ஞாயிறு, 6 நவம்பர், 2011

ஹிந்து சாமியார்களின் தவறான வழிகாட்டுதல்கள்!!




 இந்த பதிவில் ஹிந்து சாமியார்களைப்பற்றி பார்ப்போம்.
 ஹிந்து முட்டாள்கள்!!!  என்ற பதிவில் sivamjothi28 என்ற நண்பர் குடுத்துள்ள பின்னூட்டத்தில் இருந்த இணைப்பில் போய் பார்த்தேன்.  அதில் ஞான குரு என்று கூறிக்கொள்ளும் திரு சிவ செல்வராஜ் என்பவர் அவரின் ஞான வ்ழியை அருளி இருக்கின்றார்.  அவரின் அருள் மொழியில் சிலவற்றைப்பார்ப்போம்.


   தாயின் கருவிலே உருவாகிறது பிண்டம். மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது.    
அப்படியா? அப்போ 3 மாசத்துக்குள்ளே கருவைகலைத்தால் பாவமில்லை இல்லையா?!.  3வது வாரத்திலேயே இருதயம் துடிக்க ஆரம்பித்து விடுகிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது.

சரி அவரின் விஞ்ஞான அறிவைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நான் எதற்காக இதை ஒரு பதிவாகவே போட நினைத்தேனோ, அந்த கருத்துக்கு போவோம். கீழே உள்ளது Saka-Kalvi(light-Body activation) இவர் குடுத்துள்ள அருள் மொழியில் இருந்து எடுத்தது.

குமரிமாவட்டம் தக்கலையில் அறிதுயில் கொண்டிருக்கும் அல்லாவின் குழந்தை பீர்முகமது ஒர் ஞானக்கடல் ! அவர் உரைத்த ஞானமோ ஈடு இணையற்றது. அருட்ப்பா உரைத்த வள்ளல் இராமலிங்கரும் அதைத்தான் ஆமோதித்தார். பீரப்பா உரைத்த மெய்ஞனத்தை அவர் அருளாலே அடியேன் உரை எழுதி வெளியிட்டு பாக்கியம் பெற்றேன்.

  பைபிள் கூறும் ஞானத்தை படித்து உணர பிதாவின் சுதன் யேசுபிரான் அருள் புரிந்தார். அருள்வாய் யேசுவே என பணிந்தேன். கருணைக்கடல் ஈசா நபி அருள் மழை பொழிந்தார். யேசு பிரான் அருளிய ஞானமும் அடியேனின் நூற்களில் வெளியிட அவர் அருளே காரணமாயிற்று..

யேசு கிறிஸ்து மட்டுமல்ல முகமது நபியும் , புத்தரும் குருநானக்கும் மற்றும் உலகில் உள்ள எல்லா ஞானிகளும் உபதேசித்த உண்மை இதுவே.

யேசு பெருமான் கூறிய பிதா!, நபி பெருமானர் கூறிய அல்லா! வள்ளல்பெருமான் கூறிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தானே!

இது போதும் என்று நினைக்கிறேன். இவருக்கு அல்லாவைப்பற்றியும் தெரியவில்லை , யேசுவின் பிதாவைப்பற்றியும் தெரியவில்லை, யேசு என்பதே கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒன்று. அவரின் போதனைகள் 3ஆம் நூற்றாண்டில் தான் யேசுவின் பெயரில் உருவாக்கப்பட்டது. 
(இணைப்பு-> jesus never existed).
இது மட்டுமல்ல அந்த பாலைவன உளறல்களுக்கும் , பாரதத்தில் இருக்கும் தத்துவங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உளறல் எல்லாம், தான் மட்டும் சரி மற்றவை எல்லாம் தவறு என்று போதிப்பவை. அடுத்தவர்களை எல்லாம் தன் மதத்தை பின்பற்று என்று வற்புறுத்துபவை. என்னை வணங்கு ,என்னை அடிபணி இல்லாவிடில் முடிவில்லாத நரக நெருப்பில்தள்ளிவிடுவேன் என்று சொல்பவை. மேலும் குரான் , பைபிள் (பழைய கோட்பாடு) எடுத்து படித்து பாருங்கள். வாந்தி தான் வரும் . அந்த அளவுக்கு வன்முறை இருக்கும். மேலும் மறுபிறவி என்னும் கோட்பாடு இங்கே மட்டும் தான் இருக்கிறது. பாலைவன உளறலில் இது கிடையாது.  இந்த மாதிரியான் முரண்பாடான கருத்துக்களை உடைய பாலைவன உளறலும் , இந்து மத தத்துவங்களும் ஒன்றாக முடியாது.
 நமது நாட்டில் இல்லாத தத்துவங்களா, நமது நாட்டில் இல்லாத ஆன்மீக வாதிகளா? இதை யெல்லாம் விட்டுவிட்டு ,இந்த ஆள் வியாபாரத்துக்காக இந்த மாதிரி செய்து கொண்டு இருக்கிறாரா? 


 மற்றவர்கள் நம்மை மதம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாதிரியான ஆட்களே போதும் ஹிந்துகளை மதம் மாற்ற.யேசு நல்லது சொல்லிருக்கிறார், முகமது நல்லது சொல்லி இருக்கிறார் என்று இந்த மாதிரியான ஆட்கள் உளறும் போது, மதம் மாற்றுவதையே தொழிலாக கொண்டுள்ளவர்கள், இந்த பாலைவன உளறல்கள் பற்றி தெரியாமல் இருக்கும் பாமர மக்களை எளிதாக மதம் மாற்றிவிடமுடியும். அதனால் இந்த மாதிரியான் ஆட்களிடம் இருந்து தள்ளி இருப்பதே நலம். பின்னூட்டமிட்ட நபர் என்னிடம் இருந்து இந்த மாதிரியான் கருத்து வரும் என்று எதிர்பார்திருக்க மாட்டார். பல ஹிந்துகளுக்கு நான் எழுதி இருக்கும் இந்த பதிவு பிடிக்காமல் போகலாம். ஆனாலும் உண்மையை சொல்லவேண்டுமல்லவா!  உங்களின் கருத்துக்களை சொல்லவும் நண்பர்களே.  நான் சொல்வது சரிதானே.

பின்குறிப்பு:- கடவுளே சிவன் ரூபத்தில் வந்து , அல்லாவும்,பிதாவும், நானும் ஒன்று தான் என்று கூறினாலும் , காமெடி செய்யாதீர்கள் இறைவனே என்று கூறுவேனே ஒழிய, சிவன் சொல்வதை நம்பமாட்டேன்.  ஏனென்றால் எனக்கு அல்லாவைப்பற்றியும் தெரியும் , முகமதுவைப்பற்றியும் தெரியும். பிதாவைப்பற்றியும் தெரியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக