ஞாயிறு, 1 ஜனவரி, 2012

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் 4


தொடர் -4
சர்வ வல்லமையுடைய இறைவனால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டவர், இறைச்செய்தியை மக்களிடையே கூறவந்தவர், இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தவர் சராசரி மனித வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்களால் அற்பமான இன்பங்களை நாடிச் செல்ல மாட்டார்கள் என்றும், அவர்கள் உணர்ந்து கொண்ட பேரின்பத்தின் முன் இந்த உலகமும் அதன் இன்பங்களும் அற்பமானவைகளே என்றும் நினைத்துக் கொண்டேன்

நிலையற்ற இவ்வுலக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி நிலையான மறுஉலகவாழ்க்கையைத் தொலைத்துவிட வேண்டாம் என்பதே முஹம்மது நபி உலக மக்களுக்கு  அச்சமூட்டி கூறிய உபதேசங்கள். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் உடல் தேவைகளுக்கானது அல்ல.  இது நிச்சயமாக, ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க செய்து கொண்ட திருமணங்கள்தான் என்பதை குழப்பமடைந்த எனது மனதிற்கு உணர்த்த  விரும்பினேன்.

நபி (ஸல்) அவர்களின்   மனைவியர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சமுதாய காரணங்கள் என்னவென்பது தெளிவாகும். விளக்கங்களை அறிந்து கொள்ள மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன் அவை எனக்குப் போதுமான தகவல்களைத் தரவில்லைஎனவே விரிவான செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக இணையதள வலைக்குள் இறங்கினேன்.

"The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food."இது ஆயிஷா அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு நம்பகமான ஹதீஸ்.

வாசனை திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு - அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமான மூன்று உலக விஷயங்கள். (வேறு சில அறிவிப்புகளில், முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்தமான உலக விஷயங்கள், வாசனை திரவியங்களும், பெண்களுமே என காணப்படுகிறது)

"பெண்களை மிகவும் பிடிக்கும்" என்பதன் பொருள் அன்பு செலுத்துவதைக் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும், அதனால் தான் அவர்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தின் காரணமாகவே இவ்வளவு திருமணங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். ஆதரவற்ற பெண்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்குவதற்காக அனைத்து பெண்களையும், நபி (ஸல்) அவர்களே திருமணம் செய்து கொள்வதுதான் சரியான தீர்வா?

நபி (ஸல்) அவர்கள், தானே திருமணம் செய்து கொண்டிருப்பதைவிட தனது உத்தம நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலுமே?, அல்லது அவர்களுக்கு வேறு வகைகளில் உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க முடியுமே?

என் மனதில் பலவிதமான எதிர்க்கேள்விகள் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வேறொரு ஹதீஸ் கண்களில் பட்டது.
Ibn Sad's  “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.
…The apostle of Allah said, "Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men."

(அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.)

ஜிப்ரீல் (கேப்ரியேல் என்ற தேவ தூதன்) அல்லாஹ்வின் வஹீ செய்திகளைக் கொண்டு வந்தார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதை அறிவேன். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்வதற்கு மருந்துகளையும் கொண்டு வந்தாரா?
இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரீல் மூலமாக "வயாக்கரா"வை விட வீரியமிக்க மருந்துகளை வழங்கினான் என்று சொல்லலாம்.

அப்படியானால், முஹம்மது நபியின் இத்தனை திருமணங்களுக்கும் அடிப்படைக் காரணம்  என்ன?

எண்ணற்ற மனைவியர்களுடன் உல்லாசம் காண்பதற்காகத்தான்.

அல்லாஹ்வின் செய்தியை கூற வந்தவருக்கு இந்த பாலியல் வலிமை எந்த வகையில் உதவும்?  நாற்பது ஆண்களுக்கு சமமான வலிமை துன்பத்திலிருப்பவருக்கு உதவவோ, தன்னை இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவோ வழங்கப்படவில்லைஅற்ப உணர்வுகளில் உல்லாசம் காணவே  நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் வலிமை வழங்கப்படடுள்ளது. என்னுடைய உறுதியான நம்பிக்கைகள் ஆட்டம் காணத் துவங்கியது. மேற்கண்ட ஹதீஸ்களைக் கண்டவுடன்  நபி (ஸல்), பெண் மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கான அடிப்படை விளங்கியது.

எனவே நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையையும், பாலியல் பலத்தையும்  ஹதீஸ்களின் வழியாக எட்டிப்பார்த்தேன். முஹம்மது நபியின் மனைவியர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டவைகளில் சிலரைப்பற்றிய சுருக்கமான செய்திகள்.
முஹம்மது  நபியின் மனைவியர்கள்  பற்றிய செய்திகள்

1. கதீஜா

நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி. அவர் அந்த சமுதாயத்தில் நல்ல செல்வாக்கும், செல்வச் செழிப்பும்  உடைய ஒரு பெண்மணி. இன்றைய மதிப்பில் சுமார் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்திற்கு அதிபதியாக இருந்தார் என்று ஃபாத்திமா (ரலி) வாழ்வில் நடந்த படிப்பினை சம்பவங்கள்  (பாகம்-1) என்ற நூலில் பன்னூலாசிரியர் மௌலானா மௌலவி S.S.முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் மன்பயீ காதிரி என்ற அறிஞர் கூறுகின்றார். (இந்திய மதிப்பின்படி சுமார் 36,800 கோடி ரூபாய் நம்ப முடிகிறதா? ) கதீஜா  அவர்களது  உறவினர் குழைமா என்ற பெண், வேலை தேடிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை, இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்நபி (ஸல்) பரம ஏழையான ஒரு இளைஞர். நபி (ஸல்) அவர்களின் அழகினால் கதீஜா கவரப்பட்டார். திருமண பேச்சை முதலில் துவங்கியவரும் இவரே. இவர் ஏற்கெனவே இருமுறை விதவையானவர் முந்தைய கணவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தன்னைவிட பதினைந்துவயது இளையவரான நபி (ஸல்)  மீது மையல் கொண்டார். தன்னுடைய நாற்பதாம் வயதில் இருபத்தி ஐந்து வயதான நபி (ஸல்) அவர்களை, சில எதிர்ப்புகளை மீறி மூன்றாவதாக திருமணம் செய்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்த நபி (ஸல்)  இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
தன்னை மணந்து கொள்ளுமாறு முஹம்மதிற்கு செய்தியை அனுப்பிவிட்டு, அதே சமயத்தில் தனது தந்தையார் குவைலித்-தை வீட்டிற்கு வரவழைத்து, வேண்டிய அளவிற்கு மதுவைப் பருகவைத்து, நல்ல அங்கியை அணிவித்து, வாசனை திரவயங்கள் தடவி உட்கார வைத்தார். ஒரு மாட்டை அறுத்து விருந்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, முஹம்மதின் பெரிய தகப்பனார்களுக்கும் அழைப்பு கொடுத்தார். அவர்கள் வந்த பிறகு, குடிபோதையிலிருந்த கதீஜாவின் தகப்பனார் குவைலித் (என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல்), கதீஜாவை முஹம்மதிற்கு திருமணம் செய்து வைத்தார். போதை நீங்கியதும் அவர் கேட்ட முதல் கேள்வி,  “இந்த மாட்டிறைச்சி, வாசனை திரவயங்கள் கோடுபோட்ட புதிய அங்கி இவைகள் இங்கு வந்ததெப்படி?” என்றார். அதற்கு கதீஜா, “நீங்கள் தானே என்னை முஹம்மது பின் அப்துல்லாவிற்கு திருமணம் முடித்து  வைத்தீர்களே  தெரியவில்லையா?” என்றார்.
"நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். மெக்காவிலேயே சிறந்த ஆண்கள் இருக்கையில், வேறொருவருக்கு மணம் முடித்து வைக்க என்னால் முடியாது. என் அருமை மகளை முஹம்மதுவைப் போன்ற ஊர்சுற்றி, வெறும் பயலுக்கு எப்படி மணம் செய்து வைத்திருக்க முடியும்?” என்றார்.
முஹம்மதின் பெரிய தகப்பன்மார்கள் கோபமடைந்து, இந்த  உறவை ஏற்படுத்தியதே உங்கள் மகள் கதீஜாதான் என்றனர். கதீஜாவின் தந்தை வாளை உறுவினார். இருதரப்பும் சண்டைக்குத் தயாரானார்கள் . நிலைமை வீபரீதமாவதை உணர்ந்த கதீஜா நடந்தவைகளைக் கூறி தன்னுடைய திட்டத்தை ஒப்புக் கொண்டவுடன், அவரது தப்பனாரால் எதுவும் பேச முடியாமல் போனது. பின், இருதரப்பும் சமாதான பேச்சுவார்த்தைகளைத் துவங்கின. (Persian Tabari, Volume-3, Page 832)
 இவர்களின் திருமணம் கிபி 595 ல் நிகழ்ந்தது. கதீஜா அம்மையாரின் பெரும் செல்வமும் முஹம்மது நபியின் நிர்வாகத்தின் கீழ்வந்தது. கதீஜா அம்மையாரின் வயது ஏறக்குறைய நபி (ஸல்) அவர்களின் தாய்க்கு சமமான வயது.  இவர்களுக்கு காசிம், தைய்யிப், தாஹிர் என்ற ஆண்  குழந்தைகளும், ஜைனப், ருக்கையா, உம்மு குல்தும் மற்றும் ஃபாத்திமா என்ற பெண் குழந்தைகளும் இருந்தனர், ஆண் மக்கள்  குழந்தைப் பருவத்திலேயே  இறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் கதீஜா அவர்களுடனான திருமண வாழ்க்கையில்  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தனிமையை நாடி ஹீரா குகையில் இருப்பதையே விரும்பினார்.
குடும்பத்தையும்கதீஜா அவர்கள் திறம்பட நிர்வகித்து வந்த வியாபாரத்தையும் முஹம்மது நபி (ஸல்) சரியாக கவனிக்கவில்லை. அவர் தனது குடும்பத்திற்காக எவ்விதமான வியாபாரத்திலோ அல்லது  தொழிலிலும் ஈடுபடவில்லை. குழந்தைகளையும், பொறுப்பின்றி இருக்கும் கணவனையும் வியாபாரத்தையும் ஒருசேர கதீஜாவால் கவனிக்க முடியவில்லை. இதன் காரணத்தால் கதீஜாவின் வியாபரம் நொடிந்து, சுமார் 36,800கோடி ரூபாய் மதிப்புடைய செல்வங்கள் அனைத்தும் கரைந்து குடும்பம் தரித்திர நிலையைடைந்தது. இவ்வளவு செல்வத்தையும் ஒன்றுமில்லாமல் செய்தது முஹம்மது நபியின் மகத்தான சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இறுதிக் காலத்தில் அணிவதற்குக் கூட நல்ல ஆடைகளின்றி, மிகவும் வறுமையில் வாழ‍ந்தாகவும் ஹதீஸ்கள் கூறுகிறது. இன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார் 264,000 கோடி ருபாய்களை  இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பதிமுன்று ஆண்டுகள் பிரச்சாரத்தில், 264,000 கோடி  செலவு செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் என்பதிற்கும் குறைவான அவர்களையே இஸ்லாமில் இணைக்க முடிந்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் நிறைந்திருக்கும் முரண்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணம். அன்றைய மெக்கா நகரத்தில் ஆயிரம் குடும்பங்கள் இருந்ததாகக் கொண்டாலும் முஹம்மது நபி தனது பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 264 கோடி ரூபாய்களை செலவு செய்ததாகவே பொருள் தருகிறது. ஒரு கோடி ரூபாய் என்பது இன்றைய காலத்திலும் மிகப்பெரிய செல்வம்தான் அப்படியானால், ஆயிரக் கணக்கானவர்கள் மிகப்பெரும் செல்வத்தில் திளைத்திருக்க வேண்டும், பெரும் பணக்காரர்கள் நிறைந்த நகரமாக மெக்கா மாறியிருக்க வேண்டுமே? இப்படியொரு மாற்றம் நிகழ்ந்ததா? உங்களால் இந்தச் செய்தியை நம்பமுடிகிறதா?
 கதீஜா கிபி 619 அல்லது 623-ல் மரணமடைந்தார் குறிப்பிடப்படுகிறது. கதீஜா அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்கள்  தனிமையில் வாழ்ந்தார்.HYPERLINK  \l "Safiya"
நபி (ஸல்) அவர்களுக்கு, நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் பலம் கதீஜா அம்மையாரின் மரணத்திற்கு பிறகே வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால், கதீஜா  அவர்கள் உயிருடன் இருந்தவரை வேறு எந்த பெண்ணையும் அவர் நாடிச் சென்றதாக ஆதாரங்கள் எதுவுமில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக