திங்கள், 2 ஜனவரி, 2012

மர்ம இரவு...!

ஆரம்பத்தை நோக்கி என்ற தொடரில் “மனைவியின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்என்ற தலைப்பில் சில குர் ஆன் வசனங்களையும் அதன் பின்னணியிலுள்ள ஹதீஸ்களையும் அவற்றிலுள்ள முரண்பாடுகளையும் பார்த்தோம் மீண்டும் அதே வசனங்களை வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.
குர்ஆன் வசனம் 24:11 நிச்சயமாக எவர்கள் (நபியின் மனைவியான ஆயிஷா மீது) அவதூறைக் கொண்டுவந்தார்களோ அவர்களும் உங்களில் ஒருகூட்டத்தினர்தாம்; (வ்வாறு நேர்ந்த)தை உங்களுக்கு தீமை என்று நீங்கள் எண்ண வேண்டாம். எனினும் (இறுதியில்) அது உங்களுக்கு நன்மைதான்; (அவதூறு சொன்ன) அவர்களிலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் பாவத்திலிருந்து அவன் சம்பாதித்தது (தண்டனை) உண்டு; அவர்களிலிருந்து எவன் இதனுடைய பெரும் பங்கை சுமந்து கொண்டானோ அவனுக்கு மகத்தான வேதனை உண்டு.
குர்ஆன் வசனம் 24: 12 இதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் தங்களுடைய மனங்களில் நல்லதையே எண்ணி, இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?
குர்ஆன் வசனம் 24: 13 இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவ்வாறு சாட்சிகளைக் கொண்டுவராத பொழுது அவர்கள்தாம் பொய்யர்கள்.
குர்ஆன் வசனம் 24: 16  அதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (யா அல்லாஹ்) நீ மகாத் தூய்மையானவன் இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?
கீழே உள்ள ஹதீஸ் சற்று பெரியதுதான், எனவே நமது தலைப்பிற்குத் தேவையானவற்றை மட்டும் பார்ப்போம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். ....
நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாஙகள் மதீனாவை நெருஙகிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தஙகும்படி அறிவிப்புச் செய்தார்கள்.நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்;...
படையினர் சென்ற பிறகு நான் (தெலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு நான் அவர்கள் தஙகியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அஙகு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தஙகியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அஙகு அமர்ந்து கொண்டேன். படையினர் நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூஙகி விட்டேன்.
ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார்....
அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாஙகள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தஙகி விட்டிருந்தார்கள்
(புகாரி 2661)
மேற்கண்ட குர் ஆன் வசனத்தின் பின்னணி இதுதான். அதாவது இயற்கைத் தேவைகளுக்காக படையினர் முகாமிட்டிருந்த இடத்தைவிட்டு சற்று தொலைவிற்கு சென்றவர் (இரவலாக வாங்கி அணிந்திருந்த) கழுத்தணி தவறிவிட்டதை உணர்ந்து தேடும் முயற்சியில் கடுமையாக ஈடுபடுகிறார். இந்த விவகாரத்தை முஹம்மது உட்பட மற்றெவரும் அறிந்திராத காரணத்தால், ஆயிஷா படையினரைத் தவறவிடுகிறார். பின் அங்கேயே உறங்கியும் விடுகிறார். அங்குவரும் ஸஃப்வான், ஆயிஷாவின் நிலைமையை உணர்ந்து தன்னுடன் அழைத்துக் கொண்டு மற்ற படையினருடன் இணைத்து விடுகிறார். அதற்குள் ஆயிஷா-ஸஃப்வான் தனிமை சந்திப்பை அடிப்படையாகக் கொண்டு கிசுகிசு பரவிவிடுகிறது.
இந்த விவகாரம் முஹம்மதின் கோட்டைக்குள் குத்து-வெட்டு உருவாகுமளவிற்கு பூதாகரமாகிறது. எப்பொழுதும் முஹம்மதின் அங்கிப்பையிலிருந்து உடனுக்குடன் வெளியாகும் குர்ஆன் வசனங்கள் இம்முறை வேலைநிறுத்தம் செய்துவிட்டது. ஒரு மாதகாலத்திற்குப் பிறகு ஆயிஷா குற்றமற்றவர் என அல்லாஹ்வால் அறிவிவிக்கப்பட்டது என்கிறார் ஆயிஷா. இந்த வாகுமூலம் எந்த அளவிற்கு உண்மை?
இஸ்லாமில் தயமும் என்றொரு சடங்கு உள்ளதை அறிவீர்கள். (தெரியாதவர்களுக்காக: உடலைத் தூய்மைப்படுத்த தண்ணீர் கிடைக்காத காலங்களில் மண், மணல், கல், சுண்ணாம்பு சுவர் கொண்டு முகம் கை, கால்களில் தேய்த்துக் கொள்வதை தயமும் என்பர்கள்) குர் ஆனும் இதை அனுமதிக்கிறது. இவ்வனுமதி எப்படி வந்தது? இன்னும் சில ஹதீஸ்களை காணலாம்.
...தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!
(குர் ஆன் 5:06)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கும் கைபருக்கும் இடையே) பைதா அல்லது தாத்துல் ஜைஷ் எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது (என் சகோதரி அஸ்மாவிடம் நான் இரவல் வாங்கியிருந்த) எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற் போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.
அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். அவர்கள் எதை எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலை வைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும் படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போது தான் தயம்மும் உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். ....
                                                                     (முஸ்லீம்)
    தற்சமயம், தயமும் என்ற மடத்தனம் நாம் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குத் தேவையில்லாதது. எனவே மற்ற ஹதீஸ்களை கவனிப்போம். கழுத்தணியை தேடுமாறு சிலரிடம் முஹம்மது கூறுகிறார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சகோதரி) அஸ்மாவிடம் கழுத்தணி ஒன்றை இரவல் வாங்கினேன். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) தொலைந்துபோய்விட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காக தம் தோழர்களில் சிலரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அவர்கள் அதைத் தேடச் சென்றனர்.) அப்போது (வழியில்) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் (உளூச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காததால்) உளூச் செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது (உளூச் செய்யாமல் தொழுதது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அப்போதுதான் தயம்மும் தொடர்பான (5:6ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
இதையடுத்து (என்னிடம்) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், தங்களுக்கு அல்லாஹ் நற்பலன் வழங்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் (இக்கட்டான) சம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான முகாந்திரத்தைத் தங்களுக்கும், அதில் ஒரு சுபிட்சத்தை முஸ்லிம் களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்.
(முஸ்லீம்)
ஒட்டகத்தை கிளப்பியபொழுது அதன் அடியில் கழுத்தணி இருந்தது.
......
-(இது குறித்து) அல்அகபா உறுதிமொழி அளித்த தலைவர்களில் ஒருவரான- உசைத் பின் அல்ஹுளைர் (ரலி) அவர்கள், அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இ(ந்தத் தயம்மும் எனும் சலுகையான)து, முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.
(முஸ்லீம்)
முதலில் பார்த்த ஹதீஸ், படை முகாமிட்ட இடத்தில் கழுத்தணி தொலைந்ததாகக் கூறியது. அடுத்தது, கழுத்தணி தொலைந்தாலேயே முஹம்மதின் படையினர் முகாமிட நேர்ந்ததாகக் கூறுகிறது. படைவீரர்கள், தங்களை தண்ணீரில்லாத இடத்தில் முகாமிட வைத்துவிட்டதாக ஆயிஷாவைக் குறைகூறுவதை ஏற்றுக்கொண்டு தண்டிக்க ஆயிஷாவின் தந்தை அபூபக்கரும் இருந்திருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக, அதிகாலை வரை தனது மடியில் முஹம்மது தலைவைத்துப் படுத்திருந்ததால் தன்னால் அசையக்கூட முடியவில்லை என்றும் கூறுகிறார் ஆயிஷா.
நிலைமை இப்படியிருக்க, இயற்கைத் தேவைகளுக்காக சென்றபொழுது கழுத்தணி தொலைந்தது, அதைத் தேடும் முயற்சியிலிருந்த பொழுது மற்றவர்கள் தன்னை விட்டுவிட்டுச் சென்றதாக ஒப்பாரி வைத்து பெரியதொரு கதையைக் கூறியது எதற்காக? மற்றவர்கள் அவதூறு கூறிவிட்டனர் என்று அல்லாஹ்வும்(!) வருத்தப்பட காரணமான, ஆயிஷா-ஸஃப்வான் தனிமைச் சந்திப்பு நிகழ்ந்தது எப்பொழுது?
கழுத்தணி தொலைக்கப்பட்டதை, முஹம்மது, அபூபக்ர் உட்பட படையினர் அனைவருமே மிக நன்றாகவே அறிவர். ஏனெனில் அனைவரும் புழுதியில் புரண்டுள்ளனர். இதற்கு காரணமான ஆயிஷாவின் நினைவு எள்ளவுமின்றி, இவர்கள் (முஹம்மது, அபூபக்ர், படையினர்) மறுநாள் மதியம்வரை கடத்தியதெப்படி?
உதாரணத்திற்கு, ஒருவர் தனது துணைவியுடன் செல்கிறார். பயணத்தின் பொழுது தன்னுடன் வந்த துணைவி என்ன ஆனார் என்பதை கவனிக்கமாட்டாரா? முஹம்மது அந்த அளவிற்கு பொறுப்பற்ற ஒரு மனிதர் என்பதையே இந்த ஹதீஸ் காண்பிக்கிறது.
அதிகாலை வரை முஹம்மது ஆயிஷாவுடனேயே இருக்கிறார், பிறகு ஆயிஷாவின் ஒட்டகத்தை கிளப்பும் பொழுது அதனடியில் கழுத்தணி கண்டெடுக்கப்பட்டுவிட்டது. பிறகு எப்படி ஆயிஷா முஹம்மதையும் அவரது படையினரையும் தவறவிட முடியும்? ஸஃப்வானை தனிமையில் சந்திக்க முடியும்?
இவைகள் எதுவும் நான் இட்டுக்கட்டி கூறியவைகளால்ல!. ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளவைகளை ஒருங்கிணைத்துக் காண்பிக்கிறேன் என்பதைத் தவிர வேறில்லை.

ஆயிஷா-ஸஃப்வான் சந்திப்பு நிகழ்ந்த்து எப்பொழுது?

குர் ஆன் 24:11-16 வரையுள்ள வசனத்தின் தேவையென்ன?

அந்த மர்ம இரவின் இருளில் புதைந்துள்ளது என்ன?...!

தஜ்ஜால்

பின்குறிப்பு :
திருமணம், திருவிழா இன்னும் இதர பொதுநிகழ்வுகளில் இரவல் பொருட்களிக் கொண்டு வெளிப்பகட்டுகளிக் காண்பிப்பவர்களை அன்றாடம் நாம் காணலாம். போர்க்களத்திற்கு செல்லும் பொழுது பகட்டு எதற்கு? ஒருவேளை, இவர்கள் போர்க்களத்தை பொழுதுபோக்க SHOPPINGசெய்யும் வியாபாரச் சந்தையாக நினைத்து விட்டனரோ?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக