- எல்லா மதங்களிலும் பிரபஞ்சம் ,உயிர்கள் படைப்பு என்பதை கடவுள் நடத்தி ,காத்து பரிபாலித்து வருகிறார் என்பது நம்பிக்கை.ஆகவே பிரபஞ்சத்தின் தோற்றத்தின் இப்போதை அங்கீகரிகப் பட்ட கொள்கையான பெரு வெடிப்பு(விரிவாக்க) கொள்கை எங்கள் மத புத்தகத்தில் கூறப் பட்டுள்ளது என்ற பிரச்சாரம் இதன் அடிப்படையிலானது..
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, பிறப்பு: ஜனவரி 8, 1942), ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்;இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர்.கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக உள்ளார்.
இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருங்குழி (black holes)களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருங்குழிகளிலிருந்து ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருங்குழிகளிலிருந்து துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.
21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (myotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்.
இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time)த, The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந் நூல்கள் பலரையும் கவர்ந்தது.
பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design 2010) என்பது முதன்மையான இயற்பியலாளர் ஸ்டீபன் ஃகாக்கிங் மற்றும் லென்னர்ட் லாடினோவால் எழுதப்பட்ட ஒரு பொதுமக்கள் அறிவியல் நூல் ஆகும். இந்த நூலில் அண்டத்தின் தோற்றத்தை விளக்க இறை கருத்துரு தேவை இல்லை என்று வாதிக்கப்படுகிறது. இயற்பியல் விதிகளால் மட்டும் பெரும் வெடிப்பையும், அண்டத்தையும் விளக்க முடியும் என்று இந்த நூல் வாதிக்கிறது. இந்த நூலின் விமர்சங்களுக்கு பதில் தருகையில், ஃகாக்கிங், "இறை இல்லை என்று நிரூபிக்க முடியாது, ஆனால் அறிவியல் இறையை தேவையற்றதாக ஆக்குகிறது" என்று கூறினார்..
இப்பதிவில் இந்த க்ராண்ட் டிசைன் என்னும் புத்தக்த்தின் மின் பிரதி,ஒலி வடிவம் வழங்குகிறோம்.இத்தளத்தில் இப்புத்த்கம் மட்டுமல்லாமல் ப்ல புத்தக்ங்கள்,ஆவணப் படங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூமியின் தோற்றம் பற்றிய கொள்கைகளின் பரிணாம் வளர்ச்சியை வரலாற்று கண்ணோட்டத்துடன் கொண்டு செல்லும் விதம் மிக அருமை.
பல பிரபஞ்சங்கள் இப்போதும் இயற்கை விதிகளின் படி தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறது.ஆகவே நமது பிரபஞ்சம் மட்டு கடவுளால் படைக்கப் படவேண்டிய அவசியம் இல்லை.புவி ஈர்ப்பு விசை போல்,இயக்கவியல் விதிகள் போல் பிரபஞ்ச தோற்றமும் ஒரு இயல்பான இயற்கையின் நியதியே என்று முடிக்கிறார்.
அந்த இயற்கை விதிகளை உருவாக்கியவர்தான் எங்கள் இறைவன் என்று கூறாமல் இருப்பர்களா என்ன?.படைப்பதும்,படைப்பு விதிகளை மட்டும் உருவாக்கி தானாக் படைப்பு விளைவதை வேடிக்கை பார்ப்பதும் ஒன்றா?. அறிவியல் வளர வளர இறைவனின் சக்தியாக (செயலாக)கூறப் படுவது சுருங்கிக் கொண்டே வருகிறது என்பதுதான் நாம் கூறுவது.
இப்புத்தகம் பற்றிய ஒரு காணொளி.இரண்டாம் அத்தியாயம் பற்றி ஒரு சுருக்கமான் கண்ணோட்டம்.நன்றாக் இருக்கிறது.கண்டு மகிழுங்கள்
கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. -தந்தை பெரியார்.
திங்கள், 19 செப்டம்பர், 2011
பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக