சனி, 2 பிப்ரவரி, 2013

பரிணாமம் - தொடர்சி
டிஸ்கி: இந்த தொடரில் வரும் அனைத்தும் எனது புரிதல்களே! எனது புரிதலை இங்கே விவாத பொருளாக வைக்கிறேன்! அவற்றில் உள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய வேண்டுமென்பதே எனது அவா!

*************

பலதரபட்ட உயிரனங்கள் கண் முன் இருந்தாலும் அவைகளின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்து அவற்றை ஒரு குடும்பத்தின் கீழ் வகைபடுத்துகிறார்கள்! உதாரணமாக புலி, சிங்கம், சிறுத்தை ஆகியவை பூனை குடும்பத்தை சேர்ந்தது!, அவைகளுக்குள் இருக்கும் உருவ ஒற்றுமை, முக்கியமாக தலை அமைப்பு, எழும்புகூட்டின் ஒற்றுமை, வேட்டையாடும் தன்மை இவற்றை உறுதி படுத்துகிறது! இந்த குடும்பத்தில் உடல் வலிமை வாய்ந்தது சிங்கம் என்றாலும் புத்திசாலி விலங்கு எதுவென்றால் அது சிறிய இனமான பூனை தான் எனலாம்!, ஒரு விலங்கு தான் உயிர்வாழ தேவையான உணவை எப்படி பெறுகிறது, அதற்காக அது வகுக்கும் வியூகம் என்ன என்பதிலேயே அதன் புத்திசாலி தனம் தெரிந்துவிடும்!, காட்டில் பூனைகுடும்பத்தில் புத்திசாலி சிறுத்தை!


பூனையாகட்டும், நாயாக்கட்டும் நமக்கு செல்லபிராணிகளாக இருப்பது இன்று தான்! என்னுடய கணிப்பில் மனித உணவின் எச்சங்களை சாப்பிட ஊர் எல்லையில் குழுமியிருந்த நாய் மற்றும் பூனை இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகருக்குள் வந்தன, அதிக ஆபத்தில்லாத விலங்குகளாக மனிதர்களுக்கு தோன்றியதால் அவர்கள் அதை விரட்டவில்லை, ஆம் என்னுடய கணிப்பில் ஆரம்பத்தில் அதை வளர்க்க அவர்கள் ஆசை பட்டிருக்க முடியாது, அதே நேரம் தொரத்தவும் மனமில்லாமல் விட்டதால் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு பின் அந்த விலங்குகள் அவர்கள் குடும்பத்தோடு ஒட்டியிருக்க வேண்டும்!, இன்னொரு விசயம் எந்த விலங்காக இருந்தாலும் குட்டியாக இருக்கும் போது அதை எடுத்து கொஞ்ச வேண்டும் என்று தோன்றும்!


ஏற்கனவே சொன்னது போல் விலங்கின் முக அமைப்பை கொண்டு இது இன்ன குடும்பம் என வகைபடுத்துகிறார்கள்!, குடும்பம் என்றால் படைப்புவாத கொள்கையின் படி குடும்பம் குடும்பமாக படைப்பட்டதல்ல, ஊர்வன, பறப்பன போல் பாலூட்டிகளில் ஏற்பட்ட கிளைகளை ஒரு குடும்பம் என்கிறோம்!, ஒரு குடும்பத்திற்கும், மற்றொரு குடும்பத்திற்கும் இருக்கும் இணைப்பே பரிணாமத்தின் ஆதாரபுள்ளிகள்!, அதே நேரம் ஒரே குடும்பத்தில் இருந்து அதன் பழக்கவழக்கங்களை மாற்றி புதிய குடும்பமாக அல்லது மேம்படுத்தபட்ட உயிரினமாக மாறுவது சமகாலத்தில் கண் முன் இருக்கும் பரிணாமத்தின் பேராதாரங்கள்.


ஒநாய், நரி என்ன குடும்பம் என்றால் பெரும்பாலோர் பட்டென்று சொல்லிவிடுவார்கள் அது நாய் குடும்பத்தை சேர்ந்தது என்று, ஆனால் கரடி என்ன குடும்பம் என்றால் பலர் யோசிக்க நான் பார்த்திருக்கேன்!, அதன் தலை அமைப்பு, மற்றும் எலும்பு உள்கட்டமைப்பு சொல்லிவிடும் அதுவும் நாய் குடும்பம் தான் என்று, ஆனால் பெரும்பாலோர் யோசிக்க காரணம் கரடி தன் குடும்ப உணவு பழக்க முறையிலிருந்து மாறி கொண்டிருப்பது தான்!, நாய் இன்று அனைத்துண்ணியாக தெரிந்தாலும் உண்மையில் அவை அசைவ பட்சினிகளே!, நாய்களால் பச்சை/வேகவைத்த காய்கறிகளை சாப்பிடமுடியாது! அசைவபட்சிணிகளுக்கு கோரை பற்கள் உண்டு என்பது நாய் ஒரு அசைவ பட்சிணி தான் என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் விசயம்!
கரடி இனங்களில் தற்பொழுது பல வகைகள் காணபட்டாலும் முழுமையான அசைவபட்சிணிகளாக வாழ்வது துருவ கரடிகளே! மேலும் அங்கு காய்கறிகளுக்கு வழியில்லை என்பது கவனிக்கபட வேண்டிய ஒன்று!, கரடிகளில் பல அனைத்துண்ணிகளாக மாறி சில நாட்கள் மூங்கில் குருத்து மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் என சாப்பிட்டு, சில நேரங்களில் சா(ல)மன் மீன்களை சாப்பிட கூட்டமாக வேட்டைக்கு கிளம்பும்!, இது வரை அனைத்துண்ணிகளக அறிய பட்டவைகள் என்னவென்று அறிந்தால் கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கும்! ஆம் குரங்கு/மனித இனங்களே இதுவரை முழுமையாக அறியபட்ட அணைத்துண்ணிகள்!, மனிதன் அசைவபட்சிணியாக இருந்து தற்பொழது மாறியிருக்கிறான் என்பதற்கு நம்பிடம் பல உதாரணங்கள் இருக்கிறது, முதலாவதாக நமது பல்லில் எஞ்சியிருக்கும் கோரைபற்கலின் நீட்சி! இரண்டாவதாக முப்பரிணாம தோற்றத்தில் உணவு விலங்கை பார்க்க வேட்டையாடும் மிருகங்களுக்கு இருப்பது போல் கண் அமைப்பு!,(சொன்னா நம்பவா போறாங்க) கரடி இனங்கள் கடைசி பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வருடத்திற்குள் உணவு முறை மாற்றத்தை ஏற்படித்தி கொண்டிருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகள் கருத்து!

இந்த பதிவில் நான் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது ஒன்று மிச்சம் இருக்கு!, ஒரு விலங்கு தேவையின் பொறுத்து அனைத்துண்ணியாக மாறுவது ஆச்சர்ய பட ஒன்றுமில்லை, கண் முன்னே நாயையும், பூனையும் இதன் இயல்பு வாழ்விலிருந்து விலக்கி கெடுத்து வைத்திருக்கிறோம், அதனால் அவைகளின் வாழ்நாளில் குறைவும், மரபணு மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது என்கிறது விஞ்ஞானம்! ஆனால் இயற்கையாகவே ஒரு விலங்கு, அசைவ பட்சிணியாக இருந்து முழுக்க முழுக்க சைவ பட்சிணியாக மாறியிருக்கிறது! எதிரிகளிடமிருந்து தப்பிக்க மூங்கில் மரமேறிய பாண்டா கரடி இன்று முழுக்க முழுக்க அதை மட்டுமே உணவாக எடுத்து கொள்கிறது!, அவைகளில் பழைய வாழ்க்கையின் சாட்சியாக கோரைபற்றுகளும், தாவரபட்சிணிக்கு இருப்பது போல் வலுவான கடவாய் பற்கள் இல்லாமல் வலுவான தாடைகளும், வலுவற்ற கடவாய் பற்களும் உள்ளன!, இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த உடலமைப்பு மாறி அவைகள் வேறு வடிவமான உடலமைப்பு பெறலாம்! ஏற்கனவே குரங்கிற்கு அடுத்து கரடிகள் தான் புத்திசாலி விலங்குகள் என கண்டறிந்துள்ளார்கள்!


மரமேறுவது, திறமையாக வேட்டையாடுவது என அனைத்து துறைகளிலும் திறையை வெளிபடுத்தும் கரடிகள் கூட்டுகுடும்ப வாழ்க்கையில் தற்சயமம் அதிக கவனம் செலுத்துவதாக கண்டறித்துள்ளார்கள், ஒரு இனம் தழைக்க இனபெருக்கம் மிக முக்கியம், அதை விட முக்கியம் அதன் குட்டிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி முழுமையாக வளர்ப்பது!, குரங்குகளை விட கரடிகள் இவ்விசயத்தில் மிகுந்த திறமையுடன் நடத்து கொள்வதாக ஆராய்ச்சி சொல்கிறது, வலுவான உடலமைப்பு, மரம் ஏறும் திறமை கைகொடுத்தாலும், எதிரிகளை பயமுறுத்த மிக முக்கியமாக முன்னங்கால்களை தூக்கி எழுந்து நிற்கும் திறமையையே வெகுவாக விஞ்ஞானிகள் சிலாகிக்கிறார்கள்! ஆம் மனித நாகரிகம் அவன் எழுந்து நின்ற பிறகே ஆரம்பித்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக