ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மதவாதிகளே பதில் சொல்லுங்கள் ! -8

 



பூமியைப் படைக்க இரண்டு நாள்கள். ஏழு சொர்க்கங்களைப் படைக்க இரண்டு நாள்கள். அனைவருக்கும் அனைத்து வகை உணவுகளையும் ஏற்பாடு செய்ய நான்கு நாள்கள். ஆக, எட்டு நாள்களில் அல்லா தன் படைப்புப் பணியை முடித்ததாக குர்ஆர் வசனங்கள்(சூரா 41) கூறினாலும் வேறொரு இடத்தில் (சூரா 50) ஆறே நாள்களில் அத்தனையும் முடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கணக்கை நம்புவது என்பது குழப்பத்தில் இருக்கிறது.ஆனாலும் நிறைய பேர் சலாம் சொல்லிக் கொண்டு உள்ளனர். நெற்றி வடு, தழும்பு யாருக்கு அகலமாக, அதிகமாக உள்ளது என்பதில் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்.
குர் ஆனுக்கு மூலமான பழைய ஏற்பாடு நூலில் கடவுள் சும்மா பேசினார் அனைத்தும் ஆகின எனக் கூறப்பட்டுள்ளது. முதலில் சொர்க்கங்கள், பிறகு பூமி. இருளில் பூமி இருந்ததால் வெளிச்சத்தை உண்டாக்கியதாம். பகலும் இரவும் உண்டானதாம். இது முதல் நாளில்.
எங்கும் நீர். (எப்படி வந்தது? யார் படைத்தது?) நீரிலிருந்து நீரைப் பிரிக்க கர்த்தர் கட்டளையிட்டது. விரிந்த வானம் தோன்றியது இரண்டாவது நாளில்.
நீர் வானத்திலிருந்து ஓரிடத்தில் கூடட்டும்; வறண்ட தரை உண்டாகட்டும் என்று கர்த்தர் கூறியதும் அவ்வாறே ஆகின. நீரைக் கடல் என்றும் தரையை நிலம் என்றும் அழைத்தது. பின்னர் நிலத்தில் தாவரங்கள் முதலில் விதையுள்ளவை, அடுத்து மரங்களும் விதையுள்ள பழங்களும். இது நடந்தது மூன்றாம் நாளில்.
இரண்டு ஒளி விளக்குகள் ஆகின; நிறைய வெளிச்சம் தருவது பகலுக்கும், குறைந்த வெளிச்சம் தருவது இரவுக்கும் என்று ஆகின. பிறகு நட்சத்திரங்கள் வந்தன. இவை நான்காம் நாளில் நடந்தன.
கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள் அய்ந்தாம் நாளில் ஆகின.
கால்நடைகள், விலங்கினங்கள், கொடிய மிருகங்கள் எல்லாம் வந்தன.
பிறகு கர்த்தர் தன்உருவைப் போல, மனிதனைப் படைத்து எல்லா உயிரிகளையும் அவனே ஆளுமாறு ஆக்கியது. ஆறாம் நாளில். பெண் படைக்கப்பட்டதும் ஆறாம் நாளில் கடைசியாக!
ஆணையும் பெண்ணையும் ஆசீர்வதிக்க ஆண்டவன் செழிப்பாக வாழ்ந்து பல்கிப் பெருகுவீராக என்றும் வாழ்த்தியது. ஆறே நாள்களில் அனைத்தும் முடிந்து விட்டன. ஏழாம் நாளில் எந்த வேலையும் செய்யாமல் கர்த்தர் ஓய்வு எடுத்துக் கொண்டது (என்ன களைப்போ?) ஏழாம் நாள் புனித நாள், அது ஓய்வெடுத்த காரணத்தினால்.
இந்து மதத்தில், உலகப் படைப்பும் உயிர் உற்பத்தியும் ஒன்பது புராணங்களில் கூறப்படுகிறது. ஒரு புராணப்படி,தண்ணீரில் முட்டை, முட்டையில் விஷ்ணு, விஷ்ணுவால் பிரம்மா வந்தது, பிறகு பிரம்மா படைக்கத் தொடங்கியது எனக் கூறப்பட்டு உள்ளது. ஏழு கடல்கள், ஏழு நிலப் பகுதிகளைப் படைத்ததாம். அதன் உடலிலிருந்து பல வகை உயிர்கள் தோன்றினவாம். ஏழு உலகங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக தட்டுகள் போல் அமைத்ததாம். இப்படியாகப் போகிறது படைப்புத் தொழில்.
மதவாதிகள் அளந்தது இருக்கின்ற இந்த உலகம் பற்றியதும், இல்லாத மேல் உலகம் பற்றியதும்தான். ஆனால் பேரண்டம் (பிரபஞ்சம் - Universe) உலகத்தைப் போல் மிக, மிக, மிக(எத்தனை மிகவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்) பெரியது. 15 அல்லது 20 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆண்டுகளுக்கு முன் உருவானது. பெருவெடி (Big Bang) எனப்படும் நிகழ்வுக்குப் பின் உருவானது என்கிறது அறிவியல்.
கலீலியோவின் கண்டுபிடிப்புகளைக் கண்டித்து, அவரைத் தண்டித்த கத்தோலிக்க மதத் தலைமை(போப்)1992 இல் தனது நிலையைச் சரி செய்து கொண்டு அவருடைய கருத்தை ஏற்றது. போப்ஜான் பால் II இதற்கான முன் முயற்சியை எடுத்தார். அண்டவெளி அறிவியலாளர்கள் பலரையும் அழைத்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அதன் முடிவில் போப் அவர்களைச் சந்தித்தார். பெரு வெடிக்குப் பிறகு,உலகின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராயலாம்; ஆனால் பெருவெடி பற்றி மட்டும் ஆராய வேண்டாம், ஏன் எனில் அதுதான் படைப்பு தொடங்கியதும் கர்த்தரின் வேலை ஆரம்பமானதுமான நேரமாகும் எனக் கேட்டுக் கொண்டார் போப்!
என்ன அர்த்தம் இதற்கு? கடவுளின் மடியில் கை வைக்காதீர்கள், எங்கள் மதம் பிழைப்பு போய்விடும் என்றுதானே கவலை? மக்களைத் தொடர்ந்து மவுடீகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோமே, என்கிற உணர்வேவரவில்லையே! ஸ்டீபன் ஹாகிங் தம்முடைய A Brief History of Time என்கிற நூலில் போப் விவ-காரத்தை (பக்கம் 122) எழுதி அம்-பலப்படுத்தி உள்ளார். இந்தப் பேரண்டத்தின்எல்லை, எல்லையில்லாதது (The Boundary condition of the Universe is that it has no boundary) எனக் குறிப்பிட்டுள்ள ஹாகிங், பேரண்டம் தன்னுள் அனைத்தையும் அடக்கியுள்ளது. வெளிப் பொருளுக்கு வேலையில்லை. பேரண்டம் படைக்கப் படவும் இல்லை, அழிக்கப்படவும் முடியாதது எனத் தெளிவாக நிறுவியுள்ளார்.
ஹாகிங் கேட்ட கேள்வி இதுதான்: படைத்தவனுக்கான இடம் எங்கே?
மதவாதிகளே பதில் சொல்லுங்கள்.
விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்கப்படும் எல்லா உண்மைகளும், அவற்றிலிருந்து கிடைக்கும் எல்லா பயன்களும் இறைவனின் அருட்கொடைகளே ஆகும் என்று எழுதி மாய்மாலம் செய்யலாமா, மதவாதிகள்?
அறிவியல் ஆய்வுகளின்படி, பேரண்டம், உலகம், கடல்கள், மலைகள் போன்றவை எப்படி உருவாகின என்பதைப் பார்க்கலாம். பேரண்டம், 1500 அல்லது 2000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒளிகூடப் புகமுடியாத குழம்பாக (Opaque Plasma) பிழம்பாக இருந்தது. இதனை ஆதி வெப்பப் பந்து (Primordial Fire Ball) என அறிவியல் குறிப்பிடும். இதில் மிக ஆற்றல் வாய்ந்த ஃபோட்டான், புரோட்டான், எலெக்ட்ரான் ஆகியவை முட்டி மோதிக் கொண்டிருந்தன. பெருவெடிக்கு பத்து லட்சம் ஆண்டுகள் கழிந்த பிறகு, புரோட்டான்களும், எலெக்ட்ரான்களும் இணைந்து ஹைட்ரஜன் அணுக்களாகியிருக்கின்றன. ஆயிரம் கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய வெளி உருவாகி இருக்கிறது. நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போய்விட்ட விண்மீன்களிலிருந்து இது உருவாகியது. தற்போதுள்ள சூரியன் மிகவும் வயதில் குறைந்த நட்சத்திரம். சுமார் 500 கோடி ஆண்டுகள் வயதுள்ளது.
ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களைத் தவிர்த்த ஏனைய பொருள்கள் எல்லாம் ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்டவைதான். சூரிய வெளி தூசும், வாயுவும் அடங்கிய வெளிதான். இதைத்தான் சூரிய நெபுலா என அறிவியல் அழைக்கிறது.
ஏனைய உள்கோள்களான மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய் ஆகியவை தூசுத் துகள்கள் ஒன்று சேர்ந்ததால் குளிரடைந்து கோள்களாக (Planetesimals) அதன் பின்னர் பெரும் கோள்களாக (Protoplanets) உருவாகின. வெளிப்புறக் கோள்களான ஜூபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை நெபுலா உடைந்து வாயு வளையங்களாக வும் பனிக்கட்டித் தூசுகளாகவும் மாறி, பிறகு ஒன்றாகக் கூடி, பெரும் கோள்களாக மாறின. நெபுலாவின் மய்யத்தில் ஏற்பட்ட சேர்மானங்களினால் உருவானதுதான் சூரியன்.
----------------------தொடரும்..., சு.அறிவுக்கரசு அவர்கள் 12-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! -7

 




நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...
மதவாதிகள் பதில் சொல்வார்களா?
ஈசா(யேசு)வின் பிறப்பு பற்றி மரியத்திடம் (மேரி) மலக்குகள் கூறியபோது, மரியம் கேட்டாராம் , என்னை இதுவரை எந்த ஆணும் தொட்டதில்லையே, அப்படியிருக்க நான் எப்படிக் குழந்தைக்குத் தாயாக முடியும் என்று கேட்டாராம். (சூரா 3_47). (அதற்கு) அவன் கூறினான், அப்படித்தான் அல்லா தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால் அவன் அதனிடம் ஆகுக எனக் கூறுகிறார். உடனே அது ஆகிவிடுகிறது (அதே சூரா.)
(நினைத்ததை... முடிப்பவன்... நான்... நான் என்று சினிமாப் பாடல் பாணியில் கடவுள் செயல்படுவாராம்.)
நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்) என்று கூறினார். (கூறியவர் கடவுளால் அனுப்பப்பட்ட ஜிப்ரயீல்.
அதற்கு அவர் (மரியம்) எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும் நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்? என்று கூறினார்.
அவ்வாறேயாகும். இது எனக்கு மிகவும் சுலபமானதே. மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம். இது விதிக்கப்பட்ட விசயமாகும் என்று உம் இறைவன் கூறுகிறான் எனக் கூறினார்.
அப்பால், மரியம் ஈசாவை கருக் கொண்டார். பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தைச் சென்று அடைந்தார் (சூரா 19. 17, 1, 19, 20,21, 22).
கன்னிப் பெண்ணுக்குக் கல்யாணம் நடக்காமலே குழந்தை பிறந்துவிட்டது. இதைப் பற்றி மார்ட்டின் லூதர் (இவர்தான் லுத்தரன் சர்ச் எனும் கிறித்துவப் பிரிவுக்குக் காரணமானவர்) கூறினார்: இந்தக் குழந்தை மேரிதான் தாய் என்று நாங்கள் நம்பினால், உலகத்தாரின் முன்னால் கிறித்துவர்களாகிய நாங்கள் முட்டாள்கள் ஆவோம். இக்கதை அறிவு வாதத்திற்கு எந்த வகையிலும் ஒத்து வராதது. கர்ப்பமுற்று பல்கிப் பெருகுவீராக என்று ஆதாமையும், ஏவாளையும் வாழ்த்திய(?) கடவுள் இப்படிப்பட்ட முறையில் பிள்ளைகள் பெறுவதை எப்படி ஏற்க முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார். பதில் கிடைக்கவில்லை.
எல்லா மனிதர்களும் இறந்தபின் செத்துப் போனவர்களையெல்லாம் எழுப்பித் தீர்ப்பு வழங்குமாம் கடவுள். இந்நாளை கியாமத் நாள் என்கிறது குர்ஆன். அன்றைய நாளில் புதைக்கப்-பட்ட இடங்களிலிருந்து எல்லா பிணங்களும் எழுந்து வெட்டுக் கிளிகள் பறப்பதைப் போல் பறந்து கூடுமாம். நிற்கும் நாள், பிரிந்து நிற்கும் நாள், பகுத்துப் பிரிக்கும் நாள், விழிப்பு உணர்வு நாள், தீர்ப்பு நாள் என்று பல வகைகளைக் குர்ஆன் கூறுகிறது.
நியாயத் தராசில் அவரவர் செய்த பாவ, புண்ணியங்கள் எடை போடப்பட்டு சொர்க்கத்தில் நிலையான வாழ்வோ, நரகத்தில் கொடுமைகளை அனுபவிப்பதோ தீர்ப்பாகக் கூறும் கடமையைக் கடவுள் செய்யுமாம். சிலரை உயிர்ப்பித்து மீண்டும் உலவ விடுமாம். அழுகிய சதை, மட்கிய எலும்பு, வற்றிப் போன இரத்தம், அறுந்துபோன நரம்பு இவைகளைப் புதுப்பித்து உயிர்ப்பித்து நடமாடச் செய்யும் கடவுள், புதிதாக மனிதனைப் படைத்திடும் ஆற்றலை இழந்து விட்டதா?
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய அல்லா அவற்றைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான். இதில் சந்தேகமே இல்லை. எனினும் அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை என்று சூரா 17_ 99 மூலம் பதில் கிடைக்கிறது.
எனவே கியாமத் நாள் இறுதியான நாள் அல்ல என்ற முடிவுக்குத்தானே வர முடியும்?
குர்ஆன் காட்டும் வழி என்பது மனிதர்களை அச்சுறுத்தும் வழியே! தன் வழிக்கு வராதவர்களை, வேறு வழியைப் பின்பற்றுபவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறது. தன் வழியில் இருப்பவர்களையும் சாகும் வரை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டே இருக்கிறது. கடவுள் சர்வசக்தி படைத்த எஜமானாகவும் மனிதன் தினம் தினம் பயத்தினால் மடிந்து கொண்டே இருக்க வேண்டியவனாகவும் இசுலாத்தின் மதக் கொள்கையும் நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன என்று சர். ஹாமில்டன் கிப் குறிப்பிட்டது இங்கே கவனிக்கத் தக்கது.
அருளாளன் எனப் புகழப்பட்டாலும் குறிக்கப்பட்டுள்ள தண்டனைகளைப் பார்க்கும் போது, அதற்குத் தகுதியற்ற ஆளாகவே, கடவுள் தென்படுகிறது. அச்ச உணர்வு ஒழுக்கச் சிதைவை ஏற்படுத்துகிறது. திருட்டுக்கு வலது கையை வெட்டு, இரண்டு முறை திருடினால் இடது பாதத்தை வெட்டு என்கிற தண்டனை காட்டுமிராண்டி காலத்தை நினைவு படுத்துகின்றது. கடும் தண்டனையினால் குற்றம் தொடர வாய்ப்பு இருக்காது என வாதம் செய்தால் இரண்டாம் திருட்டுக்கு தண்டனை மூன்றாம் திருட்டுக்குச் சிறைத் தண்டனை என விதித்திருப்பது எப்படி எனக் கேட்டால்... என்ன பதில் கூறுவார்கள்?
------------------------- சு. அறிவுக்கரசு அவர்கள் 11-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

கந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?

 


பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வதேன்?

சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும் விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.

ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.

விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்து விட்டார்களே என்று ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாக போகக்கடவது என்று பார்வதி தேவியார் சாபமிட்டாளாம். மற்றும் தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீது பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.

ஆதாரம்: வால்மீகி இராமாயணம்
(கடைசி வரி..... எவ்வளவு காட்டுமிராண்டிச் சிந்தனை! இராமாயணத்தை படித்தால் இந்தப் புத்திதான் வரும்)
நாட்டை மன்னர்கள் மாறி மாறி ஆள்கிறார்களே, ஏன் தெரியுமா? இதுவரை தெரிந்து கொள்ளாத ஒரு சங்கதியை இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்.
அதுவும் கந்தசஷ்டி கொண்டாடப்படும் நாளில் (அய்ப்பசி 14 - அக்டோபர் 31) தெரிந்து கொள்ள வேண்டாமா?
நவராத்திரி முடிந்தது, தீபாவளியும் கழிந்தது அடுத்து சுரண் டலுக்கு வழி தேட வேண்டாமா?
வந்துவிட்டது - ஆம், வந்து விட்டது கந்தசஷ்டி! கந்தன், சுப்பிரமணியன், முருகன், ஆறுமுகன் எல்லாம் ஒரு பொருள் பன்மொழிகள்!
ராமநவமி, கிருஷ்ணன் அஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என்பது போல கந்தன் சஷ்டி - அற்றவன் கடவுள் பிறப்பு, இறப்பு என்று சொல்லிக் கொள்வார்கள்; ஆனால் கடவுள்களின் பெரிய ஜாபிதா அதற்குப் பிறந்த நாள்கள் - இதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் மகாமகா கூத்து.
வழக்கம்போல ஓர் அரக்கன் வர வேண்டாமா? அவன்தான் சூரபத்மன். அரக்கனைக் கொல்ல கடவுளைப் பிரார்த்திக்க வேண்டாமா?
சிவனை வேண்டினர் - கடவுளாக இருந்தாலும் உடல் சேர்க்கை வேண் டாமா? சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர் - ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் நடந்ததாம்.
இதற்கு மேலும் பிண்டம் தரித்தால் நாடு தாங்காது என்று தேவர்கள் முறை யிட்டு நிறுத்தும்படிக் கெஞ்சினார்களாம்.
அதன் விளைவு வீரியம் ஆறாகப் பெருக்கெடுத்ததாம். தேவர்கள் கைகளில் ஏந்தி குடித்ததால் கர்ப்பம் அடைந்தார்களாம். காஞ்சீபுரத்தில் உள்ள கரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கிக் கர்ப்பம் கலைந்தனராம்.
மீதி வீரியத்தை கங்கையில் கொண்டு போய் விட்டனராம். அது ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடி ஆறு குழந்தைகள் ஆயிற்றாம்.
ஆறு பெண்கள் பால் கொடுக்க வந்தார்களாம். ஆறு பெண்கள் பால் கொடுப்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறு பேர்களையும் ஒன் றாக அணைத்துப் பால் கொடுக்கையில் முகம் ஆறாகவும் (தலைகள்) கைகள் பன்னிரெண்டாகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம்.
இதில் வடமொழியில் ஸ்கந்தன் என்றால் இந்திரியம் என்று பொருள் - சிவனின் இந்திரியத்திலிருந்து பிறந்ததால் ஸ்கந்தன் - கந்தன் என்று பெய ராம்.
இப்படிப் பிறந்த ஆபாச பேர் வழிக்குத்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அதுவும் ஆறு நாள் விரதம் இருந்து கொண்டாட வேண்டும்.
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர் சோலை ஆகிய இடங்களில் கந்தசஷ்டி என்ற பெயரால் பகல் கொள்ளை பக்தர்களிடமிருந்து!
அர்த்தமுள்ள இந்து மதம் இதுதான் - தனக்குரிய வீரியத்தைப் பூமி தேவி தாங்கியதால் பார்வதிக்கு மகா மகா கோபம் பீறிட்டுக் கிளம்பி சாபம் விட்டாளாம்.
உன்னை மாறி மாறி அரசர்கள் ஆளக் கடவது என்பதுதான் அந்தச் சாபமாம்!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகளே. இந்தக் கந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?
--------------------”விடுதலை” 29-10-2011

பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிறார்களே - அதன் சமாச்சாரம்தான் என்ன? கங்காதேவி மாதவிடாயின்போது கசிந்த ரத்தம் சிவபெருமான் நெற்றியில் வடிவதுதான் இந்தக் குங்குமமாம்


 

இந்து மதத்தில் அ தொடங்கி ஃ முடிய உள்ள எல்லாச் சமாச்சாரங்களும் ஆண் - பெண் உடற்சேர்க்கை பற்றிதான்! தனிமையில் பாதுகாக்கப்படும் நாகரிகமாகக் கருதியவற்றை நடுவீதியில் அம்மணமாக்கிக் கொண்டாடு வதுதான் இந்து மதத்தின் இழிவும் - ஆபாசமும் நெளியும் தத்துவார்த்த சாக்கடையாகும்.

திருநீறு என்றாலும், சந் தனம் என்றாலும், நாமம் என்றாலும், இத்தியாதி இத் தியாதிதான். பெண்கள் நெற்றி யில் வைத்துக் கொள்கிறார்களே - அதன் சமாச்சாரம்தான் என்ன?

சிவபெருமான் என்ற இந்து மதக் கடவுளின் இடுப்பில் பார்வதியும், தலையில் கங்கை யும் மனைவிகளாக உள்ளனர் - தலையில் உள்ள கங்காதேவி மாதவிடாயின்போது கசிந்த ரத்தம் சிவபெருமான் நெற்றியில் வடிவதுதான் இந்தக் குங்கும மாம்.

இந்தச் சிவபெருமான் இருக்கிறானே... அசல் காட்டு மிராண்டி. இதுகுறித்து தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

புலித்தோல் அரைக்கு இசைத்து

வெள்ளருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடி பூசி

கொன்றைப் பூச்சூடி

தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி

எலும்பு வடம் தாங்கி

மான், மழு, ஈட்டி,

சூலம் கைப்பிடித்து

கோவண ஆண்டியாய்

விடை(மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக்கொண்டு

பேயோடு ஆடுகிறவன்

காட்டுமிராண்டியாய் இல்லாமல்

நகரவாசி - நாகரிகக்காரனாக

இருக்க முடியுமா?

(விடுதலை, 18.7.1956)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளதில் ஒரு கால் புள் ளியை மறுக்கத்தான் முடியுமா?

அப்படிப்பட்ட காட்டு மிராண்டிக் காலத்தில் எந்த அளவுக்கு அறிவு இருந்ததோ அந்த அளவுக்குத்தான் இது போன்ற குங்குமக் கதைகளைப் புனைந்திருப்பார்கள்.

புராணப் பிரசங்கிகள் என்ன கூறுகிறார்கள்?

மலட்டு நிலத்தை மாத விலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின், விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாதவிலக்கு சினைப் படும் வளத்தை அறிமுகப்படுத்து வது என்பது உண்மையே! இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளையில் ஏற்படும் இரத்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்னும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக பெண்கள் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.

(செ. கணேசலிங்கம் எழுதிய பெண்ணடிமை தீர... எனும் நூலிலிருந்து)

எப்படி இருக்கிறது இந்து மதத்தின் ரசனையும் - புத்தியும்1

இப்பொழுது நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு இந்த அய்தீகம் தெரியுமா என்றால், தெரியாது தான். உடுத்திக் கொள்ளும் உடை, செருப்பு இவற்றிற்குப் பொருத்தமாக (ஆயவஉ) வண்ண வண்ணப் பொட்டுகளை நெற் றியில் வைத்துக் கொள்கின் றனர்.

இதுகுறித்து பிரபல தோல் நோய் வல்லுநர் மருத்துவர் தம்பையா கூறுவதைக் கவனிக்கவேண்டும்.

நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். 15 வருடங்களுக்கு முன் பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சுது. நவீன உலகத்தில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்ஸ் கலக்கப்படுகின்றன - இதனால் தோலில் பிரச்சினைகள் ஏற் படுகின்றன. முதலில் குங்குமம், விபூதி இடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குவேன் என்று பிரபல மருத்துவர் தம் பையா கூறியுள்ளார் (ஜூனியர் விகடன், 26.10.1997).

குங்குமக் கதை எதில் தொடங்கி எதில் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா?

கடவுள்

 

1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.


2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர்களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.

4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.

6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.

7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாக்கவும் கட்டப்பட்டதாகும்.

8. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது.
ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.

10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

http://viduthalai.in/new/page-7/5214.html 

பக்தர்களே, சிந்திப்பீர்-தந்தை பெரியார்

 

கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது - அரூபி என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே; எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.

பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?

அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இவ்வாண்டு சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?

ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

நேற்று மாலை ஏட்டில் ஒரு தகவல் வெளி வந்துள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (23) ரங்கசாமி (28) கந்தசாமி (45) பூமிநாதன் (30) ஆகிய தொழிலாளிகள் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்குச் செல்லுவது வழக்கம். அதே போல நேற்றுமுன்தினம் கிரிவலத்துக்குச் சென்றனர்.

கிரிவலத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பினர். சொந்தவூரில் ஆட்டையாம் பட்டிக்கு அவர்கள் நடந்து சென்றபோது சாலையைக் கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் வேகமாக வந்த வாகனம் மோதி நான்கு பேரும் தூக்கி எறியப்பட்டு பரிதாபகரமான முறையில் பலியானார்கள் என்ற சேதி வெளிவந்துள்ளதே.

அதே ஏட்டில் இன்னொரு சேதியும் வெளி வந்துள்ளது. பொள்ளாச்சியை யடுத்த ஆனைமலை மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக லக்சம்பட்டியைச் சேர்ந்த 27 பேர் ஒரு வாகனத்தில் (18.2.2011) ஆனைமலைக்குப் புறப்பட்டனர்.

விடியற்காலை 3.30 மணிக்கு உடுமலையைத் தாண்டி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக 4 பெண்கள் சித்ரா (28), கலைச்செல்வி (29), சாந்தி (35), வெள்ளையம்மாள் (35) ஆகியோர் அதே இடத்திலேயே துடிதுடித்துச் செத்தனர். 8 ஆண்களும், 6 பெண்களும் பலத்த காயம் அடைந்தனர் என்று ஒரே நாளில் இரு கோயில்களுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் பரிதாப கரமாகப் பலியானார்களே - இதுபற்றி பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?
சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?

கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?

தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால், அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?

பக்தர்களே, சிந்தியுங்கள்!

பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!

வீணாய் அறிவையும், பொருளையும், காலத்தையும், உயிரையும் பாழாக்காதீர்கள்!
கடவுளை மற - மனிதனை நினை

- தந்தை பெரியார்
http://viduthalai.in/new/page-2/3773.html 

இராமாயண காலம் - பொய்

 

இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

புத்தர் பிறந்து இன்றைக்கு 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப்பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:-
(சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)

1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங் களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)

2. ராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.

(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத் தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும்.

இந்துக்களே, ஒன்று சேர்வீர்! என்று சொல்லும் கூட்டமே! முதலில் வடகலையும், தென்கலையும் ஒன்றாகச் சேர்க்க முடிந்ததா?

 

இந்துக்களே, ஒன்று சேருங்கள் என்று சொல்லும் இராமகோபாலன் கூட்டமே முதலில் வடகலையையும், தென்கலையையும் உன்னால் ஒன்றாக சேர்க்க முடிந்ததா?என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

காஞ்சிபுரம் யானைக்கு நாமம்...!

கடவுளுக்காக காஞ்சிபுரம் கோயிலுக்கு யானை கொடுத்தார்கள். அந்த யானைக்கு நாமத்தைப் போட்டார்கள். யானைக்கு வடகலை நாமத்தைப் போடுவதா? தென்கலை நாமத்தைப் போடுவதா? என்று இந்தச் சண்டை 150 வருடங்களாக நடக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. வெள்ளைக்கார நீதிபதிக்கு வடகலை என்றாலும் தெரியவில்லை. தென்கலை என்றாலும் தெரிய வில்லை. ஏன் இந்த இரண்டு பிரிவினரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். நாமம் என்றால் என்ன? பிரிவி கவுன்சிலில் பிரிட்டிஷ் நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாமத்தைப் பற்றித் தெரியாது.

புத்திலிசாலி வழக்குரைஞர் ஒருவர் நீதிபதியிடம் விளக்கி சொன்னார், மைலார்டு! நீதிபதி அவர்களே, இவர்கள் இரு பிரிவினருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைலு க்கும் ரு க்கும் ஏற்பட்டுள்ள வழக்கு சண்டை என்று சொன்னாராம். ஆங்கில எழுத்து லு என்பது பாதம் வைத்த நாமம். ரு என்பது பாதம் வைக்காத நாமம் என்று சொன்னாராம். அன்றைக்கு ஏற்பட்ட இந்த வழக்குச் சண்டை இன்றைய வரைக்கும் தீரவில்லை.

இந்துக்கள் முதலில் ஒன்றாக இருக்கிறீர்களா?

இந்து மதம் ஒரே மதம் என்று சொல்லுகின்றான். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லு கின்றான். இந்துக்களை ஒன்று சேர்ப்பது அப்புறம் இருக்கட்டும். வடகலைக்காரரையும், தென்கலைக் காரரையும் ஒன்று சேர்க்காத உன் மதம், என்ன மதம்? எச்சக்கலை மதம் அல்லவா, உன் மதம்? (சிரிப்பு-கை தைட்டல்).

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்தை யாராவது எள்மூக்கு முனையளவுகூட மறுத்துவிட முடியுமா? தந்தை பெரியாருடைய கருத்து உலகம் பூராவும் பரவுகிறது என்று சற்று நேரத்திற்கு முன்பு சொன்னோம். இதோ என்னுடைய கையிலே இருக்கின்ற ஆதாரம்-நவீன இந்தியாவை உரு வாக்கியவர்கள்-ஆயமநசள டிக ஆடினநச ஐனேயை என்கிற புத்தகம் இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு உயர் ஜாதியைச் சார்ந்தவர். எங்களுக்கு ஜாதிப் பிரச்சினையைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர் பெரியார் கருத்துக்கு மாறுபட்டவர், பெரியாரிஸ்ட் அல்ல.

பெரியாரைப் புறந்தள்ள முடியவில்லை

பெரியாரிஸ்டாக அல்லாதவர்கள்கூட இன் றைக்குப் பெரியாரைப் புறந்தள்ள முடியவில்லை. (கைதட்டல்) பெரியாரை மறைத்துவிட முடிய வில்லை. பெரியாரைக் கொண்டுவர வேண்டி யிருக்கிறது.
எப்படி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நோய்க்கு உரிய மருந்தைத் தேடுவார்களோ அதே போல கடவுள், மதம், ஜாதி என்ற நோய்க்கு உரிய மருந்தைத் தேடுகிறார்கள் என்றால் அதுதான் பெரியார் என்கிற தத்துவம் (கைதட்டல்). ராமச்சந்திர குகா என்பவர்தான் மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இண்டியா என்ற புத்தகத்தை எழுதி யிருக்கின்றார்.

ஆங்கில நூலில் பெரியார் பற்றி....

19 முக்கிய நபர்களைப் பற்றி எழுதியிருக் கின்றார். முக்கியமாக அவர் தேர்ந்தெடுத்தது-ஒன்று, சமுதாயத்துறையிலே ஜோதிபா ஃபுலே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர். அதே வரிசையிலே தென்நாட்டிலேயிருந்து ஒரே ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கின்றார். அவர்தான் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்று மிகத்தெளிவாக இந்த நூலிலே பெரியார் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

இவ்வளவு காலம் ஆங்கில நூல்களிலே பெரியார் இடம்பெறுவதில்லை. பெரியார் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தார். ஆனால் இன்றைக்கு முடியவில்லை. எவ்வளவு காலத்திற்கு அவர்களாலே தடுக்க முடியும்? தடுக்க முடிய வில்லை.

காற்றுக்குத் தடை போட முடியுமா?

காற்றுக்கு எப்படி ஒருவர் தடை போட முடியாதோ அதே போலத்தான் பெரியார் கொள்கைக்கும் எவரும் தடை போட முடியாது என்று சொல்லக்கூடிய அளவிலே இன்றைக்கு வந்திருக்கிறது.

The Radical Reformer E.V.Ramasamy என்று தலைப்பு கொடுத்திருக்கிறார். பெரியாரைப் பற்றிச் சொல்லும்பொழுது, தீவிரமான புரட்சியாளர் சீர்திருத்தவாதி-அவர்தான் புரட்சியாளர் என்று அர்த்தம்.

1938ஆம் ஆண்டிலிருந்து ஈ.வெ.ராமசாமி, பெரியார் என்று அழைக்கப்பட்டார். பெரியார் என்றால் தலைசிறந்த மாமனிதர். அதற்கு காரணம் பெண்களின் உரிமைக்காகப் போராடினார். மூடநம்பிக்கை ஒழிப்புக்காக அரும்பாடு பட்டார். கர்ப்பத்தடை-குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தினார். நாத்திகக் கருத்துகளை அறிவியல் உண்மைக் கருத்துகளை மக்களிடத்திலே எடுத்துச் சொன்னார். அதுமட்டுமல்ல; தென்னாட்டிலே இந்தியை கட்டாயமாகத் திணிக்கின்ற அந்த ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்து மிகப்பெரிய அளவுக்கு ஒரு போராட்டத்தைத் தொடங்கி இறுதியிலே பெரியார் வெற்றி பெற்றார்.

பெரியாரின் தனிச் சிந்தனை

மேலும் பெரியார் அவர்கள் மிக ஆழமாக இராமாயணத்தைப் பற்றி சிந்தித்து விமர்சனம் செய்தார், எழுதினார், ஆய்வு செய்தார். யாருக்கும் இல்லாத துணிவோடு இராமாயணத்தை ஆய்வு செய்தார்.
பெரியாருடைய தனித்த சிந்தனையை, சிறப்பைப் பற்றி இந்த நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது ஒரு செய்தியை மிக அழகாகச் சொன்னார். பெரியாரின் போர் முறைக்கும், மற்றவர்களுடைய போர் முறைக்கும் இருக்கின்ற வித்தியாசம் ஒன்று.

பெரியாரின் போர் முறை

பெரியாரின் போர் முறை இருக்கிறதே அது மூலபலத்தைத் தெரிந்து முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று சொன்னார். அதாவது நேரடியாக இருக்கிற எதிரியைவிட அந்த மூலம் எங்கேயிருக்கிறது, நோய் நாடி நோய் முதல் நாடக்கூடியது-அந்த அடிப்படையிலே போகக் கூடியவர் அவர்.

பார்ப்பனர்களுக்கு புரசீஜர் கோட்

ஜாதி எப்படியிருக்கிறது? ஜாதிக்கு என்ன அடையாளம்? பார்ப்பனர்களைப் பொறுத்த வரையிலே சங்கராச்சாரியார் கொஞ்ச நாள்களுக்கு முன்பு சொன்னார். சங்கராச்சாரி சொன்னது மட்டுமல்ல; அவர் சனாதனத்திலே- ஆத்திகத்திலே சங்கராச்சாரியார் சொன்னார். அரசியலிலே இருந்த ராஜகோபாலாச்சாரியார் சொன்னார். எப்பொழு தெல்லாம் பார்ப்பனர்களுக்கு சங்கடங்கள் வருகிறதோ. அப்பொழுதெல்லாம் வெளியே வருவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்றால் ஞசடிஉநனரசந ஊடினந என்று எப்படி நாம் சட்டத்தைப் புரட்டுகின்றோமோ- அதே போல நமக்குள்ள புரசீஜர் கோட் என்னவென்றால் இராமாயணம் தான். அந்த இராமாயணத்திலே எப்படி நடந்தி ருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்த இராமாய ணத்தைப் பின்பற்றுங்கள் என்று சொன்னார்.

கனிமொழி அழகாகச் சொன்னார்

அதைத்ததான் கவிஞர் கனிமொழி அவர்கள் அழகாகச் சொன்னார். நம் கையைக் கொண்டே நம் கண்களைக் குத்த ஏற்பாடு செய்திருக்கின்றான். அதிலே விழிப்பாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை அவர்கள் சொன்னார்களே, அதற்கு என்ன அர்த்தம்.
நமது சமுதாயத்திலே துரோகிகளைப் பிடித்து நம்மால் விளம்பரப்படுத்தப்பட்டவர்கள், நம்மால் ஆளாக்கப்பட்டவர்கள் - நம் இனத்தவர்களையே பிடித்துக் காட்டுவார்கள்.

அதுதான் விபீஷ்ணன், அதுதான் அனுமார். உலக நாத்திகர் மாநாடு என்றவுடன், நடப்பதற்கு முன்னாலே அவர்களுக்கு அதிர்ச்சி.

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்! என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

உலக நாத்திகர் மாநாட்டை இவ்வளவு பெரிதாக திருச்சியிலே நடத்துகிறார்களே என்ற ஆத்திரம் -பார்ப்பனர்களுக்கு. நான் காலையில் சென்ற பொழுது ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன்.

இராமாயண் பஜன் மேளாவாம்!

வருகிற 23ஆம் தேதி இந்து முன்னணியினுடைய தலைவர் ராமகோபாலய்யர் என்ன பேசுவார் என்றால் இராமாயண் பஜன் மேளா! என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இந்திக்காரர்களுக்கு இந்தி மொழியில் சொல்லுகிறோம். வங்கத்தில் இருந்து வந்தவருக்கு அந்த மொழியில் சொல்லுகின்றோம். பஞ்சாப் காரருக்கு பஞ்சாப் மொழியில் சொல்லுகின்றோம். தெலுங்கு மொழிக்காரர்களுக்கு தெலுங்கு மொழியில் சொல்லுகிறோம் -அது வேறு. உடனே ஒரு மாற்று சொல்ல வேண்டும் என்பதற்காக இராமாயணத்திற்குச் செல்லு கின்றான். நம்முடைய மக்களை அடிமைப்படுத்த வேண்டும், நம் மக்களுக்கு மூளைச் சாயத்தை ஏற்ற வேண்டும் என்பதற்காக இராமாயணத்தைச் சொல்லுகின்றான். இராமாயண் பஜன் மேளா? நடைபெறும் என்று எழுதி வைத்திருந்தான். நாங்கள் என்ன சாதாரண ஆளா? மாவட்ட தலைவரைக் கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே கூப்பிட்டேன். 24ஆம் தேதி நீங்கள் ஒரு விளம்பரம் போடுங்கள்! (கைதட்டல்).

இராமாயணப் புரட்டைப் பற்றி வீரமணி பேசுவார்!

வீரமணி இராமாயணப் புரட்டைப் பற்றி திருச்சியில் ஓர் ஆராய்ச்சி உரையாற்றுவார் என்று போடுங்கள் என்று சொன்னேன் (கைதட்டல்). நான் கன்னா, பின்னா என்று யாரையும் தனிப்பட்ட முறையில் பேசமாட்டேன். இராமாய ணத்தில் இராமன் பிறந்த ஒரு கதையைச் சொன்னாலே போதும் (பலத்த கைதட்டல்). அதே போல சீதைக்கு ஏற்பட்ட ஆபத்து என்ன என்று சொன்னாலே தெரிந்துவிடும்.

அண்ணா அழகாகச் சொன்னார்

அண்ணாவே ரொம்ப அழகாகச் சொன்னார். கம்பன் பாடியதையே எடுத்துச் சொன்னார். மனத்தினால், வாக்கினால் மறு உற்றேன் எனினும் சினத்தினால் தீயேன்! என்று கம்ப இராமாய ணத்தில் உள்ளதை எடுத்துச்சொன்னார்.

சீதையைப் பற்றி இராமன் சந்தேகப்படுகின்றான். சீதை சொல்லுகிறாள்: நான் மனதால் தப்புப் பண்ணவில்லை. அதே மாதிரி வாக்கினால் சொல்லினால் நான் தப்புப் பண்ணவில்லை. சினத்தினால் தீ சுடும் என்று சொல்லுவார்கள்.

அண்ணா இந்த இடத்தில் ரொம்ப அழகாகச் சொன்னார். அண்ணா, தந்தை பெரியார் பள்ளிக் கூடத்தில் படித்தவரல்லவா? ராமகோபாலய்யருக்கு வெட்கம் இல்லையே!

சமஸ்கிருதத்தில் மனோ, வாக்கு, காயம். மன தினால் தப்பு பண்ணவில்லை. உள்ளத்தினால் தப்பு பண்ணவில்லை. வாக்கினாலே-சொல்லினாலே தப்பு பண்ணவில்லை. காயத்தையும் சேர்த்துத்தானே கம்பன் சொல்லியிருக்க வேண்டும்.

ஏன் கம்பன் காயத்தை விட்டான்? அண்ணா சொன்னார். ரொம்ப அழகாக-கம்பன் காயத்தைத் தெரிந்தே விட்டுவிட்டான் கவிதையிலே-காரணம் காயம் காயப்பட்டுவிட்ட காரணத்தினாலே என்று சொன்னார் (கைதட்டல்).

இந்த ஒன்றைச் சொன்னால் போதாதா? ராமகோபாலய்யருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இராமாயணத்தை இனிமேல் எவராவது கையிலே தூக்குவார்களா?

-(தொடரும்)

உலகமயமான பெரியார்-நக்கீரன்

 

திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகம், விஜய வாடா நாத்திகர் மய்யம் ஆகியவை இணைந்து நடத் திய 8ஆவது உலக நாத்திகர் மாநாடு ஜனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் திருச்சியைக் கலக் கியது.

ஆந்திரா, கேரளா, ஒரிசா, பஞ்சாப், டில்லி, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், மலேசியா, பின்லாந்து என பல பகுதி களிலிருந்தும் 430 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந் தனர். அவரவரின் உணவு முறைகளை முன்கூட்டியே கேட்டறிந்து, அதற்கேற்ப உணவுவகைகள் தயாரிக் கப்பட்டிருந்தாலும் வெளிநாட்டவர் பலரும் இந்திய உணவுகளையே விரும்பிச் சாப்பிட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகள் பலவற்றையும் தி.க.வின் தலைமை நிலையச் செயலாளரான வீ. அன்புராஜ் கவனமாகச் செய்திருந்தார்.

தமிழக முதல்வரின் வாழ்த்துச் செய்தியுடன் முதல்நாள் மாநாடு தொடங்கியது. திராவிட இயக்கம், பெரியாரின் பெரும் பணி, பெண் ணுரிமை, ஆரிய - திராவிட யுத்தம் உள்ளிட்ட ஆங்கில - தமிழ் நூல்கள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனத்தில் பயில்பவர்களின் கலை நிகழ்ச்சிகள், பகுத்தறிவு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், 3 வயது யாழினியின் பெரியார் பேச்சு, வெற்றிச்செல்வனின் நாத்திக உரை ஆகியவை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
இரண்டாம் நாள் நிகழ்வின்போது வல்லம் பெரியார் மணியம்மை வளாகத்தின் பெரியார் தாவர கருவூலத்தில் உள்ள டார்வின் பூங்காவில் 25 வகைகளுக்கு மேலான 500 மரங்களை 200-க்கும் மேற்பட்ட பன்னாட்டு அறிவாளர்கள் நட் டனர். அங்குள்ள மூங்கில் பண்ணையைப் பார்வையிட்டு மகிழ்ந்தவர்கள் அங்கேயே சிற்றுண்டியும் சாப்பிட்டனர். மூடநம்பிக் கையில் செய்யப்படும் காரியங்களை, பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் விளக்கும் தீச்சட்டி ஏந்துதல், தீமிதித்தல் போன்றவற்றை தி.க. தோழர்களுடன் வெளிநாட்டு அறிஞர்களும் செய்தது பலரையும் வியக்க வைத்தது. சர். ஏர்க் சர் ஏர்க்.. என்றபடியே நார்வே லூயிஸ் ரோஸ்டு, ஆந்திரா சாரய்யா, கேரளா ஜேம்ஸ் ஆகியோர் தீ மிதித்தனர். நாத்திகர் பேரணியில் 4 வயது குழந்தை முதல் 80 வயது பெரியவர் வரை கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டே தீச்சட்டி ஏந்தியதையும் தீ மிதித்ததையும் அலகு குத்தி கார் இழுத்ததையும் திருச்சி மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே நின்றிருந்த அய்யப்ப பக்தர்கள் 300 பேர் சுமார் 3 மணி நேரம் நடந்த இந்தப் பேரணியை முழுமையாகப் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினார்கள். பேரணியை புத்தூரில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து பார்வையிட்ட வீரமணி, கனிமொழி, சுப.வீர பாண்டியன் ஆகியோர் தி.க. தொண்டர்கள் அளித்த தீச்சட்டியை ஏந்தியபோது பலத்த கைதட்டல்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வு, வெளிநாட்டு நாத்திக - பகுத்தறிவு அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்குகளை மதச் சார்பின்மை, மனிதநேயம், மக்கள் உரிமை, அறிவியல், ஊடகம், நாத்திகம் உள்ளிட்டவை தொடர்பான 9 கருத்தரங் குகள் நடைபெற்றன. அனைத்திலுமே கேள்வி - பதில் பாணியிலான உரையாடல் களும் இருந்ததால் தேவையான விளக்கங்களைப் பங்கேற்பாளர்களாலும் பார்வையாளர்களாலும் உடனுக்குடன் பெற முடிந்தது. நாத்திக அறிஞர்கள் சிலரின் உரைகள் கவனிக்கத்தக்க வகையில் இருந்தன.

நார்வே மனிதநேய அமைப்பின் பொதுச் செயலாளர் கிருஷ்டி மெலி - பிற நாடுகளைக் காட்டிலும் நார்வேயில் பெண்கள் நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கான பல்கலைக் கழகங்கள் நிறைய உள்ளன. மதங்கள் எப்போதுமே பெண்களின் முன்னேற்றத்திற்கு அனுமதிப்பதில்லை. நார்வே நாட்டு கிறிஸ்தவ சபைகள் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆந்திர மாநில நாத்திகப்போராளி கோராவின் மகன் விஜயன் - நாத்திகம் என்பதை இங்கு எதிர்மறையான கண் ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அப்படி இல்லாமல் நேர்மறையாக நோக்க வேண் டும். தமிழ்நாட்டில் பதிவுத் திருமணங் களையும் கலப்புத் திருமணங்களையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம், நாத்திகத்தின் பங்களிப்பு. ஆனால் வட இந்தியாவில் வேறுவிதமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஜாதி என்ற இடத்தில் வெற்று என்று எழுதும் பழக்கம் உள்ளது. இங்கும் அது வர வேண்டும்

நிறைவுநாளில் நிகழ்த்தப்பட்ட உரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப. வீரபாண்டியன் -இங்கே இருப்பது 2 வழிகள்தான். ஒன்று, கேள்வியே கேட்கக் கூடாது என்கிறது பக்தி மார்க்கம். மற்றொன்று, கேள்விகளை எழுப்பும் பகுத்தறிவு மார்க்கம். பகுத்தறிவுதான் மாற்று வாழ்வியல் பண்பாடு என்பதை மக்கள் உணர வேண்டும்.

கவிஞர் கனிமொழி எம்.பி., - என்னை நாத்திக வாரிசு என்று அழைத்ததை பெருமை யாக நினைக்கிறேன். நானும் தீச்சட்டி ஏந்தினேன். சட்டியின் அடியில் தானியம் போடுவதால் அது சூடு இல்லாமல் இருக்கிறது. இதில் உள்ள தொழில்நுட்பம் இது. இதைச் சொல்லா மல் மக்களை ஏமாற்றுகிறார்கள். நாம் விழிப்புணர்வு அடைய வேண்டும்.

மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் - நாட்டில் நடக்கிற நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் மானுடம் சந்திக்கும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் மதம்தான்

தி.க. தலைவர் கி. வீரமணி - மூட நம்பிக்கைகளைத் தகர்ப்பதற்காக நம்முடைய கருஞ்சட்டை வீரர்கள் அலகு குத்துவது, கார் இழுப்பது என்று தங்களை வருத்திக் கொள்வது எனக் கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அறிவியலைப் படிப்பது மட்டுமல்லாமல் அதனை மக்கள் உணர்ந்து கொள்ளவும் வேண்டும். உலகத்திலேயே நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்துவது தமிழகத்தில் தான். பல நாட்டு பகுத்தறிவாளர்கள் இங்கு வந்து தீச்சட்டி ஏந்துகிறார்கள். தீ குண்டம் மிதிக்கிறார்கள் என்றால் பெரியார் உலகமயமாகிறார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர் களும் தமிழகப் பகுத்தறிவாளர்களும் இணைந்து பானையில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டி, பொங்கலோ பொங்கல் என்று தமிழர் திருநாளைக் கொண்டாடினார்கள். நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு அல்ல, மனிதகுலத்தின் மீதான அக்கறை என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது 8ஆவது உலக நாத்திகர் மாநாடு.
நன்றி: நக்கீரன் 2011 ஜனவரி 15-18
http://viduthalai.in/new/page-2/1962.html

மகரஜோதி கடவுள் சக்தியல்ல மனிதர்கள் செய்யும் ஏற்பாடே-திருவாங்கூர் தேவசம் போர்டு

 

சபரிமலையில் `மகர ஜோதி' மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறது என்று திருவாங்கூர் தேவ சம் போர்டு அறிவித் துள்ளது.

சபரிமலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய அய்யப்ப பக்தர்கள் 104 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர் களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்தி ரமா? என்பதை திருவாங் கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், திரு வாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் அதன் தலைவர் எம்.ராஜகோ பாலன் நாயர் தலைமை யில் நேற்று நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவில் மேல் சாந்தி கண்டரரு ராஜீவரரு, கன் னிபையூர் நாராயணன் நம்பூதிரி (வாஸ்து) மற் றும் பல உயர் பூசாரி கள், திருவாங்கூர் தேவ சம் போர்டு உறுப்பினர் கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப் பன் கோவில் நிருவாகி கள், கட்டடக்கலை வல் லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவில் தேவசம் போர்டு தலை வர் ராஜகோபாலன் நாயர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது

பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர் கள் தான் ஏற்றுகிறார் கள். இது எல்லோருக் கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.

அந்த நம்பிக்கையில் தேவசம் போர்டு தலை யிட விரும்பவில்லை. மனிதர்களால்தான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்ய வும் தேவசம் போர்டு விரும்பவில்லை.

மகர ஜோதி பிரச் சினை பற்றி விவாதிக்க மட்டும் இன்றைய கூட் டம் கூட்டப்பட வில்லை. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களான நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் அய்யப் பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

ஆகவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வருடம் முழுவதும் கோவிலைத் திறந்து பக்தர்களை தரிசனத் துக்கு அனுமதிக்கலாமா என்பது பற்றியும் கூட் டத்தில் விவாதிக்கப்பட் டது.

18ஆம் படியை அகலப்படுத்தக்கூடாதாம்!

வருடம் முழுவதும் கோவிலை திறந்து வைப் பது சம்பிரதாயத்துக் கும், வழக்கத்துக்கும் மாறானது. ஆகவே ஆண்டு முழுவதும் கோவிலைத் திறக்க வேண்டாம் என்று ஏக மனதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதே போல், பக்தர் களின் நெரிசலைக் குறைப் பதற்காக புனிதமான 18-ஆம் படியை அகலப் படுத்தலாம் என்ற யோசனைக்கும் அனைத்து தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரி வித்தனர். புனித 18ஆம் படியை அகலப்படுத்து வது, கோவில் கட்டப் பட்ட ஆகம விதிக்கு விரோதமானது. அத்து டன் 18ஆம்படி சன்னி தானத்துடன் புனிதம் வாய்ந்ததும் ஆகும். ஆகவே 18ஆம் படியை அகலப்படுத்துவது சரி யல்ல என்றும் கூட்டத் தில் முடிவு செய்யப்பட் டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் அறிக்கை

இந்த விவரங்களை பதில் மனுவாக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இதுவரை பக்தர் களை மோசடி செய்தவர் கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி வெடித்துக் கிளம்பியுள்ளது.
http://viduthalai.in/new/page1/2522.html

புத்தர் ஒரு நாத்திகர்

 

புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நாத்திகர். புத்தருக்கு முன்பும் நாத்திகர்கள் இருந்துள்ளனர். புத்த மதம் ஒரு மதமுமல்ல. புத்தரை ஆத்தி கர், தேவர் என்று யாராவது கூறுவார் களாயின் அவர்கள் மன்னிக்கவியலாத தவறு அல்ல _ குற்றம் செய்தவர் ஆவார்.

புத்தர் அன்றைய நாளிலேயே பார்ப்பனத்துவேஷி ஆரியப்பகைவர் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் என்று கூறிப் பார்ப்பனத் திருக்கூட்டம் புத்தரைத் தங்கள் பஜனை கோஷ்டியில் சேர்த்துவிட்டது. ஒரு சதிவலையின் பின்னல் விஷ்ணு அவதாரம் புத்தர் என்றால், பார்ப்பனருக்கு உறுதுணை யாக இருக்கவேண்டுமேயன்றிப் பார்ப்பனப் பகைவராய் இருக்க முடியாது என்கிறார் ஈ.பி. ஹாவெல்.

மறுபிறவி, மோட்சம், ஆத்மா உண்டு எனும் கொள்கை, இறை பக்தி இல்லாத புத்தரை இவற்றையுடையவர் என்று கூறுவது மிலேச்சத்தனமாகும் என்பர் நல்லறிஞர்.
புத்தர் புகன்றவை மதக் கோட் பாடுகளா? வழிபாட்டு வழிமுறைகளா என்றால் _ இல்லை _ இல்லவே இல்லை. அவை நன்னெறிகள். அவை கற்றுத் தெளியப்பட்டு அன்றாட வாழ்வில் கைக்கொள்ளப்பட வேண்டிய அன்றாட நடவடிக்கைகள்.

அறத்தை ஆழ்ந்து கற்கவேண்டும். கற்றபின் அதற்கும் மேலாகப் பட்டறிவில் உணர்ந்து பட்டறிவில் நுகரவேண்டும் தன் அனுபவம் எனும் தன் பட்டறிவுதான் அதனுடைய முடிவு. அந்த அறிவு ஆற்றைக் கடக்கப் பயன்படும் படகு, கடலைக் கடக்கப் பயன்படும் கப்பல். அந்த நெறி என்றும் கொள்ளப்படும் _ என்றும் தள்ளப்படா நெறி.

ஆராதனை, அகல்விளக்கு, கற்பூரம் ஏற்றிப் பூசை, பக்தி என்பனவெல்லாம் கொள்ளாத அமைப்பு -_ இயக்கம் _ கூட்டம் _ சங்கம்தான் பவுத்தம். தந்தை பெரியார் இன்று கூறிவந்ததைத் தம்மைப் பின்பற்றுகிறவர் களைக் குருட்டுத்தனமாக நம்பிக்கையும், பக்தியும், பின்பற்றலும் மேற்கொள்ள ஒருபோதும் பவுத்தம் கூறியதில்லை.

குருட்டு நம்பிக்கையை ஒழித்து, அறிவை அடிப் படையாகக் கொண்ட உறுதியைக் (சந்தா) கொள் ளும்படி தான் பவுத்தம் போதிக்கிறது.

உய்த்துணர்ந்தறிவது அதாவது சம்மாதிட்டி என்பது பவுத்தத்தின் தொடக்கக் கொள்கை.
பவுத்தம் பகுத்தறிவையே அடிப்படையாக ஏற்றுள்ள கோட்பாடு.

பவுத்த நெறிப்படி பவுத்தர் சிலை வணக்கம் செய்தல் கூடாது. பவுத்தர் புத்தரின் சற்குணங்கட்கும் அரசமரத்திற் கும் வணக்கம் செலுத்தத் தேவையில்லை. மனத்தை ஒருமுகப்படி அடக்க வல் லார்க்கு இவை தேவையில்லை சிந் தனையை அடக்கி நிறுத்திப் பகுத்தறியக் கூடிய அறி வாளிகட்கு வெளிப்படை யான வணக்கங்கள் வேண் டியதில்லை. பவுத்தத்தில் வேண்டுதல்கள் விண்ணப் பங்கள், பிரார்த்தனைகள் எல்லாம் கிடையாது.

பவுத்தரின் வழி அய்யா வலியுறுத்து வது ஒழுக்கமே. அதனையே பவுத்தமும் முதற்படியாக வலியுறுத்துகிறது. இதனை ஸிகாலோ வாத ஸுத்த வியக்க பஜ்ஜ ஸுத்த, மங்க ஸுத்த முதலிய நூல்கள் வாயிலாக அறியலாம். எனவே பவுத்தம் மதமல்ல; அஃது ஒரு சத்திய உபதேசம் அல்லது ஒழுக்க நெறி.

நால்வகை வருணம் _ நாலாயிரம் ஜாதிகள் என்று எண்ணற்ற ஆரியர் விதைத்த ஜாதி எனும் நச்சு மரத்தையும், அடிமைத் தொழிலையும் முதலில் ஒழித்தவர் புத்தர்தான்.

ஜாதி ஒழியவேண்டும் என்றார் புத்தர். ஏன்? பெண் ஒருத்தியிடம் _ தாழ்ந்த குலத்தவள் என்று தனித்துக் காட்டப்பட்ட பெண்ணிடம், பருகிட நீர் கேட்டார் பகவான் புத்தர். உயர்ந்த குலம் எனப்பட்ட புத்தருக்கு தாழ்ந்த குலப்பெண் தண்ணீர் அளிப்பது தகுமா? எனத் தறிகெட்ட உலகம், நெறி கெட்டுப் பேசுமே எனத் தயங்கினாள் அப்பெண். புத்தர் அப்பெண்ணின் தயக்கம் போக்கித் தனக்கு ஜாதி வேண்டாம், தண்ணீர்தான் வேண்டும் என்றதை வரலாறு பதிந்து வைத் துள்ளது. இது மட்டுமா?

ஓடும் உதிரத்தில் வடிந்தொழுகும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும் ஜாதி தெரிவதில்லை என்ற புத்தர், இடை ஜாதி இளைஞரிடம் பால் வாங்கிப் பருகினார்.

பிறர் தனக்குத் தந்த திட்டுகளையும், தட்டுகளையும், தொல்லைகளையும் எவன் பொறுத்துக் கொள்கிறானோ, பொறுமையே எவனுக்கு வலிமையோ அவனையே நான் அந்தணன் என்கிறேன். தாமரையிலையின் மேல் நீர்போல இவ்வுலகத்து இன்பங்களோடு ஒன்றாதவன் எவனோ அவனை நான் அந்தணன் என்கிறேன்.

பிறப்பினாலே எவனும் பிரா மணனோ அப்பிராமணனோ ஆவ தில்லை; செயலினாற்றான் ஒருவன் பிராமணன் ஆகிறான். இன்னொருவன் அப்பிராமணன் ஆகிறான். அச்சைச் சார்ந்தே தேர் ஓடுவது போல் உயிர்கள் யாவும் தங்கள் செயலையே சார்ந்திருக் கின்றன என்று சரியாக அறிவுறுத்திய பகுத்தறிவுவாதி அவர்.

புத்தருக்கு ஆன்மா, ஆத்மா எனும் எதிலும் நம்பிக்கை கிடையாது. என்றும் அதனை நம்பியதோ, ஏற்றுக்கொண் டதோ கிடையாது. இது போதும் அவர் முதல் நாத்திகர் என்பதற்கு.

வாய் வேதாந்தம் பேசவில்லை, வறட்டு வேதாந்தம் பேசவில்லை. செயல் வழி காண்பித்த பகுத்தறிவுச் செம்மல் புத்தர்.

உபாலி எனும் முடி திருத்துவோ னையும் (பிக்குக் குழுத் தலைவன்) ஸீனிதன் எனும் தோட்டியையும், அங்குவிழாவன், ஆலைகன் எனும் சண்டாளரையும் தன் குழாத்தில் சேர்த்துப் பார்ப்பனரின் தலையில் ஓங்கி. அடிவிழச் செய்தார்.

ஆரிய மிலேச்சர்கள் அன்பு புத்தரை ஸ்திரீதுவேஷ என்று குறை கூறவும் தான் செய்தனர். பஜாபதீ கோதமை என்பவரின் வேண்டுகோள் பொருட்டுப் பிக்குணி _ பெண் துறவியர் மன்றத்தை நிறுவிய புத்தரா ஸ்திரீதுவேஷி?

கேமை, உப்பவ வண்னை எனும் பெண்டிரைத் தம் மாணவியராக ஏற்றுப் பெண்மை போற்றும் கோட்பாட்டிலும் முன் வரிசையில் நிற்கிறார் புத்தர். கோசல நாட்டரசனுக்குப் பெண் சேய் பிறந்தது.

அரசனுக்கோ ஆண்சேய்தான் வேண்டுமென்ற தணியாத ஆவல். அவனிடம் பெண் குழவி ஆண் சிசுவை விட மேலானதாக விளங்கக் கூடும் என்று அறிவுறுத்தியவர் புத்தர்.

ஆரியர்களின் வேள்விகள், அந்த ணரின் சடங்குகள், ஓம குண்டங்கள் ஒரு பயனும் விளைவிப்பவை அல்ல, அவற்றினால் பயன் ஏதும் இல்லை என்று துணிவுடன் பகன்றவர் இந்தத் தூய ஞானி.

திரி பீடகத்திலும் அதன் பிரிவாகிய சூத்திர பீடத்திலும் உலகக் கட்டுகளை யெல்லாம் விடுத்து, எந்தத் துன்பத்துக் கும் அஞ்சாதவன், எதிலும் பற்றுக் கொள்ளாதவன் எவனோ அவனையே அந்தணன் என்று அந்தணனுக்குப் புத்தர் அளித்த விளக்கம்தான்.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்
எனத் திருவள்ளுவரின் குறளிலும் எதிரொலிக்கிறது.

அதைப் பற்றிக் கூறியவருமில்லை ஒரு சமயம் மாலுங்கிய புத்தர் என்பான் என் உடலும் ஆன்மாவும் ஒன்றா -_ வேறுபட்டதா?என்று புத்தரி டம் வினவினான். புத்தர் அதற்குப் பதிலளிக்கையில், நான் இவ்வாராய்ச் சியில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் அதனால் மனித இனத்துக்கு நன்மை உண்டாவதில்லை நான் நான்கு வாய்மைகளைப் பற்றிக் (ஆர்யசத்யாஸ் Four Noble Truth) கூறியுள்ளேன்; தோழரே! நான் சொல்லாதவற்றைப் பற்றிப் பேசாதீர்கள். நான் எவற்றை விளக்கியிருக்கிறேனோ அவையே விளக்கத்துக்கேற்றவை எனத் தெரிந்து கொள்ளுங்கள் என்று பதில் கூறினார். இந்த விளக்கத்தினை நிதான சம்யுத்தம் ஸூத்தம் 5_பக்கம் 2 இல் காணலாம்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர் புத்தர். அவருக்குக் கடவுள் நம்பிக்கை என்பது இல்லவே இல்லை. உலகில் காணப்படுகிற அனைத்தும் பொறுப் பற்ற விதமாய் படைக்கும் கடவுள் ஒருவர் விதித்த கட்டளையா? இங்குக் காணப்படுகிற தார தம்மியங்களை, அநியாயங்களை நீதியும், பரம காருணியமும் உள்ள மாம் பிதாவாகிய ஒரு கடவுளின் செயல் என்று கூறுவது சரி என்று நம்பக்கூடாது.

அவர் நித்தியமாயும், எங்கும் நிறைந்தவராயும், முழுமுதற் பொருளாகவுமிருந்தால் அவர் எக்காலத்திலும் எல்லா விடங்களிலும் திடீரென்று எல்லா தர்மங்களையும் உண்டாக்க வேண்டும். ஒருவன் செல்வனாகவும், மற்றவன் வறியனாகவும் ஏன் விளங்கவேண்டும்? இவ்வாறு படைத்திருப்பது கடவுள் நியாயம் உள்ளவர் என்பதைக் காட்டு கிறதா?

உலகெங்கும் இந்த ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றமையாலே அவரைச் சமநோக்கம் உள்ளவர் என்று கூறமுடியுமா? எல்லாப் பொருள்களை யும் கடவுள் படைத்தார் என்று கூறப் படுகிறது. அப்படியானால் கடவுள் நன் மையையும், தீமையையும் படைத்தார் எனல்வேண்டும். கடவுள் எல்லாவற் றையும் பார்க்கிறவர் என்றும், எல்லாம் தெரிந்தவர் என்றும் கூறப்படுகிறது.

நம்மைப் படைத்தபோது நமது எதிர்கால நிலையைக் கடவுள் அறிவார். அவ்வாறாயின் குற்றவாளிகளையும், கொலை பாதகர்களையும் இவர்கள் போன்ற விரும்பத்தகாதவர்களையும் கடவுள் ஏன் படைத்தார்? அவர் எல்லாம் செய்ய வல்லவர் என்றால் தொற்று நோய்களையும், ஒட்டுவா ரொட்டு நோய்களையும், நிலநடுக்கங் களையும், வெள்ளத்தையும் அவரால் தடைசெய்ய முடியும். முடியாதபடியால் அவர் எல்லாம் செய்ய வல்லவர் அல்லர் என்பது தெளிவு.

அவர் கருணையுடை யவர் என்றால் உலகினைத் துன்பமும் இன்பமும் இல்லாதபடி செய்ய வேண்டும். இவ்வுலகத்தில் துக்கம் இருப்பதால் அவர் கருணையுடைய வரல்லர் என்பது தேற்றம். ஆதலால் உலகைப் படைத்த கடவுள் ஒருவர் உண்டு என்பது கற்பனை. கடவுள் ஒருவர் தேவையில்லை.

மனிதனைக் கடவுள் உண்டாக்கினார் என்றால் அக்கடவுள் தோன்றியதற்கும் காரணம் வேண்டும். அக் கடவுளின் குணங்கள் நம்மால் அறிய முடியாதவை என்றால் அவரைப் படைப்புக் கர்த்தர் எனவும் கற்பிக்கவும் முடியாது. (அங்குதார நிங்காயம் திக நிபாதம்)
இதைவிட 2500 ஆண்டுகளுக்கு முன் கடவுளை, கடவுள்கோட்பாடை விமர் சித்த ஒருவர் உலகில் இருக்கவே முடி யாது. இப்போது சொல்லுங்கள் புத்தர் எவ்வளவு தலை சிறந்த நாத்திகர் என்று.

கடவுளோடு புத்தர் நிறுத்திக் கொள்ளவில்லை, மோட்சம், நரகம் என்று விடும் கப்சாக்கள், கதைகளுக்கு ஆப்பு வைத்துவிடுகிறார்

மறுபிறப்பு என்பதற்குப் புத்தர் அளிக்கும் விளக்கமும் ஒவ்வொருவரும் உணர்ந்து சிந்திக்கத்தக்கது.

இன்ப உணர்ச்சி காமம் உள்ள பெண்ணும், ஆணும் கூடுங்காலை இருவருக்கும் படிசந்தி விஞ்ஞானம் (இணைப்புணர்ச்சி) ஏற்பட்டுப் பெண்ணுக்கு உயிரின் அங்கிசம் (கரு) உண்டாகிறது. இணை உருவமாகவும் தோன்றுகின்றவையும், மறைகின்றவை யும் ஆகிய செயல்கள் காமத்தினுடைய ஆற்றலால் ஏற்படுகின்றன. ஒரு மன உணர்ச்சி இன்னொரு மன உணர்ச் சியை ஏற்படுத்துகிறது. புதிய மன உணர்ச்சி அதை உருவாக்கிய பழைய மன உணர்ச்சியில்லை. அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதுமன்று இது தான் மறுபிறப்பிற்குப் புத்தரின் விளக்கம்.

புத்த சமயம் என்றால் ஒருவர் மனதில் நிழலாடுவது நிர்வாணம் எனும் சொல். இதை மோட்சம் என்று பலர் தவறாகப் பொருள் புரிந்து கொள்கிறார்கள்.

புத்தரே நோய்களில் கொடிய நோய் பசி. உடலின் தேவைகள்தாம் பெருந் துன்பங்கள். இதை நன்கு உணர்வதே பேரின்பம். அதுதான் நிர்வாணம் என்று நிர்வாணம் என்பதற்குப் பவுத்தத்தில் என்ன பொருள் என்று விளக்கமளிக் கிறார் புத்தர். நிர்வாணம் என்பது ஒரு சொல் போலத் தோன்றினாலும் அது ஒரு சொல் அன்று.

அச்சொல்லை நிர்+வாணம் என்று பிரிக்கின்றனர்.

வாணம் என்றால் ஆசை என்று பொருள். நிர் என்றால் இன்மை என்பது பொருள். ஆக நிர்வாணம் என்றால் ஆசையின்மை என்பது பொருள்.

புத்தருடைய போதனைகள் புத்தர் வலியுறுத்தியவை நான்கு சத்தியங்கள் எனப்படும் ஆர்ய சத்தியங்கள், அஷ்டாங்கித மார்க்கம் எனப்படும் எண்வழிப்பாதை, மத்ய மாபாத் எனப்படும் பத்துக் கட்டளைகள்.

_ இவைதாம் புத்தரின் போதனைகள். இதில் கடவுள். ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம், தான, தர்மப் பலன் ஏதும் கிடையாது.

ஆனால், புத்தர் தம் சொற்பொழிவு களில் ஆரியக் கருத்துகளால் பார்ப் பனரைக் கடுமையாகச் சாடினார். புத்தர் ஆரிய அல்லது பார்ப்பன எதிர்ப்பாளர் _ ஜாதி மறுப்பாளர் _ எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுள்கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்.

பின்னால் வந்தவர்கள் புத்தரைக் கடவுளாக்கி, விஷ்ணுவின் அவதாரமாக் கிச் சடங்குகளைச் செய்து புத்தத்தைச் சமயமாக்கி விட்டார்கள்.
----பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்

நாத்திகம் வெற்றிபெற்று வருவதால் பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார்

 

நாத்திகம் வெற்றி பெற்று வருவதால் பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

முந்தய  உரை  http://naathigam.blogspot.com/2011/01/blog-post_150.html

இராமன் எப்படி பிறந்தான்? இராமன் முதலில் தசரதனுக்குப் பிறந்தானா? என்று ஒரு கேள்வியைக் கேட்டாலே செத்துப்போய்விடுவான்.

இராமன் பிறப்பைச் சொன்னாலே போதுமே!

அவதாரமான ராமன் எப்படி பிறந்திருப்பான்? பிறக்காத ராமன் பெயரைச் சொல்லி ராமன் பாலம் என்று பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை சிலர் தடுக்கப்பார்க்கின்றனர். இது எவ்வளவு பெரிய கொடுமை? இந்த மூடநம்பிக் கையின் விளைவு-ஆத்திக நம்பிக்கையின் விளைவு.

நம்முடைய வளர்ச்சியை, நம்முடைய முன்னேற்றத்தை எவ்வளவு பாழ்படுத்துகிறது இந்த மூடநம்பிக்கை என்பதை நினைத்துப் பாருங்கள். எங்களுக்கு மேளா, கீளா என்பதெல்லாம் கிடையாது. பார்ப்பனர்கள் எழுதிய இராமாயணத் திலிருந்துதான் சொல்லப்போகின்றேன்.

அவர்களுக்கு கடவுள் ஒரு கருவி!

அவர்கள் கடவுளை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். வெறும் தியரி, எத்திசம் - (Athiesm) நாத்திகத்தை மட்டும் எடுத்துச் சொல்லி விட்டுப் போகவில்லை.

இந்த ஜாதியைக் காப்பாற்றுவது மட்டுமல்ல. கடவுள் கருத்தையும் பின்னால் தள்ளி உயர்ஜாதியை உருவாக்கியிருக்கிறான். சமஸ்கிருத ஸ்லோகம் பாருங்கள்: தெய்வாதீனம் ஜகத் சர்வம் என்ன இதற்கு அர்த்தம்? இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.

மந்த்ராதீனம் தூ தைவதம்

இதற்கு என்ன அர்த்தம்? கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது.

மூன்றாவதுதான் மிக முக்கியம்

தன்மந்த்ரம் பிராமணாதீனம் இதற்கு அர்த்தமென்ன? மந்திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. தஸ்பத் பிராமணம் பிரபு ஜெய அப்படியென்றால் என்ன அர்த்தம்? பார்ப்பானை முன்னுக்கு வைத்து கடவுளைத் தள்ளி விட்டான்

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பார்ப்பன ருக்குக் கட்டுப்பட்டது. எனவே பிராமணரை நீங்கள் வணங்க வேண்டும். கடவுளை அல்ல என்று சொல்லி கடவுளை பின்னாலே தள்ளிவிட்டான். பார்ப்பானை முன்னால் வைத்துவிட்டான்.

இந்த இடத்தைத்தான் பெரியார் கண்டு பிடித்தார். அதனால்தான் பெரியாரிசத்தை அசைக்க முடியவில்லை. பெரியார் என்கிற மாமருந்து இருக்கிறதே, அது நாத்திகத்திற்கு மட்டுமல்ல; மனித வாழ்வினுடைய உயர்வுக்கு-பேதமற்ற பெருவாழ்வுக்கு அடித்தளமாக இருந் திருக்கிறது. ஆகவே பெரியாருடைய சிந்தனைகள் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

காவி கழுத்தை வெட்டும்!

அமெரிக்காவிலே பெரியாருடைய கருத்தை ஆராய்ச்சி செய்திருக்கிறார் பவ்லாரிச்சின் என்ற அமெரிக்கப் பேராசிரியை. இராமாயணத்தைப் பற்றி பெரியாரின் மாறுபட்ட கருத்துகளை எடுத்துச்சொல்லியிருக்கிறார்.

அண்மையிலே அந்த அம்மையாரை நான் சிங்கப்பூரிலே சந்தித்தேன். அந்த அம்மையார் சொல்லுகிறார்-காவி கழுத்தை வெட்டும் என்பதைப் பற்றிச் சொன்னார். இதை எல்லாம் கனிமொழி அவர்கள் சொன்னார்.


கடவுள் இல்லை!

தமிழ்நாட்டில்தான் கடவுள் மறுப்பு வாசகத்தை ஒவ்வொரு பெரியார் சிலையிலும் நீங்கள் பார்க்கலாம். கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்று எழுதினார்.

இதுதான் தமிழகத்தில் உள்ள தந்தை பெரியார்சிலையின் கீழ் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சொற்கள் எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தார்கள்.

நீதிபதி ஒரு பெரிய பக்திமான். அவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர். அவர் ஒரு சிறந்த தீர்ப்பைக் கொடுத்தார். பெரியார் என்ன விரும்பினாரோ, எது அவருடைய கொள்கை என்று சொன்னாரோ. அதைத்தானே அவருடைய சிலையின் கீழே வைக்க முடியும்? இதில் உங்களுக்கு ஒன்றுமில்லையே! என்று சொல்லி தீர்ப்பளித்தார்.

பெரியார் சிலைக்குக் கீழே சங்கராச்சாரி கருத்தையா வைக்க முடியும்? பெரியார் சிலைக்குக் கீழே பெரியார் சொன்ன கருத்தைத்தானே போட முடியும்? சங்கராச்சாரி சொன்னதையா போடுவான்? ஒழுங்காக வழக்கை வாபஸ் வாங்குங்கள்; இல்லாவிட்டால் அபராதம் விதிப்பேன் என்று சொல்லி தீர்ப்பைச் சொன்னார்.

பெரியார் அங்கும் வெற்றி பெற்றார் (கைதட்டல்). ஆகவே தமிழ்நாட்டில்தான் இதை நீங்கள் பார்க்க முடியும். பெரியாருடைய கடவுள் மறுப்புக்கொள்கையை நீதிமன்றமே சரி என்று ஒத்துக்கொண்டிருக்கிறது. இராமாயணத்தை வால்மீகி எழுதினார். அதுதான் ஒரிஜினல், முற்பட்டது. துளசிதாஸ், கம்பன் எழுதிய இராமாய ணங்கள் பிறகு திருத்தி எழுத்தப்பட்டவை.

சச்சின் இராமாயணத்தை-உண்மை இராமாய ணத்தை அரசாங்கம் தடை செய்தது. பிறகு வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் சொன்னது: பெரியார் தனது கருத்துகளைச் சொல்வதற்கு உரிமை படைத்தவர். அவர் இராமாயணத்தைப் பற்றி தனது கருத்து களைச் சொல்லுவதற்கு முழு உரிமை படைத்தவர். ஆகவே பெரியாரின் சச்சி இராமாயணத்திற்கு உத்தரப்பிரதேசம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது.

அதுவும் நெருக்கடி காலத்திலே வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர்களால் அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பெரியார் ஏன் இராமாய ணத்தை நினைத்தார்? ஒன்றே ஒன்றைச் சொல்லு கின்றேன்.

உத்தரகாண்டத்தை வெளியிட மறுப்பதேன்?
உத்தரகாண்டத்தையே வெளியிட மாட்டேன் என்கிறார்கள். அந்த உத்தரகாண்டத்தில்தான் மனுதர்ம தத்துவம் இருக்கிறது. ராம ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் என்று சொல்லுகிறார்களே, இந்த இராம இராஜ்ஜியம் வந்தால் எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளம் பாருங்கள்.

ராமராஜ்ஜியம் நடக்கிறது. ராமராஜ்ஜியத்தில் ஒரு குழந்தை இறந்துபோய் விட்டது. உத்தர காண்டத்தில் இருப்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லுகின்றேன். இராமா! உன்னுடைய ராம ராஜ்ஜியத்தில் இவ்வளவு பெரிய அநீதி நடக்கலாமா? தர்மத்திற்கு கேடு வரலாமா? என்று கேட்கிறார்கள்.

என்னுடைய பிராமணக் குழந்தை இறந்து போனான். ஏன் இறந்து போனான் தெரியுமா? யார் உன்னுடைய குழந்தையை கொன்றது என்று கேட்கிறார்கள்.

தர்மத்திற்கு விரோதமாக சம்பூகன் என்று சொல்லக்கூடிய ஒரு சூத்திரன் தவம் செய்கிறான். தவம் செய்வது என்றால் நேரடியாகக் கடவுளைத் தொழுவது.

சூத்திர சம்பூகன் கடவுளைத் தொழுததால்...

சூத்திர சம்பூகன் கடவுளை நோக்கித் தவம் செய்தான். அந்த அதர்மத்தால் என்னுடைய குழந்தை இறந்தது என்று ராமனிடம் முறை யிட்டார்கள்.

ஆகவே, இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் சூத்திர சம்பூகன் கழுத்தை வெட்டு என்று சொன்னார்கள். உடனே ராமன் விசாரணை எல்லாம் செய்யவில்லை. நேராக இராமன் போகிறான். சூத்திர சம்பூகன் கழுத்தை இரண்டு துண்டாக வெட்டுகின்றான். உடனே இந்தக் குழந்தை பிழைத்துக்கொண்டது என்று சொல்லுகின்றான். சூத்திரனை ஒழிப்பது?

இதுதான் இராமாயணத்தில் இருப்பது. அப்படியானால் அதன் தத்துவம் என்னவென்று சொன்னால் சூத்திரரை ஒழிப்பது. அதனால்தான் ஞானசூரியன் என்னும் நூலை எல்லோரும் படியுங்கள் என்று கலைஞர் சொன்னார்.

ஞானியானாலும், மூடனானாலும் சூத்திர னுக்குத் தெய்வம் பிராமணனே ஆவான். இதுதான் மனுதர்மத்தில் இருக்கின்ற ஸ்லோகம். சூத்திரனுக்கு நேரடியாகக் கடவுளைத் தொழ உரிமை இல்லை-இந்து வர்ணாஸ்ரம தர்ம மனுதர்மப்படி. ஆகவே சூத்திர சம்பூகனின் கழுத்தை வெட்ட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லுகின்றான்.

ஏகலைவன் கதையும் அதே!

அதே போன்ற கருத்து. ஏகலைவன் கதை- பாரதத்தில் உங்களுக்குத் தெரியும். ஏகலைவன் குறிபார்த்து அம்பு எய்து ஒரு நாயை வீழ்த்தினான். நேற்று இரண்டு பார்ப்பன நீதிபதிகளே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ஏனய்யா கட்டை விரலை வெட்டிக்கொடு என்று துரோணாச்சாரியார் கேட்டதை இந்தக் காலத்தில் எவராவது ஒத்துக்கொள்வார்களா?

பெரியார் அங்கும் வெற்றி பெறுகிறார். பெரியாருடைய தத்துவங்களை ஆரம்பத்தில் மறுத்தவர்களாலே இன்றைக்கு முடியாது என்று காட்டக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள்.

பெரியார் உலகமயமாகிறார்

பெரியார் உலகமயமாவது மட்டுமல்ல. எந்தெந்த இடத்தில் எல்லாம் பெரியாருடைய கருத்துகள் தடுக்கப்பட்டனவோ, எங்கெல்லாம் பெரியா ருடைய தத்துவங்கள் மறைக்கப்பட்டனவோ, எங்கெல்லாம் பெரியாருடைய கருத்துகளை ஏற்க தயக்கம் இருந்ததோ அங்கெல்லாம் கூட பெரியா ருடைய ஒளி இன்றைக்குப் பரந்து பாய்ந்து கொண்டிருக்கிறது.

நாத்திகத்தின் வெற்றி

அது நாத்திகத்தின் வெற்றி. ஆத்திகத்தின் தோல்வி என்பதை இந்த மாநாட்டின் மூலம் பிரகடனப்படுத்துவதுதான் இந்த மக்கள் வெள்ளத் தில் மிகப்பெரிய பணி என்று கூறி நாளைய நிறைவுரையில் பல முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

http://viduthalai.in/new/page-4/2476.html

கிறிஸ்து, இஸ்லாம் மதங்களை பெரியார் விமர்சிக்கவில்லையா?

 

 


பகுத்ததறிவுள்ள மனிதன் இந்த 20- ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் ஏற்றுக்கொண்டும் நடப்பது மனித சமூதாயத்திற்கு மிகமிக வெட்கக்கேடான காரியமாகும்.

ஏனென்றால் இவையெல்லாம் 1000, 2000, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்தும், காரியங்களுமாகும். இவைகள் அறியாமையின் காரணமாகவும், அக்காலக் காட்டுமிராண்டித்தன்மை காரணமாகவும், நல்லெண்ணத்துடனோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ பல கற்பனையான அதிசயம் அற்புதம் என்பவைகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் மக்களை நம்பச் செய்து ஏற்பாடு செய்யப்பட்டவைகளேயாகும்.

ஏன் அப்படிச் சொல்கிறேனென்றால், கடவுள், மதம், வேதம், வேத தத்துவம், மதத் தலைவர்கள் என்பவர்கள் ஆகியவை எதுவும் நம்பியாக வேண்டியதே ஒழிய, அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, அனுபவத்திற்கு, சாத்தியத்திற்குப் பொருத்தமில்லாததாகவே இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன். அக்காலத்திய எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த மதத் தலைவர்கள், தன்மைகள் எல்லாம் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், பொருத்தமில்லாமல் நம்பித் தீரவேண்டியவர்களேயாவார்கள்.

உதாரணமாக:

கடவுளை உண்டாக்கியவன் யார் என்பதே யாருக்கும் தெரியாது. "தானாக உண்டானான்" என்று தான் சொல்லுவார்கள். எப்போதென்பது யாருக்கும் தெரியாது. இவை இரண்டும் தெரிய முடியாமல் இருப்பது தான் கடவுள் என்றால் அதைப்பற்றி அறிவுள்ள மக்களுக்குத் தெரியப்படாமல் போனதற்குக் காரணம் என்ன?

அன்றியும், கடவுள் ஏன் உண்டானார்? ஏன் ஏற்பட்டார்?அவர் வேலை என்ன? அந்த வேலைகளை அவர் ஏன் மேற்கொண்டார்? இவை மனிதனுக்கு மாத்திரம்தானா? இவை இல்லாமல் இருந்தால் என்ன? என்பனபற்றி யாருக்காவது தெரியுமா? கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றால் இந்த அடிப்படைக்குக் காரியம் - கருத்துக்கூட மனிதனுக்குத் தெரியும்படி செய்ய சர்வ சக்திக்கு முடியாமல் போனது ஏன்? தவிரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே! மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே! அது ஏன்?

தவிர, இந்துக்கள் என்பவர்கள் ( பார்ப்பனர்களும், பார்ப்பனதாசர்களும்) முதலில் உலக நடப்புக்குக் "கடவுள்" தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட குணமுள்ளவர்களான தேவர்கள் என்பவர்கள் தாம் காரணம் என்றும், இந்திரன், வருணன், வாயு, பிரமன், விஷ்ணு, ருத்திரன், எமன், சந்திரன், சூரியன் முதலியவர்கள் உலகத்தை நடத்துகிறார்கள் என்றும் கருதி, சொல்லி நடந்து வந்தார்கள். பிறகு பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்கள் என்று ஆக்கினார்கள். பிறகு அவற்றை மனிதனை விட இழிதன்மை – குணங்கள் உடையவனாக ஆக்கிப் பிரச்சாரத்தால் நிலை நிறுத்திவிட்டார்கள். இதிலிருந்து ஒரு கடவுள் என்பதும் கடவுள் சர்வசக்தி உடையது என்பதும் பெரிதும் மறைந்துவிட்டன.

அதன் பிறகு இந்த மூன்று கடவுள்களின், அவற்றின் மனைவி, மக்கள்களின் அவதாரம், அம்சம் என்பதாகக் கருதி, 300- கடவுள்கள், 3000 -கடவுள்களாக ஆக்கப்பட்டு விட்டன. அதன் பின்பு பார்ப்பனர் தங்கள் வயிற்றுப் பிழைப்பைக் கருதி, இந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்குச் சோறு, சிலை, கல்யாணம், சண்டை, சச்சரவு, மக்களைக் கொல்லுதல் என்பன போன்ற காரியங்களைக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, மக்களைப் பயன்படுத்தி ஜீவித்து வருகிறார்கள். இந்தக் கருத்து தத்துவத்தில் உலகில் பல பாகங்களில் இருந்தது என்றாலும் இந்தியாவில் மாத்திரம் நிலை பெற்று நடந்துவருகிறது.

மற்ற பாகங்களில் இக்கருத்து பெரிதும் மறைந்து, ஒரு கடவுள், அதற்கு உருவமில்லை, அதற்கு ஒன்றும் தேவையில்லை, கடவுளைப் பிராத்தனை செய்வது தான் கடவுள் காரியம் என்பதாகக் கருதி பலர் நடந்துவருகிறார்கள். இந்தக் கருத்துக்கு மேற்பட்ட மதங்கள், மதத் தலைவர்கள், வேதங்கள் இருந்து வருகின்றன. இந்த மதக்காரர்களுக்குப் பிராத்தனை, ஜெபம், தொழுகை முதலியவைகள் தாம் முக்கிய கடவுள் தொண்டாக இருந்து வருகின்றன.

இதற்குக் காலம், தலைவர், வேதம் இருந்தாலும் அவையும் பெரிதும் மூட நம்பிக்கை அடிப்படையில் தான் கற்பிக்கப்பட்டிருக்கிறன்றன.

"இந்து மதத்திற்கு"க் காலம் பல ஆயிரம் வருஷங்கள் கொண்ட யுகக் கணக்கில் சொல்லப்படுகின்றது. தலைவர்கள் - ரிஷிகள் - முனிகள் - தெய்வீகத்தன்மை கொண்ட அவதாரங்கள், புருஷர்கள் என்கிறான். வேதங்களோ தெய்வங்களால் அசரீரியாய்ச் சொல்லப்பட்ட சப்தங்கள் என்கிறான். இந்த மூன்றையும் ஓப்புக்கொள்ளாவிட்டால் இந்துமதம் (ஆரிய மதம்) என்பது இருப்பதற்கில்லை. அதாவது அசரீரியாய் இருந்த வேதத்தைப் பராசரன் மகன் வியாசன் தொகுத்து உருவாக்கினானாம். இந்தப் பராசன் என்பவன் பாண்டவர்களுக்குப் பாட்டனாம். இந்த வியாசன்தான் பாரதத்தைச் சொன்னானாம். இவன் சொல்ல கணபதி என்கின்ற கடவுள் எழுதினானாம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் இந்து (ஆரிய) மதம் ஏற்றத்தக்கதாகும்.

இதுபோல் தான் மற்ற கிறிஸ்து, இஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவதுமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம். ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம். குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும். அறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்? கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்? அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையா? குருடர்கள் இல்லையா? பசித்தவர்கள் இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது? கடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை? இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா? இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் படி ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா? ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா? இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன். இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன?

மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும்? அறிவுள்ளவர்களே! பகுத்தறிவாதிகளே! சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்!

--------------14-06-1971 "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" - தொகுதி: 2 … பக்கம்:57-62

சோதிடம் - அறிவியல் அல்ல-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

 

(17.7.2010 அன்று பொன்னேரியில், ஏறத்தாழ ஆயிரம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூடியிருந்த அரங்கில், அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரையிடம் பல்வேறு வினாக் களை மாணவர்கள் எழுப்பினர். அதி லிருந்து சிலவினாக்களும், அவர் அளித்த விடைகளும்)

கேள்வி: கோதவாடி என்னும் ஒரு சிற்றூரில் பிறந்த நீங்கள், இவ்வளவு பெரிய விஞ்ஞானியாக எப்படி உயர்ந் தீர்கள்?

பதில்: அதற்குப் பல்வேறு காரணங் கள் இருக்கின்றன. குறிப்பாக ஒன்றைச் சொல்வதானால். நான் தமிழ் வழிக் கல்வியில் படித்தவன், தாய்மொழி வழிக் கல்வி தான் அறிவியல் செய்திகளை நன்றாகப் புரிந்து கொள்ளுவதற்கும், அதற்கும் மேல் நாம் சுயமாகச் சிந்திப்பதற்கும் உதவும். எனவே, என் முன்னேற்றத்தில் தமிழ்வழிக் கல்விக்குப் பெரும் பங்கு உண்டு.

கேள்வி: சந்திராயன் விண்கலத்தை அனுப்புவதற்கு முன் திருப்பதி கோயிலுக்குச் சென்று பூசை செய்து வழிபட்டது சரிதானா?

பதில்: நான் தனிப்பட்ட முறையில் அவ்வாறு எதுவும் செய்வதில்லை. பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் தொடக்குவதில்லை என்றுகூட ஒரு மரபு உண்டு. ஆனால் நான் பல புதிய திட்டங்களைச் செவ்வாய்க்கிழமைகளில் தான் தொடங்கியிருக்கிறேன் என்றா லும், திருப்பதிக்கு என் மேலதிகாரிகள் எல்லாம் சென்ற போது என்னையும் அழைத்தார்கள். அதை நான் மறுக்க முடியாது.

கேள்வி: உங்களுடைய இந்த வளர்ச்சி என்பது தனிப்பட்ட முயற்சியா அல்லது கூட்டு முயற்சியா?

பதில்: கண்டிப்பாகச் சந்திரயான் _ 1 இன் வெற்றி என்பது ஒரு குழு முயற்சிதான். முழுமையான ஒரு குழு வினுடைய முயற்சி. இதில் கிட்டதட்ட 3000 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இதில் இந்தியர்கள் மட்டுமல்ல, அமெரிக்கர்கள் வேலை செய்திருக் கிறார்கள். பல்கேரியர்கள் வேலை செய் திருக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து, ஜெர்மனியிலிருந்து, ஜப்பானிலிருந்தெல் லாம் வந்து வேலை செய்திருக்கிறார்கள். இப்படிப் பலதரப்பட்ட பகுதியிலிருந்து வந்தவர்கள் இணைந்து என்னுடைய தலைமையில் செய்த கூட்டுப்பணிதான் சந்திரயான்_1

கேள்வி: இப்படி ஒரு சாதனையாள ராக மாறுவோம் என்று சிறுவயதில் தாங்கள் நினைத்திருப்பீர்களா?

பதில்: ஒரே ஒரு சொல்லில் பதில் சொல்வதாக இருந்தால், இல்லை. என்னுடைய அப்பாவின் வழிகாட்டு தலில்தான் நான் வந்தேன். விண் வெளித்துறை என்று ஒன்று இருக்கிறது என்றுகூட எனக்குத்தெரியாது. அவ்வ ளவு ஏன், அய்.அய்.டிக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதுகூடத் தெரியாது. அந்தமாதிரி நிலையில் இருந்து வந்தவன் நான். ஆனால் எந்தக் கல்லூரியிலும் முதலாவதாக வரவேண் டும் என்று நினைத்ததால், என்னுடைய அப்பாவின் வழிகாட்டுதலி னால், அரசாங்கத்துறை என்பதால் பெங் களூரில் போய் வேலையில் சேர்ந்தேன். ஆனால் அங்கே போய்ச் சேர்ந்த பிறகு தான் என்னுடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்தேன். நான் இந்தத் துறைக்குள் வந்ததை ஒரு விபத்து என்றுகூடச் சொல்லலாம். ஆனால் உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம். நான் இங்கு வந்ததன் நோக்கம் _ நீங்கள் செய்ய நினைப்பதைச் சரியாக செய்வதற்கு ஊக்கமளிப்பதற் காகத் தான்.

கேள்வி: கான்ஸ்பியரன்சி தியரி ஆஃப் மூன் பற்றி கொஞ்சம் சொல் லுங்களேன்...

பதில்: நிலவில் போய் மனிதர்கள் இறங்கியதே உண்மையா என்பது போன்ற புத்திசாலித்தனமான கேள் விகள் அந்த கான்ஸ்பியரன்சி தியரியில் கேட்கப்பட்டுள்ளன.

அந்த கேள்வி களுக்கெல்லாம் நாசாவே பதில் சொல்லியிருக்கிறது. அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அறிவியல் பூர்வமான பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. உதா ரணமாக, நிலவில் கொடி ஆடுமா, அங்கே காற்றே இல்லை. பிறகு எப்படிக் கொடி ஆடியது? என்று கேட் கிறார்கள். நிலவில் காற்று இல்லை என்பதை நாம் அனைவருமே அறி வோம். ஆனால் அங்கே கொடி ஆட வேண்டும் என்பதற்காகச் சிறப்பாகக் கொடி தயாரிக்கப்பட்டது. அங்கே காற்று இல்லாததால்தான் அந்தக்கொடி ஆடியது. ஏன் என்றால், அங்கே உள்ள மணல் மிகவும் நுண்ணியதாக இருக்கும்.

எனவே ஒரு குழாயினுள் ஆம்ஸ்ட்ராங் கொடியைச் செருகி வைத்தால், அப்படி அவர் வைக்கும்போது அந்தக் கொடி ஆடியது. அப்படி ஆடிக்கொண்டிருக் கின்ற கொடி, அங்கே காற்று இல்லாத தால் அதாவது அதை உராய்வதற்கு, உராய்ந்து கொடி ஆடுவதை நிறுத் துவதற்கு உராய்வு விசை இல்லாத காரணத்தால் வைத்தால், அப்படி அவர் வைக்கும்போது அந்தக் கொடி ஆடியது. அப்படி ஆடிக்கொண்டிருக்கின்ற கொடி, அங்கே காற்று இல்லாததால் அதாவது அதை உராய்வதற்கு. உராய்ந்து கொடி ஆடுவதை நிறத் துவதற்கு உராய்வு விசை இல்லாத காரணத்தால் நிலவில் கொடி ஆடியது. காற்று இல்லாத கண்ணாடிப் பெட் டிக்குள் (கடிகாரத்தில்) தனிஊசல் எப்படி ஒருமுறை கொஞ்சம் ஆட்டி விட்டால் தொடர்ந்து சீராக ஆடிக் கொண்டிருக்கிறதோ அப்படித்தான் இதுவும்.

இப்படி கான்ஸ்பியரன்சி தியரியில் உள்ள ஒவ்வொரு கேள்விக் கும் அறிவியல் பூர்வமாகப் பதில் சொல் லியிருக்கிறார்கள். நிலவில் மனிதர்கள் இறங்கியதற்கான காலடித் தடங்களை சந்திரயான்கூட படம் பிடித்திருக்கிறது. எனவே அந்தத் தியரி தவறானது.

கேள்வி: அண்மையில் நாகர்கோயி லில் ஒரு கோயில் கோபுரத்தின் மீது இது தாக்கியதில், அதில் இருந்த கலசம் இரிடியமாக மாறிவிட்டாகப் பத்திரிக் கைச் செய்தி வெளிவந்தது. கலசம் இரிடியமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: நானும் படித்தேன். ஊடகங்கள் வழியாக அது தொடர் பான கேள்விகளுக்குப் பதிலளித்து இருக்கிறேன். இது சரியானதில்லை. கோபுரங்களின் மீது இடி தாக்குவது என்பது அடிக்கடி நடக்கின்ற ஒன்று தான். ஆனால் அதை வேறு மாதிரி யாகப் பயன்படுத்துகின்றனர். அறிவி யல் பூர்வமாக அதெல்லாம் சாத்திய மில்லை என்பதுதான் உண்மை.

கேள்வி: சந்திராயன் _ 1அய் விண் ணில் ஏவும்போது உங்களுக்குள்ளே ஒரு மாற்றம், உணர்வு ஏற்பட்டிருக்குமே _ அதைப்பற்றிக் கொஞ்சம் சொல் லுங்கள்...

பதில்: நான் இந்தக் கேள்விக்கான விடையை நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதாவது நான் ஆணாக இருந்தபோதும் அந்த நேரத்தில் தாய்மையை உணர்ந்தேன். 60 மணிநேரத்திற்கு முன்பே கவுன்ட் டவுனை ஆரம்பித்து விடுவார்கள். அதை நேரில் பார்த்துக்கொண்டிருப் போம். 10,9,8 என்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சந்திரயான் விண்ணில் சீறிப்பாய்ந்தபோது நான் தாய்மையை உணர்ந்தேன். அதனால் தான் முதன்முதலாக ஊடகங்கள் என்னைக் கேட்டபோது. “Our baby is on the way to the moon” என்று சொன்னேன்.

கேள்வி: கோதவாடி என்ற குக் கிராமத்தில் பிறந்த நீங்கள் இன்று அறிவியலால் இவ்வளவு உயரத்தை எட்டியிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

பதில்: இதே கேள்வியை, கர்நாடாக வில் ஒரு மாவட்டத்தில், ஏறத்தாழ 15,000 மாணவர்களுக்கு முன்னால் ஒரு பெரியவர் கேட்டார். இதற்கான பதிலை நீங்கள் தமிழிலேயேகூடச் சொல்லுங்கள். நான் கன்னடத்தில் மொழி பெயர்க்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னார். நான் நிறைய இடங்களில் சொன்னது தான்; செம்மொழி மாநாட்டில் கூட அதைத்தான் சொல்லியிருக்கிறேன். தாய் மொழியில் படித்தது எனக்குச் சுய சிந்தனையை உருவாக்கியது. அதாவது 70 கலங்கள் விண்வெளிக்குப் போயிருந் தாலும். மற்றவர்கள் செய்ததை நாங்கள் பின்பற்றவில்லை.

நாங்கள் சுயமாக சிந்தித்துச் செய்தோம். அதனால்தான் 69 கலங்கள் செய்ய முடியாததை 70 ஆவது கலமாக நாங்கள் விண்ணில் செலுத்திய சந்திரயான் செய்தது. இந்த சுய சிந்தனைக்குக் காரணம் கண்டிப் பாகத் தாய்மொழிக் கல்விதான் என்பதை நான் உணர்கிறேன்.

கேள்வி: சந்திரயான் _ 1 ஒவ்வொரு இந்தியனுக்கும் என்ன செய்திருக்கிறது, அதாவது ஒவ்வொரு இந்தியனுக்கும் அதனால் பயன் என்ன?

பதில்: ஏன் நிலவுக்குப் போகவேண் டும் என்பதற்கான 200 காரணங்களை முன்வைத்து ஒரு பெரிய புத்தகமே போட்டிருக்கிறார்கள். இந்தியாவின் மக்கள் தொகை இரண்டாம் இடத்தில் இருக்கிறது. என்பது நமக்குத் தெரியும். கூடிய விரைவில் முதல் இடத்திற்குப் போகக்கூடும் என்று ஆய்வுகள் சொல் லுகின்றன. நாளை ஒரு அமெரிக் காவோ, ஒரு ஆஸ்திரேலியாவோ நிலவில் உருவாகும்போது, இந்தியனுக்கும் அங்கே முழு உரிமையும் இருந்தே தீரவேண்டும். அதற்கான முதல் படி சந்திரயான் _ 1. இது 200 காரணங்களில் ஒரு காரணம் மட்டுமே, சந்திரயானுக்கு முன்பு, இந்தத்துறைக்கு நாங்கள் 40 பேரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந் தெடுப்போம். அதற்கு வெறும் 2000 பேர் மட்டும்தான் விண்ணப்பிப்பார் கள். ஆனால் சந்திரயானின் வெற்றிக் குப் பிறகு 1 இலட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். சந்திரயானுக்கு முன்பு 13 கலங்கள் செய்திருக்கிறேன். ஆனாலும் என்னை அடையாளம் காட்டியது சந்திராயான் _1 தான். தனிப்பட்ட மனிதனுக்கு மட்டு மல்ல, இன்று அறிவியல் துறையில் இந்தியாவின் முகவரியாகவே சந்திர யான்_ 1 அறியப்பட்டுள்ளது.

கேள்வி: நிலவின் மேற்பாறைகளில் உள்ள ஹீலியம் 2 அய் நாம் எப்படி உருக்கிக் கொண்டு வர முடியும்? அது ஒரு unstable எனும்போது அதை மின்சாரம் தயாரிக்க எப்படிப் பயன்படுத்த முடியும்?

பதில்: நிலவிற்கு மனிதர்கள் போனால் அங்கும் தண்ணீர் வேண்டும், மின்சாரம் வேண்டும்_ இல்லையா? அங்கிருக்கிற தண்ணீரை இங்கே கொண்டுவருவதற்காக இல்லை. இங்குள்ள தண்ணீர்த் தேவையை அங்கேயிருந்து கொண்டு வந்து நிறைவு செய்துவிட முடியாது. ஆனால் அங்கே போகும்போது அங்கு தண்ணீர் தேவை. அதே நேரத்தில் அங்கே மூலப் பொருள்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வது. மனிதன் எங்கே போய் இறங்கலாம் என்பதை அறிந்துகொள்ளத்தானே ஒழிய அங்கிருக்கின்ற மூலப்பொருள் களை எல்லாம் இங்கே கொண்டு வந்து விடுவதற்காக இல்லை. அப்படி அங்கி ருந்து ஏதாவது கொண்டு வருவதாக இருந்தால் ஹீலியம் _ 3 அய் மட்டும் தான் கொண்டு வருவோம். அதுவும் சில டன்கள் மட்டும்தான் கொண்டு வரலாம். மற்றபடி அங்கே இருப்ப வற்றை ஆராய்ச்சி செய்வது என்பது எதிர்காலத்தில் மனிதன் அங்கு போய் இறங்கும்போது எந்த இடத்தில் இறங் கினால் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்குத் தான்.

கேள்வி: சோதிடம் என்பது அறிவி யலா? வானத்திலுள்ள கோள்களைச் சோதிடர்கள் தங்களுக்குச் சாதமாக்கிக் கூறுகிறார்கள். இதைப்பற்றி தங்க ளுடைய கருத்து என்ன?

பதில்: இந்தக் கேள்விக்கு என்னு டைய சொந்தக் கருத்தைச் சொல்கிறேன். நான் என்னுடைய பதினொன்றாம் வகுப்புத் தேர்வுக்கான முடிவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு சோதிடர் எனக்குச் சோதிடம் பார்த்துவிட்டு என்னுடைய அப்பா விற்கு மேலே உனக்குப் படிப்பு இல்லை என்று சொன்னார்.

என்னுடைய அப்பா பத்தாவது வரை படித்திருக் கிறார். அவர் அன்றைக்குச் சொன்னது. நான் எஸ்.எஸ்.எல்.சிக்கு மேலே தேற மாட்டேன். அது எந்த அளவிற்குப் பலித்திருக்கிறது என்பது இப்போது உலகத்திற்கே நன்றாகத் தெரியும். அன்று அந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எங்கள் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். ஆக என்னு டைய அனுபவத்தில் சோதிடம் என்பது ஒன்றுமேயில்லை. அறிவியல் பூர்வ மாகப் பார்த்தால் சோதிடமும், வானி யலும் ஒன்று இல்லை. அறிவியல் படி அது சரியல்லை என்பது என்னுடைய கருத்து.

கேள்வி: செவ்வாயை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்ற இன்றை சூழ்நிலையிலும், ஆக்டோபஸ் சையும், கிளி சோதிடத்தையும் நம்பிக் கொண்டிருக்கிறோம். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்: இது மூடநம்பிக்கையை விட மோசமான நம்பிக்கை. அந்த ஆக்டோ பஸ் பாவம்! அந்தக் கொடியினுடைய கலர் பிடித்து, அது போயிருந்திருக்க லாம். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி யான உணவைச் சாப்பிடப்பிடிக்காமல் அது வேறு பெட்டிக்குப் போயிருக்கிறது. மூன்று நான்கு நாள்களாகத் தொடர்ந்து ஜெர்மன் கொடி உள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவையே சாப்பிட்டதால், அடுத்த நாள் அது பிடிக்காமல் அடுத்த பெட்டிக்குப் போயிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். அதைப்போய் இவர்கள் ஏதேதோ சொல்லி பரப்பரப்பாக்கி விட்டார்கள். அதே போலத்தான் கிளி சோதிடமும்.

(நன்றி: அறிவியல் தமிழ் பிப்ரவரி - மார்ச் -2011)

அம்பேத்கரின் 22 உறுதி மொழிகள் -கி.வீரமணி ,தலைவர் திராவிடர் கழகம்


 


அம்பேத்கர் அவர்கள் புத்த நெறியை பின்பற்றிய பொழுது மொத்தம் 25 உறுதிமொழிகளை பின்பற்றுகின்றார்.புத்தம் சரணம் கச்சாமி! தம்மம் சரணம் கச்சாமி ! சங்கம் சரணம் கச்சாமி ! என்று இந்த மூன்று உறுதி மொழிகளை ஏற்கின்றார் .அடுத்து 22 உறுதிமொழிகளை ஏற்கின்றார்.

ஏனென்றால் இது அறவே மறைக்கப்பட்டு விட்டது.

நான் இந்த தலைப்பில் பேச வேண்டும் என்று வந்ததே இப்படி மறைக்கப்பட்ட பல செய்திகளை இங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அம்பேத்கர் அவர்கள் எழுதி கொடுத்து தயாரித்த உறுதி மொழி .இந்த உறுதிமொழியை அம்பேத்கர் அவர்களும் சொல்லுகின்றார்.

அவரோடு சேர்ந்து ஐந்து லட்சம் பெரும் நாகபுரியில் ,தீட்க்ஷா பூமி என்று சொல்ல கூடிய இடத்தில சேருகிறார்கள்.

அம்பேத்கர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை இங்கு படிக்கின்றேன்.

=> 1) "நான் பிரம்மா ,விஷ்ணு ,சிவன் ஆகியவைகளை கடவுளாக மதிக்க மாட்டேன் ". அவர்களை வணங்க மாட்டேன்.(அம்பேத்கர் அவர்கள் ஏற்று கொண்ட முதல் உறுதிமொழி இது தான்.அம்பேத்கர் பெயரை சொல்லி விட்டு இந்து கடவுள்களின் படங்களை மாட்டிகொண்டிருக்கலாம?)

=> 2) இராமனையோ ,கிரிஷ்ணனையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன் .அது மட்டுமல்ல அவர்களை நான் கும்பிட மாட்டேன்.வணங்க மாட்டேன்.

=> 3) இந்து மதத்தில் உள்ள கடவுள்களான கவுரி அல்லது கணபதி அல்லது இந்து மதத்தில் சொல்லபடுகின்ற எந்த கடவுளையும் வணங்க மாட்டேன்.ஏற்க்க மாட்டேன்.

=> 4) கடவுள் என்பவர் அவதாரம் எடுத்தார் என்ற கருத்தை நான் ஒரு போதும் ஏற்க்க மாட்டேன்.(ஏனென்றால் புத்தரையே அவதாரம் என்று சொல்லி விட்டனர் பாருங்கள் .அவதார் என்ற சமஸ்கிரத வார்த்தைக்கு என்ன பொருள் என்றால் மேலேயிருந்து கீழே இறங்குதல் என்று பொருள்)

=> 5) புத்தர் என்பவர் மாகாவிஷ்ணுவினுடைய அவதாரம் என்பது இருக்கின்றதே ஒரு போதும் அந்த பிரசாரத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன்.(அது மட்டுமல்ல அந்த பிரச்சாரம் பொய்யானது.குறும்பு தனமானது)

=> 6) சிரார்த்தம் கொடுப்பதும் பிண்டம் போடுவது ,இந்த மாதிரி சடங்குகளை ஒரு போதும் இனி நான் செய்ய மாட்டேன் .

=> 7) பார்பனிய மதம் தான் இந்து மதம் .இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை.புத்த நெறியில் தம்மதிர்க்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடமாட்டேன்.

=> 8) பார்பனர்கள் செய்யும் எந்த சடங்கிலும் நான் என்னை ஈடுபடுத்தி கொள்ள மாட்டேன்.(இன்றைக்கு எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள்?அம்பேத்கர் படத்தை ஆர்.எஸ்.எஸ். காரர்களே மாட்டி வைத்து கொண்டு வித்தை காட்டுகிறார்கள்.இப்பொழுது அம்பேத்கர் கொள்கையை பரப்புவது முக்கியம்மல்ல .பெரியார்,அம்பேத்கர் கொள்கைகள் தானாக பரவும் .அதை தடுப்பதற்கு ஆள் கிடையாது.இப்பொழுது நாம் செய்ய வேண்டியது எல்லாம் கல்கியை பரப்புவது முக்கியம் அல்ல.கொள்கையை பாதுகாப்பது தான் மிக முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.திரிபு வாதங்களில் இருந்து பாது காக்க வேண்டும்.)

=> 9) எல்லா மனிதர்களையும் சமதுவகமாககருதுவேன்

=> 10) நான் சமத்துவத்திற்காக தான் பாடுபடுகிறேன்

=> 11) புத்தர் சொன்ன எட்டு வழிகலான நேர்மை ,நியாயம் ,ஒழுக்கம் போன்ற அந்த எட்டு வழிகளையும் நான் கடை பிடிப்பேன்.

=> 12) புத்தர் சொன்ன 10 உறுதிமொழிகளை நான் ஏற்பேன்.

=> 13) நான் எல்லா மனிதர்களுக்கும் கருணை காட்டுவதும்,அவர்களை அலட்சிய படுத்தாமல் அவர்களை பற்றிய சிந்தனைக்கு ஆளாவேன்.

=> 14) நான் திருட மாட்டேன்.

=> 15) நான் பொய் சொல்ல மாட்டேன்

=> 16) நான் எந்தவிதமான தீய போதிக்கும் அடிமை ஆக மாட்டேன்.

=> 17) நான் மதுவை குடிக்க மாட்டேன்.

=> 18) புத்த நெறியின் தம்மம் என்கிற அறவழியில் உள்ள மூன்று கொள்கைகள் ஆன தியானம் ,சீலம் ,கருணை என்னும் அடித்தளங்கள் மீதே என் வாழ்கையை அமைத்து நடப்பேன்.

=> 19) மனித இனத்தின் என்னுடைய பழமையான குடியானவர் வகுப்பாரின் முன்னேற்றத்தை தடுத்தும்,அந்த மனித பிறவிகளை இழிவானவர்களாக சம உரிமை அற்றவர்களாக எண்ணி ஒடுக்கியதும் இந்து மதமே.எனவே அத்தகைய இந்து மதத்தை நான் துறக்கிறேன்.
=> 20) இதுதான் (இப்படி இந்து மதத்தை துறந்து வெளியேறுவதுதான்) உண்மையான தம்மம் என்கிற அறவழி என்பதாக புரிந்து கொள்கிறேன்.

=> 21) ஒரு புதிய பிறவியை (இப்பொழுதான் ) எடுத்திருப்பதாக நான் எண்ணுகிறேன்.

=> 22) இந்த நேரம் முதல் இனிமேல் புத்தருடைய போதனைகள் வழியே நடந்து கொள்வேன் என்னும் சூளுரையை எடுத்து கொள்கிறேன்.

=> 23) புத்தமே எனக்கு அடைக்கலம்

=> 24) தம்மமே எனக்கு அடைக்கலம்

=> 25) சங்கமே எனக்கு அடைக்கலம்

இன்னொரு கருத்தை மிகவும் ஆழமாக அம்பேத்கர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.கடவுள் ஆத்மா என்பதெல்லாம் புத்த கொள்கை அல்ல.

இன்னும் கொஞ்சம் ,கொஞ்சம் சிலர் நழுவி சிலர் என்ன சொல்கின்றார்கள் என்றால்,கடவுளை பற்றி கவலை படாதே என்று புத்தர் சொன்னார் என்று சொல்லுகின்றனர்.

ஆனால் புத்தர் தெளிவாகவே சொல்லி விட்டார் கடவுள் இல்லை என்று .கேள்வி கேட்கின்றார்கள் .அப்பொழுது கடவுளை பற்றிய கருத்தை சொல்லுகின்றார்."கடவுள் தான் உலகத்தை உண்டாக்கினார் ;மனிதனை உண்டாக்கினார் என்றால் ,எல்லாம் அவன் செயல் என்று சொன்னால்அப்புறம் மனிதனுக்கு என்ன வேலை?" என்று அம்பேத்கர் கேட்டார்.
பக்கம் (44,45,46,47,48)
அவர் நாஸ்திகர்

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர் .அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர் .அவர் தனது சொந்த அறிவை உபயோகித்தது தான் கண்டதை தைரியமாக எடுத்து சொல்லி இருக்கிறார்.நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்து சொல்ல பயப்படுவார்கள்.அவர் இது போலல்லாமல் தைரியமாக எடுத்து சொல்லி வந்திருக்கிறார்.
--தந்தை பெரியார் ,இந் நூல் பக்கம் 81

அம்பேத்கருக்கு மாபெரும் துரோகம்

நண்பர்களே நம்முடைய நாட்டில் நம் நண்பர்களில் பல பேர் கூட பவுத்தத்தை பற்றி பேசுகிறார்கள்.அம்பேத்காரை பின்பற்றி விட்டோம்.நாங்களும் பவுத்தத்தை பின்பற்றி விட்டோம் என்று சொல்லி விட்டு, எல்லா இந்து கடவுள்களின் படங்களையும் ஒன்று விடாமல் டஜன் கணக்கில் மாட்டி வைத்து கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் படங்களை மாட்டி வைத்து கொண்டு,அம்பேத்கர் அவர்களுடைய படத்தையும் மாட்டி வைத்து கொண்டிருந்தால் ,இதை விட அம்பேத்கருக்கு செய்யக் கூடிய மாபெரும் துரோகம் வேறு இருக்க முடியாது.

ஏனென்றால் தலைவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவது,அம்பேத்கர் ஜெயந்தி என்று சொல்வது ,சிலைக்கு மாலை போடுவது - இதுதான் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் காட்டுகின்ற மரியாதையா? அவருடைய கொள்கைக்கு திரிபுவாதம் இல்லாமல் நடக்க வேண்டும்.அம்பேத்கர் அவர்கள் எதை சொன்னாரோ அதை கடை பிடிக்க வேண்டும்.
--கி.வீரமணி ,இந்நூல் பக்கம் 44

'தம்மம்' என்றால் என்ன ? தர்மம். புத்த நெறி என்ன?புதர் கற்பித்த அறவழி ."புத்தம் சரணம் கச்சாமி ,தம்மம் சரணம் கச்சாமி ,சங்கம் சரணம் கச்சாமி " என்று இந்த அமூன்று வாக்கியங்களை புத்தரின் தொண்டர்கள் உச்சரிப்பார்கள்.
என்னை புதரிடத்தில் ஒப்படைத்து கொள்கிறேன்.அதாவது பகுத்தறிவு சிந்தனைக்கு ஒப்படைத்து கொள்கிறேன் என்று பொருள் .இரண்டாவது தம்மம் சரணம் கச்சாமி என்று சொல்லுகின்ற பொழுது ,அந்த கொள்கையில் மாறாமல் இருப்பேன் .அந்த கொள்கையில் என்னை ஒப்படைத்து கொள்கிறேன்.
மூன்றாவதாக ,சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகின்ற பொழுது ,அந்த அமைப்புக்கு நான் என்றைக்கும் துரோகம் செய்யாமல் ,அந்த அமைப்பை பாதுகாத்து பரப்புபவனாக இருப்பேன் என்பது தான் அதன் பொருள்.