செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

நூறாண்டுகளாக வழங்கிவந்த நட்சத்திரப் புதிர்

எப்சிலான் ஆரிகே என்பது வட வானில் மின்னும் பிரகாசமான நட்சத்திரம். இது 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெள்ள பார்த்துக் கொண்டிருக்கும் போதே பார்வையிலிருந்து மறைந்து போகும் அதிசய நட்சத்திரம். மறுபடியும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புலப்படும். சூரியக் கிரகண‌த்தைப் போல இது தோன்றினாலும் ஏன் 2 ஆண்டுகள் அது நீடிக்கிறது? ஏன் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறைந்துவிடுகிறது என்பதற்கான சரியான விளக்கம் கிடைக்காமல் சென்ற 100 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருந்தனர்.
சென்ற வருடம் ஆகஸ்ட் அன்று எப்சிலான் ஆரிகே மீண்டும் மறைய ஆரம்பித்ததும் நாசாவின் ஸ்பிட்செர் ஆகாயத் தொலைநோக்கி அதை தனது புற ஊதாக்கதிர் கேமரா மூலம் படம்பிடித்தது. எப்சிலான் நட்சத்திர கிரகண‌த்திற்கு விளக்கம் உருவாகியிருக்கிறது. அது: எப்சிலான் ஆரிகே ஒரு பிர‌ம்மாண்டமான நட்சத்திரம். அதைச் சுற்றியபடி இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன. அவை பிரும்மாண்டமான தூசிப்படலத்தில் மூழ்கியுள்ளதால் ஒவ்வொரு முறையும் அந்தத் துணை நட்சத்திரங்கள் நமக்கும் எப்சிலானுக்கும் இடையில் வரும்போது குறிப்பிட்ட கிரகண‌ம் நிகழ்கிறது; எப்சிலான் மறைந்துவிடுகிறது.
படத்தில் புகை மண்டலம் நட்சத்திரத்தை மறைப்பது காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக