வணக்கம் நண்பர்களே,
இணையத்தில் பாடங்களை காணொளி மூலமாக எளிதில் விளக்கும் பலர் இருக்கின்றனர்.அப்படி ஒருவரை பாராட்டி சகோ பீர் முகம்மது ஒரு பதிவு இட்டு இருக்கிறார்.
அவர் மதம் சாராமல் பதிவு எழுதி திரு சல்மான் கான் என்பவரின் கல்விப்பணியைபாராட்டியதற்கு வாழ்த்துக்கள். சல்மான்கான் முஸ்லிம் என்பதாலேயே சகோ பீர் முகம்மதுபாராட்ட்டினார் என்ற எண்ணம் வருவது இயல்பு என்றாலும் பாராட்டுக்கு தகுதியானவரை யார்வேண்டுமானாலும் பாராட்டலாம் என்பதே நம் கருத்து.
வங்க தேசத்தில் இருந்து அமெரிக்கா புலம் பெயர்ந்து அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்ப்பட்டுநல்ல குடிமகனாக சமூகத்திற்கும் கல்விப்பணி ஆற்றுதல் நன்றே!!.
அவருடைய குழுவில் பல இன மொழி ,மதம் சார்ந்தவர்களும் இருப்பதையும் அறிய முடிகிறது.சில இந்தியர்களும் இணைந்து சேவை செய்கிறார். அவர்களையும் சேர்த்து பாராட்டுவோம்.
*********
இதில் நம்க்கு ஒரு விடயம் இருக்கிறது. பரிணாம கொள்கை என்பது உயிர் அறிவியலில்ஒருமித்த கருத்தாக ஏற்கப்பட்ட கொள்கை என்பதும் உலகின் பெரும்பான்மை பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறது.
எதிர்ப்பது ஒரு சில மதவாதிகள் மட்டுமே அதுவும் தங்களின் மத புத்த்க விளக்க்த்திற்கு பரிணாம்சான்றுகள்,விளக்கங்கள் எதிராக இருப்பதாக் நினைப்பதால் மட்டுமே.
ஆயினும் பல மதப்பிரிவுகள் பரிணாமத்தை எதிர்க்காமல் வழி அது இறையால் வழிநடத்தப்பட்டது என சொல்வார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றன்.
நம் தமிழ் பதிவுலகில் பல இஸ்லாமிய பதிவர்கள் பரிணாமம் கொள்கை சரி என்றால்இஸ்லாம் பொய்யாகி விடும் என கருத்துக் கொண்டு பதிவிட்டு வருகிறார்கள்.
நாம் கூடுமானவரை அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லி விளக்கி வருகிறோம்.
இப்போது அவர்கள் அனைவரும் போற்றும் திரு சல்மான் கானின் கல்வி பரிணாமத்தைகற்பிக்கிறதா இல்லையா என அறிவது நம் கடமை ஆகும்.
உயிர் அறிவியல் சார்ந்த கல்வி எதுவும் பரிணாமத்தை அடிப்படையாக கொண்டேகற்பிக்கப்படுவதால் கான் அகாடமியும் பரிணாமத்தை போதிக்கிறது.அந்த காணொளிகளைஇணைப்பாக வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
பரிணாமம் விளக்குவதில் இன்னும் சிறந்த காணொளிகள் உண்டு என்றாலும் ஒரு முறையாக அறிவியல் கற்றவர் பரிணாமத்தை தவறு என்று கூறுவதில்லை என்பதை விளக்கவே இந்த காணொளிகளை இடுகிறேன்.
கல்வியில் மதம் சார் கருத்துகளை வெளியிடாமல் இருக்கும் கான் அகாடமியை பாராட்டுகிறோம்!!
ஆகவே கல்வி பெருக மத ஆட்சிகள் ஒழிய வேண்டும்!!!!!!!!!!!
கான் அகாடமி காஃபிர் அகாடமியா என்பதையும் மார்க்க பாதுகாவலர்கள் விளக்க வேண்டுகிறேன்!!!
இந்த காணொளிகளில் உள்ள விடயங்கள் நாம் ஏற்கெனெவே அறிந்த விடயம் என்பதாலும், ஏதெனும் விளக்கம் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் சரி செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக