ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

இசுலாத்தை கடந்த சுவடுகள் 8தொடர் 8

9. உம்மு ஹபீபா

நபி (ஸல்அவர்களுக்கு மிகப் பெரிய எதிரியாக விளங்கிய அபூ ஸூஃபயானின் மகளாவார்நபி (ஸல்அவர்களை விட இருபத்து மூன்று வயது இளையவர்அபிஸீனீயா சென்ற இவரது கணவர் உபைதுல்லா அங்கு கிருஸ்தவராக மதம் மாறினார் கணவருடன் வாழவிரும்பாததால் அபிஸீனீயாவில் தன் மகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார்ஹிஜ்ரி ஒன்றாம் ஆண்டு நபி (ஸல்அவர்களால் திருமணம் செய்யப்பட்டார்ஆனால் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டுதான் நபி (ஸல்அவர்களுடன் இணைந்து வாழ்ந்தார் அப்பொழுது நபி (ஸல்அவர்களுக்கு அறுபது வயதுகலீபா முவாவிய இவரது சகோதரர்.ஹிஜ்ரி 44 ம் ஆண்டு தன்னுடைய 72 ம் வயதில் காலமானார்.

10. ஸஃபியா

நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய முயன்றதால் கைபர் என்ற பகுதிக்கு நாடு கடத்தப்பட்ட பனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் என்பவரின் மகள்சற்று குள்ளமான உருவமுடையவர். கினானா இப்ன் அல் ரபீ என்ற யூதத் தலைவரின் புதுமனைவி.
கைபர் யூதர்களின் உழைப்பால்  செழிப்பாக வளர்ந்த பகுதி. நபி (ஸல்)அவர்கள், சுமார் 1400 வீரர்களுடன் கைபர் பகுதியை தாக்கினார்வெளியில் வர அஞ்சிய யூதர்கள் தாக்குதல் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர்இரவு நேரத்தில் வெளியில் வந்து குடிநீரையும்உணவையும் சேகரித்துக்கொண்டு மீண்டும் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர்இதை அறிந்த முஹம்மது நபி, யூதர்களை வெளியில் வரவழைக்க  அவர்களது குடிநீர் கிணறுகளை விஷமாக்கியும்அவர்களது பேரீச்ச மரங்களை வெட்டியும்தீயிட்டும் கொளுத்தினார்.
புஹாரி ஹதீஸ்:4031
சயீத் பின் ஜுபைர் (ரஹ்அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை விட்டார்கள்இன்னும் வெட்டிவிட்டார்கள்அது புவைரா என்னும் இடமாகும்எனவே தான் நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும்,அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டு விட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தனஅல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்என்னும் (59-5) இறைவசனம் அருளப்பட்டது). இதை இப்னு உமர்(ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
வேறு வழியின்றி  யூதர்கள் சரணடைந்தனர்பெரிய அளவில் போர் எதுவும் நிகழவில்லை கைபரின் கோட்டைகள் முஸ்லீம்கள் வசம்வந்ததுஇறுதியில்பனூ நதீர் யூதர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர்அபூ ஹூகைக் என்ற யூதருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படிகோட்டைக்குள்ளிருக்கும் யூத வீரர்களைக் கொல்லக்கூடாதுஅவர்களை அவர்களின் மனைவி மக்களுடன் வாழவிடவேண்டும்கைபரின் நிலம்செல்வங்கள்கால்நடைகள்ஆயூதங்கள் அனைத்தும் முஸ்லீம்களுக்கு சொந்தம்யூதர்கள் கைபரை விட்டு வெளியேறி விடவேண்டும்இதில் எந்த ஒரு பொருளை யூதர்கள் மறைத்தாலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பொறுப்பு நீங்கிவடும்.
Sourcing Ibn Ishak, Tabari writes:
'Kinanah b. al-Rabi b. al-Huqyaq who had the treasure of B. Nadir was brought to the Messenger of God, who questioned him; but he denied knowing where it was. Then the messenger of God was brought a Jew who said to him, "I have seen Kinanah walk around this ruin every morning." The Messenger of God said to Kinanah: "What do you say? If we find it in your possession, I will kill you." "All right," he answered. The Messenger of God commanded that the ruin should be dug up, and some of the treasure was extracted from it. Then he asked him for the rest of it. Kinanah refused to surrender it; so the Messenger of God gave orders concerning him to al-Zubayr b. al-'Awwam, saying, "torture him until you root out what he has." Al-Zubayr kept twirling his firestick in his breast until Kinanah almost expired; then the Messenger of God gave him to Muhammad b. Maslamah, who beheaded him to avenge his brother Mahmud b. Maslamah."'
மேற்படி ஒப்பந்தத்தை அபூ ஹூகைக்கின் மகன்கள் அவர்களுடையதோல்பையில் சில பொருட்களையும்ஸஃபியாவின் தந்தை ஹூயயை பின் அக்தப்பின் நகைகளையும்  மறைத்ததால் அவர்கள் கொல்லப்பட்டனர்.ஸஃபியாவின் கணவர் கினானாவை அவர்கள் மறைத்த கஜானா இருக்குமிடத்தை கூற மறுத்ததால்முஹம்மது நபி அவர்களின் உத்தரவின்படி பழுக்க காய்ச்சிய ஆயுதங்களால் கினானாவின் மார்பில் குத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.
போர்க்கைதிகள் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டனர்அப்பொழுது திஹ்யா பின் கல்ஃபி என்ற நபித்தோழர் தனக்கு கைதிகளிலிருந்து ஒரு பெண்ணை கேட்கிறார்,உடனேஉனக்கு விருப்பமான பெண்ணை அழைத்துச் செல்கஎன்று கூறஅவர் அழகும் இளமையும் நிரம்பிய ஸஃபியா அழைத்துச் சென்றுவிட்டார்அதைக் கண்டு பொறாமை கொண்ட மற்ற ஸஹாபிகள் ஸஃபியாவின் இளமையையும் அழகையும் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தனர்உடனே பிலாலிடம்,திஹ்யா பின்  கலீஃபாவையும்ஸஃபியாவையும் தன்னுடைய கூடாரத்திற்கு அழைத்துவர உத்தரவிட்டார்.
பிலால்,  திஹ்யாவையும்ஸஃபியாவையும்கினானாவின் சகோதரிகளையும் அழைத்துக் கொண்டு போர்களத்தின் வழியே அழைத்து வருகிறார்போர்களத்தில் தங்களுடைய சகோதரர்களும், உறவினர்களும்,நண்பர்களும் பிணமாக கிடப்பதைகண்டு ஒரு பெண் கதறி வீறிட்டு அழுகிறார்,புழுதியில் புரண்டு கதறுகிறார் ஒரு பெண் அதிர்ச்சியில் உறைந்து அழுகையை வெளிப்படுத்த இயலாமல் வாயடைத்து போகிறார்இதில் இரண்டாமவரே  ஸஃபியாஇந் நிலையில் நபி (ஸல்அவர்களின் கூடாரத்தை அடைகின்றனர்.
வீறிடும் அப்பெண்களை கண்டு, "முதலில் இந்த ஷைத்தான்களை வெளியேற்றுங்கள்" என பிலாலிடம் கூறி,  அச்சப்படும் விதமாக போர்களத்தில் பிணங்களுக்கு நடுவே அழைத்து வந்ததற்காகஏன் இரக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை எனவும் பிலாலை கண்டிக்கிறார். பிறகு ஸஃபியாவை கண்டவுடன் தன்னுடைய மேலங்கியை ஸஃபியாவின் மீது வீசி போர்த்துகிறார்.அதாவது இனி தன்னுடையவள் என்று பொருள்.  கினானாவின் சகோதரிகள் உட்பட தன்னுடைய பங்கிலிருந்த ஏழு அடிமைகளாக்கப்பட்ட கைதிகளையும் திஹ்யாவிற்கு வழங்கி  ஸஃபியாவை தனது உடைமையாக்கிக்  கொணடார்.
Sunan Abu Dawud, Book 19, #2991: Anas said:
“A beautiful slave girl fell to Dihyah. The apostle purchased her for seven slaves. He then gave her to Umm Sulaim for decoration her and preparing her for marriage.”
இது ஸஹாபிகள் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஏனென்றால்ஸஃபியாவின் தந்தை முஹம்மது நபியின் தலையில் பறாங்கல்லைத் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற  கொலைகாரன் என்று நபியால் குற்றம் சாட்டப்பட்டவர் அதன் காரணமாகவே பனூ நளீர் யூதர்கள் கைபருக்கு நாடுகடத்தப்பட்டனர்.  ஸஃபியாவின் தந்தை மிக மோசமான எதிரி என்று நபியால் குறிப்பிடப்பட்டவர்.
பனூ நதீர் யூதர்கள் அடிமைகளாக்கப்பட்டனர்யூதர்களின் உழைப்பால் செழித்திருந்த கைபரின் நிலங்கள், 3600 பகுதிகளாக பிரிக்கப்பட்டதுஅதில் சரிபாதியை, 1800 பங்குகளை போரில் ஈடுபட்ட  தனது படையினருக்கு பகிர்ந்தளித்தார். 200 குதிரைவீரர்களுக்குகுதிரைக்கு இரண்டு பங்கும்வீரருக்கு ஒரு பங்கு என்று மூன்று பங்குகள் அளிக்கப்பட்டதுகாலட்படையினருக்கு மீதமிருந்த 1200 பங்குகள் அளிக்கப்பட்டதுமறு பாதியை,  முஸ்லீம்களுக்கு ஏற்படும் பொதுப் பிரச்சனைகளுக்காக  ஒதுக்கப்பட்டது.
புஹாரி ஹதீஸ்      : 4228       
இப்னு உமர் (ரலிஅவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கைபர் போரின் (போர்ச் செல்வத்திலிருந்துகுதிரைக்கு இரு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ (ரஹ்)அவர்கள், (போரில் கலந்து கொண்டஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரு பங்குகளும்உரிமையாளருக்காக ஒரு பங்கும் சேர்த்துஅவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும்அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்கள்.
நிலத்தை செம்மைப்படுத்தி விவசாயம் செய்து மகசூலில் ஒரு பகுதியை(50%)  தரவேண்டும்நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே தங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து நிலம் யூதர்களிடம் தரப்பட்டது.

புஹாரி ஹதீஸ் -2499
ப்துல்லாஹ் பின் உமர் (ரலிஅவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு,அவற்றில் அவர்கள் உழைதது விவசாயம் செய்ய வேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியதுஎன்றுபம் நிபந்தனையிட்டு கொடுத்துவிட்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா என்பவரை கண்காணிப்பாளராக நியமித்தார்.இப்போரில் யூதர்களின் பெரும் செல்வம் முஸ்லீம்கள் வசமானது.
புஹாரி ஹதீஸ்      :4243
இப்னு உமர் (ரலிஅவர்கள் கூறியதாவது.
கைபரை வெற்றிக் கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை
 புஹாரி ஹதீஸ் : 4242     
ஆயிஷா (ரலிஅவர்கள் கூறியதாவது.
கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போதுஇனி நம் வயிறு பேரீச்சங் கனிகளால் நிரம்பும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்

தன்னால் அடிமையாக்கப்பட்டஸஃபியாவை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து(?)  அதையே திருமணத்திற்கான மஹராகவும் அறிவித்து திருமணம் செய்தார்.
புஹாரி ஹதீஸ் -2499
னஸ் (ரலிஅவர்கள் கூறியதாவது.
(கைபர் போரில்ஸஃபியா பின்த் ஹூயை அவர்களை நபி (ஸல்அவர்கள் கைது செய்துபின்னர் விடுதலை செய்துதாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள்அறிவிப்பபாளர்களில் ஒருவரான ஸாபித் (ரஹ்)  அவர்கள் கூறுகிறார்இந்த செய்தியைக் கூறுகையில் அனஸ் (ரலிஅவர்களிடம்நபி(ஸல்)  அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று நான் கேட்டேன், (ஸஃபியாஅவர்களது விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள் என்று அனஸ் (ரலிஅவர்கள் பதிலளித்தார்கள்.

                அன்றிரவு இஸ்லாமைப்பற்றி(?) எடுத்துரைத்துஇஸ்லாமை ஏற்க ஸஃபியாவிடம் கோரிக்கை வைக்கிறார்ஸஃபியாவும் இஸ்லாமை ஏற்கிறார்.மறுநாள் வலீமா விருந்து நடைபெறுகிறதுஅங்கு நபி (ஸல்) கொல்ல விஷம் வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக