ஞாயிறு, 1 ஜனவரி, 2012

எது தியாகம்? அல்லது எது தியாகத் திருநாள்?




          தியாகம் என்றவுடன் முஹம்மதியர்களின் நினைவிற்கு வருபவர்கள் இப்ராஹிமும்(Abraham), இஸ்மாயீலுமே. நீங்கள் இணையதளத்தில் தியாகம்(Sacrifice) என்று தேடினால் கிடைக்கும் முடிவுகளில் இவர்களிருவருமே பெரும்பான்மையாக இருப்பார்கள். யூதர்களும், கிருஸ்துவர்களும்  மற்றும் முஹம்மதியர்களும் தங்களை இப்ராஹிமின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றனர்.

முஹம்மதியர்களின் நம்பிக்கை இப்படி கூறுகிறது :
இன்றைக்கு சற்றேறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த அல்லாஹ்வின் தூதரான இப்ராஹிம் தன்னுடைய தள்ளாதவயதிலும்(85) தனது அடிமைப்பெண்(பணிப்பெண்) ஹாஜிராவுடன் செய்த லீலைகளின் காரணமாக இஸ்மாயில் என்ற மகனை பெற்றெடுக்கிறார். குழந்தைப்பேறு இல்லாத இப்ராஹிமின் வயதான மனைவி சாராவினால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது சக்களத்தி ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் வெறுக்கிறார் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற நினைக்கிறார். அதற்கேற்றவாறே, ஹாஜிராவையும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் ஆளரவமற்ற பாலைவன வெயிலில் விட்டுவிடுமாறு அல்லாஹ்வும் இப்ராஹிமிடம் கட்டளையிடுகிறான்.

 ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் சில உணவுப் பொருட்களுடன் அரேபியப் பாலைவனத்தில், ஸபா, மர்வா எனும் இரண்டு குன்றுகளுக்கு அருகில் தன்னந்தனியே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் ஓடிவந்துவிடுகிறார். கைவசமிருந்த உணவும் குடிநீரும் தீர்ந்ததும் பிரச்சனை துவங்குகிறது.  தாகத்தாலும் பசியாலும் வீறிட்டு அழும் குழந்தைக்காக உதவிதேடி அங்குமிங்குமாக அலைமோதுகிறார் ஹாஜிரா. நாதியற்றுப்போன தங்களுக்கு உதவிசெய்ய வழிப்போக்கர்கள் யாரேனும் தென்படமாட்டார்களா? என அங்குமிங்குமாக அலைபாய்கிறார். அப்பொழுது ஒரு வானவர் குழந்தையின் அருகே தோன்றி தன் கையிலிருக்கும் தடியினாலோ அல்லது தன்னுடைய சிறகினாலோ தரையை தட்டுகிறார். உடன் அந்த இடத்திலிருந்து நீர் குமிழியிட்டு வெளியேறுகிறது. குழந்தை இஸ்மாயீல் காலால் அழுது உராய்த்த இடத்திலிருந்து நீர் பீறிட்டுக் கிளம்பியதாகவும் சொல்லப்படுகிறது. "ஸம் ஸம்" என்று கூறி அந்த நீரை ஹாஜ்ரா தனது கைகளால் அணைகட்டித் தடுக்கிறார். அவர் அவ்வாறு தடுக்கவில்லையெனில் அந்நீர்  ஆறாக பெருக்கெடுத்து ஓடி அப்பகுதியை செழிக்கச் செய்திருக்கும் என்பதும் முஹம்மதியர்களின் ஜதீகம். கிணறாக சுருங்கிய அந்நீரைக் குடித்து பாலைவனத்திலிருந்து தப்பிப் பிழைத்து மீண்டும் இப்ராஹீமையே வந்தடைகின்றனர்(?). 

       ஆண்டுகள் பதிமூன்று கடந்ததும் அடுத்த களம் தயாரானது. அல்லாஹ், இப்ராஹிமிற்கு இஸ்ஹாக் என்ற மகனைக் கொண்டு நற்செய்தியை (கு 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28) தனது தூதர்கள் வாயிலாக கூறுகிறான்  இதைக்கேட்ட  தொண்ணூறு வயதான அவரது மனைவி சாரா நம்பமுடியாமல் தனது முகத்திலறைந்தவாறு சப்தமிட்டு சிரிக்கிறார் (கு 11:72,51:29). அல்லாஹ்வின் அற்புதத்தால் மாதவிடாய் அறவே நின்றுபோன மூதாட்டி சாரா, இஸ்ஹாக் என்ற மகனைப் பெற்றெடுக்கிறார்.  இஸ்மாயீலின் மீதான சாராவின் வெறுப்பு அதிகமாகிறது. (இதற்கு வாரிசுரிமை, இஸ்ஹாக்கிற்கு தாய்பாலை மறக்கச்செய்யும் நிகழ்சியின் பொழுது சாராவை கேலி செய்ததது, இஸ்ஹாக்கை வழிகொடுத்து விடுவாரோ என வருத்தப்பட்டது என்று சில காரணங்களை யூதக்கதைகள் சொல்கிறது)

        இம்முறை அல்லாஹ் கடுமையான உத்தரவை வெளியிடுகிறான். இஸ்மாயீலை அறுத்து தனக்கு பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கனவில் கட்டளை பிறப்பிக்கிறான். முதலில் கனவை அலட்சியம் செய்தவர், அல்லாஹ்வின் வற்புறுத்தல் தாங்க முடியால் பதிமூன்று வயதான மகன் இஸ்மாயீலை நரபலி கொடுப்பதென்று முடிவு செய்கிறார்.  அதற்கென ஒரு நாளைக் குறித்து யாருமற்ற ஓரிடத்தில் மகனை நரபலியிட மகனை அழைத்தச் செல்கையில் இப்ராஹிமின் நரபலியை தடைசெய்ய முயன்ற சைத்தானை கல்லெறிந்து விரட்டுகிறார். மகனின் ஆலோசனைக்கேற்ப முகம் குப்புறக்கிடத்திய நிலையில் வைத்தவாறு மகனை அறுத்து பலியிட முயற்சிக்கிறார். பாறையையே இரண்டாக பிளக்கும் வாளால் சிறுவனின் கழுத்தை அறுக்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கையில், நரபலி சோதனை முடியுற்றதாகக்கூறி ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இப்ராஹிமின் இந்நரபலி முயற்சி "அல்லாஹ்வின் நண்பர்" என்ற தகுதியை அவருக்குப் பெற்றுத்தந்தது. இதன் நினைவாகத்தான் "பக்ரீத்" - ஆட்டுத் திருநாள் - தியாகத்திருநாள் என்று உலக முஸ்லீம்கள் ஆட்டை அறுத்துப் பலியிடுகிறார்கள்.  இப்ராஹீமின் நரபலி முயற்சியைத்தான் மாபெரும் தியாகமாக இஸ்லாம் போற்றுகிறது. முஹம்மதியர்களின் ஐந்தாவது கடமையான ஹஜ் சடங்குகளும் இதைத்தான் நினைவுகூர்கிறது.

       இதில் முஹம்மதியர்கள், இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது இஸ்மாயீலைத்தான் இஸ்ஹாக்கை அல்ல என்று கூறி பழைய ஏற்பாட்டுக்காரர்களுடன் மோதலுக்கும் நிற்கிறார்கள். யூதர்கள் இஸ்ஹாக்கின் வழித்தோன்றல்களாகவும் இஸ்மாயீல் அரேபியர்களின் தந்தையாகவும் அறியப்படுகின்றனர். யார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வமான வாரிசு? என்பதுதான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமிடையிலான பங்காளிச் சண்டையின் அடிப்படை

இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது யாரை? யூதர்களின் நீண்டகால நம்பிக்கைக்கு எதிரான கருத்தை முஹம்மது கூறினாரா?

       குர்ஆன், இஸ்மாயீலைத் தூதரென்றும் நல்லடியரென்றும் கஅபா புணரமைப்புப் பணியில் (கு 2:127) ஈடுபட்டதாக பெயரைக் குறிப்பிட்டு கூறுகிறது.  எனவே நபர்களின் பெயரைக் குறிப்பிடுவதில் குர்ஆனுக்கு எவ்வித தயக்கமுமில்லையென்பது தெளிவாகிறது.

ஆனால், மிக முக்கியமான, சர்ச்சைக்குறிய நரபலி நிகழ்ச்சியை (கு 37:100-108) மகனின் பெயர் குறிப்பிடப்பிடாமல் கூறுகிறது. முஹம்மதிய அறிஞர்கள், குர்ஆன் 37:10-108 வசனங்களில், வழக்கம்போல அடைப்புக்குறிகளுக்குள் இஸ்மாயீலை நுழைத்து தாங்கள் விரும்பியவாறு பொருள் விளங்கச் செய்துவிட்டனர்.   ஆனால் குர்ஆன் 37:101,112&113 வசனங்களை அவர்கள் சரிவர கவனிக்க(!) மறந்தது விட்டனர்.

 அல்லாஹ்வால் நன்மாராயம் கூறப்பட்ட மகனையே நரபலி சோதனைக்கு உட்படுத்தியதாகக் குர்ஆன் 37:101 கூறுகிறது. குர்ஆனின் 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28 வசனங்கள், இஸ்ஹாக்கை, அல்லாஹ்வால் நற்செய்தியின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட மகனென்று உறுதி செய்கிறது

நரபலி சோதனையில் வெற்றியடைந்த இப்ராஹிமிற்கு வாழ்த்துக்களைக் கூறுகையில்(கு 37:108-111) இஸ்ஹாக்கை தனது தூதராக தேர்வுசெய்த நற்செய்தியை இப்ராஹிமிற்கு தெரிவித்ததாக குர்ஆன் 37:112 கூறுகிறது. முஹம்மதியர்கள் கூறுவதைப் போல  நரபலி (கு 37:100-108) முயற்சிக்குள்ளானவர் இஸ்மாயீலாக இருப்பின், தன்மீதுள்ள இரக்கத்தின் காரணமாக அல்லாஹ்வின் ஆணையை செயல்படுத்துவதில் தந்தையாருக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக தன்னை முகம் குப்புறகிடத்தியவாறு அறுக்க வேண்டுமென்றெல்லாம் ஆலோசனை கூறி, மயிரிழையில் உயிர் பிழைத்தவரை அடியோடு மறந்து விட்டு, இவ்விடத்தில், இஸ்ஹாக்கை நபியாக தேர்ந்தெடுத்ததைக்கூறி வாழ்த்த வேண்டிய அவசியமில்லையே?

       யூதர்களின் நீண்டகால நம்பிக்கைக்கு எதிராக இஸ்மாயீலை முன்நிறுத்துவது முஹம்மதின் நோக்கமாக இருந்திருக்குமானால் பெயரைக் குறிப்பிட்டு உறுதியாக கூறியிருப்பார். உதாரணத்திற்கு, கிருஸ்துவத்தின், இயேசு இறைமகன் என்ற வாதத்தை மறுப்பதற்காக, இயேசுவைப்பற்றி குறிப்பிடும் பொழுதெல்லாம் "மரியமின் மகன் ஈசா" என்று அவரது தாயின் பெயருடனே குறிப்பிட்டு தனது வாதத்தை வலியுறுத்துகிறார். கிருஸ்த்துவத்ததின் அடிப்படையான இயேசுவின் சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முஹம்மது வன்மையாகவே மறுக்கிறார். எனவே, நரபலி நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் முஹம்மது கூறியதை பின்னுள்ளவர்கள் திரித்துவிட்டனர் எனலாம்.

மேலும், இப்ராஹிம், தனது அடிமைப்பெண் ஹாஜிராவையும், மகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் தவிக்கவிட்டு சென்ற பிறகு நீண்டகாலத்திற்குப் பின்னரே இஸ்மாயீலைத் தேடிவந்ததாக புகாரி ஹதீஸ் கூறுகிறது

புகாரி 3364 -ல் இருந்து,
…. அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அஙகே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார்/ இஸ்மாயீலின் அன்னை தன் அருகே இருக்க முன்னே சென்று/ நாஙகள் உஙகளிடம் தஙகிக் கொள்ள எங்களுக்கு நீஙகள் அனுமதியளிப்பீர்களா என்று கேட்க/ அவர்கள்/ ஆம் (அனுமதியளிக்கிறேன்)/ ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர். (ஜுர்ஹும் குலத்தார் தஙகிக்கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு/ அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்... என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே/ அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப/ அவர்களும் (வந்து) அவர்களுடன் தஙகினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சோர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள்/ தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே/ இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர்/ எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள்
எனவே, இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது இஸ்மாயீலைத்தான் என்பது முஹம்மதியர்களின் குருட்டுநம்பிக்கையாகவே இருக்க முடியும். இது முஹம்மதிய அறிஞர்களின் இட்டுக்கட்டுதல்களுக்கு மேலும் ஓரு உதாரணம். இப்ராஹிம்-ஹாஜிரா-இஸ்மாயீல் இவர்களின் தன்னலமற்ற(?) தியாகத்தை நினைவு கூறுவதாக செய்யப்படும் ஹஜ் கிரியைகளுக்கும் சடங்குகளுக்கும் தேவையென்ன

சரி இவர்கள் இந்தக் கட்டுக்கதைகளின் மூலம் மனிதர்களுக்கு போதிப்பது தியாகமா? எது தியாகம்?
பிறர் நலனுக்காகத் தன்னலம் இழக்கும் தன்மையைத் தியாகம் எனலாம். இப்ராஹீம், பிறர் நலக்காகத் தன்னலம் கருதாமல் அப்படியென்ன தியாகம் செய்தார்? அதனால் மனிதகுலம் அடைந்த நன்மைகள் என்ன?
ஒன்றுமில்லை…!

இந்நரபலிக் கட்டுக்கதை, மனிதனுக்கு கற்பிக்கும் படிப்பினை தியாயாகமா?
தங்களது இறைவன் அல்லாஹ்விற்காக அனைத்தையும் இழக்கும் உயர்ந்த தன்மையையே இப்ராஹிம் நமக்கு உணர்த்துகிறார் என்று முஹம்மதியர்கள் பிரதாபிக்கின்றனர். இதன் பொருள், அல்லாஹ், மனிதாபிமானமற்ற தற்கொலைப்படை ஏதேனும் உருவாக்கும் திட்டத்திலிருக்க வேண்டுமென்பதைத்தவிர இவர்களிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

மனைவி மற்றும் குழந்தைகளைக் ஈவுஇரக்கமின்றி தவிக்கவிட்டுச் செல்வதுதான் தியாகமென்றால் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு ஆதரவற்றோர் இல்லங்களிலும் அநாதை இல்லங்களிலும்   இதன் சாட்சிகளைக் காணமுடியும்.

தியாகத்தின் பொருளை விளங்க சில உதாரணங்கள்.

மனிதகுலம் இன்றுவரை பல தியாகிகளையும் அதன் பலனையும் சந்தித்துள்ளது. அம்மை நோய்க்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்ச்சர், மருந்தை தமது செல்லக் குழந்தையின் மீதே சோதனை செய்து பார்த்தவர். தொழுநோயைக் கட்டுப்படுத்துகிற மருந்தைக் கண்டுபிடித்த இன்னொரு விஞ்ஞானி, தம்மீதே தொழுநோயை வரவழைத்து ஆராய்ச்சி செய்வதற்காக, தொழுநோயாளி ஒருவரின் தசையை அறுத்து விழுங்கி இருக்கிறார். இத்தகையவர்களின் அபாரமான தீரம், தியாகம், கருணை ஆகியவைகளை அனுபவித்துக் கொண்டே, மனைவியின் நச்சரிப்பிற்கும், மிரட்டல்களுக்கும் அஞ்சி, கனவையும், கடவுளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, வைப்பாட்டியின் மகனை நரபலி கொடுக்க முயன்ற காட்டுமிராண்டி கதைகளை தியாக வரலாறு எனக்கூறி போற்றிப் புகழ்வதற்கு பகுத்தறிவற்ற மதவாதிகளால் மட்டுமே முடியும்!

தஜ்ஜால்

(பின் குறிப்பு: எஜமானியின் வெறுப்பிற்குள்ளான பரிதாபத்திற்குரிய அடிமைப்பெண்ணையும் அவளது மகனையும் மட்டுமே குறிவைத்து வஹீயால் தாக்கிக் கொண்டிருந்த அல்லாஹ்வின் செயல் எனக்கு விநோதமாகவே தோன்றுகிறது. சாரா-இப்ராஹிம்-அல்லாஹ் இவர்களில் யார், யாருக்கு எஜமானர்?  என்றே புரியவில்லை! )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக