புதன், 9 நவம்பர், 2011

மத வெறி உடைய கடவுள் நம்பிக்கையாளனை விட வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகனாக இருப்பதே நல்லது. அவனால் யாருக்கும் ஆபத்து இல்லை

இன்னொருவரும் நீங்கள் வழிபடும் முறையிலேயே வழிபட வேண்டும் என்று ஏன்  எதிர்பார்க்கிறீர்கள்? பிறர் வேறு முறையிலே வழி பட்டால் ஏன் உங்களால் அதை சகித்துக் கொள்ள இயலவில்லை?
உருவமற்ற நிலையில் தான்  கடவுளை  வணங்க வேண்டும் என்று ஏன் நிர்ப்பந்தப் படுத்துகிறீர்கள்?  
 இப்போது முக்கிய விடயம் என்னவென்றால் நீங்கள் பிற மதங்களுடன் சகிப்புத் தன்மையைக் கடைப் பிடிக்க தயாராக இருக்கிறீர்களா என்பதுதான்.
உங்களுக்கு உருவமற்ற கோட்பாட்டின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறதோ, அதே அளவுக்கு கடவுள் உருவமும் எடுக்கக் கூடியவர் என்கிற நம்பிக்கை இந்துக்களுக்கு இருக்கிறது.
உங்களை உருவங்களை வணங்க சொல்லி கட்டாயப் படுத்தவில்லை.
 ஆனால் பிற மதத்தினர் உருவங்களை வணங்குவதை உங்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை.
இன்னும் புத்த மதம் இருக்கிறது. புத்த மதம் கடவுள் என்று யாரும் இல்லை என்கிற கோட்பாட்டை தைரியமாக சொல்லுகிறது. புத்த மதம் இந்த உலகில் முக்கிய மதம் என்பதைப் பலரும் வசதியாக  மறந்து விடுகின்றனர். சீன அரசு தடை இல்லா மத வழிப்பாட்டை அனுமதித்தால் உலகில் அதிகம் பேரால் பின்பற்றப் படும் மதமாக பவுத்தமாக இருந்தால் அதில் ஆச்சரியமில்லை.
இவ்வாறு வெவ்வேறு  கோட்பாடுகளை உடைய பல மதங்கள் உள்ளன.
அதனால் தான் சொல்கிறோம், பிற மதத்தினர் எங்கள் கோட்பாட்டுக்கு வந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய வேண்டுமா? அது நாகரீகமா?
முன்பெல்லாம் இந்துக்கள் தங்களின் கடவுளை இகழ்ந்தால் சும்மா போவார்கள், இப்ப அவர்களும் சிலிர்த்து சீர ஆரம்பித்து விட்டார்கள்.
இருப்பது இரண்டே வழி. ஒன்று நீங்கள் கடவுளாக வணங்குபவரை நீங்கள் எப்படி மதிக்கிரீர்களோ அதே போல தான் மற்ற மதத்தவரும் அவர்கள் கடவுளாக வணங்குபவரை மதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி நல்லிணக்கத்தில் இணைந்து வாழ்வது.
இல்லை என்றால் சகிப்புத் தன்மை இன்மையால் உருவான வெறுப்புணர்ச்சியால் உந்தப் பட்டு மோதல் போக்கை கடைப் பிடிப்பது!
இரண்டும் இல்லை என்றால் அமைதியாக வாழ்ந்து அவரவர் வேலையை செய்து பொறுப்புள்ள நாகரிக மனிதனாக  வாழ்வது. இவர்கள் கடவுள், மதம் இது பற்றி எல்லாம் அதிகமாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்
மத வெறி உடைய கடவுள் நம்பிக்கையாளனை விட வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகனாக இருப்பதே நல்லது!அவனால் யாருக்கும் ஆபத்து இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக