புதன், 17 ஏப்ரல், 2013

பரிணாமம் குறித்த சில விளக்கங்கள்





ஒரு நண்பர் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.இது அவ்ர் ஏற்பாரா இல்லையா என்பதை நாம்றியோம் எனினும் இது மற்ற்வர்களுக்கும் பயன்பட‌ட்டுமே என்பதுதான் நம் நோக்கம்.

//1.நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது.//

சரி. ஒரு உயிரின குழு இன்னொரு(சில) உயிரின குழுவாக(குழுக்களாக) காலப்போக்கில் இயற்கைத் தேர்வு+சீரற்ற‌ சிறு மாற்றங்கள் ஆகியவற்றால் மாறுவதை பரிணாம் வளர்ச்சி என்கிறோம்.இதில் ஒரு உயிரினக் குழுக்களிடையே நடக்கும் சிறு(மைக்ரோ) பரிணாமம் கண்கூடாக பார்க்கப்படுவதல் யாராலும் எதிர்க்கப்படுவதில்லை.ஒரு உயிரினம் இன்னொரு உயிரின்மாக் பல் மில்லியன் ஆண்டுகளில் மாறுகிறது என்னும் பெரும்(மேக்ரோ) பரிமாணம்  பெரும்பான்மையான மதவாதிகளால் எதிர்க்கப் படுகிறது.
_________________

//2.ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் காணொளியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும்மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.//

படிமங்கள் என்பது இயற்கையால் நம்க்கு கிடைத்த கொடை.அனைத்து படிமங்களுமே பராமரிக்கப்பட்டு ஆய்வாளர்களுக்கு யாரும் கொடுப்பது இல்லை.கிடைப்பதை ஆய்வு செய்து,வகைப்படுத்தி,விவாதித்து  கருத்து வெளியிடுகிறார்கள்.கிடைத்த படிமங்களில் பல இடைப்பட்ட நிலைகளை நன்றாக விள்க்குகின்றன.
படிமங்கள் எப்படி கிடைக்கின்றன என்பதை அட்டன்பரோவின் காணொளியில் அருமையாக் விள்க்கியுள்ளார்.முடிந்தால் பார்க்க்லாம்.


David Attenborough: Lost Worlds Episode 1 Magic In The Rocks (BBC)


David Attenborough: Lost Worlds Episode 2 Putting Flesh On Bones (BBC)

_______________
//3.ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம்.//

இதுதான் சிறு(மைக்ரோ )பரிமாண வளர்ச்சி.கண்கூடாக நிரூபிக்கப்பட்டதால் ஏற்றே ஆக வேண்டும்.
______________
 4.தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.// 
Fish to Amphibians-reptiles



5//ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.//

Reptiles-mammals and Birds





6..
அப்போ கடலில் திமிங்கிலங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறதே! வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து ஒரு திமிங்கிலமும் கடலைத் தாண்டி வரவில்லையே! அடுத்து கடல் வாழ் உயிரினங்களுக்கும் நில வாழ் உயிரினங்களுக்கும் அடிப்படையிலேயே சுவாச உறுப்புகளில் மாற்றங்கள் உள்ளது. தண்ணீர் இல்லாமல் அவற்றின் உடல் அமைப்புக்கு நிலத்தில் வாழவும் முடியாதே!




திமிங்கல்த்தின் முன்னோர்கள் நில வாழ் விலங்குகள்.இதற்கு நன்றாக் இடைப்ப்ட்ட படிமங்கள் உண்டு.இதுவும் இரண்டாம் காணொளியிலேயே விள்க்கப்படுகிறது.
http://www.pbs.org/wgbh/evolution/library/03/4/l_034_05.html 

http://www.talkorigins.org/features/whales/
______________


7.நீங்கள் கொடுத்துள்ள சுட்டி முழுவதுமாக கிடைத்த படிமங்கள் அல்ல. இவர்களாக பல இடங்களிலும் சேகரித்து எடுத்து ஒட்ட வைத்தது. மேலும் அவை ஒரிஜினல் படங்களும் அல்ல. வரைந்தவையே!

நண்பரே நீங்கள் ஏற்றுக் கொள்ளாததால் காணொளியில் காட்டப்பட்ட அப்படிமங்கள் நிராகரிக்கப் படப்போவது இல்லை.இது அறிவியல் உலகில் ஏற்கப்பட்டவை.பாதுகாத்தும் வரப்படுகின்றன்.
அறிவியல் உலகிற்கு பிரச்சினை இல்லாமல் தனிப்பட்ட மனித்னாக இந்த முடிவு எடுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.



8.மனிதனுக்கு இது போன்ற பரிணாம வளர்ச்சியின் படிமங்களை இது வரை சமர்ப்பிக்கவில்லையே! ஆதார சுட்டிகள் அப்படி ஏதும் இருக்கிறதா.நமது முக்கிய பிரச்னையே மனிதனின் பரிணாமத்தைப் பற்றியதுதானே.



மனித பரிமாண வளர்ச்சிக்கு அறிவியல் உலகில் ஏற்கப் ப‌ட்ட பல படிம சான்றுகள் உண்டு.இவை ஒரு சில.இவைகள் லண்டனில் உள்ள இயற்கையியல் வரலாற்று அருங்காட்சியத்தில் உள்ளது 


இன்னும் சில இடங்களிலும் படிம்ங்கள் பாதுகாக்கப் படுகின்றன.


Virtual fossil Musuem

பரிணம்த்தின் மீதான் கேள்விகளுக்கு விடை தேடி அளிக்க சித்தமாக்வே இருக்கிறோம்.பரிணாம் மறுப்பாளர்களுக்கு விடை தேவையில்லை என்பதை உணர்ந்து இருந்தாலும் இது விடை தேடும் மற்றவர்களுக்காவது பயன்படும் என்றே முயற்சிக்கிறோம்.நன்றி!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக