராய்வோம்.
கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால் சிறார்களுக்குப் போதிக்கப்பட் டும், காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவகமு மாகும். ஆனதால் இனிவரும் உலகத்தில் கடவுளைப் பற்றி போதிக்கிறவர்களும், காட்டிக் கொடுப்பவர்களும் மறைந்து விடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப் போகும்.
ஏனெனில், கடவுளை நினைக்க மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம் இருந்தால்தானே நினைப்பான்? சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விவரம் தெரிந்து விடுவதாகவும் சகல தேவைகளும் மனித னுக்கு கஷ்டப்படாமல் பூர்த்தியாகவும் இருந்தால், ஒரு மனிதனுக்குக் கடவுளைக் கற்பித்துக் கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்?
மனிதன் உயிரோடு இருக்குமிடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமானால் விஞ்ஞானப் பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக் காது.
சாதாரணமாக மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத் திற்கு ஒரே ஒரு காரணம் தானே சொல்லப்படுகிறது? அக்காரணம் என்னவென்றால், இந்த உலகத் தோற்றத் துக்கு காரணம் என்ன? காரண பூதமாக இருப்பது எது? அதுதான் கடவுள் என்று சொல்லப்படுகின்றது.
இது விஞ்ஞானிகளுக்கு சுலபத்தில் அற்றுப் போன விஷயம் பஞ்சபூதங்களின் சேர்க்கையே உலகம் என்பர். நம்முடைய வாழ்வில் நாம் எதைக் கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்கிறோம்; தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறோம். தெரிந்ததை தெரிந்தது என்று சொல்லுகிறோம். இதுவேதான் உலக நடப்புக்கும் கொள்ள வேண்டிய முறையாகும். ஒரு சமயம் உலக நடப்புக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அதற்காக ஒரு காரியத்துக்கும் ஆகாத தேவையில்லாத கடவுளை எவனும் வணங்க மாட்டான்.
புதிய உலகத்தில் மோட்ச, நரகத்துக்கு இடம் இருக்காது; நன்மை, தீமை செய்ய இடமிருந்தால்தானே மோட்சமும், நரகமும் வேண்டும்? எவருக்கும் யாருடைய நன்மையும் தேவையிருக்காது. புத்திக் கோளாறு இருந்தால் ஒழிய, ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்ய மாட்டான். ஒழுக்கக் கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச, நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?
எனவே, இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றாவிட்டாலும் இனிவரும் சங்கதிகள் அடைந்த மாறுதல்களைக் காண வேண்டுமென்றும். இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டி வரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக் கொண்டும் வாழ்க்கை என்றால் போராட்டம் என்று திகைத்துக் கொண்டும் இருக்கிற நிலைமை போய்.
வாழ்க்கை என்றால் மக்களின் இன்ப உரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்னும் ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.
நம்மால் என்ன ஆகும்? அவனின்றி ஓரணுவும் அசையாதே! என்று வாய் வேதாந்தம் பேச மாட் டார்கள். நம் கண்முன் காணப்படும் குறைபாடுகளைப் போக்க நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும், அவர்களின் எண்ண மாகவும் இருக்கும். எப்போதோ, யாரோ, எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்க மாட்டார்கள். சுயசிந்தனையோடு கூடியதாகவே அவர்களின் செயல்கள் இருக்கும் மனித அறிவீனத்தினால் விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கிவிட முடியும் என்ற ஆசையும், நம்பிக்கையும் கொண்டு உழைப்பார்கள்.
அவர்களின் தொண்டு; மனித சமுதாயத்தை நாளுக்கு நாள் முன்னுக்குக் கொண்டு வந்தவண் ணமாகவே இருக்கும் சுய சிந்தனைக்கு இலாயக்கற்ற வர்களே இந்த மாறுதல்களைக் கண்டு மிரள்வதும், காலம் வரவரக் கெட்டுப் போச்சு என்று கதறுவதுமாக இருப்பார்கள்.
இன்றைய மக்களிலே பலருக்கு பழமையிலே இருக்கும் மோசம் அறிவையே பாழ் செய்து விடு கிறது. புதிய உலகத் தோற்ற வேகத்தைத் தடை செய்து விடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்பு களால் இலாபமடையும் கூட்டம் புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும், பாமரரின் ஞானசூன்யம், அறியாமை, சுயநலக்காரரின் எதிர்ப்பு எனும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே. இனிவரும் உலக சிற்பிகளாக முடியும். அந்த சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்ய வேண்டுமென்று வாலிபர்கள் பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வர வேண்டுகிறேன்.
நூல்:இனிவரும் உலகம்

எது கடவுள்? எது மதம்?

 


தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்கள் என்றும், சமயாச்சாரியார்கள் என்றும் கட்டியழு பவர்கள் ஒன்று பகுத்தறிவில்லாதவர் களாக இருக்க வேண்டும்; அல்லது வயிற்றுப் பிழைப்புக்குப் புறப்பட்ட புரட்டர்களாயிருக்க வேண்டும் என்பதை அபிப்பிராயமாகக் கொண்டு, வெகு கால முதலே பல தடவைகளில் பல பெரியார்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை என்றும் பலர் சொல்லிவந்திருக்கிறார்கள். இதைத்தான் சுயமரியாதைக்காரர்கள் எடுத்துக்காட்டி வருகிறார்கள். ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிவிப்பு என்பவையான மூவகைத் தன்மைகளை யும், மேற்படி சாமிகளோ, ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ் வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்லுவோம்.
மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கும் மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதார மான தோற்றங்களைத்தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று, தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும் அவ்வியற்கைக்குத்தான் கடவுள், ஆண்ட வன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின் றோம் என்பதாகவும், மற்றும் இவ்வி யற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்கவேண்டுமே என்றும், அந்தக் காரணத்திற்கோ, சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என் கின்ற பெயர் கொடுக்கபட்டிருக் கின்றது என்பதாகவும் சொல்லிக்கொண்டு மாத் திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது பெரியதொரு தகராறு இல்லை.
ஆனால் அந்தக் கடவுள் என்பவை களுக்கு கண்,மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண் பெண் தன்மை, பெண்ஜாதி, புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய், தகப்பன் முதலிய வைகளைக் கற்பித்து, அவைகளினிடத்தில் பக்தி செய்ய வேண்டும் என்றும், அவற் றிற்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்யவேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவை செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளை யாடல்கள் முதலியவை செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்யவேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்களைப் பற்றியும் பாடவேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக திருமுறையாக பிரபந்தமாக அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடினவர்களை சமயாச்சாரியார்களாக ஆழ்வார்களாக, சமயகுரவர்களாக, நாயன்மார்களாக அற்புதங்கள் பல செய்த அவதாரங் களாகக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கி யத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவை களான மூடநம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்பும் சுயநலப்பிரசாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை. ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள்போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல் மற்ற நாட்டார்களைப்போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்ற மடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியா மல் வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற் கும் இம்மூடநம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரசாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமே தான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும், ஒருவரையொருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமையில்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள் கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத் திற்கும் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக் கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்ப தற்கும் மேற்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர் களும் அவர்களது பாடல்களும் நெறி களுமே முக்கிய காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம். சொல்லத் தயாராயிருக்கின்றோம்.
நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூஜைக்கும், அபிஷேகத் திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக் கும், இக்கடவுள் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள் களைப்பற்றிப் பாடின பாட்டுகளையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களையும் வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக் காகச் செலவாகும் பொருள்களாலும் நேரங்களாலும் ஏற்படும் செலவும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக்கொண்டு வருகின்றன என்று சொல்லுவது மிகையாகாது.
இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால் நம்நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அந்நிய நாட்டிற்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பதும் ஏற்படுமா? தீண்டக் கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக் கூடாத - மக்கள் என்போர்கள் கோடிக் கணக்காய் புழு, பூச்சி, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடி யுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களைச் சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப்பிறப்பு என்று சொல்லிக்கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக்கொண்டும், நம்மையும் நம் நாட்டையும், அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.
நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார் மீது குற்றம் செலுத்துவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.
நிற்க, அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன் அதனால் உனக்கு என்ன தடை? என்று யாராவது சொல்ல வருவார்களானால், அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, கடவுள்களாகவோதான் இருக்க வேண் டும் என்று சொல்லுகின்றோமே ஒழியக் குணங்களைப் பின்பற்றாமல் வெறும் வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.
மதம்
இதுபோலவேதான் மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ளவேண்டிய நடையைபற்றிய கொள்கைகளைக் கொண்டது என்பவர்களிடத்தில் நமக்குத் தகராறு இல்லை! அன்பே சிவம் என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை! அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதானால் நாமும் சைவன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுகின் றோம். அதுபோலவே ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு, அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகு வதுதான் வைணவம் என்பதான விஷ்ணுவிடத்திலும் வைணவனிடத்திலும் நமக்குத் தகராறில்லை என்று சொல் லுவதோடு நாமும் நம்மை ஒரு வைண வன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்சைவத் தன்மையும் வைணவத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
அப்படிக்கில்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகின்றவன்தான் சைவனென்றும், அப்படி வணங்குகிறவன் இன்ன மாதிரி யான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள இன்ன காரியம் செய்த கடவுள் களைப் பற்றிப் பாடின, எழுதின ஆசாமி களையும் புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றபடி வேறு இன்ன உருவமோ, பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர் களையும் வேறு குறி இடுகின்றவர் களையும் யாதொரு குறியும் இடாதவர் களையும் சைவரல்லாதவர் என்று சொல்வதுமான கொள்கைக்காரரி டமே நமக்குப் பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன் அக்கொள்கை களையும், அச்சமயங்களை யும், அக்கடவுள் களையும் பாமர மக்களிடம் பரவவிடக் கூடாது என்றும் சொல்லு கின்றோம்.
அன்றியும், பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்துவோ, ஒரு குணமோ இருப்பதாகச் சொல்ல வில்லை என்றும், மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமுத்திரம்தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், அதன் மணம்தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம்தான் கடவுள், என்பதாக தமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் சிவன்தான் முழுமுதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும் பிரம்மாவும் அவரது பரிகார தேவதைகள், சைவ சமயம்தான் உண்மைச்சமயம் அது தான் முக்தி அளிக்கவல்லது என்பதும் அல்லது விஷ்ணுதான் முழுமுதற்கடவுள் என்பதும், அதுதான் பரத்துவம் கொண் டது. மற்றவை விஷ்ணுவின் பரிவார தேவதைகள் என்பதும், வைஷ்ணவ சமயம்தான் உண்மை சமயம் அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு என்பதும் அச் சிவனையோ, விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களை யும், அச்சமயங்களையும் பாடினவர்கள் தான் கடவுள் நெறியையும் நிலைமையையும் உணர்த்திய பெரியார்கள் - சமயாச் சாரியார்கள் என்பதுமாக மக்கள் முன் உளறிக் கொட்டி அவர்களது மனதை குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளி யாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று தான் சொல்லுகின்றோம்.
உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விளம்பரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்றுங்கூடச் சொல்லுவோம்.
எனவே, மக்களின் பாரம்பரியமானதும் எங்கும் பரவியிருக்கும் படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில், இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச் சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையேதான் பெரிதும் (இவ்வறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்றது. இவைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாபச் செயல் என்றும் யார் சொன்னாலும் சுயமரியாதைக்காரர்கள் பயப்படக்கூடாது.
(தந்தை பெரியார் அவர்கள் 17 வருஷத்திற்கு முன்பேசியது)
குடிஅரசுகுடிஅரசு - சொற்பொழிவு - 09.06.1945

வியாழன், 12 ஏப்ரல், 2012

நம்பிக்கைகளின் நம்பிக்கையாளர்கள்மனித  இனத்தை படைப்பதற்கு முன்பே ஒளியினால் வானவர்கள் எனப் பொருள்படும் மலக்குகளையும், நெருப்பின் ஜுவாலையிலிருந்து ஜின்கள் என்ற படைத்து விட்டதாக குர்ஆன் கூறுகிறது.

மலக்குகள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். இந்த மலக்குகளுக்கு சுயமாக சிந்தித்து செயல்படும் திறன் கிடையாது. மனிதர்களைப் போன்று அவர்களுக்கு பசி, சுவை, அன்பு, கோபம், எரிச்சல், பொறாமை, தன்முனைப்பு, கவலை, வேதனை, சோர்வு, குறிப்பாக பாலியல் உணர்வு என்று எந்த உணர்வும் கிடையாது. அதனால் அவர்கள் பல்கிப்பெருகவில்லை அல்லாஹ் உற்பத்தி செய்த எண்ணிக்கையிலேயே இன்னும் நீடிக்கிறார்கள். அல்லாஹ்வின் ஆணைகளை மட்டும் செயல்படுத்தும் ஒருவகை இயந்திரங்களே எனலாம்! ஆனால் ஜின்கள் அவ்வாறல்ல. அவர்கள்  மனிதர்களைப் போன்று அனைத்து தன்மைகளும் கொண்ட படைப்பு.

இந்த மலக்குகள் என்ற வானவர்கள், அளவு, தகுதி, திறமை, பொறுப்புகளுக்கேற்ப வரிசைப்படுத்தப்படுகிறார்கள். அழகான இந்த வானவர்களுக்கு இறக்கைகளும் உண்டு. ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல், மாலிக் என்று சிலரது பெயர்களைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் வழியாக அறியமுடிகிறது. அல்லாஹ்வை வழிபடுமாறு மட்டுமே கட்டளையிடப்பட்ட மலக்குகள் இன்றுவரை தொடர்ந்து வழிபாட்டிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் அவர்கள் சோர்வடைவதுமில்லை சலிப்படைவதுமில்லை. (இயந்திரங்கள் எங்கேயாவது சலிப்படையுமா?)

வானவர்களின் உருவ அமைப்பை சில ஹதீஸ்கள் விளக்குகின்றன.

Sunaan Abu Dawud, Vol iii, Book 40, Hadith number 4709:

Jabir b. ‘Abd Allah reported the Prophet (may peace be upon him) as saying: I have been permitted to tell about one of Allah’s angels who bears the throne that the distance between the lobe of his ear and his shoulder is a journey of seven hundred years. 

(அல்லாஹ்வின் அர்ஷ் எனப்படும் அரியாசனத்தை சுமந்து கொண்டிருக்கும் வானவர்களின் காது மடல்களுக்கும் அவர்களது தோள்களுக்கும் இடைப்பட்ட அளவு 700 ஆண்டுகளின் பயண தூரமாக இருக்கும்.)முஹம்மதின் காலத்தில் ஒட்டகம், குதிரை போன்றவைகளைத்தவிர வேறு வாகனங்கள் கிடையாது. அன்று அவர்கள் ஒரு நாளில் உத்தேசமாக 100 கிமீ பயணம் செய்ததாகக் கொண்டால்,  உடலின் குறிபிட்ட அந்த பகுதி மட்டும் 2,55,50,000 கிமீ தொலைவு இருக்கலாம். ஒளியின் வேகம் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்பதை ஏற்பதாக இருந்தால், அவ்வானவர்களின் இதர உடல் அளவுகளை உங்களது கற்பனைக்கே விடுகிறேன். அல்லாஹ்வின் உதவியாளர்களான இந்த வானவர்களுக்கு இறக்கைகளும் உண்டு.

1400 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமிக்கு அதிக முறை வருகை புரிந்த வானவர் ஜிப்ரீல்/கேப்ரியேல் ஆவார். இவர்தான் வானவர் கூட்டத்திற்கு தற்பொழுதும் தலைவராக அறியப்படுகிறார்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்  கூறினார்கள்:    

நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க, அவரது (நிஜ) உருவத்தில் அவரைப் பார்த்தார்கள்.

(முஸ்லீம்)மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:               

...
இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது''  என்று கூறினார்கள்.     

(முஸ்லீம்)முஹம்மதைச் சந்திக்க ஜிப்ரீல் பறந்து வருகிறார்

விண்வெளிப் பயணத்திற்காக மலக்குகளால் முஹம்மது தயார் செய்யப்படுகிறார்


ஜின்கள் என்றொரு படைப்பும் மனிதனுக்கு முன்பே படைக்கப்பட்டிருந்தது. ஜின் என்றால் மறைத்தல், மறைவானது என்றும் பொருள் கூறுகின்றனர். இவர்கள் பறக்கும் தன்மையுடையவர்கள், நாய், பூனை, பாம்பு போன்ற வடிவங்களுக்கு உருமாறக்கூடியவர்கள் என்பதும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.

(குர் ஆன் 15:27)

1400 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. முஹம்மது அவைகளை சந்தித்து தனது தூதுப் பணியையையும் செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஜின்களுக்கென்று சிறப்பான உணவுப் பதார்த்தங்களையும் ஏற்பாடு செய்தார்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

... அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம் நஸீபீன் என்னு மிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன் என்று பதிலளித்தார்கள்.

(புகாரி)

ஆனால் இந்த மலக்குகளையோ ஜின்களையோ பார்த்த்தாகக் கூறிக்கொண்டவர்கள் முஹம்மதைப் போன்ற அல்லாஹ்வின் தூதர்களைத்(?) தவிர வேறு ஒருவருமில்லை. ஏனெனில் அவை வெகுமக்களின் கண்களுக்கோ, கருவிகளுக்கோ தென்பட வாய்ப்பில்லையாம். ஆனால்,

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பின்வருமாறு) கூறினார்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று எனது தொழுகையைக் கெடுக்க சதி செய்தது. அல்லாஹ் அதன் மீது எனக்குச் சக்தியை வழங்கினான். அதன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். காலையில் "எல்லாரும்அல்லது "நீங்கள் அனைவரும்'வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நான் நினைத்தேன். பிறகு என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள், "இறைவா! என்னை மன்னித்துவிடுவாயாக! மேலும்,எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக'' (38:35) என்று வேண்டியது என் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். பின்னர்) அல்லாஹ் அந்த ஜின்னை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டான்.

 (முஸ்லீம்)

மதவாதிகள் விளக்கமளிப்பதைப் போல ஜின்கள் என்ற உயிரினம்(?) மனிதக்கண்களுக்கு மறைவானவைகள் என்பது உண்மையானால் காலையில் "எல்லாரும்அல்லது "நீங்கள் அனைவரும்'வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நான் நினைத்தேன்.என்ற முஹம்மதின் கூற்றில் ஏதாவது பொருளிருக்கிறதா?

சில நேரங்களில் சோதிடர்கள் கூறுவது உண்மையாகி விடுகிறதே என்று முஹம்மதிடம் அவரது தோழர்கள் கேட்டனர்.

(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும். அவர்களைப் பிரகாசமான தீப்பந்தம் விரட்டும். அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு

(குர் ஆன் 37:8-10)ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசிக் கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத்திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஒட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.

 (புகாரி 3210)இந்த உள்ளுதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ்வால் மட்டுமே முடியுமென்று நினைத்திருந்தேன். ஆனால் ஜின்களாலும் தாங்கள் விரும்புவதை மனிதர்களின் உள்ளங்களின் பதிய வைக்க முடியுமென்பதையே இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

இந்த ஜின்களுக்கு பெருமை(!) சேர்க்கும் விதமாக குர் ஆனில் அத்தியாயம்-72 இருக்கிறது. முஹம்மதின் போதனைகளைக் கேட்டு முஸ்லீம்களாக மாறிய ஜின்களைக் குறித்து பேசுகிறது. காஃபிர்களாக இருக்கும் ஜின்களும் உண்டாம்.  அவைகள்தாம் ஒட்டுகேட்கும் வேலையை செய்கின்றன. இனி, வானில் எரிநட்சத்திரங்களைக் காணும் பொழுது, ஜின்கள் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முஹம்மதைப் போலவே கிருஸ்துவ மத நிறுவுனர் பவுல் தன் கண்ட மாயக்காட்சிகளைப் பற்றி சாட்சியம் கூறுகிறார்,

12. ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்கு போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள்.

13. நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது, நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன், சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது, அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது.

14. நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் “சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக் கொள்கிறாய்என்றது.

15. நான், “ஆண்டவரே நீங்கள் யார்என்றேன். ஆண்டவர், நான் இயேசு, நீ துன்பப்டுத்துகிறவர் நானே.

16. எழுந்திரு, நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்தெடுத்திருக்கிறேன். நீ எனக்கு சாட்சியாக இருப்பாய், இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்கு கூறுவாய்.

(அப்போஸ்தலர் : 9:3-11, 18:9-11, 22:6-13, 26:12-17)

அவரது இந்த அனுபவத்துக்குப் பிறகு பவுல் கிறிஸ்துவத்தின் தீவிரமான பின்பற்றுபவராகவும், கிறிஸ்துவத்தின் மிஷனரியாகவும் ஆகிறார். தீவிர மத ஆர்வத்தையும், மதமாற்ற வேகத்தையும் பெறுகிறார்.

முஹம்மதுவும் ஜிப்ரீலை அவரது இயற்கைத் தோற்றத்தில் கண்டதாகவும் விண்வெளிக்குச் சென்றதாகவும் கூறிக்கொண்டார். இவ்விண்வெளிப்பயணக் கதையைப் பலவாறு கூறுகின்றனர் அந்தப் பயணத்தின் பொழுது, ஏழாம் வானத்தில் 70,000 தலைகள் கொண்ட உலகைவிட பெரிய உருவம் கொண்டதொரு வானவரைக் கண்டதாகவும், அந்த மலக்கின் 70,000 தலைகளிலுள்ள ஒவ்வொரு தலையிலும் 70,000 வாய்கள் இருந்ததாகவும், ஒவ்வொரு வாயிலும் 70,000 நாக்குகள் இருநத்தாகவும், ஒவ்வொரு நாக்கும் வெவ்வேறு விதமான 70,000 மொழிகளில் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிசெய்து கொண்டிருந்ததாகவும் கூறியதாக கற்பனக்கெட்டாத கதைகளைக் கூறுகின்றனர்.  இதைவிட விட பலமடங்கு பெரிய கதையை யோவான் வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது.

இது போன்ற விநோதமான காட்சிகளை நேரடியாகவும், வெளிப்பாடுகளாகவும் கண்டதாக, கடவுள் தங்களிடம் பேசியதாகவும் கூறிக்கொண்டவர்கள், பாப் என்ற சையத் மிர்ஸா அலி முஹம்மது, பஹாவுல்லா என்ற மிர்ஸா ஹூஸைன் அலி நூரி, செயிண்ட் பிர்கிட்டா, ஜோன் ஆஃப் ஆர்க், மிர்ஸா குலாம் காதியானி, ஜோஸப் ஸ்மித் என்று பிரபலமானவர்களின் பட்டியல் நீளுகிறது இவர்களைப் போன்றவர்களை நாம் இன்றும் காணமுடியும். முஹம்மதிற்கும் மற்றவர்களின் வாக்குமூலத்திற்கும் என்ன வேறுபாடு? இதற்காக சிந்தித்து மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை, மிக எளிமையான பதில், மற்றவர்கள்  கூறினால் பொய் என்று கூறி எள்ளிநகையாட வேண்டும், முஹம்மது கூறினால் அறிவியல் பூர்வமான உண்மையென்று வாதிடவேண்டும், மறுப்பவர்களை காஃபிர்கள் என்று ஃபத்வா வழங்கி தீர்த்துக்கட்ட வேண்டும். இவ்வாறு செயல்படுவதுதான் அல்லாஹ்விற்கு மிகவும் பிடிக்கும், அதுதான் ஈமாந்தாரிகளின் இலக்கணமும் கூட. (இத்தகைய ஈமான்ந்தாரிகளுக்கு கூடுதலாக ஹூருலீன்கள் வழங்கப்படலாம்!)

யஃஜூஜ், மஃஜூஜ் என்றொரு கூட்டமும் நம்முடன் வாழ்ந்து வருகிறது. இதைபற்றி குர் ஆன் கூறுவதை பாருங்கள். (இதைப் பற்றி நண்பர்கள் பலரும் எழுதியுள்ளனர், என் பங்கிற்கு நானும் எழுதிவிடுகிறேன்)

"துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?'' என்று அவர்கள் கேட்டனர்.

"என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்கு மிடையே தடுப்பை அமைக்கிறேன்'' என்றார்.

"என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!'' என்றார். இரு மலைகளின் இடைவெளி மட்டமான போது "ஊதுங்கள்!'' என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். "என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது ஊற்றுவேன்'' என்றார்.

அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது.

இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.

(குர் ஆன் 18:94-98).

துல்கர்னைனால் கட்டப்பட்ட இந்த சுவர் முஹம்மதின் காலத்திலும் இருந்திருக்கிறது. அதில் துளை ஏற்பட்டிருப்பதை அவர் உறுதி செய்கிறார்.

ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் நடுக்கத்துடன் வந்து, வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேர விருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்; தீமை பெருகிவிட்டால்... என்று பதிலளித்தார்கள்.

(புகாரி 3346)

முஹம்மது மட்டுமல்ல வேறொருவரும் அந்த தடுப்புச் சுவரை பார்த்த்தாக சாட்சியமளிக்கிறார்.

... நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், நான் அந்தத் தடுப்புச் சுவரை, பல வண்ணக் கோடுகள் போட்ட ஒரு துணியைப் போல் பார்த்தேன் என்று சொன்னார். அதற்கு நபி யவர்கள், உண்மை தான்; நீங்கள் பார்த்தது என்று தெரிவித்தார்கள்.

(புகாரி, பாடம் : 7, யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்)

இன்றுவரை துல்கர்னைன் கட்டிய தடுப்புச்சுவர் பாதுகாப்பாகத்தான் இருக்கவேண்டும். அநேகமாக முஹம்மது விரலைமடக்கிக் காட்டிய அளவிலேயே அத்துளை நீடிக்கிறது என்று உறுதியாக நம்பலாம். ஒருவேளை அத்துளை பெரிதாகி, சுவர் உடைக்கப்பட்டிருப்பின், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் பூமியில், முஹம்மது பயந்து நடுங்கியதைப் போன்று பெரும் குழப்பங்களை விளைவித்திருப்பார்கள். இன்றுவரை அவ்வாறு எதுவும் நிகழவில்லை.

இரண்டு மலைகளின் இடையே உள்ள இடைவெளியை மறைக்குமளவிற்கு கட்டப்பட்ட இரும்புச் சுவர் இப்பொழுது எங்கே இருக்கிறது? தனிமவரிசை அட்டவனையில்முறையே 26, 29–ம் இடங்களிலுள்ள இரும்பும், செம்பும் மனிதகண்களுக்குத் தென்படவாய்ப்பில்லாத் உலோகங்களா? இவை எப்பொழுது மலக்குகள், ஜின்களைப் போன்ற மாயத்தன்மையைப்(!) பெற்றன?

இணையதளத்தில் பறக்கும் ஸ்பாகெட்டி அதிசய உயிரி” (The Flying Spaghetti Monster) என்றொரு கடவுள் உலாவருகிறது. அதனுடன் இணைந்துள்ள நூடுல்ஸ் போன்ற கால்களால் அந்த  Spaghetti Monster தங்களைத் தொட்டதாக பலர் வாக்குமூலமும் அளிக்கின்றனர். அதனிடமிருந்து வேதவெளிப்பாடுகளும் வருகின்றன. அதைப் பின்பற்றுபவர்களிடையே சீர்திருத்தம் காரணமாக பிரிவுகளும் உண்டாகியுள்ளது. இப்படியொரு கடவுள் இல்லையென்று மெய்ப்பிப்பது எப்படி?

இதைப் போன்ற அடிப்படையற்ற நம்பிக்கைகளைக் கொண்டே மதங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன தடையங்களின் மீது அல்ல. இவர்கள் “நம்பிக்கையில் நம்பிக்கைகொண்டவர்கள்”  எந்த ஒரு தடயத்தையும் அறியமுடியாத செய்திகளை மிகத்துள்ளியமாகக் கூறுகின்றனர். நாம் இது போன்ற கட்டுக்கதைகளை ஏற்க முடியாது என்று கூறினால், நம்பிக்கைகளை தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அதைப்பற்றி மறுப்பவர்களுக்குதான் உள்ளது என்று மதவாதிகள் உளறுகின்றனர். இவர்கள் பைத்தியங்கள் அல்ல; இவர்களது நம்பிக்கைகளின் மையம் முழுவதுமே பைத்தியக்காரத் தனமானவை.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் இவர்களுக்கு தனது “வானத்து தேநீர் கோப்பைஎனும் குட்டிக்கதை மூலம் சுவைபட பதிலளித்துள்ளார். பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையில், நீள்வட்ட வடிவில், சூரியனைச் சுற்றி, பீங்கானில் செய்த தேநீர் கோப்பை ஒன்று, சுழன்று வருவதாகவும், மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளும் கூட அதைக் காண்பிக்க முடியாது என்றும் பழங்கால நூல் ஒன்றில் எழுதி, இந்த செய்தி புனிதமென்றும், கடவுளின் வார்த்தை என்று கூறி அப்பாவிகளின் மனதில் ஏற்றியிருக்க, அதை எவரேனும் நம்பத்தயங்கினால் அது கிறுக்குத்தனமாகிவிடும். சகிக்கமுடியாத மதநிந்தனைக் குற்றமாகவும் கருதப்படும். வானத்து தேநீர்கோப்பையையும், பறக்கும் ஸ்பாகெட்டியையும்  இல்லையென்று நிரூபிக்க முடியாது. எனவே அதையும் ஏற்பதுதானே முறை?

ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதம் கூறும் கடவுளும், அவரது வழிகாட்டுதலே ஒளி நிறைந்தது, உண்மை நிறந்தது அது மட்டுமே சிறந்தது என நம்புகிறார்கள். நாம் அவர்கள் நம்பிக்கைகளை மதிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ஆனால் எந்த அளவிற்கு?


தஜ்ஜால்

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

Dr.அம்பேத்கரின் சிறப்பை கொச்சை படுத்தும் கயவர்கள் - பாகம் -15ambd
தொடரயை படித்த மாற்றுமத சகோதரர் மெயில் அனுப்பி இருந்தார் அப்படியே தந்துவுள்ளேன்தொடர்ந்து படியுங்கள் .
சமீபத்தில் பெண் உரிமை கொள்கையில் முற்போக்கான சிந்தனை உடைய நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டதுநமது நாட்டில் பெண்களுக்கு ஏற்படுகின்ற வன்கொடுமைகள் பலவற்றை நெஞ்சம் உருகும் வண்ணம் எடுத்து சொன்னார்கேட்பதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது உலகத்தின் சரிபாதி ஜீவன் ஆகிய பெண்கள் அரசியலுக்காகவும் வியாபாரத்திற்காகவும் மதங்களுக்காகவும் பல நேரங்களில் கலைகளுக்காகவும் பொழுது போக்கிற்கு கூட கொடுமை படுத்த படுவது உலக முழுவதும் அன்றாடம் நடந்து வருகிறது.


அரசுகளும் சான்றோர்களும் எத்தனையோ அறிய முயற்சிகளை எடுத்தாலும் இக்கொடுமைகளை முழுமையாக தடுக்க முடிய வில்லைஅந்த நண்பர் மேலும் ஒரு விஷயத்தை சொன்னார் உங்கள் இந்து மதத்தில் பெண்ணை பலவாறு போற்றி புகழ்ந்து சாஸ்திரங்கள் எழுதிவைக்க பட்டுள்ளதுஆனால் அவைகள் நடைமுறையில் கடைபிடிக்க படுவது இல்லை பால விவாகம் கைம்பெண் கொடுமை உடன் கட்டை ஏறுதல் வரதச்சனை வதைப்புகள் பெண் சிசு கொலைகள் போன்றவைகள் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இன்று வரை நடந்து வருகிறதுஉண்மையில் இந்திய பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்றால் இந்து மதமும் அதன் நம்பிக்கைகளும் ஒழிக்கப் பட வேண்டும் இந்த மதத்தில் உள்ளது போல வேறு எந்த மதத்திலும் பெண் அடிமை தனம் இல்லவே இல்லைகுறிப்பாக சொல்ல வேண்டுமானால் இஸ்லாம் மதத்தில் பெண்ணுக்குள்ள சுதந்திரம் போற்றுதலுக்குரியது
ஒரு பெண் கணவனை இழந்து விட்டால் அவள் வாழ்க்கை முழுவதும் கைமை நோம்பு ஏற்கவேண்டியது இல்லைவேறொருவனை மணமுடித்து இனிமை உடன் வாழலாம் இஸ்லாம் சமுதாயம் அப்படி பட்ட பெண்ணை தூற்றுவதோ புறம்தள்ளி வைப்பதோ கிடையாது என்று மிகவும் பாராட்டி பேசினார்அவர் சொல்வதில் உள்ள நியாயம் எனக்கு புரிந்ததுபால விவாகம் கூட பல கிராமங்களில் இன்று வரை அரசாங்கத்துக்கு தெரியாமல் நடந்து வருகிறதுமற்றப்படி பெண்களுக்கு நடக்கின்ற கொடுமைகள் எதையும் நம்மால் இல்லை என்று மறுத்து பேச இயலாதுஉண்மையில் அவர் சொல்கிறப்படி பெண் கொடுமைகளுக்கு காரணம் இந்து மதம் தானோ மற்ற மதங்களில் பெண்களுக்கான கொடுமைகள் எதுவும் இல்லையோ என்ற சிந்தனை ஏற்பட்டதுஇஸ்லாத்தும் பெண்களும் என்ற தலைப்பில் பல இஸ்லாமிய அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுவதையும் விளக்கங்கள் கொடுப்பதையும் கேட்டு நிஜமாகவே இஸ்லாம் பெண்மையை மதிக்கும் மார்க்கமாக தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் குரானில் பெண் விடுதலையை பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்பி படித்தும் பார்த்தேன்அதில் அப்படி எதுவும் புரட்சிகரமான கருத்துக்கள் இருப்பதாக எனக்கு பட வில்லை
இந்த நிலையில் பெண்கள் தொழுகை முறை (ஹனபி) என்ற சிறிய புத்தகம் ஒன்று படிக்க கிடைத்தது
அதை படித்து பார்த்த நான் ஒரு கணம் ஆடி போய் விட்டேன்இஸ்லாம் பெண்களை பற்றி கொண்டிருக்கும் கருத்து இப்படி பட்டதா என்பதை அறிந்த போது அதிராமல் இருக்க யாராலும் முடியாதுஅந்த புத்தகத்தில் நான் படித்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்அதற்கு காரணம் சில உண்டு அவற்றை முடிவில் சொல்கிறேன்பெண்கள் தொழுகை முறை (ஹனபி) நூல் ஹாபிஸ் முஹம்மது நிஜாமுத்தீன் பாகவி என்பவரால் எழுதி பஷாரத் பப்ளிஷர்ஸ் வெளியிட்டது இதன் முகவரி 83, அங்கப்பன் நாயக்கன் தெரு, சென்னை-600 001 என்று உள்ளதுஅதில் உள்ள சில வரிகளை மட்டும் உதாரணத்திற்கு தருகிறேன் அப்போது தான் நான் அதிர்ச்சி அடைந்ததின் முழுமையான காரணம் உங்களுக்கு புரியும்103வது பக்கம் ஐந்தாவது பாராவில் கணவனின் கண் அசைவின் படி நடந்து கொள்ளுங்கள் இரவிலும் பகலிலும் கைகட்டி கொண்டு நிற்கும் படி கணவன் உத்தரவுயிட்டால் அம்மாதிரியே செய்யுங்கள்அப்படி செய்வதால் இவ்வுலகம் மறு உலகம் இரு உலகத்திலும் நன்மை இருக்கிறதுஇவ்வுலகத்தில் சிறிய கஷ்டத்தை அனுபவித்து ஆகிரத்தின் பெரிய நன்மையை அடையுங்கள்கணவனுடைய சுபாவத்திற்கு மாற்றமான பேச்சை பேசாதிர்கள்அவன் பகலை இரவு என்று சொன்னாலும் நீங்களும் ஆமாம் இரவுதான் என்றே சொல்லுங்கள்
இப்போது சொல்லுங்கள் அதிர்ச்சி ஏற்படுமா? படாதா?
கணவன் கைகட்டி நில் என்று சொன்னால் எவ்வளவு நேரம் ஆனாலும் நிற்பது தான் பெண்மைக்கான சுகந்திரமோ?ஒரு மாட்டை தொழுவத்தில் கட்டி வைத்தால் கூட அது ஈக்களையும் கொசுக்களையும் வாலை சுழற்றி விரட்டுவதற்கு இடம் விட்டு கட்டுவது தான் மனிதாபிமானம்அந்த மனிதாபிமானம் கூட கிஞ்சித்தும் இல்லாமல் அப்படியே நில் என்றால் கல்லை போல ஆடாமல் அசையாமல் நிற்பது தான் நல்ல பெண்ணின் அடையாளம் என்றால் அதை நாகரிக சமுதாயம் எப்படி ஏற்று கொள்ளும்? அதை ஏற்று கொள்ளும் சமுகத்தை நாகரிகம் உடையது என்று எப்படி நம்ப முடியும்?பகலை இரவு என்றால் குருடன் கூட ஒத்துக் கொள்ள மாட்டான் ஆனால் பெண் அதை செய்தால் தான் மறு உலகத்தில் நன்மை கிடைக்குமாம்
இது தான் இஸ்லாம் தரும் உயரிய பெண் சுதந்திரமா?
அதே புத்தகத்தில் 102வது பக்கம் நான்காவது பாராவில் கணவன் தன் மனைவியை படுக்க கூப்பிட்டும் அவள் வர வில்லை அதனால் அவன் கோபமாக தூங்கி விட்டான் என்றால் அன்று பொழுது விடியும் வரை மலக்குகள் அவள் மீது சாபம் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் என்றும் இருக்கிறதுஇதன் உண்மையான கருத்து பெண் என்பவள் ஆண்களின் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே படைக்க பட்ட ஜீவன்அதை அவள் சொந்த விருப்பு வெறுப்புகளை பாராட்டாமல் ஒரு இயந்திரம் போல செய்ய வேண்டும் என்பதே ஆகும்இது இஸ்லாத்தின் கருத்துக்கள் அல்ல நபிகளின் கொள்கையும் அல்ல அந்த கோணத்தில் சொல்லப்பட்ட விஷயங்களும் அல்ல என்று இஸ்லாமியர்களும் அவர்களின் விசுவாசிகளும் மறுக்கலாம்அப்படி அவர்கள் மறுப்பது உண்மை என்றால் ஒரு இஸ்லாமிய மத பெரியவர் தான் தொகுத்த நூலில் இதை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?அதை பல இஸ்லாமிய பெண்களை படிக்க வைத்து வருவதின் ரகசியம் என்ன?இதற்கெல்லாம் நிச்சயமாக உறுதியான பதில்களை அவர்களால் தர இயலாது என்றே நான் கருதுகிறேன் அது இஸ்லாத்தின் கருத்து அல்ல என்று உறுதியாக சொன்னால் நாடு முழுவதும் அந்த நூலை எந்த இஸ்லாமிய பெண்களும் படிக்க கூடாது என்று அறிக்கை விடுவார்களா?
அம்பேத்கர் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்து மதத்தில் வேதகாலத்தில் பெண்கள் எவ்வளவு சிறப்புற்றிருந்தனர், பின்னர் எப்படி அடிமைப் படுத்தப்பட்டனர் என்பதையெல்லாம் விரிவாகவே விவரித்திருக்கிறார்.பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதற்கு மனுதான் காரணம் என்பதை வலியுறுத்தி அதை ஒழிக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியவர். பெண்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். அமபேத்கர் கொண்டுவந்து நிறைவேற்றாமல் போன இந்து சட்டத்தொகுப்பை படித்தோமானால் அம்பேத்கரின் உள்ளம் வெளிப்படும். இதே கண்ணோட்டத்தை அம்பேத்கர் இஸ்லாத்திலும் எதிர்பார்க்கிறார்.
இந்துத்வ சுதந்திரம் இஸ்லாமில் இல்லை
இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டா? அம்பேத்கர் எழுதுகிறார் :‘‘…. அனுகூலமான சட்ட விதிகள் எல்லாம் இருந்தபோதிலும்கூட, முஸ்லீம் பெண்மணி உலகிலேயே நிராதரவற்றவளாக இருந்து வருகிறாள்.ஓர் எகிப்திய முஸ்லீம் தலைவர் பின்வருமாறு கூறுகிறார்:-
‘‘இஸ்லாம் தனது தாழ்வு முத்திரையை அவள்மீது பதித்துள்ளது; மதத்தின் ஆதரவு பெற்ற பழக்கவழக்கங்கள் காரணமாக அவள் தனது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளியிடுவதற்கும், தனது ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கு மான முழு வாய்ப்பு அவளுக்கு அளிக்கப்படவில்லை.’’
இஸ்லாமிய ஆண் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும்
தான் குழந்தையாக இருந்தபோது தன்னுடைய பெற்றோர்களல்லாத மற்றவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட ஒரு திருமணத்தை நிராகரிக்கும் துணிவு எந்த முஸ்லீம் யுவதிக்கும் இல்லை. விவாகரத்து செய்யும் உரிமையைத் தனக்கு அளிக்கக்கூடிய ஒரு ஷரத்தை தனது திருமண ஒப்பந்தத்தில் சேர்ப்பது நலமாக இருக்குமே என்று எந்த முஸ்லீம் மனைவியும் நினைப்பதில்லை.
இத்தகைய சந்தர்ப்பத்தில் அவளது கதிப்போக்கு ‘ஒரு முறை திருமணம் செய்து கொண்டுவிட்டால் என்றென்றைக்கும் திருமணமானவாள்’ என்பதாக அமைந்து விடுகிறது. எத்தகைய கடுமையாக இன்னல் இடுக்கண்கள், தாள முடியாத கொடுமைக்கு உள்ளானாலும் திருமண பந்தத்திலிருந்து அவள் தப்பமுடியாது. அவள் திருமணத்தை நிராகரிக்க இயலாது. ஆனால் அதேசமயம் கணவனோ எத்தகைய காரணமுமின்றி, எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து செய்யலாம்.
தல்லாக் தல்லாக் கறிவேப்பிலை
இதற்கு அவன் செய்யவேண்டியதெல்லாம் ‘தல்லாக்’ என்று கூறிவிட்டு, மூன்று வாரங்களுக்கு மனைவியுடன் உடலுறவு கொள்ளாதிருக்க வேண்டும். அவ்வளவுதான். அந்தப் பெண்ணைத் தூக்கியெறிந்து விடலாம். அவனது ஏறுமாறான நடத்தைக்கு குறுக்கே நிற்கும் ஒரே ஒரு விஷயம், சீதனத் தொகை தருவதற்கு அவன் கட்டுப்பட்டிருப்பதுதான்.
இந்தத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்தால், எத்தகைய தடையுமின்றி தன் விருப்பம்போல் விவகாரத்து செய்து விடலாம். கணவன் விவாகரத்து செய்யும் விஷயத்தில் காட்டப்படும் இந்தத் தாராளப்போக்கு ஒரு பெண்ணின் முழுநிறைவான, சுதந்திரமான, மனநிறைவு கொண்ட இன்பகரமான வாழ்க்கைக்குப் பெரிதும் ஆதார  அடிப்படையாக அமைந்துள்ள பாதுகாப்பு உணர்வையே அழித்துச் சிதைத்துவிடுகிறது.ஒரு இந்து ஒரு சமயத்தில் எத்தனை மனைவிகளைக் கொண்டிருக்கலாம் என்று இந்துச் சட்டம் எவ்வகையிலும் வரையறுத்துக் கூறவில்லை. இதனுடன் ஒப்பிடும்போது முஸ்லீம் சட்டம் எவ்வளவோ மேல் என்று வாதிடப்படுகிறது. ஆனால் சட்டபூர்வமான நான்கு மனைவிகளுடன் மட்டுமன்றி தன்னுடைய பெண் அடிமைகளுடனும் ஒரு முஸ்லீம் கூடி வாழ்வதையும் முஸ்லீம் சட்டம் அனுமதிக்கிறது என்பதை இங்கு மறந்துவிடக்கூடாது.

வரைமுறை இன்றி அடிமையாக்கப்படும் பெண்கள்
அதிலும் பெண் அடிமைகள் விஷயத்தில் அவர்களது எண்ணிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். எத்தகைய கட்டுப்பாடுமின்றி, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதுமின்றி முஸ்லீமுடன் கூடிவாழ்வதற்கு அவர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.பலதார மணமுறையாலும், சட்டபூர்வமாக் காமக் கிழத்திகளை வைத்துக்கொள்ளும் முறையாலும் ஏற்படும் எத்தனை எத்தனையோ தீமைகளையும், மிகப்பெரும் பாதகங்களையும் விவரிப்பதற்குச் சொற்களே இல்லையெனலாம். அதுவும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இதனால் ஏற்படும் இரங்கத்தக்க அவலநிலை சொல்லத் தரமன்று.பலதார மணமுறையும் காமக்கிழத்திகளை வைத்துக் கொள்ளும் முறையும் அனுமதிக்கப் பட்டிருப்பதால் விதிவிலக்கின்றி எல்லா முஸ்லீம்களுமே இதில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று பொதுப்படையான முறையில் கூறிவிட முடியாது என்பது உண்மையே. எனினும் ஒரு முஸ்லீம் இந்த உரிமைகளை, சலுகைகளை சுலபமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது மனைவிக்கு துன்பத்தையும் துயரத்தையும் தொல்லைகளையும் அவலநிலையயும் ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
காமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம்
திரு. ஜான் பூல் என்பவர் இஸ்லாமின் விரோதியல்ல. அவர் கூறுகிறார்: ‘‘விவாகரத்து விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த வரம்பற்ற, கட்டுப்பாடற்ற போக்கை சில முகமதியர்கள் தங்கள் சுயநலத்துக்கு மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த விஷயம் குறித்து ‘இஸ்லாமும் அதன் நிறுவனரும்’ எனும் தமது நூலில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டோபர்ட் பின்வருமாறு கூறுகிறார். ‘தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். இருபது, முப்பது மனைவிகளை ஏற்கெனவே வரித்துக் கொண்டிருப்பதுடன் திருப்தி கொள்ளாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு புதிய மனைவியை அடைகின்ற இளைஞர்களைப் பற்றி நாம் படிக்கிறோம்.ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முகமதிய சட்டம் அனுமதிப்பதோடு, தான் விரும்பும் போதெல்லாம் விவாகரத்து செய்யலாம் என்றும் இருப்பதால் நடைமுறையில் அவன் தன் ஆயுட்காலத்திற்குள் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் அடைந்து இன்புற்றிருக்க முடியும்.ஒரு முகமதியன் முஸ்லீம் சட்டத்தை மீறாமல் நான்குக்கும் அதிகமான மனைவிகளை அடைவதற்கு வேறொரு வழியும் இருக்கிறது. அது தான் இல்லக்கிழத்திகளுடன் கூடி வாழ்வதாகும். குரான் இதனை அனுமதிக்கிறது.நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கும் சூராவில் ‘இத்துடன் நீ அடிமைப் பெண்களுடனும் கூடி வாழலாம்’ என்னும் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடிமைகளுடன் சுகித்து வாழ்வது பாபமல்ல என்று 70 ஆவது சூராவில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. பண்டை நாட்களைப் போலவே இன்றும்  எண்ணற்ற முகமதிய குடும்பங்களில் அடிமைகள் காணப்படுகிறார்கள்.‘முகமதின் வாழ்க்கை’ என்ற தமது நூலில் முய்ர் பின்வருமாறு கூறுகிறார்: ‘இவ்விதம் தங்களுடைய அடிமைகளுடன் கூடி வாழ்வதற்கு தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்படும் வரை முகமதிய நாடுகளில் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தகைய மனப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாதுஇவ்வாறு இந்த அடிமைத்தனம் விஷயத்தில் குரான் மனித குலத்தின் எதிரியாக இருந்து வருகிறது.இதனால் வழக்கம்போல் பெண்கள்தான் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.’’ என்று அம்பேத்கர் கூறுகிறார்.அதுமட்டுமல்ல, அவர் பர்தா முறையால் இஸ்லாத்தில் பெண்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்கிறார். அதையும் பார்ப்போம்.
பர்தாவுக்குள் அடைக்கப்பட்ட பரிதாபப் பெண்கள்
அம்பேத்கர் கூறுகிறார் : ‘‘இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக் கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.இன்னும் சொல்லப்போனால்,  முஸ்லீம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்துத் தீமைகளையும் வரித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லீம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.இந்தப் பர்தா முறையின் காரணமாக முஸ்லீம் பெண்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பெண்மணிகள் முன்புற அறைகளுக்கோ, வெளி தாழ்வாரங்களுக்கோ, தோட்டங்களுக்கோ வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.புழக்கடைகளே பெரும்பாலும் அவர்களுடைய இருப்பிடங்களாக அமைந்துள்ளன.இளம் வயதினரும் சரி, வயதானவர்களும் சரி ஒரே அறையில் அடைந்து கிடக்கின்றனர்.எந்த ஓர் ஆண் வேலையாளும் அவர்கள் முன்னிலையில் பணியாற்ற இயலாது.தன்னுடைய புதல்வர்கள், சகோதரர்கள், தந்தை, மாமன்மார்கள், கணவன் மற்றும் நம்பிக்கைக்குரிய மிகவும் நெருங்கிய உறவினர்கள் போன்றோரைப் பார்ப்பதற்கு மட்டுமே ஒரு முஸ்லீம் பெண்மணி அனுமதிக்கப்படுகிறாள்.பிரார்த்தனைக்காக அவள் மசூதிக்குக் கூட செல்ல முடியாது.அவள் எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும் புர்கா (முத்திரை) அணிந்தே செல்ல வேண்டும்.இந்த புர்கா பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும் காட்சி இந்தியாவில் ஒருவர் காணக்கூடிய மிகவும் அருவருப்பான காட்சிகளில் ஒன்றாகும்.
நோய்கள் பரப்பும் நொய்மை மார்க்கம்
இத்தகைய ஒதுக்கல்முறை முஸ்லீம் பெண்களின் உடலாரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ரத்தசோகை, காச நோய், பயோரியா போன்ற நோய்கள் அவர்களைச் சர்வசாதாரணமாகப் பீடிக்கின்றன.அவர்களுடைய உடலமைப்பு உருக்குலைகிறது; முதுகு வளைந்துவிடுகிறது; எலும்புகள் துருத்திக் கொள்கின்றன; கைகால்கள் உருக்கோணலாகி விடுகின்றன. விலா எலும்புகளும், மூட்டெலும்புகளும் இன்னும் சொல்லப்போனால் அவர்களது எலும்புகள் அனைத்தும் வலியெடுக்கின்றன. அவர்களிடம் அடிக்கடி மிகுதியான நெஞ்சுத் துடிப்பு காணப்படுகிறது.இந்த இடுப்பெலும்பு உருத்திரிபு பிரசவத்தின்போது அகால மரணத்தில் கொண்டுபோய் விடுகிறது.பர்தா முறை முஸ்லீம் பெண்களின் மனவளர்ச்சிக்கும் தார்மீக வளர்ச்சிக்கும் ஒரு தடையாக உள்ளது.
மனோவியாதிகளுக்குள் மாட்டிக்கொள்ளும் மார்க்கத்துப் பெண்டிர்
ஆரோக்கியமான சமூகவாழ்க்கை பறிக்கப்படுவதால் அது தார்மீக சிதைவுக்கு, சீர்கேட்டுக்கு இட்டுச் செல்கிறது. வெளி உலகிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அவர்கள் தங்கள் மனத்தை சிறு சிறு குடும்பச் சண்டைகளில் செலுத்துகிறார்கள்.இதன் காரணமாக அவர்களது கண்ணோட்டம், மனப்பாங்கு மிகக் குறுகியதாக, கட்டுப்படுத்தப்பட்டதாகி விடுகிறது. முஸ்லீம் பெண்கள் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த தம்முடைய சகோதரிகளுக்குப் பலதுறைகளிலும் பின்தங்கிஇருக்கின்றனர்எத்தகையவெளிநிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர்.அடிமைப் புத்தியும் தாழ்வுமனப்பான்மையும், பெரும் பாறாங்கல்லாக அவர்களை அழுத்தி அமிழ்த்துகின்றனஅறிவாற்றல் பெறுவதில், மேலும் மேலும் கல்வி கற்பதில் அவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஏனென்றால் வீட்டின் நான்கு சுவர்களுக்கு அப்பால் உள்ள எதிலும் அக்கறை காட்டாதிருக்கும்படி அவர்கள் போதிக்கப்படுகின்றனர்.பர்தா பெண்கள் குறிப்பாக நிராதரவற்றவர்களாக, அபலைகளாக, மருட்சியும் பீதியும் அடைபவர்களாக, வாழ்ககையில் எந்தப் போராட்டத்திலும் துணிந்து ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்களாக, தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.
பர்தா ஒரு கடும் பிரச்சினை
இந்தியாவிலுள்ள முஸ்லீம்களிடையே பர்தாப் பெண்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது பர்தா பிரச்சினையின் பரந்த பரிமாணததையும் கடுமையையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.பர்தா முறை தார்மீக ரீதியில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளுடன் ஒப்பிடும்போது உடல்ரீதியிலும், அறிவுத்துறை ரீதியிலும் அது தோற்றுவித்துள்ள விளைவுகள் அத்தனை கடுமையானவை அல்ல என்றே கூறவேண்டும்.பர்தா முறை இருபாலரின் பால் ஈடுபாடு குறித்து, நாட்டம் குறித்து, வேட்கை குறித்து ஏற்பட்ட ஆழமான ஐயப்பாடே இந்த பர்தா முறை தோன்றியதற்கு அடிப்படைக் காரணம் எனலாம். இரு இனங்களையும் பிரித்து இதனைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக பர்தாமுறை முஸ்லீம் ஆண்களின் பழக்க நடை முறைகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பர்தா முறை காரணமாக ஒரு முஸ்லீமுக்கு தனது வீட்டுப் பெண்களைத் தவிர வெளியே உள்ள வேறு எந்த முஸ்லீம் பெண்களுடனும் தொடர்பில்லாமல் போய்விடுகிறது. தனது வீட்டுப் பெண்களுடன் அவனுக்குள்ள தொடர்பும்கூட எப்போதேனும் நடைபெறும் உரையாடலுடன் நின்றுவிடுகிறது.
மனப்பிறழ்வுப் பாலுணர்ச்சிகளை உருவாக்கும் இஸ்லாம்
ஒரு முஸ்லீம் ஆண் குழந்தைகளாகவும் வயதானவர்களாகவும் இருப்போரைத் தவிர வேறு எந்தப் பெண்பாலருடனும் தோழமை பூணவோ, ஒன்று கலந்து பழகவோ முடியாது.இவ்வாறு ஆண்களை பெண்களிடமிருந்து ஒதுக்கி வைக்கும் போக்கு ஆண்களின் பழக்க வழக்கங்கள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.ஆண், பெண் இருபாலரிடையேயும் உள்ள எல்லா தொடர்பையும் துண்டிக்கும் ஒரு சமூக அமைப்பு அதீத பாலுணர்ச்சி மீதும், இயற்கைக்கு மாறான இதர தீய பழக்கவழக்கஙகள் மீதும் நாட்டம்கொள்ளும் ஓர் ஆரோக்கியமற்ற போக்கையே தோற்றுவிக்கும் என்று கூறுவதற்கு ஒருவர் மனோதத்துவ நிபுணராக இருக்க வேண்டும் என்பதில்லை.
இந்துக்களை ஏன் இஸ்லாமியர் மதிப்பதில்லை ?
பர்தா முறையின் தீய விளைவுகள் முஸ்லீம் சமூகத்துடன் நின்றுவிடவில்லை. இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து சமூகரீதியில் ஒதுக்கிவைப்பதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.இந்த ஒதுக்கல் இந்தியாவின் பொது வாழ்க்கையில் ஒரு சாபக்கேடாக இருந்துவருவது அனைவருக்கும் தெரியும். இந்த வாதம் வலிந்து பெறப்பட்டதாகத் தோன்றக்கூடும், முஸ்லீம்களிடையே நிலவும் பர்தா முறையைக் காட்டிலும் இந்துக்களின் இணங்கிப் பழகாத போக்கே இந்தத் தனிமைப்படுத்தலுக்கு காரணம் என்று கூறக்கூடும். ஆனால் இந்துக்கள் இதை மறுக்கிறார்கள்.இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால் இத்தகைய தொடர்பு ஒருபுறம் பெண்களுக்கும் இன்னொரு புறம் ஆண்களுக்கும் இடையேயான தொடர்பையே குறிக்கும் என்பதால் இது சாத்தியமில்லை என்று அவர் கூறுவது நியாயமாகவே தோன்றுகிறது.பர்தா முறையும் அதன் விளைவாக ஏற்படும் தீமைகளும் முஸ்லீம்களிடையே மட்டுமின்றி, நாட்டின் சில பகுதிகளில் இந்துக்களில் குறிப்பிட்ட சில பகுதியினரிடையேயு்ம் காணப்படுகின்றன. ஆனால் இதில் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.
இந்துக்களின் இழிவு மதத்தால் ஏற்பட்டது அல்ல
அதாவது முஸ்லீம்களிடையே காணப்படும் பர்தா முறை மதத்தின் ஆணையை ஆதாரமாக, அடிப்படையாகக் கொண்டது. இந்துக்களிடையே நிலவும் பர்தா முறை அப்படிப்பட்டதல்ல.இந்துக்களைவிட முஸ்லீம்களிடையே தான் பர்தா மிக ஆழமாக வேரோடிப் போயிருக்கிறது.மதத்தின் ஆணைகளுக்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் இடையேயான தவிர்க்க முடியாத முரண்பாட்டை எதிர்கொண்டு வெற்றி பெறுவதன் மூலம் தான் இந்தத் தீமைக்கு முடிவுகட்டமுடியும்.பர்தா பிரச்சினை – அதன் மரபு மூலம் ஒருபுறமிருக்க – முஸ்லீம்களுக்கு அது  உண்மையிலேயே ஒரு சிக்கலான பிரச்சினை.ஆனால் இந்துக்களுக்கு அப்படியல்ல. இந்தத் தீமையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு முஸ்லீம்கள் ஏதேனும் முயற்சி எடுத்துக் கொள்கிறார்களா என்பதற்குச் சான்று ஏதும் இல்லை.’’இவ்வாறு அம்பேத்கர் இஸ்லாத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் நிலையை விளக்குகிறார்.