ஞாயிறு, 6 நவம்பர், 2011

குரான் வசனங்கள் முகமதுவின் உளறலே - 2



குரான் வசனங்கள் முகமது தானாகவே கடவுள் பெயரால் இட்டு கட்டி சொன்னது என்பதை குரானை முழுவதுமாக படித்தாலே தெரியும். அது இறைவனிடம் இருந்து வந்திருந்தால் வசனங்களை மாற்றி மாற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  ஏனென்றால் கடவுளுக்கு எதிர்காலமும் தெரியுமாதலால் முதல் முறையே சொல்ல வேண்டிய வசனத்தை சரியாக சொல்லமுடியும். மனிதன் தான் அதை மாத்தி மாத்தி சொல்ல வேண்டியிருக்கும். அனுபவம் மூலமாக உணர்ந்து திருத்திக்கொள்ளுதல்).  

 இந்த பதிவு அல்லாவின் ஞானமான மதுபானத்தைப்பற்றியது.



கீழே உள்ளது முஸ்லிம் தளத்தில் இருந்து எடுத்தது.... 


The prohibition of alcohol occurred in stages and [after] many incidents, for they [the Arabs] used to love to drink it. The first [verse] revealed regarding the matter of alcohol was: "They ask you about alcohol and gambling. Say: 'There is great sin in both although there is some benefit for people…" [Baqarah:219] i.e. [benefit] in their trade. Hence, when this verse was revealed, some people left [alcohol] saying, "We have no need for that in which there is great sin," and some did not leave it saying, "We take [from its] benefit and we leave its sin." Thereafter, the verse was revealed: "Do not approach prayer while you are drunk…" [Nisa:43] So some people left it saying, "We have no need for that which distracts us from the prayer," and some drank it outside the times of prayer until the verse was revealed:   "O you who believe! Alcohol, gambling, [sacrificing for] idols, and divining of arrows are only an abomination [of Satan's work…]" [Maidah:90-91]So [alcohol] became prohibited for them such that some of them said, "Allah did not prohibit anything as strictly as alcohol."


2:219(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.

அதாவது முஸ்லிம்களின் கூற்று படி அல்லாவுக்கு மேலே உள்ள வசனத்தை உளறியபோது . 
”மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு” இந்த பகுதியை மக்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு குடிப்பதை தொடர்வார்கள் என்று தெரியாதா?.      

4:43நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

  அல்லா மேலெ சொன்னது தவறு என்றுனுர்ந்து மேலும் ஒரு வசனத்தை கூறுகிறார்.  இந்த வசனம் அதைவிட கேலிக்கூத்தாக முடிந்தது.   
நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;”  என்று கூறியபோது, அல்லா நினைத்தது மக்கள் குடியை விட்டு விட்டு  தொழுகைக்கு வருவார்கள் என்று. அனால் மக்களோ மிகவும் புத்திசாலி , குடித்துவிட்டு தொழுகைக்கு வராமல் இருந்துடன். அல்லாவின்(முகமதுவின்)  திட்டத்துக்கே உறுவிளைவிக்க பார்த்தார்கள்...   அனேகமாக கீழே உள்ள 5.91 வசனம்  கடைசியாக குடுத்துள்ள நபி மொழிக்கு பின் வந்ததாக இருக்கும். 

5:90ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

5:91நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்லா இந்த வசனத்தை கூறும் போது முன்பு உளறி எதிர்மறையாக அனுபவித்த காரணத்தால் பாலைவன உளறல்கள் தத்துவமான ஷைத்தானை உள்ளே புகுத்தி  மக்களை பயமுறுத்தி மதுபானத்தை நிறுத்தச்சொல்கிறார்.

இந்த கடைசி வசனம் வருவதற்கு முன் நடந்ததாக நான் நினைக்கும் நபிமொழி...



2375. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். 
பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், 'ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த, பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள்" என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரண்டு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை கண்டேன். உடனே, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி(ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தம் கோபத்தை நபி(ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தங்களின் பார்வையை உயர்த்தி, 'நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே?' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல) அவர்கள், அவர்களைவிட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது. 
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார். 
நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்களிடம், 'திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா(ரலி)) எடுத்தார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துச் சென்றார்" என்று கூறினார். 

3091. அலீ(ரலி) அறிவித்தார். 
பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி(ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து 'இத்கிர்' புல்லைக் கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும் தீனிப் பைகள், மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களும் அன்சாரி ஒருவரின் அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது திரும்பி வந்தேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் இந்த (அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்த விடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், 'இதையெல்லாம் செய்தவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில் தான் இருக்கிறார்" என்று பதிலளித்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களிடம் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் செயலால் நான் அடைந்த வேதனை என் முகத்தில் தென்பட, அதைப் புரிந்து கொண்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கரமான) ஒரு நாளை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. ஹம்ஸா என் இரண்டு ஒட்டகங்களையும் தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) கிழித்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் நண்பர்கள் குழுவுடன் இருக்கிறார்" என்று சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் அங்கி ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி அதையணிந்து நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் இப்னு ஹாரிஸாவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஜா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபிக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்கே அவர்கள் (அனைவரும்) மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரண்டு கண்களும் சிவந்திருக்க, அவர் போதையுற்று விட்டிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதரைப் பார்த்துப் பார்வையை உயர்த்தி அவர்களின் இரண்டு முழங்கால்களையும் பார்த்தார்; பிறகு பார்வையை உயர்த்தி, அவர்களின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு, 'நீங்கள் என் தந்தையின் அடிமைகள் தாமே?' என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, தாம் வந்த வழியே (திரும்பாமல்) அப்படியே பின் வாங்கிச் சென்றார்கள்.நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம். 
Volume :3 Book :57


இந்த வசங்களை முகமது சொன்னதாக எடுத்துக்கொண்டு பார்த்தால் உண்மை புரியும்.  இந்த ஹதிஸ் காட்சியை கற்பனை செய்து பார்த்தால் காமெடியாக இருக்கும். முகமது என்னவோ தான் பெரிய இது மாதிரி போய் கேட்டால் அனைவரும் பயந்துபோய் விடுவார்கள் என்று நினைத்து அங்கே போனால் ,ஹம்ஸா நீ என் தந்தையின் அடிமை தானே என்று கூற ... (குடித்தால் போதையில் உளறுவதைவிட, உண்மையை  தைரியமாக கூறுவார்கள், இங்கே உள்ளது ஹம்ஸாமின் அடிமனதில் உள்ள எண்ணமே, அதாவது முகமதின் அல்லாவின் தூதன் நாடகத்தை அவர் நம்பவில்லை. ஆனாலும் தலை கழுத்தில் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் மற்ற சமயங்களில் முகமதுக்கு மதிப்பு குடுப்பது மாதிரி நடித்திருக்க வேண்டும்).
இதனால் முகமது உணர்ந்தது என்னவாக இருக்கும் ... இப்படியே விட்டால் ஒரு பய முகமதையும்/அல்லாவையும் மதித்து ஜிகாதுக்கு வரமாட்டார்கள், முகமது சொல்வதை கேட்க மாட்டார்கள், இஸ்லாமும் பரவமுடியாது . எனவே குடிப்பதை நிறுத்தவேண்டுமானால் அல்லாவின் பெயரால் அதை தடை செய்யவேண்டும்...(அல்லா தான் முகமதின் பாக்கெட்டில் எப்பவும் இருப்பவர் ஆயிற்றே).

ஆனால் முஸ்லிம்களிடம் கேட்டால் அல்லாவுக்கு எதை எப்பொழுது செய்வது என்று தெரியும் என்று கூறுவார்கள், அதாவது முதலிலே கூறினால் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள், அதனால் படிப்படியாக இதை செய்தார் என்று எதையாவது உளறுவார்கள்.. அல்லா என்பவன் எல்லாம் வல்ல இறைவனாக இருந்தால் . சரியான வசனத்தை கூறி ஒரு நொடியில் அனைவரின் மனதையும் மாற்றி இருக்கலாமே?
அதுமட்டுமல்ல ,அல்லா மதுவை விட மோசமான போதை மருந்து பழக்கத்தை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.(முஸ்லிம்களிடம் கேட்டால் இந்தஅது மதுபானத்தை மட்டும் குறிக்கவில்லை போதைவஸ்துக்கள் அனைத்தையும் குறிக்கும் என்று சப்பைக்கட்டுவார்கள்), புகையிலை பழக்கம் புற்று நோயை குடுக்கும் என்று அல்லாவுக்கு தெரியாதா அதை ஏன் தடை செய்யவில்லை. அல்லாவுக்கு மக்களின் நலன் பற்றி அக்கறை இருந்திருந்தால் இது எல்லாவற்றையும் அல்லவா கூறி இருக்கவேண்டும்.... ஏன் இல்லை என்ற கேள்விக்கு ஒரே பதில் தான் .. அந்த காலத்தில் இது எல்லாம் அரேபியாவில் இல்லை அதானால் முகமதுவுக்கு(அல்லாவுக்கு) தெரியாது.
முஸ்லிம்களே , உங்களின் மூளையை உபயோகியுங்கள் அதற்கு தான் கடவுள்(அல்லா அல்ல) அதை கொடுத்துள்ளான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக