ஞாயிறு, 1 ஜனவரி, 2012

எது மண்ணுக்கேற்ற மார்க்கம்..


1) மண்ணுக்கேற்ற மார்க்கமாக இஸ்லாம் என்ற போது எந்த மண்ணுக்கு  சீன மண்ணுக்கா  இந்திய மண்ணுக்கா அரபுமண்ணுக்கா என்ற கேள்வி வருவது இயற்கை.

2) அதுபோல் இந்த மார்க்கத்தின் பிரதான கடமைகள் இஸ்லாமிய உழைக்கும் மக்களுக்கா அல்லது மூளையுழைப்பும், வணிகமும் செய்கின்ற முஸ்லிம்களுக்கும்,  பெரும் முதலாளிகளுக்குமா என்ற சந்தேகமும் வராமல் இல்லை.

3) தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் உள்ளிட்ட அடிப்படை கடமைகள் வசதி படைத்தவர்கள்,  ஓய்வில் இருப்பவர்கள் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருப்பதுவே மண்ணுக்கேற்ற மார்க்கமாக மட்டும் இல்லை, உழைக்கும் முஸ்லிம்களுக்கே உகந்த மார்க்கமாக இஸ்லாம் இல்லை என்பதையே தெளிவாக காட்டுகிறது.

4) அறிவுபூர்வமான மார்க்கம் என்று விஞ்ஞானரீதியாக போலியான விளக்கங்களை சொல்லிக் கொண்டிருக்கும்  தடாலடி பயில்வான்களை நாம் பார்த்திருக்கிறோம்

முஸ்லிம்களின் இறுதிக்கடமையெனச் சொல்லப்படும் ஹஜ்கடமையை நிறைவேற்றும் போதான சடங்குகளைப் பார்த்தால் உங்களுக்கே என்ன சொல்லத் தோன்றுகிறது.

5) கோவிலை சுற்றி வருவதைப் போல் கபாவைச் சுற்றி ஏழு முறை வலம் வருதல்

6) சபா மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுதல்

7) பழங்குடி அரபுகளின் கல் வணக்கத்தின் எச்சமாக சொர்க்க முத்திரைக் கல்லென ஹஸ்ருல் அஸ்வத் கறுப்புக் கல்லைமுத்தமிடுதல்

8) மக்காவின் எல்லைப்புறம் மினாவில் தங்கி அங்கு சின்ன ஷைத்தான் பெரிய ஷைத்தானை கல் எறிதல்

9) ஊர்ப்புற சாமிகளுக்கு ஆடு கிடா வெட்டி கொடை நடத்துவதுபோல் ஆடு , ஒட்டகம் பலியிடுதல் (40 லட்சம் மக்கள் பலியிடுகிறார்கள் என்றால் நிலைமையை யோசித்துப் பாருங்கள்)

10) திருப்பதிக்கு போய் மொட்டை போடுவதுபோல் ஹஜ்ஜில் முடியை நீக்கி மொட்டையடித்துக் கொள்ளுதல்


இதுதான் மண்ணுக்கேற்ற மார்க்கத்தின் அற்புத அறிவுபூர்வ கடமையா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக