ஞாயிறு, 6 நவம்பர், 2011

இஸ்லாமில்(ஆப்ரஹாமிய மதங்களில்) அடிமை முறை!



    
   அடிமை முறை என்பது இருப்பதிலேயே கொடுரமான ஒன்றாகும், சுத்த காட்டுமிராண்டித்தனம். சக மனிதனை மிருகம் போல் நடத்தும் முறை தான் அடிமை முறையாகும். அவர்களுக்கு எந்த ஒரு சுதந்திரமும் கொடுக்காமல் நினைத்தபடி வேலை வாங்குவதும்,அவர்களை அடிப்பதும், அடிமைப்பெண்களுடன் உடலுறவு (கற்பழிப்பு) கொள்வதும் ,அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அடிமையாக வைத்திருப்பதும் ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் அடிமை என்பது வீட்டில் உள்ள ஒரு பொருள் மாதிரி அல்லது வீட்டில் வளர்க்கும் ஆடு,மாடு மாதிரி.  பொருள்களுக்கு உணர்ச்சிகள் கிடையாது அதே போல் இந்த அடிமைகளும் பார்க்கப்பட்டனர்.  இது பாலைவன மக்களின் / பாலைவன கடவுள்களின் ஒரு கொள்கையாகும்.  இந்தமாதிரியான ஒரு கடவுள் கொள்கைகளை வைத்திருப்பது தான் கிறிஸ்துவ மதமும் இஸ்லாமும் ஆகும்.  ஆனால் அவர்களைக்கேட்டால் அது தான் புனிதமானது, அது கடவுளின் அருள்வாக்கு என்று கூறுவார்கள்.  




   இந்த அகிலத்தையே படைத்த ஆண்டவன் , அனைத்து உயிர்களையும் படைத்தவன் இந்த மாதிரி கருத்துக்களை சொல்வான் என்று முட்டாள்கள் தான் நம்பமுடியும்.  அது கடவுளின் வார்த்தையாக இருக்கமுடியாது. அது பாலைவன மக்கள் , வறண்ட பூமியில் தங்களது இனத்தை காப்பாற்றிக்கொள்ள , மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ,பாலைவனத்தில் தன்னைத்தானே கடவுளின் தூதுவர்களாக கூறிக்கொண்ட காட்டுமிராண்டிகள் சொன்னது. 

இப்போ கடவுள் சொன்னதாக மக்கள் நம்பும் “புனித நூல்”களில் இருப்பதைப்பார்ப்போம்.

பைபிள் . 
        Exodus - 21 ,20-21

20. ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், 


பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.                               
21. ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், 
அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.
             
    ஆதாவது அடிமையை அடிக்கலாம். எப்படி ? அந்த அடிமை சாகாமல் குத்துயிரும் குலைஉயிருமாய் இருக்குமாறு அடித்த பின்பு அந்த அடிமை 1 நாள் உயிரோடு இருந்தால் அடித்தவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விடலாம். (கடவுளின் வாக்கு !!!!)

         குரான்.2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்

             ஆதாவது ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் அடிமையை கொன்றூவிட்டால் , அந்த முஸ்லிம் ,முதலாவது முஸ்லிமின் அடிமையை கொல்லவேண்டும்..  இது எப்படி இருக்கு என்றால்.  என்வீட்டில் உள்ள டீவியை அடுத்தவன் உடைத்தால் ,அவன் வீட்டில் உள்ள டீவியை நான் உடைக்கவேண்டும்... அந்த அடிமையின் உயிருக்கு அவ்வளவுதான் மதிப்பு. (கடவுளின் வாக்கு !!!!)

அப்போ இது யாருடைய வாக்கு? 
               பகவத் கீதை - அத்தியாயம் 6 ஸ்லோகம் 29-30
                   ஸர்வபூ⁴தஸ்த²மாத்மாநம் ஸர்வபூ⁴தாநி சாத்மநி| 
                    ஈக்ஷதே யோக³யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத³ர்ஸ²ந​: ||6-29||
                 யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா 
              உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா 
              உயிர்களுமிருப்பதையும்    காணுகிறான்.



                யோ மாம் பஸ்²யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்²யதி|
                தஸ்யாஹம் ந ப்ரணஸ்²யாமி ஸ ச மே ந ப்ரணஸ்²யதி ||6-30||

              எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே 
              காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.

      ஆதாவது கடவுளை உணர்ந்தவன் அனைத்து உயிர்களிடத்திலும் இறைவனைக்காண்கிறான்.
இந்த ஒரு ஸ்லோகம் போதும் இந்த உலகம் அமைதியாக இருக்க.  எவன் ஒருவன் மற்ற அனைத்து உயிர்களையும் (வெள்ளைக்காரர்கள், கருப்பு இனத்தவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்,ஆடு,மாடு ,பன்றி மற்றும் தாவரங்கள்)  தன் உயிர்போல் பாவிப்பவனே யோகியாவான்..... (இது கடவுளின் வாக்காக இருக்கமுடியுமா?)

எப்போ மக்கள் அனைவரும் இந்த பாலைவன உளறல்களை துறந்து மனிதர்கள் ஆகிறார்களோ அப்போது தான் இந்த உலகம் அமைதி அடையும். 


பின் குறிப்பு....  என்னடா இந்த தமிழன் ஒரு தலைப்பட்சமாக எழுதியுள்ளானே, இரண்டு கெட்ட வசனங்களை பாலைவன் கோட்பாட்டில் இருந்து எடுத்து . ஒரு நல்ல கருத்தை  கீதையில் இருந்து எடுத்து காட்டி இந்த இரண்டையும் ஒப்பிட்டு சொல்கிறானே என்று நாத்திகர்களுக்கும், மாற்று மதத்தவர்களுக்கும் தோன்றும்....... 
ஹிந்து தர்மத்தில் கடவுள் வேறுபாடு காட்டவில்லை..... ,அனைவரும் ஒரு நாள் அந்த பரபிரம்மத்தை அடைவார்கள். இது அவரவர் செய்யும் கருமத்தை பொருத்தே அதன் காலம் முடிவாகிறது.  அதன் பின் ஒவ்வொருவரும் நடந்து கொண்ட முறையில் இருந்து வர்னாசர்மம் தோன்றியது(கடவுள் நம் தலையில் எழுதிவைக்கவில்லை.. மனிதனே அவனின் வாழ்வை,கர்மாவை தீர்மானிக்கிறான்,கிறிஸ்தவர்கள் வேதத்தை எவ்வளவு திரித்து கூறீனாலும் உண்மை இது தான்.). நமது முனிவர்கள் அனேகம் பேர் பிராமணனாக பிறக்கவில்லை . அவர்களின் செயல் மூலம் அவர்கள் அந்த நிலைக்கு வந்தார்கள். ராவணன் பிறப்பால் பிராமண குலம், வேதம் அனைத்தையும் அறிந்தவன், ஆனால் செய்கையால் அசுரனாக மாறினான். பின்பு ஷத்திரியனான ராமன் மூலம் மரணம் அடைந்தான். சூத்திரர்கள் என்பவர்கள் வேதம் படிக்க கூடாது என்பது அல்ல.. வேதம் படிகாதவன் தான் சூத்திரன் ஆவான். (இப்போழுது பிராமணன் என்பவனே கிடையாது), இதைத்தான் காலம் காலமாக சனாதன தர்மம் கூறிவருகிறது. ஆனால் நமது மக்கள் ஜாதியைப்பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்

      இந்து மதத்தில் ஜாதி பேதமில்லை... இதை ஆதி சங்கரரின் ஒரு வாழ்க்கை நிகழ்வில் இருந்து அறிய்லாம். காசியில் சங்கரர் நடந்து வரும் போது ஒரு புலையன் எதிரே வருவான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் இருந்தது.  குளித்து பலநாள் ஆனதால் நெடியடித்தது. மாமிசத்தைச் சுவைத்தபடி சங்கரரை நெருங்கினான். இதைக் கண்ட சங்கரர், விலகிப்போ என்று கூறுவார். அவன் உடனே எதை விலகி போக சொல்கிறீர்கள். இந்த உடலையா அல்லது ஆன்மாவையா ? என்று கேட்டான். அதைக்கேட்டதும் சங்கரர் அந்த புலையனின் காலில் விழுந்து அவனை வணங்கி கூறியது தான் "மநிஷா பஞ்சகம்'. அப்போது அங்கிருந்த புலையன், காசிவிஸ்வநாதராக மாறி காட்சியளித்தார்(என்பது ஐதீகம்). இந்நிகழ்ச்சியின் மூலம், ஜாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார்(அல்லது சனாதன தர்மம் உலகத்திற்கு கூறுவது).


பகவத் கீதை 18-54 
பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், 
எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

பகவத் கீதை 18-61 
அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

“He who sees all beings
In his own self
And finds the reflection
Of his own self in all beings
Never looks down upon any body.”
                    - Yajur Veda 40-6
(தயவு செய்து கிறிஸ்துவ ஆங்கிலேய மொழிபெயர்ப்பை பார்க்கவேண்டாம்) 

1 கருத்து:

  1. (2:178) மேலே உள்ள வசனத்தில் சொல்லப்பட்டது நீ முட்டாள் தனமாக விளங்கியது போல் அல்ல, மாறாக ஒரு அடிமை ஒரு அடிமையை கொன்றால் அந்த அடிமையை தான் கொல்ல வேண்டும் மாறாக அவனின் எசமானனை அல்ல

    பதிலளிநீக்கு