திங்கள், 2 ஜனவரி, 2012

அல்லாவின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது

அல்லாஹ் எங்கே இருக்கிறான், காட்டு என்று கேட்டு ரொம்ப தொந்தரவு செய்யும் நாத்திக பதிவர்களுக்கு இதோ அல்லாஹ் இருக்கும் கிரகம் என்று அடையாளம் காட்டி,  சவுக்கடியும்  செருப்படியும் அளித்துள்ள நமது கார்பன் கூட்டாளி பதிவர் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். அல்லாஹ் உங்களுக்கு நன்றாக கூலி கொடுப்பானாக.

என்ன? முழிக்கிறீர்களா?

இப்போது அல்லாஹ்வே அப்படி முழித்துகொண்டிருப்பான் என்பதையும் அறியுங்கள். ஆகவே நீங்கள் மட்டுமே தனியாக முழிக்கவில்லை.

கார்பன் கூட்டாளி பதிவர்  தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன் என்ற பெயரில் அறிவியலை தோண்டோ தோண்டு என்று தோண்டி அல்லாஹ்வையே கண்டுபிடித்து விட்டார்.

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக)
இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

(அல் குர்ஆன் 70:4–7)

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:

அதாவது அல்லாஹ் இருக்கும் இடத்துக்கு பூமியிலிருந்து வானவர்கள் (மலக்குகள்) மேலேறி செல்வார்கள். அதற்கு 50000 ஆண்டுகள் ஆகும்.

இப்போது மலக்குகளின் வேகம் என்ன என்ற கேள்வி வருகிறது இல்லையா? நமது இஸ்லாமிய அறிவியலாளரான கார்பன் கூட்டாளி ஒரு நெஞ்சம் நெகிழும் ஹதீஸை இங்கே ஆதாரத்துக்கு காட்டுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.  அறிவிப்பவர் : 
ஆயிஷா(ர­)

நூல் : முஸ்லிம் (5314)

நமது கார்பன் கூட்டாளி கூறுகிறார் 

இறைவன் தான் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விதிகளுக்குட்பட்டவையே

அத்தோடு இன்னொன்றையும் நமது கார்பன் கூட்டாளி கண்டு அறிந்து கூறுகிறார். அதையும் கேட்போம்.
ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம்99.999999……%C (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.

இன்னொன்றும் கூறுகிறார்
அடுத்த வசனமாக 70:4 மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்,வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று     கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளதால் அவர்களது வேகம் ஒளிக்கு சமமானது!  ஆஹா! இதுவல்லவா, ஹதீஸ் ஒளியை வைத்து, ஒளிக்கே டார்ச் அடிப்பது என்பது! இப்போது தெரிகிறதா அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்பது?

ஆகவே நமது கார்பன் கூட்டாளி பதிவரின் கூற்றுப்படி, வானவர்களும் செய்தியும் ஒளிக்கு சற்று குறைவான வேகத்தில் சென்றதால், அவர்களது உணர்வில் ஒரு நாள் செலவழித்தமாதிரி உணர்வார்கள். ஆகவே அவர்களது அதிகபட்ச வேகம் ஒளியின் வேகம்தான்.  

ஒளி ஒருவருடம் பிரயாணம் செய்யும் தூரத்தை ஒரு ஒளிவருடம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  அதாவது light year.

இது நம்ம சூரியனும், சுற்றிவரும் பூமியும். எதுக்குன்னு கேட்கக்கூடாது.. பாக்க அழகா இருக்குன்னு போட்டிருக்கேன்

சூரியனை சுற்றி வரும் மூன்றாவது கல்தான் நாம் வாழும் பூமி. இதுக்குத்தான் வானவர்களை(மலக்குகளை) அல்லாஹ் அனுப்பி வைக்கிறான்.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்று நபி(ஸல்) அவர்களும், அதனை வைத்து  ஒளி வேகத்தில் பயணம் செய்கிறார்கள் என்று  கார்பன் கூட்டாளியும் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் செல்ல 50000 வருடங்கள் ஆகிறது என்றால், அல்லாஹ் இருக்குமிடம் 50000 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கிறது என்று பொருள்!

ஆகவே, நமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தொலைவில் அல்லாஹ் இருக்கிறான்!

நமது பால்வீதி காலக்ஸி சுமார் 100000 ஒளிவருடங்கள் விட்டமுடையது.



அதாவது நமது பூமி சுற்றும் சூரியனை மையமாக வைத்துகொண்டு 50000 ஒளிவருடத்தை ஒரு ஆரமாக வைத்துகொண்டு வட்டம் வரைந்தால் அந்த வட்டத்தின் விளிம்பில்தான் அல்லாஹ் இருக்கிறான்! 

நமது இஸ்லாமிய புனித பூமியான சவுதி அரேபியா உடனே நாஸாவுடன் ஒப்பந்தம் போட்டு உலக மகா டெலஸ்கோப்புகளை உருவாக்கி 50000 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கும் கிரகங்களை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் கீழ்க்கண்ட வசனங்களில் பூமியிலிருந்து செய்திகள் அவனது கெரஹத்துக்கு செல்ல 1000 ஆண்டுகளாகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.


22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.


நமது இனிய இஸ்லாமிய அறிவியலாளர் கார்பன் கூட்டாளி, அல்லாஹ் காலம் வெளி டார்க் மேட்டருக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக இருந்தாலும், அவன் உருவாக்கிய பொருட்கள் எல்லாம் விதிப்படியே இயங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆகையால் பூமியிலிருந்து செய்தியும் விதிப்படிதான் இயங்க வேண்டும். எந்த ஒரு செய்தியும் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லமுடியாது என்று ஈன்ஸ்டீனின் சார்வியல் விதி கூறுகிறதல்லவா?

ஆகையால் இந்த செய்திகளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய 1000 ஆண்டுகளாகிறது என்று சொல்கிறது. ஆகவே அல்லாஹ் இருக்கும் கெரஹம் நமது பூமியிலிருந்து 1000 ஒளிவருட தொலைவில் இருக்கிறது என்று ஆகிறது.  இப்போது நமக்கு சிக்கல் இருப்பதை கவனித்திருக்கலாம்.

ஒளியால் உருவான வானவர்கள் ஒளிவேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய 50000 ஒளிவருட தொலைவு ஆகிறது.  ஆனால் செய்திகள் 1000 ஒளிவருடத்திலேயே இந்த கெரஹத்தை அடைந்துவிடுகின்றன. அப்படி அடைய வேண்டுமென்றால், அவை ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணம் செய்தே ஆகவேண்டும் அல்லாஹ்வுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றாலும், அல்லாஹ்வுக்கு மேல் அதிகமாக அறிந்த கார்பன் கூட்டாளி செய்திகளின் வேகம் அல்லாஹ் உருவாக்கிய இயற்கை விதிகள் படித்தான் இருக்க வேண்டும் என்று கடிவாளம் போட்டுவிட்டாரே என்று கவலையாக இருக்கிறது.

இருப்பினும் கார்பன் கூட்டாளிக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது தெரியும். அவர் இதற்கு மேல் அங்கண இங்கண ரெண்டு படம் சுட்டு போட்டு, அங்கண இங்கண ரெண்டு ரெபரன்ஸ் போட்டு தலையாட்ட காத்திருக்கும் மூஃமின்களுக்கு “ஏதோ சொல்றான்யா.. ஏதோ நாத்திக காஃபிர்களை அடிக்கிறேன்னு  சொல்றான்.. சப்போட்டு பண்ணிவப்பம்” என்று சந்தோஷமாக சப்போட்டு பண்ண ஒரு பதிவு எழுதிவிடுவார். நம்பலாம்யா.


ஆகவே நம் உயிரினும் மேலான கண்ணின் மணி நபிஹள் நாயஹெத்தின் உயிரை கையில் வைத்திருக்கும் அல்லாஹ் நம்மோட லோக்கல் காலக்ஸியில்தான் இருக்கிறான்.

நம்மோட காலக்ஸி இக்கணூண்டு சின்னது. இந்த காலக்ஸியின் விட்டமே 100000 ஒளிவருடங்கள்தான். அது ஆயிரமோ ஐம்பதினாயிரமோ,  நம்ம காலக்ஸியிலதான் அல்லாஹ் இக்கான்.  நமது காலக்ஸியில் இருக்கும் நம் சூரியன் மாதிரியான நட்சத்திரங்கள் 200 பில்லியன் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அதில் ஏதோ ஒரு சூரியனை சுற்றும் ஒரு கிரகத்தில்தான் அல்லாஹ் இருக்கிறான்.

அதுவும் எந்த மாதிரியான கெரஹம் என்பதற்கான க்ளூவையும் அல்லாஹ் தருகிறான். !

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.


 மனிதர்கள் வாழும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் ஒரு நாள்.
மனிதர்களது பூமியின் கணக்கில் ஆயிரம் ஆண்டுகளை வைத்துகொள்ளுங்கள்.  அல்லாஹ் இருக்கும் கெரஹம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மனிதர்களது கணக்கில் ஆயிரம் ஆண்டுகளாகிறது என்று பொருள்!

ஆஹா! இந்த மாதிரி ஒரு கெரஹத்தை கண்டுபிடிச்சா போதும்யா! அல்லாஹ்வை பிடிச்சிடலாம்!

இப்ப நமது பூமியை பற்றியும் அதன் இருப்பிடத்தையும் பற்றி கண்டுகொள்வோம்
நாம் இருக்கும் சூரியனை சுற்றி 12 ஒளிவருடங்கள் தொலைவுக்குள் கீழ்க்கண்ட நட்சத்திரங்கள் இருக்கின்றன.







நம் சூரியனை சுற்றி 250 ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திரங்கள் (சூரியர்கள்) இருக்கின்றன



நமது சூரியனை சுற்றி 5000 ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன


நம் கேலக்ஸி 100000 ஒளிவருடங்கள் விட்டமுடையது. இதில் நமது சூரியன் இருக்குமிடம்



நம்ம காலக்ஸியை சுற்றி பல கேலக்ஸிகள் இருக்கின்றன.  500,000 ஒளிவருடங்கள் தொலைவுக்குள்ளாகவே 13  கேலக்ஸிகள் இருக்கின்றன.  ஒவ்வொரு காலக்ஸியிலும் இதே மாதிரி 10 பில்லியனிலிருந்து 200 பில்லியன் வரைக்கும் நட்சத்திரங்கள் இருக்கின்றன.





ஐந்து மில்லியன் ஒளிவருடங்கள் சுற்றி பார்த்தால், 49 பெரிய காலக்ஸிகள் இருக்கின்றன. அதில் சுமார் 700 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

இந்த லோக்கல் குரூப் ஒரு பெரிய காலக்ஸி கூட்டத்தின் பகுதி அதன் பெயர் விர்கோலிஸ் க்ளஸ்டர்


இந்த விர்கோலிஸ் க்ளஸ்டர் ஒரு பெரிய கூட்டத்தின் ஒரு பகுதி


நடுவில் விர்கோலிஸ் க்ளஸ்டரை வைத்து நாமாக போட்ட ஒரு படம். இதுதான் விர்கோ க்ளஸ்டர் இருக்கும் சூப்பர் க்ளஸ்டர்

இந்த சூப்பர் க்ளஸ்டர் நம்மால் அறியக்கூடிய பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அவ்வளவுதான்.





அவ்வளவெல்லாம் தேட வேண்டாம் என்று நமது கேலக்ஸிக்குள்ளாகவே அல்லாஹ் இருக்கிறான் என்று கண்டுபிடித்து கூறியிருக்கும் கார்பன் கூட்டாளியின் தலை மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!

22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். 

பூமி மேல வானம் விழ்ந்துடாம அல்லாஹ் தன்னோட கெரஹத்திலேர்ந்து உக்காந்துகிட்டே  புடிச்சிகிட்டிருக்கான்.  அப்பப்ப மலக்குகளும் (வானவர்கள்), ஜின்களும் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து நம்ம பூமி கெரஹம் வரைக்கும் வந்து போய்ட்டு இருக்காங்க.  அவங்க அல்லாஹ்  ஜிப்ரீலிடம் சொல்லி அனுப்பிச்சி அவர் இங்க வந்து சேர்ரதுக்கு ஆயிரம் வருடம் ஆகியிருக்குன்னு வேற கவனிக்கணும்.  அவங்க கிளம்பி 50000 வருடங்கள் கழித்துத்தான் பூமிக்கு வந்து சேர்வார்கள். ஆனால், இங்கே இருக்கும் செய்திகள் அல்லாஹ்விடம் போக 1000 வருடங்கள் ஆகும். உதாரணமாக, ஈஸா நபியை சாகடிக்க யூதர்கள் பிளான் பண்ணிகிட்டு இருந்தது அல்லாஹ்வுக்கு தெரியவேண்டுமென்றால், அந்த செய்தி அல்லாஹ்விடம் போவதற்கு அவரது ஒரு நாள், அதாவது மனிதர்களது 1000 வருடங்கள் ஆகும்.  அப்புறம் எப்படி அல்லாஹ் அந்த சதித்திட்டத்தை மறு சதித்திட்டம் போட்டு முடித்தார் என்று தெரியவில்லை. அல்லாஹ்வே அறிவான். அல்லது நம்ம கார்பன் கூட்டாளி அறிவார்.  ஆனால், நபிகளின் மனைவிமார்கள் ரவுசு பண்ணிகொண்டிருந்தால்,  நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு  எச்சரிக்க வேண்டுமென்றால் உடனே வஹி எறங்கிடும். அதற்கெல்லாம் 1000 வருடங்கள் ஆகாது.  அதுவும் அல்லாஹ்வே அறிவான். அல்லாஹ் அறியாவிட்டாலும், கார்பன் கூட்டாளி பதிவர் அறிவார்.

இப்ப ஜிப்ரீல் வந்ததை ஆராய்வோம். நம்ம ஹிஜ்ரி (கிபி 622) ஆரம்பிச்சப்ப ஜிப்ரீல் வந்திருக்கார்னு வச்சா  இந்த வருஷம் 2011. அதாவது 2011-622 = 1389 வருடங்கள் ஆகிவிட்டன.

அதாவது அவர் அல்லாஹ்வோட கிரகத்திலேர்ந்து கிளம்புவது சுமார் 50000-622 என்று வைத்துகொண்டால், கிமு  49378 ஆம் ஆண்டிலேயே நமது ஜிப்ரீல் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து கிளம்பிட்டார். அவர் இங்க வந்து சேர்ரதுக்கு கிபி 622 ஆய்டிச்சி.  ஸோ..  நபிஹள் நாயஹம் சாவுற வரைக்கும் வஹி எறக்கி வஹி எறக்கி கிபி 632இல் தன்னோட 62ஆம் வயசிலேயே செத்தவுடனே அப்பாடான்னு ஜிப்ரீல் கிளம்பி அல்லாஹ்வோட கெரஹத்துக்கு கிளம்பி போயிருப்பார். அவர் போய் சேரதுக்கு இன்னும் 50000+632 = அதாவது கிபி. 50632இல்தான் போய் சேர்வார். நான் சொல்லலைன்ங்கண்ணா. கார்பன் கூட்டாளி சொல்றார். நான் அவர்  சொன்னதை கொஞ்சம் விலாவாரியாக மூஃமின்களுக்கு வெளக்குகிறேன். அவ்வளவுதான்.

இப்ப முகம்மது செத்தது அல்லாஹ்வுக்கு தெரியுமா? தெரியும். எப்படி?

நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கிபி 632 இல் செத்தார். 632+1000 அதாவது கிபி 1632ஆம் வருடம் அல்லாஹ்வுக்கு இந்த செய்தி சென்றுவிட்டது என்று அறியவும்.  ”ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.”

ஓகேயா?

ஓகே இப்போது நபிஹெள் நாயஹெம்  மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்  கூறியதெல்லாம், அவராக வாய்க்கு வநதபடியெல்லாம் உளறியது இல்லை,  அல்லாஹ் உட்கார்ந்திருக்கும்  இந்த கெரஹத்திலிருந்து எறக்கியது என்று இஸ்லாமிய அறிவியல் மூலமாக நிரூபித்துவிட்டோம்,  ஆகவே இந்த அல்லாஹ்தான் காஃபிர்களின் தலையை வெட்டு என்று கூறியிருக்கிறான் என்பதை அப்படியே நம்பி காஃபிர்களின் தலையை வெட்ட கிளம்புவோம்.

இப்போ ரெபரன்ஸ்... ஏன் எதுக்கென்னு எல்லாம் கேட்கக்கூடாது. எவ்வளவு லிங்க் போடறமோ அவ்வளவுக்கு நாம நெறய படிச்சவங்கன்னு மூஃமின்கள் நினைப்பார்கள் இல்லையா?

References:
http://www.rediff.com/news/slide-show/slide-show-1-cornered-im-can-still-hit-back-with-a-vengeance/20110916.htm 
http://www.onlinepj.com/Test/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/293/http://senkodi.wordpress.com/2010/08/03/time-space/
http://senkodi.wordpress.com/2010/01/13/about-sky/
http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=451:2009-01-26-03-53-15&catid=37:2008-07-26-14-12-36&Itemid=58
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://www.tamilquran.in/t293.php
http://ennamopo.blogsome.com/2005/12/09/61-janus-face-of-islamhttp://rajaghiri-online.blogspot.com/2011/06/blog-post.html
http://jahangeer.in/?p=63
http://www.atlasoftheuniverse.com/milkyway.html

நன்றி: பகடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக