ஞாயிறு, 6 நவம்பர், 2011

முகமது & அடிமை பெண் மரியா.





33:50நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.




33:51அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.




66:1நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.


66:2அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.


66:3மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.


66:4நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.


66:5அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக