வட இந்தியாவில் இன்று முதல் 800 தியேட்டர்களில் விஸ்வரூபம்!
கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்து இருக்கும் விஸ்வரூபம் படத்தின் இந்தி பதிப்பு இன்று வட இந்தியாவில் 800 தியேட்டர்களில் வெளியிடப்படவுள்ளது. இதற்கென நடிகர் கமல்ஹாசன் நேற்றே மும்பை புறப்பட்டுவிட்டார்.
விஸ்வரூபம் படத்தின் தமிழ்பதிப்பு கடந்த கடந்த ஜன. 25 ஆம் திகதி தமிழகம், புதுவை தவிர மற்ற மாநிலங்களில் வெளியானது. தமிழகத்தில் இஸ்லாமியர்கள் எதிர்ப்பினால், சட்டம் ஒழுங்கு நடவடிக்கை பாதிக்கப்படலாம் எனக்கருதி தமிழக அரசு விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படத்தின் இந்தி பதிப்புக்கான டப்பிங், மிக்சிங், ரீ ரெக்கார்டிங், உள்ளிட்ட தொழில் நுட்பப்பணிகள், கடந்த சில வாரங்களாக மும்பையில் முழுவீச்சில் நடந்தன. தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, நாளை படம் திரைக்கு வரவுள்ளது. வட இந்தியாவில் மொத்தம் 800 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் வெளியாக உள்ளது. மும்பை நகரில் ஏராளமான மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளன. இவை அனைத்திலும் விஸ்வரூபம் படம் வெளியாக உள்ளது.
புறநகர் பகுதியான நொய்டா, சாஜியாபாத், குர்கான், பரீதாபாத் ஆகிய இடங்களில் 19 தியேட்டர்களில் நாளை விஸ்வரூபம் படம் திரையிடப்படுகிறது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஸ்வரூபம் படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால், நொய்டாவில் உள்ள ஒரு ஒரு திரை அரங்கில் ஒரே நாளில் 12 காட்சிகள் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேசம், பீஹார், மத்தியப் பிரதேசம், கொல்கத்தா, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், ஒரிசா, சத்தீஸ்கர், உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் விஸ்வரூபம் படம் நாளை திரையிடப் படுகிறது. இந்தி நடிகர், நடிகைகள் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் முதல் காட்சியில் படத்தைப் ஆர்க்க மிக ஆவலாக உள்ளனர். இது குறித்து நடிகர் சல்மான் கான் கூறுகையில், "கமல் இயக்கி, நடித்து இருக்கும் விஸ்வரூபம் படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்ப்பேன்" என்று கூறியுள்ளார்.
ஷாரூக்கான் கூறுகையில், "கமலின் விஸ்வரூபம் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் எனக்கு சொந்தமான ரெட்சில்லி ஸடூடியோவில்தான் நடந்தது. கமல் மாபெரும் கலைஞர். அவரது படத்துக்கு தடை விதித்து வருத்தத்தை அளிக்கிறது" என்று கூறியுள்ளார். இந்நிலையில் விஸ்வரூபம் இந்தியில் வெளியாவதை அடுத்து கமல்ஹாசன் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். படத்தை திரையிடும் தியேட்டர் விவரங்கள், பிரிண்டட் போடும் பணிகள், போன்றவற்றை முன்னின்று கவனிப்பதுடன், இந்தி நடிகர் நடிகைகள். விநியோகஸ்தர்களையும் கமல்ஹாசன் மும்பையில் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக