தொடர் 9
அல்-புகாரி பாகம் 3, அத்தியாயம் 51,
எண் 2617 , அனஸ் (ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர்ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள்அதிலிருந்து (சிறிது உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?” என்றுநபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அவர்கள் "வேண்டாம்" என்றுகூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்தவிஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
From al-Tabari's History, Volume 8, p. 124
ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறியதுண்டை அவர் எடுத்துக் கொண்டார், தன் வாயில் போட்டுக் கொண்டார், அதைமென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்குஇவ்விதமாகச் சொன்னார், “நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத் தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது". பின்பு, அந்தயூதப் பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையைசெய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில்அளித்தாள்: " நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான்நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லாஹ்அதை உங்களுக்கு தெரிவிப்பான், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராகஇருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக் கொள்வேன்"
மேலும்
அல்லாஹ்வின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள்.அந்த ஆடு, நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்" என்று சொல்லியது. அவர்(முஹம்மது) தன் தோழர்களிடம் "உங்கள் கைகளை அப்படியே வையுங்கள்,இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!" என்றார். அவர்கள்சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா என்பவர்இறந்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணைஅழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னைதூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: " நீங்கள்உண்மையான நபியா என்பதை தெரிந்து கொள்ளத்தான் நான் இப்படி செய்தேன்,நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காதுஇருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என்மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக் கொள்வேன்" .அவளைகொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.
முஹம்மது நபியின் இறுதி நாட்களில் உடல் நலக்குறைவால் துன்பமடைந்தார். அப்படி நோய்வாய்ப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார்அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: "பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்டஅந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போலவலியை உணருகிறேன்".
ஸஃபியாவின் கதையைத் தொடர்வோம்
தன் படையினருடன் கைபரிலிருந்து மதீனா திரும்பும் வழியில் மூன்று நாட்கள் தங்கியிருந்து ஷஃபியாவுடன் கூடி மகிழ்ந்தார்.
புஹாரி ஹதீஸ் 4213
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தில் ஹஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா - மண விருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட,அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம்பழம்,பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி-)யரில் ஒருவரா அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா என்று பேசிக் கொண்டனர். ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் -திரையிட்டுக் கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-)ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (மக்களில் சிலர்)கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது நமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கை அமைத்து இடம் கொடுத்து(அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.
அவ்வாறான ஓர் இரவில், நபி (ஸல்), ஸஃபியாவுடன் கூடாரத்தில் இருக்கும் பொழுது கன்னத்தின் அடியில் இருககும் வடுவைக் கண்டு அதைப்பற்றி வினவுகிறார். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்கள் ஊருக்கு வருவதற்கு முன், முழுநிலவு தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாக கனவு கண்டு அதைப்பற்றி என் கணவரிடம் கூறியபொழுது அவர்,வேகமாக என் கன்னத்தில் அறைந்து, “ மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்?" என்றார் அதனால் ஏற்பட்ட வடுஎன்று கூறினாராம். (இதே போன்ற கனவை கருப்பழகி ஸவ்தாவும் கண்டதாக வரலாறு கூறுகிறது)
முஹம்மது நபி, அல்லாஹ்வின் ஆணைகளை நெறி தவறாமல் பின்பற்றி முன்னுதாரணமாக வாழ்ந்தார் என்று புகழப்படுகிறார்.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துவிட்டால்(மனைவியரான) அவர்கள் தங்களுக்காக நான்கு மாதங்கள் பத்து நாட்கள்(இத்தாவை) எதிர்பார்த்திருக்க வேண்டும்.
(குர்ஆன் 2:234)
மேலும் விதியாக்கப்பட்ட (இத்தாவான)து அதனுடைய தவனையை அடையும்வரை திருமண பந்தம் பற்றி உறுதி செய்து விடாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை அறிகிறான் என்பதை நீங்கள் அறிநது அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
(குர்ஆன் 2:235)
விவாகரத்தாயினும், விதவையாயினும் கடைபிடிக்க வேண்டிய நான்கு மாதம் பத்து நாட்கள் தவணை காலத்திற்கு பிறகே அப்பெண்களைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற அல்லாஹ்வின் ஆணை, (முஹம்மது நபியால்)விதவைகளாக்கப்பட்ட ஸஃபியா மற்றும் ஜுவேரியாவின் விஷயத்திலும் மீறப்பட்டுள்ளதே என்றால்,
இறைத்தூதருக்கு அல்லாஹ் அனுமதித்த 16 சலுகைகள் அல்லது தனிப்பட்ட கட்டளைகள் கீழ் கண்ட விதமாக உள்ளது.
போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் நேர்மையாக இருத்தல்
போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒருபங்கின் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.
அல் விசல் - Al Wisal (இது நோன்பை அல்லது உணவு உண்ணாமல் இருப்பதைக் குறிக்கும்)
நான்கு மனைவிகளை விட அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்
தன்னை முஹம்மது நபிக்கு அற்பணித்தேன் என்று வாய்வழியாக அறிக்கை செய்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுதல், அவளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் ("Yas-tan-kih").
ஒரு பெண்ணின் பாதுகாப்பாளரின் அனுமதியின்றி, அவரது முன்னிலையில் அல்லாமலும் அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள நபிக்கு அனுமதியுண்டு ("Yas-tan-kih")
மஹர் கொடுக்காமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை ("Yas-tan-kih").
மார்க்க சுத்திகரிப்பு நாட்களிலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, உடலுறவில் ஈடுபட அனுமதியுண்டு.
தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொண்டு தன் மனைவிகளை மறுபடியும் சேர்த்துக் கொள்ள அனுமதியுண்டு.
முஹம்மது நபி ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால்,முஹம்மது நபிஅவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், "இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும்இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்".
இறைத்தூதர் போரில் பிடிப்பட்டிருந்த ஷபியாவை விடுதலையாக்கினார்,இந்த விடுதலையானது, ஷபியாவின் மஹராக கருதினார்.
மார்க்க சுத்திகரிப்பு இல்லாமல் மக்காவில் நுழைய அனுமதியுண்டு.
மக்காவிலும் போர் புரிய அனுமதியுண்டு.
அவரின் சொத்துக்களை யாரும் சுவிகாரம் பெறமுடியாது. அதாவது ஒரு மனிதன் வியாதியின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, அவரது அனைத்து சொத்துக்களும் எடுத்துக் கொள்ளப்படும், அவருக்கு மூன்றில் ஒரு பாகம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைத் தூதருக்கு இப்படியில்லாமல், அவரின் சொத்துக்கள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படாமல் அவருடையதாகவே இருக்கும். இதனை நாம்"சொத்துக்களை பிரித்துக்கொடுக்கும் வசனங்களிலும், சூரத் மரியம் அத்தியாயத்திலும் காணலாம்.
முஹம்மது நபியின் மரணத்தின் பிறகும் அவரது திருமண பந்தங்கள் இரத்து செய்யப்படாது.
ஒரு பெண்ணை முஹம்மது நபி விவாகரத்து செய்தால், அப்பெண் அதன்பிறகு வேறு எந்த நபரையும் திருமணம் (நிக்காஹ்) செய்து கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கவேண்டும்.
"Yas-tan-kih" என்ற வார்த்தை "Yan’kah" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது பல உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, "Ajab" என்ற வார்த்தையை "Ista-jab"என்றும் அழைப்பது போல, இவ்வார்த்தையை "Nakaha" மற்றும் "Istan-kaha" என்றும் கூறலாம். "என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா?" அல்லது "என்னோடு உடலுறவு கொள்கிறாயா?" என்று பொருள்படும்படி கூற "Istan-kaha" என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதியுண்டு.
உபதேசங்களும், நெறிமுறைகளும் ஊருக்கு மட்டும்தான் …! இதுதான்அல்லாஹ்வின் ஆணைகளை நெறி தவறாமல் பின்பற்றியதன் மர்மம்.
முஹம்மது நபி ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால்,முஹம்மது நபிஅவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், "இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும்இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்". இதை விளக்க முடியுமா ?
பதிலளிநீக்கு