இந்த பதிவு எழுத காரணமாக இருந்தது உஜிலா தேவி தளத்தில் பேய்களைப்பற்றிய பதிவு வந்த போது . அப்துல் ரஹமான் என்னும் நண்பர் , இது சுத்த மூட நம்பிக்கை. //ஆகவே, மனோதத்துவ ரீதியாக, இல்லாத ஒன்றை இருக்கிறது என்று வாதிடுபவர்கள், ஒருவிதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களே!!! மேலும், அதற்கு கையுண்டு - காலுண்டு என்று வாதிடுபவர்கள் எந்த வித மனநிலையில் இருப்பவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை..//
நான் பேய்கள் இருக்கிறது, இல்லை என்ற வாதத்துக்கு வரவில்லை.இந்துக்களிடையே மூட நம்பிக்கை இல்லை என்றும் சொல்லவில்லை.ஆனால் இவர் கூறுவது இஸ்லாமில் எந்த ஒரு மூட நம்பிக்கையும் இல்லாத மாதிரியும் , பேயை நம்பும் ஹிந்துகள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றும்..../
அதனால் அந்த பின்னூட்டத்தில் நான் அவர்களின் நம்பிக்கையை பற்றி எழுதினேன்.
கீழே உள்ளது முஸ்லிம்கள் நம்புவது...
சவம் அடக்கம் செய்யப்பட்டவுடன் நீல நிறக் கண்களுடைய இரண்டு கருப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள். அவர்களில் ஒருவர் முன்கர், மற்றொருவர் நகீர். அவ்விருவரும் (அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து) ‘இந்த மனிதர் பற்றி நீர் என்ன கூறிக் கொண்டிருந்தீர்?’ என்று கேட்பார்கள்.’இவர் அல்லாஹ்வின் அடியார், அவனது தூதர், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்’ என்று தான் கூறிக் கொண்டிருந்ததாகக் கூறுவார். அதற்கு அவ்விருவரும் ‘இவ்வாறே நீர் கூறிவந்தீர் என்பதை நாம் அறிவோம்’ என்று கூறுவர். பின்னர் அவரது அடக்கத் தலம் எழுபதுக்கு எழுபது முழமாக விரிவு படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்றப் படும். பிறகு அவரிடம் ‘நீர் உறங்குவீராக’ என்று கூறப்படும். அப்பேது அவர் ‘நான் என் குடும்பத்தினரிடம் சென்று இதைக் கூறவேண்டும்’ என்பார். அப்போது அவ்விருவரும் ‘நெருக்கமான குடும்பத்தினர் தவிர மற்றவர் எழுப்பமுடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை உறங்குவீராக!’ என்று கூறுவர். அவன் முனாஃபிக்காக இருந்தால் (மேற்கண்ட அதே கேள்விக்கு விடையளிக்கும்போது) ‘மக்கள் சொல்வதைச் செவியுற்று அதையே நானும் கூறினேன். (வேறெதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அதற்கு அவ்விருவரும் ‘நீ அவ்வாறுதான் கூறி வந்தாய் என்பதை நாம் அறிவோம்’ என்று கூறுவர். பூமியை நோக்கி ‘இவரை நெருக்கு’ என்று கூறப்படும். அது அவனை நெருக்கும். அதனால் அவனது விலா எலும்புகள் இடம் மாறும். அவனை அல்லாஹ் அங்கிருந்து எழுப்பும் வரை அதிலேயே வேதனை செய்யப் பட்டுக் கொண்டிருப்பான்.’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி 991..
புகாரி ஹதீஸ்
1374. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்..."அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்...
நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் 'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப்படும்போது 'எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான். உடனே 'நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை" என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்."
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். Volume :2 Book :23
1372. மஸ்ரூக் அறிவித்தார்.
இறந்தவுடன் அந்த மலக்குகள் அல்லாவைப்பற்றி மட்டும் கேட்டவில்லை ..அவர்கள் கேட்பது முகமதுவைப்பற்றி. நீங்கள் அல்லாவை மட்டும் நம்பினால் பயனில்லை. முகமது அல்லாவின் தூதன் என்பதையும் நம்பவேண்டும். இல்லை என்றால் சவப்பெட்டி அந்த இறந்து போனவரின் உடலை நசுக்கி ,அதன் எலும்புகள் நொருக்கப்பட்டு மறுமை நாள் வரையில் வேதனையில் இருக்கும். இறந்து போனவர் முஸ்லிமாக இருந்தால் அந்த சவப்பெட்டி 70x70 முழமாக விரிவுபடுத்தப்பட்டு அதில் விளக்கு ஏற்றப்படுமாம் அதில் அந்த சவம் புது மணமகன் மாதிரி உறங்குமாம்.
இது இஸ்லாமிய பகுத்தறிவு!!!.
1. இறந்து போன காஃபிரின் உடலுக்கு வலி தெரியும்.(அப்படியா?)
2. இறந்து போன முஸ்லிமின் உடல் 70x70 முழம் அகலமுள்ள சவப்பெட்டியில் வெளிச்சத்தில் ஆனந்தமாக தூங்கும். (இதனால் என்ன பயன்)
இதைவிட மூடத்தனமான நம்பிக்கை இருக்கமுடியாது. இதை எல்லா முஸ்லிம்களும் நம்புகிறார்கள்.
இதை வைத்து ஈமெயில் ஒன்று சுற்றிக்கொண்டுவேறு இருக்கிறது. அதை உண்மை என்று நம்பும் முஸ்லிம் கும்பலும் இருக்கிறது. கீழே படத்தில் உள்ளது கல்லறையில் நசுக்கப்பட்ட உடல் !!!
அந்த கதையை கீழே உள்ள இனைப்பில் பார்க்கலாம்.
http://www.paklinks.com/gs/religion-and-scripture/235528-sign-of-allah-torture-in-the-grave.html
அது சரி இந்துக்களான நாம் தான் அல்லாவுக்கே அல்வா குடுத்து வருகிறோமே. அதாவது . இறந்தவரை எரித்துவிட்டு சாம்பலையும் நீரில் கரைத்துவிடுகிறோமே. அப்போ அல்லா என்ன செய்வான்!!!???. இவர்களை எப்படி தண்டிப்பது என்று பேந்த பேந்த முழித்துக்கொண்டு இருப்பான்.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அல்லாவுக்கும் அவன் தூதனுக்கும் இந்துக்கள் இருப்பதும் தெரியாது , அவர்கள் இறந்தவர்களை எரிப்பது பற்றியும் தெரியாது... இதில் வேற குரான் என்பது உலகத்துக்கேவாம்!.
ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது" எனக் கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'.
1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.
Volume :2 Book :23
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக