திங்கள், 19 செப்டம்பர், 2011

ஏக இறைவனின் தொடரும் தோல்விகள்

 

 


பல மதங்கள் புனித நூல்களை கொண்டுள்ளன. அந்த மதங்களைப்பொறுத்தவரை, அவர்களுடைய புனித நூல்கள் இறைவனின் அருளால் விளைந்தவை என்றும் சில இறைவனின் வார்த்தைகளாகவே கருதப்படுகின்றன. இறைவனின் நேர்மொழியாகிய வேத-நூல் என்பது ஆப்கராமிய மதங்களுக்கே உறிய தனித்தன்மை என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், வேறு பல மதங்களுக்கும் இந்த புனிதநூல் நம்பிக்கை இருக்கிறது. உதாரணமாக, பல கடவுள்களை கொண்டுள்ள இந்து மதத்தின் புனித நூலான வேத-நூல்கள் மனித அறிவுக்கு விஞ்சிய முனிவர்களின் தெய்வீக பார்வையில் விளைந்த ஆன்மீக உண்மைகள் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இந்த வேதங்கள் ஆயிரக்கணக்கான பாடல்கள் கொண்டவை.
இப்படி புனித நூல்கள் தொடர்ந்து பல வடிவங்களில் மனிதனுக்கு கிடைத்துக்கொண்டே இருந்திருக்கின்றன. ஆனால், 14ஆம் நூற்றாண்டில் ஒரு அரபியன் நானே இறுதித்தூதன் என்று சொல்லி இறைவனின் இறுதியான வார்த்தைகளை வெளிப்படுத்தியதாக சொல்லிக்கொண்டான். அது மட்டும் அல்ல! மற்ற இறைதூதர்களைப்போல இல்லாமல், அவன் நடவடிக்கை புதுமையாக இருந்தது. தன் செய்தி மட்டுமே உண்மையானது, அதுவும் இறுதி உண்மையானது என்று அவன் அறிவித்தான். தன்னையோ, தன் புனித செய்தியையோ நம்பாதவர்களை கறைபட்டவர்கள் (நஜஸ்) என்று பிரகடணம் செய்தான். தன்னை நம்பாதவர்களை ‘இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்” என்று சொல்லி அவர்களை கொல்லவோ அல்லது இரண்டாம் தர மக்களாக (திம்மிகளாக) அடிமைப்படுத்தவும் செய்தான். இந்த புரட்சி செய்தியின் அடாவடித்தனத்தை பார்த்தால், இதை கேட்ட மற்ற அரேபியர்கள் முதலில் எதிர்த்ததில் ஒரு ஆச்சரியமுமில்லை.
இந்த பிரகடணத்தில் சிந்தனையாளர்களுக்கு சில கேள்விகள் எழுகின்றன. எல்லாம் வல்ல அந்த இறைவன் இவ்வளவு தீவிரமான இறுதி உண்மையை மனிதகுலத்துக்கு தெரியப்படுத்தும்போது அதற்கு ஏன் ஒரு மதிப்பும், மரியாதையும் இல்லாது போனது? எல்லாம் அறிந்த அல்லாஹ்வின் இந்த செய்தி ஒரு சிறப்பான கருத்தும், சிற்ப்பான மொழிநடையும் இல்லாது போனது ஏன்? இது இறைவனின் இறுதி செய்தி என்றால், இந்த செய்தியை முதலில் தெரிவித்த முஹம்மது (ஸல்) ஏன் மக்களின் எதிர்ப்பை பெற்று ஊரை விட்டு ஓடவேண்டியதாகியது?
மேலும், 1400 ஆண்டுகள் ஆகியும், இந்த இறைவனின் இறுதி உண்மைச்செய்தி இவ்வுலகில் இன்னும் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது ஏன்?
இதற்கு விடை காண, நாம் இறைச்செய்தியின் சில இயல்புகளை ஆராய வேண்டும். இறைவனின் செய்தி என்று ஒன்று வருமானால், அதை இவ்வுலகில் மனிதர்களால் புரிந்து அதை பின்பற்ற சில தேவைகள் இருக்கின்றன. செய்தி சொல்ல சரியான சமயம், செய்தியை தெளிவுபடுத்த சரியான மொழி, வழங்க சரியான இடம், அதை அறிவிக்க சரியான தூதர் எல்லாம் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த செய்தி மானுடத்தை இன்னும் மேம்படுத்தி இறைவழிப்படுத்தக்கூடிய தகவலை கொண்டதாக இருக்க வேண்டும்.
முஹம்மது (ஸல்) வழங்கிய இறை செய்தியை இந்த கோணங்களில் ஆராய்வோம்!!
1. ஏழாம் நூற்றாண்டு சரியான தருணமா?
முதல் நூற்றாண்டுக்கு முன் பல தூதர்களை (மூசா, ஏசு மற்றும் பலர்) அனுப்பி தோல்வியுற்ற அல்லாஹ் காலம், நேரத்தை மறந்துபோயிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏசு நபி தோன்றிய 700 ஆண்டுக்கு பின், திடீரென, 7ஆம் நூற்றாண்டில் அல்லாஹ் தன் இறுதி தூதரை அனுப்ப தயாராகிறார். அல்லாஹ் மட்டுமே ஏக இறைவனாகவும், முஹம்மதுவின் செய்தியே அல்லாஹ்வின் நேர்வழியாகவும் இருக்குமானால், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னம் தோன்றிய மனிதர்களுக்கு உய்வதற்கு வழி என்ன? அவர்கள் மிகவும் துரதிருஷ்டவாதிகள் இல்லையா? இந்த இறுதி செய்தி அப்போது இல்லாமல் போவதற்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.
இறைவனின் உண்மை செய்தி புவியில் தோன்றிய எல்லா மானுடர்களையும் உய்விக்க செய்யவேண்டும். அதனால், அது மானுட தோற்றத்தை முந்திய அல்லது அந்த தோற்றத்தோடு சமகாலத்தில் இணைந்த ஒரு செய்தியாக இருக்க வேண்டாமா? மனிதனை படைக்கும்போதே அந்த இறுதி செய்தியை வழங்கி எல்லா மனிதர்களையும் நல்வழிப்படுத்த எல்லாம் வல்ல இறைவன் ஏன் தவறிவிட்டான் என்று சந்தேகம் தோன்றுகிறது.
2. அரபி சரியான மொழியா?
அல்லாஹ்வின் முந்தைய செய்திகள் அரமிய மொழிகளில் அமைந்தவை. அவற்றில் தன் செய்தி சரியாக நிலைக்காமல் தோல்வி கண்டு, பின்னர் இறுதிசெய்தியாக அரபி மொழியை இறைவன் தேர்ந்தெடுத்தது ஏன்? அரபி மொழி உலகில் மிகவும் குறைந்த நபர்கள் மொழிகளில் ஒன்றாக இருந்தது, இருக்கிறது. மேலும், அரபி மொழி உலக தொடர்பில்லாத பாலைவன குடியாட்கள் பேசும் மொழியாக இருந்தது. இறைவனின் இறுதி மொழியாக அல்லாஹ் இதை ஏன் தேர்ந்தெடுத்தான்?
இஸ்லாமியர்கள் அரபி மொழி மிகவும் அழகான கவிதைநயமான மொழி என்கிறார்கள். மேலும், குர்ஆனை மற்ற மொழிகளில் மாற்றினால் அந்த அழகு சிதைந்துவிடும் என்கிறார்கள். அல்லாஹ்வின் நோக்கம் மனித குலத்தின் ஈமானும், அழியாத அமைதி இறுதி வாழ்வுமாக இருக்க வேண்டும். அதனால், அல்லாஹ்வின் செய்தி தெளிவாகவும், யாராலும் குழப்பிக்கொள்ள முடியாததாகவும் இருப்பது முக்கியமே தவிர மொழி அழகும், கவிதை நயமும் அல்ல. உலக மொழி வல்லுனர்கள் அரபி மொழி ஒரு தெளிவான, எளிதான மொழி அல்ல என்கிறார்கள். அதனால் இறைவனின் இறுதி செய்திக்கு இது ஒரு சிறந்த மொழி இல்லை.
3. அரேபிய பாலைவனம் சரியான இடமா?
யேசுவுக்கு முன்னமே, முஹம்மதுவுக்கு பல நூற்றாண்டுக்கு முன்னமே, பல நாகரீகங்கள் (கிரேக்க, இந்திய, பாரசீக, சீன நாகரீகங்கள் முதலியவை) இன்னும் பெரிதாகவும் இன்னும் வளரச்சி பெற்றும் இருந்தன. இந்த நாகரீகங்கள் அரேபிய குடியிருப்பை விட பண்மடங்கு மக்கள்தொகை கொண்டும், அறிவுத்திறனில் பல தளங்கள் முன்னேறியும் வாழ்ந்து வந்தனர். கிரேக்க, ரோமாயின நாகரீகத்தின் தாக்கம் உலகம் முழுதும் விளைந்திருந்தது. இந்திய, சீன நாகரீகங்கள் பாரசீகத்திலிருந்து ஜப்பான் வரை பரவியிருந்தன.
இதை விடுத்து, அல்லாஹ்வின் இறுதிச்செய்தியோ அரேபியா என்ற ஒரு சிறிய உலகத்துண்டை பற்றிய அறிவையே கொண்டிருக்கிறது. கிரேக்க இந்திய மனோதத்துவங்களோடு போட்டிபோட்டால் தன் செய்தி எடுபடாது என்று அல்லாஹ் பயந்து அவர் அரேபிய பாலைவன நாகரீகத்தை தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது. உலகத்தில் ஒதுங்கிக்கிடந்த ஒரு சிறிய மனித குடியிருப்பான அரேபியாவையும், அரேபியர்களுக்கே பெரும்பாலும் தெரியாமல் பொதுவாக குழம்பிக்கொள்ளும் ஒரு அரேபிய மொழியும் இறைவன் தன் இறுதி உண்மைச்செய்தி வெளிப்பட தேர்ந்தெடுத்தது ஏன்?
குர்ஆன் அமைந்த அரபி மொழி தவறான தேர்வு என்று பார்க்கும்போது, இன்று திருக்குர்ஆனுக்கு ஆயிரக்கணக்கான மாறுபட்ட விளக்கங்கள், புரிதல்கள், வழக்கங்கள் இஸ்லாத்தில் நிலவுவது ஆச்சரியமில்லை. ஒரே செய்திக்கு அமைதியாகவும், அபாயகரமாகவும் புரிதல்கள் நிலவுவது இந்த குழப்பத்தை காட்டுகிறது.
4. முஹம்மது சரியான தூதரா?
முஹம்மது (ஸல்) மற்ற நபிகளின் செய்திகளை திறுத்தி புனிதப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆதாம், மூசா, ஏசு போன்ற பல நபிகள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், அந்த நபிகள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறவில்லை. அப்படியானால், அல்லாஹ் தன் தேர்வில் தொடர்ந்து தவறு இழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் இறைவனின் செய்தியை சரியாக வழங்க தொடர்ந்து தவறிவிட்டார்கள் என்றும் அல்லாஹ் மீண்டும் மீண்டும் புதிய நபிகளை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்திருக்கிறது என்றும் அறியும்போது அல்லாஹ்வின் அறிவில, திறமையில் நமக்கு சந்தேகம் வருகிறது. இந்த நபிமார்கள் தோல்வி அடைவார்கள் என்று அல்லாஹ்விற்கு முன்னமே தெரியாதா?
இறுதி தூதராக வந்த முஹம்மது (ஸல்) அவர்கள் கூட தன் நோக்கத்தில் தோற்றுவிட்டார் என்றே தோன்றுகிறது. 1400 ஆண்டுகள் ஆகியும் இஸ்லாம் இன்னும் முழுதுமாக ஏற்கப்படாமல் இருக்கிறது. ஏற்கப்படாதது மட்டும் அல்ல, உலகில் மிகவும் பயந்து வெறுக்கப்பட்ட ஒரு மதமாக இருக்கிறது.
பொதுவாக, நபிமார்களிடம் நாம் விரும்பும் இனிய குணங்கள் கொண்டவராக முஹம்மது இல்லை. முஹம்மதுவின் பல குணங்கள், அவரின் பல செயல்கள் பல இடங்களில் எடுத்துச்சொல்லப்பட்டு விட்டன. அதை இங்கு நான் மேலும் சுட்ட விரும்பவில்லை.
ஆனால், இந்த இறைச்செய்திகளின் ஒரு முக்கிய பிழையாக ஒரு ஆச்சரியத்தை காண்கிறேன். அல்லாஹ்வின் அனைத்து நபிமார்களுமே படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஹம்மதுவும் இப்படியே இருந்தார்.
நபிகளுக்கு படிப்பறிவு முக்கியமா? ஆம், நிச்சயமாக. அதுவும் இதுவே மாற்ற இயலாத இறுதிச்செய்தி என்று சொல்லப்படும் செய்தியை கொண்டுவரும் நபிக்கு படிப்பறிவு இன்றியமையாததாக ஆகிறது.
ஒரு இறைச்செய்தி சுவனத்தில் புத்தகத்தில் எழுதப்பட்டு, அங்கேயே பிரசுரிக்கப்பட்டு, அழகான நூல்களில் கோர்க்கப்பட்டு இங்கு இவ்வுலகில் அந்த புத்தகம் நபிமார்களால் வினியோகம் மட்டுமே செய்யப்படுமானால், நபிகளுக்கு படிப்பறிவு முக்கியம் இல்லைதான். ஆனால், நடந்தது என்ன? முஹம்மது குர்ஆனை எழுத சில நபர்களை நியமித்திருந்தார். ஆனால், அவர்கள் எழுதியதை சரிபார்க்க அவருக்கு படிப்பறிவு இல்லை. இதனால் இன்று இஸ்லாத்தில் நம்பும் ஈமான்களின் விதி அந்த எழுத்தாளர்களின் நினைவாற்றலில் விளைந்து அவர்கள் கிறுக்கிக்கொண்டு பின்னர் வடிவமைத்த சில வரிகளில் இருக்கிறது.
இன்று உலகம் முழுதும் 120 கோடி முஸ்லிம்கள் பின்பற்றுவது இறைவனின் நேர் வார்த்தைகள் அல்ல. முஹம்மதுவுக்கு அல்லாஹ் சொன்னவை கூட அல்ல. முஹம்மது அல்லாஹ் தனக்கு சொன்னதாக சொன்ன செய்தி கூட இல்லை. மாறாக, தவறிழைக்கும் குணமுள்ள சில சாதாரண மனிதர்களால் தங்கள் நினைவாற்றலிருந்து எழுதப்பட்ட, அதை யாராலும் சரி பார்க்க முடியாத ஒரு செய்தி. அல்லாஹ் திரும்பத்திரும்ப ஒரு படிப்பறிவு பெற்றவரை ஏன் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்கிறார் என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. இதனால், அல்லாஹ் சரியான நபியை தேர்ந்தெடுப்பதில் தோற்றார் என்றுதான் தோன்றுகிறது.
5. திருக்குர்ஆன் சரியான செய்தியா?
திருக்குர்ஆன் ஒரு தெளிவான, எளிமையான முழுமையான செய்தி என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால், குர்ஆனை பின்பற்றுவர்களின் செயல்கள் இதை நிரூபிக்கவில்லை. பல தெய்வங்களை வணங்கும் காபிர் மதங்களை விட இஸ்லாத்தில் இன்று அதிக பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகள் இடையே வெறுப்பும், கொலைவெறியும் காண கிடைக்கின்றன. இவை 7ஆம் நூற்றாண்டு அரேபியர்களின் நாடோடி, காட்டுமிராண்டி மன நிலையை எதிரொலிக்கின்றன. ஈரான்-ஈராக் யுத்தமும், பாகிஸ்தானில் தொடரும் உள்நாட்டு வன்முறைகளும் தொடரும் இந்த வெறுப்பு, கொலைவெறியை நமக்கு காட்டுகின்றன. “அமைதி மார்க்கம்” என்று முஸ்லிம்களால் கருதப்படும் ஒரு மதம், தன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி தெளிவான செய்தியின் இன்றைய நிலை இதுதான். இதைத்தவிர, இஸ்லாத்துக்கு பிற மதங்களுடான பிணக்குகளைப்பற்றி நான் நினைவுபடுத்த தேவையில்லை. மத-நல்லிணக்கம் என்பது குர்ஆனில் நாம் காணவில்லை. சகிப்புத்தன்மை அற்ற, சுய சிந்தனைக்கு வழியில்லாத ஒரு அடிமை வாழ்க்கையே இஸ்லாத்தின் மார்க்கமாக நமக்கு ஆப்கானிஸ்தான், சவுதி முதலிய நாடுகளில் காண கிடைக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் நிகழும் அடிமட்ட வறுமை குர்ஆனை முழுதும் கடைபிடிப்போரின் நிலையை காட்டுகிறது.
அல்லாஹ் எல்லாவிதத்திலும் தோல்வியுற்றதாகவே கருதப்படவேண்டும். இப்படி தொடர்ந்து தோல்வியுறும் ஒருவன் இறைவனாக இருக்க முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக