பெண் குலத்தை இழிவு படுத்துவதில் மகாபாரதமும், காவியங்களும் சிறிதும் பின் வாங்கவில்லைகவில்லை.
புரபசர் இந்திரா எம்.ஏ., (சாஸ்திர காவ்ய திரு.வித்யாலங்கார் எம்.ஓ.எல்., முதலிய பட்டம் பெற்றவர்) எழுதிய பழைய இந்தியாவில் பெண்கள் நிலை என்னும் புத்தகத்தில் 11-ஆம் பக்கம் முதல் 26- ஆம் பக்கத்திற்குள் உள்ளவற்றிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கப் பட்டதாகும்.
அதாவது அவர்கள் பெண்களைப் பற்றி இந்து மத ஆதாரங்களான வேத சாஸ்திரங்கள் புராண இதிகாசங்கள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுவதைத் தொகுத்துக் குறிப்பிட்டிருப்பதாவது:
1- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 8-3-17) பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்
2- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 10-95-10)பெண்கள் நட்பு நீடித்ததல்ல. அவர்கள் கழுதைப்புலியின் தன்மையுடையவர்கள்.
3- இந்திரன் ரிஷிகள் பிராத்திப்பது: (ரிக்வேதம் - 4-17-18)இந்திரன் நாம் விரும்பும் மனைவிகளைக் கொடுப்பவன்.
4- (ரிக்வேதம் - 5-31-3)இந்திரா! உன்னை விட மேலானவன் வேறு யாருமில்லை. ஏனெனில் மனைவியில்லாதவருக்கு மனைவிகளை- காதல் கிழத்திகளைத் தருகிறாய்.
5- இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை – 149.(பேராசியர் லட்விக் கூறுகிறார். இவைகளுக்கு வேதங்களில் ஆதாரம் இருக்கிறது என்று)வேதகாலத்தில் போரிலே வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கும் பரிசுப் பொருள்களில் ஒன்றாகப் பெண்கள் கருதப்படட்டு வந்திருக்கிறார்கள்
6- வெற்றிக்குப் பிறகு வெற்றியாளர்களால் பெண்கள் கணவரிடமிருந்து பலாத்தாரமாகப் பிரிக்கப்பட்டுக் கொள்ளைப் பொருள்களைப் போல் பங்கு போடப்படுவார்கள்.
7- (ரிக்வேதம் - 8-48-88) ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
8- வேதங்களின் காலத்தில் பெண்கள் ஆண்களின் உடைமைப் போல் சொத்துபோல் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். - (பெரியார்)
9- இந்திரன் சொல்லியிருக்கிறார்: (ரிக்வேதம் - 7-2-63) பொதுவான கணவன் ஒருவன் தன் காதல் கிழத்திகளை வைத்திருப்பது போல் தான் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
10- இதே கொள்கையைத் தான் பின்னால் சட்டம் செய்தவர்களும் காவியங்கள் இயற்றியவர்களும் கையாண்டிருக்கிறார்கள். - (பெரியார்)
11- உடைமைகளில் ஒன்றான பெண்களை மனிதன் கொள்ள வேண்டும்.
12-யக்ஞய வல்கியர் என்பவரால் வகுக்கப்பட்ட தர்ம நீதி:மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டு வைக்காதே.
13-பீஸ்மர் கூறிய வாக்கு:வேதசாஸ்திரி கட்டளைப் படி புருஷர்கள் தங்கள் மனைவிகளை பூர்வீக புண்ணியத்தினால் அல்லது தெய்வ சங்கற்பத்தாலோ தானடைந்த பொருளாகவே கருத வேண்டும்.
14- பெண்கள் தங்கள் கவுரவத்தைப் படிப்படியாக இழந்து ஆண்களின் போகப் பொருளாக மாறி வந்ததை வேதங்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.(பெரியார்)
15- அதர்வண வேதம் - (14-1-52) ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத் தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும், கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.
16- மேலும் அவள் (கணவனால்) அவனுடைய போஷ்யா அல்லது அடிமை கீழ்ப்பட்டவள் என்று அழைக்கப்பட்டவள்.
17- பிற்காலத்திலும் பெண்கள் போகத்திற்குரியவர்களாக மாத்திரம் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். - (பெரியார்)
18- உபநிஷத்தர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்: மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே காமவேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள்.
19- பிண் ஹதரரயாக: (1-4.) மனிதன் தனக்கு உதவிக்காக நீண்ட நாள் கஷ்டப்பட்டான். கடைசியாகத் தன்னுடைய இச்சைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தனக்கு இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை எல்லா இன்பத்தையும் தரக்கூடிய ஒன்றை மனைவி என்ற உருவத்தில் பெற்றான்.
20- பின்னால் தர்ம சாஸ்திரங்களில் பெண்களின் நிலை திகைப்பை உண்டு பண்ணும் ஷீண நிலைமைக்குப் போய் விட்டதைக் காணலாம்.- (பெரியார்)
21- அறிவுக்குப் பொருந்தாத முறையில் அவர்கள் மீது இழிவுகள் வசைகள் கற்பிக்கப்படிருக்கின்றன. இவைகளுக்கு அளவேயில்லை.
22- பெண் குலத்தை இழிவு படுத்துவதில் மகாபாரதமும், காவியங்களும் சிறிதும் பின் வாங்கவில்லை.
23- பெண்கள் தட்டு முட்டுச் சாமான்களைப் போல் கருதப்படுவதால் அவர்களைப் பற்றி அதிகமாகக் கவலை கொள்ளத் தேவையில்லை. (இதற்கு ஆதாரங்கள் பல உண்டு)
24- மனு சொல்லுவதைக் கவனியுங்கள். இந்த உலகில் ஆண்கள் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால் தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள்.
25- மேற்படி: 2-24.இந்த விதத்தில் படித்த ஆண்களையும் பெண்கள் வசியப்படுத்தித் தப்பான வழியில் செலுத்தி இச்சைக்கும் போகத்திற்கும் அடிமையாக்கி விடுவார்கள்.
26- மனு பெண்களுக்குப் போகத்தில் ஆசை, நகையில் ஆசை, இருப்பில் ஆசை, என்பவைகளைக் கற்பித்ததோடு களங்கமுள்ள சிந்தையையும், சினத்தையும் , அயோக்கியத்தனத்தையும், வஞ்சகத்தையும், துர்நடத்தையும் பெண்களின் இலட்சணமாக வருணித்திருக்கிறார். - (பெரியார்)
27- மஹாபாரதம் அனுஷாசனம் - (38-12-25-26) பாம்பு விஷத்தைக் கக்குவது போல் பெண்ணினத்தின் மீது இப்பெருங்காவியம் இழிவைக் கக்குகிறது- கொட்டுகிறது.
28- பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை.
29- எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டு வரும் எந்த அளவிலும், நீரினாலும், கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைக்காரன் சமாதானம் அடைவதில்லை. இதுப்போலப் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விட மாட்டார்கள்.
30-மகாபாரதம். நாசகாலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்பு, நெருப்பு- ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்.
31- இதிகாசங்கள் காலத்தில் இருந்த சாதுவாகிய மன்னன் யுதிஷ்டனும் பெண்களின் இயல்பை மிகக் கேவலமாக வெறுக்கத் தகுந்த முறையில் கண்டித்திருக்கிறான். - (பெரியார்)
32- மகாபாரதம் அனுஷன் பர்வதம்: (39-8) பெண்ணின் அறிவு கண்டுபிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது.
33- பெண்களின் அறிவைப் பார்த்துத் தான் பிரகஸ்பதியும் இதர பெரும் அறிவாளிகளும் அறிவுக்கான கொள்கைகளை வகுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. (மேற்படி: 39-40)
34- பெண்ணை விடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்புப் போன்றவள். பெண் மயக்கும் (வஞ்சகி) குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரே பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.
35- பெண்கள் பயங்கரமானவர்கள். கோடிய சக்திகளை உடையவர்கள். தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்கமாட்டார்கள். விரும்பமாட்டார்கள். (மேற்படி: 43-23)36- உயிரைக் கொல்லும் அதர்வண மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். (மேற்படி: 43-24)
37- ஒருவன் கூடி வாழ ஒத்துக் கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக் கொண்டு முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவிருப்பார்கள்.(மேற்படி:43-24)
38- அவர்கள் ஒர் ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்.(மேற்படி: 43-24)
39- ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக் கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய (நல்லதன்மை) ஒன்னுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களிடம் சம்பந்தத்தை வைத்துக் கொள்ளவேண்டும். அந்தப்படிக்கில்லாமல் வேறு விதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்துப் போவான்.(மேற்படி: 43-24)40- எல்லா மனிதர்களும் கடவுளாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள் பாட்டன் இவர்கள் மனதிலுள்ளதை அறிந்து மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களை சிருஷ்டி செய்தார்.
41- ஆகவே பெண்கள் மனித சமூதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
42- பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால் அவர்கள் நிலையற்ற ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது.
43- இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும் அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையினாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும், இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள்.(மனு:9-15)
44- இராமாயணம் ஆரண்ய காண்டம்: 13-5-6)உலகம் தோன்றியது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலைத் தண்ணீர் போலச் சலனப் புத்தியுடையவர்கள். வாள் போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்.
45- இராமாயணத்திற்குப் பிந்திய காவியங்களில்: பெண்களின் முகங்கள் பூக்களைப் போன்றவர்கள் அவர்கள் மொழிகள் தேன் போன்றவைகள். அவர்களது உள்ளம் சவரக் கத்தியின் கூர்மையைப் போல் கெடுதி செய்யக் கூடியது. அவர்களது உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர் யாருமில்லை.
46- ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவர் யாருமிருக்க முடியாது.
47- ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொல்லத் தயங்கமாட்டாள்.
48- பாவத ஸ்கந்தம்: (4-14. 42-8. 4-36) பெண்கள் இரக்கமில்லாமல் புலிக்கு ஒப்பிடப் பட்டிருக்கிறார்கள். கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இழிவு படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
49- பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்.
50- சுக்ரா: (3-163)பெண் இனத்திற்கே கீழ்கண்ட 8- குணங்களும் உரிமையானவைகள்:பொய், நிலையில்லாமை, வஞ்சகம், மூடத்தனம், பேராசை, மாசு, கொடுமை, துடுக்குத்தனம்.
51- அர்த்த சாஸ்திரம்: (3-3-50) பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டின் மீது அடிகள் கொடுக்கலாம்.
52- ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளாப்பினாலோ அடிக்கலாம்.
53- சமூதாயத்திற்கு அவர்கள் கேடானவர்கள் அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் கொன்று விடலாம்.
54- உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார்.
55- உலகம் தூங்கக் கூடாது என்று விரும்பியதற்காகக் காவ்ய மாதா என்ற பெண் விஷ்ணு கையினால் கொல்லப்பட்டாள்.
56- இராமாயணம்: (25-17) ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்கள், சடங்குகளை தடுத்ததற்காகத் தாரகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்.
57- குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதன்று வருந்துவதற்குரியது வியாகூலப்பட வேண்டியது.
58- அதர்வண வேதத்தில் ஆண் மகவை விரும்புறதேயல்லாது பெண் மகவை விரும்புகிறதில்லை.
59- அதர்வண வேதம்: (6-2-3) பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும். இங்கே ஆண் மகவு பிறக்கட்டும்.
60- மேற்படி: (8-6-25) புங்கபா கடவுளை வணங்குவதன் மூலம் ஆண்மகவே பிறக்கட்டும். பெண் மகவு பிறக்க வேண்டாம்.
61- காதபாசன் ஹிதா: (27-ஏ) பெண் சாக வேண்டியவர்கள்.
62- ஆனால் இது பழக்கத்தில் மகளைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் தொடர்பற்றதாக இறந்தவர்களாகக் கருதப்படுகிறது.
63- ரிக் வேதத்தைக் குறித்து எழுதிய பிரபல ஆசிரியரான டாக்டர். அபினாஷ் சந்திரதாஸ் கூறுகிறார்: யுத்தத்தில் எதிரியிடமிருந்து பிடிபட்ட பெண்களோ அல்லது விவாக சம்பந்தமாகக் கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எவரையும் மனிதப்பிறவி என்று கருதாமல் தட்டு முட்டுச் சாமான்களைப் போலவேநடத்த வேண்டும்.
64- மேற்படி:இதை இதிகாச காலத்திலும் காணலாம். அதாவது பஞ்ச பாண்டவர்களின் மனைவியாகிய துரௌபதியை யுதிஷ்டிரான் சகுனியடன் சூதாடும் போது பணயமாக வைத்தான்.
65- இராமாயணம் ஆசிரியர்:யாரும் கேட்காமலே தனது மனைவியையும், தான் மதிக்கும் எல்லாவற்றையும், இராஜ்ய உரிமையையும் , தாமாகவே பரதனும் அதுவும் சந்தோஷமாகக் கொடுப்பதாக இராமன் வாயால் சொல்லுவதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.
66- அந்தாளில் மனைவியைச் சாமானை விட மேலாக மதிக்கவில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணங்கள் வேண்டும்? - (பெரியார்)
67- ரிக்வேதம்: (10-31-24)ஒரு சூதாடுபவன் தனது மனைவியை விட்டுப் பிரிய மனம் தாங்காமல் வருந்துகிறான். தனது மனைவி அழகாயிருப்பதனால் மட்டுமல்ல, அவள் உற்ற தோழியாகவும் சிறந்த ஊழியளாகவுமிருப்பதனால்.
68- ரிக்வேதம்: (10-31-24)சூதாட்டத்தில் தனது கவனம் அதிகமாக ஈடுபட்டிருக்கையில் மற்றவர்கள் தங்கள் கைகளைத் தனது மனைவியின் மீது போடுகிறார்கள் என்று அந்தச் சூதாடி பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகிறான்.
69- மேற்படிஅந்த நாளில் (பண்டைய நாளில்) மனைவியின் நிலைமை அடிமையின் நிலைமையை விட நல்ல நிலைமையே என்று சொல்லுவதற்கில்லை.
70- பெண்ணின் நேசம் ஒரு பொழுதும் நிலையானதன்று. அவளுடைய மனம் கழுதை போன்றது.இது மதத்தில் ஆரிய மதத்தில் அவர்களது வேத சாஸ்திர புராண இதிகாசத்தில் காணப்படுபவைகளிலிருந்து பொறுக்கியெடுத்த சில குறிப்புகளாகும் இவை.
இனியும் இதுப்போலவும் இன்னும் மோசமாகவும், எவ்வளவோ குறிப்புகள் வேறு பல ஆதாரங்களில் இருக்கின்றன.(தந்தை பெரியார் அவர்கள் சித்திர புத்திரன் என்ற புனை பெயரில் தொகுத்து வெளியிடப்பட்டது 30-03-1950 விடுதலை இதழில் வெளிவந்தது) NANDRI TO :>> http://thamilachi.blogspot.com/SOURCE:>> இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை!----------------------------------------பெண்களை இழிவுபடுத்தும் புராணக் குப்பைகளை காலட்சேபம் செய்து கொண்டுமுள்ள ஆர்.எஸ்.எஸ். குட்டிகளுக்கு பெண் விடுதலை பற்றி பேச துளியேனும் அருகதை உண்டா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக