புதன், 17 ஏப்ரல், 2013

"மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை


"





வணக்கம் நண்பர்களே,

நகைச்சுவைப் பதிவு இடுவதில் வஹாபிகளுக்கு நிகர் எவரும் இல்லை என்பதை மீண்டும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ம(னி)தாபிமானி என்ப்படும் பதிவர் நிரூபித்து உள்ளார்.


அறிவியல் என்பது என்ன என்பதை உணர மாட்டோம், பரிணாம அறிவியலை மறுத்தாலும் , அது குரானைப் பொய்யாக்கும் என்றால் பம்மி விடுவது, ஒரு உயிரினம் என்பதை எப்படி வரையறுப்பது என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பது என பல்விதங்களில் நகைச்சுவை காட்டி வரும் வஹாபி சகோ ஆஜிக் அகமதின் லேட்டஸ்ட் பதிவிற்கு மறுப்பு சொல்ல நாத்திகர் என்னும் இடத்தில் வஹாபிகள் என்ப் போட்டால் போதுமானது.

நாம் மூமின்களிலும் எதார்த்த சூழல் சிந்திக்கும் சூஃபிக்கள் இருப்பதால் வஹாபிகளின் வரட்டுத்தன பிரச்சாரம் மட்டுமே எதிர்த்து வாதம் வைக்கிறோம்.

சவுதி அரச மதம் வஹாபியியத்தை விளம்பரம் செய்ய அங்கிருந்து முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என அறிவோம்.

சவுதி அரசை விமர்சிக்கும் எந்த செயலும் கடுமையாக ஒடுக்கப்படும் என்பதும்,சில தினங்களுக்கு முன்பு சில் ஜனநாயகப் போராளி அரபு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு 10 வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 

Saudi Arabia jails two prominent activists

Founding members of the banned Saudi Civil and Political Rights Association are sentenced to 10 years in prison.

A Saudi Arabian court has sentenced two prominent political and human rights activists to at least 10 years in prison for offences that included sedition and giving inaccurate information to foreign media.
Mohammed Fahd al-Qahtani and Abdullah Hamad are founding members of the banned Saudi Civil and Political Rights Association, known as Acpra, that documents human rights abuses.
Qahtani was sentenced to 10 years. Hamad was told he must complete the remaining six years of a previous jail term for his political activities and serve an additional five years.
They will remain in detention until a judge rules on their appeal next month.

பரம்பரை அரச உரிமை என்பது மதத்தின் படி தவறானது என சொல்லும் தைரியம் உள்ளவர்கள் சவுதியில் இருக்க முடியாது. இதுதான் வஹாபியியம்.

சரி பதிவுக்கு செல்வோம்.

 **

சவுதி அரசின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. விவாதம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இதற்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதில் இருந்து இந்த விவாதத்திற்கு இருந்த ஆர்வத்தை அறிந்துக்கொள்ளலாம். 

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் (IERA) சார்பில் ஹம்ஸா ஆண்ட்ரியசும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட இயற்பியல் ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 


மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் திருப்பி திருப்பி அதுதான் இது, யூதன் இட்டுக் கட்டியது  என்னும்வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள்.

இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ். 

"science doesn't require you to be an Muslim, I know very good scientists who aren't Muslims - 

அறிவியல் நீங்கள் முஸ்லிமாக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் முஸ்லிம்கள் இல்லை" 

அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்றோம்? அறிவியல் என்பது ஆன்மீகத்திற்கான‌ வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் முஸ்லிம் அல்லாதவர்களே. 

இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி. 
**

நாம் மாற்றிய சேர்த்த சொற்களை சிவப்பில் காட்டி இருக்கிறோம். மதவாதிகள் மத(ட) புத்தகத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு ஏமாற்று வேலை என்றாலும், அறிவியல் மதத்தை விட உயர்ந்தது என்பதால்  , அறிவியல் போல் மத புத்தகம் எனக் காட்டி இணை வைத்தாலும், காஃபிர் என்னும் சொல்லை நாத்திகர் என மொழி ஏமாற்றம் செய்தாலும் வஹாபியியத்தின் பருப்பு தமிழகத்தில் வேகாது!!.


அறிவியல் என்றால் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம்

நாத்திகம் என்றால் சான்று இல்லாத விடயத்தை ஏற்க மறுத்தல்!!!

இன்னும் இங்கே படியுங்கள்!!!

நாத்திகம் ஆத்திகம் ஒரு எளிய விளக்கம்



மதம் நிரூபிக்க அகழ்வாய்வு,மொழியியல் சான்றுகள் வேண்டும். அப்படி எதுவுமே எந்த மதத்திற்கும்,குறிப்பாக‌ வஹாபியியத்திற்கு இல்லை என கூறுகிறோம்.மதத்திற்கு வரலாற்று சான்றுகள் இருந்தால் பதிவுகள் இட்டு விவாதிக்க வேண்டுகிறோம்.

மதப்பிரிவினரிடையே கூட , இறைவனுக்கு உருவம் உண்டா?, மதபுத்தக எழுத்து பிரதிகளில் தவறு உண்டா என்னும் அடிப்படைப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து இல்லை.

முதலில் ஒருமித்த மத புத்தக[குரான்] மொழியாக்கம், ஒரே விளக்கம், துணைப்புத்தகங்ளில்[ஹதித்] மிச்சம் மீதி வடிகட்டிய தகவல்களில் ஒருமித்து கருத்து ஏற்பட்டால் மட்டுமே இஸ்லாம் ஒரே மதம் என ஏற்க முடியும். ஆகவே இஸ்லாம் என்பதை ஒரு குழு மதப் பிரிவுகள், மூலம் ஒன்றா என பரிணாம பாணியில் வினவுகிறோம். 

**
அறிவியலாள‌ர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே சீர்தூக்கி பார்த்து சான்றுகளின் அடிப்படையில் ஏற்கப்படும்.அறிவியலாளர்களின் ஆய்வு மட்டுமே பரிசோதித்து ஏற்று கற்க மட்டுமே.அது தவிர்த்து அறிவியலாளர்களின் செயல்களைப் பின்பற்றுதல் முட்டாள்தனம்.

இராக்கெட் விட நல்ல நேரம் பார்த்து இராக்கெட் விடும் விஞ்ஞானிகளும் உண்டு.இயற்கைப் பாழாக்கும் தொழில் நுடபம், மனித சமூக அழிக்கும் ஆயுதங்களை வடிவமைக்கும் விஞானிகளும் உண்டு.

அறிவியல் என்பது சமூக நலனுக்கு,பாம‌ரனுக்கும் பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.

அது தவிர 'அஆஇஈ' செய்தார் எல்லோரும் செய்வோம் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.எங்கள் 'அஆஇஈ' செய்தார்,அதனைக் கேள்வி கேட்காமல் ,பின்பற்றுவோம், பின்பற்ற முடியாத அருவறுப்புகளை வேண்டா வெறுப்பாக நியாயப் படுத்துவோம் என்பதுதானே வஹாபியம்.

உலகில் அதிக விஞ்ஞானிகள் யூதர்களே,அப்படி எனில் அது மட்டுமே சரியான மதமா??
ஆகவே அறிவியல் ஆய்வாளர்களின்  இறை நம்பிக்கை சார்ந்து , மதம் நாடுவது என்றால் யூதம் மட்டுமே சரி!!

வஹாபிகள் சிந்திக்க மாட்டார்களா??!!!.

**

பரிணாமம் உண்மை என்றால் வஹாபியியம் பொய்யாகி விடும் என்பதால் , அதனைக் காப்பாற்ற ஆஸிக் அகமது  மீண்டும் பரிணாம எதிர்ப்பு  பதிவு மட்டுமே அடிக்கடி எழுத வேண்டுகிறோம்.ஹி ஹி நாமும் மறுப்பு உடனே  இடுவோம்.

 மனிதாபிமானிக்கு கேள்விகள்.

1. ஆத்திகர் அனைவரும் சுவனம் போவாரா?

2. குரானில் பல் இடங்களில் வசை பாடப்பட்டு கரித்து கொட்டபடும் [அரபி சொல்] காஃபிர் என்பதன் பொருள் நாத்திகரா?

3.இஸ்லாமின் எந்தப் பிரிவு சரியானது? சரியான பிரிவு அல்லாதவர்கள் ஆத்திகரா,காஃபிரா,நாத்திகரா?

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தும் வழக்கம் போல் சொல்லாமல் போனால் கிடைக்கும் பலனின் எண்ணிக்கை[ ஹி ஹி அவங்கதான்} ஒன்று குறைந்து விடும்.

சகோதரி ரிசான நஃபீக்கின் கொடூர தண்டனைக்கு எழுந்த எதிர்ப்பு கண்டு பயந்த  காட்டு மிராண்டி சவுதி அரசு ,பொது இடத்தில் மக்கள் கூட்டம் முன் தலை வெட்டும் தண்டனைக்கு பதில் தூக்கு, துப்பாக்கியால் சுடுதல் என தனியான இடத்தில் தண்டனை நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது என்பது நல்ல செய்தி

Saudis 'consider nullifying' public beheading

Saudi daily Al-Watan says that a ministerial committee is considering fatal shootings as an alternative.



A ministerial committee is looking into formally dropping public beheadings as a method of execution in Saudi Arabia, a local newspaper has reported.
The authoritative daily Al-Watan said in its Sunday edition that the ministerial committee was considering fatal shootings as an alternative.
There was no official confirmation immediately available of the newspaper's report.


மாற்றம் ஒன்றே மாறாதது,சூழல் பொறுத்து மாற மறுக்கும் எதுவும் அழியும் என்பதே பரிணாம விதி!!



மதவாதிகள் விவாதத்தில் சுத்தி வளைத்து மூக்கைத் தொடு என்னும் திருப்பி திருப்பி சொல்லும் ஒரே வாதம்[ circular reasoning ] தவிர்த்து எதையும் சொல்ல மாட்டார்கள் . அது பற்றி கொஞ்சம் அறியுங்கள்!!!

Circular reasoning (also known as paradoxical thinking[citation needed] or circular logic), is alogical fallacy in which "the reasoner begins with what he or she is trying to end up with".[1] The individual components of a circular argument will sometimes be logically valid because if the premises are true, the conclusion must be true, and will not lack relevance. Circular logic cannot prove a conclusion because, if the conclusion is doubted, the premise which leads to it will also be doubted.[2]Begging the question is a form of circular reasoning.[3]


இந்த புத்தகம் சொல்வதால் , கடவுள் உண்மை.

சரி புத்தகம் எப்படி உண்மை ஆகும்?

ஏன் எனில் அது கடவுளிடம் இருந்து வந்தது!! ஹி ஹி


This is circular argument!!!!






நாம் நம் மத்வாத சகோக்கள் யாரையாவது முன்னிலைப் படுத்தினால், அவர் பரிணாம கொள்கை மீது என்ன கருத்து கொண்டு இருக்கிறார் என கண்டறிவோம். அந்தவகையில் வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கை உடைய ஆத்திகர்களை நாம் கன்டு கொள்வது இல்லை.

ஹம்ஸாவின் பரிணாமம் சார் கருத்து , அது அறிவியலில் ஒருமித்து சான்றளிக்கப்ப்ட்டு ஏற்கப் பட்ட கொள்கை என் ஏற்பதனைக் காட்டுகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களுக்கு சரியாக புரிய வைக்க முயற்சிக்க‌வில்லை என மட்டுமே கருத்து தெரிவிக்கிறார்.  



Over the past few decades there has been a growing discourse on science, evolution and its compatibility with Divine revelation. This discourse can be summarised in the following way: the theory of evolution has been established as a scientific fact therefore a believer in a particular revealed text, such as the Qur’an, must reconcile evolution with their holy book. If there is no hope for reconciliation there are three main outcomes: the religious text is discarded, evolution is renounced, or a hope for a better understanding of the religious text and evolution in the future. However, in this growing discussion there is a hidden premise. This premise is that science produces certainty, evolution is fact and science is the only way to establish or verify truth claims. This premise is assumed in the popular discussion amongst many religious people, popular scientists and even the media, and by not bringing this premise to the forefront of the debate many Muslims (and fellow theists) have been left confused and disheartened.

...
Since revealed texts are certain and science cannot produce certain knowledge, revealed texts will always supersede science if there is a need for reconciliation and if there are irreconcilable differences. For the Muslim, this revealed text is the Qur’an, and this text can be established as a Divine book outside of the method and philosophy of science using deductive arguments.

அப்புறம் சமர் சால்ட் அடித்து, குரான் இறைவன் வேதம் என்பதால், அவசியம் என்றால் மட்டும் , பரிணாம கொள்கையோடு சமரசம் செய்து கொள்வோம் என் சொல்வது நகைச்சுவை. அதாவது குரான் சொல்வது பரிணாமத்துக்கு முரண்,ஆகவே பரிணாமம் தவறு என்று சொல்ல துணிவு இல்லாமல் ஹம்சா நழுவுகிறார்.


அதாவது பரிணாமத்தை ஏற்றே ஆக வேண்டிய சூழல் வந்தால், ஹி ஹி குரானின் பொருளை வழக்கம் போல் மாற்றி அதுதான் இது என  காட்டுவோம் என்பதை மார்க்க சிந்த்னையில் உரைக்கும் ஹம்சா நன்றாக கல்லா கட்ட வாழ்த்துகிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக