ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

முகம்மதின் மரணத் தருவாயில் நடந்த குழப்பங்கள்


ph moh's death
 இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 57
தவறாக அன்றி ஒரு மூஃமின் பிரிதொரு மூஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல .. .. .. எவனேனும் ஒருவன் ஒரு மூஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும்என்றென்றும் அங்கேயே தங்குவான் .. .. .. குரான் 4:92, 93

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம்ஏனெனில் உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்திவிடக்கூடும்அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்புஹாரி: 7072

ஒருவர் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமலிருப்பது அனுமதிக்கப்பட்டதன்று .. .. .. புஹாரி 6077

மேலுள்ள ஹதீஸ்களும் குரான் வசனமும் தெளிவாக கூறுவது என்னவென்றால் முஸ்லீம்கள் தங்களுக்குள் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பது தான்இந்த அறிவுரைகள் முகம்மது வாழ்ந்த அந்தக் காலத்திலிருந்து இன்னும் மனிதன் வாழப்போகும் அத்தனை காலம் வரை உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்ஆனால் இந்த வழிகாட்டல்களை முகம்மதுடன் வாழ்ந்தமுகம்மதுவுக்கு உற்ற உறவினர்களாக இருந்த,முகம்மதுவுக்கு நெருங்கிய தளபதிகளாக இருந்தமுகம்மது யாரை சொர்க்க வாசிகள் என முன்னறிவிப்பு செய்தாரோ அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டார்கள் என்றால் அதை உங்களால் நம்ப முடியுமாஆனால்நடந்தது அது தான்இதை எப்படி புரிந்து கொள்வதுமுகம்மது கூறிய கொள்கையை முகம்மதுக்கு நெருக்கமாக உடன் வாழ்ந்தவர்களே செயல்படுத்தாமல் அலட்சியப் படுத்தி விட்டார்கள் என்றாமுகம்மது இறந்த பிறகு அவர்களால் கூட முகம்மதின் கொள்கை செயல்படுத்த முடியாததாக இருந்தது என்றா?அல்லது முகம்மதின் கொள்கை காலத்துக்கு ஒவ்வாததாக இருந்தது என்றாஎப்படியானாலும் முகம்மதின் காலத்திலேயே அவரின் கொள்கைகளுக்குஅவரின் சொல்லுக்கு மதிப்பில்லாமல் போனது என்பது தான் உண்மை.

முகம்மதுக்குப் பிறகு ஆட்சி புறிந்த நான்கு கலீபாக்களில் அபூபக்கர் தவிர ஏனைய மூன்று கலீபக்களான உமர்உஸ்மான், அலி ஆகியோர்கள் கொல்லப்பட்டுத் தான் இறந்திருக்கிறார்கள்அந்த ஆட்சித் தலைவர்களைக் கொன்றவர்கள் மத ரீதியில் எதிரிகளான யூதர்களோ,வணக்க வழிபாட்டு ரீதியில் எதிரிகளான மக்கத்து குரைஷிகளோ அல்லர்.எந்த முஸ்லீம்கள் முகம்மதையும் அவரின் கொள்கையையும் தம் உயிரினும் மேலானதாக ஏற்றுக் கொண்டார்களோ அந்த முஸ்லீம்கள்.இனி உலகம் அழியும் வரை பிறக்கும் அனைவருக்கும் முகம்மதே அழகிய முன்மாதிரி என்று வியந்து போற்றினார்களோ அந்த முஸ்லீம்கள்.அவ்வளவு ஏன்தனக்குப் பிறகுதன்னுடைய அரசியல் வாரிசாக முகம்மதால் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்கரிடமே முகம்மதின் இரத்த வாரிசான முகம்மதின் நேசத்துக்குறிய மகள் ஃபாத்திமா பகைமை கொண்டு இறந்து போகும் வரை பேசாமலிருந்தார் என்று ஒரு ஹதீஸ் தெரிவிக்கிறது.

ஃபாத்திமாவுக்கு அபூபக்கர்இறைத்தூதர் அவர்கள் எங்கள் சொத்துக்கு வாரிசாக யாரும் வர முடியாதுநாங்கள் விட்டுச் செல்பவை எல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள்இதனால் பாத்திமா கோபமுற்று அபூபக்கர் அவர்களிடம் பேசுவதை விட்டு விட்டார்கள்அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்கர் அவர்களிடம் பேசாமலேயே இருந்துவிட்டார்கள் .. .. .. புஹாரி3093

தனக்குப் பின்னால் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என முகம்மது விரும்பினாரோ அதன்படி அவருக்கு நெருக்கமானவர்களே இருக்கவில்லைசொத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஒருவர் மீது ஒருவர் போர் தொடுத்துக் கொண்டார்கள்முகம்மது இறந்தவுடன் அன்சாரிகளும் குரைஷிகளும் அதிகாரத்திற்காக மோதிக் கொண்டது புஹாரி 6830 ல் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது கலீபாவான உஸ்மான் கொல்லப்பட்டுவிட அதற்கு காரணமானவர்களை தண்டிப்பேன் என்று கூறி ஆட்சியேறிய நான்காவது கலீபாவான அலீஉஸ்மானை கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லைஇதைக் கண்டித்து முகம்மதின் நேசத்திற்குறிய மனைவி ஆய்ஷா ஆட்சித்தலைவரான அலீயின் மீது போர் தொடுத்தார்ஆய்ஷாவின் ஒட்டகத்தை குறிவைத்து நடத்தபட்ட போர் என்பதால் ஒட்டகப் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்தப் போரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் மடிந்து போனதாக குறிப்புகள் கூறுகின்றன.

இப்படி இவர்கள் சொத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் சண்டையிட்டுக் கொண்டதற்கு இன்றைய மதவாதிகள் விளக்கத்திற்கு மேல் விளக்கமாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்அப்படி சண்டையிட்டுக் கொண்டதற்கு ஆயிரம் சமாதானங்கள் கூறினாலும் முகம்மதின் போதனைகளை தங்களை முஸ்லீம்களாக அறிவித்து அதிகாரத்தையும் சொத்துகளையும் அனுபவித்துக் கொண்ட அவரின் நெருங்கிய உறவினர்கள் கூட செவிமடுக்கவில்லையே ஏன்? என்பது தான் முதன்மையான கேள்வி.

முகம்மது என்பவர் இஸ்லாத்தின் முழுமைமுகம்மது இல்லாமல் இஸ்லாம் எனும் மதம் இல்லைஅவரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் பின்பற்றத்தக்கதுமட்டுமல்லாமல் அவைகளுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குற்றவாளிகள்அதற்கு தண்டனையாக நரகத்தை அடைவார்கள் என்பது தான் மதத்தின் தீர்ப்பு.இதுமட்டுமல்ல முகம்மது வாழும் காலத்தில் அவரை முஸ்லீம்கள் எந்த உயரத்தில் வைத்திருந்தார்கள் என்பதை கீழ்காணும் ஹதீஸ் விளக்கும்.

.. .. .. பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி அதில் தம் இரு கைகளையும்தம் முகத்தையும் கழுவி அதில் உமிழ்ந்தார்கள்பிறகு எங்களிடம் இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு உங்கள் முகங்களிலும் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்எனவே நாங்கள் இருவரும் அவ்வாறே செய்தோம்அப்போது உம்மு ஸலமா திரைக்குப் பின்னாலிருந்து எங்களை அழைத்து உங்கள் அன்னைக்காகவும் அதிலிருந்து சிறிது மீதி வையுங்கள் என்று கூறினார்கள்அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்புஹாரி 4328

ஒருபுறம் இப்படி மூடத்தனமான கண்மூடித்தனமான பக்திமறுபுறம் முகம்மதின் மருமகன் அலீ முகம்மதை எப்படி கிண்டல் செய்கிறார் என்று பாருங்கள்,

நபி அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா அவர்களிடமும் வந்தார்கள்நீங்கள் இருவரும் தொழவில்லையா என்று கேட்டார்கள்.அப்போது நான் நபி அவர்களே எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளனஅவன் எழுப்பும் போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன்இதை நான் கூறிய போது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள்பின்னர் தம் தொடையில் அடித்து மனிதன் அதிகமாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான் என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்புஹார் 1127

அதாவதுமுகம்மது தம் மகளும் மருமகனான அலியும் வசிக்கும் வீட்டுக்கு ஓர் இரவில் வருகிறார்நீங்கள் இரவுத் தொழுகையை தொழவில்லையாஎன்று கேட்கிறார்இதற்கு அலி செய்யும் கிண்டலை புரிந்து கொள்ள இன்னொரு ஹதீஸுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.இரவில் தூங்குவது குட்டி மரணம் போன்றது. மரணத்தில் உயிர்களைக் கைப்பற்றுவது போலவே தூக்கத்திலும் கைப்பற்றப்படுகிறது.கைப்பற்றப்பட்ட உயிர் திரும்ப வழங்கப்பட்டால் அது தூக்கமாக கருதப்படுகிறதுமாறாக உயிர் திரும்ப வழங்கப்படாவிட்டால் அது மரணமாகி விடுகிறதுஎனும் பொருளில் ஏற்கனவே ஒரு ஹதீஸை அருளியிருக்கிறார் முகம்மதுஇந்த ஹதீஸை மனதில் வைத்துக் கொண்டுதான் மேற்கண்ட பதிலை அலி தன் மாமனாருக்கு தெரிவிக்கிறார்தூக்கத்தில் எங்கள் உயிரை இறைவன் கைப்பற்றி வைத்துக் கொண்டு அவன் எழுப்பி விடாத போது நாங்கள் எப்படி விழித்தெழுந்து தொழ முடியும்? என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.இதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல்பதில் சொல்லவும் இயலாமல் தான் முகம்மது தொடையில் அடித்துக் கொண்டே திரும்பச் சென்று விட்டார்.

இதை மருமகன் மாமனாருக்கிடையேயான கிண்டல் கேலி என்று எடுத்துக் கொள்ள முடியுமாஅனைத்து முஸ்லீம்களுக்கும் முகம்மது முன்மாதிரி என்றால் அது மருமகனுக்கு பொருந்தாதா? முகம்மதின் கட்டளைக்கு கீழ்ப்படியாதவன் முழுமையான முஸ்லீமாக முடியாது.முகம்மதை தம் உயிரிலும் மேலாக மதித்துப் போற்றாத யாரும் முழுமையான முஸ்லீமாக முடியாது என்று கூறும் கூற்றுகளுக்கெல்லாம் என்ன பொருள்கீழ்க்காணும் வசனம் எச்சரிப்பதைப் பாருங்கள்.

மேலும்அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லைஆகவேஅல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்குரான் 33:36

கேலி செய்வதாவது பரவாயில்லைமாமனார்மருமகன் விவகாரம் என்று பொறுத்துக் கொள்ளாலாம்ஆனால்உயிரினும் மேலாக மதிக்க வேண்டியவரை கிள்ளுக் கீரையாக நினைத்தால்அதுவும் மரணத் தருவாயில்அதையும் ஒரு ஹதீஸ் பதிவு செய்திருக்கிறது.

நபி அவர்களின் மரண வேதனை அதிகமானபோது என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள் எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறி விடாதிருக்க ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித்தருகிறேன் என்று கூறினார்கள்நபி அவர்களுக்கு வேதனை அதிகமாகி விட்டதுநம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறது அது நமக்குப் போதுமானது என்று உமர் கூறினார்உடனே கருத்து வேறுபாடு எழுந்து கூச்சலும் குழப்பமும் மிகுந்து விட்டனஇதைக் கண்ட நபி அவர்கள் என்னை விட்டு எழுந்து செல்லுங்கள்என் முன்னிலையில் இது போன்ற சச்சரவுகள் எதுவும் இருக்கக் கூடாது என்றார்கள்நபி அவர்களுக்கும் அவர்கள் மடலுக்கும் குறுக்கே தடையாக நிகழ்ந்து விட்ட சோதனை பெரும் சோதனைதான் என்று கூறியவராக அங்கிருந்து இப்னு அப்பாஸ் வெளியேறிவிட்டார்புஹாரி 114

இந்தச் சூழலை புரிந்து கொள்ள முடிகிறதாபுரிந்து கொள்ள முடியும் என்றால் இன்றைய இஸ்லாமியர்கள் முகம்மதுவுக்கு கொடுக்கும் அத்தனை மரியாதையும்வழிகாட்டி எனும் மதிப்பும்இறைவனுக்கு அடுத்த இடத்தில் வைத்திருக்கும் பாங்கும்ஐயத்துக்கு இடமின்றி முகம்மது உயிருடன் இருக்கும் போதே அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு நிதர்சனம்.

முகம்மதுக்கு இஸ்லாமியர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை பில்ட்டப்புகளையும் இந்த ஒற்றை ஹதீஸ் தகர்த்து விட்டதுமரணத் தருவாயில் முகம்மது கூற விரும்பியது என்ன? “எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறிவிடாதிருக்க என்று கூறியிருக்கிறார் என்றால்வழி தவறி விடுவார்கள் என்று முகம்மது எண்ணியிருக்கிறார்அதை சரிப்படுத்த வேண்டும் என்றும் முயன்றிருக்கிறார்என்றால் முகம்மது சரிப்படுத்த விரும்பிய வழி எதுதற்போதைய இஸ்லாத்திற்கும் முகம்மது கூற விரும்பிய கொள்கைக்கும் இடையே வேறுபாடு இருக்கிறதாதங்களை இஸ்லாமியர்களாக கருதிக் கொள்வோர் எவரேனும் பதிலளிக்க முன்வருவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக