சனி, 25 பிப்ரவரி, 2012

ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?


எழில்
ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?
எழில்

காலிப்பாத்திரம் ரொம்ப சத்தம் போடும்.. நிறை குடம் ததும்பாது என்பது தமிழ் பழமொழி.

வழக்கம்போல யூ ட்யூபில் வீடியோ தேடி பார்த்துகொண்டிருந்த எனக்கு இந்த வீடியோ தட்டுப்பட்டது. இவர் ஒரு இஸ்லாமிய பிரச்சாரகர் போலிருக்கிறது. ஜாகிர் நாயக் என்ற பெயர். இந்தியாவில்தான் இருக்கிறார் போலிருக்கிறது.

http://www.youtube.com/watch?v=BwCn-IT_zZA

இந்த வீடியோவில் ஒருவர் இவரிடம் கேள்வி கேட்கிறார்.

"இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்கள் தங்கள் மதத்தை பரப்பவும், தங்கள் மதத்தை தொடர்ந்து பின்பற்ற கோவில்களும் கட்ட அனுமதிக்கப் படுவார்களா? அப்படியென்றால், ஏன் சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை? ஆனால் முஸ்லீம்கள் லண்டன் பாரீஸில் மசூதிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்?"

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்

"ஒரு முஸ்லீமல்லாதவர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபாலாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கணித வாத்தியாரை நியமிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் 2+2=3 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா, அல்லது 2+2 = 6 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அலல்து 2+2 = 4 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அவர் 2+2 = 4 என்று சொல்லும் நபரைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்கு சரியான கணித அறிவு இல்லை. அதே போல மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை. ஒரு முஸ்லீமுக்கு மட்டுமே மதத்தை பற்றிய சரியான அறிவு இருக்கிறது. மற்றவர்களின் மதமும் , மதத்தை பற்றிய அறிவும் தவறாக இருக்கும்போது, அவர்களது தவறான கருத்தை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் தங்கள் தவறான கோவிலை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? "

கேள்வி கேட்டவர் தொடர்ந்து இதனை கேட்டார்.

"முஸ்லீமல்லாதவர்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். இல்லையா?"

இதற்கு ஜாகிர் நாயக் பதில் கூறியது

"முஸ்லீம் அல்லாதவர்கள் தங்களுடைய குழந்தைகள் 2+2 = 3 என்று சொல்லித்தர எப்படி அனுமதிப்பார்கள்? ஏனெனில் அது தவறு என்று தெரியுமே? அதே போல எங்களுக்கும் இஸ்லாமே உண்மையான மதம் என்று தெரியும். ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்"

இதனை கேட்டு ஆடிப்போய் விட்டேன்.

--
இப்படி உளறும் ஜாகிர் நாயக் உண்மையிலேயே படித்த டாக்டர்தானா என்றுகூட சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.

அவரது முதல் பதிலை எடுத்துக்கொள்வோம்.

2+2 = 4 என்பது கணித அறிவுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதமே 2+2 = 4 போன்ற உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்து மதம் அப்படி அல்ல. இந்து மதத்தில் 1+1 = 2 என்றும் இருக்கும். 1+1 = 10 என்றும் இருக்கும். ஏனெனில், இந்துமதம் ஒரு குருவுக்கோ ஒரு கொள்கைக்கோ இறுக்கமாக கட்டிக்கொண்டு, அதனையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில்லை. திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஒரு மனிதன் அறியக்கூடிய விஷயமும் இருக்கும். பிரபந்தத்திலிருந்து நெகிழக்கூடிய விஷயமும் இருக்கும். தேவாரத்திலிருந்து பெறக்கூடிய ஆன்மீக உணர்வும் இருக்கும். இந்து மதத்தை பல்வேறு ரிஷிகள் வளப்படுத்துகிறார்கள். ஆனால் எந்த ரிஷியும், குருவும் எனக்கு பின்னால் ஒரு குரு வரமாட்டார் என்றோ, எனக்கு பின்னால் வருபவன் எவனையும் நம்பாதே என்றோ சொல்வதில்லை. அப்படி யாரேனும் சொன்னால், இந்துக்களும் அதனை மதிக்கப்போவதில்லை.

1 + 1 = 2 எப்போதுமே உண்மை அல்ல. ஒரு மேகமும் இன்னொரு மேகமும் இணைந்தால் அது 2 மேகங்கள் அல்ல. ஒரு மேகம் தான். நாம் எந்த கணிதம் போடுகிறோம் என்பதை பொறுத்து விடையும் மாறும். Fuzzy logic என்ற கணிதத்தில் இன்னும் வினோதங்கள் எல்லாம் இருக்கின்றன.

1+1 = 2 என்பது தசம (எண் 10 ஐ அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் ஒரு விடை. 1+ 1 = 10 என்பது இரும (பைனரி என்னும் 2 எண்ணை அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் விடை. இரண்டுமே சரியான விடைகள்தான். 1+1 = 2 என்று தான் கூற வேண்டும். 1+1 = 10 என்று சொன்னால் தலையை சீவிவிடுவேன். அப்படிப்பட்ட கணிதத்தை கண்டுபிடிக்கவோ, சொல்லிக்கொடுக்கவோ கூடாது என்று சொல்ல முடியுமா?

1+1 = 10 என்று சொல்லும் பைனரி கணிதத்தை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நாம் இப்படி கம்ப்யூட்டரிலேயே எழுதிக்கொண்டிருக்க முடியாது. நாம் நிதர்சனமாக இப்படி கம்ப்யூட்டரில் எழுதிக்கொண்டிருப்பதற்கு பைனரி கணித வளர்ச்சி தானே அடிப்படை?

இவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், கடவுளை பற்றி நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். அதில் உள்ளதுதான் சரியான கடவுளைப் பற்றிய விளக்கம். கடவுளை சுருக்கி அந்த புத்தகத்துக்குள் வைத்து கட்டிவிட்டேன். கடவுளைப் பற்றி வேறொருவர் இனி சிந்திக்கவோ, அல்லது கடவுளின் மற்றைய பரிமாணங்களை பற்றி பேசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்வது போல இருக்கிறது.

சாதாரண கணிதத்துக்கே இத்தனை பரிமாணங்கள் இருக்குமென்றால், வரையறைக்குள் சிக்காத இறைக்கு எத்தனை பரிணாமங்கள் இருக்கும்?

கரையருகே நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி ஒரு டம்ளரிலே கடல் தண்ணீரை அள்ளிவிட்டு, அம்மா கடலை மொண்டுவிட்டேன் என்று சொல்வது போல இல்லை? சிறுமியாக இருந்தால், சிரிக்கலாம். தலையில் தட்டிவிட்டு போடி கண்ணு என்று சொல்லலாம். அதுவே பெரிய டாக்டராக இருந்தால் என்ன செய்வது?

--

இரண்டாவது பதிலை எடுத்துக்கொள்வோம்

மற்றவர்கள் இஸ்லாமை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதன் காரணம் தங்கள் மதங்கள் உண்மையானவை என்ற உறுதி இல்லாததால் தான் என்று சொல்கிறார்.

இதனை விட இஸ்லாமியர்களுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் வேறு இருக்க முடியாது.

இந்துக்களும் கிறிஸ்துவர்களும் தங்கள் மதம் உண்மையானது என்று கருதினால், முஸ்லீம்கள் இஸ்லாத்தை பரப்புவதை, இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதை தடை செய்யவேண்டும், மசூதிகளை கட்ட அனுமதித்திருக்கக்கூடாது என்று கூறுகிறார். நீங்கள் உங்கள் மதம் உண்மையானது என்று நினைக்காததினால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறீர்கள் என்று கூறுகிறார்.

எனக்கு கிரிஸ்துவ மதத்தை பற்றி தெரியவில்லை என்றாலும், ஓரளவுக்கு இந்து மதம் பற்றி தெரியும் என்பதால் அதனது உலகப்பார்வையை பற்றி கூற முயல்கிறேன்.

இவர் இவ்வளவு காலம் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி புரிந்துகொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.

இந்து மதம், தான் சரியானது அல்ல என்ற காரணத்தால் மற்ற மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது என்று ஜாகிர் நாயக் கருதினால் அவருக்காக நான் பரிதாபப்படத்தான் முடியும்.

மேலே குறிப்பிட்ட எண் கணிதத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைக்கு 1+1 = 2 என்று நாம் புரிந்து வைத்திருந்தாலும், ஒரு ஆன்மீக குரு வந்து ஆன்மீகத்தில் 1+ 1 = 10 என்ற கணிதத்தையும் உருவாக்க முடியும் என்பதை இந்துமதம் அங்கீகரிக்கிறது.

அதனால்தான், குருக்களை பார்த்து இந்துமதம் அஞ்சுவதில்லை. இதனால்தான் பல மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது. புதிய ரிஷிகளையும், குருக்களையும் வரவேற்கிறது. ஒரு சில குருக்கள் தவறாக போதிக்கலாம். அவர்கள் மக்களால் உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஒரு சில குருக்கள் ஆன்மீகத்தை மேலே கொண்டு செல்கிறார்கள். அவர்களை மக்கள் வரவேற்கிறார்கள். பிரேமானந்தாவும் இங்கு தோன்றலாம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் இங்கு தோன்றலாம். பிரேமானந்தாக்கள் இங்கே உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திகளும், மாதா அமிர்தானந்தமயிகளும் உலகத்துக்கே ஆன்மீக குருக்களாக உயருவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியோ மாதா அமிர்தானந்தமயியோ மனிதனின் ஆன்மீகப்பயணத்தின் முடிவல்ல. மனிதனின் ஆன்மீகப்பயணம் முடிவற்றது. மனிதனை தொடர்ந்து பரிணமிக்க வைக்கக்கூடியது.

--

பிரச்னை ஜாகிர் நாயக்கிடம் இருக்கிறது. ஏதோ இஸ்லாமை பரப்புவதாக நினைத்துக்கொண்டு இஸ்லாமியருக்கே உலை வைக்கிறார். இஸ்லாமியர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்றாக ஒரு சமூகத்தில் வாழ்வதையே கெடுக்கிறார்.

சாதாரண இந்துக்களை அவர் தூண்டி விடுகிறார். இந்துமதத்தினை பற்றி முழுமையான அறிவற்ற பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். பல இந்துக்கள் சாதாரணமாக கோவிலுக்கு போவது, தங்கள் சமூகத்து பழக்க வழக்கங்களில் திருவிழாக்களில் கலந்து கொள்வது தவிற வேறு அறியாதவர்கள். இவர்கள் இந்துத் தத்துவங்களை கரைத்துக்குடித்த போதகர்கள் அல்ல. அவர்களை ஜாகிர் நாயக் வெறியேற்றுகிறார். "நீ இந்துமதம்தான் உண்மை என்று நினைத்தால் இஸ்லாமை பரப்ப அனுமதிக்காதே" என்று உசுப்பேற்றுகிறார். "நீ என்னை அனுமதிப்பதற்கு காரணம், உன் மதம் சரி என்று நீ நினைக்காததால்தான்" என்று இந்துவை அசிங்கப்படுத்துகிறார்.

இவ்வாறு இவர் இப்படி பேசுவதைக் கேட்டால், "இந்துக்கள் தங்கள் மதம் உண்மை என்று நினைத்தால், முஸ்லீம்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றுதானே சொல்கிறீர்கள். ஆமாம் அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம். இனி முஸ்லீம்கள் இந்தியாவில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என்று சாதாரண இந்துக்கள் கூறமாட்டார்களா?

என்னுடைய மதம் நல்ல போதனைகளை வழங்குகிறது என்று சொல்வது எல்லோரும் செய்யக்கூடியது. என்னுடைய மதம்தான் உண்மையானது மற்றவர்களது மதம் எல்லாம் பொய்யானது என்று இந்த நவீன காலத்தில் ஒருவர் பேசுவது ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும், வருந்தத்தக்கது.

இப்படி ஒருவர் பேசினால், நிச்சயம் உங்களது மதம் பொய் என் மதம்தான் உண்மை என்று மற்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதனைத்தான் இவர் தூண்டுகிறார்.

நான் என்னவேண்டுமானாலும் இந்துமதத்தை திட்டுவேன், அது பொய்யான மதம் என்று சொல்லுவேன், ஆனால் யாரும் இஸ்லாமை ஒன்றும் சொல்லக்கூடாது என்று அவர் நினைப்பாரேயானால், அவருக்காக பரிதாபப்படத்தான் முடியும். இவர் இந்துமதத்தை பொய்யானது, இஸ்லாம் மட்டுமே உண்மையானது என்று கூறினால், நிச்சயம் இந்துக்களில் சிலர் எழுந்து, இஸ்லாம்தான் பொய்யான மதம், இந்துமதம்தான் உண்மையானது என்று சொல்லத்தான் செய்வார்கள். அப்படி சில இந்துக்கள் சொல்லும்போது, இந்து மத தத்துவங்களை அறிந்த பல இந்துக்கள் அவ்வாறு சில இந்துக்கள் சொல்வதை தவறானது என்றுதான் சொல்வார்கள். ஆனால், அது எந்த காலத்திலும் ஜாகிர் நாயக் கூறியதை சரியாக்கி விடாது.

அப்படிப்பட்ட இந்துக்களை திட்டுவதை விட்டுவிட்டு, ஜாகிர் நாயக் போன்று தூண்டிவிடும் பேச்சு பேசும் நபர்களை கண்டிக்க அனைவரும் முன்வர வேண்டும். முக்கியமாக இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நபர்களை ஒதுக்க வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு இப்படிப்பட்ட உளறுவாயர்கள் ஆபத்தானவர்கள். இப்படிப்பட்ட கிறுக்கர்களை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

அனைத்து உயிர்களுக்கும் அமைதியையும், இன்பத்தையும் நல்கும் வாழ்க்கை நெறியே பவுத்தம். குருட்டு நம்பிக்கைகளை மறுத்து, அச்சத்தை அகற்றி, சிந்தனையை நெறிப்படுத்துவதோடு அவற்றை விவாதத்திற்குள்ளாக்குவதையும் பவுத்தம் வரவேற்கிறது. அது, நம்பிக்கை அடிப்படையிலான விசுவாசத்தை ஊக்கப்படுத்துவதில்லை. புத்தரின் போதனைகள் திபிடங்களாகத் (திபிடகம்) தொகுக்கப்பட்டு, மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.

Budha
சுத்த பிடகம் எனும் பேருரைப் பகுதி, அய்ந்து தொகுப்பு (நிகாயம்)களைக் கொண்டது. இவற்றிலிருந்து புத்தரின் தத்துவக் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகிறது. 1. தீகநிகாயம் (நீண்ட நேருரைகள்) 2. மச்சிம நிகாயம் (இடைப்பட்ட அளவு பேருரைகள்) 3. சம்யுக்த நிகாயம் (உறவுடைக் கூற்றுகள்) 4. அங்குத்தர நிகாயம் (படிப்படியான உரைகள்) 5. குத்தக நிகாயம் (சிற்றுரைத் தொகுப்பு) என்பனவாகும். விநயபிடகம் எனும் நன்னடத்தை மற்றும் மருத்துவப் பகுதி, பிக்குகள் ஒழுக்கம் பற்றிய நெறிகளை வரையறுத்துக் கூறும் அய்ந்து நூல்களாக உள்ளன. அபிதம்ம பிடகம் எனும் உன்னதக் கோட்பாட்டுப் பகுதி, ஏழுநூல்களைக் கொண்டது. இவை, புத்தருடைய கருத்துகளின் விளக்க உரைகள் உள்ளடங்கியவை.

அறிவுடையோர் தங்கத்தைச் சுட்டு, வெட்டி, உரைத்துப் பார்த்து ஏற்பது போலவே நீங்களும் என் சொற்களையும் ஆய்ந்த பின்னரே ஏற்க வேண்டும். என்பால் இருக்கும் மதிப்பால் ஏற்றுவிடக் கூடாது என்றார் புத்தர். மானுடச் சமநிலை விழைந்த புத்தர், தனது கருத்துகளை மக்களிடம் திணிக்கவில்லை. அவருடைய கருத்துகளை மக்கள் தங்கள் மீது திணித்துக் கொண்டனர். மனித இன வரலாற்றில் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முக்கியமான மனிதர் புத்தர். அவர் அறிவித்த நாகரீகம்தான் உயர்ந்த நாகரீகம் ஆகும். புத்தருடைய குணங்களை மூன்று விதமாகச் சொல்லலாம்: 1. எல்லையில்லாத அறிவு 2. முழுமை பெற்ற தூய்மை 3. உலகத்தோடு பொருத்தப்பாடு. புத்தர் உண்மையையே போதித்தார். அதனால் அது எக்காலத்துக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியதாக அமையப் பெற்றது.

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் தேசியக் கொள்கை என்ற கோணத்தில், கோட்பாடு என்ற ஒன்று இருந்ததேயில்லை. பவுத்த நெறியைத் தனது வாழ்க்கை நெறியாகக் கொண்ட அசோகரின் ஆட்சிக் காலத்தில்தான், புத்தருடைய அறவழியில் இம்மண்ணிற்கு ஒரு பரந்த கோட்பாட்டு எல்லை அமைந்தது. புத்தர், மனித யுகத்தில் மலர்ந்த கோட்பாடுகளின் முன்னோடி ஆவார். வேதகால அலங்கோலங்களை எதிர்த்துத் தோற்றுவிக்கப்பட்ட பவுத்த யுகம், கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தொடக்கம் பெற்றது. பவுத்தர்களின் சொல்லாலும், செயலாலும் வளர்க்கப்பட்ட புத்தரின் போதனைகள், 200 ஆண்டுகளைக் கடந்து பாலிமொழியில் பிரதியாக்கப்பட்டு பிரச்சாரக் கருவியாகியது. காலப்போக்கில் பவுத்தம் வளர வளர, ஆயப் பார்ப்பனர்களின் வேதமதம் கேள்விக்குறியாயிற்று.

பவுத்த தம்மத்தின் அடிப்படையான கொள்கை என்ன? இந்தக் கேள்விகளைப் புரிந்து கொள்ளாமல், புத்தரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ‘‘புத்தருடைய காலத்தில், பார்ப்பனியம் மூன்று தூண்களைக் கொண்டிருந்தது: 1. வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும், என்றென்றும் மாறாததாகவும் கருதப்பட்டது 2. யாகம் 3. சதுர்வர்ண தர்மம் (நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்ட அனைத்தும் அது அறிவுக்கு ஏற்புடையதா? இல்லையா? என்பதெல்லாம் பொருட்டல்ல அது தவறே இல்லாதது. வேதங்கள் புனிதமானவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்காகக் கருதினார். வேதங்களை ஏற்பதற்குப் பதில், அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது'' (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் - மராட்டிய நூல் தொகுப்பு : 20; பக் : 327).

பிறவி முதலாளிகளான பார்ப்பனர்களின் வாழ்க்கை முறை பற்றி புத்தர் குறிப்பிட்டதாவது: பார்ப்பனர்கள் எனது நற்கருத்தை ஏற்றுக் கொண்டு தங்களைத் திருத்திக் கொண்டு வாழ மாட்டார்கள். பார்ப்பன ரிஷிகள் என்பவர்களோ புறங்கூறுதல்,ஒருவருக்கொருவர் சண்டையை மூட்டி விடுதல், சாதிப் பிரிவைத் தூண்டி விடுதல், வருங்காலத்தைப் பற்றிக் கூறுவதாகப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுதல், அய்தீகம் சடங்குகள் என்ற பெயரால் மக்களை மடமையில் ஆழ்த்தி, அதன் மூலமே தங்கள் இனத்தின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

வேதத்தில் எந்தப் பாட்டிலாவது பிரம்மனை நேருக்கு நேராகப் பார்த்ததாகப் பாடியுள்ளார்களா? தெரியாத, பார்க்காத, காணடியாத ஒன்றுக்கு வேதம் வழிகாட்டும் என்பது மடத்தனமானது. ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு செல்லுகின்ற பார்க்க இயலாதோரின் தன்மையைப் போன்றதே வேதம் என்று சொல்லுவதும். முன்னால் செல்கின்றவனுக்கும் ஒன்றும் தெரியாது. நடுவில் செல்கின்றவனும் காணமுடியாது; இறுதியாகப் போகிறவனும் பார்க்க முடியாது. அது போலவே வேதப்பாடல்களும் குருட்டுத்தனமானது. பைத்தியக்காரத்தனமானது. பொருளற்ற வெற்றுச் சொற்களாலானது என்றார் புத்தர். இந்தப் பார்ப்பனர்கள், பொறாமை, கர்வம், வஞ்சகம் நிறைந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு நல்வழிகாட்ட முடியும் என்று நம்புகிறீர்களா? பார்ப்பனர் நல்லவராவது, அவர்கள் பிறவிக்குணத்திற்கே மாறுபட்டது. அவர்களுடைய வேதம் என்பது நீரற்ற பாலைவனம். வழியற்ற கோடு. பாழடைந்த வீடு. பொட்டல் காடு என்றார் புத்தர். மேலும் அவர், பார்ப்பனர்கள் தங்கள் சுகத்தை, தாங்கள் மட்டுமே அனுபவித்து வாழும் இன்பநுகர்ச்சியை கைவிட்டு, அறநெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டுமென்ற பாதையில் செல்லவே மாட்டார்கள் என்றார்.

பார்ப்பனர், சத்தியர், வைசியர், சூத்திரர் என்று மக்களைப் பிரிப்பதானது - விறகு, குச்சி, புல், வறட்டி ஆகியவைகளால் உண்டான நெருப்பை - விறகுத் தீ, குச்சித் தீ, புல் தீ, வறட்டித் தீ என்று கூறுவது போல் அல்லவா இருக்கிறது என்றார் புத்தர். பார்ப்பனர்களால் போற்றப்படும் ஏற்றத் தாழ்வு, அவர்களுக்கான அதிகாரப்பூர்வக் கோட்பாடாகும். பார்ப்பனியம் ஏற்றத்தாழ்வோடு திருப்தியடைந்து விடவில்லை. பார்ப்பனியத்தின் மூலம், படிநிலைப்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வான சமூகத்தை நிலைநிறுத்துவது. அது, வளர்ச்சி நிலையன்று. பார்ப்பனியம் சமத்துவத்திற்கு எதிரானது.

சதுர்வர்ண விதிகளைக் கவனமாய்ப் பரிசீலித்த புத்தர், பார்ப்பனியத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட சமூக அமைப்பு முறை தவறானது என்றார். உண்மை வாழ்முறைக்கு பார்ப்பனியம் எதிர்மறையாக இருப்பதால், புத்தர் அதை ஒழிப்பதைத் தன் தன்மையான செயல் திட்டமாகக் கொண்டார். பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட கர்மவிதியை முறியடித்து முன்னேறினால்தான் சமநீதிக்கானப் புரட்சி சாத்தியமாகும் என்றார். ஒரு சமூக - பொருளாதார - அரசியலமைப்பு என்ற முறையில், தான் எதிர்கொண்ட பிறவி முதலாளித்துவத்தின் (பார்ப்பனியத்தின்) முரண்பாடுகளைப் புலப்படுத்தினார். வர்ண - சாதி சமூக உறவுகளை ஒழித்து, புதிய சமூக உறவு முறைமைகளை உருவாக்கும் சமூகச் சக்திகளாக சூத்திரர்களையும் பெண்களையும் (வர்ணாசிரம அமைப்பில் இவர்கள்தான் அடிமைகள்) வரையறுத்துக் கூறினார்.

புத்தர், மானுடத்தில் ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்தினார். அவர், பால் - இன - சாதி ஏற்றத்தாழ்விற்கும், பாரபட்சத்திற்கும் எதிரானவர். பிறப்பால் எவரும் கீழ்சாதி இல்லை; பிறப்பால் எவரும் உயர்சாதி இல்லை என்பதே அவரது பிரகடனமாகும். எவரொருவர் முன் கோபடையவரோ, வஞ்சகரோ, தன்னலடையவரோ அவரே கீழான மனிதர். எவரொருவர் வீணாக உயிர்களை வதைக்கிறாரோ, கொல்கிறாரோ, ஒடுக்குகிறாரோ, கருணையற்றவரோ அவரே கீழான மனிதர். எவரொருவர் பொய்யுரைப்பாரோ, களவாடுகிறாரோ, கடனைத் திருப்பித் தராதிருக்கிறாரோ, அவரே கீழான மனிதர். நண்பர், உறவினர் ஆகியோரிடத்தில் பிறன்மனை விழைபவர் எவரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் தாயை, தந்தையை, சகோதரர்களை, சகோதரிகளை, உற்றார் - உறவினரைத் தாக்குகிறாரோ, ஏசுகிறாரோ, இழிவுபடுத்துகிறாரோ அவரே கீழான மனிதர்.

எவரொருவர் நல்லறிவுகளை மறைத்து விடுகிறாரோ, பிறரைத் தவறாக வழிநடத்துகிறாரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் தீயவை புரிந்துவிட்டு நன்மை புரிந்ததுபோல் நடக்கிறாரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் பிறர் வீட்டிற்குச் சென்று நல்விருந்துண்பவராய், தம் வீட்டிற்கு வருபவரை விருந்தோம்பாதவராய் இருக்கிறாரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் பொது வாழ்வுத் தொண்டருக்கு தானமளிக்காமல், அவர்களை வஞ்சித்து வெறுப்பூட்டுகிறாரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் தற்பெருமையால் தன்னை உயர்த்திப் பேசி பிறரைத் தாழ்த்துகிறாரோ, அவரே கீழான மனிதர்.

எவரொருவர் தீயவை புரிய வெட்கப்படாமல் அஞ்சாமல் இருக்கிறாரோ, அவரே கீழான மனிதர். இத்தகைய மனிதர்களையே ஒதுக்கி வைக்கப்படத்தக்க கீழான மனிதர்களாக புத்தர் வகைப்படுத்தினார். புத்தர், நல்ல நடத்தை மட்டுமே நிரந்தர நன்மைக்கு - நிரந்தரமான அடிப்படைக்கு உத்திரவாதம் ஆகுமென்றார். சமூக விளைவின் அடிப்படை நல்லவர்களை உருவாக்க வேண்டுமேயொழிய வல்லவர்களை, சூழ்ச்சியாளர்களை, சுயநலக்காரர்களை அல்ல என்றார். ஒரு மனிதன் நிலை, சூழ்நிலையில்தான் ஆளப்படுகிறதேயொழிய, பிறப்புரிமையில் ஆளப்படுவதில்லை என்றார். இந்தியத் துணைக்கண்டத்தில் பார்ப்பனியச் சமூக சூழ்நிலைமையில் மனித அந்தஸ்து, மனித வாழ்க்கை இழந்த வெகுமக்களுக்காகவே தன் சங்கத்தைத் தொடங்கினார்.

யாரொருவரும் பிறப்பினால் ஒதுக்கப்பட்டவர் இல்லை; யாரொருவரும் பிறப்பினால் உயர்ந்தவர் இல்லை. சாதியல்ல; சமத்துவமின்மையல்ல; உயர் குலம் - தாழ்ந்தகுலம் அல்ல. அனைவரும் சமமானவரே. இதுவே என் கடப்பாடு என்ற புத்தர் சமூகச் சமத்துவமின்மை வரலாற்று வளர்ச்சியின் விளைவன்று; சமத்துவமின்மை பிறவி முதலாளித்துவத்தின் (பார்ப்பனியத்தின்) ஆதிக்கக் கோட்பாடே என்று முன்மொழிந்தார். புத்தர், பார்ப்பனியத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கியெறியவே இயக்கமானார். வர்ண சாதியச் சமூக அமைப்பின் மிக வலியவையாகவும், சமத்துவத்திற்கான முன்னோடிகளில் எவருக்கும் முந்தியவராகவும், மிக முழுமையானவராகவும், மிக உறுதியானவராகவும் திகழ்ந்தார். ஆம். மனித இனத்தின் முதல் புரட்சியாளர் அவர்.

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

நான் இந்த உலகத்துடன் முரண்படுவதில்லை; இவ்வுலகத்தில் உள்ள மனிதர்கள் தான் என்னுடன் முரண்படுகிறார்கள். உண்மையை நேசிக்கும் ஆசிரியன், பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் போது, கடவுள் கருத்துகளை இறுதியென நம்பி வாழும் மக்கள் முரண்படுவது இயல்பு. இம்முரண்பாட்டை நீக்க, நாம் மக்களை வெறுக்க வேண்டியதில்லை. அவர்களின் நெஞ்சங்களில் ‘தம்ம'த்தை விதையுங்கள். அவர்கள் மனம் தெளிவடையும். முரண்பாடுகள் நீக்கப்படும். - புத்தர்

Budha
என்னதான் செய்வது? எங்கிருந்து தொடங்குவது? யாரை, யார் எதிலிருந்து எவ்வாறு விடுதலை செய்வது? அச்சத்தினின்றும், அறியாமையினின்றும் விடுதலை பெற வேண்டியதுதான் - மானுட விடுதலையின் தற்படியாக அமையப் பெறுகிறது. அச்சமென்பது பசி, தாகம், உடலின்பம் போன்ற இயற்கை உணர்ச்சியன்று. இயற்கையின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள இயலாத போது, இந்தச் செயற்கை உணர்ச்சியான அச்சம், வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், மனித இன எதிரிகளால் நன்றாக உரமூட்டி வளர்க்கப்பட்டு வருகிறது.

சமூகத்தில் நங்கூரம் போல் இறுகிக் கட்டப்பட்டிருக்கும் அச்ச உணர்ச்சி, ஆதிக்க வர்க்கம் புரியும் திசை திருப்பலின் விளைவால் ஏற்பட்டதாகும். அநீதியை எதிர்க்காமல் பின்வாங்குதல் என்பது, அச்ச உணர்ச்சியால் ஏற்படும் கொடுமையான நோய். அச்சம் என்பது, மனிதர்கள் மீது செயற்கையாக வலிந்து சுமத்தப்பட்டு ஏற்கப்படும் பண்பாகும்.

ஆனால், மனிதர்களது வீரம், குஞ்சுகளைக் கொத்த வரும் பருந்துகளை எதிர்க்கும் தாய்க் கோழி போல இயற்கையானது. மனிதருக்குள் அச்சம் வீரம் இணைந்தே இருக்கின்றன. வரலாற்றில் மனித வீரம் நேரிய சாதனைகளையே செய்திருக்கிறது. எனவேதான் வரலாற்று வளர்ச்சிகளின் முழுப்பயனையும் நுகர்வோர், தங்கள் வாழ்வு நலன்களைக் கட்டிக் காக்க மனிதருள் அச்சத்தைப் புதைக்கின்றனர். அச்சத்திற்குக் கட்டுப்பட்ட பிறகு, மனிதர்களது அகமும் முகமும் சிதைக்கப்படுகின்றன. மனித இன வரலாற்றில் சுயநல ஆசையிலிருந்து மட்டுமல்ல, அச்சத்திலிருந்து வெளிவரவும் முதன் முதலில் வழிவகுத்தவர் புத்தர் ஆவார்.

மலையை அல்லது பெரும் பாறாங்கல்லை உடைப்பதற்கு ஏதேனும் ஓரிடத்தில் உளியையோ, வெடியையோ வைக்க வேண்டியிருக்கிறது. எந்த இடத்தில் வெடி வைத்தால் உடைப்பதற்கு எளிதாக - பரவலாக வெடிப்புகள் விழும் என்பதைத் தெரிந்து வைக்க வேண்டும். மானுடத்தின் எதிர்மறைகளுக்கு எதிராக இந்த வியூகத்தை முதன் முதலில் கற்றுக் கொடுத்தவர் புத்தரே ஆவார். எங்கெல்லாம் மனிதர்கள் தம் ஆராய்ச்சி அறிவை இழந்து விடுகின்றனரோ, அங்கெல்லாம் ஆதிக்கத்தை வழிபடும் உணர்ச்சி இயல்பாகத் தோன்றி விடுகிறது. மனிதனின் சுயநல உணர்ச்சியும், பாதுகாப்பு உணர்ச்சியுமே வழிபாட்டு மனநோய்க்கு அரண்களாகி விடுகின்றன. மனிதர்கள் இந்த நோயிலிருந்து மீள முடியுமா? உறுதியாக மீள முடியுமென்று, மீட்சிக்கான வழியாக இருந்து, மானுடத்தை வழி நடத்தியவர் தான் புத்தர்.

புத்தர் மீட்சிக்கான வழியை, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விடையிலிருந்து தொடங்கினார். எப்படியும் சாகப் போகிறோம். எனவே, சமூக பயங்கரவாதங்களோடு மோதிவிட்டுச் சாவோம் என்ற கடமையை நோக்கி வாழ்க்கையைத் தொடங்க கற்றுக் கொடுத்தவர் புத்தர். அவர் கற்றுக் கொடுத்த வாழ்க்கையை நோக்கி வாழப் புறப்பட்டவர்கள் தான் - அச்சத்தின் நோயிலிருந்தும் வழிபாட்டின் மனநோயிலிருந்தும் மீள முடியும்; மற்றவர்கள் மீளுவதற்கும் துணைபுரிய முடியும்.

இத்துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, சமூக பயங்கரத்தையும், வழிபாட்டு உணர்ச்சி என்ற மனித இயல் குறைபாட்டையும் - பல நிலைகளில் கெட்டிப்படுத்தியது பார்ப்பன வேத (இந்து) மதமே ஆகும். இந்த பார்ப்பன - பார்ப்பனியக் கருத்தியலை அதன் மூலத்திலேயே முற்றுகையிட்டு, மக்களின் மனத்தில் கனறும் அச்சாம்பலால் மூடப்பட்டிருந்த வீரத்தை வெளியே கொண்டு வந்த முன்னோடி புத்தரே ஆவார். இயற்கையை உள்ளது உள்ளவாறே புரிந்து கொள்ள வேண்டும். அதைக் கயமை மனதோடு கூடிய கற்பனைத்திறன் கொண்டு முரண்பாடான அர்த்தத்தைக் கற்பித்து, அதற்குள் மக்களைச் சிக்க வைத்து மண்டியிடச் செய்யக் கூடாது என்றார் புத்தர். ஒரு தலைமுறையினரின் தவறான நம்பிக்கை, இனம் புரியாத அச்சம், ஒன்றிக் கொண்டிருக்கும் அறியாமை, பல தலைமுறைகளுக்கும் தொடரும். அதனால் பல தலைமுறை தொடர்ந்து கெடும் என்று எச்சரித்தார் புத்தர்.

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்க வழக்கம் என்பதற்காகவோ - நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டதனால் அது புனிதமானது என்பதற்காகவோ - தாய் - தந்தையர், ஆசிரியர் சொல்லியது பற்றி நடந்தது என்பதற்காகவோ - எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற புத்தர், நம்டைய அறிவார்ந்த சிந்தனை எப்படி வழி நடத்துகிறதோ, அதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; நமக்கு நம்முடைய அறிவுதான் வழிகாட்டி என்றார்.

மனிதர்கள் உண்மையையும், மெய்யான உண்மையையும் அறிய வேண்டும். அவர்களுக்குச் சுதந்திரம் மிக மிக அவசியமானதாகும். உண்மையைக் கண்டறிய ஒரே வழி கருத்துச் சுதந்திரமே என்றார் புத்தர். மனிதர்களின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானிலிருந்து விழுகின்றனவா இல்லை, மூளையில் இயல்பாக உள்ளனவா? அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும்தான் தோன்றுகின்றன என்றார். மனிதர்களை அவர்களின் மனம் எத்தன்மை உடையதாய் ஆக்குகிறதோ அப்படியே அவர்களாவார்கள்.

மனதின் நன்மையை நாடும் பயிற்சியே அறவழியின் முதற்படிக்கட்டு என்றார் புத்தர். மனிதன் சிந்தனை, அவனியிலிருந்து புறப்பட்டு, கடவுள்களின் உலகத்தை நோக்கி திருப்பப்படுவதை புத்தர் தடை செய்தார். மனிதர்களின் தேடலை உள்நோக்கி வழிநடத்தி, அவர்களுக்குள்ளேயே ஆற்றலை உணரச் செய்தார்.

உலகின் எல்லா மதங்களும் அதனதன் வர்க்க நலன்களுக்கேற்ற வகையில் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன. ஆனால், ஒழுக்கம் அவைகளின் அடிப்படையல்ல. ஒழுக்கமென்பது, மதம் என்ற எஞ்சினுடன் இணைக்கப்படும் தொடர்வண்டிப் பெட்டி போலத் தான். தேவைக்கேற்ப அது இணைக்கப்படும்; கழற்றப்படும். உண்மையில் மதத்தில் ஒழுக்கத்திற்கு இடமேயில்லை. உலகம் பிரம்மனாலோ, ஈசுவரனாலோ படைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கு கவலைகளும் தொல்லைகளும் ஏன் ஏற்படுகிறது? நன்மை, தீமை இரண்டுக்குமே கடவுளர்கள் பொறுப்பாளிகள் என்றால், அவர்களைவிட மோசடிக்காரர்கள் யார் இருக்க முடியும்? பிரம்மன், ஈசுவரன் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள் என்றார் புத்தர்.

“உலகின் துன்பங்கள் அனைத்தின் ஊற்றுக் கண்ணும் அயோக்கியத்தனம் என்பதைக் காட்டிலும், குருட்டு விசுவாசமென்னும் முட்டாள்தனமாகவே உள்ளது.'' புத்தர் இதை அனுமதிக்கவே இல்லை. “ஒருவருக்கு தன்னுணர்வு இருப்பின் அவர் தன்னை வெல்லட்டும்'' என்றார். ஒருவர் தனக்குத்தானே முழுமையில் தற்காப்போன் ஆவார்; வேறொரு காப்பாளர் யாருக்க முடியும்? தன்னைத் தான் தற்காக்கின்; பெறற்கய காவலை ஒருவர் பெற்றவனாகிறார் என்றார்.

பரிசீலனை என்பது கருத்தரித்து பத்து திங்கள் காத்திருப்பதற்கு ஒப்பானது. பிரச்சனையைத் தீர்ப்பது என்பது பிரசவ தினத்திற்கு நிகரானது. குறையற்றதென ஏதுமில்லை. இறுதியானது என ஏதுமில்லை. அனைத்தும் மறுபசீலனைக்கும், மறு சோதனைக்கும் உள்ளாக்கப்பட வேண்டும். மறுசோதனைக்கும் அவசியம் எழும் போதெல்லாம் மறுபசீலனை அவசியம் என்றார் புத்தர்.

மக்கள் மத்தியில் நாகரீகமும் தொடங்கிய காலத்தில் மக்களை முட்டாள்களாக்கி அடிமைகளாகச் செய்யவும், தங்கள் சொந்த நலன்களைப் பெருக்கி உரிமை - உடைமை - ஆண் முதலாளிகளாகவும், சில ஏமாற்றுக்காரர்களால், மனித அவமதிப்புக்காரர்களால், உழைப்புச் சுரண்டல்காரர்களால் உருவாக்கப்பட்டதே கடவுள் ஆகும். நமது அறிவுக்கு மேற்பட்ட ஆற்றல் என்று ஒன்று இல்லவே இல்லை. நன்மைக்கும் தீமைக்கும் நமது அறியாமையே முழு முதற்காரணம். பட்டறிவு மூலம்தான் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும் என்று மொழிந்த புத்தர் உலகத்திற்குப் பாதுகாவலரோ, பேணுபவரோ என்பதாக ஒருவரும் இல்லை என்றார். உலகமென்பது இடையறாது இயங்கிக் கொண்டும், அதே சமயம் மாறிக் கொண்டும் உள்ளது. மாற்றம் என்பதே உலகத்தின் பொதுவிதி என்றும் புத்தர் அறிவித்தார்.

Budhism
அறவொழுக்க ரீதியிலான சர்ச்சைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட புத்தருக்கு, கடவுளின் தேவை ஏற்படவே இல்லை. கடவுளுக்கு ஒழுக்கத்தில் பங்கு இல்லை என்பதுதான் புத்தரின் முடிந்த முடிவு. இவ்வுலகில் கருணையே இல்லாமல் சில அடிதூரம் நடப்பவன், தானே தனக்குக் கோடித் துணி உடுத்திக் கொண்டு தனது சவத்தைத் தானே புதைக்கப் புறப்பட்டவன் ஆவான். ஆனால், கருணையே வடிவான புத்தர், ஒருவர் எல்லோருக்காகவும்; எல்லோரும் ஒருவருக்காகவுமான மானுட வரலாற்றில் எங்கெல்லாம் மனிதர்கள் தங்கள் ஆராய்ச்சி அறிவை இழந்திருந்தார்களோ, அங்கெல்லாம் வழிபாட்டு உணர்ச்சிக்கு அடிமையாக இருந்தார்கள். அச்சம் என்பது, மனிதர்கள் மீது ஆதிக்க மனிதர்களால் செயற்கையாக வலிந்து சுமத்தப்பட்டு ஏற்கச் செய்யும் ஓர் இழிவான செயலாகும்.

ஒழுக்க விதிகள் மனிதருக்கு நன்மை புரிபவையாகவும், அவை கடவுள் விருப்பத்தின் விளைவுகளாகவும் சொல்லப்படுகின்றன. கடவுளே உலகைப் படைத்தவர் - கடவுளே அதை ஆள்பவர் - கடவுளே பவுதீக விதிகளுக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் கர்த்தா என்கிறார்கள். மனிதர்கள், அவர்களைப் படைத்த கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அந்தக் கீழ்ப்படிதலே ஒழுக்க நியதியை நிர்வகிக்கிறது என்கிறார்கள். ஒழுக்க விதி கடவுளிடமிருந்து தோன்றியதென்றால், கடவுளே ஒழுக்க நியதியின் தொடக்கம் என்றால், மனிதர்கள் கீழ்ப்படியாமல் தப்பிக்க முடியாதென்றால், ஏன் இந்த உலகில் ஒழுக்கச் சீரழிவு மிகுந்துள்ளது என புத்தர் வினவினார். ஒழுக்க நியதி மனிதர்களைப் பொறுத்ததேயன்றி வேறெதையும் பொறுத்ததல்ல. ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதாவதொரு மனிதச் செயல்பாட்டாலோ, இயற்கை இசைவாலோ விளைவதே என்றார் அவர்.

கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்று யாராலும் நிரூபிக்க முடியாது. உலகம் பரிணமித்ததே அன்றி படைக்கப்பட்டதல்ல. கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த மதமும் யூகத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும். எனவே, கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த வழியும் ஏற்பதற்கு உரியதல்ல. அவை மூட நம்பிக்கையை உருவாக்குகிறது. புத்தர், கடவுள் நம்பிக்கை என்பதை மிகவும் அபாயகரமானதாய்க் கருதினார். ஏனெனில், கடவுள் நம்பிக்கை பூசையிலும், பிரார்த்தனையிலும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. பூசையிலும், பிரார்த்தனையிலும் கொண்ட நம்பிக்கை புரோகிதர் - பூசாரி நிலையைத் தோற்றுவிக்கிறது. புரோகிதர் -பூசாரி - குருமார் ஆகியோர் தீய புத்திசாலிகளாகி, மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் பகுத்தறிவு நோக்கின், சமநோக்கின் வளர்ச்சி முற்றாக அழிக்கப்படுகிறது என்றார் புத்தார்.

மதத்தின் மய்யப்புள்ளி மனிதர்களுக்கும் கடவுளர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்கக்கூடாது என்பதே புத்தன் கருத்தாகும். மதம் என்பது, மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க வேண்டும். எல்லோரும் இன்புறும் நோக்கில் ஒருவர் மற்றொருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதே மதத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் புத்தர்.

“உலகம் என்பது இடை யறாது இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் உள்ளது. உலகிற்குப் பாதுகாவலோ, பேணுபவரோ ஒருவருமில்லை. நமக்குரியது ஏதுமில்லை; நமக்குப் பிறகு நாம் அனைத்தையும் விட்டுச் செல்கிறோம். உலகம் குறைபாடு உடையதாய், சுயநிலம் மிக்கதாய், அடிமைப்படுத்துவதாய், அவாவுற்றதாய் உள்ளது என்ற வரையறையினைத் தந்த புத்தர் என்னிடம் தங்கமோ, வெள்ளியோ வேறெந்த செல்வமோ இல்லை. ஆனால், தூய வாழ்வுக்குரிய நற்செல்வங்கள் என்னிடம் உள்ளன. தூய வாழ்வுக்குய நன்னெறி, வாழ்க்கைப் பாதையே ஆகும். மனதைப் பண்படுத்தவும், மானுட இன்பங்களின் பேரின்பமான உன்னதத்தை அடையவும், ஒருவர் தம் வாழ்வை அர்ப்பணித்து பிறர் வாழ முயல வேண்டும் என்றார் புத்தர்.

புத்தரின் முதல் நோக்கம் பகுத்தறிவுப் பாதைக்கு வழிநடத்துவது. ஏனென்றால், பகுத்தறிவின் நீட்சியே பொதுவுரிமை - பொதுவுடைமையாகும். இரண்டாவது நோக்கம், உண்மையைத் தேடிச் செல்ல மக்களைச் சுதந்திர மனிதர்களாக்குவது. அவருடைய மூன்றாவது நோக்கம், மூடநம்பிக்கையின் பலமான மூலத்தை அதாவது எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையைத் தகர்த்தெறிவது ஆகும்.

இந்த பூமியில் மானுட வாழ்க்கைச் சூழல்கள், மனிதர்களோடு பிறந்த உணர்வின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளுதல், அந்த உணர்வுகளின் உருவாக்கம், வரலாறு மற்றும் மரபுகளின் விளைவாக மனித உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றால் மனிதர்களுக்கு விளையும் கேடுகள் ஆகியவை பற்றிய விசாரணை - ஆய்வு ஆகியவற்றால் விளைந்தது என்னும் பொருளில் புத்தரின் மார்க்கம் ஒரு புதிய கண்டுபிடிப்பேயாகும்.

பவுத்த நாத்திகத்தின் அய்ந்து முக்கியத் தத்துவங்கள்

* இயற்கையாகக் காணப்படும் திடப் பொருள், அதனுள்ளிருக்கும் உயிரிகள், அதன் ஆற்றல் இவைகளினால்தான் உலகம் என்று சொல்லக்கூடியது ஆனது.

*அனுபவங்களிலிருந்துதான் எல்லாவித அபிப்பிராயங்களும் தோன்றுகின்றன. ஆகையினால், கடவுளைப் பற்றிய ஓர் எண்ணத்தையோ அல்லது கருத்தையோ அல்லது காயத்தையோ மனிதர் கொள்ளவே கூடாது.

*அவயங்களின் அமைப்புகள் கற்பனை செய்யப்பட்டவை அல்ல; இயற்கையின் கோரிக்கைகளின்படி அவை வேறு துணையின்றி விருத்தியானவை.

*சர்வவல்லமை உள்ளவரும், மனிதர்களின் சுகத்தில் கவலை பூண்டு எப்பொழுதும் கவனித்துக் கொண்டு வருபவருமாகிய ஒருவர் உண்டு என்னும் எண்ணத்தை, உலகத்திலிருக்கக் கூடிய துன்பங்கள் - தீமைகள் பிரத்தியேகமான உண்மைகளால் தகர்த்தெறியப்பட வேண்டும்.

*இவ்வுலகத்தில் இப்பொழுது ஒருவர் அனுபவிக்கக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமேதான் - அவருடைய நடத்தைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

நீண்ட நெடுங்காலமாகப் பெண்ணைவிட ஆணின் கையே மேலோங்கி இருந்து வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் பெண்ணைவிட ஆணே ஆதிக்கமுள்ளவனாக இருக்கிறான். வழிவழியாகப் பெண்ணைவிட ஆணுக்கு அளிக்கப்பட்டு வருகிற இந்த உயர்வினால் பெண்களுக்கு சமூகப் பங்களிப்பு மறுக்கப்பட்டு, ஆணின் விருப்பங்களே ஆலோசனைக்கு உரியதாக இருந்து வருகிறது. சமய, சமுதாய, பொருளாதாரம், அரசியல் தொடர்பான அனைத்து வகையான அநீதியான தடை ஆணைகளை ஆக்கித் தருபவன் என்ற வகையில் ஆண் இந்த ஆணைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கிறான். இந்த ஆணாதிக்க சமூக நிலைமையில், ஒரு சாதியில் உள்ள ஒரு பெண்ணை நடத்தும் அதே முறையில் ஆணை நீங்கள் நடத்த முடியாது.

budha
ஒரு காலத்தில் மனிதர்கள் கும்பலாக, குழுவாக, குலமாக வாழ்ந்த காலத்தில் வர்க்கப் போராட்டங்களில்லாத பேரின்ப சாம்ராச்சியத்தின் முன்மாதிரிகளாகவே பெண்களும் ஆண்களும் இருந்தனர். அக்காலத்தில் ஒட்டுமொத்த உழைப்பு, ஒட்டுமொத்தப் பங்கீடு, ஒட்டுமொத்த மகிழ்ச்சி என்பது, தாய் தலைமையின் ஆளுமைக்குள் அடக்கம் பெற்றுத் திளைத்தது. அப்போது தனிச் சொத்துரிமை என்பது இல்லை. தனி உரிமை என்பதும் இல்லை.

மானுடத்தில் இச்சுவடுகள் பதிந்து யுகங்களைத் தாண்டி வரும் வேளையில், இந்த மனோரம்யமான பாதையில் தனியுடைமை முட்கள் முளைத்தன. அது, "சொத்தே இனி மனிதர்களை ஆளும்' என்று மானுடத்தில் பிரகடனப்படுத்தியது. தாய் உரிமையின் நிலையை ஆணாதிக்க தந்தை உரிமை வெற்றி கொண்ட பிறகே, கும்பல்கள் - குழுக்கள் - குலங்கள் சிதறடிக்கப்பட்டு, குடும்பமாகச் சிறுத்துப் போன பிறகே தனிச் சொத்துரிமைக்குடி நாட்டப்பட்டது. வழி வழிச் சொத்துமையை நிலைநாட்ட ஆணுக்கு வாரிசைப் பெற்றுத்தரும் எந்திரமாக ஆக்கப்பட்ட பெண், ஆணால் ஆளத்தக்க ஒரு கருவியாகவும் ஆக்கப்பட்டாள்.

ஆண் "மகா புருசர்கள்' பெண்கள் மீதான அடக்குமுறைக்குத் "தெய்வீக உரிமை' கொண்டாடினார்கள். எல்லா கடவுளர்களும், கடவுளர்களின் கதைகளும் கட்டளைகளும் ஆண்களுக்கே துணையாயின. பெண்களுக்கு வரலாறு இல்லை என்பதை ஒவ்வோர் ஆணின் தத்துவம் பகிரங்கமாகவே நடைமுறைக்கு வந்தது.
ஆண்களுக்குள் எவ்வித முரண்பாடுகள் இருந்தாலும் எஜமான ஆண், அடிமை ஆண் என அவர்கள் பிரிந்து நின்றாலும், இந்தப் பெண் அடிமைகளை யார் ஆளுவது என்ற அதிகாரப் போட்டியில் ஆண்கள் அனைவரும் ஒருமித்து ஓரணியிலேயே நின்றனர்.

பெண்ணை ஆணுக்குள் அடக்கிப் பார்த்த சிந்தனை செயலே தந்தை, தமையன், ஆசிரியன், தலைவன் போன்றோர் வழிபாட்டுக்குரியவர்கள் என்ற நிலையை இயல்பாக ஏற்படுத்தியது. மானுடம் முதலில் பிளவுண்டு போனது, ஆண் எஜமானன்; பெண் அடிமை என்ற முறைமையில்தான். மானுட உலகில் ஏனைய ஆதிக்கச் சமூக அமைப்பு போலவே, இந்தியத் துணைக்கண்ட பார்ப்பனியச் சமூக அமைப்பிலும் பெண்கள் ஆண்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டனர். சுதந்திரமான எண்ணங்களோ, அறிவுஜீவித்தனமோ, ஆக்கப்பூர்வமான மனித வாழ்க்கையோ இவை எதுவுமே பெண்ணுக்கு இல்லை என்பதே பார்ப்பனியச் சமூக அமைப்பின் முடிந்த முடிவாகும்.

"பெண் அதீதப் பாலியல் உணர்ச்சி உடையவள். அவளுடைய இயற்கையே அதுதான்; அது எப்போதும் மீறவே பார்க்கும்; அதனால் அவளை எப்போதும் ஓய்வு ஒழிவின்றி வீட்டு வேலைகளில் போட்டு நசுக்க வேண்டும்' என்ற ஆணாதிக்கப் பண்பாட்டு சனாதனம், பார்ப்பனியத்தின் கருத்தியல் கேடயமான மநு தர்மத்தினால் செயல்பாட்டிற்கு வந்தது. ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண், ஆணின் உடைமை ஆனாள். உடைமையை மறு உற்பத்தி செய்பவள்; உடைமைக்கு உரியவர்களை பெற்றுத் தருகிறவள் எனச் செயற்கையான பொறுப்புகளில் திணிக்கப்பட்டாள்.

மனிதம் இயற்கையின் உச்சபட்ச விரிவு. அதில் பெண்ணோ, ஆணோ தங்களுக்குள் அடிமையுறாமலும், எவ்விதத்திலும் அடிமைப்படுத்தப்படாமலும் வாழ்வதே சிறந்தது. இவற்றை உணர்ந்ததினால்தான் வரலாற்றுக் காலந்தொட்டு, அவரவர் வாழ்ந்த காலகட்டங்களில் நிலவிய அடக்குமுறைகளை எதிர்த்துச் செங்களமாடி, மாந்தக் குல வரலாற்றில் பேசப்படும் கருப்பொருள் ஆனவர்களே மாமனிதர்கள். இந்த மாமனிதர் வரிசையில் முதல் மனிதரானவர் புத்தர்.

பார்ப்பனியச் சமூக நிகழ்வின் மிக மிக வெறுப்பூட்டும் உண்மை என்னவெனில் தத்துவம், அரசியல், சமூகம், பொருளாதாரம் எல்லாமே ஆண்களின் தனிப்பட்ட உரிமை என்பதுதான். பார்ப்பனியமே ஆணாதிக்க சுயமோகிகளின் கற்பிதம்தான். புத்தர், தம் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் ஆண், பெண்ணையும்; பெண், ஆணையும் அரவணைக்கும் திறனுக்கே தன்மை அளித்தார். ஆணாதிக்க ஆழங்காணலின் மூச்சு சுவாசமாக, பெண் மொழியை யோசித்து யோசித்துப் புதியதாக தேடியடைகிற காய ஓட்டத்திற்கு முன் நகர்ந்தார். பெண்கள் தங்களை ஆண்களின் அடிமைகளாகவே பாவித்து வந்த சூழலமைவில் பெண்கள்தான் மானுடத்தின் மூலப்பிரதி என்று பிரகடனம் செய்தார். புத்தருக்கு முன் அறிவு, ஒழுக்கம், நீதிமுறைமை எல்லாமே ஆண் நோக்குடைய அடர்த்தியைக் கொண்டிருந்தது. மறுபாதி மனித இனத்தை சமவாய்ப்புடன் இணைத்துக் கொள்வதற்கான தேடல், புத்தரால்தான் தொடங்கி வைக்கப்பட்டது.

புத்தர், பார்ப்பனிய ஆணாதிக்க முறைமையின் பின்னால் ஒளிந்துள்ள சாதுரியங்களைக் கண்டறிந்து, கவனம் கொண்டவர். பெண்கள் மீதான நியாயம் என்று படும் தளத்துக்கான பரிமாணங்களுக்குள் சென்றவர். ஆண்களிடம் மாட்டிக் கொண்டு பிம்பச் சிதைவுகளாகிப் போன பெண்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர். பெண்களின் நியாய ஆவேசங்களை அப்படியே அங்கீகரித்தவர். இழுபறியாகிப் போன பெண் இருப்பு பற்றிய முறைகேடான கற்பிதங்களைப் போட்டுடைத்தவர். பார்ப்பனியச் சமூக அமைப்பில் ஆண் ஆண்டைகளுக்கு மட்டுமல்ல, ஆண் அடிமைகளுக்கும் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டதை எதிர்த்து சமரானவர். பார்ப்பனர்களின், பார்ப்பனியர்களின் ஆண் என்கிற மிதப்பும், மேட்டிமையும், பெண்களை துச்சப்படுத்தும் அலட்டலும் புத்தருக்கு சமூகத்தில் உச்சக்கட்ட அருவருப்பானது. எதிர்கொண்ட பெண்ணடிமைத்தனங்களே அவர் பெண்ணியமாய் வெடித்தெழக் காரணமானது. புத்தரால் தான் அக்காலத்தில் பெண்கள் ஆணாதிக்கமான பார்ப்பனியத்தை எதிர்த்து புதிய மன விப்பிற்கான உடைவுகளாகவும், எதிர்வினைக்கான புதிர் அவிழ்ப்புமாக பன்முகப் பரிமாணங்களை வென்றெடுத்தார்கள்.

புத்தர், சித்தார்த்தராக இருந்த காலத்தில் தன் துணைவியிடம், “நான் துறவறம் மேற்கொள்வதைப் பற்றி உன்னுடைய கருத்து என்ன?’ என்று கேட்டார். யசோதரை சற்றும் கலக்கமடையாமல், உலக மக்களின் நன்மைக்காக நீங்கள் துறவறம் மேற்கொள்கிறீர்கள். நானும் ஒரு துறவியாக விரும்புகிறேன். ஆனால், மகன் ராகுலனையும் வயது முதிர்ந்த தங்களின் தாய் தந்தையரையும் அன்புடன் கவனித்துக் கொள்ள, நான் சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சிறிதும் வருத்தப்படாமல் நிம்மதியாகச் செல்லுங்கள்’ என்றார். யசோதரை நிலைகுலைந்து போவார் என அஞ்சிய சித்தார்த்தருக்கு, யசோதரையின் மனோதிடம் வியப்பையும், மகிழ்ச்சியையும் அளித்தது.

சித்தார்த்தர் தனது துணைவியாரிடம் இவ்வாறு கூறினார் : “நான் மக்களுக்காக சமூக வெளிக்குள் செல்கிறேன். நீ விரும்பினால் மறுமணம் செய்துகொள்.’ இதை யசோதரை ஏற்கவில்லை (அந்த அம்மையாரும் பின்னர் துறவியாகி விடுகிறார்). தனது துணைவியை மறுமணம் செய்து கொள்ளக் கேட்டுக் கொண்ட அளவிற்கு மனோதிடம், தெளிந்த சிந்தனை, பெண் வாழ்வியல் உரிமை மீதான தாக்கம் கொண்ட முற்போக்கான மாமனிதராக சித்தார்த்தர் இருந்தே பின் புத்தரானார்.

ஆணானவன் பெண்களை உரிய முறையில் மதித்து நடக்க வேண்டும். பெண்களை அலட்சியப்படுத்தி அடிமைப்படுத்தக் கூடாது. பெண்கள் குடும்பத்தில், வீதியில், ஒட்டுமொத்த சமூகத்தில் முழு உரிமையுள்ளவர்களாக ஆக்கப்பட வேண்டும் என்றார் புத்தர். கல்வி பெறும் உரிமை பெண்களுக்கு இல்லை என்பதே பார்ப்பனியக் கோட்பாடாகும். பார்ப்பனர்கள் அறிவைப் பெறும் உரிமையை தங்களின் முழு உரிமையாகப் பாவித்துக் கொண்டனர். அறிவுப் பாதை அனைவருக்கும் திறக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்ட புத்தர், பெண்களுக்கும் ஆண்களுக்கும் கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண்களுக்கு அறியாமையை ஏற்படுத்துவதைவிட, உலகில் தீங்கான குற்றம் வேறொன்றும் இருக்க முடியாது என்றார்.

“பெண் வாழ்வது ஆணுக்காகவும்; அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இல்லை. பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை; விடுதலை! தனது வீட்டுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்கிற சிந்தனை வேண்டும். இந்தச் சிந்தனை மட்டும் வந்து விட்டால், பெண் என்பவள் தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும் மட்டுமே இருந்து ஆணின் நிழலிலும் தயவிலும் வாழும் ஓர் அடிமையாக இருக்க மாட்டாள். தேசத்திற்கே வழிகாட்டும் தலைமைத்துவமாக உயர்ந்து நிற்பாள்’ என்கிற பிளிறலோடு, பெண் விடுதலைக்கான கொடியை முதன் முதலில் பறக்க விட்டவர் புத்தர்.

புத்தர் ஆண்களுக்கு மட்டும் தலைவரல்ல; பெண்களுக்கும் வாய்த்த தலைவர். ஒரு தேடலும், பிடிப்பும் பெண் ஆண் உறவில் இரு சாரருக்குமே தேவை. இதில், உறவுகளைப் பற்றுதல் போலவே அவரவர் சுயத்திற்கு விடுதலும் முக்கியமானது. ஆனால், ஆண்கள் பெண்களைத் தன்னில் தொடர்ச்சியாக்குவதிலுமே, அவர்களின் தொங்குதசையாக வளர்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். ஆண் மய்ய ஒற்றை இலக்கையே பெண்கள் தங்கள் வாழ்க்கையின் சாரமாகக் கொள்ள கற்பிக்கப்பட்டார்கள். தமக்கான விருப்பமான வாழ்வின் சிறகுகளை பெண்களை வருடவிடாமல் பார்ப்பனிய ஆண்கள், தங்களுக்கு ஏற்ற குடும்ப அடைகாப்புக்குள்ளேயே பெண்களைத் திணித்தார்கள்.

வரலாற்றில் புத்தரால்தான் பெண்கள் குடும்பச் சிறையிலிருந்து சமூக வெளிக்கு வந்தார்கள். பெண்களில் தலைவர்கள், துறவியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிஞர் பெருமக்கள் அரசின் தூதுவர்கள், புரட்சியாளர்கள் ஆகத் தோற்றம் பெற்றனர். மன்னர்களில் பவுத்தத்தால் மனிதரான சாம்ராட் அசோகன் மகள் சங்கமித்திரை, மனித மாண்பினை நிலைநாட்ட இலங்கைக்குச் சென்றது, பெண்கள் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகும். அவ்வையார், ஓதலாந்தையார், காக்கைப் பாடினியார் போன்ற அறிஞர் பெருமக்கள், சமூக வாழ்வை ஏற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அவ்வை பாரிக்கும் அதியமானுக்கும் இடையே அரசாங்கத் தூதுவராகச் செயல்பட்டார். அவ்வையாரின் நயமான அறிவுரையை ஏற்றதால், அதியமான் போர் புரியும் தனது எண்ணத்தைக் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆணாதிக்க பார்ப்பனியச் சமூக அமைப்பில் ஒழுக்கம், பண்பு போன்ற வரம்புகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, மானுட அந்தஸ்து மறுக்கப்பட்டு அவமானத்திலும், துன்பத்திலும், உடலுழைப்பிலும், ஆணுக்கான உடல் வேட்கையிலும் வசமாகிப்போன பெண்களுக்கான சுதந்திர வெளியே பவுத்தர்களின் கசனமாக இருந்தது. புத்தரைத் தொடர்ந்து அவரின் சிற்றன்னையார் கோதமி, துணைவியார் யசோதரையும் சமூகப் பொதுவெளிக்கு வந்து சமூக மனிதரானார்கள். வரலாற்றில் குடும்பமே பெயர்ந்து பொதுவாழ்க்கையில் நிரப்பிக் கொண்டது புத்தரின் குடும்பமாகும். பெண் அல்லது பெண்ணியம் என்னும் கருத்தோட்டங்களும், பெண் விடுதலைக்கான இயக்கங்களும் வரலாற்றில் புத்தரின் யுகத்தில்தான் ஏற்பட்டது.

புத்தர், பெண்களுக்கான சிந்தனையில் செயல்பாட்டில் இச்சையாகவோ, அனிச்சையாகவோ ஆணாதிக்க உணர்வுகள் தனக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். பெண்களுக்கு ஆண்கள் தலைமை தாங்க முடியாது; இயக்கத்தைக் கட்டமைக்க முடியாது; பெண்களுக்குப் பெண்கள்தான் தலைமை தாங்க முடியும்; இயக்கத்தைக் கட்டமைக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறினார். பெண்களின் விடுதலையை பெண்கள்தான் ஏற்படுத்த முடியும் என்றார். தாம் ஏற்படுத்திய சங்கத்திற்கான விதியில் ஆண் - பெண் பாகுபாடு அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பாராட்டுவது கூடாது என்று வழிவகுத்திருந்தும் பெண்களை தம் சங்கத்தில் சேர்க்க மறுத்துவிட்டார். பெண்களுக்கான நியாயங்களை தம் அறங்களால் பட்டியலிட, அவருக்கு சகல தகுதிகளும் இருப்பதாகப் பெண்களின் நம்பிக்கை கூடிப் பெருகியதாலேயே, பின்னர் பெண்களைக் கொண்ட "பிக்குனிகளின் சங்கம்' தொடங்கப்பட்டது.

புத்தர், ஓர் ஆணின் பார்வையில் நிகழ்த்தப்படும் எந்தவோர் ஒழுக்கத் தத்துவம், பொதுத் தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும் என்றார். நான் பிறப்பால் ஆணாக இருப்பதால், இந்த உலகின் சரிபாதி மனிதர்களின் உணர்வு, ஒழுக்கம் ஆகியவற்றின் தரப்பிலிருந்து சமூகத்தில் ஓர் அசைவு, பெண்கள் தரப்பிலிருந்தும் வெளிப்படும் போதுதான் ஒட்டுமொத்த மானுடம் வெற்றியடையும் என்றார். மேலும், அவர் இந்த சமூகத்தின் சரிபாதியான பெண்கள் தரப்பிலிருந்து ஆண்களுக்கான பெண்களுக்கான ஒழுக்கத்தையும் ஆண்களுக்கான பெண்களுக்கான சமூக உறவையும் முன்னெடுக்கும்போதுதான் எனது கொள்கைகளும் முழுமை பெறும் என்றார். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் புத்தர் இன்னும் மானுடத்திற்கு உயிர்ப்பாய் இருப்பவர். ஆணோ, பெண்ணோ அவர்கள் உயிர்கள், உணர்வுகள், ஆற்றல்கள் செழிக்க இன்னும் உதவுபவர். புத்தர் தன்னை எப்படி பின்னிக் கொண்டாலும், எப்படிச் சுற்றி வந்தாலும் அவருடைய அச்சு மானுடக் காதலே ஆகும்.

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

எனது நெறி தூய்மையானது. உயர்ந்தோர், தாழ்ந்தோர்; உடையார், இல்லார் என்ற பாகுபாடு அதற்குக் கிடையாது. எனது அற ஆறு நல்ல நீரைப் போன்றது. அந்நீர், ஆண்டான் - அடிமை வேறுபாடின்றி அனைவரையும் தூய்மையாக்கும். எனது நெறி தீயைப் போன்றது. எல்லாக் கேடுகளையும் பெரியதானாலும் சரி, சிறியதானாலும் சரி, எரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆண் - பெண்; பெரியவர் - சிறியவர்; வலியோர் - எளியர் என்ற பாகுபாட்டுக்கு அதில் இடமே இல்லை. எனது நெறி அனைவரையும் சமமாகக் கருதுகிறது என்றார் புத்தர்.

Buddha
புத்தர் தாம் நிறுவிய சங்கம் இயங்க, எண்ணங்களின் தேரோட்டத்தில், நல்ல நடத்தையைக் கொண்டுதான் தன் சக்கரத்தின் ஆரக்கால்களை அமைத்தார். நீதி, நிதானம் என்ற ஒரே அளவில் அதை அமைத்தார். அமைதியை சக்கரத்தின் குடமாக்கி, அறிவுடைமை என்ற கட்டால் சக்கரத்திற்கு கட்டுப் போட்டார். வாய்மை என்ற அச்சை அக்குடத்திலே மாட்டினார். இவ்வாறாக அமைந்த அற ஆழியைத்தான் ஏறத்தாழ 50 ஆண்டுகள் உருட்டி சமுதாயத்தை அறிவு வழிக்கு - ஆக்க வழிக்கு - அமைதி வழிக்கு திசை திருப்பினார். மானுடத்தில் வீழ்த்தப்பட்ட மக்களின் பாடுகளைக் கருத்தில் கொண்டு, வெகுமக்களுக்குத் தொண்டு செய்ய முன் முயற்சியைத் தொடங்கியவர் புத்தரே ஆவார். மனித வரலாற்றில் ஒப்பீட்டு அளவில் சமூக நிறுவன அமைப்பு புத்தருக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதே இல்லை.

அனைத்து உயிர்களும், ஊர்களும் எனக்குச் சொந்தம். எனது அறநெறியை அனைவரிடமும் உபதேசம் செய்து, அதற்கு வெற்றி கிட்டும் வரை நான் இறக்க மாட்டேன் என்றே புத்தர் சூளுரைத்தார். தனது கொள்கைகளை மக்களிடம் நேரில் சென்று எடுத்துச் செல்ல தன் கால்களை மட்டுமே நம்பிய முதல் மனிதரும் கடைசி மனிதரும் அவரே. புத்தரைப் போல் நடந்தவர்கள் எவருமில்லை. என்னுடைய சங்கத்தில் ஆயிரக்கணக்கில் சமணாக்கள் (தொண்டர்கள்) உள்ளனர். அவர்களில் உயர்ந்து ததும்பியவர்களுமில்லை; தாழ்ந்து வறண்டவர்களுமில்லை என்றார் புத்தர். அமைப்பு குறித்த தரச் சான்றிதழை வேறெந்த அமைப்பும் வரலாற்றில் பெற்றதில்லை.

‘‘கடலுக்கு ஒரே தன்மையான குணம் உண்டு. அதுதான் உப்பு கரிப்பு. அதைப் போல என்னுடைய அறநெறிக்கும், அறவழி சங்கத்திற்கும் ஒரே குணம்தான் உண்டு. அதுதான் சிந்தித்துச் செயல்படும் குணம்'' என்றார் புத்தர். புத்தர், கூட்டுச் சிந்தனை - கூட்டுத் தலைமை - கூட்டுச் செயல்பாடு இவைகளையே முன்வைத்தார். தலைவர் என்பவர் மக்களிடையே இருந்து, மக்களுக்காக உருவாக வேண்டும். அத்தகைய தலைவரே மக்களோடு அய்க்கியப்படுவார்; மக்களுக்காகப் போராடுவார். ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவர்தான் தலைவர்; வரலாற்றை வழி நடத்துபவர் அவர்தான். மக்கள் வெறும் பார்வையாளர்களே என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, புத்தர் தன் சங்கத்தை நடத்தவில்லை. தனிமனிதராக ஒரு முடிவுக்கு, தீர்மானத்திற்கு வர முடியாது. உண்மையான நெறிகள் நீண்டு நிலைத்திருக்க முடியாது. தனி மனிதர் ஆளுகை மட்டுமே இருந்தால் பழைய பாதைக்கே மாறிவிடக் கூடும். எனவே, சமூக மாற்றத்திற்கு அனைவரும் ஒருங்கிணைந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவருக்கொருவர் வழிகாட்டியாகவும், ஒருவர் சிந்தனையை மற்றவர் பங்கிட்டுக் கொள்ளவும் வாய்ப்புக்கு இடமிருக்கும் என்றார் புத்தர்.

தலைவரால் எதுவும் முடியும், தலைவர் செய்தால் சரியாகத்தான் இருக்கும். அவர் சொல்வதை அப்படியே ஏற்று நடக்க வேண்டும். அதைப் பற்றிய விமர்சனம் செய்யக் கூடாது. ஏனென்றால், தலைவர் அறிவாளி. எப்படி ஓர் ஆண்டையின் ஆணையை ஓர் அடிமை ஏற்றுக்கொள்ளும் தகுதி பெற்றவரோ அது மாதிரி. இப்படியான தலைவர் - தொண்டர் உறவை புத்தர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. புத்தர், தன் சங்கத்திற்கு வாரிசுகளை நியமிக்க மறுத்து விட்டார். தத்துவத்திற்கு தத்துவம்தான் வாரிசாக இருக்க முடியுமே தவிர, தலைவரோ தலைவரின் வழித்தோன்றல்களாக அறிவித்துக் கொண்டவர்களோ இருக்க முடியாது. ஒரு கொள்கை, தன்னுடைய சிறப்பில், மக்களுக்கு நலம் தரும் விதத்தில் நிலைபெற வேண்டுமேயொழிய, தலைவரின் விருப்பு வெறுப்பால், அதிகாரத்தால் அல்ல என்றார். ஒவ்வொரு முறையும் தன் தத்துவத்தை நிலைநிறுத்த அதை உருவாக்கியவர் என்ற முறையில் தன் பெயரை அடிக்கடி பயன்படுத்துவதைக்கூட புத்தர் கண்டித்தார்.

இவ்வுலகமே நமக்குரியது. இதில் தனி நபருக்கென ஒரு குழுவிற்கான ஏதுமில்லை. எதுவும் எவருக்குமானது. நமக்குப் பிறகு நாம் அனைத்தையும் விட்டுச் செல்கிறோம். இடையில் தனி மரியாதைக்கும், தனிச் சொத்துரிமைக்கும் எவருக்கும் இடமில்லை என்றார். புத்தர், தன் போதனைகளை குறைவற்றது என்று உரிமை கொண்டாடியதில்லை. அவர் உரிமை கொண்டாடியதெல்லாம் தான் புரிந்து கொண்ட வரையில், சகமனிதர்களுக்குப் புரிய வைத்த வரையில் விடுதலைக்கான உண்மையான தத்துவம் தன் கொள்கைகளே என்பதுதான்.

உயிர்கள் யாவும் இன்பத்தை விழைகின்றன; துன்பத்தை வெறுக்கின்றன என்பதை புத்தர் வலியுறுத்தினார். அரசின் நிபந்தனையானது, மக்கள் அனைவருக்கும் உரிய கவனிப்பும் பாதுகாப்புமே என்றார். அரசின் கடமை மனிதர்களுக்கு மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பளிப்பது அதன் தலையாய கடமை என்று வரையறுத்தார். நேர்மையான அரசு முறைமையும், அனைத்து மக்களின் நலவாழ்வும் ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகும் என்றார்.

ஓர் உண்மையான நாட்டில் பசி தீர்க்கப்பட வேண்டும் என்பது, புத்தரின் முதல் வேண்டுகோள் ஆகும். பசித்திருக்கும் மனிதரிடத்தில் எவ்வித அறிவுரை யும் அளிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்த்தினார் புத்தர். அலவி என்னுமிடத்தில் ஒரு வறிய மனிதர் மிகுந்த பசியால் களைப்படைந்தபோதும், அவர் தம்ம போதனையை செவிமடுக்க வந்தார். புத்தர் அவருக்கு உணவளிக்கக் கூறி, அவர் பசி தணிந்த பின்னரே அவருக்கு தம்மத்தைப் போதித்தார். எந்த மனிதருக்கும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய நான்கு அடிப்படைத் தேவைகள் இன்றியமையாதவை என்று கோரிக்கை விடுத்த புத்தர் - உணவு உடலை வளர்க்க, உடை மானத்தைக் காக்க, இருப்பிடம் உடலைக் காக்க, மருத்துவம் நோயை விரட்ட என்றார். பசியே பெரும் பிணி; உடல் நலமே பெரும் வரவு என்பது புத்தரின் முதன்மையான முழக்கமாகும்.

பிணியுற்றோர் நன்கு கவனிக்கப்பட வேண்டும். பிணியுற்றோரைக் கவனித்துக் கொள்ளல் மிகவும் போற்றத்தக்கது - நற்செயல்களில் பெரியதெனக் கருதப்படுவதாகும். தன்னைப் பின்பற்றுகிறவர்களின் நெஞ்சில் நிறுத்தத்தக்க வண்ணம் புத்தர் உரைத்தார்: ‘‘எவரொருவர் பிணியுற்றோரைப் பேணுகிறாரோ அவரே என்னை மதிக்கிறவர் ஆவார்.'' புத்தர், சகமனிதர்களுக்குப் பயன்படும் மனிதர்களை சிறப்பான மனிதர்களாக அறிவிப்பு செய்தார். உணவளிப்பவர் எவரோ அவரையே மனிதத்திற்கு பலமளிப்பவராகவும், உடையளிப்பவர் எவரோ அவரையே மனிதத்திற்கு அழகளிப்பவராகவும், வீடளிப்பவர் எவரோ அவரையே அனைத்தும் அளிப்பவராகவும் வகைப்படுத்தினார். இந்த வகைப்பாடுகளின் நீட்சியாகவே ஆட்சியாளர்களை, அரசுகளை கருதினார்.

புத்தர் ஆட்சியாளர்களுக்குரிய பத்து நன்னெறிகளாக 1. ஈகை 2. ஒழுக்கம் 3. தியாகம் 4. நேர்மை 5. இரக்கம் 6. நன்னடத்தை 7. வெறுப்பின்மை 8. அகிம்சை 9. பொறையுடைமை 10. நட்புடைமை ஆகியவற்றைப் பொருத்தினார். அடிக்கடி முறையாகக் கூடிப் பேசுதலையும், ஒற்றுமையாய்க் கூடி, ஒற்றுமையாய் எழுந்து, ஒற்றுமையாய் செயல்படுதலையும், மூத்தோரின் அறிவுரைகளுக்கு தலை சாய்ப்பதையும், பெண்களை மதித்து நன்னெறி நடத்தைகள் கொள்வதையும், உண்மையான சமூக மனிதரை ஆதரிக்கவும், போற்றவும், பாதுகாக்கவும் கேட்டுக் கொண்டார்.

பேராசை, வெறுப்பு, தற்பெருமை ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட வன்முறையின் பாற்பட்ட போர், கிளர்ச்சி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் ஒரு நாடு குழப்பத்திற்காட்பட்டு விடாமல் கவனம் கொள்வது, ஆட்சியாளரின் தனிப் பெரும் கடமையாகும் என்றார். இழிவு, ஏழ்மை அதிகரிக்குமாயின் தாழ்த்துதல், திருடுதல் தோன்றிப் பரவும். ஆயுதச் சேகரிப்பு அதிகரிக்கும். மோதல்கள் நேரும். கொலைகள் நிகழும். பொய்கள் உரைக்கப்படும். சட்டமும் ஒழுங்கும் கெட்டு, மனித மதிப்புகள் குறைபட்டு விடும் என்று ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். புத்தர், நல்ல அரசுக்கானப் பரிந்துரைகளை வழங்கிய வண்ணமிருந்தார். ஆட்சியாளர் மக்களிடமிருந்தே அதிகாரம் பெறுகிறவராவார். மக்களின் ஒப்புதலின் பேரிலேயே ஆட்சித் தலைவர் தெரிவு செய்யப்படுவது சிறப்பாகும். ஆட்சி புரிவதில் வழிகாட்டும் கொள்கையாயிருக்கத் தக்கது நேர்மையாகும் என்றார் புத்தர்.

ஒரு நாட்டின் எழுச்சியோ, வீழ்ச்சியோ அது ஆட்சியாளரைப் பொறுத்ததேயாகும் என்பது புத்தரின் முடிவு. ‘‘ஒரு நாட்டின் ஆட்சியாளர் நீதிமானாகவும், நல்லோராகவும் இருப்பாராயின், அமைச்சர்களும் நீதிமான்களாகவும் நல்லோராகவும் இருப்பர். அமைச்சர்கள் நீதிமான்களாகவும் நல்லோராகவும் இருப்பின், உயர் அதிகாரிகள் நீதிமான்களாகவும் நல்லோராகவும் ஆவர். உயர் அதிகாரிகள் நீதிமான்களாகவும் நல்லோராகவும் இருப்பின், தொடக்க நிலை அலுவலர்கள் நீதிமான்களாகவும் நல்லோராகவும் ஆவர் என்பது புத்தரின் கணிப்பாகும். ஆட்சியாளர்கள் கற்றோராகவும், அறிவுடையோராகவும், ஆற்றல் உடையோராகவும் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் ஈகையுடையோராய், கனிவாய்ப் பேசுவோ ராய், பயன்மிக்க செயலுடையோராய், நடுநிலையுடையோராய் இருக்க வேண்டும் என்பது புத்தரின் விருப்பமாகும்.

ஆட்சியாளர் ஊழலுடையவராய் இருப்பின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழலுடையவர் ஆவர். மக்கள் வன்முறையாளராகவும், மூர்க்கர்களாகவும் ஆகி நாடு சீரழியும் என்பது, புத்தர் ஆட்சியாளருக்கு விடுத்த எச்சரிக்கையாகும். ஒரு நல்ல ஆட்சியாளர், ஒரு நல்ல அரசு மக்களுக்கு இகழப்படாதிருக்கும் இன்பத்தையும், பொருளாதார வெற்றியெனும் இன்பத்தையும் உடைமைகளை அனுபவிக்கும் இன்பத்தையும், கடனில்லாதிருக்கும் இன்பத்தையும் அளிக்க வேண்டும். இந்த இன்பங்களின் மதிப்பீட்டில் தான் புத்தர் ஆட்சியாளர்களை, அரசுகளை அங்கீகாரம் செய்பவராக இருந்தார்.

தொடரும்

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

மனிதரை மனிதர் நேசிக்க வேண்டி இருப்பதால், அவரவருடைய நன்மைக்காகவே மனிதர்கள் ஒழுக்கமாக நடந்தாக வேண்டும். இதுவே தம்மம். அதாவது ஒழுக்கம் ஆகும். சிலருக்கு சுதந்திரம் இருக்க, பலருக்கு அந்தச் சுதந்திரம் இல்லாமலிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? சகோதரத்துவத்தை உலகளவில் பொதுத்தன்மையுடையதாக ஆக்குவது ஒன்றே தீர்வானதாகும். சகோதரத்துவம் என்பது என்ன? மாந்தர்கள் அனைவருக்குள்ளும் சமத்துவம் என்பதன் மறு பெயரே அது. ஒழுக்கத்தின் மறுபெயரே தம்மம். - டாக்டர் அம்பேத்கர்

Budha
இயற்கையில் ஓர் ஒழுங்கு உள்ளது. சமூகத்தில் அப்படிப்பட்ட ஓர் ஒழுங்கு உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியவர் புத்தர். மனிதர்கள் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவை நல்ல செயல்கள், கெட்ட செயல்கள் என ஆகிவிடுகின்றன. இச்செயல்கள் சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விளைவுகளால்தான் சமூக ஒழுங்கு நிர்ணயிக்கப்படுகிறது. இச்சமூக ஒழுங்கின் நிர்ணயம் முழுக்க மனிதர்களாலேயே முடிவாகிறது. மனிதரைத் தவிர வேறு எவராலும், வேறு எதனாலும் சமூக ஒழுங்கு நிர்ணயமாவதில்லை. இந்த விவாதத்திற்கு இசைவாகத் தம் கருத்துகளோடு காயங்களோடு மானுட உலகிற்கு இயைந்து போனவரே புத்தர்.

புத்தர் பயன்பாட்டு வாதம் என்ற அணுகுறையின் மூலவர் ஆவார். அவ்வணுகுறையின் வாயிலாகத் தன்னை தீவிர நேர்காட்சிவாதியாக பாவித்துக் கொண்டார். புத்தரின் கருத்துகள் பயன்பாட்டு மதிப்புகளுக்கே சாய்மானம் கொண்டதாகும். புத்தர் உடனடிப் பயன்பாடு கொண்ட நேர்க்காட்சித் தளத்திலான பிரச்சனைகளையே பிரச்சனைகளென்று எடுத்துக்காட்டினார். மனிதர், அவரது உள்ளம் ஆகியவற்றை தன்மைப்படுத்தினார். நுட்பமான உளவியல் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்தார். மறு உலகம், முக்தி போன்ற கருத்து முதல் வாதங்களை நிராகரித்து, நடைமுறை வாழ்வில் உள்ள துன்பத்தை எவ்வாறு விரட்டுவது என்ற நோக்கிலேயே சிந்தித்தார்.

புத்தர், துன்பம் என்ற கருத்தை சமூகமயப்படுத்தினார். துன்பத்திற்குக் காரணம் பிறவி முதலாளித்துவ (பார்ப்பனிய) வர்க்க மோதல்கள் என்று அவர் கூறினார். துன்பத்தை விலக்குவதற்கு உளவியல் ரீதியிலான வழிகளை முன்வைத்தார். சமூக முரண்பாட்டை மனித மனம் துன்பமாக உணர்கிறது என்பது புத்தரின் முடிவு. சமூக வர்க்கங்களுக்கிடையிலான மோதலை எப்படி அகற்றுவது என்று தொடர்ந்து சிந்திக்க முடிவு செய்ததன் விளைவே சித்தார்த்தரின் துறவு. அத்துறவின் நோக்கம், மனித வாழ்க்கையின் பிரச்சனைகளைக் கண்டறிவதற்காகவும், தீர்வுகளைத் தேடுவதற்காகவும்தான்.

துன்பமே உலகத்தின் எதார்த்தம் எனில் உலக வாழ்வை மறுத்து துறவு மேற்கொள்ளுவதைத் தவிர, சித்தார்த்தருக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. ஆனால், ஆரம்பத்தில் துன்பத்தையும் துறவையும் ஏற்கும் சித்தார்த்தர், புத்தராகும் போது துறவை மறுத்துவிடுவது குறிப்பிடத்தக்கது. மத்திய மார்க்கம் எனும் புதிய பாதையை உருவாக்குவது கவனத்திற்குரியது. இதுவே துன்பத்தை நீக்குவதற்குரிய புத்தரின் பாதையாகும். நம்பிக்கை வறட்சி இதன் நிலைப்பாடல்ல.

துறவு பயனற்றது. அது ஒரு தப்பித்தல். துறந்தவனும் கூட தப்பிக்க முடியாது. உலகைத் துறப்பதல்ல; உலகை மாற்றுவதே பவுத்த தம்மம். "பரிநிர்வாணம்' என்பது முழுத்துறவு. பரிநிர்வாணம், நிர்வாணம் இவைகளை அம்பேத்கர் விளக்கும் போது, பரிநிர்வாணம் என்பது உடல், உணர்ச்சிகள், மனம், செயல்கள் ஆகிய அனைத்தையும் அடங்கச் செய்வது; நிர்வாணம் என்பது உணர்வுகளை அடக்கி சரியான வழியில் வாழ்வது என்றே வரையறை செய்கிறார். இது வாழ்வு நெறிதானே தவிர, துறவு நெறி அல்ல என்பது அவரது விளக்கம்.

கர்மக் கோட்பாடு, உலகம் பற்றிய ஓர் ஒட்டுமொத்தக் கோட்பாடே தவிர தனித்தனி மனிதர்கள் பிறப்பு, வாய்ப்புகள், வாய்ப்பின்மைகள் ஆகியவை குறித்தது அல்ல என்று குறிப்பிடும் அம்பேத்கர், கர்மக் கோட்பாட்டை சமூகம் குறித்த பொதுக் கோட்பாடு என விளக்கும்போது, பவுத்தத்தை சமூகவியல் கொள்கைகளுக்கு பொருத்தப்பாடாகவே நிறுவியுள்ளார். கடவுள் கருத்து பவுத்தத்தின் மய்யமல்ல; ஆன்ம விடுதலை பவுத்தத்தின் மய்யமல்ல; மனிதரும் அவர்களது அறவியல் வாழ்வுமே பவுத்தத்தின் மய்யம். உலகத்தின் தோற்றம், முடிவு ஆகியவற்றை விளக்குவது பவுத்தமல்ல; உலகை மாற்றுவதே பவுத்தமாகும்.

இதே போல தம்மம் என்பது கடவுள், ஆன்மா சம்பந்தப்பட்டது அல்ல. சாவுக்குப் பிறகான வாழ்வைக் குறிப்பதும் அல்ல. அது மனிதர்கள், உலகில் மனிதருக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றைக் குறித்தது ("புத்தரும் அவரது தம்மம்', தொகுதி 2, பக்கம் : 121). தம்மம் என்பது மனிதர்களுக்கிடையிலான உறவுகளைப் பற்றியது. இங்கு கடவுளின் இடத்தில் அறம் அமைந்துள்ளது. அறமே தம்மமாகும் (பக்கம் : 322). பவுத்தம் விதிகளின் தொகுப்பல்ல. அது வாழ்க்கை முறைக்கான நெறிமட்டுமே ஆகும். விதி எனில் அதனை மீறவே முடியாது, கூடாது. ஆனால் பவுத்தம் வாழ்க்கை நெறியாகும் போது, அது மனிதர்களின் தேர்வுக்குரியதாகும். கடவுள் கொள்கை, இறைக்காட்சி, மறு உலகம், முக்திக் கோட்பாடு, சடங்குகள் ஆகியவற்றை பவுத்தம் ஏற்கவில்லை என்பதால், பவுத்தம் ஓர் உலகியல் சார்ந்த மார்க்கமேயாகும்.

புத்தர், பத்து நெறிமுறைகளைக் கை கொண்டு கடைப்பிடித்த பின்னரே அவர் மானுடம் போற்றும் புத்தரானார். மாசற்ற மனம் பெற்ற மகிழ்ச்சி, பிறரிடம் குறை காணா நற்குணம், அறிவுத் தீ பரவும் சூழ்நிலை, தற்பொருள், சார்புப் பொருள் தொடர்பு தெரிதல், பொருள்களின் முழுமை புரிதல், அனைத்து உயிரையும் நேசித்தல், சலனமிலா அசல்நிலை, சகலத்தையும் உணர்ந்த மதி, அறிவைப் போதிக்கும் உயர்ந்த நிலை ஆகிய இந்த ஞானங்களையெல்லாம் அவர் எய்தினார். இவ்வாறுதான் சித்தார்த்தர் உலகம் போற்றும் ஒப்பற்ற புத்தர் ஆனார். உலகில் அமைதி நிலவ புத்தர் போதித்த தம்மம்தான் சிறந்த மார்க்கம் என்பது, அம்பேத்கரின் முடிந்த முடிவாகும்.

தம்மம் என்றால் என்ன? தம்மம் என்பது பகுத்தாய்வும் அறிவையும், அர்த்தமுள்ள கருணையையும் தன்னுடைய அங்கங்களாகக் கொண்டுள்ளது. அறிவை "உணர்வு' என்றும் அர்த்தமுள்ள கருணையை "மைத்ரி' என்றும், புத்தர் வரையறுக்கிறார். "உணர்வு' என்பது புரிந்து கொள்வதில் அடங்கியுள்ளது. மூடநம்பிக்கைக்கு எவ்விதத்திலும் இடம் தரக் கூடாது என்பதை புத்தர் தன்னுடைய தம்மத்தின் அடிப்படையாகக் கொண்டதால், "உணர்வு' மற்றும் "மைத்ரி' தம்மத்தின் இரு எல்லைகளாகக் கருதப்படுகின்றன. "மைத்ரி'யும் "உணர்வு'ம் சேர்ந்த கலவையே தம்மம்.

போதப்பத்தர் என்ற மருத்துவருக்கும் புத்தருக்கும் நடந்த உரையாடலில் :

1. உலகம் அழிவற்றதா? 2. உலகம் முடிவுடையதா? 3. உலகம் முடிவற்றதா? 4. உடலும் ஆத்மாவும் ஒன்றா? 5. உடலும் ஆத்மாவும் வெவ்வேறு ஆனதா? 6. உடல் அழிந்த பிறகு ஆத்மா வாழுமா? என்ற கேள்விகளை போதப்பத்தர் புத்தர் முன் வைக்கிறார். இந்தக் கேள்விகளுக்கு புத்தர் தந்த பதில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். போதப் பத்தரிடம் புத்தர், உங்கள் கேள்விகளுக்கு நான் எந்தப் பதிலையும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

மனித வாழ்க்கைக்கும் சமூக உறவிற்கும் துளியும் பயன்படாதவற்றை நோக்கி உங்களுடைய நேரத்தை செலவிடுவதையும், கற்பனையான கேள்விகளை எழுப்பி மனித சமூகத்தை எதார்த்த வாழ்விலிருந்து அப்புறப்படுத்துவதையும் நிறுத்துங்கள். மாறாக இந்த உலகில் 1. துன்பமிருக்கிறதா? 2. துன்பத்திற்கான காரணமென்ன? 3. துன்பத்திற்கு நிவாரணம் என்ன? 4. துன்பத்திற்கு நிவாரண வழிமுறை என்ன? என்ற நான்கு வினாக்களுக்கும் விடை தேடுங்கள் என்றார்.

புத்தர், மறுபிறவி என்ற பார்ப்பனியச் சொல்லாடலின் பொருளை மறுத்தார். மனிதன் உயிர் 1. பிரத்வி (இயக்கம்) 2. சுப (வெப்பம்) 3. தேஜ் ( உணர்தல்) 4. வாயு (சுவாசக்காற்று) ஆகிய நான்கு மூலங்களால் ஆனது. மனிதன் உயிர் மரித்தல் என்பது இந்த நான்கு மூலங்கள் சிதறுவதைக் குறிக்கிறது என்றார். மனிதர், தான் வாழும் காலத்தில் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான உயிர்ச் செல்கள் மடிந்து மீண்டும் மறு உருவாக்கம் பெறுகிறது. இதன் வெளிப்பாடே மனித உடலில் ஏற்படும் இளமை மற்றும் முதுமை ஆகியவற்றுக்கான வளர்சிதை மாற்றமாகும். ஒவ்வொரு வினாடியும் ஏற்படும் இந்த வளர்சிதை மாற்றத்தை புத்தர், மறு உருவாக்கம் அல்லது மீள் உருவாக்கம் எனக் குறிப்பிடுகிறார்.

Budhar
ஆற்றலை எப்படி அழிக்க முடியாதோ, அதைப் போலவே மனித உடலுக்குள் செல்களும் அழிக்க முடியாதவையாகும். ஒரு வகையான ஆற்றல் பிறிதொரு வகையிலான ஆற்றலாகத் திருப்பப்படுவது போல, மனித உடல் செல்கள் மாற்றம் பெற்று மனிதருக்குப் பல்வேறு பருவங்கள்/நிலைகளை தோற்றுவிக்கின்றன. இந்த மாற்றங்களை "அட்டா' என்ற மீள் உருவாக்கமாக புத்தர் குறிப்பிடுகிறார். பார்ப்பனர்களால் கற்பிதம் செய்யப்படும் மறுபிறவியை புத்தர் எதிர்த்து நின்றார். உயிர், தன்னுடைய வெளிப்பாட்டை உடம்பில் வெளிப்படும் வெப்பத்தில் (சுப) வெளிப்படுகிறது. உயிர்களின் மரித்தல் என்பது வெப்பத்தின் மரித்தலாகும். இந்த வெப்பம்தான் உடலிலுள்ள உறுப்புகளுக்கு இயங்கு சக்தியாக விளங்குகிறது என்றார்.

தம்மத்தின் அறநெறி புரட்சிகரமானவை. அது கடவுள் கோட்பாட்டையும் சொர்க்கத்தையும் நரகத்தையும் புறந்தள்ளுகிறது. ஆத்மாவை ஒதுக்குகிறது. நல்வினை, தீவினை, வினைப்பயன், மறுபிறவி போன்றவற்றை மறுத்து நிற்கிறது. மானுட வாழ்வில் ஒரே தன்னலமற்ற பொதுநலக் கொள்கையையே, மானுடர் செயல்படுத்த ஏதுவாக உள்ளது. புத்தரின் தம்மம் தனி நபரிடமிருந்தோ, சமூகத்திலிருந்தோ பிரிக்க முடியாதது. எதுவும் புனிதமல்ல; அனைத்தும் பரிசீலனைக்கும் மறுபரிசீலனைக்கும் உட்பட்டது. புனிதம் மறுபரிசீலனையை மறுத்து விடுகிறது. ஒருமுறை புனிதம் என்றால் எப்போதும் புனிதமே. இது அறிவியல் பார்வையைக் கொன்று விடுகிறது. பவுத்தம் ஆய்வையும் மறு ஆய்வையும் அங்கீகரிக்கின்றது. எனவே, பவுத்தத்தில் புனிதம் என்று எதுவுமில்லை.

ஆரியப் பார்ப்பன மதத்தில் கருணை வலியுறுத்தப்படுகிறது. இந்தக் கருணை, குழு ஒழுக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரியப் பார்ப்பன மதத்தின்படி, தனி மனிதர் மிகவும் கருணை உள்ளவர். அதே நேரத்தில் கண்டிப்பு உள்ளவரும்கூட. தன் கருணையை தன் குடும்பம், சுய சாதி மக்களிடம், சுய சாதி இயக்கத்திலும் வெளிப்படுத்துவர். ஆனால், பவுத்தமோ பொது ஒழுக்கமான மைத்ரியை, பகுத்தறிவு ரீதியான அன்பைப் போதிக்கிறது. "மைத்ரி' பகுத்தறிவின்பாற்பட்ட அன்பு. அவ்வன்பு வாழ்வளிக்கும் அறிவின்பாற்பட்ட அன்பாகும். தனிமனிதர் தனக்கென்று சுயமான சாதி உணர்வோ வர்ண உணர்வோ, ஆண் பெண் பேத உணர்வோ, ஏழை பணக்காரன் உணர்வோ, ஆதிக்கக் குழு சிந்தனைக்கு ஆட்பட்டு, தம்மம் இல்லாதவற்றை தனி மனிதர் எதன் பொருட்டும் செய்வதை பவுத்தம் வலிந்து தடை செய்கிறது. உண்மையான பவுத்தர், ஆதிக்கக் குழு உணர்விலிருந்து விடுபட்டுத் தன்னை ஒட்டுமொத்த உலகத்தின் குடிமகள்/குடிமகன் என்று உணர வேண்டும். இவ்வுணர்தலை புத்தர் "மைத்ரி' என்கிறார். உண்மையான பவுத்தர்கள் உலகக் குடிமக்கள் ஆவர்.

புத்தர், தன்னுடைய மார்க்கமான தம்மத்தை மதத்திலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்துகிறார். மதம் தனி மனிதன் உடைமை. பொது வாழ்க்கையில் ஒரு தனி மனிதன் உடைமை. பொது வாழ்க்கையில் ஒரு தனி மனிதர் தன்னுடைய மதத்தை மற்றவர்களிடம் நிர்பந்திக்கவோ, பின்பற்றச் சொல்லவோ இயலாது. மாறாக, தம்மம் என்பது மக்களைச் சார்ந்ததாகும். மதமென்பது இறைவனைச் சார்ந்ததாகும். இறைவன் இல்லாமல் மனிதர் இருக்கலாம்; சமூகம் இருக்கலாம். ஆனால், சமூக அங்கமென விளங்கும் மனிதர் சமூக உறவின் ஒழுக்க விதிகளை அடிப்படையாகவும், தவிர்க்கவியலாததாகவும் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தம்மம் அனைவருக்கும் பொருந்தும். தம்மம் இன்றி சமூகம் இயங்காது. சமூகத்தில் தம்மத்தைச் சுட்டிக் காக்கும் பொறுப்பை உண்மையான ஓர் அரசு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். அரசின் இயக்கும் கருவி தம்மமாக இருப்பின் நிச்சயம் ஒரு நற்சமூகம் விளையும். தம்மம் தவறிய ஆட்சி, வெகுமக்களுக்கு எதிரான ஆட்சியாகவே இருக்கும். ஓர் அரசு காவல் துறை, நீதித் துறை இவைகளை தம்மத்தின் கோட்பாட்டோடு இயக்கினால் அதைவிடச் சிறப்பான அரசு இருக்க முடியாது.

தம்மமின்றி சமூகம் இயங்காது!

தம்மம் என்பது அடிப்படையாகவும் சாராம்சத்திலும் சமூக வயப்பட்டது. தம்மம் என்பது ஒழுக்கம் அதாவது வாழ்வில் எல்லா அம்சங்களிலும் மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டிய சரியான உறவை விளக்குவது. ஒருவருக்கொருவர் தொடர்புடன் இரு மனிதர்கள் வாழும்போது, அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தம்மத்திற்கு அவர்கள் வாழ்வில் இடம் தந்தாக வேண்டும். வேறு வகையில் சொல்வதானால், தம்மம் இல்லாமல் சமூகம் இயங்க முடியாது.
- டாக்டர் அம்பேத்கர்

அம்பேத்கரும் அவரது தம்மமும்

அம்பேத்கர் தனது கடைசிக் காலத்தில் புத்த மதத்தைத் தழுவினார் என்பதைப் பலரும் அறிவார் கள். ஆனால் புத்த மதம் பற்றி அவரது பார்வை என்னவாக இருந்தது என்பதைப் பலரும் அறியார்கள். இது பற்றி அவர் பேசியவற்றை, எழுதியவற்றை எல்லாம் ஒரே தொகுப்பாகத் தமிழில் கொண்டு வந்தால் ஒரு முழுச் சித்திரம் கிடைக்கும். அதன் வழியாக மூல பவுத்தத்தை எவரும் தரிசிக்கலாம். கூடவே அம்பேத்கரின் பவுத்தம் வழியாக ஞான மார்க்கத்தைக் கண்டு வியக்கலாம்.
1950 இல் மகாபோதி சங்கத்தின் பத்திரிகை யிலே “புத்தரும் அவரது மதத்தின் எதிர்காலமும்” என்றொரு கட்டுரை எழுதினார் அம்பேத்கர்.
அதே ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற புத்த மாநாடு ஒன்றில் பங்கு கொண்டு “ இந்தியாவில் புத்திசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்பது பற்றி உரையாற்றினார். “நான் ஏன் புத்திசத்தை விரும்பு கிறேன்? இன்றைய சூழல்களில் உலகிற்கு அது எவ்வளவு பயனுள்ளது?” என்பது பற்றி லண்டன் பி.பி.சி நிறுவனத்திற்கு ஓர் உரை நல்கினார்.
1956 இல் இதே காலத்தில்தான் “புத்தரும் கார்ல் மார்க்சும்”எனும் நூல் எழுதினார் . இதே காலத்தில் தான் “புத்தரும் அவரது தம்மமும்” என்கிற மகத்தான படைப்பை எழுதி முடித்தார்.
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பின் 22 ஆம் தொகுதியாகத் தமிழில் இந்தப் படைப்பு வெளிவந்துள்ளது. அதில் உள்ள விபரத் தின்படி அது முதன் முதலாக 1957 இல், அதாவது அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு வெளி வந்த தாகத் தெரிகிறது. ஆனால் இது அவரது காலத் திலேயே தனிப்பட்ட சுற்றுக்காகவும் விவாதத் திற்காகவும் அச்சுவாகனம் ஏறியது என்கிறார் ஆய்வாளர் சந்திரபரிள். அப்போதே இதிலுள்ள சில கணிப்புகள் புத்த பிக்குகளின் கோபத்தைக் கிளறும் என்பது அம்பேத்கரிடம் சுட்டிக் காட்டப் பட்ட போது அவர் கூறினாராம்: “இதற்காகப் புத்த பிக்குகள் என்னைத் திட்டினால் கவலைப்பட வேண்டாம். எவ்வளவு காலத்திற்கு உண்மையை மூடி மறைக்க முடியும்?”
அம்பேத்கர் என்ன எதிர்பார்த்தாரோ அது விரைவில் நடந்தது. மகாபோதி சங்கப் பத்திரிகை யில் பிக்கு ஜீவகா இந்த நூலுக்கு விமர்சனம் எழுதினார். அதில் கர்மா கோட்பாட்டை மறுத்த தற்காகவும், அகிம்சை கோட்பாட்டிற்குப் புதிய அர்த்தம் தந்ததற்காகவும், தம்மம்(தருமம்) எனப் பட்டதைத் தனிமனித விடுதலையாகக் கருதாமல் சமூக ஒழுங்கமைப்பாகக் கருதியதற்காகவும், புத்த பிக்குகளுக்கு தீவிர சமூக சேவையை வலியுறுத்தி யதற்காகவும் அம்பேத்கர் கண்டிக்கப்பட்டார். முடிவில் “புத்தகத்தின் தலைப்பை புத்தரும் அவரது தம்மமும் என வைத்ததற்குப் பதிலாக அம்பேத் கரும் அவரது தம்மமும் என வைத்திருக்க வேண்டும்” என்று கிண்டலாகவும் சொல்லி யிருந்தார்.
இந்த விமர்சனம் அம்பேத்கர் காலமான பிறகு வெளி வந்தது. இதனால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க அண்ணலால் முடியாமல் போனது. ஆனால் இந்த விமர்சனத்தின் மூலம், மூல பவுத்தத்தை அம்பேத்கர் எவ்வளவு கச்சிதமாக உள்வாங்கி, அதைத் தனது நூலில் வெளிப்படுத்தி யிருந்தார் என்பது நமக்குப் புரிந்துபோகிறது.
உண்மையில் தனது நூலின் முன்னுரையில் பவுத்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல் களை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். குறிப்பாக நான்கு விஷயங்களை விவாதத்திற்காகத் தான் முறைப்படுத்தியிருப்பதாகக் கூறியிருந்தார். அவை:
1. புத்தர் துறவு வாழ்வை மேற்கொண்டதற் கான காரணம்
2. துக்கம் பற்றிய அந்த நான்கு கோட்பாடு கள் புத்தர் போதித்தவையா அல்லது பிற்காலச் சேர்க்கையா?
3. ஆன்மா, கர்மம், மறுபிறப்பு பற்றிய சிந்தனைகள். ஆன்மாவை மறுத்துவிட்டு கர்மம்- மறுபிறப்பு பற்றி மட்டும் பேசிய அந்த விசித்திர முரண்
4. பிக்கு எனப்பட்டவர் முழுநிறைத் தனி மனிதனாக இருக்க வேண்டுமா அல்லது சமூக சேவகராகச் செயல்பட வேண்டுமா?
இந்த முன்னுரையைப் படித்தவுடனேயே நமக்குள் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது. புத்தரின் வாழ்வு மற்றும் போதனைகள் பற்றி நமது பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டுள்ள கருத்தியலை இது கேள்விக்குள்ளாக்கி விடுகிறது மிகுந்த ஆர்வத்தோடு நூலைப் படிக்க முடிகிறது.
பிணம், நோயாளி, முதியவர் ஆகியோரைப் பார்த்த பிறகுதான் புத்தர் துறவு வாழ்வை மேற் கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தனது 29 ஆவது வயதில் அப்படிச் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வளவு காலம் வரை அந்த மூன்று காட்சிகளையும் அவர் காணாமலா இருந்திருப்பார்? அது அதிசயக் காட்சிகளாகி, அதனாலேயா துறவியாகி இருப்பார்.? இது அறிவுக்குப் பொருந்தவில்லை. உண்மைக் காரணத்தைத் தேடி அம்பேத்கர் பவுத்தத்தின் மூல நூல்களுக்குள் பயணித்தார். “தமிழ்நாட்டில் பவுத்த மறுமலர்ச்சி இயக்கத் தந்தை பண்டித அயோத்திதாசரின் உற்ற நண்பர் பேராசிரியர் இலட்சுமி நரசுவின் பவுத்தம் பற்றிய நூல்கள் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் இந்த நூலை எழுதத் தூண்டுவதாக அமைந்தன” என்று தமிழ்நூலின் நிர்வாகப் பதிப்பாசிரியர் எஸ். பெருமாள் கூறுகிறார். ஆக, பவுத்தம் பற்றிய புதிய ஆய்வுகளையும் கணக்கில் கொண்டு அவர் உண்மையைத் தேடினார்.
சாக்கியர்களின் நாட்டு எல்லையில் கோலியர்களின் நாடு இருந்தது. இரண்டுக்கும் இடையே ரோகிணி ஆறு ஓடியது. அங்கு நதிநீர்ப் பிரச்சினை இருந்தது. அதனால் இரு தேசங் களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. நதி நீர்ப் பிரச்சினை இந்தத் துணைக்கண்டத்தில் இன்று நேற்று உருவானதல்ல. அது ஆதிகாலந்தொட்டு நடந்தது. இந்தப் பிரச்சினையில் சாக்கியர்களின் சங்கம் கூடிப் போர் தொடுக்க முடிவு செய்தது. இதன் ஓர் உறுப்பினராகிய சித்தார்த்தர்(புத்தரின் இயற்பெயர்) அந்த முடிவை எதிர்த்தார். “தருமம் என்பது நான் அறிந்த வரையில் பகைமையை பகைமையால் அழிக்க முடியாது என்று அறிவது. அன்பால் மட்டுமே அதை வெல்ல முடியும் என்று உணர்வது” என்று அந்தச் சபையில் பேசினார். கூட்டு முடிவை எதிர்த்த ஒரு தனிமனிதர் என்ற வகையில் அவர் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதைக் குடும்பத்தை விட்டு வெளியேறுகிற-பரிவ்ராஜகனாக வெளியேறுகிற- பாணியில் நடைமுறைப் படுத்தினார். இது அம்பேத்கர் காட்டுகிற உண்மைச் சித்திரம்.
நதிநீர்ப் பிரச்சினையால் இப்படியொரு இக்கட்டான நிலை ஏற்படாதிருந்தால் அவர் வீட்டைவிட்டு வெளியேறியிருக்க மாட்டார். மனித வாழ்வு பற்றிய மெய்ம்மைகளை அறிவது தான் அவரது நோக்கம் என்றால் அதற்காகத் துறவு வாழ்வை மேற்கொள்ள வேண்டிய அவசிய மில்லை. இல்லற வாழ்வில் இருந்து கொண்டே அதைச் செய்திருக்கலாம். விஷயம் என்ன வென்றால், சமூக வாழ்வில் ஏற்பட்ட சிக்கலும், தனிமனித சிந்தனையில் ஏற்பட்ட அறிவுத் தாகமும் சேர்ந்து அவரை வீட்டைவிட்டு வெளியேற வைத்தது என முடிவு கட்டுவதே பொருத்தமாகப் படுகிறது. இதற்கு மரணம், நோய், மூப்பு போன்ற தவிர்க்க முடியாத துக்கங்கள் பற்றிய சிந்தனையும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். இது பின்னாளில் புராணமயமாகக் காட்சிப் படுத்தப் பட்டது போலும். புத்தர் மறைந்து பல நூற்றாண்டு கள் கழித்து எழுதப்பட்ட அஸ்வகோஷரின் “புத்த சரிதம்” நூலில் இப்படித்தான் அது சித்தரிக்கப் பட்டுள்ளது.
துக்கம் உண்டு, துக்கத்திற்குக் காரணம் உண்டு, துக்கத்தைத் தொலைக்க முடியும், அதற்கான மார்க்கமும் உண்டு - என்பவை துக்கம் பற்றிய புத்தரின் நான்கு கோட்பாடுகள் பிற்காலத்து பவுத்தர்கள் முதல் இரண்டுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதையொரு விரக்திச் சித்தாந்தமாக ஆக்கிவிட்டார்கள். இப்போதும்கூட ஆசையைத் துறக்கச் சொன்னார் புத்தர் என்பதே அவரது தத்துவம் பற்றிய சாரமாக வெகு மக்கள் புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு கோட்பாடுகள் தனிமனித - சமூக ஒழுக்க முறைமை பற்றிப் பேசுவது. அதை நாசூக்காகப் புறந்தள்ளி னார்கள். அம்பேத்கரோ அதுவே புத்த தருமத்தின் அஸ்திவாரம் என்றார்.
“என் தம்மம் துன்பத்தின் இருப்பை ஒப்புக் கொள்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. .ஆனால் அதே அளவில் துன்பத்தை நீக்குவதற்கும் அது முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். என் தம்மம், நம்பிக்கை, இலட்சி யம் இரண்டையுமே தன்னில் கொண்டது” என்று புத்தர் தன் முதல் விளக்கப் பேருரையை முடித்தார் என்கிறார் அம்பேத்கர்.
இந்தத் துணைக்கண்டத்தில் ஆன்மா மறுப் பை மிக வலுவாக எடுத்துச் சொன்னவர் புத்தர். “அவர் ஆன்மா என்று ஒன்று இல்லை என்று மிகவும் உறுதியான வார்த்தைகளில் மஹாலிக்கு கூறியிருக்கிறார். எனவேதான் ஆன்மா பற்றிய அவருடைய கோட்பாடு அநாத்மா-அதாவது ஆன் மா அற்றது-என அழைக்கப்படுகிறது” என்று மிகச் சரியாகக் கூறியிருக்கிறார் அம்பேத்கர். மரணத் திற்குப் பிறகும் உணர்வு இருக்குமேயானால் அது மரணமாகாது எனும் எளிய உண்மையை மிக வலிமையாகச் சொன்னார் புத்தர். அதே நேரத்தில் தொடரும் கர்மா, மறுபிறப்பு எனும் சொல்லாடல் களும் அவரிடம் காணப்பட்டன. இது முரண் அல்லவா?
இல்லை என்று விவரித்திருக்கிறார் அம்பேத் கர். சொல்லாடலின் ஒற்றுமைதான் இதைப் பிராமணியக் கோட்பாடு போலக் காட்டுகிறதே தவிர, புத்தரின் ஆன்மா மறுப்பும் இதர சிந்தனை களும் இதன் அர்த்தத்தைக் தெளிவாக வேறுபடுத்தி காட்டுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக் கிறார். “கடந்த பிறவியின் கர்மம் பெறப்படுகிறது எனக் கூறுவதற்குப் பதிலாக கடந்த பிறவியின் கர்மம் வாரிசுரிமையாகச் சுவீகரிக்கப்படுகிறது என்று கூறுவது உசிதமாயிருக்கும்” என்று சரியாகக் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். அதாவது புத்தர் குறிப்பிட்டது ஆன்மா கூடுவிட்டுக் கூடு பாய்கிற மறுபிறப்பு அல்ல, மாறாகக் காரண காரியத் தொடர்பால் புதிய தலைமுறையில் ஏற்பட்டிருக் கும் பாதிப்பு. புத்தர் மறைந்து ஒரு சில நூற் றாண்டுகளிலேயே எழுதப்பட்ட அருமையான படைப்பு நாகசேனரின் “மிலிந்த பங்கம்” - அதிலே எதுவும் இடம் மாறாமல்தான் மறுபிறப்பு நடக்கிறது என்றும் அதற்கு உதாரணமாக தீபத் திலிருந்து ஏற்றப்படும் தீபத்தைச் சொல்லியிருக் கிறார்.
விடுதலை,முக்தி எனும் சொல்லாடல்களை ஆன்ம விடுதலை, தமிமனித முக்தி எனும் அர்த்தத் திலேயே பயன்படுத்தியது பிராமணியம், மதத்தின் நோக்கம் அதுவாகவே இருக்க முடியும் என்று சிறிதும் சந்தேகமின்றிச் சொல்லி வந்தது. வருணா சிரமம் எனும் ஒருவகை அடிமைச் சமுதாயத்தில் ஒடுக்கும் வர்க்கங்களாக இருந்த பிராமணர்- க்ஷத்திரியர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. குற்றவுணர்விலிருந்து தனிமனிதனை விடுவிக்கும் உத்தியாகவும் இது இருந்தது. ஆனால் ஒடுக்கப்பட்ட வருணங்களுக்கு இது போதுமான தாக இல்லை இது சமூக விடுதலையையும், சக மனிதர்களின் நல்வாழ்வையும் கோரியது. இதற் கான மார்க்கமாகவே பிக்குகளை ,அவர்களின் சங்கத்தைத் தயார்படுத்தினார் புத்தர். பிக்கு களுக்கும் புத்தருக்கும் இடையில் நடந்த ஓர் அருமையான உரையாடலை அம்பேத்கர் மேற் கோள் காட்டியிருக்கிறார்.
“ புத்தர் : ஓ ! பிக்குகளே ! நான் உலகத்துடன் சச்சரவிடுபவன் அல்ல. ஆனால் உலகம் என்னுடன் சச்சரவிடுகிறது.
பிக்குகள்: ஐயன்மீர் ! நம்மை நாம் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறோம் . எந்த வகையில் நாம் போராளிகளாக உள்ளோம்?
புத்தர்: ஓ ! பிக்குகளே ! நாம் போர் தொடுக்கிறோம். ஆகவே நாம் போராளிகள் என்று அழைக்கப்படுகிறோம்.
பிக்குகள்: ஐயன்மீர்! நாம் எங்கு, எதற்காகப் போர் தொடுக்கிறோம்?
புத்தர்: உயர்ந்த நன்னெறிகளுக்காக , உன்னத நன் முயற்சிகளுக்காக , தெளிந்த நல்லறிவிற்காக நாம் போர் தொடுக்கிறோம். ஆகவேதான் போராளிகள் எனப்படுகிறோம். எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுங்கள், வாயடைத்து நிற்காதீர்கள்”
துறவிகளைப் போராளிகள் என அழைத்த போதகர் புத்தரைத் தவிர வேறு யாரும் இல்லை. வருணாசிரமத்திற்கு எதிராகக் காவி உடையில் கலகக்காரர்களை உருவாக்குவதே அவரது நோக்க மாக இருந்தது. இதை புரிந்து கொண்டுதான் பவுத்த பிக்குகளுக்குச் சமூக சேவையைப் புத்தர் வலி யுறுத்தினார் என்று சரியாகவே சொன்னார் அம்பேத்கர். “இல்லறத்தாருக்குத் தொண்டு புரியவே ஒரு பிக்கு இல்லறத்தைத் துறக்கிறார்” என்று அழகாகச் சொன்னார். இது சுய விடுதலை யில் அந்தச் சுயநலத்தில் மூழ்கிப் போயிருந்த பிக்கு ஜீவகா போன்றோருக்குப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை.
புத்தர் கூறிய அஹிம்சா தத்துவத்தைக் கொல்லாமையாகவும், புலால் உண்ணாமை யாகவும் மிகவும் சுருக்கிவிட்டார்கள் பிற்காலத்திய பவுத்தர்கள். ஆனால் புத்தரே மாமிச உணவு உண்டு வந்தார். அவர் கடைசியாகச் சாப்பிட்டது சூகரமத் துவம். இதன் அர்த்தம் இளம் பன்றிக்கறி என்று தர்மானந்த கோசாம்பி உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த உண்மை யைச் சொல்வதில் பிற்காலத்திய பவுத்தர்கள் மிகவும் கூச்சப்பட்டார்கள். மாமிச உணவு விஷயத் தில் புத்தர் நீக்குப்போக்காக இருந்த காரணத்தால் தான் தனது மார்க்கத்தில் சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் அவரால் ஈர்க்க முடிந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவர் என்ற முறையில் அம்பேத்கரும் அஹிம்சா பற்றிய சரியான புரிதலைத் தர வேண்டியிருந்தது.
“புத்தர் கூறியுள்ளார்: எதையும் நீங்கள் கொல்ல விரும்பாவண்ணம் அனைத்தையும் நேசி யுங்கள். அஹிம்சைக் கொள்கையை விவரிக்கின்ற உறுதியான உடன்பாட்டு வழி இது, இதிலிருந்து அஹிம்சைக் கொள்கை கொல்லாதே எனக் கூறாமல் அனைத்தையும் நேசி ‘ எனக் கூறுவ தாகவே தோன்றுகிறது. கொல்ல விரும்புதலுக்கும் கொல்லுதலின் தேவைக்கும் இடையிலான வேறு பாட்டையே புத்தர் குறித்தார் என்பது மிகவும் தெளிவாகிறது” என்று அம்பேத்கர் புத்தரது அஹிம்சா கோட்பாட்டின் சாரத்தைப் பிரமாதமாக உள்வாங்கியிருந்தார். தத்துவார்த்த - வரலாற்று நோக்கில் அதை இப்படியாகக் கச்சிதமாக வரை யறுத்தார்: “பிராமணியம் தன்னில் கொல்லுதலில் விருப்பத்தைக் கொண்டுள்ளது. சமணம் தன்னில் எப்போதும் கொல்லாமையில் விருப்பத்தைக் கொண்டுள்ளது. புத்தரின் அஹிம்சை முற்றிலும் நடுநிலைப் பாதையைக் கொண்டதாய் உள்ளது”
 அம்பேத்கரை வெறும் சட்ட மேதையாய்ச் சுருக்கிக் காட்டுகிற வேலை இன்றளவும் நடக் கிறது. அவர் அதையெல்லாம் தாண்டி உயர்ந்து நின்றவர். அவர் தேர்ந்த சரித்திர ஞானி , ஆழ்ந்த தத்துவ ஞானி இந்த ஒரு நூலைப் படித்தாலே இந்தக் கூற்றின் உண்மையை எவரும் உணரலாம். புத்தரைப் பற்றியும் அம்பேத்கரைப் பற்றியும் ஒருங்கே அறிய வேண்டும் என்றால் அவசியம் இதைப் படித்தாக வேண்டும் . அந்த வகையில், பிக்கு ஜீவகா கேலியாகக் கூறியிருந்தாலும் இது புத்தரும் அவரது தம்மமும் கூறுவது. இது அம்பேத் கரும் அவரது தம்மமும் கூறுவது இந்த அளவுக்கு இருவரும் ஒன்றிப் போனார்கள்.
அம்பேத்கர் மேலும் வாழ்ந்திருந்தால் மெய் யான பவுத்தத்தை மீட்டுத் தந்ததோடு அதை வெகுமக்கள் மத்தியில் பரவலாக்கிருப்பார். அந்த பாக்கியம் இந்த நாட்டு மக்களுக்கு இல்லாமல் போனது. அதனால்தான் “புத்தம் சரணம்”என்று அதை முற்றிலுமாகத் திரித்துக் கூறுகிற ஒரு நூலை கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய மோசடிகளை முறியடிக்க அம்பேத் கரின் நூலைத் தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு முற்போக்காளரின் கடமையாகும்.
உதவிய நூல்கள்:
1.புத்தரும் அவரது தம்மமும்-பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 22
2.பகவான் புத்தர்- தர்மானந்தா கோஸாம்பி
3. Social and political Ideas of B.R.Ambedkar- Chandra Bharill
4.புத்தர்: தருமமும் சங்கமும் - அருணன்.
5. Life of Buddha-Asvaghosha-Translated by Samuel Beal
- நன்றி:அண்ணல் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் மலர் 2010 திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

அனைத்து மனிதர்களையும் அங்கீகரித்து சமமாகக் கருதுவதும், பார்ப்பனியச் சமூக அமைப்பின் சாதி - வர்க்க - ஆணாதிக்க எதிர்மறைகள் மனிதத் தன்மையற்றவை என்பதை உணர்த்துவதுமே பவுத்தத்தின் மய்யக் கருத்தாகும். புத்தருடைய, எவ்விதத்திலும் வேற்றுமை தலைகாட்ட முடியாத நடைமுறையானது, எல்லா மனித உயிர்களின் அடிப்படை உளவியல் தேவையான தன் மதிப்பையும், வாழ்வியல் தன்னுரிமையையும், சுய ஆளுமையையும் ஏற்றதால் மானுடத்திற்கு அது இசைவாகிக் கொண்டது. சமூக பொருளாதார அரசியல் உரிமைகளைப் பறித்தெடுக்கும் பார்ப்பனியத்தால் நசுக்கப்பட்டு கீழே கிடந்த வெகு மக்கள் புத்தரிடம்தான் - அவருடைய கருத்தியலிலும், செயல்முறைமைகளிலும் சுதந்திரத்தை - சமத்துவத்தை - சகோதரத்துவத்தை நவீனமாகக் கண்டனர். வெகு மக்களைப் பொறுத்தவரையில் பவுத்தம் அவர்களை ஒரு புதிய சமூக, பொருளாதார, அரசியல் திரளாகப் பணமிக்கச் செய்கின்ற வாகனமாக அவர்களுக்குக் கிடைத்தது.

Ambedkar
ஒவ்வொரு உயிரும் தன் விடுதலையைத்தானே தேடிக்கொள்ள வேண்டும் என்பதே பவுத்தத்தின் மூலக் கொள்கை. மனித உயிர்கள் மற்றும் நல்வாழ்வே புத்தருடைய தன்மையான அக்கறையாக இருந்தது. மகிழ்ச்சியான மனிதர்கள் மட்டுமே மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க முடியும் என்பதால், அவர் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதில் ஆர்வமுடையவராக இருந்தார். துன்பங்கள் தீர்க்கப்படும் போது மட்டுமே மனிதர்கள் மகிழ்ச்சியடைய முடியும். புத்தர், துன்பத்தை விலக்கி, மனிதர்களுக்கு மகிழ்ச்சியின் தீர்மானகரமான தருணங்களை ஏற்படுத்தவே ஆயத்தமானார். பொருட்களின் உண்மையான தன்மை பற்றிய அறியாமையே துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதை அவர் கண்டறிந்தார்.

பசியைவிட மிகப் பெரிய துன்பம் வேறு எதுவுமில்லை. பசி - உடலை, நலவாழ்வை, அமைதியை, மகிழ்ச்சியை அழித்துச் சூறையாடி வருகிறது. மனிதர்கள், சக மனிதர் பசியோடு இருப்பதை நீடிக்க விடக்கூடாது. உலகில் யாரெவருமே பசியோடிருக்கக் கூடாது என்பதற்கான வழிவகைகளை நாம் காண வேண்டுமென புத்தர் அறைகூவல் விடுத்தார். வறுமை துன்பத்திற்குக் காரணமாகிறது. உயிர்கள் யாவும் இன்பத்தை விழைகின்றன - துன்பத்தை வெறுக்கின்றன என்பதை வலியுறுத்தினார். சமூகத்தில் குற்றங்களும் வன்முறைகளும் பசி, வறுமை மற்றும் வேலையின்மையால்தான் விளைகிறது என்றார்.

திரண்ட செல்வம் பெற்றிருந்தும் தான் மட்டும் துய்த்தலும்; பிறப்பு, செல்வம், குலம் ஆகியவற்றைக் கொண்டு அகங்காரப்பட்டு பிறரைத் துன்புறுத்துவதுமான பார்ப்பனிய பிறவி முதலாளித்துவ அமைப்பினுள் - மரண தண்டனைகளும், சித்திரவதைகளும், சிறைவாசம் ஒருபோதும் குற்றங்களையும், வன்முறைகளையும் நிறுத்தி விடாது என்றார் புத்தர். மக்களுக்கு உதவுவதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்குமான ஒரே சிறந்த வழி ஆரோக்கியமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதேயாகும் என்ற அவர், வர்க்கக் கட்டமைப்பில் அதிருப்தியுறுவதையும் கிளர்ச்சி புரிவதையும் தண்டனையால் நிறுத்த முயலாமல், தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் பொருளாதார வளத்தை முன்னேற்றுவதன் மூலம் நிறுத்துவதை வலியுறுத்தினார்.

புத்தர், பொருளீட்டுபவர்கள் மனசாட்சிக்கு அஞ்சுகிற அறவியலாளராக இருக்க வேண்டும் என்ற வரையறையை ஏற்படுத்தினார். சொத்து என்பது உண்மையான திறமையான உழைப்பினால் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து சேர்க்கப்பட வேண்டும் என்பது அவரின் முடிந்த முடிவாகும். ஒழுக்கக் கேடான செயல்களால் செல்வந்தராவது கொடுங்கோன்மைக்கு வழிநடத்தும் என்றார். ஒருவரது வாழ்க்கைக்கான பொருள் சட்டப்பூர்வமான வழிகளிலும், சுரண்டல் இல்லாத வழிகளிலும், வன்முறையில்லாத வழிகளிலும் பெறப்பட வேண்டும் என்ற புத்தர், செல்வத்தை அடைவதற்கான வழிமுறைகளை அறவியலைக் கொண்டு வகுத்தளித்தார். பொருளீட்டுவதற்கான அன்றாட நடவடிக்கைகளுடன் ஒழுக்கவியல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள நிபந்தனை விதித்தார். எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் பணத்தின் மீதான பேராசைக்குத் தடை விதித்தார். புத்தர் விதித்த பேராசை மற்றும் வரம்பு மீறிய புலனின்பத்திற்கும் தடை, அடிப்படைத் தேவைகளில் மனிதர்கள் நிறைவுறும் பண்பை வளர்த்தெடுத்தது.

புத்தருக்கு பொருளாதார வளம், சமமானப் பகிர்வும் இன்றியமையாததாகும். மக்கள் ஏழைகளாயிருப்பின், அங்கு செல்வம் தவறாகப் பகிர்வு செய்யப்பட்டுள்ளதாய் அவர் பொருள் கண்டார். தவறானப் பகிர்வு நாட்டில் மக்களுக்கு ஏமாற்றத்தையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். புத்தர், மக்களிடையே செல்வம் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லையாயின் வறுமை தலைவிரித்தாடும் என்றார். வறுமை அதிகரிக்க அதிகரிக்க திருட்டு, கொள்ளை ஆயுதக் கலாச்சாரம், மோதல்கள், கொலைகள் நிகழ்ந்தே தீரும் என்பதை விளக்கினார்.

புத்தர், நிலையான வருவாய் ஒரு மனிதன் பொருளியல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு அவசியமானது என்பதை அறிந்திருந்தார். எனவே, அவர் தேனீ பூக்களை சேதப்படுத்தாமல், அவற்றின் தேனை நாற்புறம் சுரண்டி சேகரிப்பதுபோல் பிறரைத் துன்புறுத்தாமல், வஞ்சிக்காமல் நல்ல வழிகளில் தங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்தி, தாங்கள் வாழ்வதற்காகப் பொருளீட்ட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். ஒழுக்கம், மனதின் மீதான கட்டுப்பாடு மற்றும் சோதனையறிவு இவையே புத்தருடைய அறிவுரைகளின் சாரமாகும். அச்சாரங்களையே பொருளியல் முறைமைகளுக்கும் பொருத்தினார்.

சமூகநல்லிணக்கம், சமநீதிக்கான அறிவுறுத்தல், அன்பு, அரவணைப்பு இவையே புத்தரின் கோட்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளச் செய்யும் வழிமுறைகளாக அமைந்தன. அனைவருக்கும் இயைந்த அறத்தினால், அன்பினால், அரவணைப்பினால் மட்டுமின்றி அதிகாரத்தினால் எதையும் வெல்ல முடியாது என்ற கோட்பாட்டை எதிராளியாக இருந்தாலும் கூட, அவர்களின் மனதிலும் நேர்மறையை ஆழமாகப் பதிய வைப்பதன் மூலம் புத்தர் அவர்களையும் வென்றெடுத்தார். மனிதன் மனதை, உலக மக்களின் மனச்சாட்சியை சீர்திருத்தாமல், உலகைச் சீர்திருத்த முடியாது என்பது புத்தரின் அறிவுரைகளில் மிக முக்கியமானதாகும்.

ஒரு மனிதனின் மனம் மாறிவிடுமானால், அம்மனிதனை நேர்மறை சக்தியாக, ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர காவல் துறையோ, ராணுவமோ தேவையில்லை. அதன் காரணமாகத்தான் புத்தர், மக்களின் மனசாட்சியை வலுப்படுத்தி, அதன் மூலம் அவர்களை தம்மத்தின் பாதையில் நிற்க வைத்தார். புத்தரின் தம்மத்தில் பொருளியல் கோட்பாடு என்பது, மனிதன் சமூகஉயிரி என்பதை நிலை நாட்டுவதாகும். பொருளாதார வெற்றிக்கு இடையறா முயற்சி, விழிப்புடைமை, நல்ல தோழமை, வரவுக்குப் பொருந்திய வாழ்க்கை ஆகியவற்றை வைத்தார். புத்தர், உடைமைகளை அனுபவிக்கும் இன்பத்தை ஏற்றுக் கொண்டு, அவற்றை அனைவருக்கும் உரிமையாக்கினார்.

குடும்பத்தின் சொத்து அந்தக் குடும்பத்தினருக்கு மட்டுமில்லை என்று அறிவித்த புத்தர், உடைமைகளை அனுபவிக்கும் பாங்கில் இன்பம் எய்த, ஒருவர் தம் செல்வத்தைப் பகிர்தலின் படலமாக்க கேட்டுக் கொண்டார். செல்வம் தமக்கும் சக மனிதர்களுக்கும் பயன்பட வேண்டும். செல்வம் மூலதனமாகத் திரட்சி பெற்று குவித்து சேர்த்து வைக்கப்படத்தக்கதன்று; பகிர்ந்தளிக்கப்படத்தக்கது. செல்வம் முதலாளித்துவமாக மாறிவிடக் கூடாது. செல்வத்தின் நீட்சி ஏகாதிபத்தியமாக மாறிவிடக் கூடாது. செல்வத்தின் ஆட்சி உலகமயமாகி விடக் கூடாது. இதுவே புத்தர் கொண்ட பொருளியல் முறைமைக்கான அடிப்படையாகும்.

செல்வத்தைச் சேர்க்கும்போது தட்ப வெப்ப சூழ்நிலைமைக்கோ, பசி - பட்டினிக்கோ அச்சம் கொண்டு விடக் கூடாது. மாறாக, அத்தனை துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள ஒருவர் தயாராக இருக்க வேண்டும் என்றார் புத்தர். அவர், மக்களின் பொருளாதார ஆதாரத்திற்காக வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம், அரசுப் பணிகள் ஆகியவற்றை அங்கீகரித்தார். இவற்றில் ஈடுபடுவோர் உள்ள நலத்திற்கான சூழல்களுக்காக பகுத்தறிவு, நன்னெறி, ஈகை, மெய்யறிவு கைக்கொள்ளப்பட வேண்டும் என்றார். இச்சூழலமைவினால் இத்தொழில்களில் தமக்கும் பிறருக்குமான இன்பத்தைப் பெற முடியும் என்றார். உயிர்களேதும் துன்புறுத்தப்படாமலும், தீய செயல்கள் எதிலும் ஈடுபடாமலும் அமைதியான தொழில்களில் ஈடுபடுதலைப் பெரும் பேறாகக் கருதிய புத்தர் - அடிமை வணிகம், ஆயுத உற்பத்தி, கொடிய நஞ்சு தொடர்பான தொழில்கள், போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை தவறான வாழ்க்கை என்ற வரையறைக்குள் உள்ளடக்கினார். ஒருவரது வாழ்க்கைக்கான பொருள் சட்டப்பூர்வமான வழிகளிலும், தீங்கு, வன்முறையில்லாத வழிகளிலும் பெறப்பட வேண்டும் என்பது புத்தர் திரும்பத் திரும்ப அறிவுறுத்தியதாகும்.

தனிச் சொத்துடைமையின் மேல் பாசம் இல்லையாயின் அங்கு அமைதி நிலவும். அனைத்துப் பேராசையினையும், தன்னை மட்டுமே நேசிக்கின்ற சுயநலத்தினையும் களைவதன் மூலம், அவற்றின் பின் அலையாதிருப்பதன் மூலம், அவையனைத்தையும் அழித்துவிட்டுத் துறப்பதன் மூலம் உயர் பேரறிவு எய்த முடியும். துயரப்படுபவர் தன்னிலையை மாற்றிக் கொள்ள முயல வேண்டும் என்று கூறிய புத்தர், உடைமைச் சமூக அமைப்பிற்கு எதிராக, எல்லையற்ற செல்வக் கொடூரத்திற்கு எதிராக எல்லோரும் வளமான வாழ்க்கை வாழ உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் அதீத உணர்ச்சிக்கு சுயநலம் - பேராசையும் - பெரும் பொருள் பற்றும் காவலாகின்றன என்ற புத்தர், இந்த சுயநலப் பேராசை உணர்ச்சி ஏன் நீக்கப்பட வேண்டுமென்றால், இதிலிருந்தே சமூகத்தில் விபரீத நிலைமைகள் தோன்றுகின்றன. வெட்டுக்குத்து, முரண்பாடு, மோதல், போர், பொய், புரட்டு எல்லாம் இந்தப் பெரும் பற்றென்னும் பேராசையின் விளைவு என்றார். வர்க்கப் போராட்டத்தின் சரியான விளக்கத்தை அய்யத்திற்கிடமின்றி தந்த புத்தர், வர்க்க சமூக அமைப்பை சுயநலக் காரணகாயத் தொடர் சங்கிலி என்று அழைத்தார்.

சுயநலப் பேராசை இல்லையாயின் அங்கு லாபத் தேடல் விளையுமா? லாபத் தேடல் இல்லையாயின் அங்கு பற்று விளையுமா? பற்று இல்லையாயின் அதில் ஒன்றிவிடுதல் விளையுமா? ஒன்றி விடுதல் இல்லையாயின் அங்கு தனிச் சொத்துடைமை மேல் ஆர்வம் விளையுமா? சொத்துடைமை இல்லையாயின், அங்கு மேலும் மேலும் உடைமை மேல் பேராசை விளையுமா? விளையாது என்றார் புத்தர். தனித் சொத்துடைமையின் மேல் பாசம் இல்லையாயின் மானுடத்தில் அமைதி நிலவும் என்ற புத்தர், நான் புவியைப் புவியாய் அங்கீகரிக்கின்றேன். ஆனால், எனக்குப் புவிமேல் ஆசை இல்லை என்றார்.

உடைமை வர்க்கத்தினரிடம் புத்தர், திறனுக்கேற்ற வேலைகளை அவர்களிடம் ஒப்படையுங்கள்; அவர்களுக்கு உணவும், போதிய ஊதியம் அளியுங்கள், பிணியுற்ற காலத்தில் பராமரியுங்கள், இனியவைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், உரிய காலங்களில் அவர்களுக்கு விடுதலை அளியுங்கள் என்று பாட்டாளி வர்க்கம் சார்பில் கோரிக்கைகளை வைத்தார். புத்தர் உழைப்பின் மேன்மைக்கு மிகுந்த மதிப்பளித்தார். உழைப்பாளர், தன் விடுதலைக்கான தீர்வுக்குத் தானே உழைக்க வேண்டுமேயல்லாது, வேறு யாருடைய ஆசிகளையோ, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளென எவைகளையுமோ சார்ந்திருக்கக் கூடாது என்றார். இந்தப் பூவுலகைத் தாங்கி நிற்பவர்கள் இந்த உலகின் ஆணி வேரானவர்கள் பாட்டாளிகள் என்றார் புத்தர். ஆம், அவர் மானுட உலகில் பாட்டாளிகளின் முதல் பிரதிநிதி மட்டுமல்ல; முதல் தலைவருமாவார்.