தொடர் 5
2. சவ்தா
சவ்தா அவர்களை திருமணம் செய்வதற்கு முன்பே ஆயிஷாவைத் திருமணம் செய்ததாக ஹதீஸ்களில் காணலாம். சவ்தா அவர்களும், இவரது கணவர் நபி (ஸல்) ஏற்று முஸ்லீமாக வாழ்ந்து வந்தனர் பாதுகாப்பு காரணமாக அபிஸீனியா சென்ற இவரது கணவர் கிருஸ்த்துவராக மதம் மாறி அங்கேயே இறந்தார். கணவனை இழந்து விதவையாக இருந்த சவ்தா அவர்களை, தன்னுடைய பெண் குழந்தைகளைப் பராமரிக்கவும் தாம்பத்தியத் தேவைகளுக்காக திருமணம் செய்தார். சவ்தா கருமையான நிறம் கொண்டவர், திடகாத்தரமான உடல்வாகு உடையவர். பருமனான உடல்வாகு காரணமாக மிக மெதுவாக செயல்படும் இயல்புடையவராக இருந்தார். இதன் காரணமாக நபி (ஸல்) அவர்களின் மற்ற இளம் மனைவிகளுடன் தன்னால் போட்டியிட முடியவில்லை என்பதால் மன வருத்தமடைந்திருந்தார். ஆயிஷா, இவரது பெருத்த உடல்அமைப்பை கேலி பேசிதாகவும் ஹதீஸ்களில் காணலாம்.
புஹாரி ஹதீஸ் -5212
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக(விட்டு)க் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னுடைய நாளையும், சவ்தா அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கி வந்தார்கள்.
தனக்கு துணையாக தன் கணவர் முஹம்மது நபி செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஸவ்தா ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டும்?
இதற்கான பதிலை நாம் குர்ஆன் 4:128 வசனத்திற்கான விரிவுரைகளில் காணலாம்:
ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தால் அப்பொழுது அவ்விருவரும் தங்களிருவருக்கிடையே ஏதேனும் ஒரு சமாதனத்தை உண்டாக்கிக் கொள்வது அவ்வருவரின் மீதும் குற்றமில்லை
(குர்ஆன் 4:128)
குர்ஆன் 4:128-ம் வசனத்திற்கு இபின் கதீர் கீழ்கண்ட விளக்கவுரையைத் தருகிறார்:
"தன் கணவர் தன்னை வெறுத்துவிடுவாரோ, அல்லது புறக்கணித்துவிடுவாரோ என்று ஒரு பெண் பயந்தால், அவள் தன்னுடைய எல்லா உரிமைகளையும் அல்லது ஒரு சில உரிமைகளையும் விட்டுக்கொடுக்கலாம், அதாவது கணவரிடமிருந்து எதிர்ப்பார்க்கும் பொருளாதார உரிமைகள், உடுக்க உடை அல்லது இருக்க வீடு போன்ற உரிமைகளை விட்டுக்கொடுக்கலாம், அப்போது அக்கணவர் தன் மனைவியிடமிருந்து வரும் இந்த உரிமைகள் விட்டுக்கொடுத்தலை அங்கீகரித்துக் கொள்ளலாம். தன் உரிமைகளை விட்டுக்கொடுப்பது மனைவியின் தவறில்லை, அதே போல, தன் மனைவியின் உரிமை விட்டுக்கொடுத்தலை அங்கீகரிப்பதும் அந்த கணவனின் தவறு அல்ல. இதைத் தான் இறைவன் கூறுகின்றான்: "அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது". இதன்படித் தான், ஸவ்தா வயது சென்ற கிழவியாக மாறின போது, இறைத்தூதராகிய முஹம்மது அவளை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதனால், ஸவ்தா முஹம்மதுவிடம் இப்படி விவாகரத்து செய்யாமல் இருப்பதற்காக, தன்னிடம் அவர் செலவிடும் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுப்பதாகச் சொல்லி முஹம்மது நபியிடம் வேண்டிக் கொண்டார். இதனால், முஹம்மது நபி (ஸல்) ஸவ்தாவின் உரிமை விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக, ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை.
"...இபின் அப்பாஸ் அதிகார பூர்வமாக கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் தன்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என்று ஸவ்தா பயந்தார். ஆகையால், அவரிடம் ஸவ்தா கூறினார்: அல்லாஹ்வின் தூதரே, என்னை நீங்கள் விவாகரத்து செய்து விடாதீர்கள். அதற்கு பதிலாக என் நாள் ஆயிஷாவின் நாளாக மாறட்டும். ஆகையால், முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அப்படியே செய்தார், குர்ஆன் 4:128ம் வசனம் வெளிப்பட்டது.
ஏன் அல்லாஹ்வின் தூதர் ஸவ்தாவை விவாகரத்து செய்ய விரும்பினார்?
ஸவ்தாவை முஹம்மது நபி (ஸல்) விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்றுச் சொன்னால், ஏன் ஸவ்தா தன்னை அவர் விவாகரத்து செய்து விடுவார் என்று பயப்படவேண்டும்?
தன்னிடம் தன் கணவர் முஹம்மது நபி செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஆயிஷாவிற்கு ஸவ்தா விட்டுக்கொடுக்கவேண்டும்?
ஸவ்தா செய்த பிழை தான் என்ன?
இபின் கதீர் அவர்களின் விரிவுரையின் படி, ஸவ்தாவின் எந்த பிழையும் இதற்கு காரணமல்ல, இதற்கு ஒரே காரணம் ஸவ்தா வயது சென்றவராக மாறியது தான், அதாவது அவருக்கு வயது கூடிக்கொண்டே சென்றது தான்.
இன்னும் ஒரு சில அறிவிப்புக்கள் உண்மையாகவே முஹம்மது நபி (ஸல்), ஸவ்தாவை விவாகரத்து செய்துவிட்டார் என்று கூறுகிறது, அதன் பிறகு ஸவ்தா அவரிடம் பேசி, தன் உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக சொன்ன போது, முஹம்மது நபி (ஸல்) அதனை அங்கீகரித்தார்.
“Barra narrated that the prophet sent message to Sauda that I have divorced you. When Sauda heard the news, she went and sat in the way of the Prophet to Aisha’s house. When she saw the prophet she told him. I swear thee by the one who has sent you the Quran and has exalted you over all the creation to tell my why did you divorce me. Have I done something wrong that has offended you? The Prophet said no! Sauda said, I then beg you for the sake of the same God to not divorce me. I am getting old I don’t need to be with a man. You can use my turn to stay with Aisha, but I wish that in the day of resurrection to be counted amongst your wives. The Prophet agreed and Sauda said that since then the Prophet spent the nights there were her turn with his favorite wife Aisha.” [Tabaqat V. 8 p. 53-54 Persian translation]
(பாரா அறிவிப்பதாவது, அல்லாஹ்வின் தூதர் சவ்தாவிற்கு, அவரை விவாகரத்து செய்திருப்பதாக ஒரு செய்தியை அனுப்பினார். செய்தியை கேள்விப்பட்ட சவ்தா அல்லாஹ்வின் தூதர் ஆயிஷாவின் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியாக வருவார் என்று ஸவ்தா காத்திருந்தார். முஹம்மது அவ்வழியே வருவதை ஸவ்தா கண்டவுடன், அவரிடம் சென்று "உலக உயிர்களிலெல்லாம் உம்மை மேன்மைப்படுத்தியவனும், தன் வார்த்தைகளை உமக்கு வெளிப்படுத்தும் இறைவனின் பெயரில் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன். ஏன் என்னை விவாகரத்து செய்தீர்கள்? நான், உங்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் முறையில் தவறு ஏதேனும் செய்து விட்டேனா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் இல்லையென்றார். ஸவ்தா கூறினார், இறைவனின் பெயரால் கெஞ்சி கேட்கிறேன் என்னை விவாகரத்து செய்து விடாதீர்கள், நான் வயது சென்றவளாக இருக்கிறேன், எனக்கு ஆணின் துணை தேவையில்லை. என் (வீட்டிற்கு வரும்) முறையை நீங்கள் ஆயிஷாவுடன் தங்கிக் கொள்ளலாம். ஆனால், கடைசி நாளில் உயிர்த்தெழும் போது உம்முடைய மனைவிமார்களின் கூட்டத்தில் நானும் உயிர்த்தெழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். ஆகையால் அல்லாஹ்வின் தூதர் (ஸவ்தாவின் கோரிக்கையை) ஏற்றுக் கொண்டார். ஸவ்தா கூறினார்: “அதிலிருந்து, அல்லாஹ்வின் தூதர் தன்னுடன் தங்க வேண்டிய இரவுகளை அவருக்கு விருப்பமான மனைவியான ஆயிஷாவுடன் கழித்தார்")
முஹம்மது நபி (ஸல்) விவாகரத்து செய்யவில்லை, ஆனால், செய்ய வேண்டுமென்று விரும்பினார் என்று சிலர் கூறுகிறார்கள். விஷயம் எதுவானாலும், ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக் கொடுத்தார் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.
தனக்கு இருக்கும் ஒரே கணவனின் நாளையும், அதற்கான தன் உரிமையையும் ஏன் ஒரு பெண் வேறு ஒரு பெண்ணிற்கு விட்டுக் கொடுக்கிறாள்?
நிகழ்ச்சியின் முழு விவரமும் தெரிந்து கொள்ள, இன்னுமுள்ள குர்ஆன் விரிவுரையாளர்கள் குர்ஆன் 4:128ம் வசனத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.
குர்ஆன் 4:128 பற்றி ரஜி (Razi) கூறுகிறார்:
சிலர் கூறுகிறார்கள் "பயப்பட்டாள்" என்றுச் சொன்னால், அதன் பொருள் "அறிந்துக்கொண்டாள்" என்பதாகும். இன்னும் சிலர் கூறுகிறார்கள் "பயப்பட்டாள்" என்றுச் சொன்னால், அதன் பொருள் "நினைத்தாள்" என்பதாகும். ஆனால், இப்படி பொருள் கூறுகிறவர்கள், மிகவும் தெளிவாக புரியக்கூடிய ஒன்றை கவனிக்காமல் அறியாமையில் இருக்கிறார்கள். பயம் என்றால் என்ன பொருள் என்று கேட்டால், பயம் என்றால் பயம் என்று தான் பொருள், அவ்வளவு தான். பயம் எப்போது வருகிறது, அந்த பயம் உருவாவதற்கான காரண காரணிகள் அல்லது நிகழ்வுகள் நடைப்பெறக்கூடிய சூழ்நிலைகள் தெரியும் போது பயம் வருகிறது. இந்த சூழ்நிலைகள் என்ன? உதாரணத்திற்கு ஒரு ஆண் தன் மனைவியைக் கண்டு, உனக்கு வயதாகிவிட்டது, நீ அசிங்கமாக இருக்கிறாய். நான் ஒரு நல்ல அழகும் இளமையும் கொண்ட வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்றுச் சொல்லும் போதுதான் மனைவிக்கு பயம் வருகிறது. ஒரு கணவன் தன் மனைவியை வெறுத்துவிடுவது போல, புறக்கணித்துவிடுவது போல காட்டிக் கொள்ள என்ன செய்வான்? அவன் அவளின் முகத்தில் கோபமாக பார்ப்பான், அவளுக்கு தேவையான தாம்பத்ய உறவினை துண்டித்துக் கொள்வான். அவளை கேவலமாக நடத்துவான். இப்படிச் செய்து தன் வெறுப்பை காண்பிப்பான்.
ரஜி அவர்கள் விரிவுரை கூறியது போல, முஹம்மது நபி (ஸல்) அவர்களும், ஸவ்தாவிற்கு செய்து இருப்பாரோ? ரஜி சொல்வது போன்ற சில காரணங்களை கண்டிப்பாக ஸவ்தா கண்டு இருக்கவேண்டும், இதனால் தான் ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமிருந்து விவாகரத்து பெறாமல் இருப்பதற்கு எது சரியான வழி என்று சிந்தித்து, கடைசியாக தன் உரிமையை விட்டுக்கொடுத்து இருக்கக்கூடும்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக