திங்கள், 11 நவம்பர், 2013

மக்காவின் பாதுகாப்பு: அபயமா? அலம்பலா?




செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 24

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: அபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் அம்பலம்.

முதலில் இரண்டு அம்சங்களை விளக்கி விடலாம் என எண்ணுகிறேன். 1) ஒரு கருத்தை எழுதுவதற்கு ஒரே நேரத்தில் எல்லா தரவுகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை. எல்லா தரவுகளையும் கவனத்தில் கொண்டு ஒருசிலவற்றை ஆதாரங்களாக தந்து எழுதுவது இயல்பானது. அதுபோல அதற்கு மறுப்பு எழுதும் போது எடுத்துக்காட்டப்பட்ட ஆதாரத்தை மட்டுமல்லாது கட்டுரையின் தன்மையிலிருந்து பதிலளிக்க வேண்டும் அப்போது தான் முழுமையான மறுப்பாக இருக்கும். மாறாக எடுத்துக்காட்டப்பட்ட ஆதாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேறு ஆதாரங்களே இல்லை எனும் ஹோதாவில் மறுப்பை எழுதுவது முழுமையானதாக ஆகாது. 2) பொதுவாகவே முகம்மதியர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒரு ஹதீஸோ, குரான் வசனமோ எடுத்துக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் எதற்காக எடுத்துக் காட்டுகிறோமோ அந்தப்பகுதியை மட்டும் எடுத்துக்காட்டுவது போதுமானது. ஆனால் இப்படி போதுமான பகுதியை மட்டும் எடுத்துக் காட்டுவதை ஏதோ பிறபகுதிகளை மறைத்துவிட்டு எழுதியிருப்பதாக கூறுவது முகம்மதியர்களின் பழக்கம். அப்படிக் கூறும் போது எழுதியதற்கு எதிரான விசயங்கள் மறைக்கப்பட்டதில் இருக்கிறது எனக் காட்ட வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். இந்த இரண்டு அம்சங்களும் நண்பர் இஹ்சாஸின் மறுப்பில் இருக்கிறது என்பதால் இதைக் குறிப்பிட்டேன். இனின் அவரின் மறுப்பிற்குள் செல்லலாம்.

முதலில் மக்கா எனும் நகரம் புனிதமான இடமாக, பாதுகாப்பான இடமாக, அபயமளிக்கும் இடமாக முகம்மதின் காலத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு வந்திருக்கிறது. இந்த நம்பிக்கை முகம்மதின் காலத்திற்குப் பிறகும் தொடர்கிறது. இப்படி ஒரு நம்பிக்கை மக்களிடையே இருப்பது குறித்த விவாதம் கட்டுரையில் நடத்தப்படவில்லை. மக்களின் இந்த நம்பிக்கையை முகம்மது தன்னுடைய அல்லாவின் கட்டளையாக உருமாற்றுகிறாரே, அதை குரான் இறை வேதம் என்பதற்கான சான்றாக மக்களை மூளைச்சலவை செய்கிறார்களே இன்றைய மதவாதிகள், அது தான் விவாதப் பொருளாக்கப்பட்டிருக்கிறது.

இவைகளை உள்வாங்கிக் கொள்ளாமல் நண்பர் இஹ்சாஸ் எடுத்துக் காட்டப்பட்ட இரண்டுமே போர்களல்ல என்கிறார். அதாவது, முகம்மது போர் புரியாமலேயே எதிரிகள் சரணடைந்து விட்டார்கள் என்றும், மக்காவின் உள்ளே நுழைந்து சிலர் கத்திக் கொண்டிருந்தார்கள் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று 1979 ஐயும் குறிப்பிடுகிறார்.இதன் மூலம் அங்கு போர் நடைபெறவில்லை நடைபெறவும் செய்யாது எனும் மதவாத மூளைச் சலவையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார்.

முதலில் அந்த ஹதீஸை எடுத்துக் கொள்வோம். புஹாரி 112ல் நமக்கு வெளிப்படும் உண்மை என்ன? முகம்மது போர் புரிய ஆயத்தமாக இருக்கிறார், எதிரிகள் பலமாக இருந்திருந்தால் அங்கு இரத்த ஆறு ஓட்டப்பட்டிருக்கும். இதைக் கருத்தில் கொண்டு தான் முகம்மது எனக்கும் மட்டும் அதுவும் பகலில் சில மணித்துளிகளுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், முன்னரும் அனுமதி இல்லை பின்னரும் அனுமதி இல்லை என்றெல்லாம் பீலா விடுகிறார். இதற்காகத்தான் அந்த ஹதீஸ் எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் முகம்மதுவிற்கு முன்னரும் பின்னரும் பல போர்கள் அங்கு நடந்துள்ளன என்பது தான் வரலாறு. ஆனாலும் அது அந்த நகரின் மீதான புனிதம் அபயம் எனும் மக்களின் கருத்தை காயப்படுத்தவில்லை. ஏனென்றால் அவர்களின் புனிதம் ஆன்மீகம் தொடர்பானது. போரோ, சண்டையோ கொலையோ நடந்து விட்டால் அந்த நகரின் அபயம் கெட்டுப் போய்விடுவதான பொருளில் அந்த மக்கள் அந்த நகரின் புனிதத்தை கருதியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் முகம்மது புல்லைக் கூட வெட்டக் கூடாது என்கிறார். இந்த அடிப்படையிலிருந்து தான் முகம்மது எனக்கு மட்டும் அனுமதி எனக்குப்பிறகு யாருக்கும் இல்லை என்கிறார். அதன் பிறகு பல போர்கள் நடந்திருக்கிறது என்றாலும் அண்மையில் நடந்ததை மட்டும் எடுத்துக் கொண்டு சௌதி அரசு அல்லாவின் அனுமதியை மீறி போரிட்டிருக்கிறது என்று எழுதியிருந்தேன். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் முகம்மதுவுக்குப் பிறகு போரிட்டவர்கள் அல்லாவின் அனுமதியின்மையை மீறி போரிட்டிருக்கிறார்கள். அல்லது, அனுமதி இல்லை என முகம்மது கூறியதை பொய் என்று போரிட்டவர்கள் கருதியிருக்கிறார்கள். இந்த இரண்டிலொன்றுதானே உண்மையாக இருக்க முடியும். ஆனால் இன்றைய மதவாதிகளோ நிகழ்ந்த போர்களையெல்லாம் மறைத்து இன்றுவரை அங்கு போரே நடைபெறவில்லை அதனால் குரான் இறை வேதம் என்பது உறுதியாகிறது என்று முகம்மதை விட ஒருபடி மேலேறிச் சென்று பீலா விடுகிறார்கள்.

கட்டுரையின் இந்த உள்ளார்ந்த அம்சங்களுக்கு நண்பர் இஹ்சாஸ் பதிலளித்திருக்கிறாரா? அவர் கூறியிருப்பதெல்லாம் அங்கு போரே நடக்கவில்லை என்பதைத்தான். முகம்மது போர் புரிய வந்தார் ஆனால் போர் புரியாமலேயே எதிரிகள் சரணடைந்து விட்டதால் போர் நடக்கவில்லை. 1979ல் சிலர் உள்ளே நுழைந்து கூச்சல் போட்டார்கள் பின்னர் வெளியேற்றப்பட்டார்கள் என்கிறார். கட்டுரையிலேயே படங்களை இணைத்திருக்கிறேன் பார்க்கவில்லயா? ஒரு வாரமாக கவச வாகனங்களுடன் போராடிப்பார்த்து விட்டு முடியாமல் பிரான்சிலிருந்து வந்து சௌதி துருப்புகளுக்கு பயிற்சியளித்து சுவர்களைத் துளைத்து நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேதிஆயுதங்களைப் பயன்படுத்தி பலரைக் கொன்று முடிக்கப்பட்ட போரை வெகு எளிதாக கூச்சல் போட்டார்கள் வெளியேற்றினார்கள் என்று கூறுகிறாரே இஹ்சாஸ். எந்த அளவுக்கு மத போதை அவர் தலைக்கு ஏறி நாளங்களிலெல்லாம் பரவியிருக்கும்?

அடுத்து அந்த கனிகள் கொண்டு வரப்படும் முன்னறிவிப்பு குறித்தும் எழுதியிருக்கிறார். குறிப்பிட்ட அந்த வசனம் (குரான் 28:57) கூறுவது என்ன? மக்காவில் முகம்மதின் வழியில் வருவதற்கு தயங்கும் சிலர் அதற்கு காரணமாக தாங்கள் மக்காவை விட்டு துரத்தப்பட்டு விடுவோம் என பயப்படுவதாக கூறுவதற்கு பதில் கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது. அவர்களை நாம் பாதுகாப்பாக வாழவைக்கவில்லையா கனிவகைகளை அவர்களுக்காக கொண்டு வரவில்லையா? அதுபோல முகம்மதின் வழிக்கு வந்தபின்னும் ஆக்கி வைப்போம் என்பதாக அந்த வசனம் கூறப்பட்டிருக்கிறது. மக்கா என்பது வணிகப்பாதைகளின் சந்திப்பு. அந்த அடிப்படையில் பலவகைப்பட்ட வியாபாரப் பொருட்கள் மக்காவில் கிடைத்து வந்தன. இதைத்தான் அந்த வசனம் கடந்தகால வினையில் கூறுகிறது. ஒருவேளை எதிர்கால வினையில் கூறியிருந்தால் கூட இப்போது கனி வகைகள் இறக்குமதி செய்வதோடு தொடர்புபடுத்தலாம். அப்படி இல்லாமல் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் இது முன்னறிவிப்பு என்று புழகமடைந்தால் அது உண்மையாகி விடுமா? அரபிகளின் வாழ்வில் அனைத்து விதங்களிலும் திருப்பு முனையை ஏற்படுத்திய எண்ணெய் வளம் குறித்து முன்னறிவிப்போ பின்னறிவிப்போ மேல் கீழ் அறிவிப்புகளோ செய்ய முடியாத குரான் கடந்த கால வினையில் கனிவகைகளை கூறியதை முன்னறிவிப்பு என்றால் எந்த வாயால் சிரிப்பது?

செவ்வாய், 22 அக்டோபர், 2013

முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?


Badr

முகம்மது மதீனாவின் மன்னராக தம்மை முடிசூட்டிக் கொண்ட பிறகிலிருந்து மரணிக்கும் வரையிலான பத்து ஆண்டுகளில் தோராயமாக பத்தொன்பது போர்களை நடத்தியிருக்கிறார். முகம்மதின் சமகாலத்தில் உலகின் பிற பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட போர்களோடு ஒப்பிட்டால் முகம்மது நடத்தியது போர்களல்ல, குழுச் சண்டைகள். ஆனாலும் ஒரு நிலப்பகுதியின் மன்னர் எனும் ஹோதாவில் நடத்தப்பட்டதால் அவைகள் போர்களாகவே குறிப்பிடப்படுகின்றன. போர்களோ, குழுச் சண்டைகளோ அவைகளின் நோக்கம் என்னவாக இருந்தது? அவை அரசியலை முன்னெடுத்து நடத்தப்பட்டவைகளா? அல்லது ஆன்மீகத்தை முன்வைத்து நடத்தப்பட்டவைகளா? என்பதே இன்றியமையாத கேள்வி. ஏனென்றால் முஸ்லீம்களின் விவரிப்பின்படி முகம்மதின் நோக்கம் ஒரு புதிய மதத்தைப் பரப்பும் ஆன்மீகத் தலைவராக இருப்பது தான். அவர் ஒரு மன்னராக அரசியல் தலைமைப் பாத்திரத்தை ஏற்கவில்லை என்றாலும்கூட அவர் ஆன்மீகத் தலைவராக இருந்திருப்பார். மாறாக ஆன்மீகத் தலைமையை நிராகரித்துவிட்டு ஒருபோதும் அவர் அரசியல் தலைவராக நீடித்திருந்திருக்க மாட்டார். அவர் ஆன்மீகத் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் ஒருசேர இருந்ததாக கருதப்பட்டாலும் இது தான் இஸ்லாமியப் புரிதல்.

முகம்மதின் காலத்தில் அரேபியா அரசுகளைக் கொண்டிருக்கவில்லை. மக்காவில் ஹில்ஃப் அல் ஃபுலூல், மாலா போன்ற அமைப்புகள் இருந்தாலும் அரசு எனும் தகுதியில் அவை இல்லை. மதினாவில் இது போன்ற அமைப்புகளும் கூட கிடையாது. அதேநேரம் அரேபியாவுக்கு வெளியே முறையான அரசமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் அரேபிய பாலைவனப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த நாடோடிகள், விவசாயம் செய்து ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தவர்கள், பண்டமாற்று வணிகர்கள் ஆகிய மூன்று இனக் குழுக்களையும் இணைத்து வணிகர்களின் மேலாதிக்கத்தில் ஒரு அரசமைப்பை முகம்மது மதீனாவில் ஏற்படுத்தினார். இந்த அடிப்படையிலிருந்து தான் அந்தப் போர்கள் நிகழ்த்தப்பட்டன.

இந்தப் போர்கள் ஏன் நடத்தப்பட்டன என்பதற்கு இஸ்லாமிய பரப்புரையாளர்கள் சில காரணங்களைக் கூறுகிறார்கள்.
1. மக்காவிலிருந்து முஸ்லீம்களின் சொத்துகளை பறித்து அவர்களை விரட்டியடித்தார்கள். எனவே, அதற்குப் பதிலடியாக போர்கள் நடத்தப்பட்டன.
2. புலம் பெயர்ந்து மதீனா சென்றபிறகும் மக்கா குரைஷிகளின் இன்னல்கள் தொடர்ந்தன. எனவே, அதைத் தடுப்பதற்காக போர்கள் நடத்தப்பட்டன.
3. இஸ்லாமிய நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் எனவே போர்கள் நடத்தப்பட்டன.
4. பலமான படை திரட்டி ஆயுதங்களுடன் முஸ்லீம்களைத் தாக்க வந்தார்கள். எனவே அவர்களை எதிர்கொள்ளும் விதமாக போர்கள் நடத்தப்பட்டன.
இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மதவாதிகள் கூறும் மேற்கண்ட காரணங்கள் பொருந்தாதவை, பொய்யானவை என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

மக்காவிலிருந்து சொத்துக்களை பறித்துவிட்டு விரட்டியடித்தனரா? இல்லை, சொத்துக்கள் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கவில்லை என்பதை கீழ்காணும் ஹதீஸ் பதிவு செய்திருக்கிறது.

.. .. .. தங்களுடன் இருக்கும் முஜாஹிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள் .. .. .. புஹாரி 4274

நீளமான இந்த ஹதீஸில் இருக்கும் இந்த வாக்கியம் புலம் பெயர்ந்து சென்றவர்கள் தங்கள் சொத்துகளை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. இது மட்டுமின்றி புலம்பெயர்ந்து சென்றவர்கள் விரட்டப்பட்டு சென்றவர்களில்லை என்பதையும் ஒரு குரான் வசனம் கோடி காட்டுகிறது.

.. .. .. நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ் மீது ஈமான் கொண்டதற்காக இத்தூதரையும் உங்களையும் வெளியேற்றுகிறார்கள். என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்) நீங்கள் பயத்தால் அவர்களிடம் ரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள் .. .. .. குரான் 60:1

அதாவது சொத்துக்களை பிடுங்கி விரட்டப்பட்டு வெளியேறியவர்கள் என்று கூறப்படுபவர்கள் யார் அவர்களை வெளியேற்றினார்களோ அவர்களுடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது. அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு குடி பெயர்ந்தவர்களில் சிலர் மதீனாவின் ரகசியங்களை மக்காவாசிகளிடம் வெளிப்படுத்தி விடுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறது இந்த வசனம். இது மட்டுமா? இன்னொரு வசனம் மக்காவிலுள்ளவர்கள் புலம் பெயர்ந்தவர்களை விரட்டவில்லை மாறாக விருப்பமின்றி முகம்மதின் நிர்ப்பந்தத்தினாலேயே வெளியேறினார்கள் என்பதையும் போட்டு உடைக்கிறது.

.. .. .. எவர் ஈமான் கொண்டு ஊரை விட்டு வெளியேறவில்லையோ அவர்கள் நாடு துறக்கும் வரையில் நீங்கள் அவர்களுடைய எந்த விசயத்திலும் பொறுப்பாளியல்ல .. .. .. குரான் 8:72

அதாவது மக்காவை விட்டு வெளியேறும் எண்ணமில்லாதவர்கள் மக்காவை விட்டு வெளியேறி மதீனா வராதவரை தாம் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்று மிரட்டுகிறார் முகம்மது. அதாவது முகம்மது தன்னுடைய சுய விருப்பத்தின் பேரிலேயே தன்னைச் சார்ந்தவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு மக்காவிலிருந்து மதீனாவிற்கு புலம் பெயரச் செய்திருக்கிறார் என்பதை மிகத் தெளிவாகவே இந்த வசனம் புரியவைத்து விடுகிறது.

இதுமட்டுமா? புலம்பெயர்ந்து மதீனா சென்ற பிறகும் கூட மதீனாவாசிகள் மக்காவாசிகளை மிரட்டும் நிலையிலேயே இருந்திருக்கிறார்கள் என்று இன்னொரு ஹதீஸ் நமக்கு தெரிவிக்கிறது. புஹாரி 3632ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் மிக நீளமான அந்த ஹதீஸ் முகம்மது மதீனவுக்கு புலம் பெயர்ந்து சென்றபின் மதினாவிலிருந்து ஒருவர் மக்கவுக்கு வந்து காஅபாவை வலம் வந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய்த் தகராறையும், போர் நடைபெறுவதற்கு முன்னரே முகம்மது மக்காவிலிருக்கும் உமய்யா என்பவரை கொல்ல திட்டம் தீட்டியிருந்ததையும் உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி போரை திட்டமிட்டவர்கள் முகம்மதும் அவரின் சீடர்களுமேயன்றி மக்காவிலுள்ளவர்களல்ல என்பதையும் அந்த ஹதீஸிலுள்ள ஒரு வாக்கியம் மிகத் துல்லியமாக விளக்குகிறது.

.. .. .. அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன் என்று சொன்னார்கள் .. .. .. புஹாரி 3632

இஸ்லாத்தின் முதல் போர் என வர்ணிக்கப்படும் பத்ரு போர் மக்காவின் வணிகர்கள் ஷாம் நாட்டிற்குச் செல்லும் பாதையை தடுக்கும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டது என்பது வரலாற்றுத் தகவல்.

இஸ்லாத்தின் முதல் போர் என்று பத்ரு போர் வர்ணிக்கப்பட்டாலும் அதற்கு முன்பாக சிறிய அளவில் ஒன்பது போர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சற்றேறக் குறைய பத்து மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஒன்பது போர்களின் நோக்கம் என்ன? ஐயமில்லாமல் மக்காவின் வணிகக் கூட்டத்தை தாக்கிக் கொள்ளையடிப்பது தான் என்பதை இப்ன் இஷாக் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.

…..இதோ குறைஷிகளின் வியாபாரக்கூட்டம் அவர்களது 
பொருட்களுடன் வருகிறது.அக்கூட்டத்தை நோக்கி நீங்கள்
 புறப்படுங்கள், அல்லாஹ், அவைகளைக் கொள்ளைப் 
பொருட்களாக  உங்களுக்கு அளிக்கக் கூடும் .. .. ..
சிராஅத் ரஸூலல்லாஹ் – இப்ன் இஷாக்
ஆங்கில மொழிபெயர்ப்பு

அகழிப் போர் என்றொரு போரைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். மதீனாவில் முஸ்லீம்களின் எதிரிகளுக்கு உதவுகிறார்கள் என்ற காரணத்தைக் கூறி குறைஜா எனும் யூத இனக்குழுவினருக்கு எதிராக அகழி வெட்டி நடத்தப்பட்ட முற்றுகைப் போர். யூதர்கள் சண்டையிடாமலேயே சரணடைந்து விட்ட பின்னரும், அந்த இனக்குழுவில் இருந்த ஆண்கள் அனைவரும் சுமார் அறுநூறு பேர் கொல்லப்படுகிறார்கள். பெண்களும் சிறுவர்களும் அடிமைகளாக பிடித்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் செல்வங்கங்கள் கொள்ளையிடப்பட்டு பங்கிடப்படுகிறது. பெரும் நிலப் பரப்புகளையும் செல்வச் செழிப்பையும் முஸ்லீம்களுக்கு வழங்கியது இந்தப் போர் தான் என்று குரானே குறிப்பிடுகிறது. இதை குரான் வசனம் 33:26,27 ல் காணலாம்.

இன்னும் வேதக்காரர்களிலிருந்தும் உதவி புரிந்தார்களோ அவர்களை அவர்களது கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான். ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள். இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப் பிடித்தீர்கள்
 இன்னும் அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருட்களுக்கும், நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கிவிட்டான். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கல் மீதும் சக்தியுடையவன்

போரில் கிடைக்கும் பொருட்களை யாராருக்கு எவ்வளவு பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கு அல் அன்ஃபால் என்று ஒரு அத்தியாத்தையே குரான் தன்னிடம் கொண்டுள்ளது. அதன்படி முகம்மது போரில் நேரடியாக கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் போரில் கிடைக்கும் பொருட்களில் இருபது விழுக்காடு பொருட்கள் முகம்மதுக்கு சொந்தமாகும். இவைகளெல்லாம் உணர்த்துவது என்ன?

முகம்மதின் காலத்தில் நடத்தப்பட்ட போர்களில் இருந்தது அரசியலா? ஆன்மீகமா? என்றால் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கே அதில் ஆன்மீகம் கொஞ்சமும் இல்லை என்பது எளிதில் விளங்கும். முகம்மது மக்காவிலிருந்தவரை அவரும் சில சீடர்களும் தான். ஆனால் மதினா வந்த பின்னரோ அவர் ஒரு மன்னர், ஒரு அரசமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது, ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் இருந்தது. இவைகளின் நிர்வாகச் செலவுகளுக்கு முகம்மதுவிடம் இருந்த திட்டம் குறித்தும், விதிக்கப்பட்ட வரிகளின் மூலம் கிடைத்த வருவாய் குறித்தும் விளக்குவதற்கு முஸ்லீம்களிடம் ஆவணம் ஏதேனும் இருக்கிறதா? அல்லது மதவாதிகள் இது குறித்து விளக்குவார்களா? போரில் தோற்றவர்களை இஸ்லாத்திற்குள் கொண்டு வருவதற்கு முகம்மது ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டார் என்று யாராவது கூற முடியுமா? முஸ்லீம்களிடம் அன்று இருந்த செல்வங்களெல்லாம் போரில் கைப்பற்றப்பட்டவைகளே.

வேறு வழியில்லாமல் தற்காத்துக் கொள்வதற்காகவே முஸ்லீம்கள் போரிட்டார்கள் என்றால் தாக்க வந்தவர்கள் ஆயுதங்களுக்குப் பதிலாக செல்வங்களை அள்ளி வந்தார்களா? புதிதாக ஏற்படுத்திய அரசைக் காப்பதற்கு தேவைப்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும், தன்னை நம்பி வந்தவர்களை தொடர்ந்து தக்க வைக்கவும் அவர்களுக்கு பொருளாதார வளத்தை ஏற்படுத்தவுமே முகம்மது போர்களை நடத்தினாரேயன்றி மதக் கொள்கைகளை பரப்புவதற்காக அல்ல. அந்த வகையில் முகம்மது ஆன்மீகவாதியாக அல்ல அரசியல்வாதியாகவே திகழ்ந்திருக்கிறார். இதில் ஐயம் ஒன்றுமில்லை.

சனி, 21 செப்டம்பர், 2013

நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே


செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 22



எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை!

நூஹின் கப்பல் புராணக் குப்பைதான் என்பதற்கு அந்தப் பதிவில் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நங்கூரமாக காட்டப்படும் கல் குறித்த ஐயம், கப்பலின் அளவுகள் குறித்த ஐயம், ஆய்வாளர்களின் முடிவுகள், உலகம் முழுமைக்குமாக ஒரு ஊழிப் பெருவெள்ளம் உலகில் ஏற்பட்டதா எனும் ஐயம் போன்றவை. நூஹின் கப்பல் உண்ண்ண்ண்ண்ண்மைதான் என அழுத்தமாக கூற விரும்பும் நண்பர் இஹ்சாஸ் இவை குறித்து கூறுவதென்ன? நங்கூரக் கல் நங்கூரக் கல்லல்ல என ஒப்புக் கொள்கிறார். கப்பலில் அளவுகள் பைபிளில் இருப்பவை எனவே நாங்கள் அதை ஏற்பதில்லை என்கிறார். டேவிட் ஃபசோல்ட் மீண்டும் மாறிவிட்டார் என்கிறார், (ஃபசோல்ட் மட்டுமல்ல, அது கப்பலல்ல என்று கூறிய அறிவியலாளர்களின் பட்டியலே இருக்கிறது என்பதை நண்பர் தன்னுடைய வசதிக்காக மறந்துவிட்டார்) ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டதை நம்ப வேண்டும் என்கிறார். இது தான் இஹ்சாஸ் கூறியிருப்பது. பின் எப்படி கப்பல் உண்மை என்கிறார். ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், பின் எப்படி அந்தக் கப்பல் அவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும்? ஐயா! அது கப்பலே இல்லை என்பதற்குத்தான் இவ்வளவு ஆதாரங்களையும் தந்திருக்கிறேன். இதை அந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை படித்துப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். தேவை கருதி அந்த பின்னூட்ட விபரங்களை சுருக்கமாக பார்க்கலாம்.

1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர் என்று கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற பல ஆய்வாளர்கள் அங்கு கப்பல் என்று குறிப்பிடத்தகுத்ததாக ஒன்றுமில்லை என பதிவு செய்திருக்கிறார்கள். அனால் நண்பர் இஹ்சாஸ் அவ்வளவு உயரத்துக்கு அந்தக் கப்பல் எப்படி சென்றிருக்க முடியும் என்று கேட்கிறார். முதலில் அது கப்பல் தான் என்பதை உறுதிப்படுத்துங்கள் பின் மற்றதை பார்த்துக் கொள்ளலாம்.

நண்பர் இஹ்சாஸ் கப்பல் உண்மை என்பதற்கு எந்தவிதமான தரவுகளையும் முன்வைக்கவில்லை என்றாலும் அந்த பதிவின் பின்னூட்டங்களில் சலாஹுத்தீன் என்பவருடன் நடந்த விவாதத்தை சுருக்கி தருகிறேன். அது, நூஹின் கப்பல் எந்த அளவுக்கு புராணப் புரட்டாக இருக்கிறது என்பதை காண்பவர்களுக்கு தூலமாக உணர்த்தும்.

அனேக கிருஸ்தவ தளங்களில் மரப்பலகையும் ஆணியும் கண்டுபிடித்ததாக அளந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பலகையோ ஆணியோ அல்லது உலோகங்களோ காணப்படவில்லை என்பதே உண்மை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக நீங்களும் நம்பினால் அந்த கிருஸ்தவ தளங்களில் ஆதாரங்களை கேட்டுப் பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்கே புரியவரும்.
அலுமினியமும், டைட்டானியமும் காணப்பட்டதாக இவர்கள் கூறுவது ஒன்றே போதும் அதை பொய் என்று நிரூபிக்க, காரணம், டைட்டானியம் 1791ல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம். அலுமினியமோ ஹான்ஸ் கிரிஸ்டியன் என்பவரால் 1825ல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

பைபிளில் கப்பல் தங்கிய இடம் அராராத் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குரானில் ஜூதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அராராத் மலையும் ஜூதி மலையும் வேறு வேறு மலைகள். ஜூதி மலை அர்மீனிய எல்லையில் இருக்கிறது. இப்போது கப்பல் தங்கிய இடமாக எதை கருதுவது? அராராத்தா? ஜூதியா? அராராத்திற்கு அருகிலேயே ஜூதி என்றொரு மலை இருக்க, மலைக்கு ஜபல் என்ற சொல்லும் இருந்திருக்க எந்த இடத்தில் கப்பல் தரை தட்டியது என்பதை தெரிவிக்க குழப்பமே ஏற்படாமல் ஜூதி எனும் சொல்லை தேர்ந்தெடுத்த அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்னே தீர்க்கதரிசனம். ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால் இதுவரை மொழிபெயர்த்தவர்கள் ஜூதி மலை என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள். இரண்டில் எதை சரி என்பது. ஒன்று செய்யுங்கள் ஜபல் அல் நூர் என்பதுபோல் ஜூதி அல் உஹத் என்பது போன்று ஒரு சொல்லை மேற்கோள் காட்டமுடியுமா?

உலகின் பல பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கின் அடையாளங்கள் இருக்கின்றன. சிசிலியில், சிவாலிக் பகுதிகளில் வெள்ளத்தின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் நோவாவின் பெருவெள்ளத்தோடு தொடர்புடையனவா? அந்தப்பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கா? உலகம் முழுமைக்குமா? இந்தக்கதையின் படி வெள்ளம் உலகம் முழுமைக்கும் தான். இல்லையென்றால் அனைத்து மிருகங்களிலும் பறவைகளிலும் புள்ளினங்களிலும் சதைசதையாக ஏற்றிக்கொள்ளச் சொல்லவேண்டிய அவசியமென்ன? உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான விலங்குகள் வசிப்பதில்லை. ஒரு சில விலங்குகள் அந்தந்தப் பகுதிக்கேயான சிறப்பு விலங்குகளாக இருக்கும். ஒரு பகுதியை மட்டும் அழிக்க நினைத்த இறைவன் அந்தப்பகுதிக்கான சிறப்பு விலங்கை மட்டும் ஏற்றிக்கொள்ளச்சொல்லாமல் விலங்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஜோடியை ஏற்றிக்கொள்ளச்சொல்வானேன்? இந்த ஒவ்வொன்றிலிருந்தும் எனும் சொல்லுக்கான பொருளை நூஹ் சரியாக புரிந்து கொள்ளவில்லையா அல்லது அந்தச்சொல்லுக்கு (மின் குல்லின்) அந்தப்பகுதியின் சிற்ப்பு விலங்கை குறிக்கும் பொருள் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் அருஞ்சொற்பொருள் கண்டு விளக்கவேண்டும். அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாதா விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா? ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும்? அல்லது அந்தப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு எந்தப்பகுதியிலுமே இருந்திராத அதிசய விலங்குகளாக இருந்தன என்பதற்கு குரானில் வசனம் ஏதேனும் இருக்கிறதா?

இன்றைய அராராத் மலையின் உயரம் நான் கூற வேண்டிய அவசியமின்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு உய்ரத்திலுள்ள மலையில் கப்பல் தங்கவேண்டுமென்றால் அந்த உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்திருக்கவேண்டும். கடல் மட்டத்தில் ஒரு சில மீட்டர்கள் கூடினாலே பாதி உலகம் காணாமல் போய்விடும் தெரியுமா உங்களுக்கு? மலை உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது உண்மை, எல்லா மிருகங்களையும் ஏற்றிக்கொள்ளச்சொன்னது உண்மை ஆனாலும் வெள்ளம் ஒரு பகுதில் மட்டும் தான், எங்கோ இடிக்கிறது அல்லவா? எவெரெஸ்ட் உயரத்திற்கு வெள்ளம் வரவில்லை என்றாலும் அராராத் அளவிற்கு வந்திருக்கிறது, சரிதானே இப்போது அராராத்தை விட உயரமான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, ராக்கி மலை, கிளிமஞ்சாரோ போன்ற சில உயரமான மலைகளை தவிர ஏனைய பகுதிகள் மூழ்கியிருக்கும் சரிதானே. அப்போது இதுபோன்ற வெகுசில மலைகளின் உயரத்தில் தங்கியிருந்த மக்களை தவிர ஏனையவர்களெல்லாம் அழிந்திருப்பார்கள் அப்படித்தானே. இப்படிப்பட்ட வெள்ளத்தை உலகம் முழுமைக்கும் வந்த வெள்ளமாக சொல்வது பொருத்தமாக இருக்குமா? இல்லை மொசபட்டோமியா பகுதிக்கு மட்டும் வந்த வெள்ளம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா?

ராண் யாட் கண்டெடுத்ததாக சொல்லப்படும் மட்கிப்போன பலகையில் இருந்த கார்பனின் அளவு அவர் கொடுத்திருக்கும் இரண்டு பரிசோதனை கூடங்களின் அளவும் மாறுபாடாக இருக்கிறது. ஒன்றில் 1.88 விழுக்காடு மற்றொன்றில் 4.95 விழுக்காடு. மேலும் இந்த அளவு கார்பன் தான் அந்த பகுதியெங்கும் அதாவது அந்த மலைப்பகுதி முழுவதும் கிடைக்கிறது என்பதை முனைவர் பௌம் கார்ட்னெர் சோதனை செய்து காட்டியிருக்கிறார். எனவே ரான் யாட் கண்டெடுத்ததாக குறிப்பிடப்படுவது மரமல்ல. இன்னும் அந்த மலை எரிமலை குளம்புகளாலானது, எனவே மாங்கனீஸ் போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்கும் இதைத்தான் உலோகமாகவும் காட்டுகிறார்.

கல்லாய்ச்சமைந்த மரம் என ரான் யாட் காட்டுவதும் கல்மரமல்ல. இதுவரை உலகில் கண்டெடுக்கப்பட்ட எந்த கல்லாய்ச் சமைந்த மரத்தின் வகையிலும் சாராமலிருக்கிறது. முக்கியமான விசயம் என்னவென்றால் கல்லாய் மாறிய மரம் எனக் காட்டப்படும் ஒன்றில் வளர்வளையங்கள் காணப்படவில்லை. எந்த மரத்துண்டிலும் வளர்ச்சியை குறிக்கும் வரைகள் காணப்படும், கல்லாய் சமைந்த மரத்திலும் இவ்வரைகள் மாறுவதில்லை. ஆனால் இவ்வாறான வரைகள் எதுவும் கண்டெடுக்கப்பட்ட அதில் காணப்படவில்லை. இதுவரை 200 கல்லாய்ச் சமைந்த மரங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அனைத்தும் இன்றைய மரவகைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன, ஆனால் இதில் மட்டும் எந்த தொடர்பையும் காணமுடியவில்லை. ஏன்? ஆக சாதாரணமாக மலைப்பகுதிகளில் காணப்படும் எடை குறைந்த கூடிய கற்களை மரம் என்றும் கல்லாய்ப் போன மரம் என்றும் காட்டியிருக்கிறார்.

ரான் யாட்டுடன் ஜி பி ஆர் (தரை துளைக்கும் ரேடார்) பணியில் ஈடுபட்டிருந்த டாம் ஃபென்னர் கூறுகிறார், “பலமுறை நாங்கள் பரிசோதனை செய்தும் ஒவ்வொறு முறையும் வேறுவேறான முடிவுகளே கிடைத்தன, ஒரே மாதிரியான முடிவு திரும்பவும் கிடைக்கவில்லை எனவே ஒன்றரை நாளில் ரேடார் பணியை நாங்கள் முடித்துக்கொண்டோம்” என்று. மேலும் அதே இடங்களில் முனைவர் பௌம் கார்ட்னெர் மூலக்கூறு அதிர்வு கருவியை கொண்டு சோதித்துப்பார்த்துவிட்டு “மனித கரங்களினால் பணியப்பட்ட எதுவும் இங்கு இருப்பதற்கு 10விழுக்காடிற்கும் குறைவான வாய்ப்பே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

1959ல் அந்த இடம் நோவாவின் கப்பலாக அறியப்பட்டதிலிருந்து அங்கு ஆய்வுகளைச் செய்த பலர் இங்கு நோவாவின் கப்பல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் வன்டேமன்
டான் லாவரிட்ஜ்
டேவிட் மெர்லிங்
டேவிட் ஃபசோல்டு
டாம் ஃபென்னர்
பௌம் கார்ட்னெர்
ஜான் மோரிஸ்
ஹெரால்ட் கஃபின்
இன்னும் பலர். இதன் பிறகும் அங்கு நோவாவின் கப்பல் இருப்பதாக நம்பத்தான் முடியும், ஏற்கமுடியாது.

ஆக மிகத்தெளிவாக அங்கு கப்பலோ படகோ அல்லது அது போன்ற எதுவுமே இல்லை என்பது மட்டுமல்லாமல் அவ்வாறு கூறுபவர்களெல்லாம் தங்கள் மதவாத பொய்களை நிலை நிறுத்துவதற்காக மூளையை மூடிக் கொண்டு முனங்கிக் கொண்டிருப்பவர்களே என்பதும் உறுதி.

நண்பர் இஹ்சாஸின் பதிவில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதாவது நூஹ் என்பவர் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார் என்று குரான் கூறுகிறது. இவ்வளவு நீண்ட காலம் மனிதன் பூமியில் வாழ்வதாக இருந்தால் அதுவரை மனித உடலின் வேதிப்பொருட்கள் தாக்குப்பிடிக்காது எனக் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு நண்பர் இஹ்சாஸ் \\\இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். கடவுள் அதீத சக்தி வாய்ந்தவன். இதுவெல்லாம் அவனுக்கு சிரமமானதல்ல என்பதுதான் எமது நிலை. இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது வரை இது தவறாகாது. இதுபோல் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுதான் பதில்/// கடவுள் இல்லை எனும் அறுதியிலிருந்து தான் நான் வாதிட்டுக் கொண்டிருக்கிறேன். இது வெறும் வாதமல்ல. முடிந்தால் நான் ஏற்கனவே பலரிடம் கடவுளின் இருப்பை மறுத்து கூறியவற்றை மீண்டும் இங்கே கூறுகிறேன். நண்பர் இஹ்சாஸுக்கு திறனிருந்தால் இவைகளுக்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.

கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள்:
1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

கடவுள் இல்லை என்பதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள்:
1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.
2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

கடவுள் இல்லை என்பதற்கு சமூக ரீதியான காரணங்கள்:
1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.
2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

குகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 23

dead sea scrolls
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: குகைவாசிகளும் குழப்பும் செங்கொடியும்

எத்தனை தெளிவாக இருந்தாலும் குழப்பம் இருப்பதாய் கற்பித்துக் கொண்டால் தான் மதவாதம் நீடிக்க முடியும். இதற்கு தெளிவான சான்றாய் இருப்பது தான் நண்பர் இஹ்சாஸின் பதிவு. முதலில் குறிப்பிட்ட கட்டுரையில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை சுருக்கமாக பார்த்துவிடலாம். குரானை மெய்ப்படுத்தும் திட ஆதாரங்களில் ஒன்றான ‘சாக்கடல் சாசனச் சுருள்கள்’ கிருஸ்தவர்களால் மறைக்கப்படுவது ஏன்? ஏனென்றால், ஏசு அதாவது ஈசா போதித்தது இஸ்லாம் தான் என்பதை அது உறுதிப்படுத்துகிறது என்பதால் தான். இது தான் இஸ்லாமியர்களின் பிரச்சாரம். இதை மறுத்து அந்தச் சுருள்கள் இஸ்லாத்தை உண்மைப்படுத்தவில்லை பௌத்தத்தை உண்மைப்படுத்துகிறது என்றும், ஏசு என்றொருவர் வரலாற்றில் வாழ்ந்ததற்கான தடயமில்லை. பௌத்தத்திலிருந்து உருவப்பட்ட கதைகளிலிருந்து உருவகிக்கப்பட்ட ஒரு பாத்திரம் என்றும் எழுதப்பட்டிருந்தது. நம்மை குழப்புவதாக கூறிய நண்பர் இஹ்சாஸ் தெளிவாகக் கூறுவது என்ன?

முதலில் முன்னர் கூறியிருந்தது போலவே கடவுளை மறுத்துவிட்டு பின்னர் பிறவற்றை பேச வேண்டும் என்கிறார். இத்தொடரின் சென்ற பதிவிலேயே இது குறித்த பதிலும் கேள்விகளும் கேட்கப்பட்டு இருப்பதால் நாம் அடுத்தவைகளுக்கு நகர்ந்துவிடலாம். கண்டெடுக்கப்பட்ட ஏடுகளின் காலம் என்ன? கட்டுரையில் கிமு மூன்றாம் நூற்றாண்டு என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நண்பர் அவைகளின் காலம் என கிமு 150 லிருந்து கிபி 75 வரை என்கிறார். எது சரியானது? நண்பர் இஹ்சாஸ் குறிப்பிட்டிருப்பது கிருஸ்தவ தளங்கள் குறிப்பிடும் காலம். அவை இந்த காலத்தை மட்டுமல்ல கண்டெடுக்கப்பட்ட ஏடுகளில் இருந்தது பழைய ஏற்பாட்டின் வாசகங்கள் தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறனர். இவைகளை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை நண்பர் இஹ்சாஸ் தான் கூற வேண்டும். குறிப்பிட்ட அந்தக் கட்டுரையிலேயே நண்பர் கூறியிருப்பதைப் போன்ற காலம் குறித்து அன்பரொருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலும் அளிக்கப்பட்டிருந்தது. நண்பர் அதை பார்க்கவில்லை போலும். நண்பருக்காக அந்த பதிலை இப்போது மீள்பதிவு செய்து விடலாம்.

\\\அந்தச் சுருள்களின் காலம் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன. ஏசுவுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் 300 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் மாறுபட்டாலும் அனைவரும் ஏசுவுக்கு முன்னர் என்றுதான் குறிப்பிடுகின்றனர். இணையத்தில் பல தளங்கள் கிமு 150 லிருந்து 70 வரை காலம் என்றும், அவற்றில் இருந்தவை பழைய ஏற்பாட்டின் படிகள் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றில் உண்மையில்லை. அவை எஸ்ஸீனர்களுடையவை என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை. எஸ்ஸீனர்கள் கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்தே அந்தப்பகுதிகளில் இருந்து வந்திருக்கிறார்கள். நாசரேத் எனும் பெயரும் நாசரேயனாகிய கிருஸ்து எனும் சொற்றொடரும் எஸ்ஸீனர்களுக்குறியவை. அதே நேரம் கிமு முதல் நூற்றாண்டுக்குப் பிறகு எஸ்ஸீனர்களைப் பற்றி குறிப்புகளில்லை. இந்தப் பின்னணியையும் சேர்த்து கணக்கிலெடுத்துக்கொண்டே வரலாற்றாய்வாளர்கள் கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் நூற்றாண்டு வரை என கணிக்கிறார்கள். இதையே நான் கிமு மூன்றாம் நூற்றாண்டு என்று எடுத்துக்கொண்டேன். இதில் பிழையிருப்பதாக நான் கருதவில்லை.///

அடுத்து மறைக்கப்பட்ட அந்த ஏடுகள் குரானை உண்மைப்படுத்துகிறது அதனால் தான் கிருஸ்தவர்கள் அதை மறைத்துவிட்டார்கள் என இஸ்லாமியர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி இஸ்லாமியர்கள் எவரும் பிரச்சாரம் செய்யவில்லை என்று நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறல்ல, நண்பர் இஹ்சாஸ் போல பல இஸ்லாமிய  ஊற்றளித்துக் கொண்டிருக்கும் பிஜே தளத்தில் குரானுக்கான விளக்கவுரையாக இலக்கம் 271ல் இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. \\\அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம். ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம். ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு. “ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்” என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. (பார்க்க: மத்தேயு 4:23, மாற்கு 1:14) எந்த இறை வேதத்தை மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது. “குர்ஆனை ஒத்திருக்கின்றது” என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும். இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது. மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது./// எனவே நண்பர் இஹ்சாஸ் தன் பி(டிவாத)ரச்சாரத்தை அந்த தளத்திலிருந்து தொடங்கட்டும்.

அடுத்து, புத்தருக்கும் ஏசுவுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை போகிறபோக்கில் குறிப்பிட்டு காட்டுவதைப் போல நண்பர் இஹ்சாஸ் கருதியிருக்கிறார். அவ்வாறல்ல. ஏசு என்பதற்கு வரலாற்றில் வாழ்ந்ததற்கான எந்த தடயமும் இல்லை என்பதை கட்டுரை தெளிவாகவே சுட்டிக் காட்டுகிறது. இவைகளை நண்பர் இஹ்சாஸ் கண்டு கொள்ளாமல் நகர்ந்து விட்ட மர்மம் என்ன? \\\அங்கு கிமு நான்கில் ஆட்சி புரிந்த ஜூலியஸ் சீசர், அவருக்குப்பின் அகஸ்டஸ் சீசர், கிமு மூன்றாம் நூற்றாண்டின் கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் என்று பலர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் புத்தர் (கிமு 563- 483) சந்திரகுப்த மௌரியர் (கிமு நான்காம் நூற்றாண்டு) அசோகன் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) போன்ற மன்னர்களுக்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. மன்னர்கள் மட்டுமல்ல. சாக்ரடீஸ் (கிமு 427- 347) அரிஸ்டாட்டில் (கிமு 384- 322) போன்ற தத்துவ அறிஞர்கள், ஈஸ்கிளீஸ் (கிமு 525 – 456) யூரிபிடஸ் (கிமு 480 – 406) ஆஸ்ரிடோபான்ஸ் (கிமு 445 – 385) போன்ற கிரேக எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புரட்சி வீரரான ஏசு குறித்த எந்தவித ஆதாரங்களும் கிடைக்காமல் போனதெப்படி? ஏசு எனும் ஒருவர் வரலாற்றில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களான ரோமர்கள் யூதர்கள் ஆகியோரின் நூல்களான பிலாவியஸ் ஜோசபஸ் எழுதிய தி ஆன்டிகுடீஸ் ஆப் தி ஜெவ்ஸ்(The Antiquities of the Jews), யூதர்களின் சிறப்பைக் கூறும் டால்முட்(Talmud), பிளீனிதியங்கர் ரோமப் பேரரசன் டார்ஜானுக்கு எழுதிய கடிதம், டாஸிடஸ் எழுதிய அன்னல்ஸ் (Annals) போன்ற அனைத்தும் ஐயத்திற்கிடமானவை என வரலாற்றாசிரியர்களால் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றன. மாக்ஸ்முல்லர் இவை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார் “புத்தரும் அவருடைய சீடர்களும் சொல்லிய மொழி நடைக்கும், கிருஸ்துவும் அவருடைய சீடரும் சொல்லிய மொழி நடைக்கும் பெரும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். புத்தமத நூல்களில் காணப்படுகின்ற சில உவமைகளும் கதைகளும் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்தது தானோ என்று ஐயம் தோன்றலாம், ஆனால் அவையெல்லாம் கிருஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை”  2000 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் நாசரேத் எனும் ஊர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பழைய ஏற்பாடில் எந்த இடத்திலும் நாசரேத் எனும் ஊரைப்பற்றிய குறிப்பும் இல்லை. எனவே நாசரேயனாகிய கிருஸ்து எனும் பதம் நாசரேயர்கள் என்றழைக்கப்பட்ட புத்தக்கொள்கைகளால் கவரப்பட்ட குழுக்களையே குறிக்கும்./// இவ்வளவு வரலாற்று ஆதாரங்களுக்குப் பிறகு தான் நிகழ்வுகளின் ஒற்றுமை காட்டப் பட்டிருக்கிறதேயன்றி வெறுமனே ஒற்றுமையை மட்டுமே வைத்துக் கொண்டு இருவரும் ஒருவரே என்று கூறப்பட்டதல்ல.

இந்த இடத்தில் இன்னும் இரண்டு அம்சங்கள்யும் தெளிவுபடுத்த வேண்டும். 1) வரலாற்றில் வாழ்ந்ததாக கருதப்படும் அனேகருக்கு வரலாற்றுத் தடங்களைக் கண்டுபிடிப்பது அரிது. அப்படியான எல்லோரையையும் உறுதிப்படுத்த முடியாதது என்பது போலவே ஏசுவும். ஆனால் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது ஏசு வரலாற்று மனிதரா? கற்பனைப் பாத்திரமா? என்பதல்ல. ஒரு இஸ்லாமிய பொய்ப் பிரச்சாரத்தை உடைக்கும் வழியில் ஏசுவின் பாத்திரம் குறுக்கிடுகிறது என்பதால் தான். ரோமப் பேரரசை எதிர்த்து அடிமைகளின் எழுச்சி வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்து வந்திருக்கிறது. இந்த எழுச்சி நாயகர்களின் வரலாறு தான் ஏசுவின் உயிர். அடிமைகளின் எழுச்சியை அடக்க அந்த நாயகர்களின் நினைவைக் கொண்டே செய்யப்பட்ட முயற்சிக்கு உடலாக வாய்த்தது தான் புத்தரின் கதைகளும் உரையாடல்களும். இந்தப் பின்புலத்திலிருந்து தான் ஏசுவைப் புரிந்து கொள்ள வேண்டுமேயல்லாது. புத்தரும் ஏசுவும் ஒருவரே என்பதுபோல் குறுக்கிக் கொள்வது தங்களைத் தாங்களே ஏமற்றிக் கொள்வது போலாகும். 2) ஏசு புத்தரின் நூல்களிலுள்ள கதைகளிலிருந்து பிறப்பெடுத்த பாத்திரம் என்பது போலவே, கிருஷ்ணனும் பௌத்த நூல்களிலிருந்து உருவப்பட்ட பாத்திரம் தான். கிருஸ்துவும் கிருஷ்ணனும் ஒன்றுதான். புத்தரின் நகல்கள், கிருஷ்ணன் இந்தியாவின் ஏசு; ஏசு அரேபிய பகுதியின் கிருஷ்ணன்.

அடுத்து புத்தரையும் ஏசுவையும் ஒப்பிட்டுக் கூறியவற்றில் நண்பர் இஹ்சாஸ் தன்னுடைய கருத்துகளை மறுப்பாக வைக்கிறார். அவரும் சில ஒப்பீடுகளைச் செய்துள்ளார். அதிலும் புத்தரின் வரலாற்றுச் செய்திகளையும், ஏசுவின் மதக் கருத்துகளையும் எடுத்துக் கொண்டு ஒப்பீடு செய்திருக்கிறார். தந்தையின்றி யாரும் பிறந்திருக்க முடியாது அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஏசுவுக்கு தந்தை இருந்ததாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இருவருக்குமான வரலாற்று செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது இருவருக்குமான மதச் செய்திகளை எடுத்துக் கொள்ளலாம். மாறாக ஒருவருக்கு வரலாற்றுச் செய்தியையும் மற்றொருவருக்கு மதச் செய்தியையும் எடுத்துக் கொண்டால் வேறுபாடு வருவது தவிர்க்கவியலாதது. இவைகளை விரிவாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் எது வரலாறு எது புனைவு என்பதில் நமக்கு எந்த மயக்கமும் இல்லை. அதனால் தான் புத்தர் உண்மையில் வாழ்ந்தவர் ஏசு பொய் கதை என்பது போல் எழுதவில்லை. மீண்டும் ஒருமுறை இவற்றைக் குறிப்பிடும் போது எவ்வாறு எழுதப்பட்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டி விடலாம். \\\புத்தரின் வாழ்வை விவரிக்கும் நூலகளான திரிபீடகங்கள், லலிதவிஸ்தாரம், தம்மபதம் போன்ற நூல்களில் கூறப்படும் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் .. .. .. புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள் .. .. ./// அதாவது பௌத்த நூல்களில் கூறப்படும் புத்தரின் நிகழ்வுகளுக்கும் பைபிளில் கூறப்படும் ஏசுவின் நிகழ்வுகளுக்குமான ஒற்றுமை தான் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. என்ன எழுதப்பட்டுள்ளது எப்படி எழுதப்பட்டுள்ளது என்பதை உள்வாங்காமலேயே மேலெழுந்தவாரியாக \\\யாருடைய வாழக்கையாக இருப்பினும் ஏதாவது ஒரு சில விடயங்களில் ஒரு ஒற்றுமை இருக்கத்தான் செய்யும் அதை வைத்துக்கொண்டு இவ்விருவரும் ஒருவர்தான் என்பது மடத்தனம்/// என்று தங்கள் மடத்தனங்களை தாங்களே வெளிக்காட்டிக் கொள்வது மதவாதிகளுக்கு கைவந்த கலை.

மற்றும் இவை குறித்த மேலதிக விபரங்களுக்கு ஜோசஃப் இடமருகு எழுதிய கிருஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே எனும் நூலைக் காண்க.

சரி முதன்மையானவற்றுக்குத் திரும்புவோம். கண்டெடுக்கப்பட்ட அந்த ஏடுகள் குரானை உண்மைப்படுத்துகிறதா? என்பது தானே பிரச்சனை. குரான் இது குறித்து என்ன கூறுகிறது? குரான் குறிப்பிடும் அந்தக் கதையில் ஏடுடையவர்கள் என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அந்த வசனங்களில் இது குரானை மெய்ப்படுத்துவதற்கான அத்தாட்சி என்று பொருள் படும் எந்த வசனமும் அதில் இல்லை. மாறாக அந்தக் கதை விவரிப்பதெல்லாம் அவர்கள் அங்கு தங்கி மறைந்து வாழ்ந்தார்களா இல்லையா என்பதைத்தான் மையமாக எடுத்துக் கொண்டு கதை சொல்லியிருக்கிறதேயன்றி வேறொன்றுமில்லை.தெளிவாகச் சொன்னால் தங்கள் மன்னனை எதிர்த்து தங்கள் மதக்கொள்கையை சமரசமின்றி எடுத்துவைத்து அதனால் தொடர்ந்து வாழ முடியாமல் போகவே நாடுகடந்து பாலைவன மலைக்குகையில் வந்து தங்கியிருக்கிறார்கள். இது தான் அந்தக் கதையில் முக்கியத்துவம் வாய்ந்ததாய் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர ஏடு குறித்த கதையல்ல. ஏடுடையோர்கள் என்று ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேட்கிறார்கள். அது மட்டுமா குறிப்பிடப்பட்டிருக்கிறது ஏட்டைவிட அதிகமாய் அவர்களின் நாய் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்றால் அந்த நாய்க்கு ஏதேனும் கதை வைத்திருக்கிறார்களா??

ஒருவேளை சாக்கடல் சாசனங்கள் என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் இது போல் எந்தவிதமான புளகமடைதல்களும் வந்திருக்காது. கண்டுபிடித்து அவர்கள் அது பழைய ஏற்பாடு என்கிறார்கள். இவர்களோ குரான் என்கிறார்கள். இரண்டு குப்பைகளையிம் ஒதுக்கிவிட்டு வர்லாற்றின் ஒளியிலிருந்து பார்த்தால் தான் உண்மை புரியும். இதைத்தவிர வேறு வழியில்லை.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

முகம்மதின் இரவுப் பயணம் .. .. ..?



உம்மு ஹானி :   முஹம்மது நபியுடைய பெரிய தகப்பனார் அபூ தாலிபின் மகள். இவரது உண்மையான பெயர் ஃபகிதா. உம்மு-ஹானியை விரும்பிய முஹம்மது நபி திருமணம் செய்து தருமாறு அபூ தாலிபிடம், கேட்கிறார். ஆனால் ஏதோ சில காரணங்களால்   அபூ தாலிப் மறுத்து, உம்மு ஹனியை, ஹூபைரா என்பவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். தன் கணவருடன் அபிசீனியாவில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் இறந்ததால், மக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார்.
                தாயிப் நகரத்திற்கு தன்னுடைய புதிய மார்க்கத்தைப் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்யச் சென்ற முஹம்மது நபி, தாயிப் நகரவாசிகளின் ஏளனச் சொற்களால் தாக்குதலுக்குள்ளானார். முயற்சி தோல்வியடைந்த மனவேதனையுடன் கஅபாவில் படுத்திருந்தவர், இரவில் எல்லோரும் உறங்கியவுடன் யாரும் அறியாமல் எழுந்து உம் ஹனியின் வீட்டிற்குச் சென்றார். இது முஹம்மது நபியுடைய மனைவி கதீஜா மற்றும் பெரிய தகப்பனார் அபூ தாலிப் ஆகியோரது மரணத்திற்குப் பின் நிகழ்ந்த சம்பவம்.
                கஅபாவில் படுத்திருந்த முஹம்மது நபியயை காணவில்லை என மக்கள் தேடிய பொழுது அவர் உம் ஹனியின் வீட்டிலிருந்து வெளியே வந்தவர், மக்காவின் கஅபாவில் இருந்து ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) என்ற புனிதமான பள்ளிவாசல் வரை வான்வெளி பயணம் மேற்கொண்டு, அங்கு மற்ற நபிமார்களுடன் தொழுகையில் ஈடுபட்டு, அதன் பிறகு அங்கிருந்து அல்லாஹ்வை சந்திக்க, ஏழாம் வானம் வரை சென்ற தனது விண்வெளி  பயணத்தைப் பற்றி மக்களிடம் கூறுகிறார். முஹம்மது நபியின் விண்வெளிப்பயணத்தை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது,
தன்னுடைய அடியாரை ஓரிரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த ஒருவன் மகாப் பரிசுத்தமானவன்…
(குர் ஆன் 17:1)
 புகாரி ஹதீஸ் 3207
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் சாறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்…
(நெஞ்சைப்பிளந்து OPEN HEART SURGERY செய்து பாவம் நீக்கப்பட்ட கதையை இவர் சிறுவயதிலிருந்து கூறிக் கொண்டிருக்கிறார். பாவத்தை அறுவை சிகிச்சையால் நீக்க  முடியுமா? அறுவை சிகிச்சையால் பாவங்கள் நீக்கப்பட்டது முஹம்மது நபிக்கு மட்டுமே. சந்தேகமே இல்லை இவர் மிகப்புதுமையான இறைத்தூதர்தான்!)
இச்சம்பவத்தைப்பற்றி உம்முஹனி கூறுகையில்
From Ishaq: 184
“Umm (Hani), Abu Talib’s daughter, said: “The Apostle went on no journey except while he was in my house. He slept in my home that night after he prayed the final night prayer. A little before dawn he woke us, saying, ‘O Umm, I went to Jerusalem.’ He got up to go out and I grabbed hold of his robe and laid bare his belly. I pleaded, ‘O Muhammad, don’t tell the people about this for they will know you are lying and will mock you.’ He said, ‘By Allah, I will tell them.’ I told my negress slave, ‘Follow him and listen.’”

(அபூதாலிப்பின் மகள் உம்மு (ஹானி) கூறுவதாவது,
(அல்லாஹ்வின்) தூதர் என்வீட்டிலிருந்ததைத்தவிர எந்தப் பயணத்திற்கும் செல்லவில்லை. இரவு வணக்கத்திற்குப் பின் என் வீட்டில் உறங்கிவிட்டார். அதிகாலைக்கு சற்று முன்பாக எங்களை எழுப்பி, ” ஓ, உம்மு நான் ஜெருசலேமிற்கு சென்றிருந்தேன்” என்று கூறி, வெளியே செல்ல முயன்றவரை அவரது உடையைப் பிடித்து இழுத்து நிறுத்தினேன். “ஓ முஹம்மதே இதைப்பற்றி மக்களிடம் கூறாதீர், அவர்கள் நீங்கள் பொய் சொல்வதாகக் கூறி ஏளனம் செய்வார்கள் என்றேன். “அல்லாஹ்விற்காக, அவர்களிடம் நான் கூறுவேன்” என்றார். நான், என் நீக்ரோ அடிமையிடம், அவரை பின்தொடர்ந்து சென்று கவனிக்க கூறினேன்)
                தன்னுடைய பயண நினைவுகளில் மூழ்கியவாறு பள்ளியில் அமர்ந்திருந்த முஹம்மது நபியை காணும் அபூஜஹ்ல், “ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்றார். நபி பதிலளிக்கையில், “ஆம். நேற்று இரவு ஜெருசலேம் அழைத்துச் செல்லப்பட்டேன்.” என்றார். தான் கேட்டது சரிதானா என்பதற்காக மறுபடியும், “ஜெருசலேமிற்கா?” என்றார் அபூஜஹ்ல்.
                முஹம்மதை ஒரு பொய்யர் என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்ததாக நினைத்த அபூஜஹ்ல் முஹம்மது நபியிடம், “நான் மற்றவர்களையும் அழைத்து வருகிறேன் அவர்களிடமும் இதைக் கூற முடியுமா? என்றார். அதற்கு சிறிதும் தயக்கமின்றி “ஆம்” என்றார். தன் பயண நிகழ்வுகளை அவர்களிடம் கூறினார். முஹம்மது நபியின் கூற்றைக் கேட்ட மக்கள் சிரித்து வெவ்வேறு முறைகளில் ஏளனம் செய்கின்றனர். அம்மக்கள் தங்களது சந்தேகங்களை  தீர்க்கும் வகையில், அங்கு எத்தனை கதவுகள் இருந்தது?, எத்தனை ஜன்னல்கள் இருந்தது? அங்கு நிலவிய தட்பவெப்ப நிலை என்ன? என்பது போன்ற பலவிதமான கேள்விகளை மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றி கேட்கின்றனர்.
இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்
காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)
Sahih Al-Bukhari HadithHadith 6.233
Narrated by Jabir bin Abdullah
The Prophet said, “When the Quraish disbelieved me (concerning my night journey), I stood up in Al-Hijr (the unroofed portion of the Ka’ba) and Allah displayed Bait-ul-Maqdis before me, and I started to inform them (Quraish) about its signs while looking at it.”
(நபி கூறுகிறார், குரைஷிகள் என்னை நம்பவில்லை, நான் அல் ஹிஜ்ர் (கஅபாவின் கூரையிடப்படாத பகுதி) முன் நின்று கொண்டிருந்தேன். அல்லாஹ் பைத்துல் முகத்தஸ் என் முன்னே காண்பித்தான். நான் பார்த்த அடையாளங்களை அவர்களுக்கு கூறினேன்)

முஸ்லீம் ஹதீஸ் எண்: 251அத்தியாயம்: 1, பாடம்: 1.75,
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
“(கஅபாவின்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் வைத்து (எனது இரவுப் பயணத்தைப் பற்றிக்) குறைஷிகள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு நினைவில் இல்லாத, பைத்தில் மக்திஸ் பள்ளி சார்ந்த (அடையாளங்கள்) சிலவற்றை என்னிடம் அவர்கள் கேட்டபோது முன்னெப்போதும் நான் வருந்தியிராத அளவுக்கு எனக்கு வருத்தம் மேலிட்டது. அப்போது பைத்துல் மக்திஸை அல்லாஹ் எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் விபரம் தெரிவித்தேன்”.
“(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருக்கக் கண்டேன். அங்கு மூஸா (அலை) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்து ஆண்களைப் போன்று வாளிப்பான தோற்றத்துடன் இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா(அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களுள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களைத் தோற்றத்தில் மிக நெருக்கமாக ஒத்திருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை, சாயலில் மிகவும் ஒத்திருப்பவர் உங்கள் தோழர்(ஆகிய நான்)தான்”.
“அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைத்தூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், முஹம்மதே! இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக் கொண்டு எனக்கு ஸலாம் சொல்லி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Ishaq:183
“Upon hearing this many became renegades who had prayed and joined Islam. Many Muslims gave up their faith. Some went to Abu Bakr and said, ‘What do you think of your friend now? He alleges that he went to Jerusalem last night and prayed there and came back to Mecca.’
(இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள், இதை கேட்டவுடன் நம்பிக்கையிழந்தனர். சிலர் அபூபக்கரிடம் சென்று, “கடந்த இரவில் ஜெருசலேம் சென்று அங்கு தொழுகை நடத்தி மெக்காவிற்கு திரும்பியதாக உறுதியாக கூறும், உங்களது நண்பரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டனர்)
அவர் (முஹம்மது நபி) இதைக் கூறியிருந்தால் நம்புகிறேன், ஆம் அவர் கூறியது அனைத்தையும் நம்புகிறேன் உண்மையே என்றார். அபூபக்கர், இதன் பிறகே  சித்தீக் (உண்மையே கூறுபவர்) என்ற அடைமொழியுடன் அபூபக்கர் சித்தீக் என்று அழைக்கப்படலானார்.  ஆயினும் இந்த நிகழ்வை ஏற்க மறுத்து  சிலர் இஸ்லாமை விட்டு விலகினர். இச்சம்பவத்தின் பொழுது 70 – 80 பேர்களே இஸ்லாமை ஏற்றிருந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.
“மஸ்ஜித்” என்பது முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகை நடத்தும் வழிபாட்டு இடத்தைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்பது சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள கஅபாவைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்பது ஃபலஸ்தீனின் ஜெருசேலத்தில் உள்ள பைத்துல் மக்தஸைக் குறிக்கும்.
                இந்த விண்வெளிப் பயணம் தொடர்பான செய்திகள் அனைத்தும் வரலாற்று ஆதாரங்களுக்கு எதிரானவைகள். தாவூது நபி மற்றும் சுலைமான் நபியால் கிமு 958-951 கட்டப்பட்ட ஆலயம், கிமு 1004 -ல் கட்டி முடிக்கப்பட்டது. கிமு 586-ல் நெபுகத்நெஸ்ஸார் என்ற பாபிலோனிய மன்னரின் படையெடுப்பில் அந்த ஆலயம் முற்றிலும் தகர்கப்பட்டது. இரண்டாவது கட்டப்பட்ட ஜெருசலேம் ஆலயம், கிபி 70 ஆண்டு டைட்டஸ் என்ற ரோமானிய மன்னரின் படையெடுப்பில் அதாவது நபி பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் அந்த யூதக் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி அந்த யூதக் கோவிலை இருந்த இடம் தெரியாதவாறு செய்து விட்டனர். இப்பொழுது நீங்கள் பார்க்கும் எண்கோண (Octagon)  வடிவ பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா (Dome of Rock) கலீபா அப்து அல்-மாலிக் இப்ன் மர்வான் என்பவரால் கிபி 691-ல் கட்டப்பட்டது அதாவது நபியின் மரணத்திற்கு பின் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு  கட்டப்பட்டது. கிபி 1016 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முற்றிலும் அழிந்த கட்டிடத்தை Zaher Li-l’zaz என்பவரால் கிபி 1022 ல் மீண்டும் கட்டப்பட்டது. அதற்கு கிப்லா இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கிபி 691வரை மஸ்ஜிதுல் அக்ஸா இல்லை. குர்ஆன் 17:1 வசனம் குறிப்பிடும் மஸ்ஜிதுல் அக்ஸா நபி உயிருடன் இருந்த பொழுது இல்லவே இல்லை.
இந்த வாததிற்கு ஆதாரம் இஸ்லாமிய வரலாற்றிலேயே இருக்கிறது. நபியின் மரணத்திற்குப் பிறகு, கலீபா உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது அங்கு சென்ற கலீபா உமர் தொழுகைக்கு நடத்த இடம் தேடுகிறார். அங்கு எந்த ஒரு பள்ளிவாசலும் இல்லாததால், கிருஸ்துவ பாதிரியார்  ஒருவர் தங்களது ஆலயத்தில் தொகை நடத்திக் கொள்ள கோரிக்கை வைக்கிறார். கிருஸ்துவ ஆலயத்தில் தொழுகை நடத்த விரும்பாத கலீபா உமர் கத்தாப் அவர்கள்,  குப்பைகூளத்துடன் காணப்பட்ட ஒரு திறந்த வெளியை சுத்தம் செய்து தொழுகை நடத்தியதாக வரலாறு தெளிவாக குறிப்பிடுகிறது.  அந்த திறந்த வெளி எதுவென்றால் சுலைமான் நபி கட்டியதாக கூறப்படும் Solomon Templeஎன்ற யூதக் கோவில் இருந்த இடம்.  நிர்வாக காரணங்களுக்காக,  உமர் அவர்கள் சில நாட்கள் அங்கு தங்கியிருந்தார். மக்களின் தேவைகளை விசாரித்து அறிகிறார். அவர் அங்கு புதிதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணனிக்கிறார். அது “மஸ்ஜிதுல் உமர்” என்றழைக்கப்பட்டது.
இப்பொழுது என் மனதில் எழும் நியாயமான கேள்வி என்னவென்றால் நபி எங்கிருந்து மிஹ்ராஜ் பயணம் சென்றார்?
கிபி  622-623 ல் குர்ஆன் 17:1 கூறும் மஸ்ஜதுல்அக்ஸா எங்கே?
                மெக்கா நகரவாசிகள் முஹம்மது நபியின் இரவுப் பயணத்தைப் பற்றி குறுக்கு விசாரணை செய்கையில், அல்லாஹ், நபியின் கண்களில் பைத்துல் மக்தஸை தோன்றச் செய்ததாகவும், அதன் அடையாளங்களைப்பற்றி குறிப்பிட்டவுடன், அவர்கள் மறுத்துப் பேச முடியாமல் போனதாகவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. இல்லாத ஒன்றை எப்படி காண்பிக்க முடியும்? முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர்கள் அறியாத ஒரு மஸ்ஜிதைக் குறித்து விசாரணை  செய்து எவ்வாறு உறுதிப்படுத்தியிருக்க முடியும்?
                இது இன்னொரு விவாதத்தையும் முன்வைக்கிறது. முஹம்மது அவர்கள் நபித்துவம் பெற்றதிலிருந்து ஹிஜ்ரத்திற்கு பிறகும் ஒன்றரை ஆண்டுகள் வரை பைத்துல் முகத்தஸ்ஸை கிப்லாவாக கொண்டு தொழுதார்கள். அதன் பிறகே நபியின் விருப்பப்படி மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா) கிப்லாவாக மற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.
நபியே உம்முடைய முகம் (கிப்லா மாற்றக கட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் பக்கம் திரும்புவதை திட்டமாக நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்புகின்ற கிப்லாவுக்கு உம்மை திண்ணமாக நாம் திருப்பி விடுகிறோம். எனவே உம்முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின்பால் திருப்புவீராக
(குர் ஆன் )
இல்லாத பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கிய ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் தொழுகை நடந்துள்ளதாகவும் பொருள் தருகிறது. பைத்துல் முகத்தஸ் எங்கே?
இந்த மஸ்ஜிதுல் அக்ஸா தெடர்பான இன்னொரு ஹதீஸையும் பார்ப்போம்
புகாரி ஹதீஸ் :3366,
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் (நபி – ஸல் – அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளி வாசல் எது என்று கேட்டேன். அவர்கள், அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறை இல்லம் என்று பதிலளித்தார்கள். நான், பிறகு எது என்று கேட்டேன். அவர்கள், (ஜெருஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா என்று பதிலளித்தார்கள். நான், இவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது என்று கேட்டேன். அவர்கள், நாற்பது ஆண்டுகள் (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு, தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுது விடு. ஏனெனில் நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது என்று சொன்னார்கள்.
முஸ்லீம் ஹதீஸ் எண்: 808  அத்தியாயம்: 5, பாடம்: 5.01, 
அறிவிப்பாளர் : அபூதர் அல்கிஃபாரீ (ரலி)
“அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையாலயம் எது?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” என்று கூறிவிட்டு, “உங்களைத் தொழுகை (நேரம்) வந்தடையும் இடத்தில் நீங்கள் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) அதுதான் (உங்களுக்கு) மஸ்ஜித்” என்று கூறினார்கள்.
இதில் இன்னொரு தவறும் உள்ளது. கஅபா, இப்ராஹிம் நபியால் கிமு 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. (இன்னும் சில ஆதாரங்கள் கஅபா, ஆதம் நபியால் கட்டப்பட்டது என்கிறது.) தாவூது நபி காலத்தல் துவங்கி சுலைமான் நபி, Temple of Solomon (மஸ்ஜிதுல் அக்ஸா / பைத்துல் முக்அதிஸ்)  கிமு 958-1004 ல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறுகள் தெளிவாக கூறுகிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 1040 ஆண்டுகள். முஹம்மது நபி கூறியதில் ஆயிரம் ஆண்டுகள் பிழையுள்ளது.
நாம் விண்வெளி பயணத்தை தொடர்வோம். முஹம்மது நபி  அவர்களின் விண்ணுலகப் பயணத்தில் பல காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.
புகாரி ஹதீஸ் :  7517   
…”ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்” என்று பதிலளித்தார்கள்.…
Readislam.net என்ற இஸ்லாமிய இணையதளத்தின் ‘மிஃராஜ்” பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து…
…ஸித்ரத்துல் முன்தஹாவின் வேரிலிருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்…
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6695 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. கிபி 1862 ல் நைல் நதியை ஆய்வுசெய்த JOHN HENNING SPEKE என்னும் ஆய்வாளர் விக்டோரியா ஏரியில் உற்பத்தியாவதை கண்டறிந்தார்.  அவரை வரலாறு ஏனோ மறந்தது. பின்னர் கிபி 1937 BRUCKHAR WALDEKKER  ஜெர்மன் ஆய்வாளர் வெள்ளை நைல் உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியிலிருந்தும், நீல நைல் எத்தியோப்பியாவின் தானா  ஏரியிலிருந்தும் உற்பத்தியாகிறது என்பதை உறுதி செய்தார். இந்த இரண்டு நதிகளும் இணந்து நைல் நதியாக ஓடி மத்திய தரைக் கடலில் கலக்கிறது. சுமார் 2781 கிலோ மீட்டர் நீளம் உள்ள யூப்பரடீஸ் நதி துருக்கியில் துவங்கி சிரியா, ஈராக் வழியே பாய்கிறது.
யூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும்? கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின்  நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?.
அன்றைய ஆன்மீக அறிவாளிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்க எதிரான கருத்து என்று பூமி உருண்டை என நிரூபித்தவனை கல்லால் அடித்து கொன்றதும், பிறகு தங்களுடைய வேதத்தில் திருத்தம் செய்து கொண்டதும் நீங்கள் மிகத்தெளிவாக அறிந்த செய்தி.
போலந்துக்காரர் கோபர் நிகஸ் (1473-1543) பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளியிட்ட பொழுது எத்தனை பேர் அவரை நம்பினார்கள்?  இதே போன்ற மாற்றுக் கருத்தை ஆவேசமாக வெளியிட்ட  கியார்டனோ புரூனோ (1548-1600) என்ற இத்தாலியர், ரோம் நகரில் மதவாதிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். டைகோ பிராகே (1546-1601) என்பவர் தனது 20 வருட கிரகங்களின் சஞ்சாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜோஹேன்ஸ் கெப்ளர் (1571-1630) என்பவரிவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தார். கலிலியோ (1564-1642), கோபர் நிகஸின், கெப்ளர் போன்றவர்களின் கருத்து உண்மையாதே என்று ஆதரத்துடன் நிரூபித்தற்காக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தான் தவறான ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை கூறிவிட்டதாகவும், பூமி தட்டையானதே என்று அழுது கொண்டே தனது கண்டுபிடிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டார். ஆனால் மனிதனின் அறிவுத் தாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் மதவாதிகளின் இத்தகைய தடைகளை மீறிக் கொண்டு வளர்கின்றன.
சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகே பூமி தட்டையானது, சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்பதைப் போன்ற பல கருத்துகள் தவறானவை என்பதை ஆன்மீகவாதிகள் மெதுவாக உணர்ந்தனர், தங்களது தவறான கோட்பாட்களுக்கும், விளக்கங்களுக்கும் புதிய முலாம் பூசி மறைத்தனர். அடுத்தது குர்ஆன் தனக்குத் தானே முரண்படுவதைப் பாருங்கள்.

முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2


satan_tempting
முகம்மது தன்னுடைய தேவைகளுக்காக அவ்வப்போது மாற்றியும் திருத்தியும் தான் குரானை வடிவமைத்திருக்கிறார் என்பதற்கான ஒரு சோற்றுப் பதமாக சாத்தானிய வசனங்கள் இருக்கின்றன. ஆனால் மதவாதிகள் சாத்தானிய வசங்கள் என்று கருதப்படுவதற்கு ஏற்கனவே மறுப்பளித்திருக்கிறார்கள். அதாவது, அவை திருத்தப்படவில்லை. இப்போதிருந்ததைப் போலவே தான் முதலிலும் வசனங்கள் இருந்தன என்று விளக்கமளிக்கிறார்கள்.

முதலில் குரான் குறித்த அடிப்படைத் தகவல் ஒன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அல்லாவிடம் தாய் ஏடு என்று ஒன்று இருக்கிறது. அதிலுள்ள விபரங்களைத்தான் தேவைக்கேற்ப வேதங்களாக அவன் வெளிப்படுத்துகிறான். ஸபுர், தோரா, இஞ்ஜீல் போன்ற குரானுக்கு முந்திய வேதங்கள் அந்த தாய் எட்டிலிருந்து தான் எடுத்து அந்தந்த தூதர்களுக்கு வழங்கப்பட்டது. அவை பின்னர் மனிதர்களால் திருத்தத்திற்கு உள்ளாகி களங்கப்பட்டதாலேயே, மீண்டும் குரான் எனும் புதிய வேதத்தை முகம்மதின் மூலம் அனுப்புகிறான். அதாவது, முன்னர் நடந்ததைப்போல் மனிதர்களால் குரானும் களங்கப்படாதிருக்க அல்லாவே அதனை காக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு முகம்மதுவுக்கு கொடுக்கிறான். இது தான் குரான் குறித்த அடிப்படையான முஸ்லீம்களின் நம்பிக்கை. இதன்படி குரான் வசனங்களுக்கு மாற்றமோ, திருத்தமோ தேவைப்படாது என்பது உறுதி. ஆனால், குரான் வசனங்கள் இன்னோரு குரான் வசனத்தால் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு குரானிலேயே சான்றுகள் இருக்கின்றன. காட்டாக, வசனம் 6:92 குரான் மக்காவிலுள்ளவர்களுக்காகவே இறக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. இதற்கு மாற்றமாக வசனம் 68:52 குரான் அகிலத்திலுள்ள அனைவருக்கும் என்கிறது. இது முரண்பாடல்லவா? இல்லை என்பார்கள். எப்படியென்றால் முதலில் மக்காவுக்கு மட்டும் எனும் வசனம் வந்தது பின்னர் அகிலத்தாரனைவருக்கும் எனும் வசனம் முதல் வசனந்த்தை தகுதி நீக்கம் செய்து விட்டது என்பார்கள். தாய் ஏட்டிலிருந்து பிய்த்தெடுத்தே வேதங்கள் கொடுக்கப்பட்டன என்றால் முதலில் ஒன்றைக் கூறி பின் வேறொரு வசனத்தினால் அதை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட வசனம் என்றால் குறைந்தபட்சம் அதை குரானிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே குரானில் இருக்கிறது. இதில் புரித்து கொள்ள வேண்டியது என்னவென்றால் முகம்மது தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ப வசனங்களை மாற்றியிருக்கிறார் என்பது தான். இந்த அடிப்படையில் தான் சாத்தானிய வசனங்களையும் பார்க்க வேண்டும்.

சாத்தானிய வசனங்களை பொருத்தவரை அதை இஸ்லாமிய மதவாதிகள் ஏற்பதில்லை. அதற்கு அவர்கள் இப்னு இஸாக், தபரி போன்றவை ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் தொகுப்புகள். அவைகள் ஏற்றுக் கொள்ளக் கூடாதவைகள் என்று பதில் கூறுகிறார்கள். பொதுவாக ஹதீஸ்களை ஆதாரபூர்வமனவை, ஆதாரபூர்வமற்றவை என்று பிரித்திருப்பது மதவாத நோக்கங்களுக்காகத் தானேயன்றி வேறில்லை. ஹதீஸ்களின் இந்த தன்மை குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறோம் என்றாலும் தேவை கருதி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

ஹதீஸ்கள் என்பவை கிட்டத்தட்ட முகம்மதின் வாழ்க்கை வரலாற்றை கூறுபவை. அவைகளில் பொய்யான செய்திகள் கலந்து விட்டன என்றுகூறி அவ்வாறான ஹதீஸ்களில் 99 சதவீதத்தை நீக்கி விட்டார்கள். அதாவது மதப் புனிதத்தை கேள்விக்குள்ளாக்கும் அனைத்தையும் பொய்யான ஹதீஸ், இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறி நீக்கம் செய்து விட்டார்கள். இன்றும் கூட மதப்புனிதத்திற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் சான்றுகள் அதாரபூர்வமற்றவை என்று தள்ளப்படுகின்றன. இப்படி தள்ளுவதற்கு இரண்டு அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள். 1. அறிவிப்பாளர்களின் வரிசை, நம்பகத் தன்மை 2. குரானுடன் முரண்படுவது. ஹதீஸ்கள் தொகுக்கப்பட வேண்டும் எனும் எண்ணம் உதித்ததே முகம்மது இறந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தான், அதிலும் ஆதாரபூர்வ தொகுப்புகள் என்று கருதப்படும் ஆறு தொகுப்புகளும் தொகுக்கப்பட்டது முகம்மது இறந்து தோராயமாக 250 ஆண்டுகளுக்குப் பிறகு. இதில் அறிவிப்பாளர்களின் நம்பகத்தனமை எப்படி அறிந்தார்கள்? அதிலும் முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகால அறிவிப்பாளர்களை.. ..? முகம்மது உயிருடன் இருக்கும் போதே ஹதீஸ்களில் கலப்படம் வந்து விட்டது. அதனால் தான் முகம்மது அவ்வாறு கலப்படம் செய்யாதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்.  ஆக முகம்மது உயிருடன் இருக்கும் போதே கலப்படமாகத் தொடங்கிய ஹதீஸ்களை, அவர் இறந்து 250 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுக்கப்பட்ட நூல்களை வைத்துக் கொண்டு இன்று மதப் புனிதத்துக்கு பங்கம் வரும் போது இது ஆதாரமில்லாத ஹதீஸ், இதுதான் ஆதாரபூர்வமானது என்று கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக ஒன்றை பார்க்கலாம். பால்குடி குறித்த வசனம் முன்னர் குரானில் இருந்து ஓதப்பட்டு வந்தது, பின்னர் நீக்கப்பட்டு விட்டது என முகம்மதின் விருப்பத்திற்குறிய மனைவியான ஆய்ஷா அறிவிக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்று புஹாரியில் இடம் பெற்றிருக்கிறது. குரானின் தகவலோடு இது முரண்படுவதால் இது ஆதாரமற்ற ஹதீஸ் என்று இப்போது கூறுகிறார்கள். இதில் ஒரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை நம்பகமானதாகவும் சரியான அறிவிப்பாளர்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதேநேரம் ஹதீஸ்கூறும் தகவல் பொய்யானதாக இருக்கிறது. அப்படியானால் பொய்யான ஒரு ஹதீஸ்கூட சரியான, நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்க முடியும் அல்லவா? இதிலிருந்து தெரிவது என்ன? சரியான, நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்கும் ஹதீஸும் கூட சரியான ஹதீஸ் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. வரலாற்றியல் போக்கில் பார்த்தால் ஹதீஸ்கள் எனப்படுபவை அனைத்தும் குப்பைகளே. அதேநேரம் அந்த நேரத்தின் நடப்புகளை அறிந்து கொள்ள ஹதீஸ்களை விட்டால் வேறு வழியில்லை. இந்த அடிப்படையில் தான் ஹதீஸ்கள் முக்கியத்துவம் பெறுகின்றனவேயன்றி வேறெதற்காகவும் அல்ல.

சாத்தானின் வசனங்களுக்குத் திரும்புவோம். இவைகளுக்கு மதவாதிகள் கூறும் முதல் மறுப்பு இபுன் இஸாக், தபரி போன்றவை நம்பகத் தன்மை இல்லாதவை என்பது தான். முகம்மதின் காலத்துக்கு நெருக்கமான இது போன்ற நூல்கள் நம்பகத் தன்மை இல்லாதவை என்பதற்கு மதவாதிகள் வைத்திருக்கும் சான்று என்று ஒன்றுமில்லை. மதவாதத்திற்கு ஆதரவாக மதவாதிகளின் தொகுப்பு மட்டுமே உண்மையானவை என்பதும், அதற்காக அவர்கள் பயன்படுத்திய விதிமுறைகள் மட்டுமே சரியானவை என்பதும் மதத்துக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம் வரலாற்றுக்கு அவை எடுபடாது. உண்மைக்கு எது அதிக சாத்தியக்கூறை வழங்குகிறது என்பதே கவனிக்கப்பட வேண்டியது. அந்த வகையில் சில கேள்விகளை எழுப்பி பதில் தேடினால் உண்மை விளங்கும்.

அந்த வசனத்திற்கு ஏன் முஸ்லீமல்லாதவர்களும் வணக்கம் செலுத்தினார்கள்? இதற்கு மதவாதிகள் கூறும் காரணம், அன்றைய காலத்தில் முஸ்லீமல்லாதவர்கள் தனித்தனியே கடவுளர்களை (லாத், உஸ்ஸா, மனாத் போல) வைத்திருந்தாலும் ஓரிறை என்பது அல்லா தான் என்பதை உணர்ந்திருந்தார்கள். ஆகவே அந்த வசனங்களின் இறுதியில் வரும் அல்லாவை துதிப்பதற்குத்தான் வணங்கினார்களே தவிர லாத், உஸ்ஸா, மனாத் போன்ற தெய்வங்களின் பெயர் உச்சரிக்கப்பட்டதற்காக வணங்கவில்லை என்கிறார்கள். இதைப் போன்ற அபத்தமான பதில் வேறொன்று இருக்க முடியாது. அல்லா என்பதை கடவுள் எனும் அடிப்படையில் தான் கொண்டிருந்தார்களேயன்றி அல்லா என்பது முஸ்லீம்களின் கடவுள் என்பதாக அந்த மக்கள் ஏற்கவில்லை. மட்டுமல்லாது, அல்லா என்பதற்காக அந்த வசனத்திற்கு வணங்கினார்கள் என்றால் மொத்த குரானுமே அந்த அல்லா தந்தது தானே. ஒவ்வொரு வசனமும் எனக்கு வழிபடுங்கள் என்று அல்லா கூறுவதாகத்தானே இருக்கிறது. என்றால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் முஸ்லீம்களாக அல்லவா மாறியிருக்க வேண்டும். அல்லா கூறியிருக்கிறார் என்றாலும் மொத்த குரானையும் நிராகரிக்கும் மக்கள். குறிப்பிட்ட ஒரு வசனத்தில் அல்லா கூறியதற்காக விழுந்து வணங்குவார்களா?

வசனம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதற்கு இசைவாக குரானின் வேறு சில வசனங்கள் இருக்கின்றன

.. .. எனினும் சைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கிய பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான்.. .. குரான் 22:52

வஹீ மூலம் உனக்கு அறிவிக்கப்பட்டதில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ .. .. .. உம் இதயம் இடுங்கியிருக்கவோ கூடும்.. .. .. குரான் 11:12

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம்.. .. .. குரான் 2:106

எனவே, அந்த இடத்தில் வசனம் மாற்றப்பட்டிருக்கிறது என்பது உறுதி. என்றால் மாற்றப்பட்ட வசனம் எது? இந்தக் கேள்விக்கு மதவாதிகள் ஆதாரபூர்வமானது என்று அறிவிக்கும் ஹதீஸ்களில் தடயங்கள் உண்டா? ஆனால் இவர்கள் நம்பகத் தனமையற்றது என ஒதுக்கும் இபுன் இஸாக், அல் தபரி போன்றவர்களின் நூல்களில் இந்நிகழ்ச்சிகள் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. முகம்மது வசனத்தை கூறியது, மக்கத்து குரைஷிகள் தங்கள் தெய்வங்களை அங்கீகரித்து விட்டதாய் மகிழ்ந்தது, விழுந்து வணங்கியது, ஒரே ஒரு முதியவர் மட்டும் வணங்க மறுத்து கல்லையோ, மண்ணையோ எடுத்து நெற்றியில் ஒற்றிக் கொண்டது (இது ஒரு தனி ஹதீஸாக புஹாரியில் இருக்கிறது) பின்னர் வானவர்கள் வந்து முகம்மதை கடிந்து கொண்டது பின்னர் அல்லா அந்த வசனத்தை மாற்றி வேறு வசனத்தை இறக்கியது என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதாரமானது என மதவாதிகள் கூறும் ஹதீஸ்களில் அனைவரும் வணங்கினர் என்பதும், ஒரு முதியவர் மட்டும் அவ்வாறு வணங்கவில்லை என்பதுமான தகவல்கள் மட்டுமே இருக்கிறது. என்றால் ஏன் வணங்கினார்கள் என்பதற்கு என்ன பதில்?

அனைவரும் வணங்கினர் என்பது நம்பகமான ஹதீஸ் என அவர்களே ஒப்புக் கொள்வதால் வசனம் மாற்றப்பட்டிருக்கிறது எனும் இஸாக், தபரி பதிவுகளே உண்மைக்கு நெருக்கமானவை என்பது உறுதியாகிறது. மட்டுமல்லாது, ஆதாரபூர்வமானவை என இன்று கூறப்படும் ஸஹீஹ் சித்தா எனப்படும் ஆறு தொகுப்புகளும் எப்படி உண்மையை மறைக்கின்றன என்பதும் தெளிவாகிறது.

ஆக முகம்மது தனக்கு தேவையான இடத்தில் தேவைப்பட்ட விதத்தில் குரான் வசனங்களை மாற்றிக் கொண்டார் எனும் அடிப்படையில் இந்த சாத்தானின் வசனங்கள் குரானை உருவாக்கியது முகம்மது தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2


satan_tempting
முகம்மது தன்னுடைய தேவைகளுக்காக அவ்வப்போது மாற்றியும் திருத்தியும் தான் குரானை வடிவமைத்திருக்கிறார் என்பதற்கான ஒரு சோற்றுப் பதமாக சாத்தானிய வசனங்கள் இருக்கின்றன. ஆனால் மதவாதிகள் சாத்தானிய வசங்கள் என்று கருதப்படுவதற்கு ஏற்கனவே மறுப்பளித்திருக்கிறார்கள். அதாவது, அவை திருத்தப்படவில்லை. இப்போதிருந்ததைப் போலவே தான் முதலிலும் வசனங்கள் இருந்தன என்று விளக்கமளிக்கிறார்கள்.

முதலில் குரான் குறித்த அடிப்படைத் தகவல் ஒன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அல்லாவிடம் தாய் ஏடு என்று ஒன்று இருக்கிறது. அதிலுள்ள விபரங்களைத்தான் தேவைக்கேற்ப வேதங்களாக அவன் வெளிப்படுத்துகிறான். ஸபுர், தோரா, இஞ்ஜீல் போன்ற குரானுக்கு முந்திய வேதங்கள் அந்த தாய் எட்டிலிருந்து தான் எடுத்து அந்தந்த தூதர்களுக்கு வழங்கப்பட்டது. அவை பின்னர் மனிதர்களால் திருத்தத்திற்கு உள்ளாகி களங்கப்பட்டதாலேயே, மீண்டும் குரான் எனும் புதிய வேதத்தை முகம்மதின் மூலம் அனுப்புகிறான். அதாவது, முன்னர் நடந்ததைப்போல் மனிதர்களால் குரானும் களங்கப்படாதிருக்க அல்லாவே அதனை காக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு முகம்மதுவுக்கு கொடுக்கிறான். இது தான் குரான் குறித்த அடிப்படையான முஸ்லீம்களின் நம்பிக்கை. இதன்படி குரான் வசனங்களுக்கு மாற்றமோ, திருத்தமோ தேவைப்படாது என்பது உறுதி. ஆனால், குரான் வசனங்கள் இன்னோரு குரான் வசனத்தால் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு குரானிலேயே சான்றுகள் இருக்கின்றன. காட்டாக, வசனம் 6:92 குரான் மக்காவிலுள்ளவர்களுக்காகவே இறக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. இதற்கு மாற்றமாக வசனம் 68:52 குரான் அகிலத்திலுள்ள அனைவருக்கும் என்கிறது. இது முரண்பாடல்லவா? இல்லை என்பார்கள். எப்படியென்றால் முதலில் மக்காவுக்கு மட்டும் எனும் வசனம் வந்தது பின்னர் அகிலத்தாரனைவருக்கும் எனும் வசனம் முதல் வசனந்த்தை தகுதி நீக்கம் செய்து விட்டது என்பார்கள். தாய் ஏட்டிலிருந்து பிய்த்தெடுத்தே வேதங்கள் கொடுக்கப்பட்டன என்றால் முதலில் ஒன்றைக் கூறி பின் வேறொரு வசனத்தினால் அதை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட வசனம் என்றால் குறைந்தபட்சம் அதை குரானிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே குரானில் இருக்கிறது. இதில் புரித்து கொள்ள வேண்டியது என்னவென்றால் முகம்மது தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ப வசனங்களை மாற்றியிருக்கிறார் என்பது தான். இந்த அடிப்படையில் தான் சாத்தானிய வசனங்களையும் பார்க்க வேண்டும்.

சாத்தானிய வசனங்களை பொருத்தவரை அதை இஸ்லாமிய மதவாதிகள் ஏற்பதில்லை. அதற்கு அவர்கள் இப்னு இஸாக், தபரி போன்றவை ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் தொகுப்புகள். அவைகள் ஏற்றுக் கொள்ளக் கூடாதவைகள் என்று பதில் கூறுகிறார்கள். பொதுவாக ஹதீஸ்களை ஆதாரபூர்வமனவை, ஆதாரபூர்வமற்றவை என்று பிரித்திருப்பது மதவாத நோக்கங்களுக்காகத் தானேயன்றி வேறில்லை. ஹதீஸ்களின் இந்த தன்மை குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறோம் என்றாலும் தேவை கருதி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

ஹதீஸ்கள் என்பவை கிட்டத்தட்ட முகம்மதின் வாழ்க்கை வரலாற்றை கூறுபவை. அவைகளில் பொய்யான செய்திகள் கலந்து விட்டன என்றுகூறி அவ்வாறான ஹதீஸ்களில் 99 சதவீதத்தை நீக்கி விட்டார்கள். அதாவது மதப் புனிதத்தை கேள்விக்குள்ளாக்கும் அனைத்தையும் பொய்யான ஹதீஸ், இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறி நீக்கம் செய்து விட்டார்கள். இன்றும் கூட மதப்புனிதத்திற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் சான்றுகள் அதாரபூர்வமற்றவை என்று தள்ளப்படுகின்றன. இப்படி தள்ளுவதற்கு இரண்டு அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள். 1. அறிவிப்பாளர்களின் வரிசை, நம்பகத் தன்மை 2. குரானுடன் முரண்படுவது. ஹதீஸ்கள் தொகுக்கப்பட வேண்டும் எனும் எண்ணம் உதித்ததே முகம்மது இறந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தான், அதிலும் ஆதாரபூர்வ தொகுப்புகள் என்று கருதப்படும் ஆறு தொகுப்புகளும் தொகுக்கப்பட்டது முகம்மது இறந்து தோராயமாக 250 ஆண்டுகளுக்குப் பிறகு. இதில் அறிவிப்பாளர்களின் நம்பகத்தனமை எப்படி அறிந்தார்கள்? அதிலும் முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகால அறிவிப்பாளர்களை.. ..? முகம்மது உயிருடன் இருக்கும் போதே ஹதீஸ்களில் கலப்படம் வந்து விட்டது. அதனால் தான் முகம்மது அவ்வாறு கலப்படம் செய்யாதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்.  ஆக முகம்மது உயிருடன் இருக்கும் போதே கலப்படமாகத் தொடங்கிய ஹதீஸ்களை, அவர் இறந்து 250 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுக்கப்பட்ட நூல்களை வைத்துக் கொண்டு இன்று மதப் புனிதத்துக்கு பங்கம் வரும் போது இது ஆதாரமில்லாத ஹதீஸ், இதுதான் ஆதாரபூர்வமானது என்று கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக ஒன்றை பார்க்கலாம். பால்குடி குறித்த வசனம் முன்னர் குரானில் இருந்து ஓதப்பட்டு வந்தது, பின்னர் நீக்கப்பட்டு விட்டது என முகம்மதின் விருப்பத்திற்குறிய மனைவியான ஆய்ஷா அறிவிக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்று புஹாரியில் இடம் பெற்றிருக்கிறது. குரானின் தகவலோடு இது முரண்படுவதால் இது ஆதாரமற்ற ஹதீஸ் என்று இப்போது கூறுகிறார்கள். இதில் ஒரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை நம்பகமானதாகவும் சரியான அறிவிப்பாளர்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதேநேரம் ஹதீஸ்கூறும் தகவல் பொய்யானதாக இருக்கிறது. அப்படியானால் பொய்யான ஒரு ஹதீஸ்கூட சரியான, நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்க முடியும் அல்லவா? இதிலிருந்து தெரிவது என்ன? சரியான, நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்கும் ஹதீஸும் கூட சரியான ஹதீஸ் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. வரலாற்றியல் போக்கில் பார்த்தால் ஹதீஸ்கள் எனப்படுபவை அனைத்தும் குப்பைகளே. அதேநேரம் அந்த நேரத்தின் நடப்புகளை அறிந்து கொள்ள ஹதீஸ்களை விட்டால் வேறு வழியில்லை. இந்த அடிப்படையில் தான் ஹதீஸ்கள் முக்கியத்துவம் பெறுகின்றனவேயன்றி வேறெதற்காகவும் அல்ல.

சாத்தானின் வசனங்களுக்குத் திரும்புவோம். இவைகளுக்கு மதவாதிகள் கூறும் முதல் மறுப்பு இபுன் இஸாக், தபரி போன்றவை நம்பகத் தன்மை இல்லாதவை என்பது தான். முகம்மதின் காலத்துக்கு நெருக்கமான இது போன்ற நூல்கள் நம்பகத் தன்மை இல்லாதவை என்பதற்கு மதவாதிகள் வைத்திருக்கும் சான்று என்று ஒன்றுமில்லை. மதவாதத்திற்கு ஆதரவாக மதவாதிகளின் தொகுப்பு மட்டுமே உண்மையானவை என்பதும், அதற்காக அவர்கள் பயன்படுத்திய விதிமுறைகள் மட்டுமே சரியானவை என்பதும் மதத்துக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம் வரலாற்றுக்கு அவை எடுபடாது. உண்மைக்கு எது அதிக சாத்தியக்கூறை வழங்குகிறது என்பதே கவனிக்கப்பட வேண்டியது. அந்த வகையில் சில கேள்விகளை எழுப்பி பதில் தேடினால் உண்மை விளங்கும்.

அந்த வசனத்திற்கு ஏன் முஸ்லீமல்லாதவர்களும் வணக்கம் செலுத்தினார்கள்? இதற்கு மதவாதிகள் கூறும் காரணம், அன்றைய காலத்தில் முஸ்லீமல்லாதவர்கள் தனித்தனியே கடவுளர்களை (லாத், உஸ்ஸா, மனாத் போல) வைத்திருந்தாலும் ஓரிறை என்பது அல்லா தான் என்பதை உணர்ந்திருந்தார்கள். ஆகவே அந்த வசனங்களின் இறுதியில் வரும் அல்லாவை துதிப்பதற்குத்தான் வணங்கினார்களே தவிர லாத், உஸ்ஸா, மனாத் போன்ற தெய்வங்களின் பெயர் உச்சரிக்கப்பட்டதற்காக வணங்கவில்லை என்கிறார்கள். இதைப் போன்ற அபத்தமான பதில் வேறொன்று இருக்க முடியாது. அல்லா என்பதை கடவுள் எனும் அடிப்படையில் தான் கொண்டிருந்தார்களேயன்றி அல்லா என்பது முஸ்லீம்களின் கடவுள் என்பதாக அந்த மக்கள் ஏற்கவில்லை. மட்டுமல்லாது, அல்லா என்பதற்காக அந்த வசனத்திற்கு வணங்கினார்கள் என்றால் மொத்த குரானுமே அந்த அல்லா தந்தது தானே. ஒவ்வொரு வசனமும் எனக்கு வழிபடுங்கள் என்று அல்லா கூறுவதாகத்தானே இருக்கிறது. என்றால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் முஸ்லீம்களாக அல்லவா மாறியிருக்க வேண்டும். அல்லா கூறியிருக்கிறார் என்றாலும் மொத்த குரானையும் நிராகரிக்கும் மக்கள். குறிப்பிட்ட ஒரு வசனத்தில் அல்லா கூறியதற்காக விழுந்து வணங்குவார்களா?

வசனம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதற்கு இசைவாக குரானின் வேறு சில வசனங்கள் இருக்கின்றன

.. .. எனினும் சைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கிய பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான்.. .. குரான் 22:52

வஹீ மூலம் உனக்கு அறிவிக்கப்பட்டதில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ .. .. .. உம் இதயம் இடுங்கியிருக்கவோ கூடும்.. .. .. குரான் 11:12

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம்.. .. .. குரான் 2:106

எனவே, அந்த இடத்தில் வசனம் மாற்றப்பட்டிருக்கிறது என்பது உறுதி. என்றால் மாற்றப்பட்ட வசனம் எது? இந்தக் கேள்விக்கு மதவாதிகள் ஆதாரபூர்வமானது என்று அறிவிக்கும் ஹதீஸ்களில் தடயங்கள் உண்டா? ஆனால் இவர்கள் நம்பகத் தனமையற்றது என ஒதுக்கும் இபுன் இஸாக், அல் தபரி போன்றவர்களின் நூல்களில் இந்நிகழ்ச்சிகள் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. முகம்மது வசனத்தை கூறியது, மக்கத்து குரைஷிகள் தங்கள் தெய்வங்களை அங்கீகரித்து விட்டதாய் மகிழ்ந்தது, விழுந்து வணங்கியது, ஒரே ஒரு முதியவர் மட்டும் வணங்க மறுத்து கல்லையோ, மண்ணையோ எடுத்து நெற்றியில் ஒற்றிக் கொண்டது (இது ஒரு தனி ஹதீஸாக புஹாரியில் இருக்கிறது) பின்னர் வானவர்கள் வந்து முகம்மதை கடிந்து கொண்டது பின்னர் அல்லா அந்த வசனத்தை மாற்றி வேறு வசனத்தை இறக்கியது என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதாரமானது என மதவாதிகள் கூறும் ஹதீஸ்களில் அனைவரும் வணங்கினர் என்பதும், ஒரு முதியவர் மட்டும் அவ்வாறு வணங்கவில்லை என்பதுமான தகவல்கள் மட்டுமே இருக்கிறது. என்றால் ஏன் வணங்கினார்கள் என்பதற்கு என்ன பதில்?

அனைவரும் வணங்கினர் என்பது நம்பகமான ஹதீஸ் என அவர்களே ஒப்புக் கொள்வதால் வசனம் மாற்றப்பட்டிருக்கிறது எனும் இஸாக், தபரி பதிவுகளே உண்மைக்கு நெருக்கமானவை என்பது உறுதியாகிறது. மட்டுமல்லாது, ஆதாரபூர்வமானவை என இன்று கூறப்படும் ஸஹீஹ் சித்தா எனப்படும் ஆறு தொகுப்புகளும் எப்படி உண்மையை மறைக்கின்றன என்பதும் தெளிவாகிறது.

ஆக முகம்மது தனக்கு தேவையான இடத்தில் தேவைப்பட்ட விதத்தில் குரான் வசனங்களை மாற்றிக் கொண்டார் எனும் அடிப்படையில் இந்த சாத்தானின் வசனங்கள் குரானை உருவாக்கியது முகம்மது தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.