புதன், 17 ஏப்ரல், 2013

நான்கு சிறகு கொண்ட டைனோசார்: காணொளி




Prophet Nuh a.s
 

வணக்கம் நண்பர்களே,
 
பரிணாம் எதிர்ப்பு பதிவுகள் தொடர்ந்து வருவதால் நாமும் தொடர்ந்து எத்ர்வினையாற்றும் சூழல் உருவாகிறது. சகோ ஆஸிக் அகமது ஆர்ச்சியோராப்டர் மோசடி பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.பரவாயில்லை நடுநிலையோடு எழுதி இருக்கிறார். இதனை நாம் மறுக்கப் போவது இல்லை.

நாம் எதிர்வினையாற்றுவதே அறிவியல் செய்திகளை விமர்சிக்கும் போது நடுநிலையாக இருக்க வேண்டும். தமிழில் அறியும் நண்பர்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதுதான்.

ஒரு சர்சைக்குறிய கருத்து இடப்படும் போது அதன் மறுபக்கம்,பன்முகப் பார்வைகள் அறிவது உண்மை நாடும் பகுத்தறிவாளர்களின் கடமை ஆகும். இது மட்டுமே உண்மை,மாற்றுக் கருத்துகள் அனுமதிக்கப்படாது என கூறுவது யாராக இருப்பினும் தவறே.

அந்த வகையில் இப்பதிவில் ஒரு வித்தியாசமான பறக்கும் டைனோசார் பற்றி அறிவோம்.பரிணாமவியலில்  தெரபோட் டைனோசார் ல் இருந்தே பறவைகள் உருவானதே என்பதே இப்போதைய ஏற்கப்படும் கொள்கை. அறிவியல் என்பது சான்றுகளுக்கு பொருந்தும் விள்க்கம் அளித்தல் என்பதும்,அவ்விளக்கத்தின் மூலம் செய்யப்படும் கணிப்புகள் எந்த அளவுக்கு மெய்ப்படுத்தப் படுகிறவோ அவ்விளக்கத்தின் நம்பக்த்தன்மை,ஏற்பு அதிகரிக்கும்.

சான்றுகள் மாறும் போது விளக்கமும் மாறும்.இதில் அறிவியலில் எந்த பிரிவும் விதிவிலக்கு அல்ல.அந்த வகையில் பரிணாம வளர்ச்சியில் டைனோசாரின் முன் இரு கைகளில் இறகு முளைத்தே இறக்கைகளாக மாறியது என்பதே இப்போதைய அறிவியல் கொள்கை அனைத்து பற்வைகளுக்கும் இரு இறக்கைகள்,இரு கால்கள் உண்டு,
பல புராணக் கதைகளில் சில விலங்குகள் நான்கு கால்களுடன் இரு இறக்கைகளுடன் காணப்படும். பரிணாமத்தின் படி இது சான்றுகள் அற்ற ஏற்கப் படாத ,சாத்தியமற்ற‌ விடயம் ஆகும்.
இந்திய புராண காமதேனு


இஸ்லாமிய  புராண புர்ராக் (முகமது(சல்) அவர்களை சுவனம் அழைத்து சென்ற விலங்கு.


சீன புராணக் கதை ட்ராகன்!!!

 

மனிதர்களை சுமந்து செல்லும் பறக்கும் நாலுகால் விலங்குகள் பற்றி பல புராணக் கதைகளில் உண்டு. 

இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் மைக்ரோராப்டர் என்னும் டைனோசார் படிமத்தில் நான்கு இறக்கைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதாவது பின்னங்கால்களிலும் இறகுகள் உண்டு.

இது தெர்போட்[theropod] டைனோசாரிடம் இருந்து பறவைகள் தோன்றின என்னும் கொள்கையை மாற்றுமா என்பதே விவாதம். இதை ஏன் கூறுகிறோம் என்றால் ஏற்கெனவே உள்ள கருத்துக்கு சற்று மாறான் சான்று கிடைத்தாலும் அதையும் பரிசீலித்து ஏற்கும் அறிவியல் என்பதை வலியுறுத்தவே செய்கிறோம். இந்த நான்கு இறகு டைனொசார் ஒரு விதிவிலக்காக மட்டும் இருக்கலாம், அல்லது பறவைகளின் தோற்றத்திற்கு மாற்று விளக்கம் அளிப்பினும் ஏற்கப்படும்.






கிடைக்கும் சான்றுகளை  பலர் ஒருவரை ஒருவர் சாராமல் ஆய்வு செய்து ஒத்த ஒருமித்த கருத்துகள் வருவதையே அறிவியல் உலகம் விரும்புகிறது.

ஒருவேளை எவரேனும் தவறு செய்தால் பிடிப‌டுவது இதனால்தான். ஆகவே பில்ட்டௌன் மேன்,ஆர்ச்சியோராஃப்டர் என ஒரு சில மோசடிகளை சொல்லி பரிணாம எதிர்ப்பாக காட்டுவது நகைப்புக்குரியது.

ஆகவே தவறான படிமங்களை நிரூபித்தால் அறிவியல் உலகம் ஏற்கும் என்பதால் இருக்கும் படிமங்கள் அனைத்தையும் தவறென்று நிரூபிக்க ஆய்வுகள் மேற்கொள்ள பரிணாம் எதிர்ப்பாளர்களை வேண்டி விரும்பி கேட்கிறோம்.

ப‌டிம‌ங்க‌ள் அனைத்தும் தவ‌றாகி விட்டால் ப‌ரிணாம‌ம் இல்லாமல் போய் விடும்.ப‌ற‌க்கும் டைனோசார்க‌ள் என்ப‌து டை‌னோசாரின் ஒரு உயிரிக் குழு என்றாலே ப‌ரிணாம‌ம் புரிந்துவிடும்.

அளவில‌ பெரிய‌ டைனோசார்க‌ள் உருஅளவில் குறையும் சிறுப‌ரிணாம‌மும்[micro evolution] ம‌தவாதிக‌ளால் எதிர்க்க‌ முடியாது. ஆக‌வே ப‌றவைக‌ள் என்ப‌து ஒரு வ‌கை சிறிய‌ டைனோசார்க‌ளே!!!.

இன்னும் கூட டைனோசார்கள் பறவைகளாக பரிணமித்த விடயமும் இச்சுட்டிகளில் விளக்கப் படுகிறது.

Nine links in the transition from dinosaurs to birds

http://www.talkorigins.org/indexcc/CC/CC214.html


************

இன்னும் அந்தப் பதிவில் உள்ள எச்சரிக்கை உணர்வு நமக்கு பிடிக்கிறது.

//இந்த பதிவுக்கு பதில் சொல்ல விரும்புபவர்கள் தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். "டைனாசரில் இருந்து பறவை" வந்தது என்ற யூகத்தை இந்த கட்டுரை விமர்சிக்கவில்லை (அதற்கு இத்தளத்தின் ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த கட்டுரையை பார்க்கவும்) அதனால் பதில் சொல்கின்றேன் என்று கிளம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, பரிணாம ஆய்வாளர்கள் அறிவியலுக்கு செய்த துரோகத்தை தான் இந்த கட்டுரை விமர்சிக்கின்றது. முடிந்தால் அதனை மறுத்து காட்டுங்கள். //

 
அறிவியல் ஒன்றும் புனிதப் பசு அல்ல, புகழ்வெறி பண ஆசை கொண்டவர்கள் எங்கும் எதிலும் இருப்பது போல் இயல்பானது. ஆனால் அறிவியலில் பொய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அமபலப் படுத்தப்படுவது போல் பிற வாழ்வியல் சார் விடயங்களில் நடப்பது இல்லை.

ஏதேனும் படிமத்தை யாரும் ஆய்வு செய்ய விருப்பப் பட்டால் அது நடக்கும் வாய்ப்பு உண்டு.ஆனால் பல நாடுகளில் அகழ்வாய்வு செய்தால் தங்கள் குட்டுகள் அறியப்படும் என மறுப்பார்கள்.செய்திகளும் வராது!!!

ஆகவே அறிவியலில் சில மோசடிகள் நடந்திருப்பது உண்மைதான், அதன் சரி பார்க்கும் செய்லாக்கமான ஒன்றை ஒன்று சாரா ஆய்வுகளின் மூலம் ஒத்த ஒருமித்த கருத்துகள் எட்டப்படுதல் என்பது தவறுகளை நீக்கி சரியான பாதையில் நடத்துகிறது.

இப்போது  நாமும் ஒரு மோசடியை அம்பலப்படுத்துகிறோம்.ஆனால் சகோக்கள் ஏற்க மாட்டார்கள் என்ன அது.

பைபிளில் நோவா என்ரும் குரானில் நூஹ் என்றும் அழைக்கப்படும் இறைத்தூதர் கால்த்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.அதாவது அன்பு மிக்க கடவுள் தன் சொல் கேளாதவர்களை அழிக்க ஏற்படுத்தினார்.

அதில் இருந்து கடவுளின் அடியார்  நோவா(நூஹ்)மற்றும் அவர் குடும்பம்  ஒரு கப்பல் செய்து அந்த கப்பலில் பல விலங்குகளையும் ஏற்றி தப்பிக்க வைத்தார் எனக் கூறுகின்றன மதபுத்தகங்கள்.

சரி இந்த வெள்ள‌ப் பெருக்கு ஆனது உலக முழுதும் என்பதே பொதுவான கருத்து ஆகும்.ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை என்பதால் இப்போது இஸ்லாமிய பிரச்சாரகர்கள், இது நூஹ்(நோவா) வாழ்ந்த இடத்தில் மட்டும் ஏற்பட்டது என்று  பொய் சொல்கிறார்கள்.

பாருங்கள் அண்னன் ஜாகிர் நாயக் என்ன கூறுகிறார்?? ‌


குரான் [வழக்கம் போல்] இந்த விடயத்தையும் தெளிவாக சொல்லவில்லை ஆகவே அந்த இடத்தில் மட்டும் வெள்ள‌ப் பெருக்கு வந்தது எனப் பொருள் கொள்வேன் என்கிறார்.அந்த இடம் என்றால் எங்கே என்று கேட்க கூடாது!!!!!!!!!!

ஆகவே இது மோசடியா இல்லையா என்பதை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன்!!

அறிவியலில் மோசடிகள் நடப்பது அபூர்வம்,அப்படிநிகழ்ந்தாலும் அது கண்டுபிடிக்கப்படும்,நீக்கப்படும்.ஆனால் மதவாதிகளின் புராணக் கதை மோசடிகள் மறைக்கப்படுகிறது.காலம் காலமாய் தொடர்கிறது!!!!!!!
 
நோவா கப்பல் கதைக்கு ஆதாரம் கிடையாது,ஏதோ அராஃபத் மலையில் கிடைத்த கப்பல் என்பதும் மோசடி வேலையே!!!.பதிவின் தொடக்கத்தில் உள்ள படம்!!
 
http://www.wnd.com/2010/04/146941/

இது பற்றிய நம் முந்தைய பதிவு ஒன்று.
நோவா கப்பல் கதை உண்மையா? 

ஆகவே அறிவியல் கண்டுபிடித்து சரி செய்த மோசடிகளை பட்டியல் இடும் மதவாதிகளே, உங்கள் மத புராணக் கதைகளின் உண்மைகளை நிரூபிக்க வாரீர் என அழைக்கிறோம்
நன்றி

மனிதன் உயிரின‌ங்களிலேயே தலை சிறந்தவனா???:காணொளி





வணக்கம் நண்பர்களே,

நாம் அறிந்தவரை பூமியில் மட்டுமே ஹோமோ சேஃபியன்கள்(இபோதைய மனிதன்) உள்ளிட்ட பல மில்லியன் உயிரி,தாவர வகைகள் வாழ்கின்றன.பேரண்டத்தில் வேறு எங்கும் உயிர்கள் உள்ளனவா என்னும் தேடல் ஒருபுறம் தொடர்கிறது என்றாலும்,பூமியில் வாழும் உயிரின‌ங்களில் இயற்கை வளங்களை அதிகம் நுகரும்,கட்டுக்குள் கொண்டுவர முயலும் ஹோமோ சேஃபியன்கள் என்னும் ஒருவகை மனித இனம் மற்ற உயிரிகளை விட மேன்மைவாய்ந்ததாக அவ்வினத்தவரால் கருதப் படுகிறது.

பிற உயிரிகள் செய்யாத அறிவியல்,மதம், சட்டங்கள், ஆட்சிமுறைகள் என வாழ்வதும் தனது  சிந்தனைகளை உணர முடிவதும்,சூழலை சரியாக கணித்து பெரும்பாலும் அறிவியல்மூலம் அதற்கு தீர்வு காண்பதுமே இந்த மேட்டிமை சிந்தனைக்கு காரணம்.

பிற உயிரிகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதை ஹோமோ சேஃபியன்கள் அறிய இயலவில்லை. கடந்த 20,000 வருடங்களில் அதாவது ஹோமோ சேஃபியன்கள் விவசாயம் மேற்கொண்டு ஒரு இடத்தில் வாழ தொடங்கியதில் இருந்தே நாகரிகம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வளர்ந்தன.

இயற்கையைப் பொறுத்தவரை  சூழலுக்கு பொருந்தா உயிரிகள் அழிவதும் ஒருவகை பரிணாம செயலாக்கம் ஆகும். அனைத்து உயிரிகளும் ஒரு செல் உயிர்களில் இருந்து 450 கோடி ஆண்டுகளில் பரிணமித்தன என்பதே இப்போதைய ஏற்கப் பட்டுள்ள அறிவியல் கொள்கை ஆகும்.

 ஹோமோ சேஃபியன்கள் பிற உயிரிகளை விட சிறந்தவனா? என்னும் கேள்வியை பல தளங்களில் விவாதிக்க இயலும் என்றாலும் இயற்கையை பொறுத்தவரை ஒரு உயிரி வாழ ஒரே திறன்தான் தேவை.

"சூழலுக்கு ஏற்ப வாழும் திறன்"

அறிவியலின் முன்னேற்றத்தால் பலவித தொழில்நுடபங்களை உருவாக்கி இத்திறனை ஹோமோ சேஃபியன்கள் வளர்த்துக் கொண்டார்கள்  என்பதை அவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு, சராசரி ஆயுள் அதிகரிப்பு என இரு கணக்கீடுகளில் இருந்து அறிய முடியும்.

  
Graph of the global human population from 10,000 BC to 2010 AD, from the US Census Bureau. The graph shows the extremely rapid growth in the world population that has taken place since the 18th century.

Graph showing an increase in the length of time that an average human lives in the United States.

ஹோமோ சேஃபியன்கள் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியின் 75% நிலப்பரப்பை தங்கள் வசதிக்கு ஏற்ப காடுகள் அழித்து விவசாயம்,வீடு,அணைகள் கட்டுதல், சுரங்கள் தோண்டுதல் என பலவகைகளில் மாற்றிவிட்டனர். பல் வகை உயிரி,தாவர இன‌ங்களின் அழிவுக்கும் வித்திட்டு விட்டார்.

 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை பல கோடி ஆண்டு பூமியில் ஆண்ட டைனோசார்கள் பூண்டோடு அற்றுப் போயின. இவை எப்படி மறைந்து இருக்க்லாம் என்பதற்கு பல் அறிவியல் விள்க்கங்கள் ஹோமோ சேஃபிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்து அளித்தாலும்,அவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதாக தெரியவில்லை. ஒருவேளை டைனோசார்கள் அழியாமல் இருந்து இருந்தால் ஹோமோ சேஃபியன்கள் பலுகிப் பெருகி இருக்குமா என்பதே கேள்விக்குறிதான். 

இன்னும்  இனம்,மொழி,நிறம் அடிப்படையில் யார் உயர்ந்தவர் என கண்டுபிடிக்க பல போர்கள் நடைபெற்று பல மில்லியன் ஹோமோ சேபியன்கள் இறந்ததும் வரலாறு. ஹோமோ சேஃபியன்கள் தங்களை ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அறிவுள்ள சக்தி படைத்து தன்னை வணங்க சொல்வதாகவும் கருத்துக் கொண்டும் அதற்காவும் பல போர்கள் நட‌ந்ததும் நகைச்சுவையான இன்னொரு உண்மை.

இயற்கையை பொறுத்தவரை மனிதனும் பிற உயிரிகள் போல்தான். இயற்கை சூழலுக்கு ஏற்றபடி அதிக பட்சம் 900 கோடி மக்கள் மட்டுமே வாழ முடியும் என சில ஹோமோ சேஃபியன் அறிவியலாளர்கள் பயமுறுத்துகின்றார்.ஹோமோ சேஃபியன்களின் இயற்கை சுரண்டல்இயற்கை சூழலை பாதிப்பதன் விளைவே  புவி வெப்பமயமாதல்  என்றும் இதன் காரணமாகவே பல இயற்கை பேரழிவுகள் நிகழ்வதாகவும் கூறுகின்றார்கள்.


ஆனால் பெரும்பான்மை ஹோமோ சேஃபியன்கள் இவற்றைப் பற்றி கவலை கொளாமல் " உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என நுகர்வுரீதியாக சிந்திக்கிறார்கள் என்பதும் உண்மை.அவர்களுக்காக இந்தப் பாடல்.


ஹோமோ சேஃபியன்கள் கனவுலகில் வாழ இயற்கைவிடுமா என்பதே கேள்வி.ஒருவேளை  ஹோமோ சேஃபியன்களும் பிற உயிரிகள் போல் அற்றுபோய் வேறு அறிவுள்ள உயிரிகள் பல் மில்லியன் ஆண்டுகள் கழித்து பரிணமித்து அகழ்வாய்வுகள் செய்யும் போது இப்படம் போல் கிடைக்கலாம்!!!






இக்காணொளி ஹோமோ சேஃபியன்கள் பிற உயிரிகளில் இருந்து மேம்பட்டவர்களா என்பதை பல் தளங்களில் அலசுகிறது. கண்டு களியுங்கள் ஹோமோ சேஃபிய சகோதரர்களே!!

நன்றி!!!!

http://en.wikipedia.org/wiki/Anthropocene
http://en.wikipedia.org/wiki/Anthropocentrism

(சான்றுகளை) சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!!




 வணக்கம் நண்பர்களே,

நிகழ்வின் சான்றுகளை சீர்தூக்கி பார்த்து அலசி,பொருந்தும் விளக்கம் அளிப்பதே அறிவியல். இந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது ஒரு உண்மையை அறிய விரும்புவரின் கடமை ஆகும்.. நாம் பார்த்த  சில காணொளிகளை இப்பதிவில் பகிர்கிறோம். நம் பதிவுகளில் ஏற்கெனவே விவாதித்த பல விடயங்களை எளிமையாக விளக்குகிறது.

முதல் காணொளி எளிமைப்படுத்தபடாத சிக்கலான வடிவமைப்பு[irreducible complexity] என்னும் பரிணாமத்தின் எதிர் வாதம் பற்றியது இதை நாம் ஏற்கெனவே இப்பதிவில் விளக்கி இருக்கிறோம்.


இரண்டாம் காணொளி விடை தெரியா கேள்விக்கு வித்தகனே காரணம் என நம் ஆத்திக சகோக்கள் கூறுகின்றனர்.
நாம் விடை தெரியா என்பது விளக்க ஏதுவான சான்றுகள் இல்லை என்பதால் மட்டுமே. விடை தெரியா கேள்வியின் காரணியாக இயற்கைக்கு மேம்பட்ட சக்தியை சுட்டும் நம் சகோக்கள் அதனையும் சான்றுகள் மூலம் நிரூபிக்க இயலாது என்பதை அறிந்தாலும் அலட்டிக் கொள்வது இல்லை.

அதாவது ஒரு அறிவு வாய்ந்த சக்தி,எந்த தேவையுமற்ற எப்போதும் இருக்கும், எதையும் சூன்யத்தில் இருந்து உருவாக்க முடியும்.அதுவே கடவுள்(கள்) என பெயர் இடுகின்றார். ஆண்டவன் கட்டளை என பல சட்ட திட்டங்கள் போடுபவர்கள், கடவுளை நிரூபிக்க முடியுமா என்றால், கடவுள் இல்லை என நிரூபிக்க முடியுமா என ப்ளேட்டை திருப்பி போடுவார்கள்.அப்படி யார் நிரூபணம் கொடுக்க வேண்டும் என்பதை இக்காணொளி விளக்குகிறது.


 

மூன்றாம் காணொளி பூமியின் வரலாற்றை விளக்குகிறது. புவியியலும்,பரிணாமமும் இரட்டையர் என்றால் மிகையாகாது.பொறுமையாக பாருங்கள்.





நான்காம் காணொளி பகுத்தறியும் சிந்தனை என்பதைப் பற்றி எப்படி சான்றுகளை சீர்தூக்கிப் பார்த்து பொருந்தும் விளக்கம் அளிப்பது என்பதை விள்க்குகிறது. சிறிய காணொளி




ஐந்தாம் காணொளி ஏன் பல இயற்கைக்கு மேம்பட்ட சக்திகளை ஏதோ ஒருவகையில் வசப்படுத்துவேன் என்பவர்கள் வெளிப்படையாக பேசுவதில்லை என்பதும்,எதையும் தெளிவாக பேசுவதில்லை என்பதையும் அலசுகிறது. நம் பதிவு விவாதங்களை படிக்கும் நண்பர்கள் இதனை உணர முடியும்.




பாருங்கள் ஆக்க பூர்வமாக கருத்து பரிமாற்றம் செய்வோம்.

மதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்!!!!!!





வணக்கம் நண்பர்களே,
இணையத்தில் பாடங்களை காணொளி மூலமாக எளிதில் விளக்கும் பலர் இருக்கின்றனர்.அப்படி ஒருவரை பாராட்டி சகோ பீர் முகம்மது ஒரு பதிவு இட்டு இருக்கிறார்.


அவர் மதம் சாராமல் பதிவு எழுதி திரு சல்மான் கான் என்பவரின் கல்விப்பணியைபாராட்டியதற்கு வாழ்த்துக்கள்சல்மான்கான் முஸ்லிம் என்பதாலேயே சகோ  பீர் முகம்மதுபாராட்ட்டினார் என்ற எண்ணம் வருவது இயல்பு என்றாலும் பாராட்டுக்கு தகுதியானவரை யார்வேண்டுமானாலும் பாராட்டலாம் என்பதே நம் கருத்து.

வங்க‌ தேசத்தில் இருந்து அமெரிக்கா புலம் பெயர்ந்து அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்ப்பட்டுநல்ல குடிமகனாக சமூகத்திற்கும் கல்விப்பணி ஆற்றுதல் நன்றே!!.

அவருடைய குழுவில் பல இன மொழி ,மதம் சார்ந்தவர்களும் இருப்பதையும் அறிய முடிகிறது.சில இந்தியர்களும் இணைந்து சேவை செய்கிறார். அவர்களையும் சேர்த்து பாராட்டுவோம்.

*********
இதில் நம்க்கு ஒரு விடயம் இருக்கிறதுபரிணாம கொள்கை என்பது உயிர் அறிவியலில்ஒருமித்த கருத்தாக  ஏற்கப்பட்ட கொள்கை என்பதும் உலகின் பெரும்பான்மை பல்கலைக்கழகங்களில்  கற்பிக்கப்படுகிறது.

எதிர்ப்பது ஒரு சில மதவாதிகள் மட்டுமே அதுவும் தங்களின் மத புத்த்க விளக்க்த்திற்கு பரிணாம்சான்றுகள்,விளக்கங்கள் எதிராக இருப்பதாக் நினைப்பதால் மட்டுமே.

ஆயினும் பல மதப்பிரிவுகள் பரிணாமத்தை எதிர்க்காமல் வழி அது இறையால் வழிநடத்தப்பட்டது  என சொல்வார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றன்.

நம் தமிழ் பதிவுலகில் பல இஸ்லாமிய பதிவர்கள் பரிணாமம் கொள்கை சரி என்றால்இஸ்லாம் பொய்யாகி விடும் என கருத்துக் கொண்டு பதிவிட்டு வருகிறார்கள்.

நாம் கூடுமானவரை அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லி விளக்கி வருகிறோம்.

இப்போது அவர்கள் அனைவரும் போற்றும் திரு சல்மான் கானின் கல்வி பரிணாமத்தைகற்பிக்கிறதா இல்லையா என அறிவது நம் கடமை ஆகும்.

உயிர் அறிவியல் சார்ந்த கல்வி எதுவும் பரிணாமத்தை அடிப்படையாக கொண்டேகற்பிக்கப்படுவதால் கான் அகாடமியும் பரிணாமத்தை போதிக்கிறது.அந்த காணொளிகளைஇணைப்பாக வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.







பரிணாமம் விளக்குவதில் இன்னும் சிறந்த காணொளிகள் உண்டு என்றாலும் ஒரு முறையாக அறிவியல் கற்றவர் பரிணாமத்தை தவறு என்று கூறுவதில்லை என்பதை விளக்கவே இந்த காணொளிகளை இடுகிறேன்.

கல்வியில் மதம் சார் கருத்துகளை வெளியிடாமல் இருக்கும் கான் அகாடமியை பாராட்டுகிறோம்!!

இப்படி [பரிணாம] கல்வியை ,இன,மத சாராமல் குழு அமைத்து  ஒரு மத ஆட்சி நாட்டில் இருந்து கான் அகாடமி செய்ய இயலுமா என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம்.



ஆகவே  கல்வி பெருக மத ஆட்சிகள் ஒழிய வேண்டும்!!!!!!!!!!!

கான் அகாடமி காஃபிர் அகாடமியா என்பதையும் மார்க்க பாதுகாவலர்கள் விளக்க வேண்டுகிறேன்!!!


இந்த காணொளிகளில் உள்ள விடயங்கள் நாம் ஏற்கெனெவே அறிந்த விடயம் என்பதாலும், ஏதெனும் விளக்கம் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் சரி செய்வோம்.

பரிணாமம் எளிய விளக்கங்கள் .Part 1



வணக்கம் நண்பர்களே,

கடந்த சில நாட்களாக நாம்& சில நண்பர்கள் நடத்திய பரிணாமத்தின் ஏற்புத் தன்மை சார் விவாதம் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்க்லாம்.பரிணாமம் எதிர்க்கும் குழுவின் கட்டுரைகளுக்கு பல மறுப்புகள் எழுதி இருந்தாலும் பரிணாமம் குறித்தே ஒரு தொடர் எழுத வேண்டும்  என ஆசை உண்டு.

பரிணாமம் என்பது பல துறைகள் சார்ந்த அறிவியல் என்பதால், கணிதம் சார்ந்து எழுத முற்பட்டாலும், அதற்கு அடிப்படைக் கணிதம் விள்க்கவே நேரம் செல்லும் எனத் தோன்றியதால் குழு கணித அடிப்படை முயற்சியை பிறகு முயற்சிப்போம் என முடிவு செய்தேன்.

சரி இப்பதிவில்‍ இருந்து ஒரு தொடர் முயற்சிக்கலாம் என தோன்றுகிறது. பதிவுகள் விவாதிக்கப்பட வேண்டும், பல சார்புக் கருத்துக்களும் ஆவணப் படுத்தப்பட வேண்டும் என்பது நம் விருப்பம் என்றாலும், விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளி சார்ந்தே இருப்பதும் அவசியம். அப்படி இல்லாவிட்டால் குழப்பமே மிஞ்சும்.

இப்பதிவில் பரிணாமம் என்பது என்ன என்பதை மட்டுமே விளக்க,விவாதிக்க‌ போகிறோம்.

அறிவியல் கற்கும் ஆர்வம் உள்ள, உண்மை தேடும் மக்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாக நினைப்பதால் மட்டுமே பரிணாமம் குறித்த நமது கற்றலை தமிழ் பதிவுலகில் பகிர்கிறோம். சரி இப்பதிவில் அறிவியல் மட்டுமே சார்ந்து பரிணாமம் என்றால் என்ன? என விளக்(ங்)குவோம்.
  
ஒரு சின்ன எ.கா எடுத்துக் கொள்வோம்.

காவல்துறை ஒருவரை குற்றம் சாட்டி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்கிறது. நீதிமன்றத்திடம் ஒப்படைக்கிறது.கைது செய்யப் பட்டவர்களில் சான்று இல்லாதவரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது.

காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்கிறதா என்பதே பிரச்சினை. குற்றவாளியும் தன் தரப்பு வாதங்களை ,ஆதாரங்களை சமர்பிக்கலாம், அதுவும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.

இங்கு நீதிமன்றம் அறிவியல் உலகம். காவல் துறை, குற்ற‌வாளி பரிணாம ஏற்பு, எதிர்ப்பு குழு என எடுபோம். ஹிஹி யார் காவல்,யார் குற்றவாளி என அவரவர் விருப்பம் போல் எடுக்கவும். ஒருவர் குற்றவாளி என்பதற்கோ,குற்ற‌வாளி இல்லை என்பதற்கும் சரியான சான்று எப்படி இருக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு சீர் தூக்கி பார்க்க‌ தெரிந்தால் மட்டுமே இந்த முறை சரியாக பலன் அளிக்கும்.

அறிவியல் உலகத்தில் பரிணாமம் என்பது இப்போதைய உயிரின தோற்ற விளக்க கொள்கையாக ஏற்கப்பட்டு, பெரும்பான்மை பல்கலைக் கழகங்கள்,பள்ளிகளின் போதிக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அறிவியல் உலகத்தால் ஒருமித்து ஏற்கப்பட்ட ஒரு கொள்கையையின் மீது கற்றல்,ஆய்வு மூலம் சாதிக்கும் விருப்பினை தமிழ் உலகம் இழந்து விடக்கூடாது என்னும் நோக்கிலேயே எழுதுகிறோம்.

வைரஸ்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மருந்துகளின் தன்மை மாறுகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம்,சில வருடங்களுக்கு முன் பலன் அளித்த பென்சிலின் இப்போது பலன் அற்று போனது. கொசு விரட்டி மீதே உடகாரும் வல்லமை கொண்ட கொசு என பல பரிணாம செயல்களை,அன்றாட வாழ்வில் பார்த்தாலும் நாம் அதனை உணர்வது இல்லை. ஆகவே பரிணாமம் என்பது 100% சரியாக ஆய்வுரீதியாக சரி பார்க்கப் பட்டு ஏற்கப்பட்ட கொள்கை.

சோவியத் யூனியனின் போலி அறிவியலாளன் லைசெங்கோவின் தவறான பரிணாமம்,மரபியல் சார் கருத்துகள், செயல் படுத்தியமையால் அங்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியது என்பது வரலாறு!!!.அது உலகின் வரலாற்றை மாற்றியது!!!. அது என்ன என்பதைப் பிறகு பார்ப்போம்!!


ஆகவே தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளை மெய்ப்பிக்க முடியா அறிவியல் கொள்கை கைவிடப் படும். மாற்றுக் கொள்கை அதன் இடத்தை பிடிக்கும். சர் ஐசக் நியுட்டன் எந்த [ஈர்ப்பு] விசை ஆப்பிள் மரத்தில் இருந்து ஆப்பிளை விழச் செய்கிறதோ, அதே விசைதான் கோள்கள்,நட்சத்திர இயக்கங்களுக்கு காரணம் என முதலில் விளக்கினார்.

சில சோதனைகள் மூலம் ஈர்ப்பு விசைக்கு சூத்திரம் கண்டறிந்தார். அந்த விதியின் மூலம் பூமிக்குள் செய்த ஆய்வுக் கணிப்புகள் சரியாக இருந்ததால் ,யாரும் நியுட்டனின் ஈர்ப்பு விதியை மறுகவில்லை.அறிவியலில் சரியாக என்றால் ,கணிப்பு,பரிசோதனையின் அளவீட்டு வித்தியாசம் குறைவாக இருப்பது என்பதைப் புரிய வேண்டும்.

ஆனால் அறிவியல் முன்னேற்றத்தில் தொலைநோக்கி உதவியால் சிவப்பு விலக்கம்[Red Shift] கொண்டு சூரியக் குடுமப்த்தின் இதர கோள்களின் இயக்கங்களை கணக்கிட்டால் தவறு வருகிறது. ஆகவே சான்றுகளின் அடிப்படையில் நியுட்டனின் விதி கைவிடப்பட்டு,ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதிக் கொள்கை ஏற்கப்பட்டது. இதுவும் நம் பால்வீதி மண்டலம் தாண்டி கணக்கீட்டில் பிழை கொடுப்பதால், கருப்பு பொருள் என்னும் கருதுகோள் கொண்டு பிழையை சரி செய்ய முயற்சி நடக்கிறது. ஒருவேளை கருப்பு பொருள் என்பது இல்லை எனில் ஐன்ஸ்டினின் விதிக்கும் மாற்று கொள்கை காணப்பட வேண்டும்.மாறியது ஈர்ப்பு விசை அல்ல, ஈர்ப்பு விசையின் செயல்பாட்டு விளக்கம் மட்டுமே மாறுகிறது.

ஆகவே அறிவியல் சான்றுகள் அடிப்படையில் தன்னை சரிபார்க்கும் தொடர் இயக்கம் கொண்டது என்பதை விளக்கவே இதனைக் கூறினோம். ஆகவே பரிணாமம் என்பது இன்று வரை கடந்த ,நிகழ்கால சான்றுகளை சரியாக பிழையின்றி விளக்குகிறது.நூற்றுக் கணக்கில் ஆய்வு சஞ்சிகைகளும்[Journals],ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் வருடத்திற்கு பல புத்தகங்களும் வெளிவருகின்றன. பரிணாமம் முறைப்படி கற்க வேண்டும் எனில் கணிணியில் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும் என்னும் கால கட்டத்தில் வாழ்கிறோம் என்னும் அரிய வாய்ப்பினை கொண்டவர்கள் நாம்.

பரிணாமக் கொள்கை டார்வினுக்கும் முந்தியது.பரிணாம கொள்கையும் பல மாறுதல்களை சந்தித்து உள்ளது.

லாமார்க்கீயம், இயற்கைத் தேர்வு,நியோ டார்வினியம்,நிறுத்திய நிலைத்தன்மை,.. மூலக்கூறு பரிணாமவியல் என பலவகையான மாறுதலான விளக்கங்களைக் கண்டது.

http://en.wikipedia.org/wiki/History_of_evolutionary_thought

இவை அனைத்தையும் அடுத்த பதிவில் அதிகம் விவாதிப்போம். இங்கும் பரிணாமம் மாறவில்லை பரிணாமக் கொள்கையின் விளக்கங்கள் மட்டுமே சான்றின் அடிபடையில் மாறுகின்றன.அறிவியல் என்பது இயற்கை விதிகளுக்கு உட்பட்ட விளக்கங்களை மட்டுமே ஏற்கும் என்பதால், பரிணாம கொள்கைக்கு மாற்றம் வரும் வாய்ப்பு மிக மிக....குறைவு.

பாமர மக்களாகிய நாம் எப்படி அறிவியல் உலகம் பரிணாமத்தை ஏற்கிறது என்பதையே அறிய முயல்வோம்.பரிணாமம் குறித்த தவறான புரிதல்களையும் தவிர்த்தல் நலம்.

***
பரிணாமம் என்பது என்ன?

விக்கிபிடியாவில் இருந்து

1.Evolution is the change in the inherited characteristics of biological populations over successive generations.

2.Evolutionary processes give rise to diversity at every level of biological organisation, including species, individual organisms and molecules such as DNA and proteins.[1]

3.Life on Earth evolved from a universal common ancestor approximately 3.8 billion years ago. Repeated speciation and the divergence of life can be inferred from shared sets of biochemical and morphological traits, or by shared DNA sequences.[2]

4.These homologous traits and sequences are more similar among species that share a more recent common ancestor, and can be used to reconstruct evolutionary histories, using both existing species and the fossil record. Existing patterns of biodiversity have been shaped both by speciation and by extinction.[3]

1.பரிணாமம் என்பது உயிரினக் குழுக்களில் தலைமுறைரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

2.பரிணாம நிகழ்வினால் உயிர் அமைப்புக்களின் ஒவ்வொரு நிலையிலும்[உயிரின குழுக்கள்,தனிப்பட்ட உயிரிகள்,மூலக்கூறுகள், ஜீனோம்,... மற்றும் ப்ரோட்டீன்] பல்வேறு வகைகள் உருவாகி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. 

3.பூமியில் 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பொது நுண் உயிர் முன்னோரில் இருந்தே அனைத்து உயிரி,தாவர வகைகளும் கிளைத்து தழைத்தன.பலமுறை நிகழ்ந்த சிற்றினமாதல்[Speciation: ஒரு உயிரி பல உயிரிகளாக பிரிதல்],உயிரிகளில் ஏற்படும் வித்தியாச விலகல்[divergence of life] இதனை தோற்றுவித்தது என்பதை உயிர் வேதியியல், உரு அமைப்பு ஒப்பீடு மற்றும் ஜீனோம் ஒப்பீடுகளில் இருந்து உறுதி செய்கிறோம்.

4. ஒரு சமீப கால பொது முன்னோரில் இருந்து தோன்றிய உயிரிகளின் உரு அமைப்பு, ஜீனோம் அமைப்பு அதிகம் நெருங்கியதாக இருக்கும்.இந்த ஒப்பீடுகள்,ஆய்வுகள் மூலம், பரிணாம வரலாறு, வாழும் உயிரிகள், மறைந்த உயிரிகளின் படிம வரலாறு மூலம் கட்டமைக்கப் படுகிறது.இப்போது காணப்படும் உயிரிகளின் வகைப்படுத்தல் ஒழுங்குகள், சிற்றினமாதல், உயிரின மறைவு[Extintion] ஆகியவற்றால் ஏற்பட்டது.

பரிணாமம் என்பது என்ன என்பதன் விக்கிபிடியா விளக்க மொழியாக்கம்,ஆங்கில மூலம் கொடுத்து இருக்கிறேன். மொழியாக்க மேம்பாடு,புதிய தமிழ் சொற்கள் நண்பர்கள் கொடுக்கலாம்.

**
இந்த 4 விடயங்களையும் சரியாக விளங்குவோம். 

நாம் நமது சுற்றுப்புறத்தை அறிய முயல்கிறோம், கடந்த&நிகழ் கால நிகழ்வுகளை சான்றுகள் கொண்டு  பொருந்தும் விளக்கம் ஏற்கிறோம்.அதனைக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கணிக்கிறோம்.சான்றுகளுக்கு ஏற்ப விளக்கங்களை மாற்றுகிறோம். இது வரலாறு,அறிவியல் ஆகிய இரண்டுக்குமே சரியான உண்மை.

1.பரிணாமம் என்பது உயிரின குழுக்களில் ஏற்படும் தலைமுறைரீதியான மாற்றம்.

பெற்றோர்,குழந்தை இருவரிடையே பல ஒற்றுமை இருந்தாலும், சிறிது வேற்றுமை உண்டு. ஜீனோம் ஒப்பீட்டில் ஒருவரின் தந்தையை அறிய முடியும் என்பது பல வழக்குகளில் முடிவு காண உதவி இருக்கிறது.

பெற்றோர் ஜீனோம், குழந்தை ஜீனோம் இவற்றை ஒப்பிடும் போது சில மாற்றங்கள் இருக்கும் இதனை ம்யுட்டேஷன்[mutations] என அழைக்கிறோம். இந்த தொடர்ந்த ஜீனோம் மாற்றம் ,உரு அமைப்பு மாற்றம், ஒரு உயிரியை சில உயிரிகளாக நீண்ட கால அளவில் பிரிக்கிறது என்பதே பரிணாமம்.

பரிணாமம் என்பது இருவிதங்களில் உணரப் படுகிறது.

a). உரு அமைப்பு மாற்றம்[Morphologcal change]:சிறுபரிணாமம் 

b). சிற்றினமாதல்[Speciation]:ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிதல்

பெரும் பரிணாமம்=1+2

Macro evolution=Morphologcal change+Speciation


சராசரியாக சிற்றினமாதல்[speciation] நிகழும் கால அளவு சுமார் 30இலட்சம் ஆண்டுகள். ஆகவே நம் வாழ்வில் நேரடியாக இதனை பரிசோதித்து பார்த்தல் என்பது இயலா காரியம்.



Current estimates from the fossil record and measured mutational rates place the time required for full reproductive isolation in the wild at ~3 million years on average (Futuyma 1998, p. 510). Consequently, observation of speciation in nature should be a possible but rare phenomenon. However, evolutionary rates in laboratory organisms can be much more rapid than rates inferred from the fossil record, so it is still possible that speciation may be observed in common lab organisms (Gingerich 1983).

இப்போதைய கணக்கீடுகளின் படி சிறுமாற்ற வீதம் ஆனது,இயற்கையில் முழு இனவிருத்தி விலக்கம்[reproduction isolation] ஏற்பட சராசரியாக 30 இலட்சம் ஆண்டுகள் தேவைப்படுகிறது[ஃபட்டைமா 1998 ,பக்கம் 510].இருந்தாலும் இயற்கையில் சிற்றினமாதல் என்னும் நிகழ்வு சாத்தியம் என்றாலும் அபூர்வமே.ஆய்வ‌கங்களில் இனவிருத்தி வீதம் படிம வரலாற்று ,சிற்றினமாதல் வீதத்தை விட‌,அதிகரிக்க்க வழிவகை செய்ய இயலும் என்பதால்  இதனை ஆய்வகங்களில் உறுதிப் படுத்த இயலும் (Gingerich 1983).


**
2.பரிணாம நிகழ்வினால் உயிர் அமைப்புக்களின் ஒவ்வொரு நிலையிலும்[உயிரின குழுக்கள்,தனிப்பட்ட உயிரிகள்,மூலக்கூறுகள், ஜீனோம்,... மற்றும் ப்ரோட்டீன்] பல்வேறு வகைகள் உருவாகி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. 

பரிணாமம் என்பது ஒரு மூல உயிரியில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான பலவகை உயிரிகள் தோன்றும் என்பதனை நடைமுறைவாழ்வில் உணர முடியும்.

ஓநாய், நரி, நாய் ஆகியவை ஒரே மூல உயிரிகளில் இருந்து தோன்றியவை. நாயும் ஒருவகை ஓநாய்தான்,ஆனால் எத்த‌னை வகையான நாய்கள்,ஓநாய்கள்,நரிகள் இருக்கின்றன??இப்படிப் பல வகைகள் இருப்பதை நாம் உணர்ந்தாலும் இவை அனைத்தும் ஒரே மூல உயிரியில் இருந்து தோன்றியது என்பதை உருஅமைப்பு ஒப்பீடு, ஜீனோம் ஒப்பீட்டில் நெருங்கி இருப்பதை வைத்து உறுதி செய்கிறார்கள்.

சிறுத்தை, புலி,சிங்கம்,பூனை,காட்டுப் பூனை சொல்லலாம்.

குதிரை,கழுதை,கோவேறு கழுதை, வரிக்குதிரை,..இன்னொரு எ.கா.

விலங்கினங்களின் வரிசைப்படுத்தல் என்பதே ஒருவகை பரிணாம நிரூபணமே. உரு அமைப்பில் ஒத்த இனங்களின் ஜீனோம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் என்ற கணிப்பு மிக சரியாக பொருந்துகிறது.ஒரு மூலத்தில் இருந்து கிளைத்து தழைப்பது நன்கு உணர முடியும்.பெரும்பாலும் மூல உயிரியின் படிமம் இந்த உயிரிகளின் உருஅமைப்புக்கு ஒத்து இருக்கும்.

இவை உயிரிக்கும் மட்டும் அல்ல,உயிர்க் குழு உள்ளேயும் பல வகைகள்,மூலக்கூறுகள்,ஜீனோம் என ஒவ்வொன்றிலும் இருப்பதும் பரிணாம நிரூபணமே.

பல விடயங்களில் ஒத்து ,சில விடயங்களில் மாற்றங்கள் கொண்ட பலவகை உயிரிகள்,மூலக்கூறுகள்,ஜீனோம் இருப்பதால் இவற்றுக்கு ஒரே மூலம் என எப்படி சொல்ல முடியும்? என்பது விதண்டாவாதமே!!!

ஏன் எனில் இதற்கு மாற்றாக இயற்கைக்கு உட்பட்ட எந்தக் கொள்கையும் இதனை விள்க்க இயலாது.வேறு வாய்ப்பு இல்லை.
**
3.பூமியில் 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பொது நுண் உயிர் முன்னோரில் இருந்தே அனைத்து உயிரி,தாவர வகைகளும் கிளைத்து தழைத்தன.பலமுறை நிகழ்ந்த சிற்றினமாதல்[Speciation: ஒரு உயிரி பல உயிரிகளாக பிரிதல்],உயிரிகளில் ஏற்படும் வித்தியாச விலகல்[divergence of life] இதனை தோற்றுவித்தது என்பதை உயிர் வேதியியல், உரு அமைப்பு ஒப்பீடு மற்றும் ஜீனோம் ஒப்பீடுகளில் இருந்து உறுதி செய்கிறோம்.

 இப்படி பல்வேறு வகை உயிரிகளின் பொது முன்னார் ஒரு உயிரி என்னும் கருத்தை விரிவுபடுத்தி, அனைத்து உயிரிகளும் 380 கோடி வருட முந்தைய நுண்ணுயிர்' ல் இருந்தே கிளைத்து தழைத்தன என்பதே பரிணாமத்தின் முக்கிய கோட்பாடு ஆகும்[Common ancestry]. அனைத்து உயிர்களின் ஜீனோமும் ஒரே மாதிரியான வேதிப் பொருள்களை கொண்டு இருப்பது இதனை உறுதிப் படுத்துகிறது.வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதாலும் ,மறைந்த உயிரிகளின் ஜீனோம் நம்மிடம் இல்லை என்பதாலும் மட்டுமே பல் புதிர்களை அவிழ்க்க சிரமாக இருக்கிறது. இதுவரை பூமியில் தோன்றிய அனைத்து உயிரிகளின் ஜீனோம் மட்டும் இருப்பின் பரிணாம தொடர்புகளை மிக நுட்பமாக விளக்கி இருக்க முடியும்.

சரி முதல் நுண் உயிரி எப்படி இருந்தது, எப்படி வந்தது என்பது சிக்கலான  தீர்க்கப்படாத விடயமே. இதற்கு பல கருதுகோள்கள் உண்டு என்றாலும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஒரு நுண்ணுயிரி செல்லில், இயற்கை ஜீனோமுக்கு பதில், செயற்கை ஜீனோமை வைத்து ,புதிய நுண்ணுயிர் உருவாக்கும் அளவிற்கு முன்னேறி இருப்பதால், இன்னும் சாதனை தொடரும் என்வே எதிர் நோக்கலாம்.

Synthetic Genome+Natural Cell=New Life?

Craig Venter has taken yet another step towards his goal of creating synthetic life forms. He’s synthesized the genome of a microbe and then implanted that piece of DNA into a DNA-free cell of another species. And that…that thing…can grow and divide. It’s hard to say whether this is “life from scratch,” because the boundary between such a thing and ordinary life (and non-life) is actually blurry. For example, you could say that this is still a nature hybrid, because its DNA is based on the sequence of an existing species of bacteria. If Venter made up a sequence from scratch, maybe we’d have crossed to a new terrain.

**
4. ஒரு சமீப கால பொது முன்னோரில் இருந்து தோன்றிய உயிரிகளின் உரு அமைப்பு, ஜீனோம் அமைப்பு அதிகம் நெருங்கியதாக இருக்கும்.இந்த ஒப்பீடுகள்,ஆய்வுகள் மூலம், பரிணாம வரலாறு, வாழும் உயிரிகள், மறைந்த உயிரிகளின் படிம வரலாறு மூலம் கட்டமைக்கப் படுகிறது.இப்போது காணப்படும் உயிரிகளின் வகைப்படுத்தல் ஒழுங்குகள், சிற்றினமாதல், உயிரின மறைவு[Extintion] ஆகியவற்றால் ஏற்பட்டது.

இரு ஒத்த உரு அமைப்பு கொண்ட வாழும் உயிரிகளின் ஜீனோம் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவை பொது முன்னோரில் இருந்து எப்போது பிரிந்த்ன என்பதையும் கண்க்கிட முடியும். இது ஜீனோம் கடிகாரம் எனப்படுகிறது. இந்த கண்கீட்டு காலம் அருகில் இவற்றின் பொது மூல முன்னோரின் படிமம் இருக்கும்.கால‌ வித்தியாசம் வந்தால் ஜீனோம் கணக்கீட்டை விட படிம காலமே ஆதாரப் பூர்வமாக எடுக்கப்படுகிறது.

இந்த கணக்கீடுகள் கொண்டு பரிணாம மரம் கட்டமைக்கப் பட்டது. ஒவ்வொரு வாழும் உயிரியின் வரலாற்றை, முதல் நுண்ணுயிரி வரை அறிய முடியும்.

பரிணாமம் என்பது உயிரின 380 கோடி வருட வரலாறு. இதற்கு பல சான்றுகள் உண்டு.ஆய்வ‌கங்களில் பரிணாம பரிசோதனைகளில் ஜீனொம் மாற்றம் உரு அமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவது நன்கு ஆவணப் படுத்தப் பட்டு உள்ளது.

http://genome.cshlp.org/content/17/6/682.full
Figure 1.

பெரும்பரிணாமம் என்ப்படும் ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிவது மட்டும் அதிக காலம் எடுக்கும் செயல் என்பதால்  நுண்ணுயுரி,பழ ஈக்களில் நடைபெறுகிறது. பல சான்றுகள் இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே உள்ளன. பெரும்பரிணாம பரிசோதனை சான்றுகள் பற்றியே மீண்டும் இத்தொடரில் எழுதுவோம்.

இப்பதிவில் இதோடு நிறுத்துவோம். பரிணாமம் பற்றிய எளிய விளக்கம், ஆதரவு சான்றுகள் பற்றி மட்டுமே பார்த்து இருக்கிறோம். எதிரான வாதங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நண்பர்கள் இந்த பதிவு தொடர்பாக மட்டுமே கேள்வி கேட்க வேண்டுகிறோம்.
பரிணாமத்தின் எதிரான ஆதாரமாக வைக்கப் படும் விடயங்கள் மேல் அடுத்த பதிவில் விவாதிப்போம்.




நன்றி!!!

"மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை


"





வணக்கம் நண்பர்களே,

நகைச்சுவைப் பதிவு இடுவதில் வஹாபிகளுக்கு நிகர் எவரும் இல்லை என்பதை மீண்டும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ம(னி)தாபிமானி என்ப்படும் பதிவர் நிரூபித்து உள்ளார்.


அறிவியல் என்பது என்ன என்பதை உணர மாட்டோம், பரிணாம அறிவியலை மறுத்தாலும் , அது குரானைப் பொய்யாக்கும் என்றால் பம்மி விடுவது, ஒரு உயிரினம் என்பதை எப்படி வரையறுப்பது என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பது என பல்விதங்களில் நகைச்சுவை காட்டி வரும் வஹாபி சகோ ஆஜிக் அகமதின் லேட்டஸ்ட் பதிவிற்கு மறுப்பு சொல்ல நாத்திகர் என்னும் இடத்தில் வஹாபிகள் என்ப் போட்டால் போதுமானது.

நாம் மூமின்களிலும் எதார்த்த சூழல் சிந்திக்கும் சூஃபிக்கள் இருப்பதால் வஹாபிகளின் வரட்டுத்தன பிரச்சாரம் மட்டுமே எதிர்த்து வாதம் வைக்கிறோம்.

சவுதி அரச மதம் வஹாபியியத்தை விளம்பரம் செய்ய அங்கிருந்து முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என அறிவோம்.

சவுதி அரசை விமர்சிக்கும் எந்த செயலும் கடுமையாக ஒடுக்கப்படும் என்பதும்,சில தினங்களுக்கு முன்பு சில் ஜனநாயகப் போராளி அரபு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு 10 வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 

Saudi Arabia jails two prominent activists

Founding members of the banned Saudi Civil and Political Rights Association are sentenced to 10 years in prison.

A Saudi Arabian court has sentenced two prominent political and human rights activists to at least 10 years in prison for offences that included sedition and giving inaccurate information to foreign media.
Mohammed Fahd al-Qahtani and Abdullah Hamad are founding members of the banned Saudi Civil and Political Rights Association, known as Acpra, that documents human rights abuses.
Qahtani was sentenced to 10 years. Hamad was told he must complete the remaining six years of a previous jail term for his political activities and serve an additional five years.
They will remain in detention until a judge rules on their appeal next month.

பரம்பரை அரச உரிமை என்பது மதத்தின் படி தவறானது என சொல்லும் தைரியம் உள்ளவர்கள் சவுதியில் இருக்க முடியாது. இதுதான் வஹாபியியம்.

சரி பதிவுக்கு செல்வோம்.

 **

சவுதி அரசின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. விவாதம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இதற்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதில் இருந்து இந்த விவாதத்திற்கு இருந்த ஆர்வத்தை அறிந்துக்கொள்ளலாம். 

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் (IERA) சார்பில் ஹம்ஸா ஆண்ட்ரியசும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட இயற்பியல் ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 


மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் திருப்பி திருப்பி அதுதான் இது, யூதன் இட்டுக் கட்டியது  என்னும்வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள்.

இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ். 

"science doesn't require you to be an Muslim, I know very good scientists who aren't Muslims - 

அறிவியல் நீங்கள் முஸ்லிமாக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் முஸ்லிம்கள் இல்லை" 

அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்றோம்? அறிவியல் என்பது ஆன்மீகத்திற்கான‌ வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் முஸ்லிம் அல்லாதவர்களே. 

இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி. 
**

நாம் மாற்றிய சேர்த்த சொற்களை சிவப்பில் காட்டி இருக்கிறோம். மதவாதிகள் மத(ட) புத்தகத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு ஏமாற்று வேலை என்றாலும், அறிவியல் மதத்தை விட உயர்ந்தது என்பதால்  , அறிவியல் போல் மத புத்தகம் எனக் காட்டி இணை வைத்தாலும், காஃபிர் என்னும் சொல்லை நாத்திகர் என மொழி ஏமாற்றம் செய்தாலும் வஹாபியியத்தின் பருப்பு தமிழகத்தில் வேகாது!!.


அறிவியல் என்றால் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம்

நாத்திகம் என்றால் சான்று இல்லாத விடயத்தை ஏற்க மறுத்தல்!!!

இன்னும் இங்கே படியுங்கள்!!!

நாத்திகம் ஆத்திகம் ஒரு எளிய விளக்கம்



மதம் நிரூபிக்க அகழ்வாய்வு,மொழியியல் சான்றுகள் வேண்டும். அப்படி எதுவுமே எந்த மதத்திற்கும்,குறிப்பாக‌ வஹாபியியத்திற்கு இல்லை என கூறுகிறோம்.மதத்திற்கு வரலாற்று சான்றுகள் இருந்தால் பதிவுகள் இட்டு விவாதிக்க வேண்டுகிறோம்.

மதப்பிரிவினரிடையே கூட , இறைவனுக்கு உருவம் உண்டா?, மதபுத்தக எழுத்து பிரதிகளில் தவறு உண்டா என்னும் அடிப்படைப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து இல்லை.

முதலில் ஒருமித்த மத புத்தக[குரான்] மொழியாக்கம், ஒரே விளக்கம், துணைப்புத்தகங்ளில்[ஹதித்] மிச்சம் மீதி வடிகட்டிய தகவல்களில் ஒருமித்து கருத்து ஏற்பட்டால் மட்டுமே இஸ்லாம் ஒரே மதம் என ஏற்க முடியும். ஆகவே இஸ்லாம் என்பதை ஒரு குழு மதப் பிரிவுகள், மூலம் ஒன்றா என பரிணாம பாணியில் வினவுகிறோம். 

**
அறிவியலாள‌ர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே சீர்தூக்கி பார்த்து சான்றுகளின் அடிப்படையில் ஏற்கப்படும்.அறிவியலாளர்களின் ஆய்வு மட்டுமே பரிசோதித்து ஏற்று கற்க மட்டுமே.அது தவிர்த்து அறிவியலாளர்களின் செயல்களைப் பின்பற்றுதல் முட்டாள்தனம்.

இராக்கெட் விட நல்ல நேரம் பார்த்து இராக்கெட் விடும் விஞ்ஞானிகளும் உண்டு.இயற்கைப் பாழாக்கும் தொழில் நுடபம், மனித சமூக அழிக்கும் ஆயுதங்களை வடிவமைக்கும் விஞானிகளும் உண்டு.

அறிவியல் என்பது சமூக நலனுக்கு,பாம‌ரனுக்கும் பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.

அது தவிர 'அஆஇஈ' செய்தார் எல்லோரும் செய்வோம் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.எங்கள் 'அஆஇஈ' செய்தார்,அதனைக் கேள்வி கேட்காமல் ,பின்பற்றுவோம், பின்பற்ற முடியாத அருவறுப்புகளை வேண்டா வெறுப்பாக நியாயப் படுத்துவோம் என்பதுதானே வஹாபியம்.

உலகில் அதிக விஞ்ஞானிகள் யூதர்களே,அப்படி எனில் அது மட்டுமே சரியான மதமா??
ஆகவே அறிவியல் ஆய்வாளர்களின்  இறை நம்பிக்கை சார்ந்து , மதம் நாடுவது என்றால் யூதம் மட்டுமே சரி!!

வஹாபிகள் சிந்திக்க மாட்டார்களா??!!!.

**

பரிணாமம் உண்மை என்றால் வஹாபியியம் பொய்யாகி விடும் என்பதால் , அதனைக் காப்பாற்ற ஆஸிக் அகமது  மீண்டும் பரிணாம எதிர்ப்பு  பதிவு மட்டுமே அடிக்கடி எழுத வேண்டுகிறோம்.ஹி ஹி நாமும் மறுப்பு உடனே  இடுவோம்.

 மனிதாபிமானிக்கு கேள்விகள்.

1. ஆத்திகர் அனைவரும் சுவனம் போவாரா?

2. குரானில் பல் இடங்களில் வசை பாடப்பட்டு கரித்து கொட்டபடும் [அரபி சொல்] காஃபிர் என்பதன் பொருள் நாத்திகரா?

3.இஸ்லாமின் எந்தப் பிரிவு சரியானது? சரியான பிரிவு அல்லாதவர்கள் ஆத்திகரா,காஃபிரா,நாத்திகரா?

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தும் வழக்கம் போல் சொல்லாமல் போனால் கிடைக்கும் பலனின் எண்ணிக்கை[ ஹி ஹி அவங்கதான்} ஒன்று குறைந்து விடும்.

சகோதரி ரிசான நஃபீக்கின் கொடூர தண்டனைக்கு எழுந்த எதிர்ப்பு கண்டு பயந்த  காட்டு மிராண்டி சவுதி அரசு ,பொது இடத்தில் மக்கள் கூட்டம் முன் தலை வெட்டும் தண்டனைக்கு பதில் தூக்கு, துப்பாக்கியால் சுடுதல் என தனியான இடத்தில் தண்டனை நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது என்பது நல்ல செய்தி

Saudis 'consider nullifying' public beheading

Saudi daily Al-Watan says that a ministerial committee is considering fatal shootings as an alternative.



A ministerial committee is looking into formally dropping public beheadings as a method of execution in Saudi Arabia, a local newspaper has reported.
The authoritative daily Al-Watan said in its Sunday edition that the ministerial committee was considering fatal shootings as an alternative.
There was no official confirmation immediately available of the newspaper's report.


மாற்றம் ஒன்றே மாறாதது,சூழல் பொறுத்து மாற மறுக்கும் எதுவும் அழியும் என்பதே பரிணாம விதி!!



மதவாதிகள் விவாதத்தில் சுத்தி வளைத்து மூக்கைத் தொடு என்னும் திருப்பி திருப்பி சொல்லும் ஒரே வாதம்[ circular reasoning ] தவிர்த்து எதையும் சொல்ல மாட்டார்கள் . அது பற்றி கொஞ்சம் அறியுங்கள்!!!

Circular reasoning (also known as paradoxical thinking[citation needed] or circular logic), is alogical fallacy in which "the reasoner begins with what he or she is trying to end up with".[1] The individual components of a circular argument will sometimes be logically valid because if the premises are true, the conclusion must be true, and will not lack relevance. Circular logic cannot prove a conclusion because, if the conclusion is doubted, the premise which leads to it will also be doubted.[2]Begging the question is a form of circular reasoning.[3]


இந்த புத்தகம் சொல்வதால் , கடவுள் உண்மை.

சரி புத்தகம் எப்படி உண்மை ஆகும்?

ஏன் எனில் அது கடவுளிடம் இருந்து வந்தது!! ஹி ஹி


This is circular argument!!!!






நாம் நம் மத்வாத சகோக்கள் யாரையாவது முன்னிலைப் படுத்தினால், அவர் பரிணாம கொள்கை மீது என்ன கருத்து கொண்டு இருக்கிறார் என கண்டறிவோம். அந்தவகையில் வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கை உடைய ஆத்திகர்களை நாம் கன்டு கொள்வது இல்லை.

ஹம்ஸாவின் பரிணாமம் சார் கருத்து , அது அறிவியலில் ஒருமித்து சான்றளிக்கப்ப்ட்டு ஏற்கப் பட்ட கொள்கை என் ஏற்பதனைக் காட்டுகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களுக்கு சரியாக புரிய வைக்க முயற்சிக்க‌வில்லை என மட்டுமே கருத்து தெரிவிக்கிறார்.  



Over the past few decades there has been a growing discourse on science, evolution and its compatibility with Divine revelation. This discourse can be summarised in the following way: the theory of evolution has been established as a scientific fact therefore a believer in a particular revealed text, such as the Qur’an, must reconcile evolution with their holy book. If there is no hope for reconciliation there are three main outcomes: the religious text is discarded, evolution is renounced, or a hope for a better understanding of the religious text and evolution in the future. However, in this growing discussion there is a hidden premise. This premise is that science produces certainty, evolution is fact and science is the only way to establish or verify truth claims. This premise is assumed in the popular discussion amongst many religious people, popular scientists and even the media, and by not bringing this premise to the forefront of the debate many Muslims (and fellow theists) have been left confused and disheartened.

...
Since revealed texts are certain and science cannot produce certain knowledge, revealed texts will always supersede science if there is a need for reconciliation and if there are irreconcilable differences. For the Muslim, this revealed text is the Qur’an, and this text can be established as a Divine book outside of the method and philosophy of science using deductive arguments.

அப்புறம் சமர் சால்ட் அடித்து, குரான் இறைவன் வேதம் என்பதால், அவசியம் என்றால் மட்டும் , பரிணாம கொள்கையோடு சமரசம் செய்து கொள்வோம் என் சொல்வது நகைச்சுவை. அதாவது குரான் சொல்வது பரிணாமத்துக்கு முரண்,ஆகவே பரிணாமம் தவறு என்று சொல்ல துணிவு இல்லாமல் ஹம்சா நழுவுகிறார்.


அதாவது பரிணாமத்தை ஏற்றே ஆக வேண்டிய சூழல் வந்தால், ஹி ஹி குரானின் பொருளை வழக்கம் போல் மாற்றி அதுதான் இது என  காட்டுவோம் என்பதை மார்க்க சிந்த்னையில் உரைக்கும் ஹம்சா நன்றாக கல்லா கட்ட வாழ்த்துகிறோம்.