வணக்கம் நண்பர்களே,
நிகழ்வின் சான்றுகளை சீர்தூக்கி பார்த்து அலசி,பொருந்தும் விளக்கம் அளிப்பதே அறிவியல். இந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது ஒரு உண்மையை அறிய விரும்புவரின் கடமை ஆகும்.. நாம் பார்த்த சில காணொளிகளை இப்பதிவில் பகிர்கிறோம். நம் பதிவுகளில் ஏற்கெனவே விவாதித்த பல விடயங்களை எளிமையாக விளக்குகிறது.
முதல் காணொளி எளிமைப்படுத்தபடாத சிக்கலான வடிவமைப்பு[irreducible complexity] என்னும் பரிணாமத்தின் எதிர் வாதம் பற்றியது இதை நாம் ஏற்கெனவே இப்பதிவில் விளக்கி இருக்கிறோம்.
இரண்டாம் காணொளி விடை தெரியா கேள்விக்கு வித்தகனே காரணம் என நம் ஆத்திக சகோக்கள் கூறுகின்றனர்.
நாம் விடை தெரியா என்பது விளக்க ஏதுவான சான்றுகள் இல்லை என்பதால் மட்டுமே. விடை தெரியா கேள்வியின் காரணியாக இயற்கைக்கு மேம்பட்ட சக்தியை சுட்டும் நம் சகோக்கள் அதனையும் சான்றுகள் மூலம் நிரூபிக்க இயலாது என்பதை அறிந்தாலும் அலட்டிக் கொள்வது இல்லை.
அதாவது ஒரு அறிவு வாய்ந்த சக்தி,எந்த தேவையுமற்ற எப்போதும் இருக்கும், எதையும் சூன்யத்தில் இருந்து உருவாக்க முடியும்.அதுவே கடவுள்(கள்) என பெயர் இடுகின்றார். ஆண்டவன் கட்டளை என பல சட்ட திட்டங்கள் போடுபவர்கள், கடவுளை நிரூபிக்க முடியுமா என்றால், கடவுள் இல்லை என நிரூபிக்க முடியுமா என ப்ளேட்டை திருப்பி போடுவார்கள்.அப்படி யார் நிரூபணம் கொடுக்க வேண்டும் என்பதை இக்காணொளி விளக்குகிறது.
மூன்றாம் காணொளி பூமியின் வரலாற்றை விளக்குகிறது. புவியியலும்,பரிணாமமும் இரட்டையர் என்றால் மிகையாகாது.பொறுமையாக பாருங்கள்.
நான்காம் காணொளி பகுத்தறியும் சிந்தனை என்பதைப் பற்றி எப்படி சான்றுகளை சீர்தூக்கிப் பார்த்து பொருந்தும் விளக்கம் அளிப்பது என்பதை விள்க்குகிறது. சிறிய காணொளி
ஐந்தாம் காணொளி ஏன் பல இயற்கைக்கு மேம்பட்ட சக்திகளை ஏதோ ஒருவகையில் வசப்படுத்துவேன் என்பவர்கள் வெளிப்படையாக பேசுவதில்லை என்பதும்,எதையும் தெளிவாக பேசுவதில்லை என்பதையும் அலசுகிறது. நம் பதிவு விவாதங்களை படிக்கும் நண்பர்கள் இதனை உணர முடியும்.
பாருங்கள் ஆக்க பூர்வமாக கருத்து பரிமாற்றம் செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக