புதன், 17 ஏப்ரல், 2013

மத புத்தக மதங்களை ஏன் விமர்சிக்கிறோம்?
வணக்கம் நண்பர்களே,

பெரும்பான்மை மதங்களுக்கு கடவுள் கருத்துகள் அடங்கிய மத புத்தகம் உண்டு.இவை அக்கால மதத்தலைவர்களின் மூலம் மக்களுக்கு வழங்கப் பட்டது என்பார்.

இதில் மத்திய கிழக்கு மதங்கள் தங்களின் மத புத்தகம் எக்காலத்துக்கும் பொருந்தும் சட்ட திட்டம் கொண்டது என விளம்பரம் செய்கிறார்.பிரச்சாரங்களில் அதில் உள்ள சில வசனங்களை வெட்டி ஒட்டி  , தங்களின் விளக்கம் இணைத்து அருமையான மதம் பாரீர், வந்து ஜோதியில் ஐக்கியமாகி இம்மையிலும்,மறுமையிலும் இனபம் பெற உத்த்ரவாதம் தரும் ஒரே மார்க்கம் என பல பதிவுகள் தமிழ் மணத்திலும் வருகிறது. இது நேற்றைய பதிவு. 
தயவு செய்து அப்பதிவைப் படியுங்கள்.என்ன சகோ அருமையான கருத்துகள் ,அனைவருக்கும்,எக்காலமும் பொருந்தும் வகையில்தானே இருக்கிறது!!. இதையும் விமர்சித்தால் உங்களுக்கு நாத்திக வெறி முத்தி விட்டது என பொருள் என்னும் மதச்சார்பிமையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழ் சகோக்களே!! அப்பதிவைப் படித்து விடுங்கள்!!

படித்து விட்டீர்களா!!

நாம் என்ன சொல்கிறோம்!!
மத புத்தகங்கள் ஒரு இனக்குழுவை மேன்மைப் படுத்த,அவர்கள் செய்யும் விடயங்களை கடவுள் சொல்லி செய்தோம் என் நியாயப் படுத்தி விளக்க்வே உருவாக்கப் பட்டவை. இனக் குழு தலைவர்கள் தனிமையில் இருக்கும் போது கடவுளிடம் இருந்து வந்த செய்திகளே மத புத்தகம் ஆனது என அவர்களும் சொல்கிறார்கள்.

ஆகவே 

மத புத்தகம் இனவாதம், இன மேட்டிமை[racist supremacy] பேசுகிறது.

இதனை நிரூபிக்க முடியுமா என்றால் முடியும், மத புத்தக மதங்களின் முதல் எதிரி அவர்களின் மத புத்த்கமே. அதில் அவர்கள் சுட்டும் வசனம் மேல் கீழ் கொஞ்சம் படித்தால் இப்படி ஒரு இனக்குழுவை,அதன் செயல்களை மட்டும் புகழ்பாடுவது புரியும்.

அவர்கள் சொன்ன யாத்திராகமம்,23 ஆம் அதிகாரம் முழுதும் படிப்போம். அவர்கள் சொல்லாமல் விட்ட வசனங்களை சிவப்பில் தருகிறேன்.அத்தியாயம் 23 முழுதும் படியுங்கள்.
இந்த சூழல் என்னவெனில் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூத மக்களை, அவர்களின் தலைவர் மோசஸ்[மூசா] த்ன்னிடம் கடவுள் பேசுவதாக சொல்லி, அவர்களுக்கு பாலும் தேனும் பாயும் நாடு கொடுப்பதாக சொன்னதாக கூறி அங்கிருந்து புறப்பட வைக்கிறார்.

40 வருடம் பயணித்து, இபோதைய இஸ்ரேல்,ஜோர்டான் பகுதிக்கு வந்து ,ஏற்கெனவே இருந்தவர்களை கொன்று,வென்று,ஆக்கிரமித்து நாடு அமைக்கிறார்.[இப்போதைய இஸ்ரேலின் கதையும் இதுதான்]. இது என்ன அயோக்கியத்தனம் எங்கிருந்தோ வந்து , பூர்வ குடிகளை விரட்டி ஆக்கிரமிக்கலாமா? என்றால் எங்கள் கடவுள் அனைத்தையும் படைத்தவர் அவரைக் கேள்வி கேட்காதே என மத புத்தகம் கூறும். அதனை விமர்சித்தால் மத நிந்தனை ஆகும்.

இதுதான் மத புத்தகம் கூறும் இனவாதம்!!

**
12. ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.

[அடிமைப் பெண் எனபது போரில் தோற்கடிக்கப்பட்ட பூர்வ குடிகள்]
***
13. நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.
[தோற்கடிக்கப் படவனின் கடவுளை விட வென்றவன் கடவுள் பெரிது]
****
22. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.

23. என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.

24. நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

[மத புத்தகம்[அதாவது மத குரு] சொல்வதைக் கேட்டால் தவறுகளுக்கு மன்னிப்பு, அடுத்தவன்[பூர்வ குடி] சொத்தை எடுக்கலாம்.பூர்வ குடிகளின் கடவுள் சிலைகளை உடை, தேவதூதர்கள் போரில் உதவுவார்கள்]

***
27. எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.

28. உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

29. தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,

30. நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.

31. சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

32. அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.

33. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.
***
இந்த வசனங்களுக்கு விளக்கம் தேவையில்லை!!

இப்படி மதபுத்தகம் இருப்பதற்கு இப்போதைய பிரச்சாரகர்கள் எப்படி பொறுப்பு ஆவார் என்றால், இப்படி மதபுத்தக் உண்மைகளை மறைப்பதுதான் பொறுப்பாளி ஆக்குகிறது.

மத புத்தக கதைகளுக்கு வரலாற்று சான்றுகள் இல்லை என்றாலும், அதனை அப்படியே எழுத்துக்கு எழுத்துக்கு நம்புவோரும் இருக்கிறார்.

இஸ்ரேல் என்பது யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப் பட்டது என் இன்னும் ஜியோனிச யூதர் கூறுகிறார். அவர்களுக்கு உலகில் பல கிறித்துவ அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன.மத புத்தக கருத்துகள்,சட்டங்கள் இன்னும் பிரச்சினை வன்முறைகளுக்கு வித்திடுகின்றன!!!

மத புத்தக கடவுள் என்பவர் பாரபட்சம் இல்லாமல், ஜனநாயகவாதியாக‌,மத சார்பற்றவராக இல்லையே என்பதுதான் நம் கவலை !!!!!!!!

ஆகவே மத புத்தக பிரச்சாரம் கண்டால்,அந்த அத்தியாயம் முழுதும் படியுங்கள். பிரச்சாரகர் பொய் சொல்வது தெரிந்துவிடும்.

இதுவே மத புத்தக பிரச்சாரம் மறுக்கும் வழியாகும்!!!!

மனிதனுக்கு மதம் தேவையில்லை குறிப்பாக மத புத்தக மதங்கள்!!!

1 கருத்து:

  1. jதங்களுக்கு ஒரு ஆலோசனை .சுவாமி விவேகானந்தரின் Universal religion and its realisation என்ற இரு கட்டுரைகளை தயவு செய்து வெளியிடலாமே. எந்தபுத்தகத்தையும் வேதம் என்று போற்றக்கூடாது என்று தங்களைப்போலவே விவேகானந்தரும் கூறுகின்றார்.

    பதிலளிநீக்கு