புதன், 17 ஏப்ரல், 2013

தந்தை பெரியாரை விமர்சிக்கும் கூற்று சுட்டுதல்[Quote Mining] என்னும் குருட்டுவாதம்







வணக்கம் நண்பர்களே ,

சென்ற பதிவில் திருப்பி திருப்பி சொல்லும் சுற்று வாதம்[circular argument] பற்றி ஒரு எ.கா வுடன் அறிந்தோம். இப்பதிவில் இன்னும் ஒரு வாதம் பற்றி அறிவோம்.

மனிதர்களில் பலர் பலவிதமான் கருத்துக்களை கொண்டு இருத்தல் இயல்பே,இது அவர் பிறந்த ,வளர்ந்த சூழல், கல்வி சார்ந்தது என்பதல் பல முரண்பாடான கருத்துகள் உலகில் இருப்பதில் வியப்பு இல்லை.

ஆத்திகம் ,நாத்திகம்
முதலாளித்துவம்,பொது உடமை
ஜனநாயகம், மன்னராட்சி
மத சார் ஆட்சி,மத சார்பின்மை ஆட்சி

என பல ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் சார் விவாதம் நாம் வாழ்வில் கண்டு,அறிந்து இருக்கிறோம்.

இதில் மதவாதிகள் ஆத்திகர் என்னும் வேடம் பூண்டு,நாத்திகர்களுடன் நடத்தும் விவாதங்கள் அதிகம் நடைபெறுகிறது.

ஆத்திகம்,ஆன்மீகம் என்பதற்கு சான்று இல்லாமையால்,நாத்திகர்களின் தவறுகள் எதையாவது தோண்டி அதன் மூலம் வெற்றி பெற மதவாதிகள் முயல்வது அந்த விவாதங்களில் காண முடியும்.

சென்ற பதிவில் மதவாதிகள் தங்களின் நம்பிக்கையை நிறுவ சுற்றுவாதம் பயனப்டுத்துவர் எனக் காட்டினோம்.

கேள்வி:கடவுள் உண்டு என் எப்படி சொல்கிறாய்?

பதில்: மத புத்தகம் சொல்கிறது

கேள்வி: மத புத்தகம் சொலவது எப்படி சரியாகும்?

பதில்: இதில் அறிவியல் இருக்கிறது. இன்று ஒரு கண்டுபிடிப்பு வந்தால்,அந்த பொருள் வரும் வசனம் மறுநாள் காட்டுவோம்.

கேள்வி: ஏன் முன்னரே சொல்லக் கூடாது?.

பதில் :முடியும் என்றாலும், பிறகு சொன்னால்தானே உங்களுக்கு புரியும். ஹி ஹி. கண்டுபிடிப்பு வரவரத்தான் எங்களுக்கே வசனம் சரியாக புரிகிறது.

கேள்வி: மத புத்தகம் வழங்கப்பட்டவர் பொய் சொல்லி இருக்கலாமே!!

பதில்: மத புத்தகம் அப்படி சொல்லவில்லை.இதில் உள்ளது போல் சில அத்தியாயம், நாங்கள் ஏற்கும் வண்ணம் தர  முடியுமா?
*
இந்த வாதங்களில் இருக்கும் வெற்றுத் தன்மை எளிதில் புரியும், இதுதான் அதுதான் இது என் சுற்றி சுற்றி வருவது எதையும் முடிவுக்கு வரவிடாது.

ஒருவேளை எதிர்காலத்தில் வேறு வழியின்றி  பரிணாமம் ஏற்க வேண்டும் என்றாலும் ,அது ஏற்கெனெவே சொல்லி இருக்கிறது என்ற தொனியில் மட்டுமே சொல்லி ஏற்பார்.இப்போதைய பரிணாம எதிர்ப்பில் கூட ஒரு எச்சரிக்கை உணர்வை பார்க்க முடியும்.  

மத்வாதிகளுக்கு தங்கள் தரப்பின் சான்றின்மை நன்கு தெரியும் என்பதால் ஆம்/இல்லை கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பர். தங்கள் தரப்பு நிலைப்பாட்டை சொல்ல மறுப்பர். .இப்பதிவில் கூற்று சுட்டுதல்[quote mining] என்னும் வாதம் பற்றி அறிவோம்.
**

மதவாதிகள் பயன்படுத்தும் ஒரு கோமாளித்தனமான வாதம் கூற்று சுட்டுதல்[Quote mining] என்பதாகும்.

நாத்திகர் தரப்பு அறிஞர் ஒருவர் ஏதோ ஒரு காலகட்டத்தில், குறிப்பிட்ட சூழலில் சொன்னது இப்போதைய சூழலுக்கு தவறாகத் தெரிவதால், அவர் சொன்னது அனைத்தும், நாத்திகர் சொல்வது அனைத்தும் தவறே என்பதுதான் இந்த கூற்று சுட்டுதல் வாதம்.


Quote mining is the deceitful tactic of taking quotes out of context in order to make them seemingly agree with the quote miner's viewpoint or to make the comments of an opponent seem more extreme or hold positions they don't in order to make their positions easier to refute or demonize.[1] It's a way of lying. 

ஒருவர் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு சொன்னதை,அனைத்து விடயங்களுக்கு சொன்னதாக் திரித்து தங்கள் வாதத்திற்கு ஆதரவு சேர்க்கும் முயற்சி.

மனிதர்கள் சூழல் சார் கைதிகள். ஒருவர் வாழும் சூழல் சார்ந்து மட்டுமே முடிவு எடுக்க,வாழ‌ முடியும். எனினும் சில கருத்து,அறிவுரை கூறும் போது அச்சூழலை மேம்படுத்தும் விதமாக சொல்வது உண்டு.இவை எதிர் காலத்தில் சூழல் சார்ந்து ஏற்க(நிராகரிக்க)ப்படும்.

ஒருவர் ஒரு பிரச்சினையில் கொண்ட நிலைப்பாடு என்ன என்பதை அவரின் வாழ்வு,செயல் சார்ந்து மட்டுமே அவதானிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட கூற்றினை மட்டும் சொல்லி அவரின் அனைத்து கருத்துகளையும் தவறாக காட்டுவது ஏமாற்றுவேலை ஆகும். 

ஒருவர் பல கருத்துகளை,பல சூழல்களில் சொல்லி இருக்கிறார்,சில நிலைப்பாடுகள் எடுத்து இருக்கிறார்.ஒரு அறிஞ‌ரின் ஒரு பிரச்சினை சார் கருத்துகளில் ஒரு கூற்றினை மட்டும் எடுப்பது சரியல்ல. அது எந்த சூழலில் சொல்லப்பட்டது,அதற்கு முந்தைய பிந்தைய நிலைப்பாடுகள் அனைத்தையும் சார்ந்து விமர்சிக்க வேண்டும்.

நம்ம மாப்ளே தாசின் பதிவில் பெண் திருமணம் செய்ய வேண்டாம், கருப்பையை எடுக்க வேண்டும்.ஆண் எனவே பெண் அழைக்கப்பட வேண்டும் என பெரியார் கூறினார் என் விமர்சித்து பதிவு இட்டார்.

அவரின் பதிவில் இருந்து
**
1. இந்த விவாதத்தில் முதலில் எடுத்துக் கொண்ட பாயிண்ட் பெரியார் போதித்த பெண் சுதந்திரம் அவர் கருத்துப் படி:

பெண்களுக்கு திருமணமே கூடாது.பெண்களும் ஆண்கள் மாதிரியே கிராப் வெட்டி பேன்ட் சட்டை  போட்டுக் கொள்ள வேண்டும்.பெண்கள் நகை ஸ்டேன்ட் ஆகிவிட்டார்கள் எனவே அவர்கள் இனி நகையணியக் கூடாது.
கர்ப்பப் பை இருப்பதால் தானே ஆண் அவளை கர்ப்பமாக்கி அடிமைப் படுத்து கிறான்?  எனவே அவள் கர்ப்பப் பையை வெட்டிப் போட வேண்டும்.பெண்ணை இனிமேல் பெண் என்றே அழைக்க கூடாது, ஆண் என்று தான் அழைக்க வேண்டும்!! 

ஆத்தீகர்களின் குற்றச் சாட்டு:  இதை பெரியார் கட்சிக் காரர்களே யாரும் பின்பற்றவில்லை நடைமுறைக்கு ஒவ்வாதது.  மனோதத்துவ டாக்டர் ஷாலினியின் வாக்குப் படியும் திருமணமில்லாத வாழ்க்கை பெண்ணிற்கு உகந்ததல்ல. பெரியாரே பல திருமணங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார், அவரே இரண்டாவதாகவும் திருமணம் செய்திருக்கிறார்.  பெண் சுதந்திரம் என்ற அவர் திருமணம் புரிந்து ஒரு பெண்ணை தனக்கு பணிவிடை செய்யும் அடிமையாக்கி இருக்கிறார். இது முரண். எப்பேர்பட்ட கொலைகாரனாக, கொள்ளைக் காரனாக  இருந்தாலும் அவனுக்கும் என்று ஒரு வக்கீல் வந்து ஆஜராவான், அதுமாதிரி கூட இந்த கொள்கைக்கு பெரியார் உட்பட ஒருத்தரும் ஆதரவாக இல்லை.
**

பெரியாரின் காலத்தில் பால்ய விவாகம்,தேவதாசி முறை,பலதாரமணம்,சொத்துரிமை இன்மை, விதவைக் கோலம் போன்றவை இந்து சமூகத்தில் மிக இயல்பாக இருந்தது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

பெண் ஏன் அடிமை ஆனாள் என்னும் நூலில் தனது பெண் விடுதலைக் கருத்துகள் அனைத்தையும் தொகுத்து கூறுகிறார்.

அந்நூலில் பெண்களின் அக்கால நிலை குறித்து அவர் அடையும் கவலை,அடையும் கோபம் போன்றவை நன்கு அப்புத்த்கத்தில் வெளிப்படுகின்றன்.

புத்தகம் இங்கே தரவிறக்கி அனைவரும் படியுங்கள். ஒரு மனிதன் சுமார் 90 வருடங்களுக்கு முன் இந்த கொள்கைகள் கொண்டு இருப்பது வியப்புதான்.


முகப் புத்தக கண்க்கு கொண்டு தரவிறக்கலாம்.

பால்ய விதவைகளின் எண்ணிக்கை 1921ல் மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்தில் சில இலட்சங்களில் இருந்ததையும் அப்புத்த்கத்தில் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் 10 வயதில் விதவைக் கோலத்தில் வாழ்நாள் முழுதும் கழிப்பதை பார்க்கும் ஒருவருக்கு வரும் கோபம்தான் பெரியாரின் அக்கருத்து. இப்படி திருமணம் செய்யாவிட்டால் என்ன,குழந்தை பெறாவிட்டால்தான் என்ன்? என்பது எனக்கு எந்த விதத்திலும் தவறாக தெரியவில்லை.பெண் ஆணுக்காக பணியாற்ற படைக்கப் பட்டவள் அல்ல.ஆணைக் கவரும் வண்ணம் உடை உடுத்தாமல் ஆண் போல் முடி வெட்டி, ஆடை அணிவதில் தவறு என்ன?

அதே காலத்தில் வாழ்ந்த காந்தி,  இவ்விடயத்தை ஒரு பிரச்சினை கருதி பலமுறை எழுதி இருக்கிறார்.


807. Widow-remarriage is no sin—if it be, it is as much a sin as the marriage of a widower is .All widowhood is not holy. It is an adornment to her who can observe it. If this sister has the courage, then let her speak out her mind to her uncle and brothers and seek their help. It they cannot assist in the marriage, then the sister will have to quit their house and take refuge in some widow-remarriage institution.
–(Translated from the Hindi Navajivan of 9-5-29.)

808. Some Brahman students told me that they cannot follow this principle, that they cannot get Brahman girls sixteen years old, very few Brahmans keep their daughters unmarried till that age, the Brahman girls are married mostly before 10, 12 and 13 years. Then I say to the Brahman youth, ‘Cease to be Brahman if you cannot possibly control yourself. Choose a grown up girl of 16 who became a widow when she was a child. If you cannot get a Brahman widow who has reached that age, then go and take any girl you like. And I tell you that the God of the Hindus will pardon that boy who has preferred to marry out of his caste rather than ravish a girl of twelve.’ –YI, 15-9-27, 314..

பாவம் திரு காந்தி பழமைக்கும்,நியாயம் இரண்டுக்கும் இடையில் தள்ளாடியாவது உண்மை சொல்கிறார்.

ஒருவரின் கருத்து இன்றும் சிலரை பாதிக்கும் போது அது விமர்சித்தால் சரி. ஏதோ ஒரு சூழலில் சொல்லும் கூற்றை திரித்து அது எப்போதும் பொருந்துவது போல் காட்டுவது தவறு.

தந்தை பெரியாரின் மீதான அவதூறுகள் அன்றில் இருந்து இன்றுவரை தொடர்வதே அவர் தமிழ் சமூகத்தின் மீது எழுப்பிய தாக்கமே.

ஒரு மனிதன் வாழும் கால நடைமுறைகளை விமர்சிப்பதும்,மாற்ற முயல்வதும் சமூக புரட்சிக்கு வித்திடுகிறது.

ஒரு மனிதர் வாழும் கால சூழல் சார்ந்து கருத்து சொல்வதும் இயல்பே.

பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டுமென்று சொல்லும்போது 'மனித இனவிருத்தி அற்றுப்போகுமே?' என்று பகுத்தறிவுக் கேள்வி கேட்கப்பட்டபோது பெரியாரின் பதில்.

" மனிதஜீவராசிகள் அற்றுப்போனால், புல்பூண்டு, விலங்கு விருத்தியடையட்டுமே. இதுவரை விருத்தியடைந்த மனிதச் சமூகம் பெண்ணுக்கு என்ன செய்து கிழித்தது? எனக்கு மனிதச்சமூகம் விருத்தியடைவது குறித்துக் கவலையில்லை, பெண்ணின் விடுதலைதான் முக்கியம்'.

நாமும் அதைத்தான் மனிதர்களை மதம் ,இனம்,மொழி சார்பற்று சமமாக நடத்தாத மதம், அரசு அமைப்புகள் தேவையில்லை எனவே கூறுகிறோம்.

பெண்களின் மக்கள் தொகை குறைவதால், மாநிலம் விட்டு மாநிலம் சென்றும்,சில சமயம் நாடு விட்டு நாடு சென்றும் பெண் தேடும் வழக்கம் இன்று வந்த சூழலை நண்பர் நம்பள்கிபதிவிட்டார்.

பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாக மாறுவதில் இருந்து விடுதலை வேண்டும் என்பதன் பொருள் இதுதான்.பெண்ணை மதிக்காத மதம்,சமூகம் அழியும் என்பதையே பெரியார் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

ஆகவெ கூற்று சுட்டும் முறையில்  பெரியாரை விமர்சிக்கும் முயற்சிகள் வரவேற்கப்படுகின்றன. அப்போதுதான் அவரின் எழுத்துகளை தேடிப்பிடித்து பதிவிட வசதியாக இருக்கும்.

பெரியாருக்கு சிலை வைத்து மாலை போடுவதால் மூட நம்பிக்கை என்கிறார்கள்.இன்றும்  சாமி சிலைக்கு அனைவரும் கருவரை சென்று மாலை போட முடியாத சூழலில் வாழ்கிறோம். இன்னும் சில உயர் சாதி சாமியார்கள் சாதி சார்ந்தே ஆசிர்வாத முறையும் இருக்கும். அதற்கு பெரியார் சிலைக்கு யாரும் மாலை போடலாம் என்பது பரவாயில்லை.

சிலைக்கு மரியாதையை விட அவரின் எழுத்துகளைப் படிக்கலாமே 
என்பதே நம் யோசனை.

பெரியார் மீது விமர்சனம் வைக்க அவர் காலத்தில் வாழ்ந்த  உத்தமர்களின் கருத்துகளை சொல்லி விமர்சிப்பது உத்தமம்.

நம் தாசு மதிக்கும் இஸ்கான் குரு பிரபுபாத பெண் 16 வயதுக்குள் திருமணம் செய்தாக வேண்டும் என் வலியுறுத்துகிறார்.

http://www.prabhupadavani.org/main/Walks/MW045.html

Pusta-krsna: In the Bhagavatam, you said that by the age of sixteen, a girl should be married, or twenty-four for a man. We were just reading that...

Prabhupada: That is the maximum.

Pusta-krsna: We were just reading that.

Prabhupada: The point is that supposing this twenty to thirty-six years is nice age... For women. But before twenty years, she is sacked, and her health is broken. What she'll produce, children? Because this is... The girls, from twelve years, thirteen years, nowadays, they begin sex.[Geneva, June 7, 1974]



இக்கால பெண்கள் 12 வயதிலேயே கெட்டுப் போவதால் சீக்கிரம், அதிகபட்சம் 16 வயதுக்குள் திருமணம் முடிக்க பிரபுபாத வலியுறுத்துகிறார்.

1974 ல் பிரபுபாத சொல்வது சரியா? 1930 ல் பெரியார் சொல்வது சரியா??

இது கூற்று சுற்றுதல் ஆக இருக்கும் வாய்ப்பினை நாம் மறுக்கவில்லை. எனவே தாஸ் திரு பிரபுபாத இக்கருத்திற்கு மாற்று சொல்லி இருக்கிறார் என மறுப்பு பதிவு இடுவார் என எதிர் நோக்குகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக