"மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை விடுவதில்லை".
மத புத்தக்த்தில் அறிவியல் என்று சொல்லும் பல விஷயங்கள் தவறு என்று நம்முடைய பதிவுகளில் சுட்டி காட்டி இருக்கிறோம்.இப்பதிவில் இந்த கருத்தாக்கம் எப்படி ,யாரால் பிரச்சாரம் செய்யப் படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
மதம் என்பது நம்பிக்கை என்னும் விஷயத்தை மட்டுமே ஆதாரமாக் கொண்ட விஷயம். அனைத்து மதங்களும் உருவாகும் போது இருக்கும் கொள்கையாக்கம் நாளடைவில பரிணாம வளர்ச்சி பெற்றே முழுமை பெறுகின்றது. எந்த மதமும் அது சொல்லும் அனைத்து விஷயங்களும் உண்மை என்று நிரூபிக்க முடியாது. இதில் சில் இஸ்லாமிய நண்பர்கள் மத பதிவுகள் எழுதுவதும்,மத புத்தக்த்தில் அனித்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என சொல்வதும் அனைவரும் அறிந்ததே. அந்த பதிவுகளின் மீதான விமர்சனம் எழுதும் போது நேருக்கு நேர் விவாதம் வருகிறாயா எங்கள "அஆஇஈ" உடன் விவாதம் செய்ய தயாரா என்பதும் வழக்கமான நகைசுவை செய்திகளே என்றாலும் .இன்னும் சில மத வி(அ)ஞ்ஞானிகளின் பெயர் கிடைத்ததால் நமக்கு மிக்க மகிழ்ச்சி.ஒரு விவாதத்தில் கடவுள்,மத புத்தகத்தை புரிய வைப்பது என்றால் இவர்களை கல்லூரி பேராசிரியர்கள் ஆக்கினால் நாடு எங்கோ போய்விடும்.
இந்த மத வி(அ)ஞ்ஞானிகள் என்றதுமே இவர்களுக்கு மதங்கள் பற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி வருவது இயல்பாக. இருந்தாலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அறிவியலில் பின் தங்கி இருப்பதும் ஒரு நகை முரணே.இந்த வி(அ)ஞ்ஞானிகள் அனைவருமே ஏதோ ஒரு மத்திய கிழக்கில் நாடுகளீல் நடைபெறும் ஒரு குரானிய அறிவியல் கருத்தரங்கிலேயே இவ்விஷயங்களை பேசியுள்ளார்கள்.இத்னை ஒலி,ஒளி பதிவு செய்து யு ட்யூப் முதலான தளங்களில் இட்டு பிரச்சாரம் செய்கின்றார்.அந்த காணொளிகளை இட்டவர்கள் இது எங்கே ,எப்போது எதற்காக சொல்லப் பட்டது போன்ற எந்த விவரங்களையும் சொல்ல மாட்டார்கள்.. இந்த குரானிய அறிவியல் கருத்தரங்குகளை நடத்துபவர்கள் யார்?.அப்படி நடத்தும் ஒரு அமைப்பை பற்றி தெரிந்து கொள்வோம்.
குரான் மற்றும் சுன்னாவில அறிவியல் குறியீடுகள் அமைப்பு[he International Commission on Scientific Signs in the Qur’an and Sunnah (ICSSQS) ] 1984ல் சவுதி அரேபியாவில் ஷேக் அப்துல் மஜீத் அல் ஜிந்தனி என்னும் யேமன் நாட்டை சேர்ந்தவரால் உலக முஸ்லிம் கூட்டமைப்பு உதவியுடன் ஆரம்பிக்கப் பட்டது.குரான் மற்றும் சுன்னவில் அறியல் குறியீடுகளை கண்டறிந்து சொல்லும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதே இதன் நோக்கமாகும். இவர் யமன் நாட்டு இஸ்லாமிய சகோதர்த்துவ கட்சியின் த்லைவர்,யேமனின் அல் இமான் மத பல்கலைகழகத்தின் ஸ்தாபகர்.அமெரிக்க அரசால அமெரிக்கா வராமல் தடுக்கப் பட்ட ஒரு முக்கியஸ்தர். எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடித்தாகவும் இவர் கூறியுள்ளர்.அது எங்கிருந்து என்று தகவல் இல்லை.இவர் பற்றிய விக்கிபிடியாவில அண்ணன் பற்றி பல குறிப்பிடத் தக்க விஷயங்கள் உண்டு.(Intersting person!!!!!!!!!!!!!).
இந்த கருத்தாக்க்ங்களின் பிதாகமர் மௌரிஸ் புகைல் என்றால் மிகையாகாது .இதுவரை இம்மாதிரி 8 ஆய்வரங்குகளை நட்த்தியுள்ளார்கள்.
1)1987 இஸ்லாமாபாத்
..
..
7) 2007 துபாய்
8) குவைத் (இதில் எய்ட்ஸ்க்கு மருந்து சுன்னாவில் கூறப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த கருத்தரங்குகளின் சாராம்சத்தை ஒரு என்சைக்ளோப்பிடியா ஆக்குவ்தற்கான முயற்சிகள் அதிக பொருள் செலவில் முன்னெடுக்கப் படுகின்றது.
அது குறித்த செய்தி இது.
______________
Online Project Spotlights Science in Qur’an, Sunnah
K.S. Ramkumar, Arab News
JEDDAH, 9 May 2006 — The International Commission on Scientific Signs in the Qur’an and Sunnah (ICSSQS) signed an agreement with the Harf, a leading IT company, Sunday night to produce an online scientific encyclopedia based on Islamic holy books.
Abdullah ibn Abdul Aziz Al-Musleh, secretary-general of the ICSSQS, told a press conference after the signing ceremony that the encyclopedia, which will contain all the scientific information referred to in the Qur’an and the Sunnah (Traditions of the Prophet, peace be upon him), aims to serve as a comprehensive reference work fulfilling the increasing demand from researchers the world over for documented information on the scientific information contained in the Qur’an and Sunnah.
“When completed the encyclopedia will be the greatest reference work on Islam from the angle of modern science,” Al-Musleh said. The encyclopedia will be distributed on CD and a website will be available both in English and Arabic.
The encyclopedia containing 8,000 pages apart from pictures and video clips will cover all the Qur’anic verses referring to scientific facts with their explanations. A team of scientists and experts in the religious studies are working on the project.
The SR2.1-million agreement stipulates that the IT company prepare 50,000 CDs of the encyclopedia and a website linked to the commission’s site www.nooran.com in addition to a print edition in 14 volumes.
The new project is part of the commission’s bid to present the shining picture of Islam to the world at large as a religion that promotes scientific research leading to contemplation about the signs of God. It also aims at familiarizing the amazing ocean of information that the Quran and Sunnah contain.
Kuwait’s Ministry of Endowments and Islamic Affairs has sponsored the project.
______________
இந்த அமைப்பின் இணைய தளம்
இந்த கருத்தரங்கில் கட்டுரையிட்டு உரையாற்ற கீழ்க்கண்ட விதிகள் பின்பற்றப் படவேண்டும்.
1.தோராய கருத்தில்(hypothesis) இருந்து கோட்பாடாக்கப் பட்டு மிக சரியாக நிரூபிக்கப் பட்ட அறிவியல் உண்மைகள்(facts) மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படும்.இந்த அறிவியல் உண்மைகள் தவறென்றோ,மறுதலாகவோ ஆக்கப் படாதவையாக இருக்க வேண்டும்.(சிரிப்பு வந்தால் நான் பொறுப்பல்ல,எல்லா புகழும் இந்த விதிகளை வடிவமைத்தவருக்கே)
2.இந்த அறிவியல் உண்மை குரானிலோ அல்லது அனுமதிக்கப் பட்ட தூதர் மொழிகளில் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது என்று சான்றளிக்கப்படவேண்டும்.
3.. மேற்கூறிய இரண்டு விவரங்களுக்கும் எளிய முறையில் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.
4. குரான் ,ஹதித் விளக்கமானது அராபியர்களின் பயன்பாட்டில் உள்ளபடி இருக்க வேண்டும்.ஏனெனில் அராபியர்களின் மொழியிலேயே குரான் இறங்கியது.
5.மறை பொருளாக இருந்து இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை கூற வேண்டாம்.(குரானில் மறை பொருள் எனில் விளங்க இயலாத வசனங்கள்).
6.குரான் வசனம் பிற குரான் வசனங்களாலோ,நபி மொழிகளாலோ விளக்கி அரபி மூல வார்த்தைகளின் அர்த்தம் காணப்பட வேண்டும்.
இந்த ஆய்வரங்குகளில் கட்டுரை இட வேண்டுமெனில் குரான்,ஹதிது,அரபி புல்மை அவசியம் என்பது புரிகிறது. இந்த வி(அ)ஞ்ஞானிகள் அனைவருக்கும் இவை இருக்குமா?
இப்படித்தான் குரானில் அறிவியல் என்றா கருத்தாக்கம் வளர்த்த்டுக்கப் பட்டு உலக்மெங்கும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.அறிவியலால் மதத்தை தாங்கி பிடிப்பதென்றால் அறிவியல் மதத்தை விட பெரியதென்று ஒத்துக் கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அரபி பிரச்சாரகர்கள் கூட இந்த மத புத்தக்த்தில் அறிவியல் என்னும் விஷயத்தை மிகவும் ஜாக்கிரதையாக கையாளுவதை (மேற்கூறிய விதிகள்) பாருங்கள்.). ஆனால் நம்மவர்களோ அனைத்தும் தெரிந்து புரிந்தவர்கள் போல் உதார் விடுவது நகைச்சுவையே.இந்த மத அறிவியல் அமைப்பு மேற்கத்திய நாடுகளை சேர்ந்த , நிறைய படித்த,நல்ல பதவியில் இருக்கும் பிரபலமான் ,பல்கலை கழக ஆசிரியர்கள் போன்றவர்களையே தேர்ந்தெடுத்து இவ்வாறு கட்டுரை வாங்குவதும் ஒரு ஆச்சரியமான் விஷயம்தான்.
இந்த இணைய தளத்தில் இம்மாதிரி ஆட்கள் அனைவரையும் வைத்து பிரச்சாரம் செய்வதை பாருங்கள்.இது ஒரு மத பிரச்சார உத்தி மட்டுமே.
______________
இதற்கு செலவு செய்யும் பொருளில் பின் தங்கிய நாடுகளில் கல்வி,சுகாதாரம் போன்ற விஷயங்களுக்கு செலவிட்டால் நலம் பயக்குமே.
மதவாதத்தால் மட்டும்தான் போர்கள்,வன்முறை வெடிக்கிறதா கம்யுனிஸ்டுகள் போன்ற நாத்திகர்கள் கூட பல போர்கள்,கொலைகள் புரிந்துள்ளனரே என்று கேட்கும் மத பிடிப்புள்ள நண்பர்களே.கம்யூனிசம் என்பது மனிதனால் உருவாக்கப் பட்ட ஒரு வாழ்வு,அரசமைப்பு முறை,அது தவறென்றால் மாற்றப் படும்,தூக்கி எறியப் படும்.இப்போது நடைமுறையில் கம்யுனிசத்தின் தாக்கம் என்ன? Almost Nil!!!!!!!!!!!!!
ஆனால் மதத்தின் எந்த தவறுமே நியாயப் படுத்தப் படும்.இப்போதைய உலகில் மூன்றாம் உலகப் போர் என்பது மத அடிப்படையில் அமையலாம் என்று பல அனுமானங்கள் கூறுகின்றன. என் மதமே சரியானது , பிற மதங்கள் அனைத்தும் தவறு என்பது நிச்சயமாக மனித நேயத்தை வளர்க்காது.மத ரீதியான சட்டங்களும்,பிற மதத்தினரை கட்டுப் படுத்தி ஆள்வதுமே பல பிரசினைகளின் சிக்கல்கள். மத ரீதியான உணர்வுகள் கட்டுக்குள் இருக்க அதன் எல்லைகளை புரிந்து கொள்ளுதல் அவசியம். மத நம்பிக்கைக்கு எல்லை உண்டு.நம்ப முடியும் ஆனால் விளக்க முடியாது.
மதம் பிடித்தால் பின்பற்றுங்கள்,மத ரீதியான நடைமுறைகளில் காலத்திற்கேற்றபடி மாறுதல்கள் கொண்டு வருவது அந்த சமுதாயத்திற்கு நல்லது.பல எடுத்துக் காட்டுகள் தர இயலும்.வேண்டுமென்றே தவிர்க்கிறேன்.மதத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு மட்டுமே.மதத்தின் பயன்பாட்டில் ,மனிதம் வளருங்கள் மதம் தானாய் வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக