வியாழன், 19 ஜனவரி, 2012

இஸ்லாமிய பேராசிரியர் சல்மான் ஹமீத் பரிணாம கொள்கைக்கு ஆதரவு



நண்பர்களே
நாம் பரிணாம கொள்கை  குறித்த தேடல் புரிபவர்கள் என்பதும் அதனை முறையாக கற்றும் வருகிறோம்.பொதுவாக ஆபிரஹாமிய மதங்கள்(யூதம்,கிறித்தவம் ,இஸ்லாம்) சார்ந்த பிரச்சாரகர்கள் பரிணாமத்தை எதிர்த்து வருகிறார்கள் என்பதை அறிவோம்.பரிணாம கொள்கை இஸ்லாமிய உலகில் மிக அதிகமாக் எதிர்ப்பை சந்திக்கும் அறிவியல் கொள்கை என்றால் மிகையாகாது.இஸ்லாமிய நாடுகளில் பரிணாமம் கற்பிக்கப்படுகிறதா என்ற விவரம் அறிய ஆவல் உண்டு என்றாலும் அவ்விவரங்கள் சரியாக கிடைப்பது இல்லை.

நமக்கு பிடித்த பதிவுலக சகோதரர்  ஒருவரின் பதிவில் இஸ்லாமிய நாடுகள்   அறிவியல் முன்னேற்றத்திற்கு அதிக பொருட்செலவில் சில திட்டங்களை முன்னெடுக்கின்றன என்ற செய்தியை அறிய முடிந்தது.

அவர் குறிப்பிட்ட கட்டுரை படித்த போது திரு சல்மான் ஹமீத் என்னும் பேராசிரியர் பற்றியும் இஸ்லாமிய உலகில் அறிவியல் கல்வி பரப்ப அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் தெரிந்தது.இவரை தமிழர்களுக்கு அறிமுகப் படுத்துவது நம் கடமை என்று எண்ணியதுதான் இப்பதிவு.

இவர் நம் சகோதர நாடு பாகிஸ்தானை சேர்ந்தவர்.இப்போது இங்கிலாந்தின் ஹாம்ப்சயர் கல்லூரியில் பேராசியராக பணியாற்றுகிறார்.


இது அவருடைய தளம்.அறிவியலும் மதமும் முரண் என்பது தவறு என்கிறார்.பரிணாம் கொள்கைக்கு கூட ஆதரவு அளித்து மத புத்தகத்தில் அறிவியல் தேடுவது அவ்சியம் இல்லை அதில் ஆன்மீகம் மட்டுமே தேடவேண்டும் என்று கூறும் இவரை பாராட்டாமல் இருக்க இயலவில்லை.

அறிவியல் வளரும் போது இவர் போன்றவர்கள் உருவாவது காலத்தின் கட்டாயம்.இவர் போன்றவர்களை முன் உதாரண்மாக கொண்டால் உண்மையாகவே இஸ்லாமிய நாடுகள் அறிவியலில் முன்னேறும் என்பதில் நமக்கு ஐயமில்லை.

கேளுங்கள் பேராசிரியர் சல்மான் ஹமீத்தின் காணொளி உரையை!!!!!!!!!!!! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக