வியாழன், 19 ஜனவரி, 2012

அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்றால் என்ன? பகுதி 2:


 

சென்ற பதிவில் இத்தொடர்பதிவை ஏன் எழுதுகிறோம் என்பதை மட்டும் பார்த்தோம்.

 

.இந்த பரிணாமம்/அறிவார்ந்த படைப்பு என்பதன் விவாதங்களை தமிழில் ஆவணப்படுத்தும் ஒரு ,சார்பற்ற முயற்சியாகவே இப்பதிவு எழுதப் படுகிறது. ஆகவே இத்தொடர் பதிவில் இக்கொள்கையாளர்களின் விளக்கங்களின் எளிமையான தமிழாக்கம் தருவது மட்டுமே நம் நோக்கம்.அறிவார்ந்த வடிவமைப்பு சரியா? இல்லையா? என்பதை இப்பதிவில் விவாதிக்கப் போவது இல்லை. இது ஏன் எனில் முதலில் தமிழில் முடிந்தவரை இக்கொள்கை சார்ந்த விவரங்களை ஆவணப்படுத்தி விட்டால் இரு கொள்கைகளையும் விவாதிப்பதை அறிவார்ந்த தமிழ் சான்றோர்  சமூகம் பார்த்துக் கொள்ளும். இதனை அடுத்த படியில் செய்யலாம் என நினைக்கிறேன்.  

 

இப்பதிவில் இன்னும் இதன் வரையறுப்பை அக்கொள்கையாளர்கள் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை கேள்வி பதிலாக  வெளியிடுகிறோம். மொழி பெயர்ப்போடு ஆங்கில மூலமும் கொடுப்பது அவசியம் என்றே கருதுகிறோம். மொழி பெயர்ப்பை மேம்படுத்தும்  கருத்துகளை நன்றியோடு வரவேற்கிறோம்.

இப்பதிவில் அதன் தெளிவான‌ வரையறுப்பை பார்ப்போம். இந்த கேள்வி பதில் அக்கொள்கையாளர்களின் முக்கியமான தளத்தில் இருந்து எடுக்கபட்டது.

1.முதலில் நுண்ணறிவு [Intelligence] என்றால் என்ன? என்பதை அறிவோம்.

இது பல பரிமாணம் உள்ள சொல் ஆகும்.இதற்கு பல விளக்கங்கள் உண்டு.எளிமையாக இப்படி சொல்லலாம்.
நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், தகவல் பரிமாற்றம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், கோர்வையாக சிந்தித்தல்,  கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் கூட குறிப்பிட்ட அளவு பெற்றுள்ளதாகவே கருதப் படுகிறது.  

2.அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை [Intelligent Design] என்றால் என்ன?

இது இயற்கையின் நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கான வடிவமைப்பை தேடும் ஒரு அறிவியல் ரீதியான ஆய்வு ஆகும்.இதில் பலதுறை அறிவியலாளர்கள், தத்துவ மேதைகள் ஆகியோர் பங்களிப்பு ஆற்றுகின்றனர்.
இக்கொள்கையின்படி பிரபஞ்சம், உயிரினங்கள் தோற்றம் உள்ளிட்ட பல செயல்கள், தன்மைகள் போன்றவை ஒரு  நுண்ணறிவு சார்ந்த காரணி மூலமே சரியாக‌[நன்றாக] விளக்க முடியுமே தவிர ஒழுங்கற்ற இயறகை தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றத்தினால் அல்ல.

ஒவ்வொரு இயற்கையின் நிகழ்வையும் அந்த காரணிகள் ஊடாக ஆய்வு செய்து அவை வடிவமைக்கப்பட்டே இருக்கின்றனவா இல்லை இந்நிகழ்வுகள் தானாக‌ நடைபெற வாய்ப்பு உண்டா அல்லது இரண்டும் சேர்ந்தா  என்பதின் மீதே ஆய்வு நடைபெறுகிறது. இந்த காரணிகளில் சில நுண்ணறிவு உரியவையாக உள்ளன் என்பதுதான் இக்கொள்கையின் மிக முக்கியமான‌ அம்சமாகும். இக்காரணிகளில் இருந்து பெறப்படும் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துவதாக் இக்கொள்கையாக்கம் முன்வைக்கிறது.எடுத்துக்காட்டாக உயிரினங்களின் உடல் செல்களில் உள்ள டி என் ஏ மூலக்கூறுகளில் உள்ள தகவல்கள்,பிரபஞ்சத்தில் (இபோதைய கருத்தின்படி) பூமியில் மட்டும் உயிர் வாழும் சூழ்நிலை ஏற்படும் விதமான் அமைப்பு,530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிடைத்த வளர்ச்சி பெற்ற கேம்பிரியன் படிமங்கள் ....போன்றவற்றை அறிவார்ந்த மூலக் காரணி என்பதற்கு சான்றாக முன் வைக்கின்றனர்.

What is intelligent design?

Intelligent design refers to a scientific research program as well as a community of scientists, philosophers and other scholars who seek evidence of design in nature. The theory of intelligent design holds that certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not an undirected process such as natural selection. Through the study and analysis of a system's components, a design theorist is able to determine whether various natural structures are the product of chance, natural law, intelligent design, or some combination thereof. Such research is conducted by observing the types of information produced when intelligent agents act. Scientists then seek to find objects which have those same types of informational properties which we commonly know come from intelligence. Intelligent design has applied these scientific methods to detect design in irreducibly complex biological structures, the complex and specified information content in DNA, the life-sustaining physical architecture of the universe, and the geologically rapid origin of biological diversity in the fossil record during the Cambrian explosion approximately 530 million years ago.

3. அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையும் (மதங்களின்) இறை படைப்பியல் கொள்கையும் ஒன்றா?

இல்லை!!!!!!!!!!!!!!!.இரண்டும் ஒன்றல்ல.அறிவார்ந்த வடிவமைப்பு என்பது இயற்கையின் நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கான வடிவமைப்பு உள்ளதா இல்லை இயற்கைத் தேர்வு+சீரற்ற சிறு மாற்றம் மேலான விள்க்கம் மட்டும் போதுமா என்பதை  தேடும், வரையறுக்கும் ஒரு அறிவியல் ரீதியான ஆய்வு முயற்சி மட்டுமே!!!. ஆனால் இறை படைப்புக் கொள்கை என்பது மத புத்தக்த்தில் உள்ள படைப்பு தகவல்களை இப்போதைய அறிவியலோடு பொருத்துவதே ஆகும்.

அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை இயற்கையின் ஒழுங்கான வடிவங்களை சான்றாக முன் வைத்து அதில் இருந்து என்ன அனுமானம் கொள்ள முடியும் என்பதையே வலியுறுத்துகிறது. இக்கொள்கையின் படி  ஒழுங்கான வடிவமைப்பின் அறிவார்ந்த காரணியாக வரையறுக்கப்படுவது இயற்கைக்கு மேம்பட்டதுதான் [Supernatural] என்று கண்டறிய முடியுமா என வலியுறுத்துவது இல்லை!!!!!!!!!!!!!!!!.

பாரபட்சமற்ற உண்மையான ஆய்வாளர்கள் இவ்விரு கொள்கைகளின் வித்தியாசத்தை ஏற்றுக் கொள்வது இயல்பு.(I like this!!!!!!!!!!!!!)
அறிவார்ந்த கொள்கையை முறியடிக்க பல பரிணாம ஆய்வாளர்கள் இதுவும் இறை படைப்பியல் கொள்கை ஒன்றே என்று தவறாக கூறுவது வழக்கம்.இதன் மூலம் இக்கொள்கையின் மேன்மைகளை, உண்மைகளை  விவாதிக்காமல் ஒதுக்கி விடலாம் என்பதே இதன் நோக்கமாகும்.ஆகவே இயற்கையின் நிகழ்வுகளில் வடிவமைப்பு உள்ளதா என்ற தேடலை மட்டுமே இக்கொள்கை முன் வைக்கிறது,அதன் சான்றுகளின் மேல் மட்டுமே வாதங்களை வைக்கிறது.

Is intelligent design the same as creationism?


 No. The theory of intelligent design is simply an effort to empirically detect whether the "apparent design" in nature acknowledged by virtually all biologists is genuine design (the product of an intelligent cause) or is simply the product of an undirected process such as natural selection acting on random variations. Creationism typically starts with a religious text and tries to see how the findings of science can be reconciled to it. Intelligent design starts with the empirical evidence of nature and seeks to ascertain what inferences can be drawn from that evidence. Unlike creationism, the scientific theory of intelligent design does not claim that modern biology can identify whether the intelligent cause detected through science is supernatural.


Honest critics of intelligent design acknowledge the difference between intelligent design and creationism. University of Wisconsin historian of science Ronald Numbers is critical of intelligent design, yet according to the Associated Press, he "agrees the creationist label is inaccurate when it comes to the ID [intelligent design] movement." Why, then, do some Darwinists keep trying to conflate intelligent design with creationism? According to Dr. Numbers, it is because they think such claims are "the easiest way to discredit intelligent design." In other words, the charge that intelligent design is "creationism" is a rhetorical strategy on the part of Darwinists who wish to delegitimize design theory without actually addressing the merits of its case.

4. அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை ஒரு அறிவியல் கொள்கையா?

ஆம்!!!!!!!!!!!!.பிற அறிவியல் கொள்கைகள் கோட்பாடுகள் போல் இயற்கை மீதான  கணிப்புகள் + கோட்பாடு உருவாக்கம் + ஆய்வு மூலம் சோதித்தல்+கோட்பாடு வரையறுப்பு முடிவாக்கம் என்ற நான்கு நிலைகளையும் உள்ளடக்கியது.

"அறிவார்ந்த காரணிகள் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குகின்றன" என்ற கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு இயற்கையின் செயலும்,படைப்பும இவ்வியல்பை கொண்டிருக்க வேண்டும். ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் இச்சிக்கலான வடிவமைப்பை உறுதி செய்ய முயல்கின்றனர்.இதில் முக்கியமான் ஆய்வுக் கரு எளிமைப் படுத்த முடியாத சிக்க்லான வடிவமைப்பு[irreducible complexity] என்பதாகும். இவை கண்டறியப்ப்டும் போது இவை வடிவமைக்கப் பட்டு மட்டுமே இருக்க முடியும் என்றா கோட்பாட்டு முடிவாக்கத்திற்கு வருகின்றனர்.

நண்பர்களே இத்தொடரில் எந்த கருத்தையும் உருவாக்க விரும்பவில்லை.அனைவரும் இக்கொள்கை குறித்து பாரபட்சமற்ற தகவல்கள் தமிழில் அளிக்க‌ வேண்டும் என்பதே நம் ஆசை.கருத்துகள் விவாதங்கள் வரவேற்கப் படுகிறது என்றாலும் அது தகவல் பரிமாற்றமாக் மட்டும் இருந்தால் நலமாக இருக்கும் என ஒரு வேண்டுகோள்.அறிந்த தகவல்களை பகிருங்கள்.


Is intelligent design a scientific theory?


 

Yes. The scientific method is commonly described as a four-step process involving observations, hypothesis, experiments, and conclusion. Intelligent design begins with the observation that intelligent agents produce complex and specified information (CSI). Design theorists hypothesize that if a natural object was designed, it will contain high levels of CSI. Scientists then perform experimental tests upon natural objects to determine if they contain complex and specified information. One easily testable form of CSI is irreducible complexity, which can be discovered by experimentally reverse-engineering biological structures to see if they require all of their parts to function. When ID researchers find irreducible complexity in biology, they conclude that such structures were designed.

(இன்னும் தொடர்வோம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக