புதன், 17 ஏப்ரல், 2013

நான்கு சிறகு கொண்ட டைனோசார்: காணொளி
Prophet Nuh a.s
 

வணக்கம் நண்பர்களே,
 
பரிணாம் எதிர்ப்பு பதிவுகள் தொடர்ந்து வருவதால் நாமும் தொடர்ந்து எத்ர்வினையாற்றும் சூழல் உருவாகிறது. சகோ ஆஸிக் அகமது ஆர்ச்சியோராப்டர் மோசடி பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.பரவாயில்லை நடுநிலையோடு எழுதி இருக்கிறார். இதனை நாம் மறுக்கப் போவது இல்லை.

நாம் எதிர்வினையாற்றுவதே அறிவியல் செய்திகளை விமர்சிக்கும் போது நடுநிலையாக இருக்க வேண்டும். தமிழில் அறியும் நண்பர்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதுதான்.

ஒரு சர்சைக்குறிய கருத்து இடப்படும் போது அதன் மறுபக்கம்,பன்முகப் பார்வைகள் அறிவது உண்மை நாடும் பகுத்தறிவாளர்களின் கடமை ஆகும். இது மட்டுமே உண்மை,மாற்றுக் கருத்துகள் அனுமதிக்கப்படாது என கூறுவது யாராக இருப்பினும் தவறே.

அந்த வகையில் இப்பதிவில் ஒரு வித்தியாசமான பறக்கும் டைனோசார் பற்றி அறிவோம்.பரிணாமவியலில்  தெரபோட் டைனோசார் ல் இருந்தே பறவைகள் உருவானதே என்பதே இப்போதைய ஏற்கப்படும் கொள்கை. அறிவியல் என்பது சான்றுகளுக்கு பொருந்தும் விள்க்கம் அளித்தல் என்பதும்,அவ்விளக்கத்தின் மூலம் செய்யப்படும் கணிப்புகள் எந்த அளவுக்கு மெய்ப்படுத்தப் படுகிறவோ அவ்விளக்கத்தின் நம்பக்த்தன்மை,ஏற்பு அதிகரிக்கும்.

சான்றுகள் மாறும் போது விளக்கமும் மாறும்.இதில் அறிவியலில் எந்த பிரிவும் விதிவிலக்கு அல்ல.அந்த வகையில் பரிணாம வளர்ச்சியில் டைனோசாரின் முன் இரு கைகளில் இறகு முளைத்தே இறக்கைகளாக மாறியது என்பதே இப்போதைய அறிவியல் கொள்கை அனைத்து பற்வைகளுக்கும் இரு இறக்கைகள்,இரு கால்கள் உண்டு,
பல புராணக் கதைகளில் சில விலங்குகள் நான்கு கால்களுடன் இரு இறக்கைகளுடன் காணப்படும். பரிணாமத்தின் படி இது சான்றுகள் அற்ற ஏற்கப் படாத ,சாத்தியமற்ற‌ விடயம் ஆகும்.
இந்திய புராண காமதேனு


இஸ்லாமிய  புராண புர்ராக் (முகமது(சல்) அவர்களை சுவனம் அழைத்து சென்ற விலங்கு.


சீன புராணக் கதை ட்ராகன்!!!

 

மனிதர்களை சுமந்து செல்லும் பறக்கும் நாலுகால் விலங்குகள் பற்றி பல புராணக் கதைகளில் உண்டு. 

இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் மைக்ரோராப்டர் என்னும் டைனோசார் படிமத்தில் நான்கு இறக்கைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதாவது பின்னங்கால்களிலும் இறகுகள் உண்டு.

இது தெர்போட்[theropod] டைனோசாரிடம் இருந்து பறவைகள் தோன்றின என்னும் கொள்கையை மாற்றுமா என்பதே விவாதம். இதை ஏன் கூறுகிறோம் என்றால் ஏற்கெனவே உள்ள கருத்துக்கு சற்று மாறான் சான்று கிடைத்தாலும் அதையும் பரிசீலித்து ஏற்கும் அறிவியல் என்பதை வலியுறுத்தவே செய்கிறோம். இந்த நான்கு இறகு டைனொசார் ஒரு விதிவிலக்காக மட்டும் இருக்கலாம், அல்லது பறவைகளின் தோற்றத்திற்கு மாற்று விளக்கம் அளிப்பினும் ஏற்கப்படும்.


கிடைக்கும் சான்றுகளை  பலர் ஒருவரை ஒருவர் சாராமல் ஆய்வு செய்து ஒத்த ஒருமித்த கருத்துகள் வருவதையே அறிவியல் உலகம் விரும்புகிறது.

ஒருவேளை எவரேனும் தவறு செய்தால் பிடிப‌டுவது இதனால்தான். ஆகவே பில்ட்டௌன் மேன்,ஆர்ச்சியோராஃப்டர் என ஒரு சில மோசடிகளை சொல்லி பரிணாம எதிர்ப்பாக காட்டுவது நகைப்புக்குரியது.

ஆகவே தவறான படிமங்களை நிரூபித்தால் அறிவியல் உலகம் ஏற்கும் என்பதால் இருக்கும் படிமங்கள் அனைத்தையும் தவறென்று நிரூபிக்க ஆய்வுகள் மேற்கொள்ள பரிணாம் எதிர்ப்பாளர்களை வேண்டி விரும்பி கேட்கிறோம்.

ப‌டிம‌ங்க‌ள் அனைத்தும் தவ‌றாகி விட்டால் ப‌ரிணாம‌ம் இல்லாமல் போய் விடும்.ப‌ற‌க்கும் டைனோசார்க‌ள் என்ப‌து டை‌னோசாரின் ஒரு உயிரிக் குழு என்றாலே ப‌ரிணாம‌ம் புரிந்துவிடும்.

அளவில‌ பெரிய‌ டைனோசார்க‌ள் உருஅளவில் குறையும் சிறுப‌ரிணாம‌மும்[micro evolution] ம‌தவாதிக‌ளால் எதிர்க்க‌ முடியாது. ஆக‌வே ப‌றவைக‌ள் என்ப‌து ஒரு வ‌கை சிறிய‌ டைனோசார்க‌ளே!!!.

இன்னும் கூட டைனோசார்கள் பறவைகளாக பரிணமித்த விடயமும் இச்சுட்டிகளில் விளக்கப் படுகிறது.

Nine links in the transition from dinosaurs to birds

http://www.talkorigins.org/indexcc/CC/CC214.html


************

இன்னும் அந்தப் பதிவில் உள்ள எச்சரிக்கை உணர்வு நமக்கு பிடிக்கிறது.

//இந்த பதிவுக்கு பதில் சொல்ல விரும்புபவர்கள் தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். "டைனாசரில் இருந்து பறவை" வந்தது என்ற யூகத்தை இந்த கட்டுரை விமர்சிக்கவில்லை (அதற்கு இத்தளத்தின் ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த கட்டுரையை பார்க்கவும்) அதனால் பதில் சொல்கின்றேன் என்று கிளம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, பரிணாம ஆய்வாளர்கள் அறிவியலுக்கு செய்த துரோகத்தை தான் இந்த கட்டுரை விமர்சிக்கின்றது. முடிந்தால் அதனை மறுத்து காட்டுங்கள். //

 
அறிவியல் ஒன்றும் புனிதப் பசு அல்ல, புகழ்வெறி பண ஆசை கொண்டவர்கள் எங்கும் எதிலும் இருப்பது போல் இயல்பானது. ஆனால் அறிவியலில் பொய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அமபலப் படுத்தப்படுவது போல் பிற வாழ்வியல் சார் விடயங்களில் நடப்பது இல்லை.

ஏதேனும் படிமத்தை யாரும் ஆய்வு செய்ய விருப்பப் பட்டால் அது நடக்கும் வாய்ப்பு உண்டு.ஆனால் பல நாடுகளில் அகழ்வாய்வு செய்தால் தங்கள் குட்டுகள் அறியப்படும் என மறுப்பார்கள்.செய்திகளும் வராது!!!

ஆகவே அறிவியலில் சில மோசடிகள் நடந்திருப்பது உண்மைதான், அதன் சரி பார்க்கும் செய்லாக்கமான ஒன்றை ஒன்று சாரா ஆய்வுகளின் மூலம் ஒத்த ஒருமித்த கருத்துகள் எட்டப்படுதல் என்பது தவறுகளை நீக்கி சரியான பாதையில் நடத்துகிறது.

இப்போது  நாமும் ஒரு மோசடியை அம்பலப்படுத்துகிறோம்.ஆனால் சகோக்கள் ஏற்க மாட்டார்கள் என்ன அது.

பைபிளில் நோவா என்ரும் குரானில் நூஹ் என்றும் அழைக்கப்படும் இறைத்தூதர் கால்த்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.அதாவது அன்பு மிக்க கடவுள் தன் சொல் கேளாதவர்களை அழிக்க ஏற்படுத்தினார்.

அதில் இருந்து கடவுளின் அடியார்  நோவா(நூஹ்)மற்றும் அவர் குடும்பம்  ஒரு கப்பல் செய்து அந்த கப்பலில் பல விலங்குகளையும் ஏற்றி தப்பிக்க வைத்தார் எனக் கூறுகின்றன மதபுத்தகங்கள்.

சரி இந்த வெள்ள‌ப் பெருக்கு ஆனது உலக முழுதும் என்பதே பொதுவான கருத்து ஆகும்.ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை என்பதால் இப்போது இஸ்லாமிய பிரச்சாரகர்கள், இது நூஹ்(நோவா) வாழ்ந்த இடத்தில் மட்டும் ஏற்பட்டது என்று  பொய் சொல்கிறார்கள்.

பாருங்கள் அண்னன் ஜாகிர் நாயக் என்ன கூறுகிறார்?? ‌


குரான் [வழக்கம் போல்] இந்த விடயத்தையும் தெளிவாக சொல்லவில்லை ஆகவே அந்த இடத்தில் மட்டும் வெள்ள‌ப் பெருக்கு வந்தது எனப் பொருள் கொள்வேன் என்கிறார்.அந்த இடம் என்றால் எங்கே என்று கேட்க கூடாது!!!!!!!!!!

ஆகவே இது மோசடியா இல்லையா என்பதை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன்!!

அறிவியலில் மோசடிகள் நடப்பது அபூர்வம்,அப்படிநிகழ்ந்தாலும் அது கண்டுபிடிக்கப்படும்,நீக்கப்படும்.ஆனால் மதவாதிகளின் புராணக் கதை மோசடிகள் மறைக்கப்படுகிறது.காலம் காலமாய் தொடர்கிறது!!!!!!!
 
நோவா கப்பல் கதைக்கு ஆதாரம் கிடையாது,ஏதோ அராஃபத் மலையில் கிடைத்த கப்பல் என்பதும் மோசடி வேலையே!!!.பதிவின் தொடக்கத்தில் உள்ள படம்!!
 
http://www.wnd.com/2010/04/146941/

இது பற்றிய நம் முந்தைய பதிவு ஒன்று.
நோவா கப்பல் கதை உண்மையா? 

ஆகவே அறிவியல் கண்டுபிடித்து சரி செய்த மோசடிகளை பட்டியல் இடும் மதவாதிகளே, உங்கள் மத புராணக் கதைகளின் உண்மைகளை நிரூபிக்க வாரீர் என அழைக்கிறோம்
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக