புதன், 17 ஏப்ரல், 2013

ஹோமோ சேபியன்கள் யார்? மனித பரிணாமம் குறித்த காணொளி



வணக்கம் நண்பர்களே,
 பரிணாமம் குறித்த கடந்த‌ (எதிர்)பதிவில் மனித பரிணாமம் குறித்த பல தவறான புரிதல்களை விளக்க முயன்றோம். எதிர் பதிவுகளில் எதிர்வினையாற்றுவதே முக்கிய கடமையாகிவிடுவதால் பலருக்கு சில எளிய அடிப்படைகளை விளக்க முடிவது இல்லை.

காணொளி மூலம் பார்க்கும் போது பல விடயங்கள் எளிதாக புரியும்.அவ்வகையில் மனித பரிணாமம் குறித்த ஒரு விளக்க காணொளி சமீபத்தில் பார்த்ததை கொஞ்சம் விளக்கங்களுடன் பகிர்கிறோம்.பல அடிப்படை விடயங்கள் முதல் பல படிமங்கள் பற்றிய விபரங்கள், சமீபத்திய ஆய்வுகள் என பல அம்சங்களையும் அழகாக எடுத்து சொல்கிறது. மொத்தம் பத்து ப்குதிகளைக் கொண்டது.ஒவ்வொரு ப‌குதிக்கும் சில குறிப்புகளை தருகிறோம். ஆங்கிலம் அறியாதோர் கூட பார்த்து புரிய ஏதுவாக இருக்கும் என நம்புகிறோம்.


பகுதி1

1.1. நாம் யார் என்னும் கேள்வியின் விடையின் முதல் பகுதி 1859ஆம் சார்லசு டார்வின் எழுதிய origin of species என்னும் புத்தகத்தின் மூலம் கிடைத்தது .உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரு செல் உயிர்களில் இருந்து பரிணாம வளர்ச்சியால் கிளைத்து தழைத்தன என்பதும், இது நடக்க காரணம் இயற்கைத் தேர்வே[natural selection] என்பதையும் பல சான்றுகள்,வாதங்களுடன் விளக்கினார் டார்வின்.
 *****
 1.2.விடையின் இரண்டாம் பகுதி தொல் மனிதவியல் [paleoanthropology] துறையிடம் இருந்துவந்தது. கிடைத்த படிம்ங்களை, ஒப்பீட்டு அளவுகள்,கால பரிசோதனை மூலம்மனித பரிணாம மரம்[hominid evolution tree அமைக்கப்பட்டது.


A).ஹோமோ சேபியன் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன தோற்றம் _ இன்று வரை

B). ஹோமோ நியாண்டர்தால் 3 இலட்சம் ஆண்டுகள் முதல் 30,000 ஆண்டுகள் முன்புவரை

C). ஹோமோ ஹைடெல்பெர்ஜெனெசிஸ் 8 இலட்சம் ஆண்டுகள் முதல் 3 இலட்சம் ஆண்டுகள் முன்பு வரை.


D). ஹோமோ எரக்டஸ் 19 இலட்சம் ஆண்டுகள் முதல் 70,000 ஆண்டுகள் முன்புவரை.முதன்முதலில் நெருப்பின் பயன்பாடு, சமூக அமைப்புடன் வாழ்ந்த மனித இனம்.இந்தியா,சீனா  உள்ளிட்ட பல இடங்களில் இதன் படிமங்கள் கிடைத்தன.

E). ஹோமோ ஹீபிலஸ் 25 இலட்சம் ஆண்டுகள் முதல்14 இலட்சம்  ஆண்டுகள் முன்புவரை.முதல் கல் கருவி  பயன்படுத்தியவர் .

F) ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரிகனாஸ்  30 இலட்சம் ஆண்டுகள் முதல்20 இலட்சம்  ஆண்டுகள் முன்புவரை.

G)ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரான்சிஸ்   38 இலட்சம் ஆண்டுகள் முதல் 29 இலட்சம்  ஆண்டுகள் முன்புவரை. இதில் லூசி எனப்படும் படிமம் மனித பரிணாம வரலாற்றையே மாற்றி அமைத்தது.

.....



*****
1.3.விடையின் மூன்றாம் பகுதி  மரபியல்  ஆய்வில் இருந்து வந்தது. மனித ஜீனோம் குறியீடுகள்[சுமார் 320 கோடி நுயுக்ளியோடைடுகள்) ஆவணப்படுத்தப் பட்டது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.அது பல பரிணாம செயலாக்கங்களுக்கு விளக்கம் அளித்தது. தலைமுறைரீதியான ஜீனோம் மாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டன. 

1.4 இறுதிப்பகுதி மானுடவியல்[anthropology] எனப்படும்நடைமுறை வாழ்வில்  மனித உடல்,மனம் ,அறிவு குறித்த ஆய்வுகள்.இதன் மூலமே மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி அங்கிருந்தே உலக முழுதும் பரவினான் என்பது கண்டறியப்பட்டது. உலகின் பழமையான வாழும் மனித இனம் புஷ்மேன்[bushmen] எனப்படும் ஆப்பிரிக்க நாட்டவர்.இவர்கள் பேசும் மொழியே[khoslan] தொன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் ,இது பல ஒலிவகைகளைக் கொண்டது.

மனித இனம் முதலில் வேட்டையாடியே பிழைப்பு நடத்தினர்,விவசாயம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
 ....
பகுதி2
இரண்டாம் பகுதியில் பூமியில் உயிரின வரலாற்றில் கால ரீதியான பிரிவுகளை விளக்கி, மனிதப் படிம்ங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளைக் காட்டுகின்றனர்.
.....

பகுதி 3.பரிணாம செயலாக்கம் என்பதை ஜீனோமின் அடைப்படையில் விள்க்குகின்றார்கள். ஒவொரு உயிரினமும் இனவிருத்தி செய்யும் போது ஆண்,பெண் ஜீனோம்(குரோமோசோம்கள்) இணைந்து புதிய உயிர் தோன்றுகிறது. ஜீனோம்கள் இணைவின் போது  நிகழும் தவறுகள்(சிறு மாற்றங்கள் mutations) கொஞ்சம் விதியாசமான் வாரிசை உருவாக்குகிறது. நீண்ட கால்த்தில் இது பலவகையான் உயிர் இனங்களை[species] உருவாக்குகின்றன. இதில் சூழலுக்கு பொருந்துபவை மட்டுமே வாழ்கின்றன.மற்றவை அழிகின்றன[natural selection].
...
பகுதி 4.&6 மீண்டும் மனித முன்னோர்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு பற்றி விளக்குகிறார்.

பகுதி 5.புவியியல் காலக் கணக்கீட்டு அடிப்படைகளையும்,அப்போதைய புவி சூழல்களையும்  விளக்குகிறார் 
...
இதர பகுதிகளிலும் மனித பரிணாமம் குறித்த பெரும்பானமை அறிவியல் விடயங்கள் விளக்குகிறார். இக்காணொளி போல் மனித பரிணாமத்தை தெளிவாக விளக்கிய காணொளி  இதுவரை கண்டது இல்லை.இக்காணொளியை தயாரித்த ப்ளாக் ரைடர்[Black Ryder] ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகள்  பல.

அனைவரும் கண்டு மகிழ்க.

நன்றி


பரிணாமம்,இஸ்லாம் எதற்கு சான்றுகள் அதிகம்???





வணக்கம் நண்பர்களே,

"மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று விடுவதில்லை"

மீண்டும் இரு பரிணாம எதிர்ப்பு  பதிவுகள் தமிழில் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.இரண்டையும் பதிவிட்டவர் நமது அன்புக்கும் பாசத்துக்கும்,மரியாதைக்கும் உரிய மார்க்கமேதை சகோ சுவனப்பிரியன் அவர்களே. அதை அவரே எழுதினாரோ அல்லது  இன்னொரு மார்க்க(மான) ம(னி)தாபிமான விஞ்ஞானின் எழுதிக் கொடுத்தாரா என்பதும் சிந்திக்கத் தக்கது என்றாலும்,நாம் இதனை கருத்து ரீதியாகவே எதிர்கொள்கிறோம்.
சரி இரு பதிவுகள் என்ன?[சிவப்பு எழுத்துகளில் உள்ளது சகோ சு.பியின் கருத்துகள்]

1. 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சிலந்தி,குளவி ஆகியவற்றின் உரு அமைப்பு போலவே இப்போதும் சில குளவி,சிலந்தி இனங்கள் உரு அமைப்பு  உள்ளது .

நமது கோல்ட் பற்றிய தொடர்பதிவில் நிறுத்திய நிலைத் தன்மை[puncutated equilibrium] பற்றி விளக்கி இருக்கிறோம்.அதன் படி பெரும்பரிணாமம்[macro evolution] என்பதில் சிற்றினமாதல்[speciation] என்ப்படும் ஒரு உயிரிக்[species] குழு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனவிருத்தி செய்ய இயலாத உயிரிக் குழுக்களாக பிரிதல் மற்றும் உருமாற்றம்[morphlogical change]  என் அறிந்தோம்.

Macro evolution=speciation+morphological change


சிற்றினமாதலின் சராசரி கால அளவு 30 இலட்சம் ஆண்டுகள் ஆகும். உருமாற்றம் ஒரே கிளையில் அடிக்கடி நிகழாது. அப்படி நிகழும் உருமாற்றங்களும் இயற்கைத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதால் இது அபூர்வ நிகழ்வே.ஆகவே 90 மில்லியன் ஆண்டுகளாக உருமாறாமல் இருக்க்லாம்,ஆனால் அதன் ஜீனோம் ,இபோது வாழும் உயிரிகளில் இருந்து மாறுபட்டு இருக்கும். இது பற்றி பின்னூட்டங்களில் அதிகம் விவாதிப்போம்.

இதைவிட அதிக காலம் உருமாற்றமின்றி வாழும் உயிரிகளை வாழும் படிமங்கள்[Living Fossils] என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.ஆகவே இது ஒரு பெரிய விடயம் அல்ல!!!!!!!!!!.
இதனையும் டார்வின் அய்யா தனது   புத்தகத்தில் குறிப்பிட்டதையும் விக்கிபிடியாவில் இருந்து அறிய முடியும்.சான்றுகளின் மீதான விளக்கமே அறிவியல் என்பதால் நெடுங்கால உருமாற்றமின்மை என்பதை நன்கு விளக்கும் கோல்ட்டின்[S.J.Gould] நிறுத்திய நிலைத்தன்மையே படிம வரலாற்றில் காணப்படுகிறது என்பதும் அது ஏன் என்பதையும் நாம் நன்கு முந்தைய பதிவுகளில் அறிந்து இருக்கிறோம்.எனவே  இது ஏற்கெனவே அறிந்த புரிந்த விடயம்.!!!!!!!!!!!!!!
***
2 .இது நேற்றைய பதிவு. கொரில்லா ஆய்வு செய்த விஞ்ஞானி,மனிதனின் காலடித்தடம் என பலவற்றையும் குழப்பி அடித்துள்ளார். அப்பதிவுக்கு நாம் மறுப்பு சொல்ல கடமைப் பட்டு இருக்கிறோம். இனி பதிவுக்கு செல்வோம்.

ஆதி மனிதனின் உயரம் என்ன? சில தேடல்கள்.

///  ஆராய்ச்சியாளர்களால்தான் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று விக்கி பீடியாவே கூறுகிறது. இவரது ஆராய்ச்சி முடிவு டார்வினின் பரிணாமவியலுக்கு குழி தோண்டும் விதமாக இருந்ததால் பரிணாமவியலாரே இவரை போட்டு தள்ளியிருக்கலாம்.//


அதாவது

அ)முதலில் டான் ஃபோஸி என்ப்படும் கொரில்லா ஆய்வாளர் பற்றிக் கூறி,அவரின் கொலைப் பழியை மூமின் பாணியில் ஆய்வாளர்கள் மீது போடுகிறார்.அவரின் கொரில்லா மீதான ஆய்வுகள் (டார்வினின்) பரிணாமவியலுக்கு எதிராக இருந்தது என்கிறார்.

சகோ சு.பி சொல்வது போல் எந்த விவரமும் விக்கிபிடியாவில் இல்லை. பரிணாம கொள்கையின் படி மனிதனும்,சிம்பன்சியுமே ஒரே முன்னோரிடம் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்கள்.சிம்பன்சிக்கு அடுத்த நெருங்கிய உயிரி கொரில்லா என்றாலும், டான் ஃபோசியின் ஆய்வுகள் பரிணாமம் தொடர்பாக் இல்லை. கொரில்லாக்களின் வாழ்வு,சமூக அமைப்பு போன்றவற்றையே ஆய்வு செய்தார்,கொரில்லா வேட்டைக்கு எதிராக போராடினார். கொரில்லாவின் பழக்க வழக்கங்கள் பற்றி அவர் எழுதிய சில புத்தகங்கள் உண்டு.அவர் முதலில் நேஷனல் ஜியோகிராஃபிக் ஆய்விதலில் பதிவிட்ட கட்டுரை பாருங்கள்!!!.
http://ngm.nationalgeographic.com/2008/07/archive/fossey-gorillas-1970/dian-fossey-text/2


ஆகவே டான் போஸியின் ஆய்வுகள் பரிணாமத்திற்கு தொடர்பற்றவை. அவரது கொலை பற்றி எதுவும் சரியாக ஆதாரபூர்வமாக் தெரியாத போது சகோ சு.பி சொல்வது சட்டப்படியே தவறானது,குற்றம். இது வழ்க்கமான் ஒன்றுதானே இரட்டைக் கோபுர தக்குதல் செய்தது யூதர்கள்,ஹிட்லர் யூதர்களை அதிக அள்வில் கொல்லவில்லை,முல்லா ஓமர்(தலிபான்) நல்லவர்(கள்_ என்ற பாணியில் அமைந்த கருத்து மட்டுமே!!.

ஆகவே பரிணாமத்திற்கு எதிராக டான் ஃபோசி எழுதிய கட்டுரைகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் எத்தனைப் பேர் பரிணாம ஆய்வாளர்கள் என சகோ சு.பி ஆதாரம் கொடுக்க வேண்டும்.

இன்னும் டான் ஃபோஸி பற்றி இன்னும் மேலதிக த்கவல் இங்கே பார்க்க்லாம்.


கொரில்லா வாழ்வின்,உடல் அமைப்பின்  மீதான ஆய்வுகள் பரிணமத்தை தவறு என நிரூபித்து விடும் என சுவன்ப்பிரியன்&கோ மட்டுமே நம்பும்.ஏன் எனில் இதைவிட மிகப் பெரிய பொய்களையே 1400 வருடங்களாக நம்பி பழகியவர்கள் ஹி ஹி.!!!!

************
ஆ) ஒரு நல்ல விடயம் சகோ சு.பி பரிணாமத்தின் வரையறையை சரியாக் சொல்லி இருக்கிறார். பாராட்டுக்கள்.இதன மூலம் பரிணாமம் சரியாக் வரையறுக்கப்படாத‌ கொள்கை என்னும் மார்க்க(மான) விஞ்ஞானி ஆஸிக் அகமதின் பொய்யை அம்பலப் படுத்தி உள்ளார்!!.மிக்க நன்றிகள்.

//பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது. //

இதுதான் சிறுபரிணாமம்

//ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம்.//
***
// தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.//

இது சகோ சு.பியின் கருத்து மட்டுமே!!.இடைப்பட்ட படிமங்கள் நிறைய உண்டு. இது பற்றி பலமுறை விளக்கினாலும் அவர்களுக்கு புரிவதில்லை.சரி இந்த கருத்து எந்த ஆய்விதழில் பதிவிடப் பட்டுள்ளது?.இடைப்பட்ட படிமங்கள் பற்றி மீண்டும் ஒரு பதிவு எழுத சித்தமாகவே இருக்கிறோம்.எனினும் இப்பதிவில் புதிய விடயமான மனிதனின் 10 அடி எலும்புக்கூடு பற்றியே விவாதிக்கிறோம்.ஆகவே மேலதிக தகவல்கள் பின்னூட்டங்களில் பகிர்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils
******************
இ) மனிதர்கள் 10 அடியில் இருந்து 20 அடிவரை இருந்ததாக சில சான்றுகளை வைக்கிறார்.

i) சவுதியில் உள்ள ஒரு குகையில் உள்ள காலடித்தடம்.


ii).டெக்சாஸ் மாநிலத்தின் கண்டுபிடிக்கப்பட்டு பிளாங்கோ அருங்காட்சியகத்தில்  இருக்கும் எலும்புக்கூடு.

iii). இராக்கில் யூப்ரடிஸ் நதி அருகில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள்.








இத்தளம் கிறித்தவ மதவாதிகளின் தளம் என்பதும்,அவர்கள் உலகம் தோன்றி 7000 வருடம் கணக்கு சொல்ப்வர்கள் என் அறிந்து நமக்கு ஆர்வம் போய் விட்டது.

எனினும் நகைச்சுவைக்கு நகைச்சுவை என்ற வகையில் அதே தளத்தின் இன்னொரு கட்டுரை இணைப்பு தருகிறோம்.அதாவது இஸ்லாம் அந்திக் கிறிஸ்துவின் மதம். அந்திக் கிறிஸ்து[Anti Christ]  என்றால் சாத்தானின் அவதாரம் என சொல்லலாம்!!!. இக்கட்டுரையை சகோ சுபி ஏற்றால் அவர் காஃபிராகி விடுவார் ஹி ஹி!!!

http://www.6000years.org/frame.php?page=antichrist

(Note: The following text is from http://www.answering-islam.org) "The religion of Islam, more than any other religion, philosophy, or belief system, fulfills the description of the antichrist spirit

ஆகவே நம் ஆதம் ஒரு ஹோமோ எரக்டஸ் என கண்டுபிடித்த பதிவில் ம(னி)தாபிமானி கூறிய மனிதன் தோன்றியது சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்றும் அதனை ஏதோ காலடித்தடம் நிரூபிப்பதாக கூறியது பொய். இந்த அசுர மனிதர்கள் இருந்தார்கள் என வைத்தால் கூட அவர்களின் காலம் அனைத்தும் 10000 ஆண்டுகளுக்குள்ளேதான்.


ஆகவே காமெடி விடயங்களை தவிர்ப்போம்!!நேஷனல் ஜியோகிராஃபிக் இவை அனைத்தும் ஏமாற்று வேலை என கூறுகிறது!!!!




---------------------------------------------------------------------------------
இதுவரை தோன்றிய மனிதர்களிலேயே உயரமானவராக அறியப்படுபவர் இராபர்ட் வாட்லோ[ 8 ft 11.1 in (2.72 m)] என்பவ‌ர்தான், ஆகவே அனைத்து விவரங்களும் சான்றுகள் அற்ற கட்டுக் கதைகளே
Robert Pershing Wadlow (February 22, 1918 – July 15, 1940) is the tallest person in history for whom there is irrefutable evidence. Wadlow is sometimes known as the Alton Giant orGiant of Illinois because he was born and grew up in Alton, Illinois.[1][2]



ஆகவே அசுர மனிதர்கள் என்பது பரிணாம எதிர்ப்பாளர்களின் கட்டுக் கதைகளே. ஆகவே ஆய்விதழ்களில் மட்டும் அல்ல. விக்கிபிடியாவில் உள்ள ராபட்ர் வாட்லோவை விட உயரமான மனிதன் என விக்கிபிடியாவில் ஒரு பக்கம் இட வேண்டுகிறோம்!!!.

அப்போதும்  அதற்கும் பரிணாமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
-------------------------------------
ஈ)கடைசியாக ஒரு ஆய்வுக்கட்டுரையின் முதல் வரியை எடுத்து தவறாக மொழிபெயர்த்து பரிணாம்த்திற்கு எதிராக காட்டி இருக்கிறார். நாம் முழுக்கட்டுரை இணைப்பு தருகிறோம்.பிறகு சரியான மொழியாக்கம் அளிக்கிறோம். 
---------------------------------------------------

//"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.

தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).
**************


நாம் சரியான மொழியாக்கம் தருகிறோம்.அண்ணன் என்ன செய்து இருக்கிறார் என்றால் ஒரு வாக்கியத்தை பல் சிறிய வாக்கியங்களாக் பிரித்து தவறான் பொருள் வருவது போல் செய்துவிட்டார்.கேம்பிரியன் காலம்(500 மில்லியன் ஆண்டுகள் முன்பு) முதல் இன்றுவரை படிமங்கள் தெளிவாக இருந்தாலும் அதற்கு முந்தைய இடிய‌க்கரா கால படிமங்கள் அவ்வளவு கிடைக்கவில்லை.அதனைக் குறிப்பிடுவதை படிமங்களே எப்போதும் இல்லாதது போல் மொழியாக்கம் செய்வதைப் பாருங்கள்.கேம்பிரியன் அதற்கு முந்தைய உயிரிகள் அனைத்துமே கடல் வாழ் உயிரிகள்.அதையும் மறைக்கிறார்கள்.ஆய்வாளர் பட்டர்ஃபீல்ட்  ன் இடியக்கரா படிமங்களைப் பற்றிய கட்டுரை மட்டுமே அது !!!!

இப்போது நாம் மொழியாக்கம் செய்கிறோம் பாருங்கள்!!!

டார்வினின் காலந்தொட்டே தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய‌ படிம வரலாற்றில்[அதாவது பானோர்ஜாயிக் கால தொடக்கத்தில்]   இருந்து வருகின்றது.டார்வினின் படிப்படியான வளர்ச்சி உண்மை என்றால் இக்கால்த்தில் அதிக உயிரிப் படிமங்கள் கடலில் கிடைத்து இருக்க வேண்டும்.ஆனால் கிடைத்த ஆரம்பக் கால படிமங்களில் அது இல்லை.

*****
கேம்பிரியனில் இருந்து இப்போதுவரை படிம வரலாறு சீராக இருக்கிறது.அதற்கு முந்தைய படிமங்கள் பல செல் உயிர்கள்[பாக்டீரியாக்கள்] மட்டுமே. எனினும் டார்வினின் படிப்படியான் வளர்ச்சி என்பது உருமாற்றமாக் வெளிப்படுகையில் நிறுத்திய நிலைத்தன்மையாக் வெளிப்படும் என்பதால் பல செல் உயிரிகள்,நீண்ட காலத்தில்  கேம்பிரியன் உயிரிகளாக மாறுவதில் வியப்பில்லை.

இது குறித்து பல தகவல் அறிய ஸ்டீஃபன் ஜே கோல்ட்டின் வொன்டன்ஃபுல் லைஃப் புத்த்கம் படிக்கலாம். இது குறித்து சில பதிவுகளும் எழுத வரும் கால்ங்களில் முயற்சிப்போம்.
http://en.wikipedia.org/wiki/Wonderful_Life_(book)

***********************
படிக்கும் நண்பர்களுக்கு என்ன இந்த பரிணாம எதிர்ப்பாளர்கள் கொஞ்சமும் அஞ்சாமல் இவ்வளவு பொய் சொல்லி ஏமாற்றுகிறார்களே என வியப்பு வரலாம்.அப்படி வரலாறு,அறிவியலை திரிக்காமல் மத பிரச்சாரம் செய்ய இயலாது என்பதால் அவர்களை சொல்லி குற்றமில்லை.நம்புபவர்களே பாதிக்கப்படுவதால் அவர்கள் கூறுவதை சரிபார்க்க அவசியம் ஆகிறது.

பாருங்கள் சேன்னல் 4ல் வந்த இஸ்லாமின் அறியாத கதை என்னும் ஆவணப்படம் வரலாற்று ஆய்வாளர் டாம் ஹாலண்ட் அவர்களால் எடுத்து இங்கிலாந்தில் ஒளிபரப்பட்டது. மூமின்களின் எதிர்ப்பினால் மறு ஒளிபரப்பு நிறுத்தப் பட்டது.


அக்கணொளி இஸ்லாமின் முதல் நூற்றாண்டில் இஸ்லாம் என்பது யூத மதம் அல்லது கிறித்தவம் போன்ற ஒரு பிரிவாக இருந்தது. குரான் என்று அப்போது இல்லை,முஸ்லிம் என்னும் சொல்லோ, முகமது பற்றிய த்கவல்களோ இல்லை என்பதும்,குரான் என்பது சிரிய அராமைக் மொழி சொற்களை அதிகம் கொண்டு இருக்கிறது என புட்டு புட்டு வைத்து விட்டார்.


அந்த காணொளி பாருங்கள். இப்படி சான்றுகள் இல்லாத மதத்தை நம்புபவர்கள் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சான்றுகள் சரியாக இல்லை என பரிணாமம் மீது கேள்வி எழுப்புவது விந்தை!!!



http://www.channel4.com/programmes/islam-the-untold-story

http://www.liveleak.com/view?i=7fa_1349153809

சில நாடுகளில் பார்க்க இயலாது என்பதால் கீழ்க்கண்ட இணைப்பில் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்.

http://atheistmovies.blogspot.com/2012/10/islam-untold-story-2012.html
 காணொளி பாருங்கள், பார்த்து விட்டு 500 மில்லியன் ஆண்டுகள் சான்றுகள் கொண்ட பரிணாம அறிவியல் சரியா, 1400 வருடத்திற்கு கூட சான்றுகள் அற்ற இஸ்லாம் சரியா?விவாதிப்போம் நன்றி!!!!!!!!!!!!!!!!

மானாட ,சிவிங்கியாட அதைக் கண்டு பரிணாம எதிர் பதிவாடலாமா???





கடவுள்: ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு போல் தோற்றம் அளிக்கும் படைப்பு முடியவில்லை என்பதால் அனைத்தும் பரிணாம வளர்ச்சி அடையக் கடவது.அப்ரக்கா தப்ரா!!1!!!! 


வணக்கம் நண்பர்களே,

நம் மீது அதீத அன்பும் பாசமும் கொண்ட சகோக்கள் பரிணாமம் பற்றி கேள்வி கேட்பதாக நினைத்து பல தவறான புரிதல்களை வெளிப் படுத்துகிறார்கள். நாம் அறிந்தவரை அவற்றை சரியான கேள்விகளாக்கி பதில் கொடுப்போம்.

முதலில் சகோ  சு.பி மனித பரிணாம படிம வரலாறு பற்றி ஏன் எழுதவில்லை என்றார். காணொளியுடன் அனைத்து விவரங்களையும் ஏற்கெனவே பதிவாக இட்டுவிட்டோம் என தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் அப்பதிவு!!


http://aatralarasau.blogspot.com/2012/10/blog-post.html


அதில் இருந்தும் கேள்வி கேட்கலாம்,அல்லது மனித பரிணாமம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொள்ளும் ஸ்மித்சோனியன் ஆய்வக சுட்டிகள் பார்க்கலாம்

http://humanorigins.si.edu/


பில்ட் டௌன் மேன் என்பது சில ஆய்வாளர்களின் புகழ் வெறியின் வெளிப்பாடு மட்டுமே.இது 1912 ல் சார்லஸ் டாவ்சன் உள்ளிட்ட சிலரால் மனிதனின் மூதாதையராக காட்டப்பட்டது. அபோது இருந்தே சில ஆய்வாளர்கள் பில்ட் டௌன் படிமம் மீது சந்தேகம் தெரிவித்தாலும்,சுமார் 40 வருடம் கழித்து பொ.ஆ 1953 ல் இது இது மோசடி என தெளிவாக்கப் பட்டது.அதன் பிறகு மரபியல் ரீதியாகவே பரிசோதிக்கும் வண்ணம், பல பரிணாம் ஆய்வுகள் வளர்ச்சி பெற்றன. ஆகவே ஒரு பில்ட்மேன் படிமம் ஏமாற்று வேலை எனவே ஏற்கிறோம். அது போன்ற பிற நிகழாமல் இருக்க இபோது பல கடினமான் பரிசோதனைகளைக் கடந்தே புதிய படிமங்கள் ஏற்கப் படும். எப்படி ஜாகிர் நாயக்கின்  நெருப்புக் கோழி முட்டை என குரான் 79.30 மோசடி மொழி பெயர்ப்பு அவரது தனிப்பட்ட குற்றமோ அதே போல் பில்ட் டௌன் மேனும் தனிப்பட்ட ஆய்வாளர்களின் குற்றமே!!!. 

ஆனால் பில்ட் டௌன் மேன் என்பது சார்லஸ் டாவ்சனின் மோசடி என் நாம்&அறிவியல் உலகம் ஏற்பது போல் ஜாகிர் நாயக்கின் மோசடி என சகோ சு.பி ஏற்பாரா?

http://en.wikipedia.org/wiki/Piltdown_Man


சகோ சு.பியின் அசுர மனிதர்கள் பதிவில் குறிப்பிடப் பட்ட அனைத்து விவரங்களுமே ஆதரமற்ற பொய்கள் என்பதால்,அவர் எழுதிய அனைத்து பதிவுகளும் தவறாகி விடுமா????.இன்னும் நிறைய சொல்ல முடியும் என்றாலும் தவிர்க்கிறேன்.


இன்னும் குரான் 79.30 பெருவிரிவாக்க கொள்கையை காட்டுகிறது,அல்லது கண்டங்கள் விலகி பிரிந்ததைக் காட்டுகிறது என பொருள் கொள்கிறார்.

டஹாஹா என்பது குரானில் ஒரு முறை மட்டுமே வருவதால் அவர்கள் என்ன பொருள் வைத்தாலும் அதனை சரிபார்க்க முடியாது?

ஏன் ஒரே நிலப்பரப்பை Allah கண்டங்களாக பிரிக்க வேண்டும்?

கண்டங்கள் விரிவடைந்தது அறிவியலின் கண்டுபிடிப்பு!!!!

அது என்னவோ அறிவியலின் சான்றுகளுக்கேற்றபடி அல்லாவின் செயல்களும் மாறுவது விந்தையிலும் விந்தை!!!

ஆகவே மத அறிவியல் என்பதை என்ன என அறிவது,புரிவது சுலபமே!!!



The triliteral root dāl ḥā wāw (د ح و) occurs only once in the Quran, as the form I verb daḥā (دَحَىٰ). The translation below is a brief gloss intended as a guide to meaning. An Arabic word may have a range of meanings depending on context. Click on the word for more linguistic information, or to suggestion a correction.

Verb (form I) - to spread

(79:30:4) daḥāhāHe spread itوَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
***
நேற்று இட்ட பதிவிலும் சில கேள்விகளை எழுப்புகிறார்.

மானிலிருந்து பரிணாமம் அடைந்ததா ஒட்டக சிவிங்கி?


இந்த தலைப்பே தவறு. வாழும் சமகால வெவ்வேறு உயிரிகள்[species] ஒன்று மற்றொன்றின் முன்னோராக இருக்க முடியாது. மான், &ஒட்டக் சிவிங்கிக்கு ஒரு முன்னோர் உயிரி என்பதே சரி.

ஒட்டக சிவிங்கி பற்றி அறிய வேண்டுமெனில் விக்கிபிடியா பார்த்தாலே போதுமே.


பரிணாமம் என்பது புவியியலுடன் நெருங்கிய தொடர்பு உடையது. ஒரு இடத்தின் சூழலுக்கு ஏற்ப விலங்குகளே பரிணமிக்கும் ,அந்த வகையில் ஒட்ட்க சிவிங்கி ஆப்பிரிக்காவில் 80 இலட்சம் ஆன்டுகளுக்கு முன் பரிணமித்தது.

கிராஃபிடே ஏன்னும் பேரினத்தில்[genus] 10 உயிரிச் சிற்றினங்களில்  ஒட்டக சிவிங்கி மற்றும்ஒகாப்பி[okapi]மட்டுமே இன்றும் வாழ்கின்றன.

கழுத்து அளவில் இடைப்பட்ட ஒரு உயிரி ஹெல்லெடோதெரியத்தின் படிமம். இது மறைந்த ஒரு உயிரி ஆகும்.


Skeleton of Helladotherium

ஆகவே சகோ சு.பியின் கருத்துகள் அனைத்தும் தவறே. இந்த தவறு ஏன் நிகழுகிறது என்றால் (உயிரி) குழு மரபியல்[poppuation genetics] என்பதின் அடிப்படையில் பரிணாமத்தை புரியாததுதான். 



சிவிங்கியின் பரிணாம் வரலாறு, புவியியல்&படிம சான்றுகள், பல வகையான விளக்கங்கள் ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டு ஆய்வுகள் அதைத் தாண்டி சென்று விட்டன. ஆகவே ஒவொன்றையும் மிகச் சரியாக அறிய  ஆரவ்முள்ளவர்கள் மட்டுமே முயற்சிக்கலாம். இதோ ஒரு எ.கா ஆய்வுக் கட்டுரை. 

http://www.bringyou.to/GiraffeEvolution.pdf

இக்கட்டுரை& அதனுடைய மூலக்கட்டுரைகள் அனைத்தும் படித்து சில முனைவர் பட்ட கட்டுரைகளே உருவாக்க முடியும்.

ஒட்டக் சிவிங்கிகளின் இயற்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகம்!!!

A Natural History of Giraffes

A Natural History of Giraffes

ஆகவே ஒட்டக சிவிங்கியின் பரிணாம வரலாறு பற்றி அறிவியல் உலகில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை பதிவு படிப்பவர்கள் அறிந்தால் போதும். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் பரிணாமம் என்பது 450 கோடி ஆண்டு வரலாறு, இதுவரை தோன்றிய பில்லியன் கணக்கான உயிரிகளின் வரலாறு!!.

இதில் ஏதோ ஒன்றைப் பற்றி கேள்வி கேட்பது சுலபம். பதில் தேடி எடுப்பது கொஞ்சம் கடினம் என்றாலும் இணையத்தில் சாத்தியமே!!. இதில் மிக கடினம் என்பது அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும் அனைவரும் புரிவதுதான்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்வது பரிணாமத்தின் மீது எதிர்ப்புக் கருத்துகள் பரப்புபவர்கள் மதவாதிகள் மட்டுமே!!!.அறிவியல் உலகில் பரிணாம நிகழ்வு என்பது முழு அளவில் ஏற்கப்பட்டட விடயம்.

பரிணாமம் என்பது நிகழவே இல்லை, இதுவரை தோன்றிய உயிரிகள் அனைத்தும் எப்படி,எப்போது தோன்றியது எனத் தெரியாது  என்பதும் மதவாதிகளின் கருத்து மட்டுமே!!!

ஆக‌வே நாம் சொல்வ‌து ப‌ரிணாம‌ம்  ம‌ர‌பிய‌ல் சார்ந்து எளிதாக‌ புரிய‌ முடியும்.

1. ஒவொரு உயிரியின் ஜீனோமும் தலைமுறைரீதியாக‌ சிறிது மாறுகிற‌து.

2.இது குறுகிய காலத்திலேயே பல்வேறு உரு அளவு,தோற்றம் போன்றவற்றில் வித்தியாசம் ஏற்படுத்துகிறது. பல குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் ஜீன்களை கண்டறிந்து ஆவணப் படுத்து உள்ளனர்.இது சிறு ப‌ரிணாமம்[micro evolution] என‌ப்ப‌டுகிற‌து. இதனை உறுதிப்ப‌டுத்தும் சான்றுக‌ள் உள்ள‌தால் யாரும் ம‌றுப‌தோ எதிர்ப்ப‌தோ இல்லை!!


3. நெடுங்காலத்தில் குழு ம‌ர‌பிய‌லின் ப‌டி ஒரு உயிரிக் குழு சில‌ சிற்றினங்க‌ளாகபிரிவதும், உரு அமைப்பு மாறுவதும் நிகழ்கிறது. இது பெரும் ப‌ரிணாமம்[macro evolution] என‌ப்ப‌டுகிற‌து. இது பல மில்லியன ஆண்டுகளில் நிகழ்வதால் மறுப்பு, எதிர்ப்பு மதவாதிகளிடம் இருந்து வருகிறது.

Macro evolution= Morphological change+ speciation

நாம் மதவாதிகளுக்கு சொல்வது இதுதான்.இனிமேல் படிம வரலாறு பற்றி எழுதி பரிணாமம் தவறு என காட்டுவது முடியாத செயல். ஏன் எனில் படிம வரலாறு தாண்டி மரபியலே[genetics] பரிணாமத்தின் அதி முக்கிய சான்றுகளாகவும், பல ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் உள்ளது.

ஜீனோம் மாறுவது உண்மை என்றாலும் இந்த மாற்றங்கள் சிற்றினமாதல்[speciation], உரு அமைப்பு மாற்றம்[morphological change] ஏற்படுத்தவே முடியாது என மதவாதிகள் ஆய்வுக் கட்டுரை ஒன்று இட்டு விட்டால் பரிணாமம் மரபியல் ரீதியாக பொய்ப்பிக்கப் பட்டு விடும்.
 
இதைச் செய்யாதவரை பரிணாம அறிவியலின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது!!! நன்றி!!!!!!!!!!!!!!

ப்ரோட்டா ,ப்ரோட்டீன் ,பரிணாமம் தொடர்பு என்ன?





[பரிணாம ஆதாரங்களைப்] பார்க்காதே

[பரிணாம விளக்கங்களைக்] கேட்காதே
[பரிணாமம் மறுக்க] மத புத்த்கம் படி!!


வணக்கம் நண்பர்களே,


நம்மை எப்போது நினைத்து வாழ்த்தும் மார்க்க சகோக்களேபரிணாமம் கற்க ஆதரவளிக்கும்நண்பர்களே மீண்டும் ஒரு பரிணாம விளக்கப் பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி.


நமது அன்புக்கும்பாசத்துக்கும் மரியாதைக்கும் உரிய பதிவுலக மார்க்கமேதை அண்ணன் சுவனப்பிரியன் பரிணாமம் கற்க ஆரம்பித்தது நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சிநாளொறு மேனியும்பொழுதொறு வண்னமாய் அழகிய முறையில் பரிணாம எதிர்பதிவுகள் எழுதி வருகிறார்நாமும்இதற்கு மறுப்பு எழுத என்றும் விரும்புவதால் அவரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்முதலில்அவரின் இப்போதைய பதிவின் சாரத்தை அறிவோம்.
http://suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_7859.html

1.1.// நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவதுயார்? //


புரதம்




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


புரதம் (Protein) என்பது அதிக மூலக்கூறு எடையுள்ளஅமினோ அமிலங்கள் எனப்படும் எளியமூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட சிக்கலான கரிமச் சேர்மமாகும். அனைத்து உயிரணுக்கள்மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுக்குப் புரதம் இன்றியமையாததாகும். பல புரதங்கள் வளர்சிதைமாற்றங்களில்உதவும் நொதிகளாகவோ நொதிகளின்துணையலகுகளாகவோ விளங்குகின்றன. வேறு சில புரதங்கள் கட்டமைப்பு மற்றும் இயக்க ரீதியான பணிகளைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாகஉயிரணுகளின் வடிவத்திற்குக் காரணமான கலசட்டகத்தை (Cytoskeleton) உருவாக்குவது புரதங்கள் ஆகும். அக்ரின் (actin),மயோசின் (myosin) எனப்படும் தசைகளில் காணப்படும் புரதங்கள் தசை அசைவில் பங்கு கொள்கின்றன. நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும்பிறபொருளெதிரிகள்,ஈந்தணைவிகளின் சேமிப்பு மற்றும் உயிரணுக்களுக்கிடையிலான சமிக்ஞைகளைக் கடத்தல் போன்றவை புரதங்களின் இதர பணிகளாகும்.


எளிதாக புரியவேண்டுமெனில் புரதம் என்பது நமது செல்லில் உள்ள ஒரு வேதிப் பொருள்அதுபல செயல்களை செய்கிறது. .


இருப்பினும் நம் அண்ணன் கேள்வி ப்ரோட்டினை இப்படி அறிவோடு செயலாற்ற வைத்தது யார்?என்ற கேள்வியில் ப்ரோட்டின் என்பது ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] இதுபரிணமிக்க இயலாது என்பதே சரியான பரிணாம எதிர்ப்பு வாதம்.




பொதுவாக ப்ரோட்டினின் உள்ள அமிலக் கூட்டமைப்பின் நிகழ்தகவு மிக,மிக... குறைவு என்றவாதமே வைக்கப்படும்ஆனால் அண்ணன் ப்ரோட்டினை செயல்படுத்துவது யார் என்பதோடுநிறுத்திக் கொண்டார்.சரி அதில் கணிதம் வருவதால் அண்ணன் ஒதுங்கி விட்டார்!!!.எனினும்அதற்கும் விளக்கம் இந்த காணொளியில் உண்டு.





ப்ரோட்டின் என்பது வேதிப் பொருள் என்பதால் அதன் குணத்திற்கேற்ப இங்குகிறது என்று மட்டுமே அறிவியல் சொல்ல இயலும்ப்ரோட்டின் எப்படி இயங்குகிறது என்பதைக் கூறுவதே அறிவியல்.ஏன் ப்ரோட்டின் இப்படி இருக்கிறது என்பது தத்துவம்.

ஆகவே தத்துவரீதியாக கூறினால் ப்ரோட்டினை செயல்படுத்துவது யார் என்பது தவறான கேள்விஇது முதல் காரணி வாதத்தின்[First cause argument] ஒரு மாறுபட்ட வடிவமே.அதாவது படைப்பு என்றால் படைக்கும் சக்தி அவசியம்,ஆனால் அப்படைக்கும் சக்திக்கு இன்னொரு படைப்பு சக்தி தேவையில்லை என்பதுதான்.
அப்படி எவ்வகையிலும் அறிய இயலா சுயம்புவான படைப்பு சக்தி என்பதை ஏற்பவர்கள்,ஏன் அறிய இயலும் ப்ரோட்டினும் சுயம்புவாக தோன்றியது என்பதை ஏற்க கூடாது???
***************
2.//ஒரு உயிரி மற்றொரு உயிராக பரிணாமம் அடைந்தால் முக்கியமாக இந்த புரோட்டீனின் அளவும் கூடவோ அல்லது குறைவாகவோ பரிணாமம் அடைந்திருக்க வேண்டும்இது பற்றி பரிணாமவியலார் எந்த தகவலும் அளிக்கவில்லைஇது பற்றி டார்வின் அறிந்திருக்கவுமில்லை.//

ப்ரோட்டின் என்பது ஒரு வேதிப் பொருள் அதில் பல வகையான அமைப்புகள் உள்ளன.உருவான முதல் செல்லிலேயே இந்த ப்ரோட்டின்கள் தயாரிக்கும் வண்ணம் இருந்திருக்க வேண்டும்.அறிவியலின் அபியோஜெனெசிஸ் ன் படி உயிரற்ற வேதிப்பொருள்களில் இருந்து முதல் செல் உருவாகி இருக்க வேண்டும் என்ற கருதுகோளே ஏற்கப்பட்டு அதன் மீது ஆய்வுகள் நடைபெறுகின்றன.

பரிணாமத்திலும்
 வடிவமைப்புகள் இயற்கைத் தேர்வினால் காலப் போக்கில் சூழலுக்கு பொருந்தும் வண்ணம் மாற்றியமைக்கப்படுவது இயல்பே.இயற்கைத் தேர்வின் படி உடலில் உள்ள ஒரு உறுப்போ,அல்லது வேதிப்பொருளோ ,அதன் செயல் பயன் அளித்தால் மட்டுமே நீடிக்கும்பாதிக்கும் செயல்கள் தீர்வில் நீக்கப்படும்ஒருவேளை இரைப்பை இப்படி தான் சுரக்கும் அமிலத்தால் அதுவே பாதிகப்பட்டால் அந்த உயிரி தேர்வில் நீக்கப்படும்ஆகவே ப்போது வாழும் உயிரிகள்,உறுப்புகள் அனைத்தும் இயற்கைத் தேர்வில் வெற்றி பெற்று நீக்கப் படாதவைஇது படைப்பு போன்ற மாயை தருவதில் வியப்பு ஒன்றுமில்லை.

இந்தக் கேள்விதான் அண்ணன் ப்ரோட்டினை ப்ரோட்டா மாதிரி நினைக்கிறார் என்னும் அரிய உண்மையை நாம் அறியத் தந்தது.

பாருங்கள் ப்ரோட்டா மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறதுவீச்சு பரோட்டா,கொத்து பரோட்டாசில்லி பரோட்டா,சிக்கன் பரோட்டா என பலவகைகளிலும் பரிணமித்து உள்ளதுகுரானிலும் அல்மைதா என ஒரு அத்தியாயமே உண்டு.
Sura Al-Ma'ida (Arabicسورة المائدة‎, Sūratu al-Mā'idah, "The Table" or "The Table Spread with Food") is the fifth chapter of the Qur'an, with 120 verses

ப்போது முதல் செல்லில் இருந்து தோன்றிய அனைத்து உயிரி,தாவர வகைகளின் செல்ஜீனோம்ப்ரோட்டின் ஆவணப் படுத்தப் பட்ட விவரங்கள் இருக்கிறது என்றால் பரிணாம மரத்தின் படி ஏற்பட்ட‌ மாற்றங்கள் ப்ரோட்டின்களின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் உருவாக்கி உள்ளதா என்பதை அவதானிக்கலாம்.

ஆனால் ஏற்கெனெவே வாழ்ந்து மறைந்த உயிரிகளின் படிமம் மட்டுமே உள்ளது.வாழும் உயிரிகளின் ஜீனோம் கண்டறியப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஒவ்வொரு உயிரியின் ஒவ்வொரு செல்லையோ அல்லது அதில் உள்ள ப்ரோட்டின்களையோ ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடியுமா?அப்படி நடக்கும் ஒப்பீடு ஆய்வுகளும் பரிணாமத்திற்கு எதிராக இல்லை.

நாம் ஏற்கெனவே சொன்னபடி மதவாதிகள் எபோதும் சான்றுகள் குறைவாக உள்ள‌ விடயங்களையே விவாதங்களுக்கு பயன்படுத்துவார்கள் என்பதற்கு ப்ரோட்டின் மீதான பரிணாம எதிர்ப்பும் ஒரு .கா!!.


3.//ஆட்டுக் கறியும்மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம்
இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவாஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை.ஏன் நிகழ்வதில்லை?..இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளைஅளந்து அமைத்தவன் யார்அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தைபெற முடியவில்லை.//


எனினும் அண்ணன் விடாப்பிடியாக ப்ரோட்டினை படைத்தது யார் எனக் கேட்கிறார்?அதனைவிட ப்ரோட்டின் படைப்பாளி யாராக இருக்க முடியாது என்பதை நாம் எளிதில்விளக்க முடியும்.

இந்த இரைப்பையில் உள்ள அமிலம் ஆட்டுக் கரி,மாட்டுக் கரி மட்டும் இல்லாமல்பன்றிக் கரியும் பிரச்சினை இல்லாமல் செரிக்கிறதுஆகவே பன்றிக் கரி உண்பதைதடை செய்பவர் எவரும் இந்த இரைப்பையையோ அந்த அமிலத்தையோ படைத்துஇருக்க முடியாது!!!!!.

வெஜெடேரியக் கடவுள்களும் ப்ரோட்டின் படைப்பாளியாக இருக்க முடியாது.!!!!!!!!!!.

அனைத்து வகை மாமிச உணவையும் அங்கீகரித்துபடையலை ஏற்றுக் கொள்ளும் கடவுள்மட்டுமே ப்ரோட்டின் படைப்புக்கு உரிமை கொண்டாட முடியும்.!!!!!!!!

சகோ இராவணன் அவர்களின் விருப்ப சாமி முனியாண்டி அவர்களுக்கே ப்ரோட்டின்படைப்பாளி ஆகும் வாய்ப்பு ((மட்டுமே!!) அதிகம் என கூறுகிறேன்.


4.//அல்புமீனைப் பற்றியும்ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லைபரிணாமம் நடை பெற முதலில் டிஎன்ஏகுரோமசோம்கள்புரோட்டீன்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்அதன் பிறகுதான் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும்இந்த புரோட்டீன்களின் அவசியத்துக்கு காரணத்தை கண்டு பிடிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்ததையும் மானிலிருந்து ஒட்டகம் வந்ததையும் தனது கற்பனைத் திறனால் பலரை நம்ப வைத்து விட்டார் டார்வின்.//

இது மேலே கூறிய வாதங்களின் தொகுப்பு. நாம் கூறுவது என்ன??? பரிணாம கொள்கைக்கு ப்ரோட்டீன்கள் பற்றிய ஆய்வுகள் எப்போதும் எதிராக முடியாது. ஏன் எனில்[ சில விதிவிலக்குகளைத் தவிர‌ ] வாழும் உயிரிகளின் ப்ரோட்டின் அமைப்பு மட்டுமே நமக்கு தெரியும்.ப்ரோட்டின்கள் புதிதாக கூட உருவாக்குகிறார்கள்.இயற்கையிலும் இதேபோல் உருவாகி இருப்பதில் வியப்பில்லை.


பரிணாமம் நடைபெற ஜீனோமில் மாற்றம் ஏற்பட வேண்டும்,அந்த மாற்றம் ப்ரோட்டின்களின் செயல்களில் பிரதிபலிக்கும். ஆகவே பரிணாமம் நடைபெறவில்லை எனில கீழ்க்கண்டவை நிரூபிக்கப்படவேண்டும்.

a). ஜீனோம் மாறுவது இல்லை.


b). இம்மாற்றம் ப்ரோட்டின்களின் செயல்களை பாதிப்பது இல்லை.


ஏற்கெனெவே நமது பதிவில் போலி ஜீன்கள் பற்றி அலசி இருக்கிறோம்.அதாவது முதலில் ப்ரோட்டின் தயாரித்து பிறகு
 பரிணாம மாற்றத்தால்[mutations] தயாரிக்க இய்லாமல் போன ஜீன்களே இவை.

ஆகவே நாம் முடிவாக என்ன கூறுகிறோம்.

1.இந்த ப்ரோட்டின் மீதான பரிணாம விமர்சனம் என்பது முதல் செல் எப்படி வந்தது என்ற கேள்வியின் மறு உருவமே!!!.முதல் செல் தோன்றியபோதே அது ப்ரோட்டின் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.

2.பரிணாமம் என்பது ஒரு செல் உயிரிகளில் இருந்து அனைத்து உயிரிகளும் பரிணமித்த‌ன என்பதையே விளக்குகிறதே அன்றி, எப்படி முதல் செல் அல்லது உயிர் உருவானது என்பது பற்றி அல்ல.ஒரு செல் உயிர்கள், பலசெல் உயிர்களானதும்,அதில் இருந்து கடல்வாழ் கேம்பிரியன் என்று தொடங்கி இப்போதைய மனிதன் உள்ளிட்ட வாழும் உயிரிகள் வரை பரிணமித்தன.இதில் 99% வாழும் உயிரிகளின் ப்ரோட்டின் பற்றிய விவரங்கள் மட்டுமே ஆவணப் படுத்தி உள்ளார்கள்.இதை வைத்து பரிணாமத்திற்கு ஆதரவு ப்ஸூடோஜீன்கள் கண்டறியப்பட்டதே அன்றி எதிராக எதுவும் இல்லை. 
3. இரைப்பையில் உள்ள அமிலம்,உள்ளிட்ட சில உறுப்புகளின் தனித்திற்னுக்கு விடை ஒருவேளை அவை சரியாக சூழலுக்கு ஏற்றபடி இயங்காவிட்டால் அந்த உயிரியே இயற்கைத் தேர்வின் படி அழிந்து இருக்கும்.

இம்மாதிரி கேள்விகள் ஒரு உறுப்பு, ஒரு செயல்,குணம் எப்படி பரிணமித்தது என்பவை பெரும்பாலும் குழப்பும் நோக்கில் கேட்கப்படுபவையே. உயிரிகள் பரிணமிக்கும் போது அதில் ஏற்படும் மாற்றங்களில் மெலே சொன்ன விடயங்கள் அடங்கிவிடுகின்றன.

உறுப்புகள்,செயல்,குணம் சார்ந்து பரிணாம வளர்ச்சி ஆய்வுக் கட்டுரைகள் உண்டு.பரிணாமக் கடலில்  மீன் பிடிக்க பல மில்லியன் விடயங்கள் உண்டு. கற்றது கைம்மண் அள்வு, கல்லாதது உலகளவு என்பதை நாம் அறிந்து இருக்கிறபடியால் நம் விளக்கங்கள் பொதுவாக் கேள்விகளின் பொருளற்ற தன்மையை விளக்குவதிலேயே கவனம் செலுத்துகிறோம்.

ப்ரோட்டா மைதாவில் இருந்து பரிணமித்தது போல் ப்ரோட்டினுக்கு முன்னால் என்ன என்பதே அண்ணன் கேள்வி!!!. இப்போது நமது பதிவின் தலைப்பு விளங்கி இருக்கும். அண்ணனின் கேள்வியை பாராட்டி ஒரு நகைச்சுவை காணொளி!!!. 



அண்ணன் அடுத்த பதிவு போட்டதும் மீண்டும் மறுப்போம்!! நன்றி