தருமி அய்யா இணைய பக்கத்தில் துல்கர்னைன் மற்றும் அவர் கட்டிய சுவர் பற்றிய விவாதம் சூடு பறக்கிறது. அதை பற்றிய சிறு முன்னோட்டம்.
குரான் 18 ஆம் சூராவான குகையில் பல கதைகள் கூறப்படுகின்றன்.அதில் வசனம் 83ல் இருந்து 98வரை துல்கர்னைன் என்ற மனிதரை பற்றி கூறப்படுகிறது. மத விமர்சகர்கள் நண்பர்கள் கும்மி,தருமி அய்யா கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பி இருந்தனர்.
1.துல்கர்னைன் என்பவர் யார்?
2. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் என்பவர்கள் யார்?
3.துல்கர்னனை சுவர் எழுப்பி தர சொன்ன கூட்டத்தார் யார்?
4. அந்த சுவர் எங்கே இருக்கிறது?.
5. அந்த சுவரை உமர் தேடியதாக கூறப்படுவது உண்மையா?
________________
இந்த கேள்விகளுக்கு பதிலாக திரு சுவனப் பிரியன் ஒரு பதிவு எழுதி உள்ளார்.
அவரின் பதிவும், பதிவை பற்றிய சில கருத்துகள்.
_______________
//குர்ஆன் தெளிவாக சொல்லி விடுகிறது அந்த சுவர் உலக முடிவு நாள் சமீபமாகத்தான் வெளிப்படுத்தப்படும். அது வரை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படும். எனவே முஸ்லிம்களுக்கு அந்த சுவர் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியே தேவையில்லாதது//
18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.
1.சுவர் மறைத்து வைக்கப் பட்டதாக குரானில் எங்கு கூறப் பட்டு உள்ளது?.
2.இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும் போது என்பது உலக முடிவுநாளா?.குரான் பலவிதமான வாக்குறுதிகளை பற்றி கூறுகிறது. துல்கர்னைன் வாழ்ந்த காலத்தை பொறுத்தே அது என்ன வாக்குறுதி என்று பொருள் கொள்ள முடியும்.இதை பற்றிய விவாதம் இபோது அவசியமில்லை.
// தோராவிலும், பைபிளும் கூட இவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.//
தோராவிலும் ,பைபிலும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் என்பவர்கள் நூஹின்(நோவா) மகன் யாப்பேத்தின் மக்கள் என்றும் அவர்கள் வன்முறையாளர்கள் என்றே கூறப்ப்ட்டுள்லதே தவிடா துல்கர்னைன் மற்றும் அவர் கட்டிய சுவர் பற்றி குறிப்பிடவில்லை.தோரவிலோ,பைபிளிலோ இருந்தால் மட்டும் உண்மையாகிவிடாது என்றாலும் துல்கர்னைன் மற்றும் அவர் கட்டிய சுவர் குறிப்பிடபடவில்லை என்றே நான் தேடியவரை கூறுகிறேன்.
http://wikiislam.net/wiki/Dhul-Qarnayn
தோரவின் வரலாறு ஆதமில் தொடங்கி மூஸாவோடு(ஜோசுவா ஆனால் இவர் இஸ்லாமின் தூதராக அறியப் படாதவர்) முடிந்து விடுகிறது.உங்களுக்கு நான் தோரா மற்றும் பைபிள் புத்தகங்கள் தருகிறேன். யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரை தடுத்து இரும்பும் செம்பும் கலந்த சுவர் எழுப்பப் பட்டது.அது உலக முடிவு நாளில் தூளாக்கப் படும் என்ற விவரத்தை காண்பியுங்கள்.
http://www.scribd.com/doc/46919228/6993999-The-Torah
http://www.scribd.com/doc/46524488/Tamil-Bible-80-Old-Testament
http://www.scribd.com/doc/46524481/Tamil-Bible-90-New-Testament
//ஜனாதிபதி உமருடைய காலத்தில் அவருக்கும் இந்த செய்தி எத்தி வைக்கப்படுகிறது. அவரும் அப்துல் ரஹ்மான் என்ற தோழரின் தலைமையில் ஒரு படையை ரஷ்யாவுக்கு(காகஸஸ்) அனுப்பி உண்மையை கண்டு வரச் சொல்கிறார். ஆனால் அங்கு அப்படி எந்த சுவரையும் தங்களால் பார்க்க முடியவில்லை என்று அவர்களும் திரும்பி விடுகின்றார்கள். உமரும் இது வதந்தி என்று விட்டு விடுகிறார்//
உமர் நம்பாமல் வதந்தி என்று விட்டு விட்டார் என்று எப்படி கூறுகிறீர்கள்?
// ஒருக்கால் இவர் எகிபதியராக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.மங்கோலியாவுக்குப் பக்கத்தில் இந்த சுவர் இருப்பதாகவும் ஒரு கதை நிலவுகிறது. மெஸடோனியா என்ற நாட்டில் வாழ்ந்த அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்கிறார் பக்ருதீன் என்ற வரலாற்றாசிரியர் அரிஸ்டாட்டில்தான் துலகர்னைன் என்று சொல்வோரும் உண்டு. அரிஸ்டாட்டில் ஏசுவுக்கு 300 வருடங்கள் முன்பு வாழ்ந்ததாகவும், அலெக்சாண்டர் அவையில் மந்திரியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது//
_________________
திரு சுவன பிரியனின் கருத்துகளை இவ்வாறாக கூறிவிடலாம்.
1.துல்கர்னைன் யாரென்று சரியாக குறிப்பிட முடியாது.
2.சுவர் மறைந்து இருந்து மறுமை நாளில் வெளிப்பட்டு தூள் தூள் ஆகும்.(இதற்கு இவர் இஸ்லாமிய நூல்களில் இருந்து ஆதாரம் அளிக்க வேண்டும்)
3. இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.ஆகவே முஸ்லிம்களே ஆராயவேண்டாம்.
__________
மூன்றாவது கருத்து அவர்கள் உரிமை என்பதனால் நாம் முதல் இரு கருத்துகளை மட்டும் விவாதிப்போம்.
முதல் கருத்து
________
a) குரான் கூறும் துல்கர்னைன் என்பவர் இருந்தாரா என்பதே கேள்விக்குறி என்பதை எப்படியெல்லாம் சொல்கிறீர்கள்?.துல்கர்னை என் இறைவன் என்றும் அந்த சுவர் ஒரு அடையாளம் என்றும் கூறாமல் இருந்திருந்தால் அவரை அலெக் சாண்டராக காட்டுவதிலும் ,காகஸஸ் மலை கோட்டையை அந்த சுராக காட்டுவதிலும் சிக்கல் இருந்து இருக்காது.துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளை உடையவர் என்று பொருள்.அலெக் சாண்டருக்கும் இந்த பெயர் இருந்ததாக அலெக்சாண்டர் ரொமான்ஸ் என்ற புத்தகத்தில் கூறப்படுகிறது..
http://en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Qur'an
அப்படி என்றால் துல்கர்னைன் என்பவரை பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார்கள்.மறுமை நாள்பவரை பொறுத்தால் தெரியும் என்கிறார்கள்.
நமக்கு மறுமை நாள் மேல் நம்பிக்கை இல்லையென்பதால் குரானின் பழைய விளக்கங்களில் என்ன கூறப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்.
இஸ்லாமிய பிரச்சாரகர்கள் குரானின் பழைய விளக்கங்களை மொழி பெயர்க்கும் வேலையை செய்ய மாட்டார்கள்.
ஏனெனில் அந்த விளக்கத்திற்கும் ,இப்போதைய விளக்கத்திற்கும் உள்ல வித்தியாசத்தை மக்கள் அறிந்து கொள்வார்கள்,சூழ்நிலைக்கு தக்கவாறு விளக்கம் சொல்வதிலும் சிக்கல் வந்துவிடும்.
திரு அல் சுயுட்டி என்ற இஸ்லாமிய அறிஞர் அலெக்சாண்டெர்தான் துல்கர்னைன் என்று கூறுகிறார்.அல்சுயுட்டின் தஸ்ஃபிரில்(Tafsir al-Jalalayn குரான் விளக்கம்) துல்கர்னைன் அலெக்சாண்டர் என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறார்.
குரன் 18:83க்கு அவர் தரும் விளக்கம் பாருங்கள்.
http://altafsir.com/Tafasir.asp?tMadhNo=0&tTafsirNo=74&tSoraNo=18&tAyahNo=83&tDisplay=yes&UserProfile=0&LanguageID=2
http://www.sunypress.edu/p-360-the-history-of-al-tabari-vol-4.aspx
ஆக்வே அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்பதற்கு 3 விஷயங்களை ஆதாரமாக கூறலாம்.
1. இக்கதை அலெக்சாண்டெர் ரொமன்ஸ் புத்தகத்திலும் கூறப்படுகிறது.தோடா மற்றும் பைபிளில் துல்கர்னைனும்,சுவரும் குறிப்பிடபடவிலலை.
2.அல் சுயுட்டியின் 18:83ன் விளக்கம்
{ وَيَسْأَلُونَكَ عَن ذِي ٱلْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُواْ عَلَيْكُم مِّنْهُ ذِكْراً }
And they, the Jews, question you concerning Dhū’l-Qarnayn, whose name was Alexander; he was not a prophet. Say: ‘I shall recite, relate, to you a mention, an account, of him’, of his affair.
You can download Tafsir al-Jalalayn from this link and kindly see page number 846.
http://www.scribd.com/doc/47188959/Tafsir-al-Jalalayn
3.அல் தபரியும் அலெச்சாண்டரே துல்கர்னைன் என்ற கருத்தையே கொண்டு இரருந்தார்.
http://religionresearchinstitute.org/quran/analysis.htm
__________
Then What is the Problem?
துல்கர்னைனின் குணங்களாக குரான் கூறுவது என்ன?
1.துல்கர்னைன் குரான் வரைரயறுத்த ஓரிறை கொளகை உடையவராக இருக்கவேண்டும்.
2. சுவர் கட்டும் அளவிற்கு உதவி செய்பவர் என்றால் அரசர்(குரான் 18:84) அல்லது படைத்தலைவராக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
3.குரான் ஒத்துக் கொள்ளும் ஓரிறை கொள்கையாளர்கள் யூதர்கள் மட்டுமே. யூதராக இருக்கும் பட்சத்தில் தோராவில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
குரானில் குறிப்பிடப் படாத ஓரிறைகொள்கை உடையவர்கள் இருந்தால் அவர்களை சேர்ந்தவர் என்று கூறலாம்.
.
கடந்த காலத்தில் சில இஸ்லாமிய அறிஞர்கள் அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்றே கூறிவந்தர்ர்கள்.அலெக்சாண்டரை ஓரிறைக் கொள்கை உடையவராக காட்ட முடியாத்தாலேயே யார் என்று தெரியவில்லை என்று இப்போது கூறப்படுகிரது..
_________________
இரண்டாவது கருத்து
18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.
இந்த வசனத்திற்கு அவர் கொள்ளும் பொருள் சுவர் மறுமை நாள் வரை மறைந்து இருந்து,மறுமை நாளில் வெளிப்பட்டு தூளாக்கப்படும் என்பதே.
இந்த வசனம்(18:98) அப்படி கூறுவதாக எப்படி கூறுகிறார்?.
நண்பர்களே,
பதிலளிநீக்குதுல்கர்ணைன் என்பவர் வரலாற்றில் சைரஸ் தி கிரேட் என்று அறியப்படுகிறார். அவர் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு அன்றைய ஈரான் நாட்டின் பேரரசர். அவர் தனது பேரரசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர் தான் பேசும் மொழி புரியாத ஒருகூட்டத்தினைரை தனது நாட்டின் வடக்கு எல்லையோரப் பகுதியில் காண்கிறார். அது ஒரு நீண்ட மலைத்தொடர் கொண்ட கணவாய்ப்பகுதி. அது சரியாக ஐரோப்பாவையும், அன்றைய ஈரானையும் பிரிக்கிறது. அங்குள்ள மக்கள் அன்றைய காட்டுமிராண்டி ஐரோப்பியர்களிடமிருந்து பாதுகாப்பு கோருகின்றனர். துல்கர்ணைன் சம்மதித்து தர்பந்த் என்ற இடத்தில் இரு மலைகளுக்குக்கிடையே (கணவாய்) சுவர் கட்டித்தருகிறார்.
அந்தச்சுவர் இன்றும் உள்ளது. கூகுள் செய்தால் காணலாம். இடத்தின் பெயர் தர்பந்த், ஈரானுக்கு வடக்குபுரத்தில் உள்ளது. ஐரோப்பாவையும் மத்திய தரைக்கடலையும் பிரிக்கிறது. மேலும் துல்கர்ணைன் சுவர் அல்லது சுல்கர்ணைன் சுவர் அல்லது சைரஸ் தி கிரேட் சுவர் என்று கூகுள் செய்தாலும் பார்க்கலாம். மேலும் 2018 டிசம்பரில் இஸ்ரேலில் அவருக்கும் டிரம்புக்கும் சேர்த்து ஒரு காயின் வெளியிட்டார்கள் அதையும் பார்க்கவும்.
கொசுறு
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வெளிவந்து (ஐரோப்பியர்) வெளிவந்து பல நூற்றாண்டு ஆயிடுச்சு. அவர்களிடம் நாம் அடிமைப்பட்டு இன்றும் கிடக்கிறோம்.