ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

உலகம் அழியப்போகுதா?இந்தத் தலைப்பை பார்த்தவுடன் இது எது சம்பந்தமான கட்டுரை என்று புரிந்திருக்கும் உங்களுக்கு. அமெரிக்க கண்டத்தில் வாழந்த  மயன் என்னும் பழங்குடி சமுதாயம் உருவாக்கிய நாட்காட்டியில் 22- 12- 2012 ஆம் நாள் இல்லாத காரணத்தினால் 21-12-2012 அன்றோடு உலகம் அழிந்துவிடும் என்று சில வெட்டியாளார்களால் நம்பம்படுகிறது. ஆனால் விஞ்ஞான கூற்றின்படி பரிணாம வளர்ச்சியில் அப்படி ஒன்று நடக்கப்போவதில்லை என திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. எப்படி ஒரு மனிதனின் உடல்  தான் உயிர் வாழ தன் உடலை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தகவமைத்துக் கொள்கிறதோ அதே போலவே இயற்கையும் தொடர்ந்து இயங்குவதற்கு தகுந்த சூழலை உருவாக்கிக் கொள்ளும். இது இயற்கை நியதி.
சரி, இதை ஏன் இங்கு சொல்லனும் என்று நினைக்கிறீர்களா? காரணம் இருக்கு. நம் மூஃமின்களைப் பொறுத்தவரை என்றோ ஒருநாள் உலகம் அழியும்; நியாயத் தீர்ப்புநாள் வரும்; அன்று ஹூர்லின் கன்னிப்பெண்களோடு கூடியிருக்கலாம் என ஆசையோடு காத்திருக்கிறார்கள். ஆனால் நம் முகம்மதுநபி எப்போது உலகம் அழியும் என பிஞ்சு குழந்தைகளுக்கும் புரியும்படி குரானிலும் ஹதீதுகளிலும் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். அப்படியிருந்தும் நம் மூஃமின்கள் அல்லாவின் மீதும் முகம்மதுநபியின் மீதும் ஈமான் கொள்ளாமல் மயன் சமுதாயத்தின் நாள்காட்டியின் மீது எவ்வளவு ஈமான் வைத்து பயப்படுகிறார்கள் என்று பாருங்கள்.
ததஜ & கோ தமிழகம் முழுவதும் இந்த இறுதி நாளுக்காக (21-12-2012) பிரச்சாரத்தை சுவரொட்டி மூலம் செய்து வருகின்றனர். அதில் குர்ஆனுடைய இரண்டு வசனத்தைப்போட்டு (7: 187, 47:24) கூடவே அல்லாஹ் நாடினால் தான் உலகம் அழியும் எனவும் குறிப்பிட்டு, இதுவும் குர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாதாரம் என்றும் எழுதியுள்ளார்கள். பாருங்கள், எல்லாம் வல்ல அல்லாவின் வார்த்தைகளை மெய்பிக்க நாய்படாதபாடு படவேண்டியுள்ளது அவர்களுக்கு. சரி வியாபாரத்தை நடத்த இதைக்கூடவா செய்யக் கூடாது. நாம் கட்டுரைக்கு வருவோம்.
          மேற்கண்ட போஸ்டர் மூலம் அக்மார்க் மூஃமின்கள் தங்கள் பயத்தை போக்கிக் கொள்கிறார்கள் என்று சிந்தியுங்கள். சிந்திக்கத்தான் உங்களுக்கு அல்லா இதயத்தைக் கொடுத்திருக்கிறானே. (மூஃமின்கள் யாரும் மூளையால் சிந்திப்பதில்லை. இதயத்தால்தான் சிந்திக்கிறார்கள்.)
          மயன் சமுதாயம் சொன்னபடி உலகம் அழியப்போகுதா இல்லையா என்ற கேள்விக்கு நம் அக்மார்க் மூஃமின்கள் (..) என்ன சொல்லியிருக்க வேண்டும்? “எங்கள் இறுதி நபியும் உத்தம திரு நபியுமான முகம்மதுநபி சொல்லி இருக்கிறார்கள், உலகம் அழியும் முன் தஜ்ஜால் என்று ஒருவன் வருவான், எங்க இறையில்லா இஸ்லாம் தஜ்ஜால் அல்ல. வேறொரு ஒன்றைக் கண் தஜ்ஜால் வருவான், அவன் நெருப்பையும் தண்ணீரையும் வைத்து வித்தை காட்டுவான், இறுதியில் ஈசாநபி வானிலிருந்து இறங்கி வருவார், அவருக்குத் திருமணமாகி, குழந்தைகுட்டிகளை பேற்றெடுத்து...  அப்புறம் கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும், அப்பொழுதுதான் மறுமைநாள் வரப்போகிறது என்று நாங்கள் நம்புவோம், இதில் ஒன்றுகூட நடக்கவில்லை, ஆகவே மயன் சொன்ன அன்று மறுமைநாள் வராதுஎன்று திட்டவட்டமாக சொல்லியிருக்கலாமே. ஆனால் அதை விட்டு விட்டு குர்ஆன் வசனம் 7:187-ல் பாதியைமட்டும் குறிப்பிட்டுஇறைவன் நாடினால் வரும்என்றும், ‘அதுவே குர்ஆன் இறைவேதம் என்பதற்கு சாட்சியாக உள்ளதுஎன்றும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். எங்கே மயன்கள் சொன்னது நடந்துவிடுமோ என்ற பயத்தில்தான்இறைவன் நாடினால் வரும்என்று சொல்கிறார்கள் என்று நாம் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை.
 குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க ஆசைப்படும் நபர்கள் நம்ம அண்ணன் பிஜே குரூப். மக்கள் எல்லாம் குழம்பிபோய்  இருக்கிறார்களாம் என்று கற்பனை செய்துகொண்டு அதைப் பயன்படுத்தி எப்படியாவது குர்ஆன் இறைவேதம் என நம்பவைத்திடலாம்; கொஞ்சநாளைக்கு இதைவைத்துகொண்டு சவாரி செய்யலாம் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் என்ன செய்ய, அவர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப்போடுவது தானே நம்ம வேலை. அதுக்குத்தான் இந்த இடுக்கை.
          அந்த குர்ஆன் வசனத்தை முழுமையாகப் பார்த்தால் நம் முகம்மதுநபியின் முழுவிபரமும் தெரியும்.
7: 187 – “யுக முடிவு நேரம் எப்பொழுது வரும்?” என்று (முகம்மதே) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.  இது பற்றி ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர வேறுயாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மாற்றானதாக அமையும். அது உங்களிடம் திடிரென்றுதான் வரும்என்று கூறுவீராக. இது பற்றி நீர் நன்கு அறிந்தவர்போல் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “இது பற்றி ஞானம் என் இறைவனிடமே உள்ளது.” என்று கூறுவீராக. எனினும் மனிதர்கள் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.  (PJ Edition)
           
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தமது ஒட்டகத்தில் பால் கறந்து அந்தப் பாத்திரத்தைத் தமது வாயருகே கொண்டுசென்றிருக்கமாட்டார். அதற்குள் யுக முடிவு சம்பவித்துவிடும். இரு மனிதர்கள் துணியை விரித்துப்போட்டுப் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேரத்தை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டு விடும். ஒரு மனிதர் தமது தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக் கொண்டிருப்பார். அவர் அதை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டுவிடும்.
முஸ்லீம் 5659
மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்துஉலகம் திடிரென்றுதான் அழியப்போகிறது என்று நாம் அறிந்து கொள்ளலாம். ஏன் என்றால் அண்ணன் பிஜே சொல்வதுபோல குர்ஆனுடைய வசனங்கள் பச்சப்புள்ளைக்குகூட புரியும் அல்லவா! இப்பொழுது நாம் உண்மை முஃமீன்களிடம் கேட்க விரும்புவதெல்லாம் இரண்டே கேள்விகள்தான்.
1. உலகம் எப்பொழுது அழியும்? அல்லா சொல்வதுபோல் திடிரென அழியுமா? அல்லது முகம்மது சொன்ன நிகழ்சி நிரல் எல்லாம் முடிந்த பிறகு அழியுமா? இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வாய்ப்பில்லையே!
2. குர்ஆன் சொல்வது போல் திடிரென்று அழிந்து விடும் என்று சொல்வார்காளானால் ஸஹியான ஹதீதுகளே குரானோடு நேரடியாக முரண்படுகிறதே. அப்புறம் எப்படி ஸஹி ஹதீதுகளைக்கூட நம்புவது? ஹதீதுகள் நமக்கு உட்ட புருடாக்களை எல்லம் என்ன செய்வது?
          மேலும் அந்த சுவரொட்டியில் குரான் 47:24 வது வசனம் அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் உள்ளனவா? என கேட்கிறது. யார் அவர்கள் இதயத்தை பூட்டுப்போட்டு இருப்பார்கள்? திண்டுக்கல் பூட்டையே மனிதர்கள் உடைக்கும்போது எல்லாம் வல்ல அல்லாவால் ஏன் சாதாரண மனப்பூட்டை உடைக்க முடியவில்லை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக