மனித குலத்தின்
விடிவிளக்கு, மறுமைக்கான ஒளிவிளக்கு என்றல்லாம் போற்றப்படும் குரான் இன்று அது உயிர்
வாழ மனிதகுலம் கண்டுபிடிச்ச நவின அறிவியலோடு கலக்கப்பட்டு புத்துணர்ச்சி கொடுக்கப்படுகின்றது.
"உலகில்
உள்ள அனைத்து பொருட்களும் எதோ ஒரு விசையில் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. அப்படி இயங்க
முடியாத ஒரு பொருள் இருக்குமேயானால் அது அழிவை
நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பது தான் இயக்கவியல் விதி".
குரானும் முகமதுவும்
மேற்கண்ட விதியில் தான் உயிர் வாழ்கின்றார்களே தவிர எல்லாம் வல்ல அல்லாஹ்வால் இல்லை
என்பதை நம் மூஃமின்கள் நமக்கு அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். அதனல்
தான் ஹிக்போசான் துகள்கள், பிக்பேங்க் தியரி, பால் சுரப்பி, இதயம் சுருங்குதல், விந்து
உற்பத்தியாகும் இடம் என அறிவியலை அவர்களின் இஷ்டத்துக்கு வளைத்து நெளித்துக் குரானில்
சொருகபார்க்கின்றார்கள்.
ஒரு
முறை என்
நன்பன் ஒருவனிடம் குரான் சம்மந்தமாக பேசிக்கொண்டு
இருக்கும் போது அவன் சொன்னான் குரானில் இல்லாத அறிவியலே இல்லை. குரானில்
இருந்து
தான் இதுவரை கண்டுபிடித்த அனைத்து அறிவியலும்
கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.அது ஒரு அறிவியல்
புத்தகம் என தனக்குதானே பூரித்துக்கொண்டான்.நான் அவனிடம் கேட்டேன் ஏன்
மச்சி அப்ப குரானை
முழுமையாக நன்கு விளக்கம் புறிந்துப்படித்த ஒரு ஹாலிம்மாலையும்
ஹாபிசாவாலையும் கூட ஒரு சின்ன அறிவியலை கண்டு பிடிக்கமுடிவில்லை,ஆனால்
இந்த பாலாபோன யூதர்களால் மட்டும் இவ்வளவு அறிவியலை கண்டுப்பிடிக்க
முடிக்கின்றது என்று.அதற்கு அவன் அளித்த பதில் என்ன
தெரியுமா? சு..சு..சு......ம்ம்ம், நீ காஃபீர் மச்சி அதான் உனக்கு தெரியல
என்று.
இப்படி தான்
இன்னும் குரானில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமுக அறிவியல் என எல்லாம் இருக்கின்றது
என்று மூஃமீன்கள் சொன்னால் 'ஆம்' என்று நீங்கள் பதில் அளித்தால் நீங்கள் மூஃமீன். 'எப்படி'
என்று மறுகேள்வி எழுப்பினால் என்னை போல் நீங்களும் காஃபீராகிவிடுவீர்கள். ஆகவே 'ஆம்'
என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து படியுங்கள் நாம் குரான் சொல்லும் ஒரு அறிவியலை பற்றி
இங்கு விவாதிக்க போகின்றோம்..
இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். குரான்
42:32
அவன் விரும்பினால் காற்றை
(வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும்,
நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. குரான்
42:33
மேற்கண்ட வசனத்தை
படிக்கும் போதே தெரிகின்றதா நம் முகமது நபி எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்து இருக்கின்றார்
என்று. பாருங்கள் 1400 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டார் காற்றை அவன் (அல்லாஹ்) நிறுத்திவிட்டான்
என்றால் கப்பல் ஒரு துளிக்கூட அசையாமல் அதே இடத்தில் கிடக்குமாம். என்னே முகமதுவுடைய
ஞானம்! விஞ்ஞானம் ! காற்று இல்லை என்றால் கப்பல் நகராத?
இந்த நவின காலத்தில்
150கிலோ மீட்டர் வேகத்தில் எதிர் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் அளவுக்கு போர்க்கப்பல்களும்,
ரேசர் கப்பல்களும் (RACER BOAT) கண்டுபிடிக்கப்பட்டூவிட்டன. இன்னும் சொல்லப்போனால்
காற்றே இல்லாதா ஆகாயத்திலும் கடலுக்குள் செல்லும் ஸ்பேஸ் சிப் (SPACE SHIP ) மற்றும்
சப்-மறைன்களையே( SUB-MARIN) கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனாலும் இன்னும் நம் மூஃமீன்கள்
காற்று இல்லனா கப்பல் போகாது என நம் காதில் பூசுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.
முகமது வாழ்ந்த
காலத்தில் இருந்த பாய்மர கப்பல்களுக்கு வேண்டுமேயானால் மேலே சொல்லப்பட்ட வசனம் செட்டாகலாம்.
ஆனால் நம் காலத்துக்கு
செட்டாகாது. மூஃமீன்களே ! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் (சாரி இந்த வசனத்தில்
நீங்கள் சிந்திக்க கூடாது பொறுமையாக நன்றி செலுத்த வேண்டும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக