புதன், 17 ஏப்ரல், 2013

மானாட ,சிவிங்கியாட அதைக் கண்டு பரிணாம எதிர் பதிவாடலாமா???





கடவுள்: ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு போல் தோற்றம் அளிக்கும் படைப்பு முடியவில்லை என்பதால் அனைத்தும் பரிணாம வளர்ச்சி அடையக் கடவது.அப்ரக்கா தப்ரா!!1!!!! 


வணக்கம் நண்பர்களே,

நம் மீது அதீத அன்பும் பாசமும் கொண்ட சகோக்கள் பரிணாமம் பற்றி கேள்வி கேட்பதாக நினைத்து பல தவறான புரிதல்களை வெளிப் படுத்துகிறார்கள். நாம் அறிந்தவரை அவற்றை சரியான கேள்விகளாக்கி பதில் கொடுப்போம்.

முதலில் சகோ  சு.பி மனித பரிணாம படிம வரலாறு பற்றி ஏன் எழுதவில்லை என்றார். காணொளியுடன் அனைத்து விவரங்களையும் ஏற்கெனவே பதிவாக இட்டுவிட்டோம் என தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் அப்பதிவு!!


http://aatralarasau.blogspot.com/2012/10/blog-post.html


அதில் இருந்தும் கேள்வி கேட்கலாம்,அல்லது மனித பரிணாமம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொள்ளும் ஸ்மித்சோனியன் ஆய்வக சுட்டிகள் பார்க்கலாம்

http://humanorigins.si.edu/


பில்ட் டௌன் மேன் என்பது சில ஆய்வாளர்களின் புகழ் வெறியின் வெளிப்பாடு மட்டுமே.இது 1912 ல் சார்லஸ் டாவ்சன் உள்ளிட்ட சிலரால் மனிதனின் மூதாதையராக காட்டப்பட்டது. அபோது இருந்தே சில ஆய்வாளர்கள் பில்ட் டௌன் படிமம் மீது சந்தேகம் தெரிவித்தாலும்,சுமார் 40 வருடம் கழித்து பொ.ஆ 1953 ல் இது இது மோசடி என தெளிவாக்கப் பட்டது.அதன் பிறகு மரபியல் ரீதியாகவே பரிசோதிக்கும் வண்ணம், பல பரிணாம் ஆய்வுகள் வளர்ச்சி பெற்றன. ஆகவே ஒரு பில்ட்மேன் படிமம் ஏமாற்று வேலை எனவே ஏற்கிறோம். அது போன்ற பிற நிகழாமல் இருக்க இபோது பல கடினமான் பரிசோதனைகளைக் கடந்தே புதிய படிமங்கள் ஏற்கப் படும். எப்படி ஜாகிர் நாயக்கின்  நெருப்புக் கோழி முட்டை என குரான் 79.30 மோசடி மொழி பெயர்ப்பு அவரது தனிப்பட்ட குற்றமோ அதே போல் பில்ட் டௌன் மேனும் தனிப்பட்ட ஆய்வாளர்களின் குற்றமே!!!. 

ஆனால் பில்ட் டௌன் மேன் என்பது சார்லஸ் டாவ்சனின் மோசடி என் நாம்&அறிவியல் உலகம் ஏற்பது போல் ஜாகிர் நாயக்கின் மோசடி என சகோ சு.பி ஏற்பாரா?

http://en.wikipedia.org/wiki/Piltdown_Man


சகோ சு.பியின் அசுர மனிதர்கள் பதிவில் குறிப்பிடப் பட்ட அனைத்து விவரங்களுமே ஆதரமற்ற பொய்கள் என்பதால்,அவர் எழுதிய அனைத்து பதிவுகளும் தவறாகி விடுமா????.இன்னும் நிறைய சொல்ல முடியும் என்றாலும் தவிர்க்கிறேன்.


இன்னும் குரான் 79.30 பெருவிரிவாக்க கொள்கையை காட்டுகிறது,அல்லது கண்டங்கள் விலகி பிரிந்ததைக் காட்டுகிறது என பொருள் கொள்கிறார்.

டஹாஹா என்பது குரானில் ஒரு முறை மட்டுமே வருவதால் அவர்கள் என்ன பொருள் வைத்தாலும் அதனை சரிபார்க்க முடியாது?

ஏன் ஒரே நிலப்பரப்பை Allah கண்டங்களாக பிரிக்க வேண்டும்?

கண்டங்கள் விரிவடைந்தது அறிவியலின் கண்டுபிடிப்பு!!!!

அது என்னவோ அறிவியலின் சான்றுகளுக்கேற்றபடி அல்லாவின் செயல்களும் மாறுவது விந்தையிலும் விந்தை!!!

ஆகவே மத அறிவியல் என்பதை என்ன என அறிவது,புரிவது சுலபமே!!!



The triliteral root dāl ḥā wāw (د ح و) occurs only once in the Quran, as the form I verb daḥā (دَحَىٰ). The translation below is a brief gloss intended as a guide to meaning. An Arabic word may have a range of meanings depending on context. Click on the word for more linguistic information, or to suggestion a correction.

Verb (form I) - to spread

(79:30:4) daḥāhāHe spread itوَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
***
நேற்று இட்ட பதிவிலும் சில கேள்விகளை எழுப்புகிறார்.

மானிலிருந்து பரிணாமம் அடைந்ததா ஒட்டக சிவிங்கி?


இந்த தலைப்பே தவறு. வாழும் சமகால வெவ்வேறு உயிரிகள்[species] ஒன்று மற்றொன்றின் முன்னோராக இருக்க முடியாது. மான், &ஒட்டக் சிவிங்கிக்கு ஒரு முன்னோர் உயிரி என்பதே சரி.

ஒட்டக சிவிங்கி பற்றி அறிய வேண்டுமெனில் விக்கிபிடியா பார்த்தாலே போதுமே.


பரிணாமம் என்பது புவியியலுடன் நெருங்கிய தொடர்பு உடையது. ஒரு இடத்தின் சூழலுக்கு ஏற்ப விலங்குகளே பரிணமிக்கும் ,அந்த வகையில் ஒட்ட்க சிவிங்கி ஆப்பிரிக்காவில் 80 இலட்சம் ஆன்டுகளுக்கு முன் பரிணமித்தது.

கிராஃபிடே ஏன்னும் பேரினத்தில்[genus] 10 உயிரிச் சிற்றினங்களில்  ஒட்டக சிவிங்கி மற்றும்ஒகாப்பி[okapi]மட்டுமே இன்றும் வாழ்கின்றன.

கழுத்து அளவில் இடைப்பட்ட ஒரு உயிரி ஹெல்லெடோதெரியத்தின் படிமம். இது மறைந்த ஒரு உயிரி ஆகும்.


Skeleton of Helladotherium

ஆகவே சகோ சு.பியின் கருத்துகள் அனைத்தும் தவறே. இந்த தவறு ஏன் நிகழுகிறது என்றால் (உயிரி) குழு மரபியல்[poppuation genetics] என்பதின் அடிப்படையில் பரிணாமத்தை புரியாததுதான். 



சிவிங்கியின் பரிணாம் வரலாறு, புவியியல்&படிம சான்றுகள், பல வகையான விளக்கங்கள் ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டு ஆய்வுகள் அதைத் தாண்டி சென்று விட்டன. ஆகவே ஒவொன்றையும் மிகச் சரியாக அறிய  ஆரவ்முள்ளவர்கள் மட்டுமே முயற்சிக்கலாம். இதோ ஒரு எ.கா ஆய்வுக் கட்டுரை. 

http://www.bringyou.to/GiraffeEvolution.pdf

இக்கட்டுரை& அதனுடைய மூலக்கட்டுரைகள் அனைத்தும் படித்து சில முனைவர் பட்ட கட்டுரைகளே உருவாக்க முடியும்.

ஒட்டக் சிவிங்கிகளின் இயற்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகம்!!!

A Natural History of Giraffes

A Natural History of Giraffes

ஆகவே ஒட்டக சிவிங்கியின் பரிணாம வரலாறு பற்றி அறிவியல் உலகில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை பதிவு படிப்பவர்கள் அறிந்தால் போதும். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் பரிணாமம் என்பது 450 கோடி ஆண்டு வரலாறு, இதுவரை தோன்றிய பில்லியன் கணக்கான உயிரிகளின் வரலாறு!!.

இதில் ஏதோ ஒன்றைப் பற்றி கேள்வி கேட்பது சுலபம். பதில் தேடி எடுப்பது கொஞ்சம் கடினம் என்றாலும் இணையத்தில் சாத்தியமே!!. இதில் மிக கடினம் என்பது அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும் அனைவரும் புரிவதுதான்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்வது பரிணாமத்தின் மீது எதிர்ப்புக் கருத்துகள் பரப்புபவர்கள் மதவாதிகள் மட்டுமே!!!.அறிவியல் உலகில் பரிணாம நிகழ்வு என்பது முழு அளவில் ஏற்கப்பட்டட விடயம்.

பரிணாமம் என்பது நிகழவே இல்லை, இதுவரை தோன்றிய உயிரிகள் அனைத்தும் எப்படி,எப்போது தோன்றியது எனத் தெரியாது  என்பதும் மதவாதிகளின் கருத்து மட்டுமே!!!

ஆக‌வே நாம் சொல்வ‌து ப‌ரிணாம‌ம்  ம‌ர‌பிய‌ல் சார்ந்து எளிதாக‌ புரிய‌ முடியும்.

1. ஒவொரு உயிரியின் ஜீனோமும் தலைமுறைரீதியாக‌ சிறிது மாறுகிற‌து.

2.இது குறுகிய காலத்திலேயே பல்வேறு உரு அளவு,தோற்றம் போன்றவற்றில் வித்தியாசம் ஏற்படுத்துகிறது. பல குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் ஜீன்களை கண்டறிந்து ஆவணப் படுத்து உள்ளனர்.இது சிறு ப‌ரிணாமம்[micro evolution] என‌ப்ப‌டுகிற‌து. இதனை உறுதிப்ப‌டுத்தும் சான்றுக‌ள் உள்ள‌தால் யாரும் ம‌றுப‌தோ எதிர்ப்ப‌தோ இல்லை!!


3. நெடுங்காலத்தில் குழு ம‌ர‌பிய‌லின் ப‌டி ஒரு உயிரிக் குழு சில‌ சிற்றினங்க‌ளாகபிரிவதும், உரு அமைப்பு மாறுவதும் நிகழ்கிறது. இது பெரும் ப‌ரிணாமம்[macro evolution] என‌ப்ப‌டுகிற‌து. இது பல மில்லியன ஆண்டுகளில் நிகழ்வதால் மறுப்பு, எதிர்ப்பு மதவாதிகளிடம் இருந்து வருகிறது.

Macro evolution= Morphological change+ speciation

நாம் மதவாதிகளுக்கு சொல்வது இதுதான்.இனிமேல் படிம வரலாறு பற்றி எழுதி பரிணாமம் தவறு என காட்டுவது முடியாத செயல். ஏன் எனில் படிம வரலாறு தாண்டி மரபியலே[genetics] பரிணாமத்தின் அதி முக்கிய சான்றுகளாகவும், பல ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் உள்ளது.

ஜீனோம் மாறுவது உண்மை என்றாலும் இந்த மாற்றங்கள் சிற்றினமாதல்[speciation], உரு அமைப்பு மாற்றம்[morphological change] ஏற்படுத்தவே முடியாது என மதவாதிகள் ஆய்வுக் கட்டுரை ஒன்று இட்டு விட்டால் பரிணாமம் மரபியல் ரீதியாக பொய்ப்பிக்கப் பட்டு விடும்.
 
இதைச் செய்யாதவரை பரிணாம அறிவியலின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது!!! நன்றி!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக