இயேசு அடக்கம்செய்யப்பட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறித்தவத்தின்அடிப்படைக் கோட்பாடு. அவர் உயிர்த்தெழுந்த(?) நிகழ்ச்சியாவதுமுரண்பாடில்லாமல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதா?அதிலுள்ள முரண்பாடுகள் தான் எத்தனையெத்தனை?
ஓய்வு நாள் முடிந்தது.வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் மகதேலேனா மரியாளும் மற்ற மரியாளும்கல்லறையைப் பார்க்க வந்தார்கள். இதோ பெரிய பூமி அதிர்ச்சியுண்டாயிற்று!கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து வாசலில் இருந்த கல்லை உருட்டித்தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான். அவன் ரூபம் மின்னல் போலவும் அவன் வஸ்திரம் குறைந்தமழை போல் வெண்மையாகவும் இருந்தது. (மத்தேயு 28:1-3)
ஓய்வு நாள் முடிந்தபின் மகதேலேனா மரியாளும் யாகோபின் தாயாகிய மரியாளும் சலாமே என்பவளும் அவருக்குப்பூச வேண்டும் என்று சுகந்த வர்க்கங்களை வாங்கினார்கள். வாரத்தின் முதல் நாள்அதிகாலையில் சூரியோதயத்திலேயே அவர்கள் கல்லறைக்கு வந்தார்கள். கல்லறையின் வாசலில்இருந்த கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடு ஒருவர்சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் வந்து ஏறிட்டுப் பார்த்த போது அது தள்ளப்பட்டிருக்கக்கண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிது. அவர்கள் கல்லறைக்குச் சென்று வெள்ளையங்கிதரித்திருந்த ஒரு வாலிபன் வலது பக்கம் உட்கார்ந்திருந்ததைக் கண்டு திகைத்தார்கள். (மாற்கு 16:1-5)
வாரத்தின் முதலாம் நாள்அதிகாலையில் தாங்கள் ஆயத்தம் செய்த சுகந்த வர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டுகல்லறைக்கு வந்த போது கல்லறையிலிருந்து கல் புறப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உள்ளேசென்று போதோ ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை. அதைப்பற்றி அவர்கள்கலங்கிக் கொண்டிருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர்அவர்கள் அருகேவந்து நின்றார்கள். (லூக்கா24:15)
வாரத்தின் முதல் நாள்காலையில் இருட்டோடே மகதேலேனா மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறையை அடைத்திருந்தகல் எடுக்கப்பட்டிருக்கக் கண்டு - (யோவான் 20:1)
இயேசுவின் கல்லறைக்கு ஒருமரியாள் மட்டும் வந்ததாக யோவான் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
இரண்டு மரியாள்கள்வந்ததாக லூக்காவும் மத்தேயுவும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
இரண்டு மரியாள்களும்சலாமே என்பவளுமாக மூவர்வந்தார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
அவர்கள் வந்த போதுஅவர்கள் இரண்டு தேவ தூதர்களைச் சந்தித்ததாக லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
ஒரு தேவ தூதன் என்றுமத்தேயுவும் மாற்கும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
அந்தத் தேவ தூதனைகல்லறைக்குள் உட்கார்ந்திருக்கக் கண்டார்கள் என்று மாற்குக் கூறுவது கர்த்தரின்வார்த்தையா?
அல்லது வானத்திலிருந்துஅவன் இறங்கி வந்ததாக மத்தேயு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
அல்லது இரண்டு பேர் அருகே வந்துநின்றார்கள் என்று லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
உயிர்த்தெழுதலைப் பற்றிபைபிள் கூறும் தகவலில் ஏன் இத்தனை குழப்பங்கள்? உயிர்த்தெழுதல்நடந்திருந்தால் அதில் இவ்வளவு குழப்பங்களுக்கும் இடமிருக்குமா? கிறித்தவநண்பர்களே நடுநிலையோடு சிந்திப்பீர்!
உயிர்த்தெழுந்த பிறகு தரிசனத்தடுமாற்றம்
இயேசு சிலுவையில் அறையப்பட்டுமரணமடைந்தார்; மூன்றாம் நாள்மறுபடியும் உயிர்பெற்றெழுந்தார்; சீடர்களுக்குக் காட்சிதந்தார் என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்குசுவிசேஷக்காரர்களும் சுறுகின்றனர். இந்த விஷயத்தை விபரிக்கும் நான்குசுவிசேஷக்காரர்களும் முரண்பட்ட பல விஷயங்களைக் கூறுகின்றனர் .
மகதேலேனா மரியாளிடமும்மற்ற மரியாளிடமும் தேவ தூதன் காட்சி தந்து இயேசு உயிர்த்தெழுந்ததைக் கூறிசீஷருக்கு இதைக் கூறுமாறும் தெரிவிக்கிறார். அவ்விருவரும் சீஷர்களிடம்கூறுவதற்காகச் செல்லும் போது இயேசுவே அவர்களுக்குக் காட்சி தந்து,
' நீங்கள்போய் கலிலேயாவுக்குப் போகும்படி என் சகோதரருக்குச் சொல்லுங்கள்! அங்கேஎன்னைக் காண்பார்கள் என்றார்.
(மத்தேயு 28:10)
பதினொரு சீஷருமோ இயேசுதங்களுக்குக் குறித்திருந்தபடி கலிலேயாவிலுள்ள மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக்கண்டு பணிந்து கொண்டார்கள்.
(மத்தேயு 28:16)
இயேசுவின் கட்டளைப்படிபதினொரு சீஷரும் கலிலேயா எனுமிடம்சென்று இயேசுவைத் தரிசித்ததாக மத்தேயு இங்கே கூறுகிறார்.
ஆனால் மாற்கு,
அவர் உயிரோடுஇருக்கிறார் என்றும் அவள் அவரை கண்டாள் என்றும் அவர்கள் கேள்விப்பட்ட போது நம்பவில்லை.அதன் பின்பு அவர்களில் இரண்டு பேர்ஒரு கிராமத்துக்கு வழிநடந்து போகிற பொழுதுஅவர்களுக்கு வேறுரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய் மற்றவர்களுக்குஅறிவித்தார்கள். அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. பதினொருவரும் போஜன பந்தியில்இருக்கும் போது அவர்களுக்கு அவர்தரிசனமாகி உயிர்த்தெழுந்திருந்த தம்மைக்கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்கள் விசுவாச்ததைப்பற்றியும் இருதயக் கடினத்தைப் பற்றியும் அவர்களைக் கடிந்து கொண்டார்.
(மாற்கு 16:11-14)
பதினொரு சீடர்களும் இரண்டுமரியாள்களின் கூற்றை ஏற்று இயேசுவைத் தரிசிக்க கலிலேயா என்ற இடத்திற்குச் சென்றதாகமத்தேயு கூறுகிறார். ஒரு மரியாள் என்றும் அவளது கூற்றை சீடர்கள் நம்பவில்லைஎன்றும் மாற்குக் கூறுகிறார்.
வழியில் இரண்டு சீடர்களுக்குஇயேசு தரிசனமானதாக மாற்கு கூறுகிறார்.
மத்தேயு இது பற்றி எதையுமேகூறவில்லை.
கலிலேயா என்ற இடத்திற்குப்புறப்பட்டுச் சென்று அங்கே இயேசுவைத் தரிசனம் செய்ததாக மத்தேயுவும் இயேசுவைஅவர்கள் போஜனம் பண்ணும் இடத்துக்கு வலிய வந்து காட்சி தந்ததாக மாற்கும் கூறுகிறார்கள்.
கிறித்தவத்தின் முக்கியமானகோட்பாட்டை விளக்கும் விஷயத்தில்கூட இவ்வளவு முரண்படுவானேன்? இரண்டுமேகர்த்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருந்தால்இத்தகைய முரண்பாடுகள் இருக்க முடியுமா? இதே விஷயத்தை லூக்கா கூறும் போது முரண்பட்ட இந்த இரண்டுக்கும் முரணாகக் கூறுகிறார்.
அந்நேரமே எழுந்திருந்துஎருசலேமுக்குத் திரும்பிப் போய் பதினொருவர்களும் அவர்களோடிருந்தவர்களும்கூடியிருந்த இடத்தில் அவர்களைக் கண்டார்கள். அவர்கள் இவைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர்தாமே அவர்கள் நடுவிலே வந்து நின்று அவர்களைப் பார்த்துஉங்களுக்குச் சமாதானம் என்றார்.
(லூக்கா 24:33,37)
கலிலேயாவிலும் இயேசுவைச்சந்திக்கவில்லை; அவர்கள் போஜனம் பண்ணும் போதும்சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் எருசலேமில் தரிசனம்தந்ததாக லூக்கா கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக