குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படை குர்ஆன். எனவே இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …அல்லாஹ்வால் இறக்கப்பட்ட தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.
(குர்ஆன் 2:213)
…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.
(குர்ஆன் 2:75)
எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …
(குர்ஆன் 2:79)
நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி. தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.
(குர்ஆன் 15: 9)
…அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,
(குர்ஆன் 6:34)
இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …தனது முந்தைய வேதங்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,
(குர்ஆன் 2: 4)
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(குர்ஆன் 3:84)
நிச்சயமாக நாம்தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …அல்லாஹ், தன்னுடைய வேதங்களைப்பற்றி கூறுவதை சுருக்கமாக பார்ப்போம் :
(குர்ஆன் 5:44)
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; “நிச்சயமாக பூமியை (ஹாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
(குர்ஆன் 21:105)
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருந்தது.
(குர்ஆன் 5:46)
- குர் ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது
- குர் ஆன், தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம் அல்லாஹ் இறக்கிய வேதங்கள் ஆகும்
- குர் ஆனுக்கு முன்பாக இறக்கப்பட்டத தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்களால் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.
- முந்தைய வேதங்களாகிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் அதிகாரபூர்வமாக அல்லாஹ் தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் ஏற்க வேண்டும், குர் ஆன் பாதுகாக்கப்பட்டு இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.
- அல்லாஹ்வின் வார்த்தைகளை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.
இவைகளிலிருந்து நாம் சில முடிவுகளை அடையலாம்
குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறிய அல்லாஹ், மற்ற வேதங்களை பாதுகாக்காமல் கோட்டை விடுவானா? குர்ஆனின் வசனங்கள் முந்தின வேதங்களை அல்லாஹ் பாதுகாக்க தவறியதை உறுதி செய்கின்றன. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தை மனிதர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்ததாகவும், இறுதியில் குர்ஆனைப் பாதுகாக்க உறுதிமேற் கொண்டதாக கூறுவது முட்டாள்தனமாக தெரியவில்லையா?
குர்ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்ற முடிவை நீங்கள் கூறினால், இதன் பொருள், அல்லாஹ் பலவீனமானவன் அல்லது அவன் ஒரு அநீதிக்காரன். தனது முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாஹ்வின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.
அல்லது
அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்கலாம் அதனால்தான் அவனால் தன் முந்தைய வேதங்களை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.
அல்லாஹ்வின் முந்தைய மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள், தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்காமல் சும்மா இருந்த அல்லாஹ், பிந்திய வேதமாகிய குர்ஆனை மட்டும் பாதுகாத்தான் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி? ஏனெனில் முந்தை வேதங்களை பாதுகாக்கவில்லை என்பது அல்லாஹ்வின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது.
அல்லாஹ் ஆற்றல் மிக்கவன், வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் மற்ற வேதங்களும் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டவைகளே என்று கூறலாம். முந்தின வேதங்களை பாதுகாக்க இயலாதவனென்றால் குர்ஆன் உட்பட எதனையும் அவனால் பாதுகாக்க முடியாது என்றுதான் கூற முடியும்.
அல்லாஹ் ஆற்றல் மிக்கவன், வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் நேர்வழியும் பேரொளியும் இருந்த தவ்ராத்தையும், ஜபூரையும் மற்றும் நேர்வழியும் ஒளியும் இருந்த இன்ஜீலையும் பாதுகாக்கத் தவறியது ஏன்?
முதலில் இறக்கப்பட்ட வேதங்கள் மனிதனால் களங்கப்பட்டது அல்லது அல்லாஹ்வினால் சரிவர பாதுகாக்கப்படாத காரணத்தால் இரண்டாவது வேதம் இறக்கப்பட்டது. இவ்வாறாக நான்காவது வேதம் வரை தொடர்கிறது. சர்வவல்லமை மிக்கதாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கு தன்னுடைய வேதம், மனிதர்களால் மாற்றத்திற்குள்ளாகும் செய்தி முன்பே தெரியாதா?
அல்லாஹ்வுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். அல்லாஹ்வும் தன் உரையாடல்களில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையில் மனிதன் அடையும் வெகுமதிகளும் தண்டனைகளும் கூட அவன் நாற்பது நாட்கள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்பிரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பம் முதல் மறுமையின் முடிவுக்கு பின்னர் நிகழ்வதையும் நிர்ணயம் செய்து விட்டதாக கூறிக் கொள்பவன், வேத வசனங்களை மனிதர்கள் மாற்றி விட்டதாக புலம்புவது ஏன்? இது யாருடைய குற்றம்?
குர்ஆனின் (6:34) வசனம் முரண்பாடுகளுக்கு மேலும் ஒரு உதாரணம். இதன் அடிப்படையில் நாம் மேலும் சிலமுடிவுகளை அடையலாம்.
ü அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற வசனத்தை ஏற்பதென்றால் தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகியவை நிச்சயமாக அல்லாஹ்வின் வேதங்களாக இருக்க முடியாது. தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகிய வேதங்கள் தான் அருளியதாக அல்லாஹ் கூறவது வடிகட்டிய பொய்.
ü முந்தின வேதங்கள் மாற்றப்பட்டதை அல்லாஹ்வே ஒப்புக் கொண்டு விட்டதால், தனது வார்த்தைகளை எவரும் மாற்ற முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவது அர்த்தமற்றது. குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டதாக இருக்கலாம். எனவே ஐந்தாவதாக புதிய வேதம் வரலாம்(?)
ü “அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்ற வசனம் குர்ஆனை மட்டுமே குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறினாலும் குழப்பம் தீரவில்லை. அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்க வேண்டும் அதனால்தான் அவன் முன்பு கூறிய வார்த்தைகளை (வேதங்களை) மனிதர்கள் சுலபமாக மாற்றி விட்டனர். அவைகளை அவனால் பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை எவராலும் மாற்ற முடியாது என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.
ü அல்லாஹ் சர்வ வல்லமையுடையவனே. மனிதர்களை சோதனை செய்யவே தனது வேதங்களை மாற்ற அனுமதித்தான் என்று வாதிட முடியாது. ஏனென்றால் இவ்வாதம் விதியை அடிப்படையாகக் கெண்டது. தனது பாதையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த விளக்கத்தை ஏற்கமுடியும். விதியைப் பற்றி கூறும் வசனங்களை புறக்கணித்தால் குர்ஆனின் பெரும் பகுதி வேடிக்கையாகிவிடும். (விதியின் குழப்பத்தைப்பற்றி நாம் முன்பு பார்த்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)
மனிதனின் இந்த துரோகச் செயல்களை அல்லாஹ்வினால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்,
ஒருமுறை தவறு நிகழ்ந்தவுடன் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறு இறுதிவரை தொடர்கிறது. இறுதியில் பாதுகாப்பாக வெளியிட்டதாக கூறும் குர் ஆனின் நிலை வேடிக்கையானது. முழுமையான எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியில், எழுதவும் படிக்கவும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த ஒரு எழுத்தறிவற்றவரின் வாயிலாக வெளியிட்டான். அதையாவது ஒழுங்காக செய்தானா? என்றால் அதுவும் கிடையாது.
மறதியாளன் என தன்னால் வர்ணணை செய்யப்பட்ட மனிதனின் இதயத்தில்(?) வைத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றதாக கூறுகிறான்.
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும் வெளிப்படுத்தும் தன்மையில்லததால், அதைப்போன்ற அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். அவனிடத்தில் இருந்த “மூலப்பதிவேடு” என்ன ஆனது? இத்தகைய நினைவாற்றல் உள்ளவனின் குற்றச்சாட்டை எப்படி ஏற்பது?
(குர்ஆன் 2:106)
எதற்காக மறதி ஏற்படுத்தப்பட வேண்டும்? சிறந்த வசனத்தால் ஈடுசெய்வதற்காகவென்றால் முதலில் கூறியது ‘சொதப்பலா’?. அவ்வாறு நீக்கப்பட்ட குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸைப் பாருங்கள்,
புகாரி ஹதீஸ்4095நீக்கப்பட்ட இவ்வசனத்தின் தன்மையையும் கருத்தையும் கவனித்துப் பாருங்கள் சரியான உளறல் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்கூறியதாவது :
பிஃரு மஊனாவில் தம்தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த்தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா,ரிஅல், தக்வான்(பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள்கூறுகிறார்கள், ஆகவே இறைவன் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன்வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னர் (இறைவனால் அந்தவசனம்) நீக்கப்பட்டுவிட்டது. (அந்த வசனம்,)
” நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். நங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள் “.
முஹம்மதிற்கு மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். சஹாபாக்களுக்கு மறதி ஏற்பட்டால்? ஏனென்றால் நபியின் காலத்தில் குர்ஆன் முழுமையாக தொகுக்கப்படவில்லை.
புகாரி ஹதீஸ் : 4986நபியின் மரணத்திற்கு பிறகு அரசியல் குழப்பங்கள் எல்லை கடந்திருந்த நிலையில் பல குழப்பங்களுக்கிடையே சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தன்னுடைய உரையாடல்களை தொகுக்கச் செய்கிறான். ஆவணங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான சாட்சிகளின் முறையையும் (குர்ஆன் 2:282) விவரிக்கவும், முஹம்மது அவர்கள், தன் எதிரிகளுக்கு எழுதிய (மிரட்டல்) கடிதங்களில் முத்திரை பதிக்க அறிவுறுத்திக் கூறியவனுக்கு, தன்னுடைய உரையாடல்களை மிகச்சரியான எழுத்து வடிவத்தில் தன் தூதரின் வாழ்நாளிலேயே முத்திரையிட்டு இறுதிவடிவம் கொடுக்கத் தெரியவில்லை. ஆயிஷாவின் பாதுகாப்பிலிருந்த குர்ஆனின் அத்தியாயங்களின் பிரதிகளை கோழி, ஆடு (வாத்து, மாடு, ஒட்டகம், பூனை, நாய், முயல்) மற்றும் நெருப்பிற்கும் இறையாக்கிவிட்டான்.
வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது
…எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அபுபக்ர் (ரலி) அவர்கள்., அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான் என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்து) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். …
புகாரி ஹதீஸ் : 4987குர்ஆன் முஹம்மதின் காலத்திலேயே குழப்பமற்ற முறையில் இறுதி வடிவம் பெற்றுவிட்டதென்றால், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலீபா உஸ்மான், குர்ஆனை மீண்டும் தொகுக்க அவசியம் ஏன்? தனது தொகுப்புடன் முரண்படும் மற்ற பிரதிகளை நெருப்பிலிட்டது ஏன்? குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் முஹம்மது அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான். அவரும் ஒரு இறைத்தூதரோ? குர்ஆனை தொகுத்தவரைப்பற்றி முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷாவின் கருத்து,
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்தச் சமுதாயம் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம் என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆனை பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப் படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்கிடமிருந்த) அநதக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வான்றையும் ஒவ்வாரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
(ஒரு இஸ்லாமிய தளத்திலிருந்து,)ஆயிஷாவின் இந்த கருத்தின்படி குர்ஆனை தொகுத்த கலீஃபா உஸ்மான் ஒரு காஃபிர். இதே உஸ்மான் மரணத்திற்குப்பின் அப்பாவியானதும், புனிதரானதும் அவரது கொலைக்கு பழிவாங்க ஆயிஷா போர்க்கோலம் பூண்டதும் தனிக்கதை. குர்ஆனைத் தொகுத்தவரின் இறுதிகாலம் மிக கேவலமானது. கொலை செய்யப்பட்ட அவரது உடல் தீண்டுவாரின்றி குப்பைகூழத்துடன் மூன்று நாட்கள் கிடந்தது. இறுதியில் யூதர்களின் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் அடக்கம் செய்யபட்டது. இது தண்டனையா? இல்லை வெகுமதியா?
Ibn Atheer in ‘Al-Nahayah’, Volume 5 page 80 stated:
حديث “اقتلوا نعثلا قتل الله نعثلا” تعني عثمان . وهذا كان منها لما غاضبته وذهبت إل مكة
The hadith “kill Nathal, may Allah kill Nathal” refers to Uthman. That happened from her when she got angry and went to Makka.
Al-Razi records in Al-Mahsol, Volume 4 page 343:
فكانت عائشة رضي الله عنها تحرض عليه جهدها وطاقتها وتقول أيها الناس هذا قميص رسول الله صلى الله عليه وسلم لم يبل وقد بليت سنته اقتلوا نعثلا قتل الله نعثلا
Aisha (may Allah be pleased with her) did her best to incite people against Uthman, and she used to say: ‘Oh people! This is the cloth of the Messenger of Allah (pbuh) still not ragged, while his Sunnah is ragged, kill Nathal, may Allah kill Nathal.’
(ஆயிஷா, மக்களை உத்மானுக்கு எதிராக நன்றாக தூண்டிவிட்டார், அவர்(ஆயிஷா) கூறுவார், “மக்களே அல்லாஹ்வின் தூதருடைய இந்த துணி கிழியவில்லை. ஆனால் அவரது சுன்னத்துகள் கிழிந்து விட்டது, காஃபிரைக் கொல்லுங்கள் அல்லாஹ் (அந்த) காஃபிரைக் கொல்லட்டும்” என்பார்.)
பல அனுபவங்களுக்கு பின் மிகுந்த பாதுகாப்புடன் வெளியிடப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இறுதி வேதத்தின் நிலையே இப்படியென்றால், முந்தின வேதங்களின் நிலையைப்பற்றி கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் முந்தின வேதங்கள் மற்றப்பட்டதாக புலம்புவதில் எவ்வித பொருளுமில்லை.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் மட்டுமே முந்தின வேதங்கள் மனிதர்களால் களங்கமடைந்து விட்டதாகவும் அவைகளைப் பின்பற்றக் கூடாது என்ற செய்தி உள்ளது. தவ்ராதிலும், ஜபூரிலும் மனிதர்களின் கைவரிசை இருப்பதாக இதற்கு அடுத்து இறக்கப்பட்ட இன்ஜீலில் அப்படி எந்த செய்தியும் காணவில்லையே. தவ்ராதிலும், ஜபூரிலும் திருத்தம் செய்து கொண்டதை இன்ஜீலின் காலத்தில் அல்லாஹ்வினால் அறிய முடியவில்லையா?
எந்த காலகட்டத்தில், எவ்வாறு, யாரால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது என தெளிவாக குறிப்பிடுவதுதானே குற்றம் சாட்டும் முறை. மாற்றிவிட்டார்கள்…! மாற்றிவிட்டார்கள்…! மீண்டும் மீண்டும் ஒப்பரிவைப்பது ‘சின்னபுள்ளத்தனமா’ இருக்கிறது.
முன்னுக்குப்பின் முரணாக தெளிவின்றி பேசும் குர்ஆனின் குற்றச்சாட்டுகளை நம்புவது எப்படி?
சரி…
அல்லாஹ் தன்னுடைய வேதங்களின் மூலம் மனிதர்கள் நேர்வழி பெற ஏவுவது எதற்காக?
ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சுகமாக வாழ்பவர்களை (நேர்வழியை பின்பற்றுமாறு) ஏவுவோம். (ஆனால் அவர்கள் நேர்வழியை பின்பற்றாமல்) அதில் பாவம் செய்கிறார்கள்; எனவே (வேதனையைக் கொண்டுள்ள நம்முடைய) சொல் அதன் மீது உண்மையாகி அதனை வேரோடு அழித்து நாசமாக்கி விடுகிறோம்.இவ்வசனம் அல்லாஹ்வின் மனநிலையை உணர்த்த போதுமானது. தன்னுடைய சொல்(விதி) எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு வாக்கு மூலம். சுகமாக வாழும் மனிதர்களைக் காண சகிக்காமல், அவர்களை வேரோடு அழிந்து நாசமாவதைக் காண்பதற்காக நேர்வழியை ஏவுபவன் இறைவனா? இதற்கு ஒரு வேதம் தேவையா?
(குர்ஆன் 17: 16)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக