திங்கள், 19 செப்டம்பர், 2011

கடவுளுக்கு வேலையில்லை

கடவுளுக்கு வேலையில்லை
உலகையும் பிரபஞ்சத்தையும் படைப்பதற்குக் கடவுள் என்ற ஒன்று தேவையில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தவர் ஹாகிங் கடவுள் இந்த உலகைப் படைப்பதற்கு, நமக்குத் தெரியாத காரணங்கள்தான் அடிப்படையா? அல்லது பிரபஞ்சம் உருவானதற்கு சில பல அறிவியல் விதிகள் (LAW OF SCIENCE) தான் காரணமா? இந்த இரண்டு கேள்விகளில் நான் இரண்டாவதையே தேர்ந்தெடுக்கிறேன் என்று தெளிவாகத் தெரிவித்தவர் ஹாகிங். இதற்கான காரணத்தையும் அவர் கூறிவிட்டார்: எந்தப் பொருளும் இல்லாமலேயே பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கிறது என்றிடும் ஈர்ப்புவிசை-கள்பற்றிய விதிகள் உள்ளன என்று அவர் கூறிய விஞ்ஞான உண்மைகளைத்தான் டெலி-கிராப் ஏட்டின் நிருபர் கிரகாம் பர்மெல்லோ பிரபஞ்சத்தைக் கடவுள் படைக்கவில்லை என்று ஹாகிங் கூறுகிறார் என்று உலகுக்கு அறிவித்தார்.

மதம் தேவையில்லை
 அவருடைய மனைவியின் கூற்றுப்படி ஹாகிங் ஒரு நாத்திகர். அவருக்கு மத நம்பிக்கை கிடையாது. பிரபஞ்சம் அறிவியல் விதிகளின்படி மட்டுமே இயங்கிவருகிறது. கடவுள் இத்தகைய விதிகளைப் படைத்தது எனக் கூறினாலும் அந்தக் கடவுளே முயன்றாலும் இந்த விதிகளை முறிக்க முடியாது என்று தம் கொள்கையில் மிகவும் உறுதியானவர்.

மதத்திற்கும் அறிவியலுக்கும் பெரும் மாறுபாடு உள்ளது; மதம் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவியலோ காரணகாரிய ஆய்வு உண்மைகளை அடிப்-படையாகக் கொண்டது. இறுதியாக அறிவியலே வெல்லும். ஏனென்றால் அது செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று ஹாகிங் பட்டுக்கத்தரித்தாற் போன்று தம் கருத்தை வெளியிட்டு இருக்கிறார். எவர்தாம் மறுக்க முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக