வணக்கம் நண்பர்களே,
நாம் அறிந்தவரை பூமியில் மட்டுமே ஹோமோ சேஃபியன்கள்(இபோதைய மனிதன்) உள்ளிட்ட பல மில்லியன் உயிரி,தாவர வகைகள் வாழ்கின்றன.பேரண்டத்தில் வேறு எங்கும் உயிர்கள் உள்ளனவா என்னும் தேடல் ஒருபுறம் தொடர்கிறது என்றாலும்,பூமியில் வாழும் உயிரினங்களில் இயற்கை வளங்களை அதிகம் நுகரும்,கட்டுக்குள் கொண்டுவர முயலும் ஹோமோ சேஃபியன்கள் என்னும் ஒருவகை மனித இனம் மற்ற உயிரிகளை விட மேன்மைவாய்ந்ததாக அவ்வினத்தவரால் கருதப் படுகிறது.
பிற உயிரிகள் செய்யாத அறிவியல்,மதம், சட்டங்கள், ஆட்சிமுறைகள் என வாழ்வதும் தனது சிந்தனைகளை உணர முடிவதும்,சூழலை சரியாக கணித்து பெரும்பாலும் அறிவியல்மூலம் அதற்கு தீர்வு காண்பதுமே இந்த மேட்டிமை சிந்தனைக்கு காரணம்.
பிற உயிரிகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதை ஹோமோ சேஃபியன்கள் அறிய இயலவில்லை. கடந்த 20,000 வருடங்களில் அதாவது ஹோமோ சேஃபியன்கள் விவசாயம் மேற்கொண்டு ஒரு இடத்தில் வாழ தொடங்கியதில் இருந்தே நாகரிகம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வளர்ந்தன.
இயற்கையைப் பொறுத்தவரை சூழலுக்கு பொருந்தா உயிரிகள் அழிவதும் ஒருவகை பரிணாம செயலாக்கம் ஆகும். அனைத்து உயிரிகளும் ஒரு செல் உயிர்களில் இருந்து 450 கோடி ஆண்டுகளில் பரிணமித்தன என்பதே இப்போதைய ஏற்கப் பட்டுள்ள அறிவியல் கொள்கை ஆகும்.
ஹோமோ சேஃபியன்கள் பிற உயிரிகளை விட சிறந்தவனா? என்னும் கேள்வியை பல தளங்களில் விவாதிக்க இயலும் என்றாலும் இயற்கையை பொறுத்தவரை ஒரு உயிரி வாழ ஒரே திறன்தான் தேவை.
"சூழலுக்கு ஏற்ப வாழும் திறன்"
அறிவியலின் முன்னேற்றத்தால் பலவித தொழில்நுடபங்களை உருவாக்கி இத்திறனை ஹோமோ சேஃபியன்கள் வளர்த்துக் கொண்டார்கள் என்பதை அவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு, சராசரி ஆயுள் அதிகரிப்பு என இரு கணக்கீடுகளில் இருந்து அறிய முடியும்.
Graph of the global human population from 10,000 BC to 2010 AD, from the US Census Bureau. The graph shows the extremely rapid growth in the world population that has taken place since the 18th century.
ஹோமோ சேஃபியன்கள் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியின் 75% நிலப்பரப்பை தங்கள் வசதிக்கு ஏற்ப காடுகள் அழித்து விவசாயம்,வீடு,அணைகள் கட்டுதல், சுரங்கள் தோண்டுதல் என பலவகைகளில் மாற்றிவிட்டனர். பல் வகை உயிரி,தாவர இனங்களின் அழிவுக்கும் வித்திட்டு விட்டார்.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை பல கோடி ஆண்டு பூமியில் ஆண்ட டைனோசார்கள் பூண்டோடு அற்றுப் போயின. இவை எப்படி மறைந்து இருக்க்லாம் என்பதற்கு பல் அறிவியல் விள்க்கங்கள் ஹோமோ சேஃபிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்து அளித்தாலும்,அவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதாக தெரியவில்லை. ஒருவேளை டைனோசார்கள் அழியாமல் இருந்து இருந்தால் ஹோமோ சேஃபியன்கள் பலுகிப் பெருகி இருக்குமா என்பதே கேள்விக்குறிதான்.
இன்னும் இனம்,மொழி,நிறம் அடிப்படையில் யார் உயர்ந்தவர் என கண்டுபிடிக்க பல போர்கள் நடைபெற்று பல மில்லியன் ஹோமோ சேபியன்கள் இறந்ததும் வரலாறு. ஹோமோ சேஃபியன்கள் தங்களை ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அறிவுள்ள சக்தி படைத்து தன்னை வணங்க சொல்வதாகவும் கருத்துக் கொண்டும் அதற்காவும் பல போர்கள் நடந்ததும் நகைச்சுவையான இன்னொரு உண்மை.
இயற்கையை பொறுத்தவரை மனிதனும் பிற உயிரிகள் போல்தான். இயற்கை சூழலுக்கு ஏற்றபடி அதிக பட்சம் 900 கோடி மக்கள் மட்டுமே வாழ முடியும் என சில ஹோமோ சேஃபியன் அறிவியலாளர்கள் பயமுறுத்துகின்றார்.ஹோமோ சேஃபியன்களின் இயற்கை சுரண்டல்இயற்கை சூழலை பாதிப்பதன் விளைவே புவி வெப்பமயமாதல் என்றும் இதன் காரணமாகவே பல இயற்கை பேரழிவுகள் நிகழ்வதாகவும் கூறுகின்றார்கள்.
ஆனால் பெரும்பான்மை ஹோமோ சேஃபியன்கள் இவற்றைப் பற்றி கவலை கொளாமல் " உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என நுகர்வுரீதியாக சிந்திக்கிறார்கள் என்பதும் உண்மை.அவர்களுக்காக இந்தப் பாடல்.
ஹோமோ சேஃபியன்கள் கனவுலகில் வாழ இயற்கைவிடுமா என்பதே கேள்வி.ஒருவேளை ஹோமோ சேஃபியன்களும் பிற உயிரிகள் போல் அற்றுபோய் வேறு அறிவுள்ள உயிரிகள் பல் மில்லியன் ஆண்டுகள் கழித்து பரிணமித்து அகழ்வாய்வுகள் செய்யும் போது இப்படம் போல் கிடைக்கலாம்!!!
இக்காணொளி ஹோமோ சேஃபியன்கள் பிற உயிரிகளில் இருந்து மேம்பட்டவர்களா என்பதை பல் தளங்களில் அலசுகிறது. கண்டு களியுங்கள் ஹோமோ சேஃபிய சகோதரர்களே!!
நன்றி!!!!
http://en.wikipedia.org/wiki/Anthropocene
http://en.wikipedia.org/wiki/Anthropocentrism
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக