புதன், 17 ஏப்ரல், 2013

பரிணாமம் எளிய விளக்கங்கள் .Part 1வணக்கம் நண்பர்களே,

கடந்த சில நாட்களாக நாம்& சில நண்பர்கள் நடத்திய பரிணாமத்தின் ஏற்புத் தன்மை சார் விவாதம் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்க்லாம்.பரிணாமம் எதிர்க்கும் குழுவின் கட்டுரைகளுக்கு பல மறுப்புகள் எழுதி இருந்தாலும் பரிணாமம் குறித்தே ஒரு தொடர் எழுத வேண்டும்  என ஆசை உண்டு.

பரிணாமம் என்பது பல துறைகள் சார்ந்த அறிவியல் என்பதால், கணிதம் சார்ந்து எழுத முற்பட்டாலும், அதற்கு அடிப்படைக் கணிதம் விள்க்கவே நேரம் செல்லும் எனத் தோன்றியதால் குழு கணித அடிப்படை முயற்சியை பிறகு முயற்சிப்போம் என முடிவு செய்தேன்.

சரி இப்பதிவில்‍ இருந்து ஒரு தொடர் முயற்சிக்கலாம் என தோன்றுகிறது. பதிவுகள் விவாதிக்கப்பட வேண்டும், பல சார்புக் கருத்துக்களும் ஆவணப் படுத்தப்பட வேண்டும் என்பது நம் விருப்பம் என்றாலும், விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளி சார்ந்தே இருப்பதும் அவசியம். அப்படி இல்லாவிட்டால் குழப்பமே மிஞ்சும்.

இப்பதிவில் பரிணாமம் என்பது என்ன என்பதை மட்டுமே விளக்க,விவாதிக்க‌ போகிறோம்.

அறிவியல் கற்கும் ஆர்வம் உள்ள, உண்மை தேடும் மக்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாக நினைப்பதால் மட்டுமே பரிணாமம் குறித்த நமது கற்றலை தமிழ் பதிவுலகில் பகிர்கிறோம். சரி இப்பதிவில் அறிவியல் மட்டுமே சார்ந்து பரிணாமம் என்றால் என்ன? என விளக்(ங்)குவோம்.
  
ஒரு சின்ன எ.கா எடுத்துக் கொள்வோம்.

காவல்துறை ஒருவரை குற்றம் சாட்டி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்கிறது. நீதிமன்றத்திடம் ஒப்படைக்கிறது.கைது செய்யப் பட்டவர்களில் சான்று இல்லாதவரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது.

காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்கிறதா என்பதே பிரச்சினை. குற்றவாளியும் தன் தரப்பு வாதங்களை ,ஆதாரங்களை சமர்பிக்கலாம், அதுவும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.

இங்கு நீதிமன்றம் அறிவியல் உலகம். காவல் துறை, குற்ற‌வாளி பரிணாம ஏற்பு, எதிர்ப்பு குழு என எடுபோம். ஹிஹி யார் காவல்,யார் குற்றவாளி என அவரவர் விருப்பம் போல் எடுக்கவும். ஒருவர் குற்றவாளி என்பதற்கோ,குற்ற‌வாளி இல்லை என்பதற்கும் சரியான சான்று எப்படி இருக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு சீர் தூக்கி பார்க்க‌ தெரிந்தால் மட்டுமே இந்த முறை சரியாக பலன் அளிக்கும்.

அறிவியல் உலகத்தில் பரிணாமம் என்பது இப்போதைய உயிரின தோற்ற விளக்க கொள்கையாக ஏற்கப்பட்டு, பெரும்பான்மை பல்கலைக் கழகங்கள்,பள்ளிகளின் போதிக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அறிவியல் உலகத்தால் ஒருமித்து ஏற்கப்பட்ட ஒரு கொள்கையையின் மீது கற்றல்,ஆய்வு மூலம் சாதிக்கும் விருப்பினை தமிழ் உலகம் இழந்து விடக்கூடாது என்னும் நோக்கிலேயே எழுதுகிறோம்.

வைரஸ்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மருந்துகளின் தன்மை மாறுகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம்,சில வருடங்களுக்கு முன் பலன் அளித்த பென்சிலின் இப்போது பலன் அற்று போனது. கொசு விரட்டி மீதே உடகாரும் வல்லமை கொண்ட கொசு என பல பரிணாம செயல்களை,அன்றாட வாழ்வில் பார்த்தாலும் நாம் அதனை உணர்வது இல்லை. ஆகவே பரிணாமம் என்பது 100% சரியாக ஆய்வுரீதியாக சரி பார்க்கப் பட்டு ஏற்கப்பட்ட கொள்கை.

சோவியத் யூனியனின் போலி அறிவியலாளன் லைசெங்கோவின் தவறான பரிணாமம்,மரபியல் சார் கருத்துகள், செயல் படுத்தியமையால் அங்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியது என்பது வரலாறு!!!.அது உலகின் வரலாற்றை மாற்றியது!!!. அது என்ன என்பதைப் பிறகு பார்ப்போம்!!


ஆகவே தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளை மெய்ப்பிக்க முடியா அறிவியல் கொள்கை கைவிடப் படும். மாற்றுக் கொள்கை அதன் இடத்தை பிடிக்கும். சர் ஐசக் நியுட்டன் எந்த [ஈர்ப்பு] விசை ஆப்பிள் மரத்தில் இருந்து ஆப்பிளை விழச் செய்கிறதோ, அதே விசைதான் கோள்கள்,நட்சத்திர இயக்கங்களுக்கு காரணம் என முதலில் விளக்கினார்.

சில சோதனைகள் மூலம் ஈர்ப்பு விசைக்கு சூத்திரம் கண்டறிந்தார். அந்த விதியின் மூலம் பூமிக்குள் செய்த ஆய்வுக் கணிப்புகள் சரியாக இருந்ததால் ,யாரும் நியுட்டனின் ஈர்ப்பு விதியை மறுகவில்லை.அறிவியலில் சரியாக என்றால் ,கணிப்பு,பரிசோதனையின் அளவீட்டு வித்தியாசம் குறைவாக இருப்பது என்பதைப் புரிய வேண்டும்.

ஆனால் அறிவியல் முன்னேற்றத்தில் தொலைநோக்கி உதவியால் சிவப்பு விலக்கம்[Red Shift] கொண்டு சூரியக் குடுமப்த்தின் இதர கோள்களின் இயக்கங்களை கணக்கிட்டால் தவறு வருகிறது. ஆகவே சான்றுகளின் அடிப்படையில் நியுட்டனின் விதி கைவிடப்பட்டு,ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதிக் கொள்கை ஏற்கப்பட்டது. இதுவும் நம் பால்வீதி மண்டலம் தாண்டி கணக்கீட்டில் பிழை கொடுப்பதால், கருப்பு பொருள் என்னும் கருதுகோள் கொண்டு பிழையை சரி செய்ய முயற்சி நடக்கிறது. ஒருவேளை கருப்பு பொருள் என்பது இல்லை எனில் ஐன்ஸ்டினின் விதிக்கும் மாற்று கொள்கை காணப்பட வேண்டும்.மாறியது ஈர்ப்பு விசை அல்ல, ஈர்ப்பு விசையின் செயல்பாட்டு விளக்கம் மட்டுமே மாறுகிறது.

ஆகவே அறிவியல் சான்றுகள் அடிப்படையில் தன்னை சரிபார்க்கும் தொடர் இயக்கம் கொண்டது என்பதை விளக்கவே இதனைக் கூறினோம். ஆகவே பரிணாமம் என்பது இன்று வரை கடந்த ,நிகழ்கால சான்றுகளை சரியாக பிழையின்றி விளக்குகிறது.நூற்றுக் கணக்கில் ஆய்வு சஞ்சிகைகளும்[Journals],ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் வருடத்திற்கு பல புத்தகங்களும் வெளிவருகின்றன. பரிணாமம் முறைப்படி கற்க வேண்டும் எனில் கணிணியில் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும் என்னும் கால கட்டத்தில் வாழ்கிறோம் என்னும் அரிய வாய்ப்பினை கொண்டவர்கள் நாம்.

பரிணாமக் கொள்கை டார்வினுக்கும் முந்தியது.பரிணாம கொள்கையும் பல மாறுதல்களை சந்தித்து உள்ளது.

லாமார்க்கீயம், இயற்கைத் தேர்வு,நியோ டார்வினியம்,நிறுத்திய நிலைத்தன்மை,.. மூலக்கூறு பரிணாமவியல் என பலவகையான மாறுதலான விளக்கங்களைக் கண்டது.

http://en.wikipedia.org/wiki/History_of_evolutionary_thought

இவை அனைத்தையும் அடுத்த பதிவில் அதிகம் விவாதிப்போம். இங்கும் பரிணாமம் மாறவில்லை பரிணாமக் கொள்கையின் விளக்கங்கள் மட்டுமே சான்றின் அடிபடையில் மாறுகின்றன.அறிவியல் என்பது இயற்கை விதிகளுக்கு உட்பட்ட விளக்கங்களை மட்டுமே ஏற்கும் என்பதால், பரிணாம கொள்கைக்கு மாற்றம் வரும் வாய்ப்பு மிக மிக....குறைவு.

பாமர மக்களாகிய நாம் எப்படி அறிவியல் உலகம் பரிணாமத்தை ஏற்கிறது என்பதையே அறிய முயல்வோம்.பரிணாமம் குறித்த தவறான புரிதல்களையும் தவிர்த்தல் நலம்.

***
பரிணாமம் என்பது என்ன?

விக்கிபிடியாவில் இருந்து

1.Evolution is the change in the inherited characteristics of biological populations over successive generations.

2.Evolutionary processes give rise to diversity at every level of biological organisation, including species, individual organisms and molecules such as DNA and proteins.[1]

3.Life on Earth evolved from a universal common ancestor approximately 3.8 billion years ago. Repeated speciation and the divergence of life can be inferred from shared sets of biochemical and morphological traits, or by shared DNA sequences.[2]

4.These homologous traits and sequences are more similar among species that share a more recent common ancestor, and can be used to reconstruct evolutionary histories, using both existing species and the fossil record. Existing patterns of biodiversity have been shaped both by speciation and by extinction.[3]

1.பரிணாமம் என்பது உயிரினக் குழுக்களில் தலைமுறைரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

2.பரிணாம நிகழ்வினால் உயிர் அமைப்புக்களின் ஒவ்வொரு நிலையிலும்[உயிரின குழுக்கள்,தனிப்பட்ட உயிரிகள்,மூலக்கூறுகள், ஜீனோம்,... மற்றும் ப்ரோட்டீன்] பல்வேறு வகைகள் உருவாகி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. 

3.பூமியில் 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பொது நுண் உயிர் முன்னோரில் இருந்தே அனைத்து உயிரி,தாவர வகைகளும் கிளைத்து தழைத்தன.பலமுறை நிகழ்ந்த சிற்றினமாதல்[Speciation: ஒரு உயிரி பல உயிரிகளாக பிரிதல்],உயிரிகளில் ஏற்படும் வித்தியாச விலகல்[divergence of life] இதனை தோற்றுவித்தது என்பதை உயிர் வேதியியல், உரு அமைப்பு ஒப்பீடு மற்றும் ஜீனோம் ஒப்பீடுகளில் இருந்து உறுதி செய்கிறோம்.

4. ஒரு சமீப கால பொது முன்னோரில் இருந்து தோன்றிய உயிரிகளின் உரு அமைப்பு, ஜீனோம் அமைப்பு அதிகம் நெருங்கியதாக இருக்கும்.இந்த ஒப்பீடுகள்,ஆய்வுகள் மூலம், பரிணாம வரலாறு, வாழும் உயிரிகள், மறைந்த உயிரிகளின் படிம வரலாறு மூலம் கட்டமைக்கப் படுகிறது.இப்போது காணப்படும் உயிரிகளின் வகைப்படுத்தல் ஒழுங்குகள், சிற்றினமாதல், உயிரின மறைவு[Extintion] ஆகியவற்றால் ஏற்பட்டது.

பரிணாமம் என்பது என்ன என்பதன் விக்கிபிடியா விளக்க மொழியாக்கம்,ஆங்கில மூலம் கொடுத்து இருக்கிறேன். மொழியாக்க மேம்பாடு,புதிய தமிழ் சொற்கள் நண்பர்கள் கொடுக்கலாம்.

**
இந்த 4 விடயங்களையும் சரியாக விளங்குவோம். 

நாம் நமது சுற்றுப்புறத்தை அறிய முயல்கிறோம், கடந்த&நிகழ் கால நிகழ்வுகளை சான்றுகள் கொண்டு  பொருந்தும் விளக்கம் ஏற்கிறோம்.அதனைக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கணிக்கிறோம்.சான்றுகளுக்கு ஏற்ப விளக்கங்களை மாற்றுகிறோம். இது வரலாறு,அறிவியல் ஆகிய இரண்டுக்குமே சரியான உண்மை.

1.பரிணாமம் என்பது உயிரின குழுக்களில் ஏற்படும் தலைமுறைரீதியான மாற்றம்.

பெற்றோர்,குழந்தை இருவரிடையே பல ஒற்றுமை இருந்தாலும், சிறிது வேற்றுமை உண்டு. ஜீனோம் ஒப்பீட்டில் ஒருவரின் தந்தையை அறிய முடியும் என்பது பல வழக்குகளில் முடிவு காண உதவி இருக்கிறது.

பெற்றோர் ஜீனோம், குழந்தை ஜீனோம் இவற்றை ஒப்பிடும் போது சில மாற்றங்கள் இருக்கும் இதனை ம்யுட்டேஷன்[mutations] என அழைக்கிறோம். இந்த தொடர்ந்த ஜீனோம் மாற்றம் ,உரு அமைப்பு மாற்றம், ஒரு உயிரியை சில உயிரிகளாக நீண்ட கால அளவில் பிரிக்கிறது என்பதே பரிணாமம்.

பரிணாமம் என்பது இருவிதங்களில் உணரப் படுகிறது.

a). உரு அமைப்பு மாற்றம்[Morphologcal change]:சிறுபரிணாமம் 

b). சிற்றினமாதல்[Speciation]:ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிதல்

பெரும் பரிணாமம்=1+2

Macro evolution=Morphologcal change+Speciation


சராசரியாக சிற்றினமாதல்[speciation] நிகழும் கால அளவு சுமார் 30இலட்சம் ஆண்டுகள். ஆகவே நம் வாழ்வில் நேரடியாக இதனை பரிசோதித்து பார்த்தல் என்பது இயலா காரியம்.Current estimates from the fossil record and measured mutational rates place the time required for full reproductive isolation in the wild at ~3 million years on average (Futuyma 1998, p. 510). Consequently, observation of speciation in nature should be a possible but rare phenomenon. However, evolutionary rates in laboratory organisms can be much more rapid than rates inferred from the fossil record, so it is still possible that speciation may be observed in common lab organisms (Gingerich 1983).

இப்போதைய கணக்கீடுகளின் படி சிறுமாற்ற வீதம் ஆனது,இயற்கையில் முழு இனவிருத்தி விலக்கம்[reproduction isolation] ஏற்பட சராசரியாக 30 இலட்சம் ஆண்டுகள் தேவைப்படுகிறது[ஃபட்டைமா 1998 ,பக்கம் 510].இருந்தாலும் இயற்கையில் சிற்றினமாதல் என்னும் நிகழ்வு சாத்தியம் என்றாலும் அபூர்வமே.ஆய்வ‌கங்களில் இனவிருத்தி வீதம் படிம வரலாற்று ,சிற்றினமாதல் வீதத்தை விட‌,அதிகரிக்க்க வழிவகை செய்ய இயலும் என்பதால்  இதனை ஆய்வகங்களில் உறுதிப் படுத்த இயலும் (Gingerich 1983).


**
2.பரிணாம நிகழ்வினால் உயிர் அமைப்புக்களின் ஒவ்வொரு நிலையிலும்[உயிரின குழுக்கள்,தனிப்பட்ட உயிரிகள்,மூலக்கூறுகள், ஜீனோம்,... மற்றும் ப்ரோட்டீன்] பல்வேறு வகைகள் உருவாகி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. 

பரிணாமம் என்பது ஒரு மூல உயிரியில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான பலவகை உயிரிகள் தோன்றும் என்பதனை நடைமுறைவாழ்வில் உணர முடியும்.

ஓநாய், நரி, நாய் ஆகியவை ஒரே மூல உயிரிகளில் இருந்து தோன்றியவை. நாயும் ஒருவகை ஓநாய்தான்,ஆனால் எத்த‌னை வகையான நாய்கள்,ஓநாய்கள்,நரிகள் இருக்கின்றன??இப்படிப் பல வகைகள் இருப்பதை நாம் உணர்ந்தாலும் இவை அனைத்தும் ஒரே மூல உயிரியில் இருந்து தோன்றியது என்பதை உருஅமைப்பு ஒப்பீடு, ஜீனோம் ஒப்பீட்டில் நெருங்கி இருப்பதை வைத்து உறுதி செய்கிறார்கள்.

சிறுத்தை, புலி,சிங்கம்,பூனை,காட்டுப் பூனை சொல்லலாம்.

குதிரை,கழுதை,கோவேறு கழுதை, வரிக்குதிரை,..இன்னொரு எ.கா.

விலங்கினங்களின் வரிசைப்படுத்தல் என்பதே ஒருவகை பரிணாம நிரூபணமே. உரு அமைப்பில் ஒத்த இனங்களின் ஜீனோம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் என்ற கணிப்பு மிக சரியாக பொருந்துகிறது.ஒரு மூலத்தில் இருந்து கிளைத்து தழைப்பது நன்கு உணர முடியும்.பெரும்பாலும் மூல உயிரியின் படிமம் இந்த உயிரிகளின் உருஅமைப்புக்கு ஒத்து இருக்கும்.

இவை உயிரிக்கும் மட்டும் அல்ல,உயிர்க் குழு உள்ளேயும் பல வகைகள்,மூலக்கூறுகள்,ஜீனோம் என ஒவ்வொன்றிலும் இருப்பதும் பரிணாம நிரூபணமே.

பல விடயங்களில் ஒத்து ,சில விடயங்களில் மாற்றங்கள் கொண்ட பலவகை உயிரிகள்,மூலக்கூறுகள்,ஜீனோம் இருப்பதால் இவற்றுக்கு ஒரே மூலம் என எப்படி சொல்ல முடியும்? என்பது விதண்டாவாதமே!!!

ஏன் எனில் இதற்கு மாற்றாக இயற்கைக்கு உட்பட்ட எந்தக் கொள்கையும் இதனை விள்க்க இயலாது.வேறு வாய்ப்பு இல்லை.
**
3.பூமியில் 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பொது நுண் உயிர் முன்னோரில் இருந்தே அனைத்து உயிரி,தாவர வகைகளும் கிளைத்து தழைத்தன.பலமுறை நிகழ்ந்த சிற்றினமாதல்[Speciation: ஒரு உயிரி பல உயிரிகளாக பிரிதல்],உயிரிகளில் ஏற்படும் வித்தியாச விலகல்[divergence of life] இதனை தோற்றுவித்தது என்பதை உயிர் வேதியியல், உரு அமைப்பு ஒப்பீடு மற்றும் ஜீனோம் ஒப்பீடுகளில் இருந்து உறுதி செய்கிறோம்.

 இப்படி பல்வேறு வகை உயிரிகளின் பொது முன்னார் ஒரு உயிரி என்னும் கருத்தை விரிவுபடுத்தி, அனைத்து உயிரிகளும் 380 கோடி வருட முந்தைய நுண்ணுயிர்' ல் இருந்தே கிளைத்து தழைத்தன என்பதே பரிணாமத்தின் முக்கிய கோட்பாடு ஆகும்[Common ancestry]. அனைத்து உயிர்களின் ஜீனோமும் ஒரே மாதிரியான வேதிப் பொருள்களை கொண்டு இருப்பது இதனை உறுதிப் படுத்துகிறது.வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதாலும் ,மறைந்த உயிரிகளின் ஜீனோம் நம்மிடம் இல்லை என்பதாலும் மட்டுமே பல் புதிர்களை அவிழ்க்க சிரமாக இருக்கிறது. இதுவரை பூமியில் தோன்றிய அனைத்து உயிரிகளின் ஜீனோம் மட்டும் இருப்பின் பரிணாம தொடர்புகளை மிக நுட்பமாக விளக்கி இருக்க முடியும்.

சரி முதல் நுண் உயிரி எப்படி இருந்தது, எப்படி வந்தது என்பது சிக்கலான  தீர்க்கப்படாத விடயமே. இதற்கு பல கருதுகோள்கள் உண்டு என்றாலும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஒரு நுண்ணுயிரி செல்லில், இயற்கை ஜீனோமுக்கு பதில், செயற்கை ஜீனோமை வைத்து ,புதிய நுண்ணுயிர் உருவாக்கும் அளவிற்கு முன்னேறி இருப்பதால், இன்னும் சாதனை தொடரும் என்வே எதிர் நோக்கலாம்.

Synthetic Genome+Natural Cell=New Life?

Craig Venter has taken yet another step towards his goal of creating synthetic life forms. He’s synthesized the genome of a microbe and then implanted that piece of DNA into a DNA-free cell of another species. And that…that thing…can grow and divide. It’s hard to say whether this is “life from scratch,” because the boundary between such a thing and ordinary life (and non-life) is actually blurry. For example, you could say that this is still a nature hybrid, because its DNA is based on the sequence of an existing species of bacteria. If Venter made up a sequence from scratch, maybe we’d have crossed to a new terrain.

**
4. ஒரு சமீப கால பொது முன்னோரில் இருந்து தோன்றிய உயிரிகளின் உரு அமைப்பு, ஜீனோம் அமைப்பு அதிகம் நெருங்கியதாக இருக்கும்.இந்த ஒப்பீடுகள்,ஆய்வுகள் மூலம், பரிணாம வரலாறு, வாழும் உயிரிகள், மறைந்த உயிரிகளின் படிம வரலாறு மூலம் கட்டமைக்கப் படுகிறது.இப்போது காணப்படும் உயிரிகளின் வகைப்படுத்தல் ஒழுங்குகள், சிற்றினமாதல், உயிரின மறைவு[Extintion] ஆகியவற்றால் ஏற்பட்டது.

இரு ஒத்த உரு அமைப்பு கொண்ட வாழும் உயிரிகளின் ஜீனோம் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவை பொது முன்னோரில் இருந்து எப்போது பிரிந்த்ன என்பதையும் கண்க்கிட முடியும். இது ஜீனோம் கடிகாரம் எனப்படுகிறது. இந்த கண்கீட்டு காலம் அருகில் இவற்றின் பொது மூல முன்னோரின் படிமம் இருக்கும்.கால‌ வித்தியாசம் வந்தால் ஜீனோம் கணக்கீட்டை விட படிம காலமே ஆதாரப் பூர்வமாக எடுக்கப்படுகிறது.

இந்த கணக்கீடுகள் கொண்டு பரிணாம மரம் கட்டமைக்கப் பட்டது. ஒவ்வொரு வாழும் உயிரியின் வரலாற்றை, முதல் நுண்ணுயிரி வரை அறிய முடியும்.

பரிணாமம் என்பது உயிரின 380 கோடி வருட வரலாறு. இதற்கு பல சான்றுகள் உண்டு.ஆய்வ‌கங்களில் பரிணாம பரிசோதனைகளில் ஜீனொம் மாற்றம் உரு அமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவது நன்கு ஆவணப் படுத்தப் பட்டு உள்ளது.

http://genome.cshlp.org/content/17/6/682.full
Figure 1.

பெரும்பரிணாமம் என்ப்படும் ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிவது மட்டும் அதிக காலம் எடுக்கும் செயல் என்பதால்  நுண்ணுயுரி,பழ ஈக்களில் நடைபெறுகிறது. பல சான்றுகள் இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே உள்ளன. பெரும்பரிணாம பரிசோதனை சான்றுகள் பற்றியே மீண்டும் இத்தொடரில் எழுதுவோம்.

இப்பதிவில் இதோடு நிறுத்துவோம். பரிணாமம் பற்றிய எளிய விளக்கம், ஆதரவு சான்றுகள் பற்றி மட்டுமே பார்த்து இருக்கிறோம். எதிரான வாதங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நண்பர்கள் இந்த பதிவு தொடர்பாக மட்டுமே கேள்வி கேட்க வேண்டுகிறோம்.
பரிணாமத்தின் எதிரான ஆதாரமாக வைக்கப் படும் விடயங்கள் மேல் அடுத்த பதிவில் விவாதிப்போம்.
நன்றி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக