சனி, 2 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் படத்துக்கு மும்பை, டெல்லியில் வரவேற்பு : முஸ்லிம்களுக்கு விரோதமான கருத்து எதுவும் இல்லை : ரசிகர்கள் பரபரப்பு பேட்டி

விஸ்வரூபம் படத்துக்கு மும்பை, டெல்லியில் வரவேற்பு : முஸ்லிம்களுக்கு விரோதமான கருத்து எதுவும் இல்லை : ரசிகர்கள் பரபரப்பு பேட்டி


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி: விஸ்வரூபம் படத்துக்கு மும்பை, டெல்லியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள், முஸ்லிம்களுக்கு விரோதமான கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் நடித்து இயக்கிய உள்ள விஸ்வரூபம் படத்துக்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்நிலையில் இப்படம் மும்பை, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று வெளியானது. இதற்காக கமல்ஹாசன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பை புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் படம் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியில் வந்த ரசிகர்கள், ‘முஸ்லிம்களுக்கு எதிராகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ படத்தில் எந்த கருத்தும் சொல்லப்படவில்லை. படம் நன்றாக இருக்கிறது. கமல் நடிப்பு சூப்பர். யதார்த்தமாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார். இப்படம் தேசிய விருதை வெல்லும். படமும் வெற்றிகரமாக ஓடும் என்றனர். உத்தர பிரதேசம் லக்னோவில் சமாஜ்வாடி கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் தியேட்டரில் விஸ்வரூபம் ரிலீஸ் ஆனது. படம் பார்த்தவர்கள், ‘படத்தில் தவறான கருத்து எதுவும் இல்லை. இப்படத்தை தடுப்பதில் அரசியல்தான் நடந்திருக்கிறதுÕ என்றனர். மும்பையில் படம் பார்த்த ரசிகர்களும், ‘இப்படத்தை பார்ப்பவர்கள் முஸ்லிம்கள் பற்றிய கதை இல்லை என்பதை தெரிந்து கொள்வார்கள்Õ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக