வணக்கம் நண்பர்களே,
பரிணாமம்
குறித்த கடந்த (எதிர்)பதிவில் மனித பரிணாமம் குறித்த பல தவறான புரிதல்களை
விளக்க முயன்றோம். எதிர் பதிவுகளில் எதிர்வினையாற்றுவதே முக்கிய
கடமையாகிவிடுவதால் பலருக்கு சில எளிய அடிப்படைகளை விளக்க முடிவது இல்லை.
காணொளி
மூலம் பார்க்கும் போது பல விடயங்கள் எளிதாக புரியும்.அவ்வகையில் மனித
பரிணாமம் குறித்த ஒரு விளக்க காணொளி சமீபத்தில் பார்த்ததை கொஞ்சம்
விளக்கங்களுடன் பகிர்கிறோம்.பல அடிப்படை விடயங்கள் முதல் பல படிமங்கள்
பற்றிய விபரங்கள், சமீபத்திய ஆய்வுகள் என பல அம்சங்களையும் அழகாக எடுத்து
சொல்கிறது. மொத்தம் பத்து ப்குதிகளைக் கொண்டது.ஒவ்வொரு பகுதிக்கும் சில
குறிப்புகளை தருகிறோம். ஆங்கிலம் அறியாதோர் கூட பார்த்து புரிய ஏதுவாக
இருக்கும் என நம்புகிறோம்.
பகுதி1
1.1. நாம் யார் என்னும் கேள்வியின் விடையின் முதல் பகுதி 1859ஆம் சார்லசு டார்வின் எழுதிய origin of species என்னும் புத்தகத்தின் மூலம் கிடைத்தது .உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரு செல் உயிர்களில் இருந்து பரிணாம வளர்ச்சியால் கிளைத்து தழைத்தன என்பதும், இது நடக்க காரணம் இயற்கைத் தேர்வே[natural selection] என்பதையும் பல சான்றுகள்,வாதங்களுடன் விளக்கினார் டார்வின்.
*****
1.2.விடையின் இரண்டாம்
பகுதி தொல் மனிதவியல் [paleoanthropology] துறையிடம் இருந்துவந்தது.
கிடைத்த படிம்ங்களை, ஒப்பீட்டு அளவுகள்,கால பரிசோதனை மூலம்மனித
பரிணாம மரம்[hominid evolution tree அமைக்கப்பட்டது.
A).ஹோமோ சேபியன் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன தோற்றம் _ இன்று வரை
B). ஹோமோ நியாண்டர்தால் 3 இலட்சம் ஆண்டுகள் முதல் 30,000 ஆண்டுகள் முன்புவரை
C). ஹோமோ ஹைடெல்பெர்ஜெனெசிஸ் 8 இலட்சம் ஆண்டுகள் முதல் 3 இலட்சம் ஆண்டுகள் முன்பு வரை.
*****
மனித இனம் முதலில் வேட்டையாடியே பிழைப்பு நடத்தினர்,விவசாயம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

D). ஹோமோ எரக்டஸ் 19 இலட்சம் ஆண்டுகள் முதல் 70,000 ஆண்டுகள்
முன்புவரை.முதன்முதலில் நெருப்பின் பயன்பாடு, சமூக அமைப்புடன் வாழ்ந்த மனித
இனம்.இந்தியா,சீனா உள்ளிட்ட பல இடங்களில் இதன் படிமங்கள் கிடைத்தன.
E). ஹோமோ ஹீபிலஸ் 25 இலட்சம் ஆண்டுகள் முதல்14 இலட்சம் ஆண்டுகள் முன்புவரை.முதல் கல் கருவி பயன்படுத்தியவர் .
F) ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரிகனாஸ் 30 இலட்சம் ஆண்டுகள் முதல்20 இலட்சம் ஆண்டுகள் முன்புவரை.
G)ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரான்சிஸ் 38 இலட்சம் ஆண்டுகள் முதல் 29 இலட்சம் ஆண்டுகள் முன்புவரை. இதில் லூசி எனப்படும் படிமம் மனித பரிணாம வரலாற்றையே மாற்றி அமைத்தது.
.....
*****
1.3.விடையின் மூன்றாம் பகுதி மரபியல் ஆய்வில் இருந்து வந்தது. மனித
ஜீனோம் குறியீடுகள்[சுமார் 320 கோடி நுயுக்ளியோடைடுகள்) ஆவணப்படுத்தப்
பட்டது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.அது பல பரிணாம செயலாக்கங்களுக்கு
விளக்கம் அளித்தது. தலைமுறைரீதியான ஜீனோம் மாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டன.
1.4 இறுதிப்பகுதி மானுடவியல்[anthropology] எனப்படும்நடைமுறை வாழ்வில்
மனித உடல்,மனம் ,அறிவு குறித்த ஆய்வுகள்.இதன் மூலமே மனித இனம்
ஆப்பிரிக்காவில் தோன்றி அங்கிருந்தே உலக முழுதும் பரவினான் என்பது
கண்டறியப்பட்டது. உலகின் பழமையான வாழும் மனித இனம் புஷ்மேன்[bushmen]
எனப்படும் ஆப்பிரிக்க நாட்டவர்.இவர்கள் பேசும் மொழியே[khoslan] தொன்மை
வாய்ந்ததாக இருக்க வேண்டும் ,இது பல ஒலிவகைகளைக் கொண்டது.
மனித இனம் முதலில் வேட்டையாடியே பிழைப்பு நடத்தினர்,விவசாயம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
....
பகுதி2
இரண்டாம் பகுதியில் பூமியில் உயிரின வரலாற்றில் கால ரீதியான பிரிவுகளை விளக்கி, மனிதப் படிம்ங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளைக் காட்டுகின்றனர்.
.....
பகுதி 3.பரிணாம செயலாக்கம் என்பதை ஜீனோமின் அடைப்படையில் விள்க்குகின்றார்கள். ஒவொரு உயிரினமும் இனவிருத்தி செய்யும் போது ஆண்,பெண் ஜீனோம்(குரோமோசோம்கள்) இணைந்து புதிய உயிர் தோன்றுகிறது. ஜீனோம்கள் இணைவின் போது நிகழும் தவறுகள்(சிறு மாற்றங்கள் mutations) கொஞ்சம் விதியாசமான் வாரிசை உருவாக்குகிறது. நீண்ட கால்த்தில் இது பலவகையான் உயிர் இனங்களை[species] உருவாக்குகின்றன. இதில் சூழலுக்கு பொருந்துபவை மட்டுமே வாழ்கின்றன.மற்றவை அழிகின்றன[natural selection].
...

பகுதி 4.&6 மீண்டும் மனித முன்னோர்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு பற்றி விளக்குகிறார்.
பகுதி 5.புவியியல் காலக் கணக்கீட்டு அடிப்படைகளையும்,அப்போதைய புவி சூழல்களையும் விளக்குகிறார்
...
இதர பகுதிகளிலும் மனித பரிணாமம் குறித்த பெரும்பானமை அறிவியல் விடயங்கள்
விளக்குகிறார். இக்காணொளி போல் மனித பரிணாமத்தை தெளிவாக விளக்கிய காணொளி
இதுவரை கண்டது இல்லை.இக்காணொளியை தயாரித்த ப்ளாக் ரைடர்[Black Ryder]
ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகள் பல.
அனைவரும் கண்டு மகிழ்க.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக