செங்கொடியல்ல இஸ்லமே கற்பனைகளின் களம் 19
மறுப்புக்
கட்டுரை என்றால் எதை மறுக்கிறோமோ அதில் எழுதப்பட்டவைகளை உள்வாங்கி அதன்
ஒட்டு மொத்த சாரத்தை மறுக்கும் நோக்கில் விபரங்களையும் விளக்கங்களையும்
எடுத்து வைக்க வேண்டும். நண்பர் இஹ்சாஸின் பதிவை எடுத்துக் கொண்டால்
மேற்குறிப்பிட்ட ஏதாவது இருக்கிறதா? இந்த நிலையில் அதையும் மறுத்து எழுத
வேண்டும் என்றால் .. .. .. மெய்யாகவே மிகக் கடினமான ஒரு வேலை தான்.
குரான் வசனம்
86:7 ல் முரண்பாடான ஒரு செய்தியை பதிவு செய்திருந்தேன். குறிப்பிட்ட அந்த
வசனம் முதுகந்தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து
என்றிருக்கிறதா? முதுகந்தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து
என்றிருக்கிறதா? சில மொழி பெயர்ப்புகளைப் பார்க்கலாம்.
between the backbone and the ribs: யூசுப் அலி
between the loins and ribs: பிக்தல்
between the loins and the breast-bones: அல் பெர்ரி
between the loins [of man] and the pelvic arch [of woman]: ஆஸாத்
முதுகந்த்ண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து: ஜான் டிரஸ்ட்
முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து: பிஜே
குறிப்பிட்ட
அந்த வசனத்திற்கு இதுவரை மொழிபெயர்த்த பெரும்பாலானோர் முதுகந்தண்டுக்கும்
விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து என மொழிபெயர்த்திருக்க, சிலர்
முதுகந்தண்டுக்கும் மார்பெலும்புக்கும் இடையிலிருந்து என்று
மொழிபெயர்த்திருக்க, இன்னும் ஒருவரோ பொதுவாக முதுகந்தண்டுக்கும் தனியாக
ஆணுக்கு ஒரு இடத்திலும் பெண்ணுக்கு ஒரு இடத்திலிருந்தும் கடைசியாக வந்த
பிஜே வின் மொழிபெயர்ப்போ முதுகந்தண்டுக்கும் முன்பகுதிக்கும்
என்றிருக்கிறது. குரானில் இருக்கும் “பைனி இ சுல்பி வல் தரைபி” எனும்
சொற்றொடருக்கு மெய்யாகவே என்னதான் பொருள்? முதுகந்தண்டுக்கும் விலா
எலும்புகளுக்கும் இடையில் என்பதா? முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புக்கும்
இடையில் என்பதா? முதுகந்தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையில் என்பதா? எது
சரியான பொருள்? இருக்கும் சொல் ஒன்று கொள்ளும் பொருள் மூன்று என்றால் ஒன்று
குரானின் அந்த வசனத்தில் பிழையிருக்க வேண்டும். அல்லது, இவர்கள்
காலந்தோறும் மாற்றி மாற்றிக் கூறும் பொருளில் பிழை இருக்க வேண்டும். நண்பர்
இஹ்சாஸ் இதில் எதை ஒப்புவார்?
கருத்து
முதல் வாதம் என்பது இதைத்தான். இருக்கும் சொல் ஒன்றாக இருக்கும்,
காலந்தோறும் விரிவடையும் அறிவியல் நுட்பங்களுக்கு ஏற்ப அந்தச் சொல்லின்
பொருளை மட்டும் மாற்றிக் கொண்டே செல்வார்கள். இது போன்று பொருள்
மாறுதலுக்கு உள்ளான சொற்கள் குரானில் ஏராளம் இருக்கின்றன. அனைவருக்கும்
தெரிந்த ஒரு எடுத்துக்காட்டு ‘அலக்’ இதை வைத்துக் கொண்டுதான் 1400
ஆண்டுகளுக்கு முன்பே குரான் அறிவியல் பேசியது என்று புளகமடைந்து
கொள்கிறார்கள்.
முதகந்தண்டிற்கும்
அதன் சுற்றுப்புற ஏரியாவில் ஒரு இடத்திலிருந்து என்று இன்னொரு மொழி
பெயர்ப்பு வருவதற்கு முன் நாம் நம்முடைய விளக்கத்தை இன்னும் விளக்கமாக
கூறிவிடுவோம். குதித்து வெளிப்படும் நீரினால் அவன் படைக்கப்பட்டான், அது
முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.
இது மிகத் தெளிவாக மனிதன் கருவாக உருவாவது குறித்து பேசுகிறது. மனிதன்
கருவாக உருவாவதற்கு எது தேவையோ அது முதுகந்தண்டுக்கும் விலா
எலும்புகளுக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. இது தான் அந்த வசனம் கூற
வருவது. பெண்ணின் சினை முட்டையுடன் இணைந்து கருவை உருவாக்க வல்ல விந்து
எங்கிருந்து வெளிப்படுகிறது? விரையில் உற்பத்தியாகி செமினல் வெஸிக்கிள்ஸ்,
புரோஸ்டேட் ஆகிய இரண்டு சுரப்பிகளில் உற்பத்தியாகும் சுரப்புகளையும்
இணைத்துக் கொண்டு சுரப்பிகளின் இடத்திலிருந்து சற்று மேலேறியிருக்கும்
குழாய் வழியே ஆணுறுப்பிலிருந்து வெளியாகிறது. இது தான் விந்தின் பாதை. இந்த
அறிவியல் விளக்கம் குரானில் இருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
ஆனால் விந்து உருவாகும் விரைகள் குறித்தோ அதனுடன் கலக்கும் துணைத்
திரவங்கள் குறித்தோ எதுவும் கூறாத குரான், தண்டுவடத்தை ஒட்டிய ஒரு
இடத்திலிருந்து வெளிப்படுகிறது என்று கூறினால் அது எப்படி அறிவியல்
கண்டுபிடிப்பாகும்? இதற்கு மதவாதிகளின் விளக்கம் தான் அது வரும் குழாய்
தண்டுவடத்தை ஒட்டிச் செல்கிறது என்பது. இது போதாதா மதவாதிகள்
புழகமடைவதற்கு? ஆனால் நாம் அப்படி புல்லரிக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர்
இல்லையே. ஒரு எடுத்துக்காட்டு கூறலாம், ஒரு பேருந்து சென்னையிலிருந்து
விழுப்புரம் திருச்சி வழியாக மதுரைக்கு செல்கிறது என்று கொள்வோம். அந்தப்
பேருந்து விழுப்புரத்திலும், திருச்சியிலும் நின்று ஆட்களை ஏற்றிக் கொண்டு
மதுரை வருகிறது. ஆனால், அந்தப் பேருந்து திண்டிவனத்தில் நிற்கவும் இல்லை
ஆட்களை ஏற்றவும் இல்லை. இந்த நிலையில் அந்தப் பேருந்து
திண்டிவனத்திலிருந்து வருகிறது என்று கூறினால் அதில் எந்த அளவுக்கு உண்மை
இருக்குமோ அந்த அளவுக்குத்தான் மேற்கண்ட வசனமும் இருக்கிறது. யார் எந்த
அளவுக்கு புல்லரித்துக் கொள்ள வேண்டுமோ அந்த அளவுக்கு புல்லரித்து சொரிந்து
கொள்க.
இதே விந்து
குறித்து குரான் குறிப்பிடும் இன்னொரு விந்தை தகவலையும் அந்தக் கட்டுரையில்
குறிப்பிட்டிருந்தேன். கலப்பு இந்திரியத் துளியிலிருந்து மனிதனைப்
படைத்தோம் என்பது குரானின் அந்த மற்றொரு வசனம். கலப்பு இந்திரியத் துளி
என்பதற்கு குரான் “நுஃப்ததின் அம்ஷாஜின்” எனும் சொல்லைப்
பயன்படுத்தியிருக்கிறது. இது நண்பர் இஹ்சாஸ் குறிப்பிடும் சீனிக்
கரைசலுக்கு பொருந்துமா? அப்படிக் கூறமுடியுமா? கலப்பு இந்திரியத் துளி
என்றால் ஆணுக்கு வெளிப்படும் விந்துத்துளியும் பெண்ணுக்கு வெளிப்படு உயவுத்
துளியும் கலந்தது என்று தான் பொருள் கொள்ள முடியும். அப்படிக்
கொள்வதற்குத் தான் அந்த வசனத்தில் இடமிருக்கிறது. மாறாக அதற்கு உயிரணுவும்,
சினை முட்டையும் எனும் பொருளை அந்த வசனத்திலிருந்து எப்படி வந்தடைந்தார்
என்று நண்பர் இஹ்சாஸோ, அதற்கு பொழிப்புரை எழுதிய வசனகர்த்தாக்களோ
விளக்குவார்களா? துளி எனும் சொல் நீர்த்த நிலையிலிருக்கும் திரவப்
பொருட்களைத்தான் குறிக்கும். தவிரவும், பெண்களுக்கு வெளிப்படும் திரவம்
உயவுத் திரவம் என்பது முகம்மதுவுக்கு தெரியாது என்பதோடு மட்டுமல்லாது,
அந்தத்திரவம் குழந்தை பிறப்பில் பங்கு வகிக்கிறது என்று முகம்மது கூறிய
ஹதீஸும் இருக்கிறது.
.. .. .. உம்மு ஸலமா பெண்களுக்கு ஸ்கலிதம் ஏற்படுமா என்று கேட்டதற்கு நபி அவர்கள், நண்றாக கேட்டாய்! ஆம், அப்படி இல்லையென்றால் அவர்களுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது? என்று கேட்டார்கள் என ஸைனப் பிந்த் உம்மு ஸலாமா அறிவித்தார். புஹாரி 130
முகம்மது
கூறிய மேற்கண்ட ஹதீஸின் செய்திக்கும், குரானின் அந்த வசனத்திற்கும் ஒரு
தொடர்பும் இல்லையா? அந்த நேரத்தின் அறிதலின் படி முகம்மது கூறிய அந்த தவறான
செய்தியே அவர் கூறிய குரானிலும் பிரதிபலித்திருக்கிறது. பின் எந்த
விதத்தில் இவர்கள் உயிரணு, சினை முட்டை என்று சகட்டு மேனிக்கு பொருள்
கொள்கிறர்கள்? குரானில் அறிவியல், புவியியல், வரலாறு, மாங்காத்தொலி,
தேங்காமட்டை எல்லாம் இருக்கிறது என்று கூறுவதற்கு முன் கொஞ்சமேனும்
சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?
குரானில்
ஒரு சொல் கூட மாறாது என்று ஜல்லியடித்துக் கொண்டே நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக அந்த்ச் சொல்லின் அர்த்தத்தை மாற்றிக் கொண்டு
திரிகிறார்கள். மத போதையில் நனைந்து ஜல்லி கண்டு நடுங்கிக்
கொண்டிருப்பவர்களால் உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியாது. அறிவியலின்
வெயிலில் தங்களை காய வைத்துக் கொள்வோர் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.
நண்பர் இஹ்சாஸும் அவ்வாறு தன்னை வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்
என்று அந்த எல்லாம் வல்ல அல்லா(!)விடம் துஆ செய்வோம். வேறு என்ன செய்வது ..
.. ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக