திங்கள், 19 செப்டம்பர், 2011

பைபிளின் குளறுபடிகள்

 

 

குழப்பக் கணக்கு:
பென்யமீன்களுடைய குமாரர்களைப் பற்றி பைபிள் கூறுகின்றது. அவனுடைய குமாரர்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் ஆகியவற்றைக் கூறும் போதும் அனேக முரண்பாடுகள் உள்ளன.
"பென்யமீன் குமாரர் பேலா, பேகேர், யெதீகவேல் எனும் மூவர்." (முதலாம் நாளாகமம் 7:6)
"பென்யமீன் பேலா என்னும் தன் மூத்த குமாரனையும் அஸ்பேல் எனும் இரண்டாம் குமாரனையும் அகராகு என்னும் மூன்றாம் குமாரனையும் நோகா என்னும் நாலாம் குமாரனையும் ராபா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்." (முதலாம் நாளாகமம் 8:1,2)
ஒரே ஆகமத்துக்குள்ளேயே இரண்டு முரண்கள். ஒரு இடத்தில் மூன்று குமாரர்கள் என்றும் இன்னொரு இடத்தில் ஐந்து குமாரர்கள் என்றும் கூறப்படுகின்றது. ஐந்து குமாரர்கள் என்று குறிப்பிடும் இடத்தில் முதலில் கூறிய மூவருடன் வேறு இரண்டு பேர்களை சேர்த்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. பேலா என்ற பெயர் மட்டுமே இரண்டு இடங்களிலும் கூறப்பட்டுள்ளது. மற்ற பெயர்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் உள்ளன. கடவுளின் வேதம் இப்படிக் குழப்பலாமா?
மூன்று குமாரர்கள் என்றும் ஐந்து குமாரர்கள் என்றும் ஒரு ஆகமத்துக்குள்ளேயே முரண்படும் பைபிள் இன்னொரு ஆகமத்தில் மேலும் முரண்படுகிறது.
"பென்யமீனின் குமாரர்பேலா, பேகர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பீம், குப்பீம், ஆர்து என்பவர்கள்." (ஆதியாகமம் 46:21)
இங்கே பென்யமீனுக்கு பத்துக் குமாரர்கள் இருந்ததாகக் கூறுவதுடன் பேலா எனும் பெயரைத் தவிர மற்ற பெயர்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லதாக உள்ளது. இந்தப் பரம்பரைப் பட்டியல் அவசியம் தானா? இதைத் தெரிந்து ஆகப் போவது என்ன என்ற கேள்வி ஒரு புறமிருக்கட்டும். இந்தச் சிறிய எண்ணிக்கையை எண்ணிச் சொல்வதில் கர்த்தருக்கு -அல்லது கர்த்தரின் ஆவியால் உந்தப்பட்டவருக்கு இவ்வளவு குழப்பம் வர வேண்டுமா?
அது போல் சிலரது பரம்பரைப் பட்டியலை பைபிள் கூறுகின்றது. இரண்டு இடங்களில் ஏராளமான பெயர்கள் கூறப்படுகின்றன. முதலாம் நாளாகமம் 8:29-38 வரை கூறப்படும் பெயர்களையும், முதலாம் நாளாகமம் 9:35-44 வரை கூறப்படும் பெயர்களையும் பார்வையிடுவோர் இரண்டு இடங்களிலும் அனேகம் முரண்பாடுகள் மலிந்து கிடப்பதைக் காணமுடியும்.
இத்தனைக்குப் பிறகும் அது இறை வேதம் என்று எப்படி நம்ப முடியும்?
சாதாரணத் தகவல்களிலேயே குழப்பக் கூடிய புத்தகம், மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்று தான் எப்படி நம்ப முடியும்?
கிறித்தவ உலகம் சிந்திக்குமா?
செத்துப் பிழைத்த மிருகங்கள்:
"மறுநாளிலே கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார். எகிப்தியரின் மிருகங்கள் எல்லாம் செத்துப் போயின. இஸ்ரவேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.” (யாத்திராகமம் 9:6)
மோசேயின் எதிரிகளான பார்வோனின் கூட்டத்தினரைத் தண்டிக்கும் விதமாக அவர்களின் மிருகங்கள் அனைத்தையும் கர்த்தர் சாகடித்ததாக இவ்வசனம் கூறுகின்றது. இதே யாத்திராகமம் இதே அதிகாரத்தில் இதற்கு முரணாகவும் கூறுகின்றது.
"பார்வோனின் ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகங்களையும் வீட்டுக்கு ஓடி வரச் செய்தான். எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ அவன் தன் வேiலைக்காரரையும் தன் மிருகங்களையும் வெளியிலே விட்டு விட்டான்." (யாத்திராகமம் 9:20,21)
பார்வோன் கூட்டத்தினரின் எல்லா மிருகங்களும் கர்த்தரின் கட்டளைப்படி சாகடிக்கப்பட்ட பின், எப்படி மிருகங்களை வீட்டுக்கு ஓடிவரச் செய்திருக்க முடியும்?
அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும்?
அம்மிருகங்களைக் கர்த்தர் அழித்து விட்டதாகக் கூறுவது சரியா?
கர்த்தரின் கட்டளைக்குப் பின்பும் அழியவில்லை என்பது சரியா?
கடவுளின் தோல்வி:
மோசேக்குப் பின்னர் யோசுவா இஸ்ரவேலர்களின் தலைமைப் பொறுப்பேற்றதாகவும் அனைத்து இராஜாக்களையும் தோல்வியுறச் செய்து அவர்களின் நாடுகளைப் பிடித்துக் கொண்டதாகவும் யோசுவா ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.
"... எருசலேமின் ராஜா, எப்ரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீஷின் ராஜா, எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களையும் குகையிலிருந்து அவனிடம் கொண்டு வந்தார்கள்.” (யோசுவா 10:23)
"அதன் பின் யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான்.” (யோசுவா 10:26)
எருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர் மாண்டதும் கூறப்படுகின்றன.
ஆனால் இதே ஆகமம் 15:63 வசனத்தைப் பாருங்கள்!
"எருசலேமில் குடியிருந்து எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிட முடியாமற் போயிற்று. இந்நாள் மட்டும் எபூசியர்யூதா புத்திரரோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.” (யோசுவா 15:53)
யோசுவா உள்ளிட்ட யூதாவின் புத்திரர்கள் எருசலேமை முறியடித்ததாகக் கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா?
அல்லது அவர்களை வெல்ல முடியாமற் போயிற்று என்று கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா?
கர்த்தரின் துணையுடன் கர்த்தரே நேரடியாகக் களத்தில் இறங்கியும் (யோசுவா 10:42) எருசலேமுள்ளவர்களை வெல்ல
முடியவில்லை என்றால் தோல்வி கர்த்தருக்கில்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக